Jump to content

இலங்கை, தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் செய்திகள்


Recommended Posts

19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாரா 6 விக்.: தென் ஆப்பிரிக்கா 392 ரன்கள்

 
லாஹிரு குமாராவை பாராட்டும் இலங்கை வீரர்கள். | படம்.| ஏ.எப்.பி.
லாஹிரு குமாராவை பாராட்டும் இலங்கை வீரர்கள். | படம்.| ஏ.எப்.பி.
 
 

கேப்டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 392 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

குவிண்டன் டி காக் அதிரடி முறையில் சதம் எடுத்தார், இலங்கையின் 19-வயது லாஹிரு குமாரா 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

விட்டுக் கொடுக்காத போர்க்குணம் மிக்க ஒரு வேகப்பந்து வீச்சாளரை லாஹிரு குமாரா மூலம் இலங்கை அடையாளம் கண்டுள்ளது. அதுவும் ஆம்லாவின் சுவர் போன்ற தடுப்பாட்டத்தை முறியடித்து அவரை பவுல்டு செய்தது அதே ஓவரில் டுமினியையும் வீழ்த்தியது என்று லாஹிரு அசத்தினார், இன்று சத நாயகன் குவிண்டன் டி காக் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.

குவிண்டன் டி காக் 124 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற பிலாண்டர், ரபாடா ஆகியோரையும் குமாரா வீழ்த்தினார். 19 வயது குமாரா தனது 3-வது டெஸ்ட் போட்டியிலேயே அயல் மண்ணில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கையின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பவுலரான ஹெராத் 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன் 392 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தற்போது கருண ரத்ன, சில்வா ஆடத் தொடங்கி இலங்கை விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/19-வயது-இளம்-வேகப்பந்து-வீச்சாளர்-லாஹிரு-குமாரா-6-விக்-தென்-ஆப்பிரிக்கா-392-ரன்கள்/article9457182.ece

South Africa 392 & 34/0 (10.1 ov)
Sri Lanka 110
Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: ரபாடா, பிளாண்டர் வேகத்தில் 110 ரன்னில் சுருண்டது இலங்கை

2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணியின் ரபாடா, பிளாண்டர் ஆகியோரின் வேகத்தில் இலங்கை அணி 110 ரன்னில் சுருண்டது.

 
2-வது டெஸ்ட்: ரபாடா, பிளாண்டர் வேகத்தில் 110 ரன்னில் சுருண்டது இலங்கை
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி டீன் எல்கர் (129), டி காக் (101) ஆகியோரின் அபார சதத்தால் 392 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் குவித்தார்.

அதன்பின் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு, இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள்.

8EF378A8-CA3C-4809-9358-179203DD5A67_L_s
விக்கெட் வீழ்த்திய சந்தோஷத்தில் ரபாடா

இதனால் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கருணாரத்னே 24 ரன்னும், 7-வது வீரராக களம் இறங்கிய உபுல் தரங்கா அவுட்டாகாமல் 26 ரன்னும் எடுத்தனர். மற்றவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 110 ரன்னில் சுருண்டது.

பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இலங்கை அணி 282 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணி பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/03213206/1059933/2nd-Test-Sri-Lanka-110-all-out.vpf

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 507 ரன்கள் இலக்கு வைத்தது தென் ஆப்பிரிக்கா

கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 
 
2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 507 ரன்கள் இலக்கு வைத்தது தென் ஆப்பிரிக்கா
 
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 392 ரன்கள் குவித்தது. டீன் எல்கர் 129 ரன்களும், டி காக் 101 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 110 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 26 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். துவக்க வீரர் கருணாரத்னே 24 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இலங்கை அணி 282 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக எல்கர் 55 ரன்களும், கேப்டன் டுபிளசிஸ் 41 ரன்களும் சேர்த்தனர். இதனால், இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சைப் போன்றே வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 25 ரன்கள் எடுப்பற்குள் 2 விக்கெட்டுகளை (கருணாரத்னே-6, மென்டிஸ்-4) இழந்தது. அதன்பின்னர் குஷால் சில்வா 29 ரன்களிலும், டிசில்வா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மேத்யூஸ், சண்டிமால் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமிருந்தாலும், விக்கெட்டை காப்பாற்றி இலக்கை எட்டுவது மிகவும் கடினமானது என்பதால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/04214940/1060159/south-africa-set-target-507-runs-to-sri-lanka.vpf

