Jump to content

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!


Recommended Posts

“ஆட்டிப்படைத்த கரன்களின் ராஜ்ஜியம்!" சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை - அத்தியாயம் 50

 
 

சசிகலா, ஜெயலலிதா

ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது. ஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார். 1991-க்குப் பிறகு நடராசனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தவர், தேவைப்பட்டபோது திவாகரனுக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்தார்; தேவையில்லை என்று நினைத்தபோது, திவாகரனிடம் இருந்து அவற்றைப் பறித்தார். ஜெ.ஜெ டிவியின் பொறுப்புக்களை பாஸ்கரனுக்குக் கொடுத்தார். சுதாகரனை வளர்ப்பு மகனாக்கினார். தினகரனை வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைப் பார்த்துக் கொள்ள அமர்த்தினார். ஆனால், சசிகலாவைப் போல யாரையும் நிரந்தரமாக உடன் வைத்துக் கொள்ளவில்லை. 

அதிகாரிகளுக்கு உத்தரவிடும் திவாகரன்

திவாகரனின் ராஜ்ஜியத்தில்.... 

திவாகரனின் ராஜ்ஜியத்தில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கும் விழாவாக நடந்தது, தஞ்சை மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அது. சோழர்களுக்குப் பிறகு, நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் பராமரித்து வந்தனர். ஆனால், அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாறு இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக நடக்காத கும்பாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டார் திவாகரன். சசிகலாவிடம் பேசி, ஜெயலலிதாவை சம்மதிக்க வைத்து கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. 1995 ஜூன் 8-ம் தேதி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் என ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது. திட்டம் தயாரானதும், திவாகரன் பரபரப்பானார். கோயிலுக்குள்ளேயே ஓர் அலுவலகத்தைப் போட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். இயல்பிலேயே சசிகலாவின் உறவினர்களில் திவாகரனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். அதனால், தன்னுடைய வாழ்க்கை முறைகளையே அந்த நேரத்தில் மாற்றிக் கொண்டார் திவாகரன். அலுவலகத்தில் இருந்து தொலைபேசியைச் சுழற்றி உத்தரவுகளைப் போட்டுக் கொண்டே இருப்பார். உத்தரவுகளுக்கு ஏற்பட, தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள், திவாகரனைப் பயபக்தியுடன் பார்க்க வந்தனர். விழா முடிவு செய்யப்பட்ட பிறகு வந்த 6 மாதங்களில் நாகை மாவட்டத்தில் வேறு எந்த வேலையும் நடைபெறவில்லை. நாகை கலெக்டர் பாஸ்கரன் மன்னார்குடியிலேயே கேம்ப் அடிக்க... ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட எல்லாத்துறை அதிகாரிகளும் நாகை மாவட்டத்துக்கே கார்களோடு குவிந்துவிட்டனர். வைகுந்த டி.ஜி.பி வந்துபோனதும், போலீஸ் பட்டாளம் அங்கு குவிந்துவிட்டது.

கும்பாபிஷேகத்தின் போது திவாகரன்

சத்தம் இல்லாமல் சென்னைக்குப் பறந்த திவாகரன் நகர அபிவிருத்திக்கான பைலில் நிதித்துறைச் செயலாளர் நாராயணனிடம் கையெழுத்து வாங்கினார். பைல் கையெழுத்தானதுமே, மன்னார்குடிக்கு மூன்றரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலைகள் ஒருபக்கம் விறுவிறுவென நடந்தன. கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மட்டும் கடைசி வரை நீடித்தது. பொதுமக்களும் கட்சிக்காரர்களும் நம்பிக்கை இழந்தனர். பத்திரிகை விளம்பரங்களில் கூட முதல்வர் நல்லாசியுடன் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன. காஞ்சி சங்கராச்சாரியாரும், ஆர்.வெங்கட்ராமனுக்கும் மட்டும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்திருந்தார் திவாகரன். 6-ம் தேதி கோயிலுக்குப் போன் செய்த சசிகலா முதல்வர் ஜெயலலிதாவோடு வருவேன் என்ற தகவலைச் சொல்லி, ஜெயலலிதாவின் வருகையை உறுதிப்படுத்தினார். உடனே, நிலைமைகள் மாறின. திவாகர் எங்கு சென்றாலும், அவரது காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் ‘பைலட்’ கார்கள் அணிவகுத்தன. 8-ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாயிரம் போலீஸ்காரர்கள் கோயிலைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா எழுந்தளினார்...

கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த ஜெயலலிதா

காலையில் ஜெயலலிதா வர நேரம் ஆனதால், ராஜகோபால சுவாமி கோயிலின் 16 கோபுரங்களுக்கும், பதினெட்டு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்வதாகத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒன்றிப் போய் இருந்தார் திவாகர். சசிகலாவின் தம்பி என்றில்லாமல், ஒரு சாதரண பக்தரைப்போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார். 9 மணிக்கு ராஜ கோபுரத்தின் மேல் இருந்து மஞ்சள் கொடியை திவாகர் அசைத்ததும், கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியது. சரியாக 9.25 மணிக்கு ஜெயலலிதா உள்ளே நுழைந்தார். அப்போது, “முதல்வர் எழுந்தருளிவிட்டார்” என்று வர்ணனை செய்யப்பட்டது. ஜெயலலிதா நடக்கும் பாதை முழுவதும் ரத்தினக் கம்பளத்தால் போர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், செருப்பில்லாமல் நடக்க சிரமப்படுவார் என்பதால், ரத்தினக் கம்பளத்தின் மேல் வெள்ளைத்தாள்கள் விரிக்கப்பட்டன. மேடையில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சேர்கள் போடப்பட்டு இருந்தன. ஆர்.வெங்கட்ராமனுக்கு ஜெயலலிதா அமர்ந்திருந்த பகுதியில் சேர் போடப்படவில்லை. அதில் அதிருப்தி அடைந்த ஆர்.வீ நேராக எழுந்துபோய் சங்கராச்சாரியாரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார். முக்கால் மணி நேரத்தில் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார். திவாகரனின் ராஜ்ஜியத்துக்குள்... அவருடைய முழுமையான  மேற்பார்வையில்... அவருடைய திட்டப்படி நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, திவாகரனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், திவாகரனின் ராஜ்ஜியத்தில் இயங்கிய அ.தி.மு.கவிற்குள், திவாகரனின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதற்கு முன்பு இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்தது. 

தினகரன் ராஜ்ஜியம்....

தினகரன் திருமணத்தின் போது

சசிகலாவின் அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் விவேகானந்தன். அவர்களுக்கு மூன்று மகன்கள். டி.டி.வி.தினகரன், டி.டி.வி.பாஸ்கரன், டி.டி.வி.சுதாகரன். இவர்களில் அந்தக் காலகட்டத்தில் சுதாகரன், பாஸ்கரன் மட்டும் அடிக்கடி செய்திகளில் அடிபடுவார்கள். சசிகலாவின் தம்பி திவாகரன் கூட சர்ச்சைகளில் சிக்குவார். அதர்மம் என்ற பெயரில் முரளி நடித்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடிக்கவும் செய்தார் திவாகரன். ராஜகோபாலசுவாமி கும்பாபிஷேகத்தின் மூலம் நாடறிந்த ஆளாக மாறினார் திவாகரன். இவர்கள் ஒருவகை. ஆனால், தினகரன் வேறு வகை. தினகரனை எங்கும் பார்க்க முடியாது. அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வராது. பெரும்பாலும் திருச்சி, மன்னார்குடி பகுதிகளில் மட்டும் தினகரனின் நடமாட்டம் இருக்கும். அவர் சென்னைக்கு வந்தால்கூட வெளியில் தென்படமாட்டார். ஆனால், கடல் கடந்த நாடுகளில் தினகரனுக்கு வேலைகள் இருந்தன. லண்டன், சிங்கப்பூர், மலேசியா தொடர்புகளை வைத்துக் கொண்டு தினகரன் தனி ராஜாங்கம் நடத்தி வந்தார். 1990-களின் பிற்பாடு, தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் தாராளமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துகள் வாங்குவதற்கும், வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதில் இருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி தினகரன் பல சொத்துகளை இந்தியாவில் வாங்கிக் குவித்தார்.

அப்போது மன்மோகன்சிங் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தத் துறைக்கு வந்ததும், அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, அந்நியச் செலாவணி மோசடிகள். அதைக் கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசு, ஹாவாலா புரோக்கர்களைத் துரத்தி துரத்திப் பிடித்தது. டெல்லியைச் சேர்ந்த ஜெயின் சகோதரர்கள் மற்றும் அமீர் என்பவர் சிக்கினார்கள். அவர்கள்தான் இந்தியப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி அங்கு அவற்றை சிங்கப்பூர் டாலர்களாக மாற்றி, அதை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரும் தொழிலைக் கில்லியாகச் செய்தவர்கள். இந்த வித்தையைப் பயன்படுத்தி, பல கோடிப் பரிவர்த்தனைகளைப் பராமரித்தவர் தினகரன். மத்திய அரசிடம் சிக்கிய ஹவாலா புரோக்கர்கள், தமிழகத்தில் தினகரனின் பக்கம் கை காட்டினார்கள். இதையடுத்து 1995 ஜூலை மாதம், தமிழகத்தில் தினகரன் சுற்றுவாட்டாரங்களில் மத்திய அமலாக்கத்துறை சூறாவளி ரெய்டுகளை நடத்தியது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட முறை, லண்டன் ஹோட்டல் விவகாரம், ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த அமெரிக்க டாலர்கள் எனப் பல வில்லங்கங்கள் வெளியாயின. சென்னையில் ரெய்டு நடந்தபோது, மன்னார்குடிக்கு ஒரு டீம் சென்றது. அங்கு லெக்சஸ் என்ற வெளிநாட்டுக் கார் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்தக் காரை வைத்திருந்த மற்றொருவர், ஷேர் மார்கெட் ஊழல் நாயகன் ஹர்ஷத் மேத்தா மட்டுமே. இப்படி ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் நாயகனாக தினகரன் வலம் வந்தார். 

பாஸ்கரன், சுதாகரன் ராஜ்ஜியம்...

