Jump to content

பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம்

Recommended Posts

பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம்
 
article_1483698759-steel-house.jpg-எம்.றொசாந்த்

பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில்  2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வடமாகாண முதலமைச்சர், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்திட்டத்தை நிராகரித்ததுடன் வடமாகாண சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் கவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொருத்து வீடு வேண்டாம் என போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பொருத்து வீட்டுத்திட்டத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு விண்ணப்பங்களையும் கோரியுள்ளது. இந்நிலையில், பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழிலிருந்து இதுவரை 189 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/189304/ப-ர-த-த-வ-ட-ட-த-த-ட-டத-த-க-க-ய-ழ-ப-ப-ணத-த-ல-ப-ர-வ-ண-ணப-பம-#sthash.HXsDjcjl.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

65 ஆயிரம் வீட்டிற்கு இலட்சக்கணக்கில் மக்கள் விண்ணப்பித்ததாக கள உறுப்பினர் ஒருவர் எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தனியே கிணறு இருக்கு

மலசலகூடம் இருக்கு

எதற்கு தனி நாடு   கேட்கிறீர்கள்? என கேட்டது போல

யாழ்ப்பாணத்தில் 189 பேர் தான் போரால் வீடுகளை இழந்தார்கள்

கொடுத்துவிட்டோம் என்பார்களோ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்களுக்கு தனியே கிணறு இருக்கு

மலசலகூடம் இருக்கு

எதற்கு தனி நாடு   கேட்கிறீர்கள்? என கேட்டது போல

யாழ்ப்பாணத்தில் 189 பேர் தான் போரால் வீடுகளை இழந்தார்கள்

கொடுத்துவிட்டோம் என்பார்களோ...???

உருக்கு / இரும்பு வீட்டிற்கு 189 விண்ணப்பங்கள். 

இலட்சக்கணக்கானவர்கள் வடகிழக்கில் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை-டி.எம்.சுவாமிநாதன்

Posted By Thiru On November 21st, 2016 12:48 AM | செய்திகள்  

swaவடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://tamil24news.com/news/வடக்கில்-பொருத்து-வீடுகள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

உது நவம்பர் மாத பழைய செய்தி.

நவீனன் இணைத்தது ஜனவரி மாத செய்தி. புதுசு கண்ணா புதுசு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப 55 வயது ,கிழக்கு மாகாணத்தில் எனது தந்தையார் பணிபுரியும் பொழுது இந்த பொருத்து வீடுகள் கண்காட்சியில்(விவசாய திணைக்களத்தால்) வைக்கப்பட்டிருந்தன ...கிட்டதட்ட 40 வருடங்களின்பின்பு இது வீடு மீண்டும் அறிமுகமாகின்றது......அப்ப எனக்கு அந்த வீடுகள் மிகவும் அழகா தெரிந்த்தது ஆனால் புத்திசாலி மக்கள் விரும்பவில்லை

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

உது நவம்பர் மாத பழைய செய்தி.

நவீனன் இணைத்தது ஜனவரி மாத செய்தி. புதுசு கண்ணா புதுசு.....

புதுசோ பழசோ பூனைக்குட்டி விரைவில் வெளியே வரும் கண்ணா!

மூலம் 

: http://www.tamilmirror.lk:grin:

32 minutes ago, MEERA said:

உருக்கு / இரும்பு வீட்டிற்கு 189 விண்ணப்பங்கள். 

இலட்சக்கணக்கானவர்கள் வடகிழக்கில் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

அப்ப 97 189 ஆ?

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் வாபஸ் பெற்றுவிட்டார்களா? அல்லது இன்னமும் மேலதிகமான 189 பேர் விண்ணப்பித்துள்ளார்களா?

Link to comment
Share on other sites

30 வருடங்களாக ஓலைக் குடிசையில் வாழ்ந்த மக்களை மீண்டும் அகதி முகாமில் அதே குடிசையில் வைத்திருக்க விரும்பும் உங்கள் எண்ணத்துக்கு ஒரு கும்புடு - சாமி ஆளை விடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை.

