Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

Image result for metal roof sheets

  • pre-painted galvanized steel sheets (gi- base)
  • hot dipped galvanized pre-painted steel sheet
  • zinc alum steel sheet (galvalume)
  • non- color (55% aluminum 43% zinc 1.6% silicon)
  • alu-zinc coating: az 150 (option az 100)
Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
2 minutes ago, Surveyor said:

Image result for metal roof sheets

  • pre-painted galvanized steel sheets (gi- base)
  • hot dipped galvanized pre-painted steel sheet
  • zinc alum steel sheet (galvalume)
  • non- color (55% aluminum 43% zinc 1.6% silicon)
  • alu-zinc coating: az 150 (option az 100)

அப்பு கூகிளில் இது கிடைத்ததுக்கு நன்றி - கூகுளுக்கு
ஆனால் நான் கேட்டது இதனின் வெப்பம் கடத்தல் திறனைப் பற்றி ராசா!
 

Link to comment
Share on other sites

10 minutes ago, ஜீவன் சிவா said:

அப்பு கூகிளில் இது கிடைத்ததுக்கு நன்றி - கூகுளுக்கு
ஆனால் நான் கேட்டது இதனின் வெப்பம் கடத்தல் திறனைப் பற்றி ராசா!
 

Thermal conductivity
Material Thermal conductivity
  (W/m K)*
Diamond 1000
Silver 406
Copper 385
Gold 314
Brass 109
Aluminum 205
Iron 79.5
Steel 50.2
Lead 34.7
Mercury 8.3
Ice 1.6
Glass,ordinary 0.8
Concrete 0.8
Water at 20° C 0.6
Asbestos 0.08
Snow (dry) ...
Fiberglass 0.04
Brick,insulating 0.15
Brick, red 0.6
Cork board 0.04
Wool felt 0.04
Rock wool 0.04
Polystyrene (styrofoam) 0.033
Polyurethane 0.02
Wood 0.12-0.04
Air at 0° C 0.024
Helium (20°C) 0.138
Hydrogen(20°C) 0.172
Nitrogen(20°C) 0.0234
Oxygen(20°C) 0.0238
Silica aerogel 0.003
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான(?) வீடுகளில் இருப்பவர்கள்

image.jpg

இந்த வீடுகளில் குடியிருப்பதா

IMG_4487.jpg

அல்லது தமிழர் அனைவரும் ஒருமித்து இப்படியான வீடுகளில் குடியிருக்க செய்வதா என முடிவெடுங்கள்.

IMG_4489.jpg

Link to comment
Share on other sites


இந்த பொருத்து வீடு வேண்டாம் என்பவர்களால் ஒரு காரணத்தையும் சொல்ல முடியவில்லை - அப்புறம் ஏன் வேண்டாம் என்கிறார்கள்.

உந்த விளையாட்டுக்கு நான்  வரல

நேரம்  பொன்னானது

நித்திரையாக இருப்பவர்களை எழுப்ப முயற்சிப்பதுண்டு....

 


ஆனால் நித்திரை கொள்வதாக நடிப்பவர்களை - அம்மாடி வேணாம் 

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

அப்பு கூகிளில் இது கிடைத்ததுக்கு நன்றி - கூகுளுக்கு
ஆனால் நான் கேட்டது இதனின் வெப்பம் கடத்தல் திறனைப் பற்றி ராசா!
 

 

1 hour ago, Surveyor said:
Thermal conductivity
Material Thermal conductivity
  (W/m K)*
Diamond 1000
Silver 406
Copper 385
Gold 314
Brass 109
Aluminum 205
Iron 79.5
Steel 50.2
Lead 34.7
Mercury 8.3
Ice 1.6
Glass,ordinary 0.8
Concrete 0.8
Water at 20° C 0.6
Asbestos 0.08
Snow (dry) ...
Fiberglass 0.04
Brick,insulating 0.15
Brick, red 0.6
Cork board 0.04
Wool felt 0.04
Rock wool 0.04
Polystyrene (styrofoam) 0.033
Polyurethane 0.02
Wood 0.12-0.04
Air at 0° C 0.024
Helium (20°C) 0.138
Hydrogen(20°C) 0.172
Nitrogen(20°C) 0.0234
Oxygen(20°C) 0.0238
Silica aerogel 0.003

Image result for metal roof sheets

1. மேலே காட்டப்பட்டுள்ள கூரைத்தகடு பெரும்பாலும் அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றால் செய்யப்படுகின்றது.

2. வெப்பக் கடத்துத்திறன் (Thermal conductivity) என்பது பொருளுக்கு பொருள் மாறுபடும். மேலும் ஒரு பொருளின் வெப்பக் கடத்துத்திறன் ஆனது watts per meter kelvin (W/(m·K) மூலம் அளக்கப்படுகின்றது.

