Jump to content

‘தமிழ்நாட்டின் பேக்வாட்டர்’ பூலோக சொர்க்கம் பிச்சாவரம் போட்டிங் டூர்!


Recommended Posts

Pichavaram_trees2

பிச்சாவரம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி... ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த  பெயரே  பின்னர் பிச்சாவரம் என்று மருவியது.

இவ்வூரில் அலையாத்திக் காடுகள்,சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள்  மிகுந்துள்ளன. இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை பரந்திருந்ததாக கூறுவர்.

PICHAVARAM_6.jpg

இங்குள்ள அலையாத்திக் காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது இந்த  பிச்சாவரம் காடுகள்தான். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் இலைகளின் வழியாக ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும். 

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

birds_at_pichavaram.jpg
 
சுரபுன்னைக் காடுகள் இடையே நீண்ட நெடிய நீர்வழிப் பாதைகள்; அதில் படகுச் சவாரி; கண்ணைக் கவரும் தென்னை மரச் சோலைகள், நீல வானம், அதில் பஞ்சு பஞ்சாய் வானில் மிதக்கும் மேகங்கள்... தூரத்தில் வங்கக்கடலின் ஆர்ப்பரிப்பு, இப்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவாரத்தின் எழில் காட்சிகள் தான் இவை.

PICHAVARAM_2.jpg

பிச்சாவரம் சிறந்த சுற்றுலாத் தலம், கடலோரத்துக்கு அருகே அமைந்த வனப் பகுதியில் உள்ள எழில் மிகு மாங்குரோவ் காடுகளின் ஊடே செல்லும் சிறு சிறு நீர்வழிப்பாதைகள் மூலம்  படகில் சுற்றிப் பார்த்து மகிழும் வகையில் இந்த சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இந்தியாவில் இரு இடங்களில் தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஒன்று கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில், இவ்வகையான மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்குப்பிறகு தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன.

PICHAVARAM_7.jpg

இங்கு சதுப்பு நிலம் - கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான மைல் தூரம் கொண்ட ஆழமற்ற நீர்க் கால்வாய்கள் படகுப் பயணத்துக்குப் பாதை வகுத்துத் தருகின்றன. பிச்சாவரம் உப்பங்கழிப் பகுதியில் சுமார் 1100 நீர்வழிப் பாதைகள் உள்ளன. அவற்றின் ஓரம் பச்சைப்பசேலென்று காணப்படும் சுரபுன்னைக் காடுகள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை.

செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பார்க்கும்போது பிச்சாவரம் தில்லைவனக் காடுகள் சுமார் 1100 ஹெக்டேரில் நீலக்கடலில் பச்சை மாமலை பவளச் செங்கண் மேனியனான திருமால் ஆனந்தமாய்ச் சயனித்திருப்பது போலப் பரந்து விரிந்த தோற்றம் தருகிறது.

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.

2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.

mgr_thittu.jpg

இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையச் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பிச்சாவரத்தில் உள்ள ‘அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில்’ படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 

PICHAVARAM_9.jpg

கடற்கரையை ஒட்டியுள்ள இப்பகுதியில் பல கிலோ மீட்டர் வரை  மோட்டார் படகில் சென்று இயற்கை எழிலை உற்சாகமாக அனுபவிக்கலாம். பிச்சாவரம் வனச்சுற்றுலா மையமாக விளங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளன. இங்கு திகழும் ரம்மியமான சூழலை குடும்பத்தோடு படகுச் சவாரி செய்து ரசித்து அனுபவிப்பது என்பது சொர்கலோக இன்பத்துக்குச் சமானமாக இருக்கும் என முன்பே பலமுறை இங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.

சுரபுன்னை மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் காட்சி மிக அற்புதமானது. இந்த அற்புதக் காடுகளின் தன்மையும் அழகும் கெடாவண்ணம் பிச்சாவரம் படகுத் துறைப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பல வசதிகளையும் போதிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும்.

எப்படிச் செல்வது பிச்சாவரத்துக்கு?

