Jump to content

யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்


Recommended Posts

யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்

jaffna-hospital.jpg

சுகாதார நிறுவனங்களில் பிளாஸ்ரிக்      மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தல்

எதிர்வரும் 16.01.2017 திங்கள் முதல் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ஸ்ரிக்   மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’  கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதிமேதகு சனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சமூகத்தில் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் பாவனை பொதுவான விடயமாக மாறியுள்ளதுடன், அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் போலவே மக்களின் சுகாதாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்  தாக்கம் செலுத்துகின்றது.

தரவுகளின் படி நாளொன்றிற்கு எமது நாட்டில் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’ கிட்டத்தட்ட  10 மில்லியன் பாவிக்கப்படுவதுடன், நாளாந்தம் பிளாஸ்ரிக்   மற்றும் பொலித்தீன் தொன் 400 – 500 கழிவுப் பொருளாக வெளியேற்றப்படுகின்றது.

குளோரினேட்டட் பிளாஸ்ரிக்   மற்றும் பொலித்தீன் எரியும் போது வெளியாகும் டயொக்சீன் வாயுவை சுவாசித்தல் மற்றும் சில பொலித்தீன் பைகளில்; உள்ள இரசாயனப் பொருள் உணவுகளில் கசிவடைவதால்; பல சுகாதார பிரச்சினைகள் ஏற்;படுகின்றன. அதாவது புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு, ஏற்படும். மேலும் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டு நோய்வாய்ப்பட நேரிடும்.

பொதுமக்களில் பலர் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் என்பவற்iறை வீடுகளில் எரிக்கின்றனர். இது தறவாகும். சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் என்பனவற்றினை திறந்த நிலையில் எரிப்பதையும் மற்றும் குறைந்த வெப்பநிலையில் எரிப்பதையும் தவிர்க்குமாறு கூறுகின்றது. குறைந்த வெப்பத்தில் பிளாஸ்ஸ்ரிக்   எரியும் போது புற்று நோயை ஏற்படுத்தும் டயொக்சீன் மற்றும் பியூரான் வாயு வெளியேற்றப்படுவதால் சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் பிளாஸ்டீக்   மற்றும் பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் எமது நிறுவனத்திலும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கு பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றப்படுகின்றது.

1.      நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வைத்தியசாலை வளாகத்தினுள் பொலித்தீன் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை (துணியால் செய்த) பாவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

2.      உணவு கொண்டு வருவதற்கு ‘லன்ச் சீட்’ இற்குப் பதிலாக சாப்பாட்டு பெட்டிகளை (துருப்பிடிக்காத உலோகஃ உணவுத் தர பிளாஸ்ரிக்) வாழை இலை, வாழைமடல் போன்ற இயற்கையான சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கையான பொருள்களைப்  பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

 

3.      பிளாஸ்ஸ்ரிக்  , தண்ணீர் போத்தல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதை முடியுமான வரை தவிர்க்கவும். வைத்தியசாலையினால் சுத்தமான வடிகட்டிய குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4.      போத்தலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், பிளாஸ்ஸ்ரிக் கோப்பைகள், குடிபானக்குழாய் போன்றவற்றின் பாவனையை முடியுமானவரை குறைத்து நீர் வடிகட்டிகள், மட்பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், செராமிக் கோப்பைகளை பாவிக்கவும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் பெப்ரவரி  1 ஆம் திகதி முதல்  முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் அடுத்தவாரம் முதல் பொதுமக்களது பொதிகள் யாவும் பரிசோதிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுவார்கள்.

பணிப்பாளர்

http://globaltamilnews.net/archives/13396

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.