3. மேலே கொடுக்கப் பட்ட அட்டவணையில்  
அலுமினியத்துக்கான வெப்பக் கடத்துத்திறன் 205W/(m·K)
இரும்புக்கான வெப்பக் கடத்துத்திறன் 79.5W/(m·K)
உருக்குக்கான வெப்பக் கடத்துத்திறன் 50.2W/(m·K)
சீமெந்துக்கான (concrete) வெப்பக் கடத்துத்திறன் 0.8W/(m·K)
செங்கலுக்கான (Brick, red) வெப்பக் கடத்துத்திறன் 0.6W/(m·K)

ஆகவே மேலே உள்ள தரவுகளின் படி அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel)  என்பவற்றின் வெப்பக் கடத்துத்திறன் மிக மிக மிக அதிகம். எனவே லுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றை விட சீமெந்து மற்றும் செங்கல்லு என்பவையே வெப்ப வலைய நாடுகளுக்கு மிகவும் பொருத்தம் .

குறிப்பு: இதுவும் விளங்காவிடில் யாராவது physics படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். நாங்கள் எதையும் வாசித்து போதுமான அளவு விளங்கிக் கொண்ட பின்புதான் இந்தப் பொது வெளியில் இணைக்கிறோம். மேலும் ஆதாரம் இல்லாமல் விஞ்ஞானம் சம்பந்தமான எதையும் கண்டபடி இணைப்பதில்லை.

Link to comment
Share on other sites

8 minutes ago, Surveyor said:

 

Image result for metal roof sheets

1. மேலே காட்டப்பட்டுள்ள கூரைத்தகடு பெரும்பாலும் அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றால் செய்யப்படுகின்றது.

2. வெப்பக் கடத்துத்திறன் (Thermal conductivity) என்பது பொருளுக்கு பொருள் மாறுபடும். மேலும் ஒரு பொருளின் வெப்பக் கடத்துத்திறன் ஆனது watts per meter kelvin (W/(m·K) மூலம் அளக்கப்படுகின்றது.

3. மேலே கொடுக்கப் பட்ட அட்டவணையில்  
அலுமினியத்துக்கான வெப்பக் கடத்துத்திறன் 205W/(m·K)
இரும்புக்கான வெப்பக் கடத்துத்திறன் 79.5W/(m·K)
உருக்குக்கான வெப்பக் கடத்துத்திறன் 50.2W/(m·K)
சீமெந்துக்கான (concrete) வெப்பக் கடத்துத்திறன் 0.8W/(m·K)
செங்கலுக்கான (Brick, red) வெப்பக் கடத்துத்திறன் 0.6W/(m·K)

ஆகவே மேலே உள்ள தரவுகளின் படி அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel)  என்பவற்றின் வெப்பக் கடத்துத்திறன் மிக மிக மிக அதிகம். எனவே லுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றை விட சீமெந்து மற்றும் செங்கல்லு என்பவையே வெப்ப வலைய நாடுகளுக்கு மிகவும் பொருத்தம் .

குறிப்பு: இதுவும் விளங்காவிடில் யாராவது physics படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். நாங்கள் எதையும் வாசித்து போதுமான அளவு விளங்கிக் கொண்ட பின்புதான் இந்தப் பொது வெளியில் இணைக்கிறோம். மேலும் ஆதாரம் இல்லாமல் விஞ்ஞானம் சம்பந்தமான எதையும் கண்டபடி இணைப்பதில்லை.

நான் இணைத்த படம் பிழையாக இருக்கலாம் 
ஆனால் 
எனது கேள்வி நியாயமானது 

இந்த கூரை எது?

IMG_4487.jpg

இதுதான் கேள்வி - புரியாமல் புலம்பாதீர்கள்.

 
பாவம் கூகிள்

Link to comment
Share on other sites

1 minute ago, ஜீவன் சிவா said:

நான் இணைத்த படம் பிழையாக இருக்கலாம் 
ஆனால் 
எனது கேள்வி நியாயமானது 

இந்த கூரை எது?

IMG_4487.jpg

இதுதான் கேள்வி - புரியாமல் புலம்பாதீர்கள்.

 
பாவம் கூகிள்

 

9 minutes ago, Surveyor said:

 

Image result for metal roof sheets

 

அதுசரி இந்த தகரத்தில் தான் அந்தக் கூரை செய்யப்பட்டுள்ளது என்பது கூட படத்தப் பார்த்தபின்பும் விளங்காவிடில் நாம் ஒண்டும் செய்ய முடியாது.  நாங்கள் ஒண்டும் கண்டபாட்டுக்கு எழுதவில்லை. எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்குது Mr.

உங்களை மாதிரி நாங்கள் ஒண்டும் சும்மா அலம்பவில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Surveyor said:

 

Image result for metal roof sheets

1. மேலே காட்டப்பட்டுள்ள கூரைத்தகடு பெரும்பாலும் அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றால் செய்யப்படுகின்றது.

2. வெப்பக் கடத்துத்திறன் (Thermal conductivity) என்பது பொருளுக்கு பொருள் மாறுபடும். மேலும் ஒரு பொருளின் வெப்பக் கடத்துத்திறன் ஆனது watts per meter kelvin (W/(m·K) மூலம் அளக்கப்படுகின்றது.