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

உணவு வசதி:

வனப் பகுதியின் நுழைவுப் பகுதியில் உள்ள படகுத் துறையில் சிற்றுண்டிகள் கிடைக்கின்றன. பிச்சாவரம் வனப் பகுதி கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது 

தங்குமிடம்:

சற்று வசதியாக தங்க: சாரதாராம் ஈகோ ரிஸார்ட் (Saradharam Eco Resort ) உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு:

பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 04144-238739 

http://www.dinamani.com/travel/2016/dec/16/பூலோக-சொர்கம்-பிச்சாவரம்-போட்டிங்-டூர்-2616454.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pichavaram_trees2

PICHAVARAM_6.jpg

PICHAVARAM_7.jpg

 

birds_at_pichavaram.jpg

 

இதே வனப்பும் வளமும் வடமராட்சி தொடக்கம் தென்மராட்சி ஊடாக முல்லைத்தீவு வரைக்கும் பரந்து இருக்கின்றது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

இதே வனப்பும் வளமும் வடமராட்சி தொடக்கம் தென்மராட்சி ஊடாக முல்லைத்தீவு வரைக்கும் பரந்து இருக்கின்றது என நினைக்கின்றேன்.

குமாரசாமி அண்ணை ஒரு சிறு மாற்றம்.

இதை விட அதிக வனப்பும் வளமும் வடமராட்சி தொடக்கம் தென்மராட்சி ஊடாக முல்லைத்தீவு வரைக்கும் மட்டுமில்லை, தாயகம் முழுவதும் பரந்து இருக்கின்றது என நினைக்கின்றேன்.

முக்கியமாக எமது தீவகப் பகுதிகளின் அழகிற்கு இவை எந்த விதத்திலும் ஈடாகாது.
 

Link to comment
Share on other sites

கடல் நீரின் மீது ஒரு காடு!

 

1960 ஆம் ஆண்டு, ‘திராவிட நாடு’ (3.7.1960) ஏட்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய சில வரிகள் இவை:

‘தம்பி, கடல் நீரின் மீது ஒரு காடு.

அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது அழிபட்டுக் கிடக்கும் நிலையிலும் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள்,கொடிகள், செடிகள் நிரம்பி உள்ளன.

ஆலுக்குள்ள விழுதுகள் போல, அந்தச் செடிகளில் இருந்து கிளம்பிய கொடிகள், தண்ணீரைத் தொடுகின்றன; உள்ளேயும் செல்கின்றன. இடையிடையே திட்டுகள் உள்ளன. அவை மேய்ச்சல் இடங்களாகப் பயன்படுகின்றன.

சில இடங்களில் விரிந்து பரந்து உள்ளன. சில இடங்களிலோ, தோணி நுழைகின்ற அளவு மட்டுமே நீர்ப்பரப்பு உள்ளது. அங்கே, விழுதுகளும், கொடிகளும் வழிமறித்து நிற்கின்றன. வளைத்தும், பிரித்தும், நீக்கியும் வழி காண வேண்டி இருக்கிறது.

செம்போத்தும், குருகும், வக்காவும், வண்ணப்பறவைகளும், ஆங்காங்கு தங்கி உள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம் கேட்டு மரத்தில் இருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடியே அழகாக இருக்கின்றது.

வெளிர் நீலவண்ண நீர், சூழப் பச்சை, மேலே நீலமும், வெண்மையும் கொண்ட மேகக்கூட்டம், இடையில் வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை அணிவகுத்துச் செல்வதைப் போல!

என்று எழுதி இருக்கின்றார்.

எங்கே இருக்கிறது இந்தக் காடுகள்? தமிழகத்திலா? ஆம். சிதம்பரத்தில் இருந்து 12 கல் தொலைவில் உள்ள பிச்சாவரம் அலை ஆத்திக் காடுகளைப் பற்றித்தான் இப்படி வருணிக்கிறார் அண்ணா. இதை, பிச்சாவரம் படகுக் குழாமில், எழுதி வைத்து இருக்கின்றனர்.

பிச்சாவரம் படகுக் குழாம்

உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நமது பிச்சாவரம் காடுகள்தாம். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் இலைகளின் வழியாக ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.

