Jump to content

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த சுற்றுலா பயணிகள்10 பேர் மரணம்

Recommended Posts

article_1481965939-aa.jpg

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை  புகையிரத  நிலையத்துக்கு முன்னால்,  சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில்  பயணித்த  17 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/188153/ய-ழ-வ-பத-த-ல-ப-ர-பல-

update : யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் மரணம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை  புகையிரத  நிலையத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

unnamed__3_.jpg

மாதம்பயில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன்  யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1:30 மணியளவில்  நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

unnamed__4_.jpg

இந்த விபத்தில் சிக்கி கயஸ்  வாகனத்தில் பயணித்த  3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், கயஸ் வாகனத்தில் பயணித்த ஏனைய மூன்றுபேர்  காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  இப்பொழுது யாழ்  போதனா  வைத்திய சாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர்  அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில்  பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகவும்  எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் 

unnamed__5_.jpg

இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed.jpg

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed__5_.jpg

unnamed__4_.jpg

unnamed__3_.jpg

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

http://www.virakesari.lk/article/14483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதி விபத்துகள் குறையும் என்று பார்த்தால்  ம்ம் குறைந்த பாடாய் இல்லை ஆழ்ந்த இரங்கள்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.
 வான் சாரதியில் தான் தவறுள்ளது.

நானும் அப்படிதான் நினைக்கிறேன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு இருக்கிறது ஆனால் பஸ் வந்த பக்கமே இருக்கிறது 

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை விபத்துக்கு இரண்டு காரணம் கூறுகின்றார்கள்.
1. வான் சாரதி நித்திரை தூக்கத்தில் வானை செலுத்தியமை.
2. வானின் முன்பக்க டயர் ஒன்று வெடித்ததால், வான் கட்டுப்பாட்டை இழந்து  மோதி இருக்குது

எது உண்மை என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

வீதி விதிகளை மதிக்காத சாரதிகளுக்கு .25.000 தண்டனை சரியே. ஆனால் ஐந்தோ பத்தோ தள்ளிவிட்டு தப்பி விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Surveyor said:

நான் அறிந்தவரை விபத்துக்கு இரண்டு காரணம் கூறுகின்றார்கள்.
1. வான் சாரதி நித்திரை தூக்கத்தில் வானை செலுத்தியமை.
2. வானின் முன்பக்க டயர் ஒன்று வெடித்ததால், வான் கட்டுப்பாட்டை இழந்து  மோதி இருக்குது

எது உண்மை என்று தெரியவில்லை.

முதலாவது தான் சரி போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

வீதி விதிகளை மதிக்காத சாரதிகளுக்கு .25.000 தண்டனை சரியே. ஆனால் ஐந்தோ பத்தோ தள்ளிவிட்டு தப்பி விடுவார்கள்

வீதி விகளுக்கு அப்பால், நித்திரை கொள்ளாத, தேவையான ஓய்வை எடுக்காத டிரைவர் தமதினதும், தம்மை நம்பிவரும் ஏணையவர்களதும் உயிர்களை பணயம் வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

உண்மை தெரியாது - ஓவர் டேக் செய்கையில் நடந்த விபத்து என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

அநியாயச் சாவுகள்.

வாகனத்தின் முன் பக்கம் மட்டுமே கடுமையாக சேதமடைந்து இருக்கு, ஆனால் பின் இருக்கையில் இருப்பவர்கள் கூட மரணித்துள்ளார்கள். பின்னிருக்கையில் இருப்பவர்கள் மரணமாவதற்கு விபத்தினால் ஏற்படும் சடுதியான அதிர்ச்சியா காரணமாக இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆசன பட்டி (seat belt ) அணியாமல் இருந்திருப்பினம்.  அங்கு அந்த பழக்கமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அநியாயச் சாவுகள்.

வாகனத்தின் முன் பக்கம் மட்டுமே கடுமையாக சேதமடைந்து இருக்கு, ஆனால் பின் இருக்கையில் இருப்பவர்கள் கூட மரணித்துள்ளார்கள். பின்னிருக்கையில் இருப்பவர்கள் மரணமாவதற்கு விபத்தினால் ஏற்படும் சடுதியான அதிர்ச்சியா காரணமாக இருக்கும்?

No belt worn and sudden impact caused the death 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.