Sign in to follow this  
Followers 0
நவீனன்

ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு

3 posts in this topic

ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு

 
 

தன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா வைத்துள்ளதாக கூறப்படுவதற்கு எதிராக கடுங்கோபத்துடன் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா எப்போதும் முயன்றதில்லை என்று கூறியுள்ளார்.

தாங்கள் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள டிரம்ப் மற்றும் புதின் அலுவலகங்கள்
 தாங்கள் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள டிரம்ப் மற்றும் புதின் அலுவலகங்கள்

இது போன்ற தவறான தகவல்களை பொது மக்களிடையே கசிய அனுமதித்த உளவு முகமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், , '' நாம் என்ன நாஜி ஜெர்மனியிலா வாழ்ந்து வருகிறோம்? என்று கேள்வியெழுப்பினார்.

டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்தது எனவும், விலைமாதர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்தக் கூற்றுகள் கூறுகின்றன.

இத்தகைய கூற்றுகளுக்கு எதிராக ரஷ்யாவும் ஆவேசமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/38587979

Share this post


Link to post
Share on other sites

ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை: செய்தியாளர்களுடன் முதல் முறையாக பேசிய டிரம்ப் திட்டவட்டம்

தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களுடன் முதல் முறையாக பேசிய டொனால்டு டிரம்ப் ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 
ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை: செய்தியாளர்களுடன் முதல் முறையாக பேசிய டிரம்ப் திட்டவட்டம்
 
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார்.

இதனையடுத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக இன்று டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:-

கடவுளால் கூட உருவாக்கப்பட்டதை விட அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குபவனாக நான் இருப்பேன்.

ரஷ்யாவுடன் எனக்கு உறவு இருப்பதாக வெளியாகும் ஆவணங்கள் போலியான செய்திகள். வலிமை குறைந்த ஆட்களால் உருவக்கப்படும் போலிகள் அது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டொனால்டு டிரம்பை விரும்பினால் அது நன்மைக்காக தான். பொறுப்பு அல்ல. ரஷ்யா உடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. ரஷ்யாவிலும் எந்த ஒப்பந்தமும் இல்லை.

என்னுடைய தொழில்கள் அனைத்தையும் இரு மகன்கள் பார்த்துக் கொள்வார்கள். அதில் வரும் சிக்கல்கள் குறித்து என்னுடன் விவாதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/11231258/1061623/I-have-no-dealings-with-Russia-Trump-addresses-the.vpf

Share this post


Link to post
Share on other sites

இப்ப வாய் திறக்கிறவையள்....ரம் பதவியேற்றாப்பிறகு வாயே திறக்க மாட்டினம்.

வாயை திறந்தாலும் வெளியிலை நியூஸ் வராது.....:grin:

ஊடகங்களின்ரை சாம்பார் விளையாட்டு இதுதான்:cool:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0