பாஸ்கரன்,சுதாகரன், சசிகலா, இந்திரகுமாரி, வளர்மதி

இன்றைய ஜெயா டி.வி. அன்றைக்கு ஜெ.ஜெ டிவியாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்தியவர்கள் பாஸ்கரனும் சுதாகரனும்தான். அதையொட்டி சென்னையில் கேபிள் டி.வி உரிமையாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் நோக்கம் ஜெ.ஜெ.டிவியின் வளர்ச்சியும், அதில் பங்கெடுத்திருந்தது பாஸ்கரன். பாஸ்கரனுக்காகவே நடத்தப்பட்ட மாநாடு அது. அதுபோல, ஜெயலலிதா தன் வாழ்வின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். அதில்தான் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகக் குறிப்பிட்டார். அதன் மூலம் சுதாகரனின் ராஜ்ஜியம் ஒன்று உருவானது. எப்படிப்பார்த்தாலும் இந்தக் கரன்களின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அன்றைய தேதியில் தமிழக மக்களுக்கு வேதனைகளைக் கொடுக்கும் சோதனை ராஜ்ஜியங்களாகவே திகழ்ந்தன. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/94680-karans-kingdom-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---50.html

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 51

சசிகலா, ஜெயலலிதா

சிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர். அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஜெயலலிதா-சசிகலாவின் 30 ஆண்டு கால உறவில் நிகழ்த்திக் காட்டப்பட்ட அந்த ஆட்டத்தில், நடராசன், திவாகரன், பாஸ்கரன், தினகரன், சுதாகரன், ராவணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஆட்ட நாயகனாக இருந்தனர். அவர்கள் அப்படி உருவெடுக்கும்போது, கார்டனுக்குள், கட்சிக்குள், அரசு எந்திரத்தில் எல்லையற்ற அதிகாரம் பெறுவார்கள். திடீரென ஒரு நாளின் ஒரு நொடியில் அவை அத்தனையும் பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இரண்டுவிதமான சூழல்களிலும் சசிகலா சலனம் காட்டாமல் ஜெயலலிதாவோடு இருப்பார். இருவரின் உறவுகளுக்குள் நிகழும் எழுச்சியும் வீழ்ச்சியும் ஜெ-சசி உறவில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. 

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, விவேக்

நடராசனின் மாயமான் வேலைகள்!

ஜெயலலிதா நடத்திய இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்டவர்களில், மற்றவர்களுக்கும் நடராசனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு; மற்றவர்களை மதிப்பிட முடியும். அவர்களின் நடவடிக்கைகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவர்கள் அடுத்து செய்யப்போவதைப் புரிந்துகொள்ள முடியும். ஜெயலலிதா சொன்னால், அவர்கள் ஒடுங்கிவிடுவார்கள். ஆனால், இந்த வரையறைகள் நடராசனுக்குப் பொருந்தாது. அவரைப் புரிந்து கொள்ள முடியாது. அவரின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது. “நடராசன் தனக்கு ஆதரவாக இருக்கிறாரா, எதிராகச் செயல்படுகிறாரா?” என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை கணிக்கவே முடியவில்லை. நடராசனும் அதை ஒருநாளும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டதும் இல்லை. “நான் நினைத்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை ஒரு நொடியில் கவிழ்த்துவிடுவேன்” என்று ஓர் இடத்தில் பேட்டி கொடுப்பார். அதற்கு அடுத்த வாரமே, “இந்த ஆட்சிக்கு எங்கிருந்தும் எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்” என்று சங்கல்பம் எடுப்பார். ஜெயலலிதாவால் துரத்தப்பட்டாலும், சசிகலா மூலம் தன் காரியங்களைச் சாதிப்பார்; அதன் மூலம் ‘ஜெயலலிதா தன் சட்டைப் பாக்கெட்டில்தான் இருக்கிறார்’ என்ற தோற்றத்தை உருவாக்குவார். நடராசனின் நடவடிக்கைகளால் ஜெயலலிதா உச்சக்கட்ட வெறுப்படைந்தால், அவரைக் கைது செய்ய உத்தரவிடுவார். ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் நடராசன் ஜாமீனில் வெளிவருவார். அதன்பிறகும், அவருடைய மாயமான் வேலைகள் வழக்கம்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடராசன் தேடப்படும் குற்றவாளி!

போலீஸ் வேனில் ஏற்றப்படும் நடராசன்

1995 ஆகஸ்ட் 20-ம் தேதி நடராசன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அன்று மாலை நடராசனை உளவு பார்க்கச் சென்ற, யதுகுலதிலகன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் நடராசன் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான போலீஸ்காரர் கொடுத்த புகாரின் பேரில், ரவி, எலியாஸ், மாறன், சுப்பிரமணி, செல்வராஜ் மற்றும் இன்னொரு ரவி கடைசியாக நடராசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நடராசனைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. ஆனால், திடீரென நடராசனே சென்னை போலீஸ் கமிஷ்னரை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தார். அங்கு வைத்து, “என்னைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக செய்தி போடுகிறீர்களே... இப்போது நானே கமிஷ்னர் அலுவலகம் வந்துள்ளேன். என்னைக் கைது செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று பத்திரிகையாளர்களிடம் சவால் விட்டார். ஆனால், அப்போது அவரை யாரும் கைது செய்யவில்லை. ஆனால், அதற்கும் தேதி குறிக்கப்பட்டது. 1995 ஜூலை 25-ம் தேதி புயல் வீசத் தொடங்கியது. நடராசன் கைதாகப் போகிறார் என்ற செய்தி வேகமாகப் பரவியது. போலீஸ்காரர்களோடு, கட்சிக்காரர்களும் பத்திரிகையாளர்களும் நடராசனின் பெசன்ட் நகர் வீட்டை முற்றுகையிட்டனர். ‘நடராசன் இங்கு இல்லை’ என அவருடைய தம்பி ராமச்சந்திரன் வாதாடினார். போலீஸ் அதை நம்பவில்லை. நடராசன் வீட்டுக்குள் இருந்து வெளியில் சென்றாலும் சரி... வெளியில் இருந்து வீட்டுக்குள் வர முயன்றாலும் சரி... அவரைக் கைது செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்று பிடிவாதமாக போலீஸும் இருந்தது. ஆனால், அன்று இரவு முழுவதும் ஒன்றும் நடக்கவில்லை. 