அறியப்படாத பிச்சாவரம்

பிச்சாவரம் காடுகளைப் பற்றி பற்றி அண்ணா எழுதி ஆண்டுகள் ஐம்பது கடந்து விட்டன. ஆனால், இன்னமும் ஊட்டி, கொடைக்கானலை அறிந்த அளவுக்கு, பிச்சாவரம் தமிழர்களால் முழுமையாக அறியப்படவில்லை என்பதே வேதனைக்குரியது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை நான் பிச்சாவரத்துக்கு வந்தேன். அப்போது கரையில் ஒருசில படகுகள் மட்டுமே மிதந்து கொண்டு இருந்தன. ஒரு படகோட்டியை அணுகினேன். இப்போது மணி மூன்று ஆகிவிட்டது. உள்ளே சென்று வர இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகி விடும். இதற்குமேல் புறப்பட்டுச் சென்றால் இருட்டி விடும். விளக்குகள் கிடையாது. திரும்பி வரும்போது சிரமமாகி விடும். எனவே, நாளை காலையில் வாருங்கள்’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்தோடு திரும்பினேன்.

அதற்குப்பிறகு, எத்தனையோ முறை, சிதம்பரம் வழியாகச் சென்றபோதிலும், பிச்சாவரத்துக்குப் போகும் வாய்ப்பு அமையவில்லை; அல்லது நான் அமைத்துக் கொள்ளவில்லை. எனவே, எப்படியாகிலும் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளைப் பார்த்து விடுவது என்று உறுதி பூண்டு இருந்தேன்.

என் மூத்த சகோதரியின் மகன் ஹரிகுமார் திருமண உறுதி நிகழ்ச்சிக்காக, நெய்வேலி செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்துடன், பிச்சாவரத்தையும் பார்த்து வருவது என்று தீர்மானித்தேன். மனைவி, மகளுடன், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டேன். இரவு 10.30 மணிக்குப் புறப்பட்ட பேருந்து, அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் சிதம்பரம் கொண்டு போய்ச் சேர்த்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கினோம்.

தமிழகத்துக்குப் பெருமை!

இந்திய விடுதலைக்கு முன்பே, இன்றைக்குச் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டு, அனைத்து இந்திய அளவில் மட்டும் அல்ல, தெற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்த்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கின்ற கல்வி நிறுவனம்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கின்றது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படிக்கின்றார்கள்.

அண்மைக்காலமாக வியத்தகு வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. விருந்தினர் விடுதிக்குச் செல்லும் வழியில் உள்ள சாலைகள் அனைத்தும், காங்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டு விட்டன. ஆங்காங்கு, புதிய புதிய கட்டடங்கள் முளைத்து உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மென்மேலும் வளர்ச்சி பெறுவது தமிழனுக்குப் பெருமையே; மகிழ்ச்சிக்கு உரியதே!

அங்கிருந்து புறப்பட்டு, காலை, 9.30 மணி அளவில் பிச்சாவரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். நண்பர் எழிலன் உடன் வந்தார். வழியில், பொன்னன் திட்டு, எம்.ஜி.ஆர். திட்டு, என வரிசையாக மீனவர்களின் கிராமங்கள். பிச்சாவரம் நோக்கிச் செல்லுகின்ற சாலையின் இருமருங்கிலும் பனை மரங்கள்.

பிச்சாவரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததற்கு, இப்போது மாற்றங்கள் தெளிவாகத் தெரிந்தன. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை, படகுக் குழாம் அமைத்து இருக்கின்றது. ஏராளமான படகுகள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், படகுக்கான சீட்டு வாங்கும் இடத்துக்குச் சென்று, கட்டண விவரங்களைப் பார்த்தபோது பகீரென்றது. ரூ 500, 1000 என எழுதி இருந்தார்கள். உற்றுப் பார்த்தேன்.

கட்டண விவரம்

8 பேர் கொண்ட மோட்டார் படகு: 6 கிலோ மீட்டர் தொலைவை 40 நிமிடங்களில் கடந்து வரும். அதற்கான கட்டணம் ரூ 1200. தலைக்கு 150 ரூபாய் ஆகின்றது.

ஐந்து பேர் கொண்ட துடுப்புப் படகு: இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்துச் சென்று வருவர். இதற்கு ஆகும் நேரம் இரண்டு மணி. கட்டணம் ரூ 350. தலைக்கு 60 ரூபாய் ஆகின்றது.

