முனிவர் ஜீ

ஒரு யாத்திரை

59 posts in this topic

5 hours ago, suvy said:

அதொண்டும் பிரச்சினை இல்லை முனிவர்.... பொட்டியை  நேர்வழியில் அனுப்பிவிட்டு நீங்கள் வழக்கம்போல் குறுக்கு வழியில போகலாம்....! tw_blush:

அனுபவ சாலி அண்ணேtw_blush:tw_blush: 
நீங்க சொன்ன கருத்துக்கு  தனிய இருந்து சிரிக்கிறேன் 

Edited by முனிவர் ஜீ

Share this post


Link to post
Share on other sites

இது வரை யாழில் இப்படி ஒரு அனுபவத்தை யாரும் பதிந்ததாக ஞாபகம் இல்லை. சுவாரசியமாக இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன்.

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

எங்கே மீதிக் கதை?

Share this post


Link to post
Share on other sites
On 1/17/2017 at 0:00 PM, Rajesh said:

எங்கே மீதிக் கதை?

மீதி வரும் வெள்ளிக்கிழ்மையுடன் முடிவடையும்  :100_pray:

Share this post


Link to post
Share on other sites
On 29/12/2016 at 5:17 PM, முனிவர் ஜீ said:

 

பெயருக்கும் செயலுக்கும் என்ன அண்ண வச்ச புனைப்பெயரே  சரியாக அமைந்து விட்டது போல் ஓடுகிறது   மத்திய கிழக்கில்  இருக்கும் போது நண்பர் ஒருவருக்கு வைத்த பட்டம் அது  முனி என்று  யாழில் இணையும் போது புனை பெயர் கேட் க அதை வைத்தேன்  அவ்வளவுதான் ஆனால் ஒரு  முருக பக்தன் அவ்வளவே

நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு 
 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, முனிவர் ஜீ said:

மீதி வரும் வெள்ளிக்கிழ்மையுடன் முடிவடையும்  :100_pray:

நன்றி முனிவர்!

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, தமிழரசு said:

நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு 
 

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

18 hours ago, தமிழரசு said:

நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு 
 

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

முனிவர் நீங்கள் முருக பக்தர் என்று அங்க தெரியுமா எதற்கும் கவனம்...!  tw_blush:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
On 1/19/2017 at 5:12 PM, suvy said:

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

முனிவர் நீங்கள் முருக பக்தர் என்று அங்க தெரியுமா எதற்கும் கவனம்...!  tw_blush:

ஹாஹா அண்ணே  முருக பக்தன் தான் ஆனால் ராமனாக்கும் 
அந்தாள் மாதிரி இல்லை (முருகன்) 

 

On 1/19/2017 at 5:00 PM, Rajesh said:

நன்றி முனிவர்!

மன்னிக்கவும் கொஞ்சம் தாமதமாகும்  கொஞ்சம் வேலை இருக்கிறதுtw_blush:

Share this post


Link to post
Share on other sites

வியாலை என்ற இடத்தை அடைந்தோம்  என்னுடன் வந்தவர்கள் வருவார்கள்  என  வழியில் காத்து இருந்தேன் வரவில்லை சுமார் இரண்டரை மணிநேரத்தின் பின்பே வந்தார்கள் வந்தவர்களிடம் நான் நடந்தவற்றை கூற திகைத்து போனார்கள்  சரி வா இப்படி எல்லோருக்கும் பார்க்க  கிடைப்பதில்லையென்று சொல்லி ஒரு அழகான ஆற்று நீர் ஓடிய தரையில் அமர்ந்து கொண்டோம். அந்த நேரம் தண்ணீர் இல்லை ஆற்றில் ஒரு ஓரம் மட்டுமே நீர் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நான் போன உடனேயே பொருட்களை அங்கே இறக்கிவிட்டு  ஆற்றில் மிதக்க ஆயத்தமானேன்  அவர்களூம் வந்த களைப்பில் நல்ல தேநீர் போட்டு குடிப்போம் பிறகு சமைக்க ஆயத்தம் செய்வோம் என்று நல்ல தேநீர் செய்து தந்தார்கள் அந்த இடத்தில் கொண்டு சென்ற பிஸ்கட் பைகள் , சிற்றுண்டிகளை சுவைத்தும் நல்ல தண்ணீரை கண்ட சந்தோசத்தில் நான் இருந்தாலும் சுட வைத்து தான் குடிங்கள் என்றார்கள் நல்ல தண்ணீராக இருந்தாலும் குடிக்க முடியாது காரணம் ஆற்றில் மிருகங்களீன்,பறவைகளின்  எச்சங்கள் ,  மிருகங்கள் இறந்து கிடக்கலாம் என்ற அச்சத்தில் நீரை சுட வைத்தே பருகினோம் 
3 நாட்கள் நல்ல சாப்பாடு நல்ல குளியல் நல்ல தூக்கம் நடந்த களைப்பு எல்லாம் கடந்து போனது இரவில் நல்ல பஜனைகள் பாட்டு கச்சேரிகள் என்று அந்த  3 நாட்கள்சென்றது கொண்டு போன பொருட்களையெல்லாம் அங்கே முற்று முழுதாக குறைத்து விட்டோம் இருப்பது தேநீருக்கான பொருட்கள் மட்டும் மற்றும் அவரவர் சொந்த சிற்றுண்டிகள் .

இந்த வியால ( யால ) என்ற காட்டுப்பகுதியில் இருந்து வள்ளியம்மன் பாலம் என்ற இடத்திற்கு   செல்ல வேண்டும் அந்த இடம் ராணுவ சோதனை சாவடி (  சண்டை முடிந்த பிறகு சோதனை இல்லை
  ராணுவத்தால் சோதனை இடப்பட்ட பின்னரே அனுமதிப்பார்கள் அடுத்த இடமான கட்ட காமத்துக்கு . யாத்திரிகர்களை  மாலை நேரத்தில் நடக்க அனுமதிப்பதில்லை காரணம் அதிக கரடிகள் இக்காட்டில் இருப்பதாலும் மாலை நேரங்களில் மிருகங்கள் தண்ணீர் அருந்த வருவதாலும்) 

  • இந்த வள்ளியம்மன் என்ற பாலத்திற்கு செல்லும் போது    நடந்த சம்பவம் வேறு ஒரு வருடத்தில் மாலை நேரத்தில்  நாங்கள் நடையை குறைப்பதற்க்காக வள்ளியம்மன் பாலத்துக்கு செல்ல ஆயத்தமானோம் கடும் மழை காட்டுமழை கொஞ்ச அதிகமாக இருக்கும் காட்டில் போகும் போது மரம் ஒன்று முறிந்து விட்டது அதை தடையென்று நினைத்து ஒரு குழு சுமார் 50,60 பேர் கொண்ட குழு காட்டின் உள் பகுதிக்குள் சென்று விட்டார்கள் என்னுடடன் வந்தவர்களை  நான் சரியாக அழைத்து சென்றேன் ஏனேன்றால் இரண்டு வருட அனுபவம் அந்த நேரத்தில் அதுவும் அந்த பாதை முடியும் வரைக்கும் ஆற்றை தொடர்ந்து கொண்டே போகவேண்டும் . போனவர்கள் இரண்டு நாளாக வரவில்லை ராணுவத்துகும் அறிவித்தும் அவர்களால் முடியாது போனது அவர்களோ  இது பெரிய காடு ஹெலிமூலம்தான் தேட வேண்டும் என்று சொன்னார்கள்  வந்தவர்களில் எங்களுடன் கொஞ்சபேரும்  சென்றவர்களுடன் கொஞ்ச பேருமாக பிரிந்து விட்டார்கள் இவர்கள் அவர்களை நினைத்து அழுவதுமாக அந்த பயணம் மிகபயங்கரமாக இருந்தது பொருட்களை மாறி மாறி பொதிகளில் கட்டுவதால் சீனி வைத்து இருப்பவர் எங்களிடம் இருக்க தேயிலை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் இருக்க இப்படி எல்லா பொருட்களும் மாறி மாறி இருந்தது  இதனால் அந்த நாள் மிகவும் கஸ்ரமான சாப்பாடு, தண்ணீர் இல்லாத நாளாகவும் அமைந்தது போனவர்களுள் ஒரு நில அளவையாளரும் அடக்கம் இப்பவும் வருவார் நடந்து அவர் குடும்பத்துடன் மூன்றாவது நாளாக அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள் எல்லோர் கேள்வியும் எப்படியிருக்கும் இருக்கும் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்  அவர்களோ மாறி மாறி ஆளை ஆள் பிடித்து கட்டி பிடித்து அழுது கொண்டிருந்தார்கள் . 

