Jump to content

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்


Recommended Posts

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்

 

இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்
 David Paul Morris

2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார்.

பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது..

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன.

இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது.

நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்துள்ளார்.

ஆனால், கடந்த ஆண்டு ஐஃபோன்களின் விற்பனை சரிந்துள்ளது.

இது அதன் தோற்றத்தில் வெளியான போன்களின் வெற்றியை பிரதிபலிப்பதாக உள்ளது.

http://www.bbc.com/tamil/global-38555273

Link to comment
Share on other sites

தடை பல கடந்து ஐஃபோன் பிறந்த கதை

  •  
    2007 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐஃபோனை அறிமுகம் செய்தார்.
 
 2007 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐஃபோனை அறிமுகம் செய்தார்.

''ஸ்டீவ் என்னிடம் இது ஒரு மிகவும் முக்கியமான ரகசிய விஷயம் என்று கூறியிருந்தார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடப்போவதாக கூறியிருந்தார்.''

''நான் மிகவும் பதற்றமானேன்.''

உலகின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தயாரிப்பாகவிருக்கும் ஆப்பிள் ஐஃபோனின் முன் மாதிரி தொலைந்துவிட்டது என்பதை ஸ்டீவ் ஜாப்ஸிடம் எப்படி விளக்கிக்கூறுவது என்பதை டோனி ஃபெடெல் யோசித்து கொண்டிருந்தார்.

நேற்று திங்கட்கிழமையோடு ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

விமானத்திலிருந்து இறங்கியபின் டோனி தனது பாக்கெட்களை சோதித்து பார்த்த போது அதில் எதுவுமில்லை.

''(ஸ்டீவ் ஜாப்ஸிடன் இதை சொன்னால்) என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ஒவ்வொரு காட்சியையும் நான் கற்பனை செய்து பார்த்துவிட்டேன் - அதில் ஒன்று கூட சுபமாக முடியவில்லை'' என்றார் டோனி.

டோனி ஃபெடெல் ஐபாடின் காட்ஃபாதராக பார்க்கப்படுகிறார்.  டோனி ஃபெடெல் ஐபாடின் காட்ஃபாதராக பார்க்கப்படுகிறார்.

எதை தேட முயற்சிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் இதைத் தேடும் வேலயில் ஈடுபட்ட குழு ஒன்றின் முயற்சியால், இரண்டு மணி நேரங்களுக்குப் பின் நிம்மதி கிடைத்தது.

''அது என்னுடைய பாக்கெட்டிலிருந்து விழுந்து இரு சீட்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்தது''

வெறும் சில மாதங்களில், இந்த சிறிய கருவியைப்பற்றி உலகம் முழக்க தெரிந்து கொள்வார்கள்.

ஆனால், இப்போது ஃபெடெல் மிகவும் கெட்டியாக தன்னுடைய கைகளில் அதைப் பிடித்து வைத்திருந்தார்.

60களின் எதிர்கால தொலைபேசி

சில நேரங்களில் டோனி ஃபெடெல் ஐபாடின் ’காட்ஃபாதராக’ (ஞானத் தந்தை) பார்க்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டில் அவர் ஆப்பிள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி நெஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது, வீடுகளை நவீனமயமாக்கும் நெஸ்ட் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சொந்தமாக்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த நெஸ்ட் நிறுவனத்தைவிட்டு அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஃபெடெல் கணக்குப்படி பார்த்தால், முதல் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 12.5 ஆண்டுகள் ஆகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றி வந்த ஐபாட் மேலும் மேம்படுத்தப்படலாம் என்ற யோசனையை ஃபெடல், மேலும் கட்டியெழுப்பி திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது அந்த தருணத்தில்தான்.

அந்தக் காலகட்டத்தில், ஐபாடில் காணொளிகளை காணவும், விளையாட்டுகளை விளையாடவும் முடிவும்.

இப்படியான மாயஜால மூலப்பொருள்களைக் கொண்ட தொடக்கம்தான், ஐஃபோன்கள் தொழில் நுட்ப எல்லைகளைத் தகர்த்தெறிய காரணமாக இருந்தது என்றார் ஃபெடெல்.

சக போட்டியாளர்களான மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கணினியை ஒரு தொலைபேசி வடிவில் சுருக்க முயற்சித்து கொண்டிருந்த போது, ஐபாடை இன்னும் மேலும் நுட்பமானதாக மாற்ற ஆப்பிள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது.

ஐபாடின் தனித்துவமான கிளிக் வீல் பகுதி, ஐஃபோனின் ஆரம்ப கட்டத்தில் அதன் உள்ளீட்டு வடிவமைப்பாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி விரைவில் கைவிடப்பட்டது.