3. மேலே கொடுக்கப் பட்ட அட்டவணையில்  
அலுமினியத்துக்கான வெப்பக் கடத்துத்திறன் 205W/(m·K)
இரும்புக்கான வெப்பக் கடத்துத்திறன் 79.5W/(m·K)
உருக்குக்கான வெப்பக் கடத்துத்திறன் 50.2W/(m·K)
சீமெந்துக்கான (concrete) வெப்பக் கடத்துத்திறன் 0.8W/(m·K)
செங்கலுக்கான (Brick, red) வெப்பக் கடத்துத்திறன் 0.6W/(m·K)

ஆகவே மேலே உள்ள தரவுகளின் படி அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel)  என்பவற்றின் வெப்பக் கடத்துத்திறன் மிக மிக மிக அதிகம். எனவே லுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றை விட சீமெந்து மற்றும் செங்கல்லு என்பவையே வெப்ப வலைய நாடுகளுக்கு மிகவும் பொருத்தம் .

குறிப்பு: இதுவும் விளங்காவிடில் யாராவது physics படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். நாங்கள் எதையும் வாசித்து போதுமான அளவு விளங்கிக் கொண்ட பின்புதான் இந்தப் பொது வெளியில் இணைக்கிறோம். மேலும் ஆதாரம் இல்லாமல் விஞ்ஞானம் சம்பந்தமான எதையும் கண்டபடி இணைப்பதில்லை.

பதில்

 

7 minutes ago, ஜீவன் சிவா said:

நான் இணைத்த படம் பிழையாக இருக்கலாம் 
ஆனால் 
எனது கேள்வி நியாயமானது 

இந்த கூரை எது?

IMG_4487.jpg

இதுதான் கேள்வி - புரியாமல் புலம்பாதீர்கள்.

 
பாவம் கூகிள்

எங்க போய்முட்ட...

 

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

பதில்

 

எங்க போய்முட்ட...

 

இந்த கூரையை பற்றி உங்களுக்கு தெரியாததுக்கு நான் எங்க போய் முட்டுறதாம்
எங்கையாவது முட்டலாம் - ஆனா எங்க எண்டுதான் புரியல்ல.

அளவையாருக்கு ஏன் பச்சை போட்டனான் எண்டுதானே யோசிக்கிறீர்கள் - பாவம் மனுஷன் படுக்கட்டும் எண்டுதான்.

Link to comment
Share on other sites

இணையவன் பசித்தவனை பட்டினி போடுமாறு இங்கு எவருமே கூறவில்லை. அப்படி கூறுவதாக ஒரு பொய்யை  திரும்ப திரும்ப ஒருவர் மட்டும் கூறிவருகிறார். 

பசித்தவனுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்கும் சகல வசதிகளும் இருந்தும் கூடிய செலவில் இறக்குமதி சைய்யப்பட்ட ஆரோக்கியமற்ற உணவை வழங்குவது பற்றியே இங்கு கள உறுப்பினரால் விவாதிக்கப்படுகிறது. 

அது ஆரோக்கியமற்றது என்று தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட  பிரதிநிதிகள் முதல் தாயகத்தில் வாழும் பலர் கூறியும்,  அந்த ஆரோக்கியமற்ற உணவிற்காக வாரக்கணக்காக அதை தான் கொடுக்கவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் தான்  அந்த உணவு ஆரோக்கியமானது என்று நிரூபிக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

5 minutes ago, trinco said:

பசித்தவனுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்கும் சகல வசதிகளும் இருந்தும் கூடிய செலவில் இறக்குமதி சைய்யப்பட்ட ஆரோக்கியமற்ற உணவை வழங்குவது பற்றியே இங்கு கள உறுப்பினரால் விவாதிக்கப்படுகிறது. 

அதுசரி அந்த ஆரோக்கியமான உணவை நீங்கள் வழங்கலாமே

இங்கு ஆரோக்கியமான கருத்தாடலை எதிர்பார்த்து மொக்கை ஆகின நான் உங்கள் கருத்தத்தினால் இன்னமும் மொக்கை ஆகிடுவானோ என்ற பயத்தில் 

நீங்கள் வம்பளக்க எத்தனையோ திரி இருக்கு - இங்கு வேண்டாமே 

 


 

Link to comment
Share on other sites

ஒரு திரியில் ஒருவரை கருத்து எழுதவேண்டாம் எண்டு தடுக்கும் உரிமை நிர்வாகத்தை தவிர யாருக்கும் இல்லை.

Link to comment
Share on other sites

Speech to Parliament by Minister of Prison Reform, Rehabilitation, Resettlement and Hindu Affairs Minister

Honourable Speaker,

As everyone knows, unlike the past governments, the present day government of good governance is more concerned towards the issues of the Tamil people. Even though tremendous developments have been witnessed after 8th of January 2016 in the lives of people living in the Northern and the Eastern parts of the country, the government of good governance and me has been facing criticism all the time.  I think that I will be able to adequately answer such criticism in today's parliamentary speech.

I wish to take this opportunity to give a clear picture of the development projects undertaken by my Ministry, including the 65,000 Housing Project, and to answer the questions raised by some parliamentarians.  

  1. Development Projects of the Ministry for the Year 2016

The government of good governance has paid special attention towards the people of the North and the East, who have been victimized by the 30 years long war. The Ministry of Prison Reforms and Development, Rehabilitation, Resettlement and Hindu Affairs, has allocated 14,000 million Rupees to resettle and rehabilitate them. The allocated 14,000 million rupees is being utilized for the rehabilitation and resettlement of all the innocent people including resettled people of the North and the East, refugees repatriated from India, and the war-affected Sinhala border villagers.