ஜூலை 26ல் வந்த தந்தி...

ஜூலை 26-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு ஒரு தந்தி வந்தது. திருப்பதியில் இருந்து நடராசன் பெயரில் கொடுக்கப்பட்டு இருந்த அந்தத் தந்தியில், “இன்று காலை நாளிதழ்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் தலைமறைவாக இருப்பதாகவும் என்னைக் கைது செய்ய போலீஸ் என் வீட்டை முற்றுகையிட்டு இருப்பதாகவும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இன்னும் 3 மணி நேரத்தில் நான் உங்கள் முன்னால் சரண் அடைவேன். அப்போது என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நடராசன் தந்தியைக் கொடுத்து நம்மைக் குழப்பிவிட்டு, நீதிமன்றத்தில் சரண் அடையப்போகிறார் என்று போலீஸ் உஷாரானது. நடராசன் நீதிமன்றத்துக்குள் போவதற்கு முன் அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று போலீஸ் குறியாக இருந்தது. உடனடியாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தைச் சுற்றி 500 போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டனர். மணி பகல் 11.15 இருக்கும்போது, டிரக்ஸ் ஜீப் ஒன்று வேகமாக நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றது. ஒட்டுமொத்த போலீஸ் படையும் ஜீப்பை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயன்றது. அதையும் மீறி நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற ஜீப்பின் முன் ஒரு போலீஸ்காரர் படுத்துவிட்டார். அதன்பிறகு வேறு வழியின்றி அதிலிருந்து இறங்கிய நடராசனும், அவருடைய வழக்கறிஞர் ராமகிருஷ்ணபாபுவும் விறுவிறுவென நீதிமன்றத்தை நோக்கி ஓடினர். ஏறத்தாழ நடராசன் நீதிமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். ஆனால், அங்கு அவரை மறைத்த போலீஸ் குண்டுகட்டாக வெளியே தூக்கி வந்தனர். நடராசனின் முகம் பதட்டத்தில் வெளிறிப் போனது. கண்கள் சிவந்து காணப்பட்டன. “நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை இப்படிக் கைது செய்வது தப்பு” என்று கூச்சல் போட்டார். அதன்பிறகு போலீஸிடம் ஆத்திரத்தைக் காண்பித்த நடராசன் “என்னைக் கைது செய்வதற்கு, வாரண்டை காமிங்க” என்றார். “அதெல்லாம் எங்களிடம் இல்லை. நீங்கள் வேனில் ஏறுங்கள்” என்றார் டெபுடி கமிஷ்னர் ராஜேந்திரன்.

நீதிமன்றத்துக்கு வரும் நடராசன்

அந்த நேரத்தில் உதவி கமிஷ்னர் பன்னீர்செல்வம், நடராசனின் சட்டையைப் பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முயன்றார். உடனே கொதித்துப் போன நடராசன், “பன்னீர்செல்வம் நீ அத்துமீறி நடந்துக்கிற... பயங்கர விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று அரட்டினார். அதில் கொஞ்சம் ஜெர்க்கான பன்னீர்செல்வம், ஒதுங்கிக் கொண்டார். அதன்பிறகு அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலர், “அண்ணே.. நாங்கள் இருக்கிறோம்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம். தைரியமாகக் கைதாகுங்கள்” என்று கெஞ்சியது புதுக்கதையாக இருந்தது. ஆனால், இதுபோன்ற பல அதிர்ச்சிகளை அடுத்து நீதிமன்றம் சந்திக்க இருந்தது. அதன்பிறகு வேனில் ஏறிய நடராசன் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு மதியம் மூன்று மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார். போலீஸ் ஜீப்பின் முன் சீட்டில் உட்காந்து கை காட்டிக் கொண்டு வந்த நடராசன், ‘நல்லா படம் எடுங்க’ என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டே நீதிமன்றத்துக்குள் போனார். மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசன், மாலை 3.50 மணிக்கு வந்து நடராசன் வழக்கை முதல் வழக்காக எடுத்துக் கொண்டார். ஊர், பெயர், தந்தை பெயர் உள்ளிட்ட விபரங்களைப் பதிவு செய்த நீதிமன்ற ஊழியர், அதன்பிறகு நடராசனின் மனைவியின் பெயரை அவரைக் கேட்காமலே சசிகலா என்று எழுதிக் கொண்டார். அதைப் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்த நடராசன், தன் வாக்குமூலத்தை ஒரு மேடைப் பேச்சாளரின் பிரசங்கத்தைப் போல பொழிய ஆரம்பித்தார். 

நான் குற்றவாளி அல்ல!

“நான் குற்றவாளி அல்ல; என் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீஸ்காரர் யதுகுலதிலகன்தான் குற்றவாளி. என் மீது பொய் வழக்குப் போட்டு என்னைப் போலீஸ் கைது செய்துள்ளது. அதுவும் நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை, நீதிமன்றத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி கைது செய்துள்ளனர். எனவே இந்த மாமன்றம் விரும்பி என்னை 30 ஆண்டுகள் சிறையில் இருக்கச் சொன்னாலும் நான் இருக்கிறேன்-நெல்சன் மண்டேலாவைப்போல” என்று உரையாற்றியதைப் பார்த்த, மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசனே கொஞ்சம் ஆடித்தான் போனார். 