மோட்டார் படகுகள், அகன்ற கால்வாய்களின் வழியாக மட்டுமே சீறிப்பாய்ந்து, கடற்கரை வரையிலும் சென்று திரும்பும். அதில் பயணித்தால், அலை ஆத்திக் காடுகளின் அழகை, பொறுமையாகப் பார்த்து ரசிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.

எனவே, துடுப்புப் படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். அதுதான் சிறந்தது என்று அங்கே பணி ஆற்றுகின்ற நண்பர் ஒருவரும் தெரிவித்தார். அதே ஊரைச் சேர்ந்த ராஜூ என்ற படகோட்டி வந்தார். படகுப் பயணம் தொடங்கியது.

கண்ணில் விரிந்த காட்சிகள்

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அண்ணா வருணித்து இருக்கின்ற காட்சிகள், அப்படியே நம் கண்முன் விரிகின்றன. மரங்களில் அமர்ந்து இருந்த வண்ணவண்ணப் பறவைகள், நமது படகு அருகில் நெருங்கும்போது, சிறகடித்துப் பறக்கின்றன. அத்தகைய நிறங்களிலான பறவைகளை, நான் இதுவரையிலும் பார்த்தது இல்லை.

பிச்சாவரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, கமலஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தின் தொடக்கப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட கால்வாய், கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே இருக்கின்றது, ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்ற அந்தப் பாடலின் காட்சிளை, பல நாள்களாகப் படம் பிடித்தார்களாம். நிலத்தில் என்றால், ஏணிகளை வைத்து காட்சிகளைப் படம் பிடிப்பார்கள். ஆனால், அந்தப் பாடலின் காட்சிகளைப் பாருங்கள்; மேலே இருந்து எடுத்ததுபோலத் தெரியும். படகுகளில் ஏணிகளை வைத்துப் படம் பிடித்து இருப்பார்கள் என எண்ணினேன்.

படகோட்டியிடம் கேட்டேன். அந்தக் காட்சிகளை எல்லாம், ஹெலிகாப்டரில் இருந்து படம் பிடித்தார்கள். அப்போது, எங்களையெல்லாம் தண்ணீருக்கு உள்ளே விடவில்லை. நாங்கள் எல்லாம் கரையில் நின்றே வேடிக்கை பார்த்தோம்’ என்றார் படகோட்டி ராஜூ.

அதேபோல, பிரபு நடித்த சின்னவர், சரத்குமார் நடித்த சூரியன் ஆகிய படங்களின் சில காட்சிகளையும் இங்கே படம் பிடித்து இருக்கின்றார்கள் என்ற தகவலையும் சொன்னார்.

ஆனால், முதன்முதலாக இந்தப் பகுதியைப் படம் பிடித்து வெள்ளித்திரையில் காண்பித்தவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்தாம். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இதயக்கனி திரைப்படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள், பிச்சாவரம் காடுகளில் படம் பிடிக்கப்பட்டவையே. அது மட்டும் அல்ல, பெரும்பாலும் அரங்குகளிலேயே தமிழ்த் திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வந்த சூழலில், 1956லேயே நாடோடி மன்னன் திரைப்படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகளை, கம்பம் அருகே மேற்குத் தொடர்சசி மலையிலும், அடிமைப் பெண் திரைப்படத்தில் ஒகேனக்கல் அருவியின் காட்சிகளையும், ராஜஸ்தான் பாலைவனக் காட்சிகளையும் படம் பிடித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர். பின்னர், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை, கிழக்கு ஆசிய நாடுகளில் படம் பிடித்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து நாடுகளின் காட்சிகளைத் தமிழகத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார். பயண ஆர்வத்தை வளர்த்தார். அந்த வகையில் தூண்டப்பட்டுத்தான் நானும், இன்று ஒரு பயண எழுத்தாளராக ஆகி இருக்கின்றேன்.

