Jump to content

வேலைவாய்ப்பு கோரி ஒன்று திரண்ட முன்னாள் போராளிகள்

Recommended Posts

வேலைவாய்ப்பு கோரி ஒன்று திரண்ட முன்னாள் போராளிகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இன்று காலை கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்தள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னாள் ஒன்றுதிரண்டு தர்க்கத்திலும் ஈடுப்பட்டனா்.

IMG_0280.JPG

காலை 10.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் முன்னாள்  போராளிகள் தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனா்வாழ்வு  பெற்றக் காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிநின்றனா்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் அதனடிப்டையில் இன்று தேசிய அடையாள அட்டை மற்றும் புனா் வாழ்வு பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வெளிவந்தது. அதற்காகவே இங்கு வந்திருகின்றோம். எனவே  எங்களுக்கு வேலைவாய்ப்பை தாருங்கள் என சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்கவிடம் கோரி நின்றனா்.

IMG_0282.JPG

ஆரம்பத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேலைவாய்ப்புக்கு ஆட்கள்  உள்வாங்கப்பட்ட போது பெரும்பாலான முன்னாள் போராளிகள் தடுப்பில் இருந்து வெளிவரவில்லை. வெளிவந்தவா்களில் பலா் அப்போது இணைந்துகொள்வதில் விருப்பம் தெரிவிக்கவில்லை. காரணம் புதிதாக படையினருக்கு ஆட்கள் சேர்க்கின்றாா்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது நாங்கள் பாா்க்கின்றோம் மாதாந்தம் முப்பதாயிரம் ரூபாவுக்கு மேலதிகமான சம்பளத்துடன் பண்ணைகளில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் அந்தக் குடும்பங்கள் நிம்மதியாக வாழ்கின்றனா். எனவே  அ்வவாறானதொரு நிம்மதியான வாழ்க்கையை ஏனைய முன்னாள் போராளிகளும் பெற்றுக்கொள்ள எங்களுக்கும் சிவில் பொதுகாப்புத் திணைக்களத்தில் வேலை தாருங்கள் எனத் தெரிவித்தனா்.

IMG_0290.JPG

மேலும் வெளியில் நாங்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கோரினால் முன்னாள் போராளிகளுக்குதானே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை இருக்கிறது என்றார்கள். ஆனால் இங்கு முன்னாள் போராளிகளான எங்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுகினறீா்கள்.  எனவும் முன்னாள் போராளிகள் குறிப்பிட்டனா்.

இது தொடா்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி  மேஜர் சாகர வீரசிங்க கருத்து தெரிவித்தபோது, 

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள்  போராளிகள் ஒன்று கூடியுள்ளனா். சிவில் பொதுகாப்பு திணைக்களத்தை  பொறுத்தவரை தற்போதைக்கு புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும்  நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளை பாா்க்கின்ற  போது கவலையாக இருக்கிறன்றது. இந்த விடயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது கொழும்பு மட்டத்தில் உயரதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம் எனவும்  குறிப்பிட்டாா்.

IMG_0294.JPG

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் இரணைமடுச் சந்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றிலும் ஈடுபட்டனா்.

இதன்போது சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன்  வேலைவாய்ப்பு கோரி காத்திருந்து பரிதாபமான சம்பவங்களும் இடம்பெற்றது.

இதேவேளை, 170 போ் கையொப்பம் இட்டு வேலைவாய்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கிளிநொச்சி அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளனா். 

அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்கவும் தீர்மானித்துள்ளனா்.

http://www.virakesari.lk/article/14988

Link to comment
Share on other sites

புலம் பெயர்  மக்கள் இவர்களின் தகவல் அறிந்து  இவர்களுக்கு உதவலாமே  !!!!!!!!!!!!!