'(அந்த கிளிக் வீலை ஐஃபோனில் பயன்படுத்துவது) '60களில் பயன்படுத்தப்பட்ட எண்களை சுழற்றும் வகையிலான தொலைபேசிகள் போல இது நாங்கள் வடிவமைத்தோம்,'' என்று நினைவு கூர்கிறார் ஃபெடெல். ''இது வேலைக்கு ஆகாது, பயன்படுத்துவது கடினம், என்று முடிவுக்கு வந்தோம்`` என்கிறார் அவர்.

பல தடைகளை கடந்து ஐஃபோன் பிறந்த கதைSHAUN CURRY

இது நடைபெற்று கொண்டிருந்த அதே சமயம் ஆப்பிளின் மற்றொரு பிரிவானது, மேக்கிண்டோஷ் கணினிகளில் தொடுதிரை குறித்த பணிகளை தொடங்கியிருந்தது.

'' அவர்கள் மிகவும் ரகசியமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தத் திரை பிங் பாங் விளையாட்டு மேஜையின் அளவை கொண்டிருந்தது. அதை என்னிடம் காட்டிய ஸ்டீவ், 'இதை எடுத்து அப்படியே ஐபாடில் போட வேண்டும்' என்றார்.''

ஸ்டீவ் கனவு கண்டிருந்த ஒரு தொடுதிரை கருவியை உருவாக்க நேரம், பணம் மற்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட புதிய கட்டமைப்புகள் தேவைப்படும் என்று ஃபெடெல் ஸ்டீவ் ஜாப்ஸிடம் எச்சரித்திருந்தார்.

'' இந்த பணியை முடிக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட எங்களுக்கு தேவைப்பட்டனர்.''

''அதன்பிறகு வெறும் ஆறு மாதங்களே அந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நேரம் இருந்தது. அதை செய்து முடித்தோம்தான் - ஆனால் அது சுலபமானதாக இருக்கவில்லை''

மல்மோ மர்மம்

நிறுவனத்தில் சிறந்த மூளைகளை ஆப்பிள் கொண்டிருந்தது, ஆனால் அந்த தருணம்வரை அது சொந்தமாக ஒரு போனை உருவாக்கியதில்லை.

அதனால், ஃபெடெல் உண்மை கண்டறியும் உலக சுற்றுலா ஒன்றுக்கு திட்டமிட்டு, தொலைத்தொடர்பு வல்லுநர்களின் ஆராய்ச்சி கூடங்களுக்கு சென்றார்.

சுவீடனில் மல்மோ என்ற ஒரு உற்பத்தியாளருடன் பிரச்சினை தொடங்கியது.

முதல் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பல செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பல செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த பயணத்தின்போது, ஃபெடெல் குழுவினர் ஒரு உணவகத்திற்குள் இருந்த போது, அவர்களுடைய பைகள், குறிப்பு புத்தகங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் கார்களிலிருந்து திருடப்பட்டன.

''நாங்கள் போன் ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்'' என்றார் ஃபெடெல்.

ஐஃபோன் தொடர்ந்து பிரபலமாக இருந்தாலும் அதன் வருடாந்திர விற்பனை என்பது முதல் முறையாக கடந்தாண்டு சரிந்துள்ளது.  ஐஃபோன் தொடர்ந்து பிரபலமாக இருந்தாலும் அதன் வருடாந்திர விற்பனை என்பது முதல் முறையாக கடந்தாண்டு சரிந்துள்ளது.

தங்களுடைய உடைமைகளை தொலைத்தாலும், நிறைய திட்டங்களுடன் அந்த குழு வீடு திரும்பியது.

இதற்கிடையே, ஒரு கடுமையான விவாதம் அப்போதுதான் தொடங்கியிருந்தது.

கீபோர்ட் எழுப்பிய சர்ச்சை

ஐஃபோன்னுக்கு கீபோர்ட் வேண்டுமா அல்லது வேண்டாமா ? என்பதுதான் அந்த சர்ச்சை .

''இந்த சண்டை சுமார் நான்கு மாதங்களுக்கு நடைபெற்றது,'' என்றார் ஃபெடெல். ``அது ஒரு மிகவும் மோசமான சூழ்நிலை.''

மனதளவில் தொடுதிரை மீதான ஜாப்ஸின் ஈர்ப்பு காரணமாக, தன்னுடைய யோசனைகளை ஏற்காதவர்கள் மீது கோபமடைந்தார். அதனால் அவர் ஒரு முரட்டுத்தனமான கொள்கையை அமல்படுத்தினார்.

அவருடைய தொடுதிரைக்கு எதிராக பேசியவர்களிடம் ஸ்டீவ் கூறிய வார்த்தைகளை ஃபெடெல் நினைவு கூர்கிறார். ''எங்களுடைய யோசனைக்கு ஒத்துப்போகும் வரை இந்த அறைக்கு வரவேண்டாம் என்றும், இந்த அணியில் இருக்க விரும்பவில்லை என்றால் தாரளமாக அணியிலிருந்து வெளியேறிவிடுங்கள்`` என்றாராம் ஜாப்ஸ்.

முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து ஐஃபோன் விற்பனைக்கு வந்தது.  முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து ஐஃபோன் விற்பனைக்கு வந்தது.

விரைவில் கருத்து வேறுபாடுகள் நின்றன.

''ஒருவர் அந்த அணியிலிருந்து விலக்கப்பட இந்த தகவல் அனைவருக்கும் சென்றதைத் தொடர்ந்து ஸ்டீவ் கருத்துடன் ஒன்றுபட்டனர்''

அந்த அறையிலிருந்து இந்த விவாதம் ஓய்ந்தாலும், ஐஃபோன் தயாரிப்பு குழுவினரின் மூளைகளிலிருந்து நீங்கவில்லை.

''தொடுதிரையை பயன்படுத்துவதில் உள்ள அனைத்து அபாயங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்``.

ரகசிய பேனா யுக்தி

ஐஃபோனின் தொடுதிரையை இயக்க ஸ்டைலஸ் என்ற பேனா போன்ற எவ்விதமான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என்பதில் ஜாப்ஸ் குறிப்பாக இருந்தார். வெறும் விரல்கள் மட்டுமே போதும் என்பதில் தெளிவாக இருந்தார்.

ஆனால், தயாரிப்பு குழுவிடம் ஃபெடெல் பல்-தொடுதிரை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவிடம் , ஐஃபோன் தொடுதிரையை இந்த ஸ்டைலஸ் என்ற பேனா மூலமும், விரல்கள் மூலமும் இயக்க வசதி செய்யுமாறு கூறியிருந்தார். இது ஐஃபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மாடல் ஐஃபோன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மாடல் ஐஃபோன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஐஃபோன் தொடுதிரையை பென்சில் கொண்டு இயக்க முடியும் என்ற தொழில்நுட்பத்தை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு தெரியாமல் செய்ததாக நினைவு கூறுகிறார் ஃபெடெல், ''ஒருவேளை ஸ்டீவ்வுக்கு இதுபற்றி தெரிந்திருந்தால் என்னுடைய தலையை வெட்டியிருப்பார்'' என்கிறார் அவர்.

விண்டோஸில் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்த ஜாப்ஸ் விட்டுக்கொடுத்திருக்கலாம் . ஆனால், கல்லறைக்கு செல்லும் வரை ஐஃபோன் தொடுதிரையை இயக்க ஸ்டைலஸ் கருவியை பயன்படுத்துவது பற்றி இறுதிவரை வெறுப்புடன் இருந்தார்.

அவரைத்தொடர்ந்து வந்த ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் பென்சில் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் பால்மரின் சிரிப்பு

2007 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள், ஸ்டீவ் ஜாப்ஸ் என்னதான் அப்படி கொண்டு வந்தார் என்பதை கண்டறிய சான் ஃபிரான்சிஸ்கோவின் மாஸ்கோன் மையத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் குவிந்திருந்தனர்.

அந்த ஆண்டின் மாக்வேர்ல்ட் நிகழ்வில் சிறப்பு உரையை நிகழ்த்திய ஜாப்ஸ் இறுதியாக, 'இன்னொரு விஷயம் இருக்கிறது' என்றார்.

ஐஃபோனின் வெற்றி ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகவதற்கு உதவியது.  ஐஃபோனின் வெற்றி ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகவதற்கு உதவியது.

மேடையிலிருந்த அந்த கருவி ''அரைகுறையாக இருந்தது'' என்று நினைவு கூர்கிறார் ஃபெடெல், ஆனால், உடனடியாக அதனை ``கடவுளின் தொலைபேசி`` என அது பெயர் பெற்றது.

ஏதோ புனிதப் பொருளை காட்டுவது போல , ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி ஊடகங்கள் கேலி செய்தன.

அப்போது, மைக்ரோசாஃப்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மர் ஐஃபோனை பார்த்துவிட்டு பலமாக சிரித்தார். வர்த்தக பயன்பாட்டாளர்களுக்கு பயன்படுத்துவதற்கும், இமெயில் அனுப்புவதற்கும் சிறந்த கருவியல்ல இது என்றார்.

''நாங்கள் எல்லாம் அவரை பார்த்து சிரித்தோம்'' என்கிறார் ஃபெடெல்.

அன்றிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன.

இது ஆப்பிள் நிறுவனத்தை உலகிலே பணக்கார நிறுவனமாக மாற்றியது.

http://www.bbc.com/tamil/science-38571427

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.