தொடர்ந்தது படகுப்பயணம்

பிச்சாவரம் கால்வாயில் எங்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது தொலைவுக்குப் பின்னர், அகன்ற கால்வாயை விட்டு விலகி, இருபுறங்களிலும் மரங்கள் அடர்ந்த குறுகிய ஓடைகளின் வழியாக படகைச் செலுத்தினார் படகோட்டி. இப்போது, துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு, மாங்குரோவ் குறுமரங்களில் இருந்து தொங்கிக் கொண்டு இருக்கின்ற கொடிகளைக் கைகளால் பிடித்து இழுத்துக்கொண்டே முன்னேறுகிறார்.

‘இப்படிப் பிடித்து இழுத்தால், கொடிகள் முறிந்து விடாதா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. இழுத்தால் ஒடியாது; நார் நாராகத்தான் வரும். உறுதியான கொடிகள் இவை’ என்றார்.

‘இந்தக் கால்வாய்களில் ஆழம் எவ்வளவு இருக்கும்?’

‘படகுகள் நிற்கின்ற இடத்தில் மூன்று நான்கு அடிகளும், கால்வாயின் நடுவே பத்து அடிகள் வரையிலும் இருக்கும். இந்தக் குறுகிய ஓடைகளில், இரண்டு மூன்று அடிகள்தாம் ஆழம் இருக்கும்’ என்றார்.

‘கடற்ரைகளில் கண்டை மரங்களை வளர்ப்போம்’

மாங்குரோவ் செடிகளைத் தவிர்த்து, சிறிய இலைகளைக் கொண்ட குறுமரங்கள் நிரம்பத் தெரிந்தன. அவை, கண்டை மரங்கள் என்றார். இந்தக் கண்டைகளைத்தாம், ‘அலையாத்தி மரங்கள்’ என்று அழைக்கின்றார்கள். தமிழகத்தின் நீண்டி நெடிய கடற்கரை முழுமையிலும் சுனாமி தாக்கியபோதும், ஆழிப்பேரலைகளைத் தடுத்து நிறுத்திப் பாதுகாத்தவை, இந்த அலை ஆத்திக் காடுகள்தாம். அலைகளைத் தடுப்பதால், அலை ஆத்திக் காடுகள். என்ன அழகாக, காரணத்தோடு பெயர் சூட்டி இருக்கிறார்கள்!

இவ்வளவு நாள்களாக, பிச்சாவரம் காடுகள், மாங்குரோவ் காடுகள் என்றே படித்து இருக்கிறேன். ஆனால், உண்மையில், கண்டை மரங்கள்தாம் அலைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை அங்கே சென்ற பார்த்த பின்புதான் விளங்கிக் கொண்டேன். சுரபுன்னை மரங்களும் உள்ளன.

ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு கிடக்கின்ற தமிழகக் கடற்கரையோரங்களில், வாய்ப்பு உள்ள இடங்களில், கண்டை மற்றும் சுரபுன்னை மரங்களை வளர்த்து, அலை ஆத்திக் காடுகளை உருவாக்க வேண்டும்; தமிழகத்தின் காட்டு வளத்தை மேம்படுத்த வேண்டும். சுனாமி தாக்குதலில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்று முழங்குவது போல, ‘கடற்ரைகளில் கண்டை மரங்களை வளர்ப்போம்’ என்ற முழக்கத்தையும் அரசு முன்வைக்க வேண்டும்.

கூடை வலைகள்

எங்கள் படகுப்பயணம் தொடர்ந்தது. சற்றுத் தொலைவில், கடலில் மீன்களைப் பிடிப்பதற்காக வலைகளை விரிப்பதுபோல, இந்தக் கால்வாய்களின் ஓரங்களில், சில மீனவர்கள் நீண்ட நரம்புகளை இறக்கிக் கொண்டே சென்றார்கள். அவை மீன்பிடிப்பதற்காக அல்ல; நண்டுகளைப் பிடிப்பதற்காகப் போடப்படுகின்ற கூடைவலைகள். அருகில் சென்று, ஒரு கூடையை மேலே தூக்கிப் பார்த்தேன். கூடைக்கு உள்ளே, சற்றே பெரிய அளவில் இரண்டு மீன் துண்டுகளைத் தூண்டிலில் மாட்டி வைத்து இருந்தார்கள். அதன் மேல் பகுதி திறந்தே இருந்தது.