Link to comment
Share on other sites

இலங்கை படுதோல்வி : தொடரை வென்றது தென்னாபிரிக்கா

 

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.SOUTH-AFRICA-V-SRI-LANKA-00221.jpg

507 என்ற என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையூம் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ரபாடா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா 2-0 என கைப்பற்றியுள்ளது.

http://www.virakesari.lk/article/15123

Link to comment
Share on other sites

டெஸ்ட் தொடர் தோல்விக்கு காரணம் சொல்கிறார் மெத்தியூஸ்

02-8b51728eb34fb53baa50ecd44da8e6187f06c9d8.jpg

 

துடுப்­பாட்ட வீரர்­களின் செயற்­பாடு துல்­லி­ய­மாக இல்­லா­ததே தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான டெஸ்ட் தோல்­விக்கு முக்­கிய காரணம் என்று இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் கூறி­யுள்ளார்.

அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­லான இலங்கை அணி தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது.

இதில் எலி­செ­பத்தில் நடை­பெற்ற முதல் டெஸ்ட் போட்­டியில் 206 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோற்ற இலங்கை, கேப் ­ட­வுனில் நடை­பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்­டியில் 282 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் படு­தோல்­வி­ய­டைந்­தது.

இதன் மூலம் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரை தென்­னா­பி­ரிக்கா 2–-0 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது. இந்த தோல்வி குறித்து இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸ் கருத்து தெரி­விக்­கையில்,  

நாணயச் சுழற்­சியில் வென்றும், இலங்கை அணிக்கு சாத­க­மான நிலை இருந்தும், தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பது ஏமாற்றம் அளிக்­கி­றது. மீண்டும் ஒரு முறை எங்கள் துடுப்­பாட்ட வீரர்கள் அணியை மோச­மான நிலைக்கு கொண்டு சென்­று­விட்­டனர். 

பந்து வீச்­சா­ளர்கள் சிறப்­பாக செயற்­பட்­டாலும், துடுப்­பாட்ட வீரர் கள் வெற்­றிக்கு இட்டுச் செல்லும் பாதையை சரி­யாக அமைத்துக் கொடுக்­க­வில்லை.  துடுப்­பாட்­டத்தில் வீரர்கள் அக்­கறை காட்ட வேண்­டி­யது மிக மிக அவ­சி­ய­மா­னது. 

மேலும், லஹிரு குமா­ர­வுக்கு 19 வயது தான் ஆகின்­றது. ஆனால் அவர் பந்­து­வீச்சில் அசத்­தி­விட்டார். தென்­னா­பி­ரிக்க அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் ரபாடா சிறப்­பாக செயற்­பட்டார். அவர் 2ஆவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்றும் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரின் கடைசி போட்டி ஜோகன்னஸ்பேக்கில் எதிர்வரும் 12ஆம் திகதி தொடங்குகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-07#page-8

Link to comment
Share on other sites

மூன்­றா­வது டெஸ்ட் இன்று ஆரம்பம்: தென் ஆபிரிக்காவினால் வெள்ளையடிக்கப்படுவதைத் தவிர்க்க இலங்கையின் துடுப்பாட்டம் பிரகாசித்தே ஆகவேண்டும்
2017-01-12 11:31:57

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக வொண்­டரர்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்க வேண்­டிய கட்­டாய நிலையில் இருக்­கின்­றது.

 

முதல் இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் தென் ஆபி­ரிக்க துடுப்­பாட்ட வீரர்கள் மூவர் சதங்­க­ளையும் ஐவர் அரைச் சதங்­க­ளையும் பெற்­றுள்­ள ­போ­திலும் இலங்கை சார்­பாக இருவர் மாத்­தி­ரமே அரைச் சதங்­களைப் பெற்­றுள்­ளனர்.

 

மேலும் துடுப்­பாட்­டத்தில் அதிக ஓட்­டங்­களைப் பெற்­றுள்ள தென் ஆபி­ரிக்­கர்­களின் நால்வர் 50 க்கும் மேற்­பட்ட சரா­ச­ரியைக் கொண்­டுள்­ளனர். இலங்­கை­யர்­களின் துடுப்­பாட்ட சரா­சரி 38க்குக் கீழேயே இருக்­கின்­றது.

 

இலங்கை பந்­து­வீச்­சா­ளர்கள் தென் ஆபி­ரிக்­கர்­க­ளுக்கு ஈடு­கொ­டுத்து பந்­து ­வீ­சு­கின்­ற­போ­திலும் துடுப்­பாட்ட வீரர்கள் இப் போட்­டி­யிலும் சோபிக்கத் தவ­றினால் வெள்­ளை­ய­டிப்­புக்கு உள்­ளா­வதைத் தவிர்க்க முடி­யாமல் போகும்.

 

217561447802791218.jpg

 

எவ்­வா­றா­யினும் இன்­றைய போட்­டிக்­கான இலங்கை அணியில் பாரிய மாற்­றங்கள் இடம்­பெறும் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. எனி னும் துடுப்­பாட்ட வரி­சையில் ஒரே ஒரு மாற்றம் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

 

திமுத் கரு­ணா­ரட்ன, கௌஷல்ய ஆகிய இரு­வரும் வழ­மைபோல் ஆரம்­பத்­ து­டுப்­பாட்ட வீரர்­க­ளாக களம் இறங்­கு­வது உறுதி. 3ஆம் இலக்­கத்தில் குசல் மெண்டிஸ் துடுப்­பெ­டுத்­தா­டு­வ­துடன் 4ஆம் இலக்­கத்தில் தனஞ்­செய டி சில்வா, தினேஷ் சந்­திமால், உப்புல் சந்­தன ஆகிய மூவரில் ஒருவர் விளை­யா­டுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஏஞ்­சலோ மெத்­யூஸின் 5ஆம் இல­கத்தை நிலை­யாக்கிக் கொண்­டுள்ளார்.

 

4 இலக்­கத்­திற்கு குறிப்­பி­ட­பட்ட மூவரில் ஒருவர் அந்த இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டினால் மற்­றைய இருவர் 6ஆம், 7ஆம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டு­வது நிச்­சயம். 

 

இவர்­களைத் தொடர்ந்து ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால், லஹிரு குமார, நுவன் ப்ரதீப் அல்­லது துஷ்­மன்த சமீர ஆகியோர் துடுப்­பாட்ட வரி­சையில் இடம்­பெ­றுவர் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் பொறுமை, நிதானம், சிறந்த நுட்­பத்­திறன், துணிச்சல் ஆகி­ய­வற்றை ஒருங்கே பிர­யோ­கிப்­ப­துடன் அடி தெரி­வு­களை மிக நேர்த்­தி­யாகக் கையாள்­வது மிக­மிக அவ­சி­ய­மாகும்.

 

அப்­போ­து தான் இலங்கை அணி­யினால் கணி­ச­மான மொத்த ஓட்ட ங்களைப் பெறக்கூடியதாக இருக்கும். இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிப்பார்களா அல்லது முதலிரண்டு போட்டிகளில் போன்று தடுமாறுவார்களா என்பதற்கு இன்று ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பதில் தரும்.