நாவற்குழியில் சில நூறு சிங்களவர்களுக்கு கல் வீடு கட்டிக் கொடுக்கும் அரசாங்கம் ஆயிரக்கணக்கான(?) தமிழர்களுக்கு பொருத்து வீட்டை, கல் வீட்டினை விட இரண்டு மடங்கு செலவில் ஏன் கட்டிக் கொடுக்க முனைகிறது? இதற்கு உங்களின் பதில் என்ன?

11 minutes ago, ஜீவன் சிவா said:

30 வருடங்களாக ஓலைக் குடிசையில் வாழ்ந்த மக்களை மீண்டும் அகதி முகாமில் அதே குடிசையில் வைத்திருக்க விரும்பும் உங்கள் எண்ணத்துக்கு ஒரு கும்புடு - சாமி ஆளை விடு.

எந்த இடத்திலும் மக்களை ஓலைக் குடிசையில் இருங்கள் என்று கூறவில்லை. 

தரகத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் இருக்க கஸ்டமாக உள்ள போது நாலா பக்கமும் உருக்கு வேலியால் சூழப்பட்ட வீட்டினுள் இருக்கும் போது எப்படி இருக்கும்? 

Link to comment
Share on other sites

உங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை.

7 minutes ago, MEERA said:

நாவற்குழியில் சில நூறு சிங்களவர்களுக்கு கல் வீடு கட்டிக் கொடுக்கும் அரசாங்கம் ஆயிரக்கணக்கான(?) தமிழர்களுக்கு பொருத்து வீட்டை, கல் வீட்டினை விட இரண்டு மடங்கு செலவில் ஏன் கட்டிக் கொடுக்க முனைகிறது? இதற்கு உங்களின் பதில் என்ன?

மாதிரிக் கிராமம் நாவற்குழியில்…
மாதிரிக் கிராமம் நாவற்குழியில்…
யாழ் - நாவற்குழி பிரதேசத்தில், குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ். மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை வழங்கியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 350,000 ரூபா வீதம் வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
 
இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில், குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் சுமார் 3000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
 
அத்துடன் 2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. நாவற்குழி பிரதேசத்தில், வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் 200 தமிழ் குடும்பங்கள், 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை,  குறித்த மாதிரிக் கிராமத்தில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அப்பே ரட்டே அப்பேட்ட ஒனா.......என்று சகோதரயா சொல்லும் பொழுது அவையளுக்கு ஆமா போட வேண்டியது எமது கடமை கண்டியளோ:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

????

சிங்கள மக்களுக்கு நோகாமல் நாம் வாழவேண்டும் என்று சொல்லுறீயள்

Link to comment
Share on other sites

Just now, putthan said:

சிங்கள மக்களுக்கு நோகாமல் நாம் வாழவேண்டும் என்று சொல்லுறீயள்

இல்லை
தமிழ் மக்கள் பட்டது காணும் இனியாவது வாழ விடுங்கள் என்று சொல்கிறேன். 

7 minutes ago, ஜீவன் சிவா said:

அப்பே ரட்டே அப்பேட்ட ஒனா......

நான் கேட்டது இதுக்கு என்ன அர்த்தம் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100  வருட ஒடுக்குமுறையின்  பின்பும்

தமிழர்களுக்குத்தான்ஒத்துவாழத்தெரியவில்லை என்று வந்து நிற்கிறது

உருப்படுமா இந்தஇனம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இல்லை
தமிழ் மக்கள் பட்டது காணும் இனியாவது வாழ விடுங்கள் என்று சொல்கிறேன். 

எமது கையில் எதுவும் இல்லை அந்த நாட்டில் எமது மக்களின் தலைவிதியை நிர்மானிப்பது அந்தநாட்டின் அரசு ..அவர்கள் நினைத்தால் அந்த இனத்தை அழிக்கலாம்...எமது கையில் தட்டச்சு மட்டுமே

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

100  வருட ஒடுக்குமுறையின்  பின்பும்

தமிழர்களுக்குத்தான்ஒத்துவாழத்தெரியவில்லை என்று வந்து நிற்கிறது

உருப்படுமா இந்தஇனம்???

பசியில் இருப்பவனுக்குத்தான் தெரியும் பசியின் கொடுமை - அதனை மற்றவர்கள் விபரிக்க முடியாது + விளக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

100  வருட ஒடுக்குமுறையின்  பின்பும்

தமிழர்களுக்குத்தான்ஒத்துவாழத்தெரியவில்லை என்று வந்து நிற்கிறது

உருப்படுமா இந்தஇனம்???