நீதிமன்றத்தில் அரங்கேறிய சோக நாடகம்

நீதிமன்றத்தில் நடராசன்

நடராசனின் வாக்குமூலத்துக்குப் பிறகு, மாஜிஸ்திரேட்டுக்குச் சோதனைகள் ஆரம்பித்தன. நடராசனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள்களுக்கு ரிமாண்ட் செய்தார். அதை எதிர்பார்க்காத நடராசன், கொஞ்சம் ஆடிப் போனார். அதையடுத்து ஏற்கெனவே தயாராக வரவழைக்கப்பட்டு இருந்த நடராசனின் ஆள்கள் கூச்சல் போட ஆரம்பித்தனர். வழக்கறிஞர்கள் சிலரும் கூச்சல் போட்டனர். அதையடுத்து மாஜிஸ்திரேட்டின் அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், நடராசனை ஜாமீனில் வெளியிட வேண்டும். இல்லையென்றால், இங்கிருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொள்வோம் என்று மிரட்டினர். இன்னும் சில வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட்டின் காலில் விழுந்தனர். மாஜிஸ்திரேட்டின் காலைப் பிடித்துக் கொண்ட சில வழக்கறிஞர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள் சார்’ என்று கெஞ்சியது நீதிமன்றம் அதுவரை காணாத காட்சி. அதற்குப்பிறகு நடந்ததுதான் உச்சகட்ட அதிர்ச்சி. பதிலுக்கு வழக்கறிஞர்கள் காலைப் பிடிக்காத குறையாக, மாஜிஸ்திரேட் டி.ஆர் சீனிவாசன் கெஞ்ச ஆரம்பித்தார். “இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள். நான் இன்னும் இரண்டு மாதத்தில் ரிட்டயர்டு ஆகப்போகிறேன். அரசாங்கத்தில் இருந்து எனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்றார். அதுதான் அதிர்ச்சிகரமான உச்சக்கட்ட கிளைமாக்ஸ். அதன்பிறகு 7 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி வந்து சொன்னால் ஜாமீனில் விடுகிறேன் என்றார். ஆனால், போலீஸ்காரர்கள் விசாரணை அதிகாரி அசிஸ்டென்ட்  கமிஷ்னர் முருகவேலுவைத் தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தனர். ஆனால், கடைசிவரை முருகவேலுவை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரவில்லை. அதன்பிறகு இணை ஆணையர் சவானியுடன் மாஜிஸ்திரேட் பேசினார். ஆனால், சவானி இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது என்ற நழுவிக் கொண்டார். 

மருத்துவமனை நாடகம்!

சைதாப்பேட்டை நீதிமன்றமும் சப்-ஜெயிலும் ஒரே இடத்தில்தான் இருக்கின்றன. சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்குக் கொண்டுவரப்பட்ட நடராசன்நடராசன், 10 நிமிடங்கள் கூட இருந்திருக்கமாட்டார். வலது கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “நெஞ்சுவலி” எனக் கத்த ஆரம்பித்தார். எல்லா வேலைகளையும் முடித்து அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஜெயில் சூப்பிரண்டுக்கும் மற்ற போலீஸ்காரர்களுக்கும், நடராசனின் கூச்சலைக்கேட்டதும் அவர்களுக்கே நெஞ்சு வலி வந்துவிட்டதைப் போல உணரத் தொடங்கினர். நடராசன் புதுக் குழப்பத்தை உருவாக்குகிறார் என்று புரிந்து கொண்டனர். ஆனால், அவர்களுக்கு டாக்டரை வரவழைத்து செக்கப் செய்யும் அதிகாரம் சப்-ஜெயிலருக்குக் கிடையாது. அதனால், நடராசனை வேனில் ஏற்றி சென்ட்ரல் சிறைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர் நடராசனைப் பரிசோதித்துவிட்டு, “எல்லாம் நார்மலாக்கத்தான் இருக்கிறது” எனத் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைக்கேட்டு கோபமடைந்த நடராசன், “நீங்கள் என்ன படிச்சருக்கீங்க... என் இதயத்துடிப்பு அப்-நார்மலாக இருக்கிறது உங்களுக்குத் தெரியவில்லையா? நல்ல இதயத் துடிப்பு நிபுணரை வரவழைத்து செக்கப் செய்யுங்கள்” என்றார்.

அதன்பிறகு நடராசனை ஜி.ஹெச்சில் அட்மிட் செய்ய முடிவெடுத்தனர். அப்போது நேரம் இரவு 1 மணி. ஜி.ஹெச்சில் இருந்த நடராசன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு நீதிபதி சிவப்பா, நடராசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நடராசன் வெளியில் என்ன செய்துகொண்டாலும், எவ்வளவு சம்பாதித்துக் கொண்டாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அரசியலுக்குள் அவர் வரக்கூடாது. அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அதில் மட்டும் ஜெயலலிதா கவனமாக இருந்தார். ஏனென்றால், பாம்பறியும் பாம்பின் கால். அதனால், “நான் தான் அடுத்த வாரிசு.. நான் தான் ஆட்சியை நடத்துகிறேன்” என நடராசன் பேசுவதை எல்லாம் ஜெயலலிதா எப்போதும் விரும்பியதில்லை.