அவர்கள் சென்ற காட்டுப்பகுதியில் மழை பெய்யவில்லையென்றும் குடிநீருக்கு தண்ணீர் இல்லாத போது  மலையில் ஏறி நின்றதாகவும்  கடவுளை பிரார்த்தனை செய்த போது  மழை பெய்ததாகவும் அந்த நீரை பொலித்தீன் பைகளை வைத்து பிடித்து தான் இரு நாட்கள் கடத்தியதாகவும் இறுதி நாளன்று சேவலும் மயிலும் கூவியும் ஆடியதாகவும் அந்த வழியில வந்து சேர்ந்த தாகவும் சொன்னார்கள் அப்போதே ஆறுதல் வந்து சேர்ந்தவர்களுக்கு  நம்பினோரை கைவிடுவதில்லை இந்த கதிர் வேலன் என்ற சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள்.  

இந்த வருடம் வந்த வெள்ளைக்காரர்கள் 

DSCN0913.jpg

வியால என் கிற ஆற்றுப்பகுதி இதன் கரையினில் தங்குவோம் அது மணல்  கடல் மணல் போன்றது 

DSCN0923.jpg

மணல் தரையில்  மக்கள்

15782233_1830763920533214_1195883336_n.jv

வள்ளியம்மன் பாலத்தையடைந்து சோதனைகள் முடிவடைந்ததும்  கட்டகாமம் என்ற இடத்துக்கு செல்ல அனுமதிப்பார்கள் கட்டகாமம் என்ற இடம் அதுவும் ஒரு சோதனை சாவடி போலவே காட்சியளிக்கும்  தற்போது ரானுவம் இல்லை வன விலங்கு பாதுகாப்பு பிரிவினர் மட்டுமே நிற்கிறார்கள்.


 போகும் இடைவெளி தூரத்தில் கதிரமலை கண்ட இடம் என்று சொல்வார்கள் அந்த இடத்தில் பூசைகள் நடக்கும் அவல் பிரட்டுவார்கள் எல்லோரும் .காரணம் அந்த இடத்திலிருந்து பார்த்தால் கதிர்காமத்தில் இருக்கும் ஏழு மலை தெரியும் அந்த இடத்தை தான் கதிரமலை கண்ட இடம் என்று சொல்வார்கள். பூசை முடிந்ததும்  கட்டகாமம் சென்றோம் அங்கே சென்றவுடன் வைத்திய சோதனைக்காக வைத்திய குழு அனைவரது இரத்தையும் பரிசோதனை செய்து கொண்டிருந்தது  காரணம் மலேரியா மற்றும் இதர நோய்கள்  ஏதாவது இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பார்கள் சில நேரம் காட்டுப்பாதையில் நோய் தொற்று அடைந்திருக்கலாம் என்பதற்க்காக அங்கே பரிசோதிப்பது வழக்கம்.  நமது சுய விபரத்தை எழுதியும் வாங்கி விடுவார்கள் கட்டகாமத்தை அடைந்து அங்கே ஒரு தேநீர் வைத்து குடித்து  விட்டு நடக்க ஆயத்தமானோம் நடந்து நடந்து கதிர்காம பின்புரமா இருக்கும் வழியே சென்று  (தற்போது போகும் வழியில்  சிங்கள தொழிலதிபரால் உணவு வழங்கப்படுகிறது பல வருடங்களாக )