பிறகு இவர்கள்  முஸ்லிமாக மதம் மாறிய பின்னர் முதுகு எலும்பில்லை, இடுப்பு  எலும்பில்லை என்று அவர்களை திட்ட வேண்டியது 

தமிழ் அமைப்புக்கள் இந்த போராளிகளை கவனிக்க விட்டாலும்  முஸ்லீம் அமைப்புக்கள் இவர்களை கவனித்து  இவர்களை தாம்  உதவுவதாக  தமது மதம் பால் இழுப்பார்கள் .

இதுவரைக்கும் இந்த படத்தில் இருப்பவட்கள் எத்தனை பேர் மதம் மாறியிருப்பார்கள் ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Dash said:

ஏன் தாங்கள் புலம்பெயர் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பரிதாபமாக உள்ளது

இத்தனை போராளிகள் இன்னும் உதவிகள் கிடைக்காமல்

வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படாது

இத்தனை வருடங்களாக  

எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட  

சந்தேகத்தோடு ஒதுக்கப்படும்  வாழ்வை  எவ்வாறு தொடர்கிறார்கள்??

தமிழர்களுக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளும் மாணாணசபையும் என்ன செய்கிறது?

ஏன் இதுவரை இவர்களுக்கான எந்த ஒரு தொழில்வாய்ப்பு முயற்சிகளும் திட்டமிடப்படவில்லை???

புலத்து  மக்களின் பங்களிப்பை ஏன் ஒருமுகப்படுத்த நடவடிக்:கைகள்  தொடங்கப்படவே இல்லை???

இனியும் எவ்வளவு காலத்துக்கு இது தொடரப்போகின்றது???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இவர்கள் என்ன சொல்வது சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம் சமூகம் இவர்களை  கண்டு கொள்ள வில்லை அவ்வளவுதான் சொல்ல முடியும்  நேற்றைய செய்தி  தாளில் கல்வியமைச்சின் மேலதிக நிதி ஒதுக்கீட்டில் சில போராளிகளுக்கு  நீர் பம்பிகள் கொசுத்து உதவினார்கள்   அரசு மட்டும் கண்டு கொண்டுள்ளது 

மட்டக்களப்பில் பிறண்டிக்ஸ் என்ற காமென்ஸ்  நிறுவனம் கட்டி முடியப்போகிறது வேலை வாய்ப்பு என்பது கிராம சேவர்கள் ஊடாக கோரப்பட்டுள்ளது  ஆண்கள் பெண்கள்   ஆயிரம் பேருக்கு மேல் கிடைக்கலாம்  வெளிநாட்டு நிறுவனம் வந்தால் கூட வேலை வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும்  கிழக்கில் ப ல பெண்கள் அந்த நிறுவன திறப்பை எதிர்பார்த்து  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடா்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி  மேஜர் சாகர வீரசிங்க கருத்து தெரிவித்தபோது, 

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள்  போராளிகள் ஒன்று கூடியுள்ளனா். சிவில் பொதுகாப்பு திணைக்களத்தை  பொறுத்தவரை தற்போதைக்கு புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும்  நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளை பாா்க்கின்ற  போது கவலையாக இருக்கிறன்றது. இந்த விடயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது கொழும்பு மட்டத்தில் உயரதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம் எனவும்  குறிப்பிட்டாா்

ஒரு சிங்களவன் கூட இவர்களது நிலையை பார்த்து கவலைப்படுகின்றான். இங்கு நீ புலமா, நான் புலமா என அடிபாடு. 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

மிகவும் பரிதாபமாக உள்ளது

இத்தனை போராளிகள் இன்னும் உதவிகள் கிடைக்காமல்

வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படாது

இத்தனை வருடங்களாக  

எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட  

சந்தேகத்தோடு ஒதுக்கப்படும்  வாழ்வை  எவ்வாறு தொடர்கிறார்கள்??

தமிழர்களுக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளும் மாணாணசபையும் என்ன செய்கிறது?

ஏன் இதுவரை இவர்களுக்கான எந்த ஒரு தொழில்வாய்ப்பு முயற்சிகளும் திட்டமிடப்படவில்லை???