 

அம்­லாவின் 100ஆவது டெஸ்ட் 

இலங்­கைக்கு எதி­ராக ஜொஹா­னெஸ்­பேர்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் போட்­டி­யா­னது தென் ஆபி­ரிக்­காவின் துடுப்­பாட்ட வீரர் ஹஷிம் அம்­லாவின் 100ஆவது டெஸ்ட் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

 

2004 இலி­ருந்து இது­வரை 99 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள அம்லா 25 சதங்கள், 31 அரைச் சதங்­க­ளுடன் 7665  ஓட்­டங்­களை மொத் தமாக பெற்றுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21756#sthash.TTI6KmRq.dpuf
Link to comment
Share on other sites

‘துடுப்­பாட்ட வீரர்­கள் தான் அணியைக் கைவிட்­டனர்’ - சனத் ஜய­சூ­ரிய
2017-01-12 11:35:44

தென் ஆபி­ரிக்­கா­வுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தில் இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் பிர­கா­சிக்கத் தவ­றி­யமை குறித்து கடும் அதி­ருப்­தியை தலைமை தெரி­வாளர் சனத் ஜய­சூ­ரிய வெளி­யிட்­டுள்ளார்.

 

ஜொஹா­னெஸ்­பேர்கில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் முன்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் போட்­டியின் தன்­மையை நன்கு அவ­தா­னித்து அதற்­கேற்ப திற­மையை வெளிப்
­ப­டுத்த வேண்டும் என சனத் ஜய­சூ­ரிய கேட்­டுக்­கொண்­டுள்ளார். 

 

21757sanath1.jpgதென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முத­லி­ரண்டு டெஸ்ட் போட்­டி­களில் ஓர் இன்­னிங்­ஸி­லேனும் இலங்­கை­யினால் 300 ஓட்­டங்­களைப் பெற முடி­யாமல் போனது.

 

தென் ஆபி­ரிக்க துடுப்­பாட்­டத்தை இலங்கை பந்­து­வீச்­சா­ளர்கள் சுமா­ராகக் கட்­டுப்­ப­டுத்­தி­யபோ­திலும் மோச­மான துடுப்­பாட்­டமே இலங்­கை யின் தோல்­வி­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தது. ‘‘இள­மையும் அனு­ப­வமும் கலந்த அணி­யையே நாங்கள் தெரிவு செய்தோம்’’ என சனத் ஜய­சூ­ரிய குறிப்­பிட்டார்.

 

‘‘அண்­மைக் ­கா­லங்­களில் இளம் வீரர்கள் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். பல வீரர்கள் தென் ஆபி­ரிக்­காவில் முதல் தட­வை­யாக விளை­யா­டி­யதால் அவர்­களால் பிர­கா­சிக்க முடி­யாமல் போன­தென்­பதை ஒப்­புக்­கொள்­ளலாம். ஆனால் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யிலும் அதே­போன்று ஏன் சோடை போனார்கள் என்­பது எனக்குப் புரி­ய­வில்லை’’ என அவர் கூறினார்.

 

‘‘நிலை­மைக்­கேற்ப ஒரு துடுப்­பாட்ட வீர­ரா­வது நிதா­ன­மா­கவும் திற­மை­யா­கவும் துடுப்­பெ­டுத்­தாடி விக்கெட்டை தக்­க­ வைத்­துக் ­கொண்­டி­ருக்­க­ வேண்டும். ஆனால் அவ்­வாறு நிறை­வே­றா­தது கவலை தரு­கின்­றது‘‘ என்றார் சனத் ஜய­சூ­ரிய.

 

போர்ட் எலி­ஸபெத் டெஸ்ட் போட்­டியில் முன்­வ­ரிசை வீரர்கள் பிர­கா­சிக்­காதநிலையில் நான்கு துடுப்­பாட்ட வீரர்கள் திற­மையை வெளிப்­ப­டுத்­திய போதிலும் அவர்­களால் நீண்ட நேரம் தாக்­குப்­பி­டிக்க முடி­யாமல் போனது.

 

கடைசி டெஸ்ட் போட்­டியில் துடுப்­பாட்ட வீரர்கள் திருப்­தி­க­ர­மான ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­த­வேண்டும்’’ என சனத் ஜய­சூ­ரிய மேலும் தெரி­வித்தார். பந்­து ­வீச்­சா­ளர்கள் குறித்து எவ்­வித குறையும் காண முடி­யாது என அவர் தெரிவித்தார்.