கதிர்காமத்தை அடைந்தோம் அடைந்த கையோடு அங்கு செல்ல வில்லை .செல்ல கதிர்க்காமத்துக்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள் அங்கே சென்று  மாணிக்க கங்கையில் மூழ்கி குளித்து விட்டு பிள்ளையாரை வணங்கிய பின்னரே கதிர்காமத்தை வந்து அடைந்தோம் வந்த நாங்கள் பொருட்களை இறக்கி மூடிவிட்டு கோவிலகளை சுத்த ஆயத்தமானோம் கோவில்களை சுத்தி சுத்தி எல்லாம் முடிந்த அன்றிரவு பெரகரா உற்சவ நிகழ்வு நாட்களுக்கேற்றால் போல் யானைகளின் தொகையுடனான பெரகரா நிகழ்ச்சி இரவு 10.30 வரை நடந்தது பல லட்சம் மக்கள் காண்பார்கள் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் கூட இந்த திருவிழா நேரத்தில் படையெடுத்து விடுவார்கள் அந்த நிகழ்வை கண்டு கழிப்பதற்க்காக. 
நடந்து செல்பவர்களுக்கு கதிர்காமத்தில் உள்ள  வள்ளியம்மன் மடத்தில் ஒரு அட்டை தருவார்கள் எப்போது போனாலும் சாப்பாடு தருவார்கள் மற்றவர்கள் லைனிதான் நிற்க வேண்டும் இது நடந்து போகும் யாத்திரிகளுக்கு மட்டும் கிடைக்கும் ஒரு வாய்ப்பு ஆனால் தற்போது இந்தமுறையில்லை. இதை நடத்துபவர்கள் தமிழர்கள் திருவிழா அதாவது கொடியேறிய நாளிலிருந்து முடியும் நாள் வரைக்கும் அன்னதானம் கொடுக்கப்படும் . இந்த மடத்தில் இந்த அன்னதானம் கொடுக்கப்படுவதால் அங்கு நாங்கள் சமைக்க வில்லை நேரத்துகு போய் சாப்பிட்டு வந்து கடைகளை சுற்றி இனிப்பு பண்டங்களை வாங்கி வைத்து விட்டு மலையேற விடியற்க்காலை வரை காத்திருந்தோம்.

  
அடுத்த நாள் விடியற்க்காலை நேரத்துடன் எழும்பி மலையேறுவதற்க்காக சென்றோம் இரண்டு மணித்தியாலங்கள் எடுத்தது மலையேற போகும் வழியில் குரங்குகளின் சேட்டைகள் இருந்தாலும்  தற்போது கொண்டு போகும் பொருட்களை பறிக்கிறது  இந்த குரங்குகள் பழத்தட்டுகள் , உணவு பொருட்களை. கொன்டு செல்ல முடியாது துரத்தி வரும் கூட்டமாக .  தற்போது மலையேற  வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது கால் இயலாதவர்கள்  மற்றும் ,உடல் உபாதைக்குள்ளானவர்கள் என அவர்களூக்கு அதாவது அந்த வாகன சாரதிகளுக்கு  சிறு தொகை பணம் கொடுக்க வேண்டும். மலையில் ஆரம்பத்தில் சுளகு போல ஒரு வேல் ஊண்டப்பட்டிருந்தது தற்போது அந்த வேல் இருந்த இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது வேல் மலையில்  வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது   இதன் காரணமாக நான் மலையேறுவதில்லை பல வருடங்களாக . 

பின்பு மீண்டும் வந்து அன்றிரரவு பெரகரா பார்த்து விட்டு பஸ் ஏறுவோம் 
தற்போது நாங்கள் கதிர்காமத்தை சென்றடைந்ததும் செல்லக்கதிர்க்காமம் போய் வருவது வந்து கதிர்காமம் கோவில் சுற்றுவது அப்படியே பஸ் ஏறுவது ஒரு இரவு கூட நிற்பதில்லை கதிர்காமத்தில் .மலையேறுவதும் இல்லை  வீடு திரும்புவோம் இப்படி எங்களது பாத யாத்திரை இனிதே  முடிகிறது வருடா வருடம்  
 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites