Jump to content

இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி!


Recommended Posts

இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி!

 

கோலி

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி டிராவாகும் என்று எல்லோரும் நினைத்திருக்க, 207 ரன்களுக்கு இங்கிலாந்தை, இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு சின்ன சர்ப்பிரைஸ் தான். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த ஆண்டை நம்பர் 1 அணியாக தர வரிசை பட்டியலில் உச்சத்தில் முடித்துள்ளது. இதைத் தாண்டி கோஹ்லிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. இது வரை உடைக்கப்படாத சில சாதனைகளை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது.


18… டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையவே இல்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் தொடங்கி இங்கிலாந்து தொடர் வரை தொடர்ந்து 18 போட்டிகளில் தோல்வி அடையாமல் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் 14 வெற்றிகளும் 4 டிராக்களும் அடங்கும். இதற்கு முன் கபில் தேவ தலைமையிலான இந்திய அணி 1985 செப்டம்பர் முதல் 1987 மார்ச் வரை 17 போட்டிகளில் தோல்வி அடையாமல் கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த 17 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது


5.... இது வரை எந்த ஒரு இந்திய கேப்டனுமே தொடர்ந்து 5 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை. கோஹ்லியை போலவே கேப்டனாக அசுர வேகத்தில் முன்னேறிய தோனியால் 4 தொடர்களை மட்டுமே தொடர்ந்து வெற்றி கொள்ள முடிந்தது. ( 2008-ல் பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் கும்ப்ளே - தோனி என இருவரும் கேப்டனாக இருந்ததால், அது இங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை). இது பாராட்டப்பட வேண்டிய சாதனை என்ற போதிலும், இந்த தொடர்களில்  2 மட்டுமே வெளி நாடுகளில் விளையாடப்பட்டுள்ளது. ஒன்று மேற்கிந்திய தீவுகள், மற்றொன்று இலங்கை ( இந்திய துணைக்கண்ட பிட்ச்). இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய பிட்சுகளில் கடின பயணத்தை கோலி தலைமையில் இந்தியா எதிர்கொள்ளும் விதத்தில் தான், உண்மையான பலம் உலகத்தால் ஒப்புக் கொள்ளப்படும்.

கோலி


4… ஒரே தொடரில் அதிகபட்சமாக 4 போட்டிகளை வென்ற நிகழ்வு இந்திய அணி வரலாற்றில் இரண்டு முறை நடந்துள்ளது. ஒன்று 2012-2013 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில். மற்றொன்று, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வென்றுள்ள 4 போட்டிகள்.


12… இந்த ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட இந்தியா நழுவ விடவில்லை. மொத்தம் 12 போட்டிகளில் தோற்காமல் இருந்துள்ளது. அதில் 9 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இது இந்திய அணியால் ஓராண்டில் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச வெற்றி. இதற்கு முன் 2010-ம் ஆண்டு 8 போட்டிகளில் வென்றதே சாதனை என டேட்டா கூறுகிறது.

இப்படி பல சாதனைகளை கேப்டன் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் நிகழ்த்திக் காட்டி, குறுகிய காலத்தில் இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன்களுள் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அடுத்தது, அந்த பட்டியலில் உள்ள அனைவரையும் தாண்டி, இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என்ற பட்டத்துடன் 2017 கோஹ்லிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/sports/75494-kohli-the-only-indian-captain-to-break-these-records.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.