Jump to content

காஸ்மோரா' தலைப்புக்கான அர்த்தம் படம் பார்க்கும் வரை சஸ்பென்ஸாவே இருக்கட்டும் - இயக்குநர் கோகுல்


Recommended Posts

காஸ்மோரா' தலைப்புக்கான அர்த்தம் படம் பார்க்கும் வரை சஸ்பென்ஸாவே இருக்கட்டும் - இயக்குநர் கோகுல்

 

“எனது முந்­தைய பட­மான ‘இதற்­குத்­ தானே ஆசைப்­பட்டாய் பால­
கு­மாரா’ பண்­ணிட்­டி­ருக்­கும்­போதே, கார்த்­தி­கிட்ட இந்தக் கதையை சொல்லி ஓ.கே. பண்­ணிட்டேன்.
 
கிட்­டத்­தட்ட மூணு வரு­டங்­க­ளாக இந்தக் கதை­யோட டிரவல் பண்­ணிட்டு இருக்கேன். ஒரு சின்ன ஐடியா வந்­தாலும் நேரா நானும் கார்த்­தியும் டிஸ்கஸ் பண்­ணுவோம்.
 
அப்­படி ஒவ்­வொன்னா பேசிப் பேசி உரு­வாக்­குன படம் தான் ‘காஷ்­மோரா’ இந்தப் படம்
ரி­லீசை நெருங்­கி­யி­ருக்கு.
 
இந்தப் படத்­துக்­காக ஹீரோ கார்த்­தியில் இருந்து கடைசி தொழி­லா­ளர்­ வரை எல்­லா­ருமே கடி­னமா உழைச்­சி­ருக்­காங்க. 
 
இராத்­திரி, பகல் பாராத உழைப்பு அது. அந்த உழைப்பே பெரிய கிஃப்ட் தான். ஏன்னா மன­சுக்குப் பிடிச்ச எல்­லாரும் விரும்பி பண்­ணின உழைப்பு அது” என்­கிறார் இயக்­குநர் கோகுல்.
 
‘ரெளத்­திரம்’, ‘இதற்­குத்­ தானே ஆசைப்­பட்டாய் பால­கு­மாரா’ படங்­
க­ளுக்குப் பிறகு ‘காஷ்­மோரா’ வை இயக்கியிருக்­கி­றார். தீபா­வ­ளிக்கு ரிலீஸ் ஆகி­றது படம்.
 
‘காஷ்­மோரா’ ன்னா?
இப்ப என்­னன்னு கேட்­கி­றீங்கள். உங்­க­ளுக்குள் அது என்ன அப்­ப­டின்னு தெரிஞ்­சுக்­கிற ஆர்வம் இருக்­குல்ல. அதுக்­காக வைச்ச தலைப்­பு தான்.
 
‘காஷ்­மோ­ரா’ன்னா என்ன அப்­ப­டிங்­க­ற­துக்கு அந்த டைட்­டி­லுக்­கான அர்த்­தத்தைப் படத்­துல சொல்­லி­யி­ருக்கேன். அது­வரை அது சஸ்­பென்­சா­கவே இருக்­கட்டும்.
 
மூணு கெரக்டர் பண்­ணி­யி­ருக்கக் கார­ணமே கார்த்தி?
ஆமா. இது வரை வராத கேரக்­டரா இருக்­கணும். இதுக்கு முன்னால் கார்த்தி நடிச்­சி­ருக்­காத கெட்­டப்பா இருக்­கணும்.
 
பார்த்­த­துமே பச்­சக்­குன்னு மன­சுக்குப் பிடிக்­கிற மாதிரி இருக்­கணும். இப்­படி மூணு விஷ­யங்­களை மன­சுல வச்சு, வெவ்­வேறு வித­மான கேரக்­டர்­களை டிசைன் பண்­ணினோம்.
 

 
இதுக்­காக. 47 கெட்டப் டிரை பண்ணி கடை­சியா மூணு கேரக்­டரை முடிவு பண்­ணினோம். அந்த மூணுமே மிரட்­டலா இருக்கும். கார்த்தி ஒரு கேரக்­டர்ல ஒல்­லியா இருக்­கணும். 
 
இன்­னொரு கேரக்­ட­ருக்கு உடம்­பையும் ஏத்­தனும். மூணா­வது கேரக்­ட­ருக்கு மொட்டை போடணும்.
 
இதுக்­காக நிறைய உழைச்­சி­ருக்கார். மூணு கேரக்­ட­ருமே வேற வேற நடி­கர்கள் நடிச்ச மாதி­ரி தான் இருக்கும்.
 
வர­லாற்றுக் கதையா?
இல்ல. ஆனா, அரை மணி நேர எபிசோட் வர­லாற்றுக் கதையா இருக் கும். கார்த்தி, தள­ப­தியா வர்றார். அந்த அரை மணி நேரமும் மிரட்­டி­யி­ருக்கார்.
 
இதுக்­காக பிர­மாண்ட செட் போட்­டி­ருக்கோம். புல்­ல­ரிக்க வைக்­கிற இரண்­டு போர்க்
காட்­சிகள் இருக்கு. ‘
 
அட இங்க பார்­யா’ன்னு ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கிற விஷ­யங்கள் நுணுக்­கங்கள் நிறைய இருக் கும். 
 
ஏதா­வது குறிப்­பிட்ட மன்னன் பற்றி?
அப்­ப­டி­யெல்லாம் ஏது­மில்லை. நானா கற்­பனை பண்­ணிய ஒரு தள­பதி பற்­றிய கதையா, அது­ வெறும் யதார்த்­த­மான நிஜ­மான ஒரு வர­லாற்றுக் கதையை எடுத்தா, நிறைய மெனக்­கெட வேண்­டி­யி­ருக்கும்.
 
அதுல சின்ன தகவல் பிழை இருந்தா கூட. விவா­திக்க ஆரம்­பி­சு­டு­வாங்க. அதனால் ராஜ்­நாயக் அப்­ப­டிங்­கற கற்­பனை வர­லாற்றுத் தள
ப­தி­யையும் இள­வ­ர­சி­யையும் உரு­வாக்கி இருக்கேன்.
 
அந்த இள­வ­ரசி நயன்­தாரா. அழ­கான காதல் இருக்கு. அதுல நயன்­
தா­ரா­வோட லுக்கும் நடிப்பும் ரச­னையா இருக்கும். இன்­னொரு ஹீரோ­யினா ஸ்ரீ திவ்யா வர்­றாங்க. அவங்க வர­லாற்று ஆய்­வாளர் மற்றும் ரிப்­போர்ட்டர். விவேக் முக்­கி­ய­மான கேரக்டர் பண்­ணி­யி­ருக்கார்.
 
போர்க் காட்­சி­கள்னு சொன்­னீங்க ‘பாகு­பலி’ யை விட மிரட்­டலா இருக்­குமா? 

அந்தப் படத்­தையும் இதையும் கம்பேர் பண்ணத் தேவை­யில்லை. அது மெகா பட்­ஜெட்ல எடுக்­கப்­பட்ட படம். அந்த போர்க் காட்­சிகள் வேற. இது வேற. இருந்­தாலும் டெக்­னிக்­கலா அரு­மையா பண்­ணி­யி­ருக்­கோம்னு நினைக்­கிறேன். 
 
ஒவ்­வொரு ஷாட்­டையும் எவ்­வ­ளவு பிர­மாண்­டமா காண்­பிக்க முடி­யுமோ அவ்­வ­ளவு பிர­மாண்­டமா பண்­ணி­யி­ருக்கோம். கண்­டிப்பா எல்­லாரும் வியக்­கிற மாதிரி டீட்டெய்ல்ஸ் இருக்கும்.
 
15 செட் போட்­டி­ருக்­கீங்­க­ளாமே?

செட்­லதான் பெரும்­பா­லான காட்­சி­களை எடுத்­தி­ருக்கோம். சும்மா ரெண்டு மூணு நிமிட காட்­சி­கள்­னாலும் ரிச் லுக் வேணுங்­க­ற­துக்­காக அதி­க­மாக செலவு பண்ணி, செட் போட்­டி­ருக்கோம்.
 
சின்ன காட்­சி­தா­னேன்னு எதையும் விடலை. ஆர்ட் டைரக்டர் ராஜீவன் எல்லா செட்­டையும் அரு­மையா பண்­ணி­யி­ருக்கார் அவ­ரோடு உழைப்பு பட ரிலீ­சுக்குப் பிறகு பேசப்படும்.
 
ஒரு தர்பார் செட் போட்டிருக்கார் பாருங்க. ஆஹா நானே என் படத்தை பாராட்டக்கூடாது. அந்தப்புரம்னா அதுக்கே மூணு செட் வரும் அரண்மனை, ராஜாவதி , உலா வரும் இடம்னு நிறைய செட் போட்டிருக்கோம்.
 
சந்தோஷ் நாராயணனோட இசையும் ஓம்பிரகாஷோட ஒளிப்பதிவும் படத்துக்குத் தூண்கள்னு சொன்னா மிகையில்லை.

       
- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=19967#sthash.SVpYbLC6.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.