யாழிணையம்

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?   49 members have voted

 1. 1. வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம்

  • பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்
   28
  • இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அடிப்படை வசதியாக இருப்பதால் ஓரளவு ஆதரிக்கின்றேன்
   16
  • கருத்து எதுவுமில்லை
   5

Please sign in or register to vote in this poll.

151 posts in this topic

1. பாரிய நிதியில் மக்களுக்கு அமைக்கப்படும் வீடமைப்புகள் வரைபடங்களுடன் முடிந்தால் மாதிரி அமைப்புடன் காட்ச்சிப்படுத்தப்பட்டு மக்களினதும் வல்லுனர்களின் அபிப்பிராயங்களை பெறப்படுவது உலக வழக்கு.   நல்லாட்ச்சியில் பலதேசிய கம்பெனியின் விருப்புதான் முடிந்த முடிவா.

2. இந்த தகர டப்பாவை எந்த கல்வீட்டுடன் ஒப்பிட்டு வல்லுநர்கள் அறிக்கை தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வல்லுனர்களில்  ஏன் ஒரு கட்டட  கலைஞர்களும் இல்லை. இந்த வல்லுனர்களில் ஒருவருமே வீடமைப்பு அல்லது கட்டட கலையில் அனுபவம் உள்ளவர்கள் இல்லை. 

3. வெப்பவலயத்தில் அமையும் வீடுகள் சூடான காற்றை உடல் உயரத்துக்கு மேலே கொண்டு செல்ல வசதியாக உயரமாக இருக்க வேண்டும். இந்த வீட்டிலே சூடான காற்று மேலே வெளிச்செல்ல வழியே இல்லை. ஓட்டு வீடுகளில் மேலே ஓட்டின் இடுக்குகளால் சூடான காற்று வெளியேற குளிரான காற்று வெளியிலிருந்து கீழால் உட்புக இடமளிக்கும். மேலும் பழைய வீடுகளில் யன்னல்களுக்கு மேலே கதவுகளுக்கு மேலே மர சட்ட்ங்களால் சூடான காற்று வெளியேற வழியமைத்திருப்பார்கள். இந்த வீடுகளில் cross ventilation க்கான எந்த வாய்ப்பும் இல்லை. 

4. இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளில் Eave என்று சொல்லப்படும் சுவருக்கு வெள்ளியிலான கூரை இறக்கம் குறைந்தது 3  அடி இருக்கும். அது வீடடை வெய்யிலில் இருந்தும் மழையிலிருந்தும் காப்பதோடு தனித்துவமான அழகையும் கொடுக்கிறது. இந்த தகர டப்பாக்களுக்கு  ஐரோப்பிய வீடுகள் மாதிரி மிக சிறிய இறக்கமே  உள்ளது. குளிர் நாடுகளில் அதிக சூரிய  வெப்பத்தை உள்வாங்க அவ்வாறு அமைக்கிறார்கள். அதை அப்படியே இங்கே இறக்கி வெய்யிலை தாராளமாக உள்ளே அனுமதித்து கிராமத்தின் அழகையும் கெடுக்கிறார்கள். 

5. முன் கதவை திறந்தால் வெய்யிலும் மழையும் அனுமதி இல்லாமல் உள்ளே வரும். உலகில் உள்ள எல்லா வீடுகளிலும் முன் கதவுக்கு முன்னே ஒரு விறாந்தை யோ போர்ச்சோ இருக்கும். யாழ்ப்பாணத்தில் போர்டிகோ என்பார்கள். இந்த விறாந்தை அல்லது போர்டிகோ வெளிக்கும் வீடுக்குமான தொடர்பை பேணுகிறது. a space between private and public space that make the transition smooth.  மேலும் இந்த விறாந்தை பகுதியே வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதியாகும். இது வீட்டுக்கு முகப்பை தந்து அழகுபடுத்துகிறது. இந்த மாதிரி வீடோ  முகமில்லாத முண்டம்போல் காட்ச்சியளிக்கிறது. இந்த வீட்டுக்கு விருந்தினர் வந்தால் வெளியில் இருந்து கதைக்க இடமேயில்லை. Unfriendly fascist design 

6. இலங்கை மக்களின் கலாசாரத்தில் அவர்கள் வீடுகளில் உள்ளே பகல் நேரங்களில் இருப்பதே இல்லை. படுப்பதற்கு மட்டுமே அறைகளுக்குள் போவார்கள். புது வீடு கட்டிய உடனேயே முன்னாலும் பின்னாலும் பத்தி இறக்கி முன் பக்கத்தை மக்களுக்கும் பின் பக்கத்தை ஆடு மாடுகளுக்கும் ஒதுக்கி விடுவார்கள். முன் விறாந்தை வீடடை முத்தத்தோடும் பின் விறாந்தை வீடடை பின் வளவுடனும் இணைக்கிறது. இந்த டப்பாவில் பத்தி இறக்கினால் தவண்டுதான் உள்ளே போக வேண்டும்.

7. 65,000 வீடுகளை கட்டி உழைப்பவர்கள் ஆக்க குறைந்ததது ஒரு பத்து வெவ்வேறான அமைப்புகளை உருவாக்கி ஒரே  மாதிரியான வீடுகள் அடுத்தடுத்தது வராது பார்த்திருக்கலாம். ஒரு இடத்தில் இந்த வீடுகளில் ஒரு நூறை கட்டிவிடடால் அந்த இடம் எப்படி இருக்கும். உடனடி நிவாரணமாக அமைக்கப்படும் டெண்டுகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கும். இந்த தகரங்களால் பிரதிபலிக்கப்படும் சூரிய வெளிச்சம்  (Glare) கண்ணை கூச வைக்கும். 

8. வீடு என்பது மக்களின் சுயத்தை பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளம். அவர்கள் நிலை உயரும்போது வீடு வளர்கிறது. அழகூட்டப்படுகிறது. வர்ணம் பூசப்படுகிறது. இந்த வீட்டிலே ஏதும் செய்ய முடியாது. அப்படி வலிந்து ஏதாவது செய்தால் அது என்னும் அசிங்கமாகிவிடும். 

மேலும் தொடரலாம். இத்தனையும் அதன் வெளித்தோற்றம் பற்றியதே. உள்ளமைப்பு பற்றி சொல்ல எதுவுமே இல்லை. 

3 people like this

Share this post


Link to post
Share on other sites