Sign in to follow this  
Followers 0
நவீனன்

தனித்தே ஐ.தே.க. களமிறங்கும்

1 post in this topic

தனித்தே ஐ.தே.க. களமிறங்கும்

raaa-b50d260ded626cbb10e69754e8daf7b962a48423.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

அடுத்த தேர்­த லின் போது தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தனித்தே போட்­டி­யிடும். எனினும் தேசிய அர­சாங்க கொள்­கையில் மாற்றம் ஏற்­ப­டாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

கம்­ப­ஹாவில் விசேட சந்தை கட்­ட­டத்­தொ­கு­தியை நேற்று முன் தினம் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையின் பொரு­ளா­தாரம் யுத்­தத்­தினால் ஒரு­புறம் வீழ்ச்சி அடையும் போது மறு­புறம் எல்லை மீறிய கடன் பெற்­ற­தனால் பாரிய வீழ்ச்­சிக்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டது. திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் ஊடா­கவே மக்­க­ளுக்கு ஒர­ளவு வரு­மானம் கிடைக்­க­பெ­று­கின்­றது.

இந்­நி­லையில் கடன் சுமை­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதி­க­ளவில் பெற்­றுக்­கொள்ள வேண்டும். வெளி­நாடு முத­லீ­டு­களை கொண்டே நாட்டின் அபி­வி­ருத்­தியை கொண்டு செல்ல முடியும்.

இலங்கை வரு­மா­னத்தை கொண்டு எமக்கு உரிய அபி­வி­ருத்­தியை இல­கு­வாக முன்­னெ­டுக்க முடி­யாது. இதற்கு வெளி­நாட்டு முத­லீ­டுகள் எமக்கு அவ­சி­ய­மாகும்.

அத்­துடன் தற்­போது நாம் பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம். மேல் மாகா­ணத்தை பாரிய மாந­க­ர­மாக மாற்­றுவோம். இதன்­மூலம் கம்­பஹா பெரும் வளர்ச்சி அடையும்.

நாம் தேசிய அர­சாங்­கத்தை ஏன் நிறு­வினோம்? வெளி­நாட்டு முத­லீ­டுகள் கிடைக்­க­பெற வேண்­டு­மாயின் நிலை­யான ஆட்சி இருப்­ப­தாக காட்ட வேண்டும். ஆகவே நிலை­யான ஆட்­சியை நாம் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்ல வேண்டும். நிலை­யான ஆட்­சியை முன்­னெ­டுப்­பது எமது இளை­ஞர்­களின் எதிர்­கா­லத்­திற்­கா­கவே ஆகும்.

அடுத்த தேர்­தலின் போது தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேிசயக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்தே போட்டியிடும். எனினும் தேசிய அரசாங்க கொள்கையில் மாற்றம் ஏற்படாது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0