சேர் பொன் ராமநாதன் முதல் இன்று சுவாமிநாதன் வரை முயற்சிசெய்யினம்....ஆனால் "சி" அசையவில்லை

Link to comment
Share on other sites

1 minute ago, putthan said:

எமது கையில் எதுவும் இல்லை அந்த நாட்டில் எமது மக்களின் தலைவிதியை நிர்மானிப்பது அந்தநாட்டின் அரசு ..அவர்கள் நினைத்தால் அந்த இனத்தை அழிக்கலாம்...எமது கையில் தட்டச்சு மட்டுமே

புரியுதில்லையா
அல்லலுறும் மக்களுக்கு முதலில் உணவு + உடை + உறையுள்தான் இப்ப தேவை - மிகுதியை அப்புறம் அவர்களே பார்ப்பார்கள்.
உதை சிட்னியில் இருந்து சொல்லாமல் இஞ்ச வந்து சொல்லுங்கோ காலில விழுந்து கேட்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

புரியுதில்லையா
அல்லலுறும் மக்களுக்கு முதலில் உணவு + உடை + உறையுள்தான் இப்ப தேவை - மிகுதியை அப்புறம் அவர்களே பார்ப்பார்கள்.
உதை சிட்னியில் இருந்து சொல்லாமல் இஞ்ச வந்து சொல்லுங்கோ காலில விழுந்து கேட்க்கிறேன்.

புத்தன் சொல்லி கேட்கவில்லை,காந்தி சொல்லி கேட்கவில்லை ,ஜெசு சொல்லி கேட்கவில்லை நான் செ(சொ)ல்லியா கேட்க போயினம்

Link to comment
Share on other sites

22 minutes ago, putthan said:

புத்தன் சொல்லி கேட்கவில்லை,காந்தி சொல்லி கேட்கவில்லை ,ஜெசு சொல்லி கேட்கவில்லை நான் செ(சொ)ல்லியா கேட்க போயினம்

சரி புத்தா 

அப்பே ரட்டே அப்பேட்ட ஒனா......  இதுக்கு என்ன அர்த்தம்? இதில எனக்கு புரிந்தது அப்பே என்றால் நான் என்பது மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சரி புத்தா 

அப்பே ரட்டே அப்பேட்ட ஒனா......  இதுக்கு என்ன அர்த்தம்? இதில எனக்கு புரிந்தது அப்பே என்றால் நான் என்பது மட்டுமே.

"எங்களுடைய  நாடு  எங்களுக்கு வேணும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை.

மாதிரிக் கிராமம் நாவற்குழியில்…
மாதிரிக் கிராமம் நாவற்குழியில்…
யாழ் - நாவற்குழி பிரதேசத்தில், குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ். மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை வழங்கியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 350,000 ரூபா வீதம் வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
 
இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில், குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் சுமார் 3000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
 
அத்துடன் 2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. நாவற்குழி பிரதேசத்தில், வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் 200 தமிழ் குடும்பங்கள், 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை,  குறித்த மாதிரிக் கிராமத்தில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

50 ற்கும் சில நூறுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரிந்த உங்களுக்கு கேள்விக்கு பதில் அளிக்க தெரியவில்லை,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை மக்களுக்கும்  செங்கல் வீடு கட்டி கொடுக்க , சீமேந்து கல் வீடுகட்டிக்கொடுக்க எத்தனை ஆண்டுகள் போகுமென நினைக்கிறீர்கள் ??
இந்த பொருத்து வீட்டிலிருந்து கட்ட  வீடு கட்டலாம் தானே 

அரசாங்கத்தின்  விமர்சிக்கும் நாங்கள் அந்த அரசாங்கத்தின் கல் வீடுகளையும் எதிர்பார்த்து  நிற்கிறோம்  அதற்கிடையில்  எல்லா இடங்களிலும்குடியமர்தப்பட் டு விடுவார்கள் .................,.............................. நாம்   சிலை வைக்கிரவனை விட்டுட்டு செயல்படுகிறோம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.