புலத்து  மக்களின் பங்களிப்பை ஏன் ஒருமுகப்படுத்த நடவடிக்:கைகள்  தொடங்கப்படவே இல்லை???

இனியும் எவ்வளவு காலத்துக்கு இது தொடரப்போகின்றது???????

விசகு எம்மால் முடியாது என்று இல்லை.

எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது,அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் தெரியாது.

யோசியுங்கள் விசகு £ 1 மில்லியன் செலவில் கல்லறை கட்டலாம் என்றால் , ஏன் எம்முன்னால் உயிருடன் இருப்பவர்களுக்கு உதவ முடியாது ???

பதில் 

29 minutes ago, Dash said:

விசகு எம்மால் முடியாது என்று இல்லை.

எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது,அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் தெரியாது.

யோசியுங்கள் விசகு £ 1 மில்லியன் செலவில் கல்லறை கட்டலாம் என்றால் , ஏன் எம்முன்னால் உயிருடன் இருப்பவர்களுக்கு உதவ முடியாது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதும் உங்களில் எத்தனை பேர் பகிரங்கமாக இறங்கி வேலை செய்ய தயார்?

சும்மா மற்றவனை பார்த்து கேள்வி கேட்காமல் நீங்கள் முதலில் வெளியே வாருங்கள்.

இலங்கையில் உள்ள யாராவது, உங்களால் இவர்களின் விபரங்களை திரட்ட முடியுமா?

இலங்கையில் உங்களால் ஒரு இணைப்பாளராக செயற்பட முடியுமா?

எல்லாவற்றிற்கும் ஏன் புலம் பெயர் தமிழனை எதிர்பார்க்கிறீர்கள்??? 

தாயகத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குறைந்தது இரண்டு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளமாக பெறுகிறார்கள், ஏன் இவர்களால் உதவி செய்ய முடியாது? 

Link to comment
Share on other sites

30 minutes ago, MEERA said:

அதை ஏன் தனி நபராக செய்ய வேண்டும்.
 
எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன   வைத்து செய்யலாமே
 
உதாரணமாக  அங்கு ஒருவருக்கு உதவி தேவை என்றால் அவர் போய் தனக்கு என்ன தேவை என  போய் கேட்பதற்கு ஓர் இடம் வேண்டும் . உதாரணமாக அது ஒரு கோவிலாக இருக்கலாம்.
 
அங்கு இருப்பவர்கள் புலம் பெயர் நாட்டில் இருப்பவர்களிடம்      தொடர்பு கொண்டு  அவர்களுக்கு தேவையான உதவியை பெற்று கொடுக்கலாம்.
 
மக்கள் உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள்  ஆனால் அதை ஒருங்கிணைக்க ஒரு பொறிமுறை இல்லை.
 
அது என்னவோ எனக்கு தெரியவில்லை  
 
மாவீரருக்கு கல்லறை கட்ட  தெரியுது
 
மாவீரர் தினம் நடத்த தெரியுது
 
ஊரில் கோவிலையா திருத்த த் தெரியுது
 
ஊரில் காணி/ வீடு  தெரியுது
 
ஜெனிவாவில் ஆற்பாட்டம் செய்ய தெரியுது
 
 வாழ்வாதாரம் இழ ந்தவர்களுக்கு  உதவ செய்வதெனரால்  எல்லாருக்கும் ஒரே  பிரச்சனையாக இருக்குது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Dash said:

அங்கேதான் சிறிலங்கா உளவுத்துறையும் கண்ணை புடுங்கி வைத்து காத்திருக்கின்றது. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:
அதை ஏன் தனி நபராக செய்ய வேண்டும்.
 
எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன   வைத்து செய்யலாமே
 
உதாரணமாக  அங்கு ஒருவருக்கு உதவி தேவை என்றால் அவர் போய் தனக்கு என்ன தேவை என  போய் கேட்பதற்கு ஓர் இடம் வேண்டும் . உதாரணமாக அது ஒரு கோவிலாக இருக்கலாம்.
 