 

‘‘இலங்கை பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்து வீசியதுடன் இலங்கையினால் எட்ட முடியாத மொத்த எண்ணிக்கைகளை அவர்கள் கொடுக்கவில்லை. துடுப்பாட்ட வீரர்கள் தான் அணியை கைவிட்டனர்’’ என அவர் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21757#sthash.P8Nk24Nv.dpuf
Link to comment
Share on other sites

100 ஆவது டெஸ்ட்டில் சதம் குவித்தார் ஹஷிம் அம்லா
2017-01-12 21:18:03

இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று தென் ஆபிரிக்க வீரர்களான ஹஷிம் அம்லா, ஜீன் போல் டுமினி ஆகியோர் சதம் குவித்தனர்.

 

21764hasim-amla.jpg


ஹஷிம் அம்லா, தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜொஹானெஸ்பேர்க், தி வொண்டரர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்ஆபிரிக்க அணித்தலைவர் பவ் டூ பிளேசிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.


ஸ்டீபன் குக் 10 ஓட்டங்களுடனும் எல்கர் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்களையடுத்து களமிறங்கிய, ஜீன் போல் டுமினியும் ஹஷிம் அம்லாவும் சதங்களைக் குவித்ததுடன் 3 ஆவது விக்கெட்டுக்காக 292 ஓட்டங்களை பகிர்ந்தனர்.


டுமினி 155 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் 6 ஆவது டெஸ்ட் சதமாகும். ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இது அம்லாவின் 26 ஆவது டெஸ்ட் சதமாகும்.


இன்றைய ஆட்டமுடிவின்போது தென் ஆபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் லஹிரு குமார 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21764#sthash.UTwIYHQB.dpuf
Link to comment
Share on other sites

அம்லாதான் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக இருப்பார்: டு பிளிசிஸ் சொல்கிறார்

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக அம்லா இருப்பார் என்று அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

 
அம்லாதான் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக இருப்பார்: டு பிளிசிஸ் சொல்கிறார்
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. இந்த போட்டி அம்லாவிற்கு 100-வது போட்டியாகும்.

அம்லா 100-வது போட்டியில் விளையாடுவது குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 100 டெஸ்டில் விளையாடி பெருமை சேர்த்த கடைசி வீரராக அம்லாதான் இருப்பார். ஏனென்றால், தற்போ கிரிக்கெட் மாறி கொண்டு வருகிறது. டி காக் மற்றும் ரபாடா ஆகியோர் 100 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் வருங்காளத்தில் நீண்ட தீரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் சராசரி வயது 27.85 ஆகும். இதில் ஆடும் லெவனில் இடம்பெறாத 24 வயதுடைய இரு வீரர்களும் அடங்குவார்கள். நான், அம்லா, ஸ்டீபன் குக், டுமினி மற்றும் வெர்னோன் பிளாண்டர் ஆகியோரின் வயது சராசரி 30 ஆகிவிட்டது.

தற்போதைய நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு பரிணாமங்கள் நடைபெற்றுள்ளன. ஹசிம் அம்லா, டி வில்லியர்ஸ் மற்றும் கால்லிஸ் ஆகியோர் விளையாடிய காலத்தில் ஏராளமான டெஸ்ட் போடிகள் நடத்தப்பட்டன. தற்போது டி20 ஆட்டங்கள் அதிகரித்து விட்டன. ஆகவே, இந்த ஆட்டத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதால், நீண்ட நாட்களாக விளையாடுவது கடினம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/12180858/1061819/Amla-could-be-last-South-African-to-100-Tests-du-Plessis.vpf

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 426 ரன்கள் குவிப்பு

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 426 ரன்கள் குவித்துள்ளது.

 
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 426 ரன்கள் குவிப்பு
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 10 ரன்கள் எடுத்த நிலையிலும், எல்கர் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

C350BF2E-5729-4C4C-9848-3FB134B03E5D_L_s
சதம் அடித்த மகிழ்ச்சியில் அம்லா

தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.

