Jump to content

புது வருடத்தில் அரச உத்தியோகத்தர்களை முகம் சுழிக்க வைத்த விடயங்கள்


Recommended Posts

வருட ஆரம்பத்தில் கடமைகளை தொடங்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கான சத்திப்பிரமாணத்திற்கான அரச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் மற்றும் அந்நிகழ்வில் விடுவிக்கப்பட்ட அறிவிப்புகள் தமிழ் உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

குறிப்பாக அரச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே நாட்டின் ஒரே இனம் என்பதும், உயிரிழந்த படையினருக்கான மௌன அஞ்சலி என்ற சொற்பதங்களே உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

வருட ஆரம்பத்தில் மக்களுக்கான அரச சேவையில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் மக்கள் சேவை தொடர்பான சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டு தமது பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து அரச திணைக்களங்கள், நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தின் அறிவிப்பின் படி நடத்தப்பட்ட இந்நிகழ்வில் உத்தியோகஸ்தர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளும் குறித்துக் காட்டப்பட்டிருந்தது. அக் குறிப்பிட்டில் நாட்டில் ஒரே இனமாக என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த வாசகம் பேனாவால் வெட்டப்பட்டு, அதன் மேலும் ஒரே இனம் என்பதற்கு பதிலாக ஒரு தேச மக்களாக என்று மாற்றப்பட்டும் இருந்தது.

இதே போன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்றுமொரு இறுதி மொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்வில் மௌன அஞ்சலிக்கான அழைப்பு விடும் போது, அங்கு பணியாற்றி உயிரிழந்தவர்களுக்கும், நாட்டிற்காக உயிரிழந்த படையினருக்குமான அஞ்சலி செலுத்துவோம் என்று நிகழ்வினை தலைமை தாங்கியவர்களினால் அறிவித்தல் கொடுக்கப்பட்டது.

இச் செயற்பாடுகள் வருட ஆரம்பத்தில் புதிதாக கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்ததுடன், நிகழ்விலும் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/130373?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, போல் said:

இச் செயற்பாடுகள் வருட ஆரம்பத்தில் புதிதாக கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்ததுடன், நிகழ்விலும் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

அவையள் சொன்னா செய்ய வேண்டியதுதானே சும்மா ஏன் முகத்தை சுழிச்சு பகைத்துக்கொள்வான்.....tw_tounge_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.