Sign in to follow this  
Followers 0
நவீனன்

கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி

5 posts in this topic

கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி

dhoni_2_17559.jpg

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன.

அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

http://www.vikatan.com/news/sports/77477-dhoni-hits-68-runs-in-40-balls-in-last-match-as-captain-vs-engalnd.art

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

#CricketUpdates: பயிற்சிப் போட்டியில் இந்தியா தோல்வி

இந்தியா ஏ - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் மும்பையில் நடந்தது. கேப்டனாக தோனியின் கடைசி ஆட்டம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் தோனி, யுவராஜ் அதிரடியால் இந்தியா அணி 50 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் அடித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் சாம் பில்லிங்ஸ் 92 ரன்கள் எடுத்தார். ஜாசன் ராய் 63 ரன்கள் எடுத்தார்.

Dam biilings

http://www.vikatan.com/news/sports/77505-england-wins-in-warm-match-against-india-a.art

Share this post


Link to post
Share on other sites

கேப்டனாக டோனியின் கடைசி போட்டி: வாழ்த்து கோஷம் எழுப்பிய ரசிகர்கள்

 

கேப்டனாக டோனி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் பயிற்சி ஆட்டத்தை காண திரளான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் டோனி! டோனி! வாழ்த்தி கரகோஷம் எழுப்பினார்கள்.

 
 
கேப்டனாக டோனியின் கடைசி போட்டி: வாழ்த்து கோஷம் எழுப்பிய ரசிகர்கள்
 
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பராக இடம்பிடித்துள்ளார்.

இன்று மும்பையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டிருந்தார். ‘இந்த போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி. இதற்குப்பின் சீனியர் அணி தொடர்பானவற்றில் கேப்டனாக இருக்கமாட்டேன். ஐ.பி.எல். அணிக்கு கேப்டனாக இருப்பேன். ஜார்க்கண்ட் அணிக்கும் கேப்டனாக இருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.

பொதுவாக பயிற்சி ஆட்டத்தைக் காண அதிக அளவில் ரசிகர்கள் வரமாட்டார்கள். ஆனால் கேப்டனாக டோனியின் கடைசி போட்டி என்பதால் அதிக அளவில் ரசிகர்கள் இன்று மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் டோனி! டோனி! என்று உற்சாக குரல் எழுப்பி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/10200013/1061351/Crowds-throng-Brabourne-Stadium-to-see-MS-Dhoni-lead.vpf

Share this post


Link to post
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் தோனி காலில் விழுந்த ரசிகர்

 

 
 
 
தோனியின் காலில் விழுந்த ரசிகர். | படம்: பிடிஐ.
தோனியின் காலில் விழுந்த ரசிகர். | படம்: பிடிஐ.
 
 

மும்பையில் நடைபெறும் இங்கிலாந்து லெவனுக்கு எதிரான இந்தியா ஏ அணியின் பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் தோனி ஆடிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் பிட்சிற்குள் ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார்.

தோனி நீல உடையில் கேப்டனாக தனது கடைசி போட்டியில் ஆடுகிறார் என்று விளம்பரப்படுத்தப்பட்டதோடு, இன்று ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்பட்டது.

இந்நிலையில் 46 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா ஏ அணி 258/4 என்று இருந்த போது தோனி 26 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென் மைதானக்களத்திற்குள் ரசிகர் ஒருவர் ஓடி வந்தார், அவர் தோனிக்கு அருகில் வந்த போது தோனி அவருக்கு கைகொடுக்கும் செய்கையாக கையை நீட்டினார். ஆனால் அவரோ சற்றும் எதிர்பாராத விதமாக தோனியின் காலில் விழுந்தார்.

பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://tamil.thehindu.com/sports/பயிற்சி-ஆட்டத்தில்-தோனி-காலில்-விழுந்த-ரசிகர்/article9471355.ece

Share this post


Link to post
Share on other sites

 

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0