Jump to content

அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் ஒருநாள் போட்டி தொடர்


Recommended Posts

பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல்

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

 
 
பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல்
 
பிரிஸ்பென்:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலிய 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்- வாடே நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது.

முகமது அமீர், இமெத் வாசிம் தலா 2 விக்கெட்டும், அசன்அலி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13121028/1061947/Australia-vs-Pakistan-1st-ODI-Australia-stutter.vpf

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாக். 92 ரன் வித்தியாசத்தில் தோல்வி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்யியடைந்தது.

 
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாக். 92 ரன் வித்தியாசத்தில் தோல்வி
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என கைப்பற்றியது. அதன்பின் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று பிரிஸ்பேனில் நடந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா தொடக்க விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. வார்னர் 7 ரன்னிலும், ஸ்மித் டக்அவுட்டிலும், லைன் 16 ரன்னிலும், மார்ஷ் 4 ரன்னிலும், ஹெட் 39 ரன்னிலும் ஆட்டம் இழக்க அந்த அணி 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், வடே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேக்ஸ்வெல் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வடே 100 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், மொகமது ஆமிர் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அசார் அலி மற்றும் ஷர்ஜீல் கான் ஆகியோர் களம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 24 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷர்ஜீல் கான் 18 ரன்கள் எடுத்த நிலையிலும் பால்க்னெர் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 54.4 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பால்க்னெர் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் 15-ந்தேதி நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13175033/1062060/australi-beats-pakistan-by-92-runs.vpf

Link to comment
Share on other sites

2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையி்லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் சேர்த்து  ஆல்அவுட் ஆனது.

பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 72 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பாபர் ஆசம் 34 ரன்களும், சோயிப் மாலிக் அவுட்டாகாமல் 42 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

0799DC68-AE0A-4DA9-BF53-5F5128BFB261_L_s
சோயிப் மாலிக் பந்தை கட் செய்த காட்சி

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 72 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவி புரிந்த மொகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

3-வது போட்டி பெர்த்தில் 19-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15181714/1062240/2nd-ODI-pakistan-beats-australia-by-6-wickets.vpf

Link to comment
Share on other sites

ஆஸி அணிக்கு இலகு வெற்றி ; தொடரில் 2-1 என முன்னிலை

 

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி அணி 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

257946.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாக். அணியின் சார்பில் பாபர் அஷாம் 84 ஓட்டங்களையும், சஜீர் கான் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஹஷல்வூட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 264 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 45 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஆஸி அணிசார்பில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

http://www.virakesari.lk/article/15581

Link to comment
Share on other sites

4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-1 எனத் தொடரை கைப்பற்றியது

சிட்னியில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.

 
 
4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-1 எனத் தொடரை கைப்பற்றியது
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று போட்டிகள் முடிவின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.

10B9FA77-3497-4E20-ADEF-D0145CFD99DB_L_s
மேக்ஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு விளாசும் காட்சி

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவாஜா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவாஜா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் அடுத்து வந்த ஸ்மித் 48 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ஆனால் வார்னர் சிறப்பாக விளையாடி 119 பந்தில் 130 ரன்கள் குவித்தார்.

B91EFD6A-45B5-4714-9E2B-6B8722C36AB7_L_s
ஷர்ஜீல்கான் பந்தை சிக்ருக்கு தூக்கிய காட்சி

அதன்பின் வந்த ஹெட் 51 ரன்னும், மேக்ஸ்வேல் 44 பந்தில் 78 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

796DA2E0-B1EC-4AF4-8368-EDB961C9F5EC_L_s
சோயிப் மாலிக் பந்தை எதிர்கொள்ளும் காட்சி

பின்னர் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் அசார் அலி, ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தாலும் ஷர்ஜீல் கான் 74 ரன்னும், பாபர் ஆசம் 31 ரன்னும், மொகமது ஹபீஷ் 40 ரன்னும், சோயிப் மாலிக் 47 ரன்னும் எடுத்து அணிக்கு சற்று நம்பிக்கை ஊட்டினர்.

269B3E14-D6C1-4BD9-8423-C8BAED1F4C2E_L_s
ஹபீஸ் பந்தை கட் செய்யும் காட்சி

ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் வெளியேற பாகிஸ்தான் அணி 43.5 ஓவரில் 267 ரன்கள் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் ஆடம் சம்பா, ஹசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.


91FF6C0F-FF75-4694-81A8-5E8D5FEBD89F_L_s
விக்கெட் வீழ்த்திய சம்பாவை பாராட்டும் சக வீரர்கள்

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 எனக்கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி 26-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.