Under the funding of my Ministry, 10,030 permanent houses are being newly built in 11 Districts including 08 war affected districts of the North and the East and the border districts of Puttalam, Anuradapura and Pollannaruwa. While the Housing Project is underway, 647 million Rupees has been allocated to facilitate drinking water to 11 war affected Districts. Steps have been taken to solve the drinking water problem of affected people by constructing public wells, renovating the existing public wells and providing water lines to houses.

In the Northern and the Eastern Provinces, 2400 war-damaged houses were renovated at a cost of Rupees 480 million. Under this programme, Rupees 200,000/= was provided to each family for the renovation of houses.

Rs. 418 million has been allocated to improve the sanitation facilities of 7600 families. The construction work of toilets has already been commenced.  Under this scheme, a toilet is built at a cost of Rs 55,000/=.

Rupees 632.70 million have been allocated to develop the infrastructure facilities in the resettled areas. Utilizing these funds, roads and school buildings will be renovated while improving sanitation and drinking water facilities in the schools.

War has affected many families severely, and left many families without livelihoods. In order to improve the livelihoods of these families, measures have been taken to provide Rupees 100,000/=   as livelihood assistance to each family. Accordingly Rupees 1,205 million has been allocated.

Rupees 154 million have been allocated to provide optional lands and to construct permanent houses to develop infrastructure facilities to people in the Mannar District  whose lands are in the possession of armed forces.

The landmines which have been buried in the war torn areas still remain a big problem to people. Rs. 20 million has been allocated through the Ministry to demine those areas with the help of foreign experts.

Palmyra industry takes prime importance in the livelihood of most of the people in the North and theEast. Rupees 160 million have been allocated to Palmyra related development programs. Accordingly Rupees 110 million has been allocated to the Palmyra based livelihood development programmes and Rs 50 million to expand the services of Palmyra Research Institute and the development works are underway now.

As the Northern and the Eastern Provinces are gifted with sea frontage, the fisheries industry remains one of the most important livelihood modes of most of the people in these Provinces. The war had severely affected the fisheries industry. North Sea Limited has resumed its labours to strengthen the fishery families and to improve their living standards. Rupees 103 million have been allocated to further modernize fishing net manufacturing factories in Kurunagar, Lunuwila, and Weeravila this year.

In addition to these projects carried out by the Rehabilitation Ministry, certain special projects have been implemented for various purposes in the Jaffna District. Rs. 1987.35 million has been allocated for this purpose.

Special projects such as constructing a bridge between Kytes and Kaarainagar, providing passenger boats, constructing a jetty to Delft Island and Eluvai Thivu, renovation of the road between Velanai and Kytes, and the clinical waste and solid waste management of the Jaffna Municipal Council have also been implemented in line with other ongoing projects.

The 30 year war remained a barrier to the cultural development of Tamil people. Arrangements are nearing completion to construct a cultural centre close to Jaffna library at a cost of Rs.1, 400 million with financial assistance from India.

In 2016, Rs. 93 million have been allocated to renovate the Hindu Temples which were damaged due to the conflict. The renovation works have been started by the Department of Hindu Religious and Cultural Affairs.

Prisons Reforms, Rehabilitation, Resettlement and Hindu Affairs Ministry has implemented all programmes which could be implemented by the Ministry within this year under the good governance towards the people who were affected by three decade war. The Ministry will also implement various projects in the coming years towards the welfare of war affected people.

 

  1. 65,000 housing programme

 

Due to the war, internal displacement and destruction to movable and immovable properties of the people of the Northern and the Eastern Provinces occurred on a large scale. After the end of the war, civilians began to resettle in liberated areas. Most of their houses were fully or partly damaged.

Housing projects for those who lost their homes were undertaken with the assistance of World Bank and Indian Government.  Yet there is a need for 137,000 more houses and the present government has to go for a Housing Project to fulfil the housing needs of those affected.

Due to the three decades of war and the ongoing development projects, the government is facing a heavy financial deficit.  According to the decision of the Cabinet it was decided to request proposals from international and national house builders who have the capacity to undertake construction of houses with concessionary financing arrangements from reputed financing institutions.

In accordance with the Cabinet decision, call for Expression of Interest from the bidders who can reveal the source of funding, was issued in the papers in September 2015. Accordingly 35 companies from Sri Lanka and overseas, submitted the Expressions of Interest.

Based on the Circular of the Ministry of Resettlement, 15 companies pre-qualified for the bid after the evaluation of Expressions of Interest submitted by 35 companies.  In October 2015, above mentioned 15 companies were requested to reveal their technical and financial capabilities including Project Proposals, in an application form provided by the Ministry of Resettlement.  According to the Procurement Guidelines the two envelop system was implemented for evaluation purposes. Only bids accompanied with the bid security of Rupees 650 million were accepted. The Project Committee appointed by the Ministry carefully analysed each project proposal and financial proposal of the technically qualified bids opened during the evaluation only for the two technically qualified bidders.

