Jump to content

10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான்


Recommended Posts

10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் சிட்னி டெஸ்டில் 13 ரன்னில் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார்.

 
 
10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான்
 
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான். 39 வயதான இவர் சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 9964 ஆக உயர்ந்தது.

2-வது இன்னிங்சில் 36 ரன் எடுத்ததில் யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவர் 13 ரன்னில் ஆட்டம் இழந்ததால் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார்.

யூனுஸ்கான் 115 டெஸ்டில் விளையாடி 9977 ரன் எடுத்துள்ளார். இதில் 34 சதம் அடங்கும். 10 ஆயிரம் ரன்னுக்கு அவருக்கு மேலும் 23 ரன் தேவை. அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களில் தான் அவர் இந்த ரன்னை எடுக்க இயலும் அதுவரை அவரை விளையாட பாகிஸ்தான் தேர்வு குழு அனுமதிக்குமா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்பது தெரியவில்லை.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/07122416/1060697/younis-khan-missed-10-thousand-runs.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.