pichavaram_370

இப்படித் திறந்து இருந்தால், நண்டுகள் வெளியேறி விடாதா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. நண்டுகள், அந்தக் கூடைக்கு உள்ளே இறங்கி உட்கார்ந்து கொண்டு, மீன் துண்டுகளை ஆற அமர பொறுமையாக கடித்துச் சுவைக்கும். ஆனால், மீன்களைப் போலத் தூண்டிலில் நண்டுகளின் வாய் மாட்டிக் கொள்ளாது. இப்போது, இந்தக் கூடைவலைகளைப் போட்டுக் கொண்டே செல்லுகின்ற மீனவர்கள் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கழித்து வந்து, மெதுவாக அந்தக் கூடையை மேலே தூக்குவார்கள். அப்போது நண்டுகள் மேலே வந்து வெளியேறிச் செல்ல முயற்சிக்காமல், கூடைக்கு உள்ளேயே, அடியில் உள்ள ஓட்டை வழியாக வெளியே முயற்சிக்கும். ஆனால், அதன் வழியாகச் செல்ல முடியாது, சிக்கிக் கொள்ளும். எனவே, தூண்டில் முள் மாட்டி மீன்களைச் சித்திரவதை செய்வது போல அல்லாமல், மீனவர்கள் நண்டுகளை, எவ்வித வலியும் இல்லாமல் எளிதாகப் பிடித்து விடுவார்கள். ஒரு நாளைக்கு, ஒரு கிலோ முதல் மூன்று கிலோ வரையிலும் நண்டுகளைப் பிடிப்பார்கள். சிதம்பரம் சந்தையில், கிலோ 200 முதல் 300 வரையிலும் போகும்’ என்றார் ராஜூ.

குறுகிய கால்வாய்களின் வழியாக படகு போகும்போது, ஆங்காங்கு மேலும் கிளைக்கால்வாய்களாகப் பிரிந்து சென்றன. இதுபோன்ற இடங்களில் புதியவர்கள் உள்ளே நுழைந்தால், எளிதில் வெளியே வர முடியாது. மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டியதுதான். ஏற்கனவே இந்தப் பகுதியில் சுற்றிப் பழக்கப்பட்ட படகோட்டிகளின் துணையோடுதான் சென்று வர வேண்டும்.

வழியில் ஓரிடத்தில், தமிழ்நாடு வனத்துறையின் அறிவிப்பு பளிச்சிடுகின்றது:

பிச்சாவரம் சதுப்புநில வனப்பகுதியில், அனுமதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளுக்கு உள்ளே நுழைவது, சுரபுன்னைக் காய்கள், கண்டன் விதைகளைச் சேகரிப்பது மற்றும் வனப்பகுதியில் உள்ள பறவைகளுக்கு இடையூறு செய்தல் ஆகியவை, தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு ஏ உட்பிரிவு 21 டி இ ஆகியவற்றின்படி தண்டனைக்கு உரியதாகும். மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிச்சாவரம் செல்லுகின்ற சுற்றுலாப் பயணிகள், இதைக் கவனத்தில் கொள்க!

‘மோட்டார் படகுகள் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு எத்தனை கிலோ மீட்டர் வரையிலும் செல்லும்?’ என்று கேட்டேன்.

‘இல்லை. இங்கே இருப்பவை அனைத்தும் கேஸ் படகுகள்தாம். ஒரு சிலிண்டருக்கு 30 கிலோ மீட்டர்கள் வரையிலும் செல்லும்’ என்றார் ராஜூ. படகுகள், கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு இயக்கப்படுவதை இங்கேதான் முதன்முதலாகப் பார்த்தேன். அதுவே எனக்குப் புதிய செய்தியாக இருந்தது.

பிச்சாவரம் படகுக் குழாமுக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய தீவில், தங்கும் விடுதிகளைக் கட்டி இருக்கிறார்கள். ஆனால், அவை அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. எனவே, பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள். பாதுகாப்பான பயணத்துக்கு, மிதவைகள் வழங்குகின்றார்கள். அவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.ஆனால், இங்கே படகு விபத்துகள் ஏதும் நிகழ்ந்தது இல்லையாம்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், பொங்கலுக்கு மறுநாள், ஆற்றோரங்களில்,குளத்தங்கரைகளில் மக்கள் கூடுவார்கள். கரும்பு, பனங்கிழங்கு கடித்துச் சுவைப்பார்கள். அதுபோல, ஒவ்வொரு கிராமத்திலும், குலதெய்வ வழிபாட்டுத் திருவிழாக்கள் நடைபெறும். அதுபோல, சிதம்பரம் பகுதி மக்கள், பிச்சாவரம் படகுப் பயணத்துக்கும், கடற்கரைக்கும் வருகின்றார்கள் என்றார் உடன் வந்த நண்பர் எழிலன்.