அங்கு இருப்பவர்கள் புலம் பெயர் நாட்டில் இருப்பவர்களிடம்      தொடர்பு கொண்டு  அவர்களுக்கு தேவையான உதவியை பெற்று கொடுக்கலாம்.
 
மக்கள் உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள்  ஆனால் அதை ஒருங்கிணைக்க ஒரு பொறிமுறை இல்லை.
 
அது என்னவோ எனக்கு தெரியவில்லை  
 
மாவீரருக்கு கல்லறை கட்ட  தெரியுது
 
மாவீரர் தினம் நடத்த தெரியுது
 
ஊரில் கோவிலையா திருத்த த் தெரியுது
 
ஊரில் காணி/ வீடு  தெரியுது
 
ஜெனிவாவில் ஆற்பாட்டம் செய்ய தெரியுது
 
 வாழ்வாதாரம் இழ ந்தவர்களுக்கு  உதவ செய்வதெனரால்  எல்லாருக்கும் ஒரே  பிரச்சனையாக இருக்குது.
 
உங்களுக்கு எத்தனையோ தடவைகள் எழுதியாச்சு, ஏன் விளங்காத மாதிரி கீறல் விழுந்த சீடி மாதிரி அதையே திருப்பித் திருப்பி எழுதுகிறீர்கள்.

சிறீலங்கா உளவுத்துறையால் வரும் பிரச்சனையை யார் எதிர் கொள்வது? நான் எதிர் கொண்ட பிரச்சினையையும் எனது நண்பர் எதிர் கொண்ட பிரச்சினையையும் இந்தக்களத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

உங்களின் பொறுப்பின் கீழ் ஒரு கோயிலை தந்தால் நீங்கள் அங்கு சென்று ஒருக்கிணைக்க தயாரா? 

மேலே நீங்கள் குறிப்பிட்ட 5 விடயங்களும் ஒருங்கிணைப்பும் ஒன்றா? 

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

இங்கு கருத்து எழுதும் உங்களில் எத்தனை பேர் பகிரங்கமாக இறங்கி வேலை செய்ய தயார்?

சும்மா மற்றவனை பார்த்து கேள்வி கேட்காமல் நீங்கள் முதலில் வெளியே வாருங்கள்.

இலங்கையில் உள்ள யாராவது, உங்களால் இவர்களின் விபரங்களை திரட்ட முடியுமா?

இலங்கையில் உங்களால் ஒரு இணைப்பாளராக செயற்பட முடியுமா?

எல்லாவற்றிற்கும் ஏன் புலம் பெயர் தமிழனை எதிர்பார்க்கிறீர்கள்??? 

தாயகத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குறைந்தது இரண்டு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளமாக பெறுகிறார்கள், ஏன் இவர்களால் உதவி செய்ய முடியாது? 

ஏனெனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் போராட்டத்தினை காரணம் காட்டி அகதி விசா எடுத்து தின்று கொழுத்துப்போய் இருக்கிறார்கள். எனவே தாயக மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ வேண்டிய தார்மீக கடப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்ககு உண்டு்

தாயகத்திலுள்ள தமிழர்கள் போராட்டத்தினை பயன்படுத்தி சம்பாதிக்கவில்லை. இத்தனை ஆண்டு யுத்தங்களுக்கும் அழிவுகளுக்கும் தாக்குப்பிடித்து தங்கள் சுயசம்பாத்தியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, செந்தமிழாளன் said:

உதை எவ்வளவு காலத்திற்கு சொல்லப்போகிறீர்கள்? இங்கிருப்பவன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்று தெரியுமா உங்களுக்கு? திண்டு கொழுத்துப்போயிருக்கிறான் என்டு சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? 

ஏதோ புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் போராட்டத்தை காரணம் காட்டித்தான் வாழ்கிறார்கள் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. அவனும் சுயசம்பாத்தியத்தில் தான் வாழ்கிறான்.

இத்தனை ஆண்டு யுத்தங்களுக்கும் அழிவுகளுக்கும் தாக்குப்பிடித்து தங்கள் சுயசம்பாத்தியத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பவர்கள் ஒருக்கிணைக்கும் வேலையையாவது செய்யலாமே? 

ஏன் இவ்வளவு எழுதும் உங்களால் முடியுமா? 

Link to comment
Share on other sites

11 hours ago, விசுகு said:

தமிழர்களுக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளும் மாணாணசபையும் என்ன செய்கிறது?

அவங்களுக்கெல்லாம் இவர்களைப் பார்க்க எங்கை நேரம்.

Link to comment
Share on other sites

நான் அதிகமாக புழங்கும் ஒரு ஊரில், அந்த மக்கள் தங்களுக்கு என்று ஒரு நலன்புரிச்சங்கம் மற்றும் நம்பிகை நிதியம் என்பவற்றை, அந்தக் கிராம மக்கள் மற்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் நிறுவி (யாழ் மாவட்டச் செயலகத்தில் இரு அமைப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன) அந்தக் கிராமத்தைபூர்விகமாய் கொண்ட வறிய மக்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. இந்த இரு அமைப்புக்களில் வேலை செய்பவர்களுக்கு (பெரும்பாலும் முன்னாள் இந்நாள் அரச உத்தியயோகத்தர்கள்எ) எந்த விதமான கொடுப்பனவுகளை கொடுக்கப்படுவது இல்லை. எல்லோரும் பகுதி நேரமாக சேவை அடிப்பிடையில் வேலை செய்கின்றர்கள்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் செயல்பட்டால் ஓரளவு உதவிகள் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

5 hours ago, Surveyor said:

சேவையர் பச்சை கைவசம் இல்லை

9 hours ago, செந்தமிழாளன் said:

ஏனெனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் போராட்டத்தினை காரணம் காட்டி அகதி விசா எடுத்து தின்று கொழுத்துப்போய் இருக்கிறார்கள். எனவே தாயக மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ வேண்டிய தார்மீக கடப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்ககு உண்டு்

தாயகத்திலுள்ள தமிழர்கள் போராட்டத்தினை பயன்படுத்தி சம்பாதிக்கவில்லை. இத்தனை ஆண்டு யுத்தங்களுக்கும் அழிவுகளுக்கும் தாக்குப்பிடித்து தங்கள் சுயசம்பாத்தியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

செந்தமிழாளன் பச்சை கைவசம் இல்லை

9 hours ago, MEERA said:

சிறீலங்கா உளவுத்துறையால் வரும் பிரச்சனையை யார் எதிர் கொள்வது? நான் எதிர் கொண்ட பிரச்சினையையும் எனது நண்பர் எதிர் கொண்ட பிரச்சினையையும் இந்தக்களத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

அப்படி அவர்கள் என்னதான் பண்ணுகிறார்கள்.

நானும் இங்கு ஒன்றரை வருடமா ஒழியாமல் மறையாமல் வாழ்கின்றேன்தானே.
எனது அடையாளத்தையும் இழக்கவில்லை, எனது செயற்பாடுகளையும் நிறுத்தவில்லை.
இதுவரை புலனாய்வுத் துறையினரை கண்டதுமில்லை.

இங்கு அடிக்கடி வந்து போகும் நீங்களே இப்படியான பொய் தகவல்களை பரப்பலாமா?

இங்கு புலிகளின் பெயரால் எதுவுமே செய்ய முடியாது என்பது உண்மை, இங்கு மட்டுமில்லை புலத்திலும் முடியாது என்பதை வரலாறு நிறுவி விட்டது. ஆனால் உங்கள் ஊருக்கோ, இல்லை மாவட்டத்துக்கோ அல்லது மாகாணத்துக்கோ எதையாவது செய்வதை தடுக்க யாரும் வர போவதில்லை.

வெறுமனே கோவில்கள் கட்டலாம், மாணவர்களற்ற பாடசாலைக்கு ஐந்து மாடியில் கட்டிடம் கட்டலாம் ஆனால் நலிவுற்றவர்களுக்கு உதவ மட்டும் புலனாய்வு தடையாம். மீரா தயவு செய்து இவ்வாறான வதந்திகளை பரப்பவேண்டாம். இது உதவ நினைப்பவர்களையும் நிறுத்திவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலபேரின்ர அக்காறை தெரிகிறது நீங்கள் ஏன் மற்றவரை தேடி நிற்கிறீர்கள் இங்கே உங்களுறவுகள்  யாரும் இல்லையா? இருப்பார்கள் தானே அவர்கள் மூலமாக உதவுங்கள்  வேற நபரை நீங்கள் நம்ப தயாராக இல்லைதான் நான் அதை கண்டுகொண்டேன்  கிராம சேவகர் ,பிரதேச செயலாளர் வரைக்கும் மக்களுக்கு வந்த உதவிகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் , உறவுக்காரர்களுக்கும் க்கொடுத்து உதவியதை சுனாமி காலப்பகுதியில் அறிந்து கொண்டேன்   இதுவும் ஒரு காரணம்   இப்பவும் அப்படியும் இருக்கிறது .

பலபேரின் பணங்கள் மொத்தமாக ஒருவருக்கு கிடைக்கும் போது  சந்தேகம் ஏற்படுவது வழக்கம் 

 வெளிநாட்டில் கஸ்ரப்பட்டு உழைப்பவன் கொடுக்க நினைக்கிறான்  அவனால் முடியாமல் உள்ளது   பணம் உள்ளவன்  கொடுக்க மறுக்கிறான்  ஈழத்தில் உள்ள மக்கள் இவர்களை நம்பி இல்லையென்றாலும்  நமக்காக போராடியவர்கள் என்ற நினைப்பு  வேண்டும் . 

ஒரு போராளி யாரும் உதவி செய்யவில்லை இருந்த இடத்திலிருந்து  ரிங்கறிங்  (பெயின்ற் பூசுதல்)     வேலை செய்த்து நன்றாக உழைத்து வருகிறார் ஊனம் என்பது பொருட்டல்ல ஊக்கம் கொடுத்தால் போதும்  உயர்ந்து விடுவான் தமிழன்   
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

உங்களது கருத்துக்கள் 

களநிலைமைகளை சொல்வன.

தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

அப்படி அவர்கள் என்னதான் பண்ணுகிறார்கள்.

நானும் இங்கு ஒன்றரை வருடமா ஒழியாமல் மறையாமல் வாழ்கின்றேன்தானே.
எனது அடையாளத்தையும் இழக்கவில்லை, எனது செயற்பாடுகளையும் நிறுத்தவில்லை.
இதுவரை புலனாய்வுத் துறையினரை கண்டதுமில்லை.

இங்கு அடிக்கடி வந்து போகும் நீங்களே இப்படியான பொய் தகவல்களை பரப்பலாமா?

இங்கு புலிகளின் பெயரால் எதுவுமே செய்ய முடியாது என்பது உண்மை, இங்கு மட்டுமில்லை புலத்திலும் முடியாது என்பதை வரலாறு நிறுவி விட்டது. ஆனால் உங்கள் ஊருக்கோ, இல்லை மாவட்டத்துக்கோ அல்லது மாகாணத்துக்கோ எதையாவது செய்வதை தடுக்க யாரும் வர போவதில்லை.

வெறுமனே கோவில்கள் கட்டலாம், மாணவர்களற்ற பாடசாலைக்கு ஐந்து மாடியில் கட்டிடம் கட்டலாம் ஆனால் நலிவுற்றவர்களுக்கு உதவ மட்டும் புலனாய்வு தடையாம். மீரா தயவு செய்து இவ்வாறான வதந்திகளை பரப்பவேண்டாம். இது உதவ நினைப்பவர்களையும் நிறுத்திவிடும்.