Out of the 15 companies only 13 companies paid the required non-refundable deposit to collect the Application for Proposal and out of 13 companies, only 8 companies have submitted the proposals by December 2015.  Out of the 8 companies only two companies have submitted bid security for the amount of Rs.650 million and acceptable technical proposals.

The confirmed concessionary financing arrangements are a mandatory requirement for eligibility in the financial evaluation process. Only one of the two companies fulfilled the financial evaluation requirements. ArcelorMittal Construction, France has submitted a detailed financial package, and won the bid successfully.

After winning the bid, details regarding ArcelorMittal Construction - France were submitted to the Negotiation Committee appointed by the Cabinet. This committee submitted a comprehensive report to the Cabinet. That resulted in appointing a Special Official Committee in February 2016, headed by the Treasury Secretary and   paved the way to include people’s opinion, and environmental potentialities.  

In order to get a clear understanding of the people’s opinion, two model houses were built in Kopay and Thellippallai in the Jaffna District.  According to the recommendations of the Special Official committee, people were requested to visit these houses and express their views and interests. Since then the general public have been visiting these homes. Selecting the beneficiaries was through paper advertisements and application forms were distributed accordingly.

Housing project comprising 65,000 houses would be carried out by the France based company Arcelor Mittal Construction, which has its branches in 79 countries and has a workforce of 220,000. And it is the world’s leading company in the production of metal.  This proves without any doubt that these houses will be of international quality. These 65000 mortar type houses have a minimum lifetime of 70 years and the company has already given 30 years of guarantee.

The estimated cost of the two companies, to build a house with an extent of approximately 550 square feet, was evaluated at the final stage. Accordingly, Arcelor Mittal Construction was providing a house at a cost of Rupees 2,180,000/=while EPI-OCPL Consortium was ready to offer a house of the same extent at Rupees 1,325,590/=. But ArcelorMittal Construction - France is providing fully furnished houses which includes solar panel, tube well, furniture including bed and pantry cupboards, T.V, gas cookers, water supply and Wi-Fi. Therefore there is cost of 2.1 Mn is not just for basic house but a fully furnished house with all facilities. This project will definitely raise the living standards of the people of Northern and Eastern provinces.

According to the expertise report of the Peradeniya University, the prefabricated housing construction programme will not involve local labour or resources and the construction period will be comparatively much less. The expert committee has pointed out some shortcomings as well   Arcelor Mittal Construction agreed to raise the foundation level of these houses, in accordance with the area's rainfall and flood conditions, and also agreed to use metallic coated steel for the construction purposes. Arrangements will be made to use firewood as a means of cooking outside the house. 

Members of Parliament Hon. Charles Nirmalanathan and Hon. Sumanthiran have commented adversely regarding the 65000 housing project, complete explanations were given in the Newspapers. Ministry requested the people to visit the model houses and submit their applications. I wish to inform this house that the people of the Northern Sri Lanka submitted their applications willingly. In the Jaffna district we have received 32,050 applications for the housing project. And I also wish to inform that a total of 97,232 applications have been received from Jaffna, Vavuniya, Mannar, Kilinochchi, Mullaitivu, Trincomalee, Batticaloa and Ampara.

I always prioritize the needs of the people I serve. With my detailed speech I wish to convey the message to Hon Member of Parliament Charles Nirmalanathan that anyone would understand the complete transparency maintained in relation to the 65,000 housing Scheme. I also wish to inform Hon. Member of Parliament Charles Nirmalanathan that it is not right to put forward allegations without evidence.  They falsely alleged me of using the housing project for personal gains. Even though the allegation has been proven false by maintaining a complete transparency throughout the housing project, they are now falsely accusing the party leadership.

Hon Member of Parliament Charles Nirmalanathan also inquired me about the arrests of rehabilitated cadres. Arrest of a person is related to the country’s law and order, and to maintain law and order not only Tamils, persons from other communities are also arrested. If anyone is arrested unlawfully, instead of condemning vehemently, please bring it to my notice. I will take up the issue with the President and Prime minister, discussing with them I will obtain an appropriate solution.

Co-chairmen of the District and Divisional Co-ordinating Committees are appointed by His Excellency the President. A parliament member’s developments are not only restricted to his electorate.  I had been elected to Parliament by the National list, according to the votes casted by the people all over Sri Lanka. I wish to inform that I have the right to develop any part of Sri Lanka.

Hon. Member of Parliament Charles Nirmalanathan was inquiring about my linkages with Vanni. I am not an Alien. My contact with the Northern Province is historical.  My ancestral home which is almost 175 years old is still in Manipay. My grandfather Mr Mooththathambi was the founder of the Nallur Mangaiyarkkarasi Vidyalayam and the Monastery in the Nallur West road.  By donating their lands to Manipay Hindu College, Parameshwara College and Ramanathan College, they have contributed towards the educational development of our people.  I wish to bring this to the notice of Hon Member of Parliament Charles Nirmalanathan. 

Parameshwara College which was founded by my ancestors is now considered as the Jaffna University, as it excels in all disciplines. For the past 75 years the Garden Festival of the renowned Murugan Temple Nallur has been conducted by my family and now I was graced to continue that.  I wish to advice Hon Member of Parliament Charles Nirmalanathan not to comment on things that he is unaware of.