ஆனால், ஜெயலலிதா விரும்பாததை நடராசன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அதில் உச்சகட்ட சலிப்பும் வெறுப்பும் அடைந்த ஜெயலலிதா சசிகலாவிடம் இதுபற்றி பேசினார். சசிகலாவின் சம்மதத்தைப் பெற்ற பிறகே, நடராசனைக் கைது செய்யும்  திடமான முடிவெடுத்தார். “உன் கணவரைக் கொஞ்சம் அடக்கி வைக்கவே இந்த நடவடிக்கை. அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை” என்று ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிக்கு சசிகலா சம்மதித்தார். தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார் ஜெயலலிதா என சசிகலா நம்பினார். சசிகலாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஜெயலலிதாவும் காப்பாற்றினார். 

கதை தொடரும்... 

http://www.vikatan.com/news/tamilnadu/95276-sasikala-uprising-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---51.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 52 

 
 

சசிகலா, ஜெயலலிதா

ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தது சசிகலா குடும்பம். அந்தப் பிடியை இறுக்கிக் கொள்வதற்கு சசிகலாவும் அந்தக் குடும்பமும் நடத்திய ஜெகஜாலங்கள் ஏராளம்... ஏராளம்! ‘ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்’ என நிரூபிக்க சசிகலாவால் நிகழ்த்தப்பட்ட மாயங்களில் ஒன்றுதான் ‘சுதாகரன் திருமண திமிலோகம்’. 

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் கடைசி மகன் சுதா என்ற சுதாகரன்.  இன்றைக்கு அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரனின் கடைசித் தம்பி. இவற்றை எல்லாம்விட மிகப்பெரிய தகுதி, 30 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்குக் கிடைத்தது. அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழகத்தின் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகன்’ என்ற தகுதிதான் அது. அந்தப் பட்டம் சூட்டப்பட்டதும், சுதாகரனின் வாழ்வில் நிகழ்ந்தவை எல்லாம் கற்பனைக் கதைகளில்கூட கற்பனை செய்ய முடியாதவை.  ஜெயலலிதா அவருக்கு நடத்தி வைத்த திருமணத்தைப் போல வேறோரு திருமணத்தை தமிழகம் அதற்கு முன்பும் கண்டதில்லை; அதற்குப் பின்பும் இதுவரை காணவில்லை. சுதாகரனை பரமபத ஏணிகள் வேகமாக வாழ்க்கையின் உச்சிக்கு ஏற்றிவிட்டன. அதே நேரத்தில் பரமபத பாம்புகள் அவரைக் கொத்திக் கீழிறக்கவும் தவறவில்லை. ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகன்’ பட்டத்தோடு, தமிழகத்தின் முடிசூடா இளவரனைப்போல் வலம் வந்த சுதாகரன், அதன்பிறகு ஹெராயின் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 12 வருடங்கள் அந்த வழக்கைச் சந்தித்த சுதாகரன், சொத்துக்குவிப்பு வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அதில் தண்டனை பெற்ற சசிகலாவுடன், இளவரசி பரப்பன அக்ரஹாரா சிறையில்  இருக்கிறார். அவர்களோடு சேர்த்து அதே சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் சுதாகரன். 

baskaran_sudhakaran_17497.jpg

‘வளர்ப்பு மகன்’ வார்க்கப்பட்ட பின்னணி

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தை ஜெயலலிதாவிடம் இருந்து வெட்டி வைத்தார் சசிகலா. ஆனாலும்கூட, ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது சசிகலாவுக்கு நன்றாகப் புரிந்தே இருந்தது. எந்தநேரத்திலும் ஜெயக்குமார் குடும்பம் ஜெயலலிதா வீட்டுக்குள் வேர்விட்டு துளிர்த்துவிட வாய்ப்பு உண்டு என அவர் அஞ்சிக் கொண்டே இருந்தார். எப்போதும் அது நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தினார். அதற்காக அவர் ஜெயலலிதாவைச் சுற்றிப் போட்ட முள்வேலிதான், ‘வளர்ப்பு மகன்’. அதற்காக தன் உடன் பிறந்த சகோதரி  வனிதாமணியின் மகனைத் தேர்ந்தெடுத்து, தன் உடன்பிறவாச் சகோதரி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கினார். சுதாகரின் அண்ணன் பாஸ்கரனுக்கு தஞ்சையில் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஜெயலலிதாவுக்குத் அங்கு வைத்தே ‘வளர்ப்பு மகன்’ தூபம் போடப்பட்டது. மெல்லிய புன்னகையோடு அதைக் கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, பதில் எதுவும் சொல்லாமல் சென்னை திரும்பிவிட்டார். ஜெயலலிதாவின் மனதைக் கரைக்க, சசிகலா அறியாத வழிகளா? ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்றை வைத்தே ஜெயலலிதாவை மடக்கினார் சசிகலா. “என்னை உடன்பிறவாச் சகோதரி என அறிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள். நான் உங்களுக்குச் சகோதரி என்றால், என் மகனைப்போல் உள்ள சுதாகர், உங்களுக்கும் மகன்தானே. அவரை வளர்ப்பு மகனாக நீங்கள் ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்னை” என்று வாதிட்டார். ஏனென்றால், அதற்குச் சில மாதங்கள் முன்புதான், ‘என் உடன்பிறவாச் சகோதரி சசிகலா’ என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் தஞ்சையில் ஒரு திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சிவாஜியின் பேத்தி சத்திய லெட்சுமியைப் பார்த்த சுதாகரனுக்கு, அவரை மிகவும் பிடித்துப்போனது. சிவாஜியின் மைத்துனர் வேணுகோபால் மூலம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்த வேணுகோபால், சிவாஜியின் தங்கையை மணந்தவர்; சாந்தி தியேட்டர் நிர்வாகத்தைக் கவனித்தவர். அவர் மூலம் சிவாஜியின் வீட்டில் பேச்சு வார்த்தை நடந்தது. ஜெயலலிதாவோடு சசிகலாவின் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. வேணுகோபால் பேச்சுவார்த்தைக்கு சிவாஜியின் குடும்பம் உடன்பட்டது. சசிகலாவின் பேச்சுவார்தையில் ஜெயலலிதாவின் மனம் கரைந்தது; மௌனம் உடைந்தது. 