நாங்கள் இங்கு உரையாடுவது முன்னாள் போராளிகளுக்கான உதவி தொடர்பாக, ஊருக்கோ, மாவட்டத்திற்கோ, மாகாணத்திற்கோ அல்ல. வதந்தியை பொய்யான தகவலை பரப்பும் நோக்கம் எனக்கு தேவையற்றது.

நீங்கள் உங்கு சுதந்திரமாக செயற்படுகிறார்கள் எனின் நீங்களே ஒருங்கிணைக்கும் பணியை செய்யலாமே? 

யாழில் புலனாய்வுத்துறையினர் இல்லை என்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

அனுபவம்

1)எனது நண்பர்கள் சிலரும் நானும் சில முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தம் கொடுப்பனவு செய்து வந்தோம், நாம் இங்கிருந்து உண்டியல் மூலம் காசை எமது நண்பர்(அரசாங்க ஊழியர்) ஒருவருக்கு அனுப்ப அவர் அதனை அப் போராளிகளுக்கு கொடுத்து வந்தார். 2016 இன் ஆரம்பத்தில் புலானாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு கூறப்பட்டது " உனக்கு உண்டியல் மூலம் காசு வருகிறது அதை வைத்தே உன்னை உள்ளுக்குள் போடுவன்". அன்றுடன் அவர் ஒதுங்கிக் கொண்டார்.

2) சில முன்னாள் போராளிகளினதும் மாவீரர் குடும்பத்தினரையும் இணைத்து சில வேலைத்திட்டங்கள்(விவாசாயம் செய்ய காணி பெற்றுக்கொடுத்தல்,கடை வைத்துக் கொடுத்தல்,கால் நடை வளர்ப்பு, வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தல்,அரச வாழ்வாதார உதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய உதவுதல் இப்படி). 2015 இல் ஒரு சிறிய சந்திப்பில் இருக்கும் போது புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் வந்து " பு......... என்ன மறுபடியும் ஆரம்பிக்கிறாயா? ............. எந்த விசாவில் வந்தாயோ அந்த அலுவலை மட்டும் பார்............." என்று அன்பாக கூறினார். இவ்வளவிற்கும் அந்நபருக்கு தகவலை கூறியது உதவி பெறும் ஒரு முன்னாள் போராளியே.அப் போராளி அந்த புலனாய்வு உறுப்பினரின் கண்காணிப்பில் இருந்துள்ளார், அவருக்கு கிடைத்த உதவிகள் தொடர்பாக வினவியபோது அவர் எல்லாவற்றையும் விபரமாக கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

7 minutes ago, MEERA said:

எந்த விசாவில் வந்தாயோ அந்த அலுவலை மட்டும் பார்.............

8 minutes ago, MEERA said:

உண்டியல் மூலம் காசை எமது நண்பர்(அரசாங்க ஊழியர்) ஒருவருக்கு அனுப்ப

மீரா எந்த நாட்டிலும் இவை சட்டப்படி தவறுதானே.

முதலாவதாக எமது இருப்பு முக்கியம். அடுத்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருத்தல் அவசியம். சட்டரீதியாக எதையும் செய்தல் அதனைவிட முக்கியம் நண்பா. இவற்றை கடைப்பிடித்தால் பிரச்சனை வராது.

முன்னாள் போராளிகளின் வாழ்விற்கான உதவிகளை பலரும் செய்கிறார்கள். அதனை வெளிப்படுத்தி அவர்களை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.

என்னால் முடிந்த ஒரு உதவி:
உங்களுக்கு பரிச்சயமான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வாருங்கள். அதனூடாக குறிப்பிட்ட உதவியை செய்யுங்கள். நிறுவனம் மேற்பார்வையாளராக மட்டும் இருக்கட்டும். அதற்கு 10 - 15 % செலுத்தவேண்டி வரலாம். ஆனால் இது பல விடயத்தில் நன்மை தரும். அவர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், முறையாக நடக்கின்றதா என்றும் மேற்பார்வை செய்து உங்களுக்கு ரிப்போர்ட் தருவார்கள். நீங்களும் யாரையாவது அனுப்பி விபரங்களை சேகரிக்கலாம். எனது அனுபவத்தில் இந்த முறையில் எந்தவித சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக பல பயனாளிகளின் வளர்ச்சியை நேரடியாக கண்டுள்ளேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இருந்து சட்டப்படி பதிந்த நிறுவனம் ஊடாக அவர்களின் வங்கிக்கு பணம் மாற்றப்பட்டே அனுப்பப்பட்டது. 