Hon. Member of Parliament Anura Kumara Disanayake questioned about the building which our Ministry obtained. Ministry of Resettlement is functioning in a building in Kollupitiya with an extent of 17,923 square feet. Earlier this Ministry engaged only with the resettlement activities. Later, subjects of the Hindu religious affairs, rehabilitation and prisons reforms had been comprised additionally to my Ministry.  Therefore, the number of staff and institutions under the Ministry were increased.  In order to bring all the departments and institutions of the Ministry under one roof, a building with an extent of 35,100 has been rented out.

When the ministry invited for tenders, the building, which the first lowest bid was submitted was not vacant and the same institution is functioning up to now in that building. Some important facilities, such as parking and lift had to be shared with other organizations, in regard to the building for which the 2nd lowest bid was submitted.  The difference of the monthly rent per square feet between the 2nd lowest bid and the 3rd lowest bid is Rs. 5.00.  So we were left with no option than acquiring the building at Kollupitiy to which the 3rd lowest bid was submitted. 

It was decided to pay Rupees 114/= as the effective rent per square feet.  I wish to inform that according to the recommendations of the Ministry Procurement Committee, the final decision regarding the building rental was taken.

I wish to say that if all the departments and institutions of a ministry functions under one roof, time wastage and fuel cost will be reduced resulting in expedite efficient services. The building which we have rented out now, does not have separate meeting rooms. The common auditorium has to be utilized for the purpose of conducting meetings.  This will restrict mobility, at the same time all the institutions will be using the same office furniture.

Tamil National Alliance Parliamentarian Hon. Mavai Senathirajah has stated that I am refusing to cooperate with them. I request Palimentarian Hon. Mavai Senathirajah, who has extensive experience regarding the situation of the North and East, to reveal the reason for such allegation.  I have acted promptly whenever the TNA Parliamentarians pointed out reasonable issues and I am unable to accept this allegation.

I wish to bring to the notice of Parliamentarian Mavai Senathirajah that after the government of good governance came to power release of approximately 3,140 acres of land in the Northern and Eastern Provinces, the rehabilitation and resettlement processes and the above mentioned developments are fulfilled with my fullest cooperation and support through my ministry.

I was made aware that you made the statement at the celebrations of Jaffna Nadeshwara College starting its educational process at its own place. I wish to inform that almost a month back I allocated Rupees 3 million from my Decentralized Budget, for reconstruction process of Jaffna Nadeshwara College.  

 

D. M. Swaminathan

Minister of Prison Reform, Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs 

http://resettlementmin.gov.lk/site/index.php?option=com_content&view=article&id=19&Itemid=6&lang=en

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில இணைப்புக்கள் யாழில் தடை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

3 hours ago, Surveyor said:

ஒரு திரியில் ஒருவரை கருத்து எழுதவேண்டாம் எண்டு தடுக்கும் உரிமை நிர்வாகத்தை தவிர யாருக்கும் இல்லை.

****** ஒரு கூரைத்தகடு பற்றிய விளக்கம் இல்லாதவர்கள் எல்லாம் மக்கள் கரிசனையாளர்கள் - எப்படியாவது போங்கள். நான் நிச்சயமாக இது பற்றி எழுதப்போவதில்லை. எதுவுமே தெரியாமல் குறை கண்டுபிடிப்பவர்களுக்கு அதிலும் குறை இருக்கும்.

முடிந்தால் குறைந்தது கூரையாவது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் - பின்னர் எழுதலாம்.

Link to comment
Share on other sites

3 hours ago, ஜீவன் சிவா said:

***** ஒரு கூரைத்தகடு பற்றிய விளக்கம் இல்லாதவர்கள் எல்லாம் மக்கள் கரிசனையாளர்கள் - எப்படியாவது போங்கள். நான் நிச்சயமாக இது பற்றி எழுதப்போவதில்லை. எதுவுமே தெரியாமல் குறை கண்டுபிடிப்பவர்களுக்கு அதிலும் குறை இருக்கும்.

முடிந்தால் குறைந்தது கூரையாவது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் - பின்னர் எழுதலாம்.

நீங்கள் எதோ கூரை தகட்டில் Phd முடிச்ச மாதிரி எங்களுக்கு நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டாம்.  உங்களை போல நாங்கள் வெளி வேஷம் போடவில்லை. நீங்கள் மட்டும்தான் தமிழ் மக்களை காக்க வந்த ரட்ச்சகர் மற்றவர் எல்லோரும் தமிழர்களுக்கு எதிராவனவர்கள் என்ற உங்களது வாதம் அருவறுக்கத்தக்கது. 

இதுதான் இந்த திரியில் எனது கடைசி பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆங்கில இணைப்புக்கள் யாழில் தடை செய்யப்பட்டுள்ளது.

கருத்து சரிதான்..

சில ஆங்கில தரவுகளை கருத்துரு சிதறாமல் முழுவதும் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவதும் சிரமம் தானே! 

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

அதுசரி அந்த ஆரோக்கியமான உணவை நீங்கள் வழங்கலாமே

இங்கு ஆரோக்கியமான கருத்தாடலை எதிர்பார்த்து மொக்கை ஆகின நான் உங்கள் கருத்தத்தினால் இன்னமும் மொக்கை ஆகிடுவானோ என்ற பயத்தில் 

நீங்கள் வம்பளக்க எத்தனையோ திரி இருக்கு - இங்கு வேண்டாமே 

 


 

1. திட்டத்தை அமுல்பபடுத்துபவர்கள் அரசாங்கம் 

2. திட்டம் யாருக்காக? அந்த நாட்டு வரியிறுப்பீளராகிய குடிமக்களுக்கு. 

3. திட்டத்தை எதிப்பவர்களில் முக்கியமானவர்கள் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். 

4. திட்டத்தை இங்கு விமர்சிப்பவர்களும் நாட்டு குடிமக்களே. 

அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வரும  போது அதை விமர்சிக்க கருத்து சொல்ல அந்த நாட்டு குடிமக்களுக்கு உரிமை உண்டு. 

நிலைமை இப்படி இருக்க வீட்டு திட்டத்தை விமர்சிப்பது விடுத்து  நீ வழங்கலாமே என்று ஒரு தனி நபரிடம் கேள்வி கேட்டு   வடிகட்டிய முட்டாள்்தனமாக விதண்டாவதம் புரிந்தால் யார் தான என்ன செய்ய முடியும்.  

இந்த  பொருத்து வீட்டு திட்டத்தை அமுல் படுத்தாவிட்டால் மக்களுக்கு வீடு இல்லை என்று அரசாங்கள் அறிவித்துவிட்டதா? இல்லையே. அப்படியிருக்க பொருத்து வீட்டை விமர்சிப்பவர்களுடன் நீங்கள் பாய்வது ஏனோ? அதை கல் வீடுகளாக அதிக மக்களுக்கு உதவமுடியும் என்றே கூறுகிறார்கள். 

புலம்பெயர்ந்து  வெளி நாட்டில் உல்லாசமாக வாழ்கிறாரகள் என்றால் அப்படி புலம்பெயர்ந்து  வாழ்ந்துவிட்டு இறுதிக்காலத்தை உல்லாசமாக கழிக்க அங்கு சென்று வாழ்பவர்களுக்கு உள்ள அதே  உரிமை புலம்பெயர்ந்து தற்போது வாழந்துவரும்  தாயக மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிவரும்  மக்களுக்கும்  உண்டு. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூனோ குருடோ.....கூழோ கஞ்சியோ..... கொட்டிலோ தட்டுவமோ குடுங்க சாமியோவ்....
நாளைக்கு  கிடைக்கிற பிலாக்காயை விட இண்டைக்கு கிடைக்கிற கிலாக்காயே மேல் எண்ட உலகத்திலை வாழுறம்.

ஆனால் வருங்கால சந்ததிக்கு எதை விட்டுச்செல்கிறோம்???????

Link to comment
Share on other sites

பொருத்து வீடு எமக்கு  புதியது. யாழ் குடாவில் ஏன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அநேக கட்டுமானப் பணிகள் அதிக வளங்களை விரயமாகி மேற்கொள்ளப்படுபவை. சீமெந்து, மண் நீர்  என அதிகளவு வள விரயத்தில் மேற்கொள்ளப்படும்  கட்டுமானங்களுக்கான மாற்றீடுகள் குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும். ஆனால் எமது மனதிலே வீடு என்பதற்கு ஒருவகை வரைவிலக்கணத்தை கொடுத்திருக்கிறோம். அதை மாற்ற நீண்ட காலம் எடுக்கும்.

எனக்கும் பொருத்து வீட்டில் அதிகளவு திருப்தி இல்லை ஆனால் வீடற்று அவதியுறும் மக்களுக்கு இது  intrim solution ஆக அமைந்தால் மகிழ்ச்சியே.

எனது கவலை எல்லாம் கட்டின கோபுரத்தை இடித்து மீண்டும் கட்டி, வருசத்துக்கு இரண்டுதரம் வர்ணம் பூச  விரயமாகும் காசில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியிருந்தாலே பல வீடுகளை கட்டி முடித்திருக்க முடியும்.  

ஜீவன் அண்ணை, இந்த வரியம் ஊருக்கு வாறன், சந்திப்பமே?

 

Link to comment
Share on other sites

இரண்டாம் உலகப் போரிலே தோற்ற நாடுகள்தான் (ஜப்பான் + ஜெர்மனி) உலகை பின்னர் புதிய தொழில் நுட்பத்தால் வெற்றிகொண்டன. பழமையை  பேசி புதியன புகுதலை மூர்க்கமாக எதிர்காது புதியன செய்து உலகை தமதாக்கினார். இன்று சீனா இந்தியா போலல்லாது அந்த வகையில் உலகை பொருளாதார நிலையில் ஆடசி செய்கிறது.

எமது பாரம்பரியமென்று கொங்கிறீட் சுவரும் ஓட்டு வீடும்தான் வேண்டும் என்று கேட்பது எம்மை முன்னேற விடாது. மேலும் இந்த கொங்கிறீட் எங்களின் பாரம்பரியத்தில் வந்ததும் இல்லை. இன்றுவரை கட்டப்படும் வீடுகள் கூட எமது சூழலுக்கும் மக்களுக்கும் இசைய காலப்போக்கில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்படட ஐரோப்பிய வீடமைப்புகளே. எமது பாரம்பரிய வட்ட  வீடுகள் நாற்சார் வீடுகள் காலனித்துவ ஆடசிகாலத்தில் முற்றாக கைவிடப்படடன.  