வளர்ப்பு மகன் சுதாகரன்! 

1995 ஜூன் 12-ம் தேதி சிவாஜியின் தி.நகர் இல்லத்தில் திடீரென போலீஸ் படை குவிந்தது. முதல்வர் ஜெயலலிதா, தன் தோழியோடு சிவாஜி வீட்டுக்கு வரப் போவதாக தகவல்கள் பறந்தன. அதன்படியே ஜெயலலிதாவும் சசிகலாவும் சிவாஜியின் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அன்று மாலை ஜெயலலிதாவின் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் சிவாஜியின் மகள் வயிற்றுப்பேத்தி சத்திய லெட்சுமிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகன்’ சுதாகரனுக்கும் திருமணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் திணிக்கப்பட்டு இருந்த ‘வளர்ப்பு மகன்’ என்ற வார்த்தை அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தின. சசிகலா நிம்மதியானார்; மன்னார்குடி குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. 

கல்யாணம் அல்ல... கட்சி மாநாடு!

marriage_1_17144.jpg

‘‘ஒரு முதல்வரின் மகனுக்குத் திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்தத் திருமணமும் நடக்கும். அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!’’ என தன் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கத் தொடங்கியதுமே அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. ‘எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை முதல்வர் விவரிக்க... விவரிக்க அவர்கள் வாயடைத்துப் போனார்கள். ‘கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரத்துடன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று திகைப்பு ஒருபுறம்... ‘இந்த அளவுக்குத் தேவையா’ என்ற தயக்கம் மறுபுறம். இவற்றைப்போட்டுக் குழப்பிக் கொண்ட அமைச்சர் ஒருவர் தட்டுத் தடுமாறி ஜெயலலிதாவிடம் அதைக் கேள்வியாக எழுப்பினார். அதற்கு, ‘‘ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு! இது திருமணமே அல்ல... கட்சியின் மாபெரும் மாநாடு என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள்!’’ என உத்தரவிட்டு பதில் கொடுத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு மின்னல்வேகத்தில் செயல்பட்டனர் அமைச்சர்கள். மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது.. ரோடு முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று புகுந்து விளையாடத் துவங்கினார்கள் அமைச்சர்கள்! நான்காம் தேதி இரவு மணி பதினொன்றரை! வழக்கமான அணிவகுப்பு ஆர்பாட்டங்கள் இல்லாமல், முன்னும் பின்னும் ஓரிரு கார்கள் தொடர போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர். அவருடன் தோழி சசிகலா இல்லை! அடையாறு சிக்னல் வரை சென்று அங்கிருந்து கடற்கரையில் கண்ணகி சிலை வரை அதிவேகமாக ஒரு முறை சென்றது முதல்வரின் கார்! வரிசையாகச் செய்யப்பட்டிருந்த வண்ண வண்ண ‘சீரியல் செட்’ அலங்காரங்கள், அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வைத்திருந்த கட்-அவுட்கள், சாலை நெடுக அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வரவேற்பு மேடைகளை நேரில் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் ஜெயலலிதா. அடுத்து, திருமணம் நடக்கும் எம்.ஆர்.சி. நகருக்கு விரைந்தார். வழக்கமான வேட்டி, சட்டை, தோள் துண்டு இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் ‘பேண்ட்’ அணிந்து மிடுக்குடன் காத்திருந்தனர்! நாவலர், இந்திரகுமாரி, மதுசூதனன் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்தனர். முதல்வரின் கார் வந்ததும் அதன் பின்னே ஓடித் திருமணம் நடக்கப் போகும் மாபெரும் மைதானத்துக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

மணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள்!

marriage_8_17231.jpg

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐயர் மாந்திரீகத் தகடுகளைக் கொண்டுவந்திருந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் பயபக்தியுடன் வணங்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ பூஜை நடத்தி செய்யப்பட்ட மாந்திரீகத் தகடு என்று சொல்லப்பட்டது. திருவக்கரை கோயிலில் வைத்து மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மணவிழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத்தார்கள். அத்துடன் வைர வைடூரியம் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகியிருக்கிறார்கள்! திருமணம் நடந்த இடம் கடலோரம் என்பதால் கடல் வழியாகத் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தனர். தமிழக அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் கப்பலில் ஏறி, போலீஸ் கடலில் சுற்றி ரோந்து வர ஆரம்பித்தனர். பந்தலை ஒட்டியுள்ள பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மணமேடை ஒரு அரண்மனையின் ராஜதர்பார் போல அமைக்கப்பட்டது. மணமேடையின் வெளிப்புறம்  விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டி முடிக்கப்பட்டன! ஒன்று - முதல்வர் தங்கியிருப்பதற்கான (சகல வசதிகளும் கொண்ட) ஏ.ஸி. மாளிகை! இன்னொன்று சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் தங்குவதற்கு! மூன்றாவது, சிவாஜி குடும்பத்தினருக்கு! இந்த மூன்று மாளிகைகளையும் எப்போதும் போலீஸ் சூழ்ந்து நின்று பாதுகாத்தது! வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளி மாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என விரும்பினார் ஜெயலலிதா! இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைத்தது கல்வித்துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளில் இருந்து மிக அழகான பத்து மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்! அந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்தினர்! 