E53BEFFC-ACC1-4F13-9F72-814E125934A2_L_s
சதம் அடித்த மகிழ்ச்சியில் டுமினி

அம்லாவிற்கு இது 100-வது போட்டியாகும். 100-வது போட்டியில் களம் இறங்கிய அவர் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த டுமினி 155 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரின் சதங்களால் தென்ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்திருந்தது. அம்லா 125 ரன்னுடனும், ஆலிவியர் ரன் எதுவும் இன்றியும் களத்தில் இருந்தனர்.

19481664-3480-44CD-A1A9-096318CC6B1D_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆலிவியர் 3 ரன்னிலும், அம்லா 134 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டி காக் 34 ரன்னுகளும், பர்னெல் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னி்ங்சில் 426 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் பிரதீப், லஹிரு குமாரா தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

3F79F921-36EA-414F-8CBC-4D3ED613D60B_L_s
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டி காக்

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. பிளாண்டர் வீசிய 4-வது பந்தில் கருணாரத்னே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். இலங்கை அணி 10 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13190037/1062070/3rd-test-south-africa-426-runs-against-srilanka.vpf

Link to comment
Share on other sites

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது

 

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

 
 
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அம்லா 134 ரன்களும், டுமினி 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 11 ரன்னுடனும், சண்டிமல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

0A243ED1-AB1B-4FC5-A50C-D841431F53A7_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிளாண்டர்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். சண்டிமல் 5 ரன்னோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நாக்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதால் பாலோ-ஆன் ஆகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பாலோ-ஆன் கொடுத்தார்.

இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14151618/1062138/south-africa-srilanka-3rd-test-srilanka-follow-on.vpf

Link to comment
Share on other sites

3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அம்லா 134 ரன்களும், டுமினி 155 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 11 ரன்னுடனும், சண்டிமல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். சண்டிமல் 5 ரன்னோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நாக்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

4A519077-5B0B-4E3E-8D74-2B3CF773B183_L_s

தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், பாலோ-ஆன் ஆனது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தென்ஆப்பிரிக்காவின் அதிவேக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 42.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 177 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்னெல் 4 விக்கெட்டும், ஆலிவர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

E8DB179B-A094-4C9E-B20A-42AE6F0C47B1_L_s

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக்கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. முதல் இன்னிங்சில் 155 ரன்கள் குவித்த டுமினி ஆட்ட நாயகன் விருதையும், அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14201658/1062157/south-africa-beats-srilanka-by-innings-won-and-whitewash.vpf

Link to comment
Share on other sites

கேப்டனாக எனது மோசமான தோல்வி: இலங்கை கேப்டன் மேத்யூஸ் சொல்கிறார்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது எனது கேப்டன் தலைமையில் மிகவும் மோசமானது என்கிறார் மேத்யூஸ்.

 
 
கேப்டனாக எனது மோசமான தோல்வி: இலங்கை கேப்டன் மேத்யூஸ் சொல்கிறார்
 
மேத்யூஸ் தலைமையிலான இளைஞர்களை கொண்ட இலங்கை அணி தென்ஆப்பி்ரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்து 0-3 என ஒயிட்வாஷ் ஆனது.

நேற்றுடன் முடிந்த கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த டெஸ்ட் மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறுகையில் ‘‘இலங்கை அணி தோல்வியுற்ற பல தொடர்களில் நான் இடம்பிடித்துள்ளேன். ஆனால், கேப்டனாக இந்த தோல்வி மிகவும் மோசமானது. நாங்கள் எந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறமோ அதைவிட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. பேட்ஸ்மேன்கள் மிகவும் ஏமாற்றம் அளித்தனர். என்னையும் சேர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் நல்ல நிலையில்தான் ஆட்டத்தை தொடர்ந்தோம். ஆனால் அவற்றை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அதிக ரன்கள் குவிப்பது தேவையானது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15162449/1062219/My-worst-defeat-as-captain-Mathews.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.