சூழலுக்கும் எமது மக்களுக்கும் பொருத்தமான புதிய வீடமைப்புகள் உருவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை யுத்தம் அல்லது யுத்தத்தில் அழிவு அல்லது தோல்வி நமக்கு வழங்கியுள்ளது. அதை சரிவர பயன்படுத்தும் ஆற்றலும் அறிவும் எம்மிடம் நிறையவே உள்ளது. மகாவலி அபிவிருத்தி திடடத்தின்போது எனது சக சிங்கள கடடடக்கலைஞர்களால் மிக கவனமாக நீண்ட ஆய்வுகள், மாதிரி அமைப்புகள் ஊடாக  புதிய வீடமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. வெறும் வீடுகள் மட்டுமன்றி கிராமங்களே வடிவமைக்கப்படடன. 

இப்போது வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் வீடுகளின் கடடமைப்புகளில் எமது கடடடக் கலைஞர்களின், நாடு நகர திட்டவியலாளர்களின் பங்களிப்பே இல்லை என்பதை திடமாக சொல்லலாம். கல்வி அறிவற்ற அரசியல் பலமற்ற ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த விளையாடடை மேட்ற்கு நாடுகளால் செய்ய முடியாமல் உள்ளது. ஆனால் இலங்கை அவர்கள் விளையாட களம் அமைத்து கொடுக்கிறது. அதுவும் கல்வியில் உயர் நிலையில் இருந்த வடக்கு மக்களுக்கு. இது மிகவும் வேதனையானது. மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் கீழ் நிலையில் உள்ளதை காட்டுகிறது. அவர்களுக்கு எந்த அரசியல் பலமும் இல்லை என்பதை காட்டுகிறது. 

இப்போது நிறுவப்படும் வீடுகள் மக்களுடைய கலாசாரத்தையும், சூழலையும், சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பெரும் அளவில் பாதிக்கும் என நிறுவுவதற்கு அதிக அறிவு தேவை இல்லை. அதை எழுத இப்போதுகால அவகாசமில்லை. முடிந்தால் விரைவில்  நீண்ட கட்டுரையே எழுதுகிறேன். . பிரேமதாசாவின் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து மிக பெரிய சம்பளத்தில் நான்கு நிபுணர்கள் 1984இல் 3 வருட ஒப்பந்தத்தில் வீடமைக்க வந்திருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம் இருந்த அமைப்புகளை பிரதி பண்ணி சில பொருத்தமில்லாத மாற்றங்களை செய்து சமர்ப்பித்தார்கள். மிகவும் ஆற்றலும் துணிவும் உள்ள எனது மேலதிகாரி (Turner  Wickramasinge) அவர்களின் கையாலாகாத்தனத்தை விமர்சித்தது போராடி ஏழு மாதத்துள்  அவர்களை  நாட்டிடை விட்டு வெளியேற வைத்தார். பிரேமதாசாவுக்கு அது தோல்வியானாலும் உண்மையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை முறித்தார். 

இப்போது தேவையானது பிரேமதாச போன்ற அரசியல் தலைவர்களும் விக்ரமசிங்கே போன்ற  அதிகாரிகளுமே. மக்களுக்கு சரியான வழியை காட்டும் பொறுப்பு கற்றவர்களுக்கு தலைவர்களுக்கும் உண்டு. மக்கள் விரும்புகிறார்கள். ஏன்  தடுக்கிறீர்கள் என்றால் நாங்கள் கற்று என்ன பயன். 

Link to comment
Share on other sites

பொருத்து வீடு பற்றி யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த ஆய்வு முடிவுகளிலும் வெளி வெப்பத்தைவிட உள்வெப்பம் 4 - 6 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் நல்ல கல்வீடு உள்ளவர்கள், பணமுள்ளவர்களும் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்துள்ளார்களாம்! தங்கள் பெரிய காணிகளில் ஒருபகுதியை தனிக் காணியாக பிரித்து அதில் பொருத்து வீடுகளை அமைக்க கோரும்படி மேற்படி கிராம சேவையாளர்கள் இவர்களிடம் சொல்லியுள்ளார்கள்.  

கிராம சேவையாளர்களுக்கு கடும் நிர்பந்தம் காரணமாக வேறுவழியின்றி இவ்வாறு செய்து வருகிறார்களாம்.

Link to comment
Share on other sites

On 1/18/2017 at 8:09 AM, Thumpalayan said:

ஜீவன் அண்ணை, இந்த வரியம் ஊருக்கு வாறன், சந்திப்பமே?

 

தாராளமாக சந்திக்கலாம் - ஆனால் சும்மா ஒரு நேர சாப்பாட்டுக்காக இல்லை ஒரு முழு நாளை என்னுடன் செலவழிப்பதாயின் வரவேற்கின்றேன்.
செலவுகளை நான் பார்த்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.