Sign in to follow this  
Followers 0
நவீனன்

10 செகண்ட் கதைகள்

2 posts in this topic

10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

 

52p1.jpg

அழைப்பு

“ஒரு நாளைக்காவது வீட்டுக்கு வந்துட்டுப்போங்க” என மகன்களை அழைத்தார் அப்பா.

- பெ.பாண்டியன்

நவீன தலைமுறை

ஸ்மார்ட் போன்களுக்குக் கீழே பிரிக்கப்படாத ஒரு வாரத்து நியூஸ் பேப்பர். அப்பா ஊருக்குப் போயிருக்கிறார்.

- நந்த குமார்

வளர்ப்பு

குழந்தை அதட்டி, கண்டித்து வளர்த்தது பொம்மையை!

- பர்வீன் யூனுஸ்

அட்டெண்ட்

வீட்டிலும், ``இதை யாராவது அட்டெண்ட் பண்ணுங்களேன்'' எனக் கத்திக்கொண்டே இருந்தாள் பிரசவ வார்டு நர்ஸ் கோகிலா.

- கே.சதீஷ்

சண்டை

`வீட்டுல நடக்கிற சண்டையை எல்லாம் ஃபேஸ்புக்ல போடுறா' என, மனைவியைப் பற்றி நண்பர்களிடம் ட்விட்டரில் ஆதங்கப்பட்டான் ஆதவ்.

- பெ.பாண்டியன்

மீட்டிங்

`இன்று எந்த ஏ.டி.எம்-மில் சந்திக்கலாம்?' எனக் கேட்டு, திவாகருக்கு வாட்ஸ்அப் அனுப்பினாள் ஷிவானி.

- கி.ரவிக்குமார்

பார்ட்டி

``30 வயசுக்கு மேல, யாராவது பிறந்த நாள் கொண்டாடுவாங்களா?'' என மனைவியைப் பார்த்துக் கேட்டான் அலுவலகத்தில் பார்ட்டி கொண்டாடியவன்.

- கே.சதீஷ்

தேடல்

தங்கை கல்யாணத்தில் அண்ணனுக்கு பெண் பார்த்துவிட்டாள் அம்மா.

- கட்டுமாவடி கவி கண்மணி

சத்துணவு

“சத்துள்ள ஆகாரமா சாப்பிடுங்க” என்றார் டாக்டர், சத்துணவு ஆயாவிடம்.

- சி.சாமிநாதன்

பாடம்

 “புதிதாக ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிய முருகனுக்கு, அதை உபயோகிப்பது எப்படி எனச் சொல்லிக்கொடுத்தான் எட்டு வயது மகன் தீபக்.

http://www.vikatan.com/

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.....! 10 செகண்ட் கதை நல்லாயிருக்கு.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0