Sign in to follow this  
Followers 0
நவீனன்

இலங்கை இருபது 20 குழாமில் புதுமுகம் திக்ஷில

1 post in this topic

இலங்கை இரு­பது 20 குழாமில் புது­முகம் தி­க்ஷில
 

(நெவில் அன்­தனி)

 

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக எதிர்­வரும் 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாமில் துடுப்­பாட்ட சக­ல­துறை வீரர் தி­க் ஷில டி சில்வா அறி­முக வீர­ராக இணைக்­கப்­பட்­டுள்ளார்.

 

21760Sri_Lanka_Cricket_logo.svg.pngகாலி மகிந்த கல்­லூ­ரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிலாபம் மேரியன்ஸ் கழக வீர­ரு­மான தி­க்ஷில இது­வரை எந்­த­வொரு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யிலும் விளை­யா­டி­ய­தில்லை.

 

இதே­வேளை, சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் மற்­றொரு அறி­முக வீர­ராக சுழல்­பந்­து­வீச்­சாளர் லக்ஷான் சந்­த­கானும் இலங்கை குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளார்.

 

இக் குழாமில் அதி­ரடி ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரே­ரா­வுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­டா­தது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றது. அதே­போன்று திசர பெரேரா, மற்­றொரு அதி­ரடி வீரர் தசுன் ஷானக்க ஆகியோர் குறித்தும் தெரி­வா­ளர்கள் கரி­சனை செலுத்­த­வில்லை.

 

சுழல்­பந்­து­வீச்சு சக­ல­துறை வீரர் சீக்­குகே ப்ரசன்ன குழாமில் இடம்­பெ­று­வதால் ஜெவ்றி வெண்­டர்­சேக்கு இடம் கிடைக்­க­வில்லை.  டெஸ்ட் குழாமில் இடம்­பெறும் துஷ்­மன்த சமீ­ர­வுக்கும் இரு­பது 20 கிரிக்கெட் குழாமில் இடம்­வ­ழங்­கப்­ப­ட­வில்லை.நுவன் குல­சே­கர, இசுரு உதான ஆகியோர் மீள் அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

இதே­வேளை தி­க் ஷில டி சில்வா ஓர் அதி­ரடி இட­துகை துடுப்­பாட்ட வீர­ராவார். 16 இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 144.37 அதி­ரடி வேகத்தில் தலா 15 சிக்­சர்கள், 15 பவுண்ட்­றிகள் அடங்­க­ளாக 218 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். 5 அடி 6அங்­குலம் உய­ர­மு­டைய 24 வய­தான இவர் 6 விக்­கெட்­க­ளையும் தனது வேகப்­பந்­து­வீச்சின் மூலம் வீழ்த்­தி­யுள்ளார்.

 

இலங்கை இரு­பது 20 குழாம்:
ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்­திமால், தனுஷ்க குண­தி­லக்க, சீக்­குகே பிர­சன்ன, நிரோஷன் திக்­வெல்ல, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், இசுறு உதான, குசல் மெண்டிஸ், தனஞ்செய டி சில்வா, அசேல குணரட்ன, சச்சித்ர பத்திரன, லக் ஷான் சந்தகான், திக் ஷில டி சில்வா, நுவன் குலசேகர.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21760#sthash.jiScxfiS.dpuf

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0