Jump to content

பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம்


Recommended Posts

பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம்
 
 
பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம்
மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடு க்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதி ராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
 
இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயல கம் முன்பாக  காலை 8.30 மணியளவில்  நடைபெறவுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு  கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு  வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
 
பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ள கிளிநொச்சி  மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தி யுள்ளனர்

http://www.onlineuthayan.com/news/21535

Link to comment
Share on other sites

 

கிளிநொச்சி, முல்லைத்தீவில் 10,000 பொருத்து வீடுகள்!

கிளிநொச்சி, முல்லைத்தீவில் 10,000 பொருத்து வீடுகள்!

யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொருத்துவீடுகளை அமைத்துத் தருமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருவதாகவும் குறித்த ஊடகமொன்று மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

10,000 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உறுதிப்படுத்தியதுடன், இந்த அனுமதி நிபந்தனையுடன் கூடியதேயெனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65 ஆயிரம் பொருத்துவீட்டு திட்டத்தை அமுல்படுத்த மீள்குடியேற்ற அமைச்சர் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து முயற்சித்துவருகின்றார்.

எனினும், இதற்கு நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வடக்கு மாகாணசபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களை கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனது அலுவலகத்திற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைத்து பேச்சு நடாத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=51915

Link to comment
Share on other sites

பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம்

Published by RasmilaD on 2016-12-19 10:46:41

 

C0A3erjXgAQmnjy.jpg

வடக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­டவுள்ள பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கிளி­நொச்சி மாவட்ட பொது அமைப்­புக்­களால் கிளி­நொச்சி மாவட்ட செயலகம் முன்­பாக இன்று  காலை 9.00 மணியளவில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

2009ஆம் ஆண்­டுக்கு  பின்னர் கிளி­நொச்சி மாவட்­டத்தில் மீள்­கு­டி­யே­றிய சுமார் 20 ஆ­யிரம் வரை­யான குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இன்றி கடந்த 7 ஆண்­டு­க­ளாக தற்­கா­லிக வீடு­களில் வாழ்ந்து வரு­கின்­றன.

C0A3erlWEAIkYNL.jpg

அவ்­வா­றான நிலையில் குறித்த பொருத்து வீட்­டுத்­திட்டம் தொடர்பில் அவர்கள் தெரி­விக்­கையில், 

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் தற்­போது 65000 பொருத்து வீடுகள் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான பொருத்து வீடுகள் எமது சூழ­லுக்கு பொருந்­தாது. 

எமது வாழ்க்­கை­முறை, எமது பிர­தே­சத்தின் கால­நிலை, எமது பாரம்­ப­ரிய கட்­ட­ட­முறை என்­பன இதன் மூலம் சிதைக்­கப்­ப­டு­கின்­றது. மறை­மு­க­மாக பல கட்­டட வேலை செய்யும் தொழி­லா­ளர்­க­ளது வேலை பறிக்­கப்­ப­டு­கின்­றது. 

பனையால் வீழ்ந்­த­வனை மாடு ஏறி மிதிப்­பது போல கடந்த 30 வருட யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட எமக்கு 5 வருட ஆயுட்­காலம் கொண்ட இவ்­வா­றான வீடு­களை வழங்க முற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. எனவே முன்னர் வழங்கப்பட்டது போன்ற நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்வேண்டும் என கோரியுள்ளனர்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுவாமிநாதனுக்கு தெரியுமோ???

Link to comment
Share on other sites

பொருத்து வீடு வேண்டாம் – பொருத்தமான வீடு வேண்டும் கிளிநொச்சியில் ஆா்ப்பாட்டம்

IMG_9826.jpg
மீள்  குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருத்து வீடு வேண்டாம் எங்களுக்கு  எங்கள் சூழலுக்கும் பொருத்தமான வீட்டை தாருங்கள் எனக் கோரியும், பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆா்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆா்ப்பாட்டம்  இன்று 19-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு  மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்துகெண்டனா்.
IMG_9831.jpg
ஆா்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவா்கள் மீள்குடியேற்றத்திலும் சா்வதிகாரமா?,விளையாடதே விளையாடதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே,வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்,குசுனி இல்லாத வீட்டில் குடியிருக்கலாமா? றெஜிமென்ட் பாணியில் றெஜிபோம் வீடுகளா? 16 இலட்சத்தில் பலகை வீடா? மக்களின் விருப்பமா மந்திரியின் ஆசையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தினா்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  மீள்குடியேற்றத்தின் பின்னா் 35,452 புதிய வீடுகளும், 6,179  திருத்த வீடுகளும் தேவையாக காணப்பட்டன.இதில் கடந்த ஆண்டு வரை அரச, அரசசாா்பற்ற  மற்றும் இந்திய அரசின் வீட்டுத்திட்டம் என 20,714 புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.  எனவே இன்னும் 14,738 புதிய வீடுகள் கிளிநொச்சிக்கு தேவையாக உள்ளன என மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு 1,441 திருத்த வீடுகளும் தேவையாக உள்ளது என மாவட்டச் செயலகம் தெரிவிக்கிறது.
IMG_9834.jpg
இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தவுள்ள பொருத்து வீட்டுக்கே இன்று கிIMG_9834-1.jpgIMG_9837.jpgIMG_9846.jpgIMG_9871.jpgIMG_9874.jpgளிநொச்சியில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருக்கான மகஜா் கிளிநொச்சி மாவட்டச் செயலாளா் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு எதிா்கட்சி தலைவா்,வட மாகாண முதலமைச்சா் ஆகியோருக்கான மகஜா் பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரனிடம் கையளிக்கப்பட்டது.

 

http://globaltamilnews.net/archives/10784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இது சுவாமிநாதனுக்கு தெரியுமோ???

அவர் சொல்லி போட்டார் எவர் தடுத்தாலும் வீடுகள் அமையும் என்று 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.