Jump to content

கஞ்சாவில் ரொட்டி   சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில்  வாக்குமூலம்


Recommended Posts

கஞ்சாவில் ரொட்டி   சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில்  வாக்குமூலம்

 

 

கிளிநொச்சி  செல்வாநகர்  பகுதியில்  வைத்து  ஆயிரத்து  இருநூறு  கிராம்  கஞ்சாவுடன்  நீர்கொழும்பைச்  சேர்ந்த முப்பது வயதான  சந்தேக நபர்  ஒருவர் நேற்றுமுன்தினம்   கிளிநொச்சிப் பொலிசாரால்  கைதுசெய்யப்பட்டிருந்தார். 

unnamed-_2_.jpg
குறித்த சந்தேக  நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி இருந்தனர்.

 

இதன்போது  குறித்த சம்பவம் தொடர்பாக  மன்று சந்தேக நபரை  வினவிய போது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள  துர்க்கை  அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு  பட்பைப்பதாகவும் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார்.

fafs.jpg
குறித்த சம்பவம் தொடர்பாக  குறித்த ஆலயத்தின்  பதிவு மற்றும்  ஆலயத்தை  சோதனையிட  மன்று வழங்கிய  உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப்  பொலிசார்  மற்றும்  கரச்சி பிரதேச  செயலக உதவித்திட்டமிடல்  பணிப்பாளர்  அமல்ராஜ்  மற்றும் கலாச்சார  உத்தியோகத்தர் கிராம  அலுவலர் கின்சான்கொல்  அபிவிருத்தி  உத்தியோகத்தர்  ரெயிநோலட்  சோதனை நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தனர்இ  இருப்பினும்  எவ்விதமான  சந்தேகத்திற்குரிய  பொருட்களும்  மீட்க்கப்படவில்லை.

unnamed-_1_.jpg

அத்துடன்  குறித்த ஆலயம்  பதிவற்ற  ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

unnamed-_3_.jpg

 

 

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

பிதிர்க்கடன்களை செய்ய கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்த விநோதம்
பிதிர்க்கடன்களை செய்ய கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்த விநோதம்
பிதிர்க்கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்ததாக கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் வைத்து இரண்டாயிரத்து 750 கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபரை இன்று முன்னிலைப்படுத்திய போதே, இவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு முன்னாள் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலே தான் வேலை செய்த தாகவும் சில பிதிர்க்கடன்களை செய்வதற்காக கஞ்சாவில் ரொட்டி சுட்டுப் படைப்பதாகவும் திறந்த நீதிமன்றத்தில் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை சோதனையிடுமாறு கிளி நொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதற்கு அமைய, கிளிநொச்சிப் பொலிஸார் மற்றும்  கரைச்சி பிரதேச  செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் கலாச்சார  உத்தியோகத்தர், கிராம அலுவலர் கின்சான்கொல், அபிவிருத்தி  உத்தியோகத்தர்  ரெயிநோல்ட் ஆகி யோர் சோதனை நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.
 
இருப்பினும், எந்தவிதமான சந்தேகத்திற்குரிய பொருட்களும் மீட்கப்படவில்லை என கிளிநொச்சிப் பொலிஸார் தெரி வித்துள்ளனர்.  
 
அத்துடன், குறித்த ஆலயம் பதிவற்ற ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு பகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
1483980199_download%20%281%29.jpg1483980206_download.jpg
1483980246_download%20%283%29.jpg

http://www.onlineuthayan.com/news/22467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதாரிவிழ கஞ்சாரொட்டி இப்பவும் சுடுறாங்களே? திருந்த மாட்டாங்கள்.lol2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ கஞ்சாரொட்டி இப்பவும் சுடுறாங்களே? திருந்த மாட்டாங்கள்.lol2.gif

சாமி கனவில வந்து கேட்டதாமே?

2.7 கிலோ கஞ்சாவோட பிடிபட்டு, கோட்டில, விடுகதை விடுறான் பாவி..

உள்ளாற போட்டு, ஆறுதலா, எல்லோருக்கும், வீச்சு ரொட்டி போட்டு, பிதுர்கடன் நிறைவேற்ற விடனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ கஞ்சாரொட்டி இப்பவும் சுடுறாங்களே? திருந்த மாட்டாங்கள்.lol2.gif

என்ன பைரவரா வீட்ட அனுப்பவோ கு.சாமி அண்ணை    இதை சொன்னதால் நாய்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவும் அவ்வளவுதான்tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.