சுற்றுலாவை வளர்க்க..

பிச்சாவரத்தைப் போலவே உப்பங்கழிகள் அமைந்து உள்ள கேரள மாநிலத்தில், படகு வீடுகளை அமைத்து, உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றார்கள்.

அண்மையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த என் தமிழகத்து நண்பர், தம்முடன், நான்கு ஈழத்தமிழர்களையும் அழைத்து வந்து இருந்தார். அவர்கள், அங்கிருந்தே, படகு வீடுகளில் தங்குவதற்காக இணையத்தில் முன்பதிவு செய்து இருந்தார்கள். சென்னையில் இருந்து கேரளாவுக்குத் தொடர்வண்டியில் சென்று, படகு வீடுகளில் தங்கினார்கள். அந்த அனுபவம் மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று சொன்னார்கள்.

அதுபோல, பிச்சாவரம் போன்ற தமிழகக் கடல் பகுதிகளில், படகு வீடுகளைக் கட்டி சுற்றுலாவை மேம்படுத்தலாம். சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு இன்றி, சுற்றுலாவை வளர்ப்பதற்கு ஏற்ற இடமாக பிச்சாவரம் திகழ்கின்றது. சொல்லப்போனால், தமிழகத்தின் மலை வாழிடங்களில் உள்ள ஏரிகளில், ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் படகுப்பயணம் செய்ய முடியும். ஆனால், பிச்சாவரத்தில், சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவுக்குப் படகுகளில் பயணித்து மகிழலாம்.

பிச்சாவரம் அலை ஆத்திக் காடுகளின் அழகை, அண்ணா வருணிப்பது போல வருணிக்க என்னால் இயலாது. நான் பார்த்த காட்சிகளை இரண்டரை நிமிட வீடியோ தொகுப்பாக, எனது முகநூல் பக்கத்தில் (arunagiri sankarankovil)பதிவு செய்து உள்ளேன். ஏற்கனவே கண்டு ரசித்த பலர், தாங்கள் எடுத்த ஒளிப்படங்களை, ‘Youtube’ இணையதளத்தில் உலவ விட்டுள்ளனர். நீங்களும் பார்த்து ரசியுங்கள். நேரிலும் கண்டு அனுபவியுங்கள்.

ஒருமுறை துடுப்புப் படகிலும், ஒருமுறை மோட்டார் படகிலும் பயணித்துப் பார்த்தால், பிச்சாவரத்தின் அழகை, முழுமையாகக் கண்டு ரசிக்கலாம்!

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17403&Itemid=139

 

 

Link to comment
Share on other sites

12 hours ago, nunavilan said:

ஜீவனின் கமறாவுக்கு மேலும் வேலை வந்து விட்டது என நினைக்கிறேன்.

படங்கள் எனக்கு பிடிக்காவிடினும் இன்று காரைநகரில் கிளிக்கிய சில படங்கள்.
(கண்ணால் பார்த்தபோது பிடித்தது - படம் அதனை பிரதிபலிக்கவில்லை என்பது கவலையே)
இருந்தாலும் அழகு அழகுதான்.

No automatic alt text available.

No automatic alt text available.

Image may contain: one or more people, ocean, sky, child, outdoor, water and nature

Image may contain: sky, bird, outdoor and nature

 

No automatic alt text available.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்புடியாவது நல்ல கமறா வேண்டணும்  நாங்களும் படம் போட  நாங்களும் இயற்கையை ரசிப்போம் tw_blush:

Link to comment
Share on other sites

27 minutes ago, முனிவர் ஜீ said:

எப்புடியாவது நல்ல கமறா வேண்டணும்

தனிமடல் பாக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

தனிமடல் பாக்கவும்

மிக்க நன்றி :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.