உந்த 10%-15% கமிஷன் விளையாட்டிற்கு .....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஜீவன் சிவா said:

மீரா எந்த நாட்டிலும் இவை சட்டப்படி தவறுதானே.

முதலாவதாக எமது இருப்பு முக்கியம். அடுத்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருத்தல் அவசியம். சட்டரீதியாக எதையும் செய்தல் அதனைவிட முக்கியம் நண்பா. இவற்றை கடைப்பிடித்தால் பிரச்சனை வராது.

முன்னாள் போராளிகளின் வாழ்விற்கான உதவிகளை பலரும் செய்கிறார்கள். அதனை வெளிப்படுத்தி அவர்களை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.

என்னால் முடிந்த ஒரு உதவி:
உங்களுக்கு பரிச்சயமான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வாருங்கள். அதனூடாக குறிப்பிட்ட உதவியை செய்யுங்கள். நிறுவனம் மேற்பார்வையாளராக மட்டும் இருக்கட்டும். அதற்கு 10 - 15 % செலுத்தவேண்டி வரலாம். ஆனால் இது பல விடயத்தில் நன்மை தரும். அவர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், முறையாக நடக்கின்றதா என்றும் மேற்பார்வை செய்து உங்களுக்கு ரிப்போர்ட் தருவார்கள். நீங்களும் யாரையாவது அனுப்பி விபரங்களை சேகரிக்கலாம். எனது அனுபவத்தில் இந்த முறையில் எந்தவித சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக பல பயனாளிகளின் வளர்ச்சியை நேரடியாக கண்டுள்ளேன்.

அப்படியானால்

இதே அடிப்படையில்  

சிறுவர்கள் நலன் காப்பு அமைப்பான செக்டாவுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து

ஆடைத்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்ததும்

செக்டா தலைவர் எதற்காக 4 மாதம் எந்த வழக்குமில்லாது

எந்த ஒருவரையும் (சட்டத்தரணி உட்பட) சந்திக்க அனுமதியற்று உள்ளே இருந்தார்??

மீரா சொல்வது அத்தனையும் உண்மை

ஒரு எல்லைக்கு மேல் எதுவும் அசைய முடியாதநிலை தான்.

அப்படி இப்படி புகுந்து ஒழித்து விளையாடலாம்

ஆனால் எந்த உத்தரவாதமுமில்லை.

திறப்பை தந்திட்டு போ என்றால் போகவேண்டியது தான்.

இந்தநிலையில் எமது பணம் என்றாலும் பரவாயில்லை

நாலு பேரை சேர்த்து செய்யும்போது யார் பதில் சொல்வது???

இறுதியாக அவர்கள் சொன்னது

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்று வேலை வாய்ப்பு கொடுக்கின்றோமாம்

அப்போ எதனால் பாதிக்கப்பட்டார்கள்???

Link to comment
Share on other sites

இல்லை விசுகு இது உங்களுக்கு புரியாததில்லை.

உங்கள் (உங்களைப் பற்றி நிச்சயம் புலனாய்வு தெரிந்து வைத்திருக்கும்) தொடர்புகள்கூட xxக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஒரு உதவிக்காக xxக்கு எனது மொபைல், வீட்டு இலக்கம்கூட கொடுத்திருந்தேன், அவரும் சில தடவைகள் தொடர்பு கொண்டிருந்தார். என்னிடம் புலனாய்வுத்துறையினர் யாருமே வரவில்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.