ராணி வீட்டுக் கல்யாணம்!

jaya_walk_17043.jpg

சாலையெல்லாம் ஒளிவெள்ளத்தில் மிதந்தன! ஜெயலலிதா, சசிகலா உடலெல்லாம் வைரமும் தங்கமும் மின்னின! மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் தகதகவென  கலந்து கொண்டார் ஜெயலலிதா! மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க... சரியாக 6.30-க்கு வந்தார் சுதாகரன்! அந்தக் கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகரன் நிற்க... சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர். சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வளர்ப்புமகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்! 6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம். சந்தனமரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பில் இருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! சட்டம்-ஒழுங்கு காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத்துக்கூட பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது! கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல... அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடிக் கலக்க... தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப்படை அணிவகுத்தது! அதன் பின்னே பார்த்தால் அதிசயம்... ஆச்சரியம்! இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ஜெயலலிதா நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜுவல்லரியாக’ உடல் முழுதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக காட்சியளித்தார். 

கின்னஸ் திருமணம்!

தமிழகத்துக்கே உரிய ‘விசேஷ நிகழ்ச்சிகளுடன்’ களைகட்டியது செப்டம்பர் ஏழு... கல்யாண நாள்! மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அடுத்தடுத்து வந்திறங்க... எம்.ஆர்.சி. நகரில் இருந்த அந்த மாபெரும் திருமண வளாகம் (ப்ளேகிரவுண்ட்) கலகலப்பு பெற்றது. ‘தகதக’க்கும் தங்க நிறத்துடன் மணமேடை மினுங்கியது. பந்தல் மிக நீளமாக அமைக்கப்பட்டதால், முக்கால்வாசிப் பேர் க்ளோஸ் சர்க்யூட் டிவியில்தான் கல்யாணத்தை பார்த்தார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தவர்களில் தலையானவர் தலைமைச் செயலர் ஹரிபாஸ்கர். நாட்டியமாடுவதுபோல் அங்குமிங்கும் ஓடிச் செயல்பட்டவர் பத்மா சுப்பிரமணியம். இடுப்பில் இருந்த ரிவால்வரைத் தொட்டபடியே நடை பழகினார் வால்டர் தேவாரம். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதம் மனைவியுடன் வந்தார் முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீபால். சசிகலாவின் கண்ணசைப்பில் செயல்பட்டவர் இந்திரகுமாரி. தொழிலதிபர்களையும் வி.ஐ.பி-க்களையும் மட்டுமே கவனிக்கும் பொறுப்பு இந்திரகுமாரியுடையது. சசிகலா எங்கு திரும்பினாலும் அங்கே இருந்தார் அவர்.

marriage_7_17560.jpg

யாதவரான பீகார் முதல்வருடன் மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் கண்ணப்பன். ஒவ்வொரு வி.ஐ.பி.க்கள் தன்னைக் கடந்து சென்றபோதும் எழுந்து எழுந்து நின்றார் முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங்.செம்மங்குடி சீனிவாச ஐயர் வந்தபோது யாரும் அவரை வரவேற்கவில்லை. ‘சிவனே’ என்று ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். கமல்ஹாசன் மனைவியுடன் வந்து, சிவாஜி கணேசனையும் மணமக்களையும் பார்த்துப் பேசிவிட்டு, ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாமலேயே போய்விட்டார். திருமண மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் மணமகனின் பெயரை ஒவ்வொரு தடவை உச்சரிக்கும்போதும், தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெ. ஜெயலலிதாவின் மகன் சுதாகரன் என்று கூறினார்கள். ஆனால் செவாலியர், நடிகர் திலகம் என்றெல்லாம் அடைமொழி தராமல் ‘சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தி’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள்.திருமண விழாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி! திருமண மந்திரங்களில் நிறைய திவ்யப்பிரபந்தங்களும் திருக்குறளும் சொல்லப்பட்டதுதான். முகூர்த்தம் பத்தரையில் இருந்து பன்னிரண்டு மணிக்குள், தாலி கட்டியபோது கரெக்டாக மணி பதினொன்று இருபது!‘‘இந்தக் கல்யாண விஷயத்திலேயே மிகக் கவனமாக முதல்வர் ஏற்பாடு செய்தது தொண்டர்களுக்கான சாப்பாடுதான். ஒரே மூச்சில் ஒரே சமயத்தில் பன்னிரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திருமணத்தில் சாப்பிட்டார்கள். இதை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு எழுதி அனுப்பப்போகிறோம்!’’ என்று அமைச்சர்கள் பரமசிவம் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் சொல்கிறார்கள். இவர்கள்தான் சாப்பாட்டுப் பந்தி ஒழுங்காக நடக்கிறதா என்று பார்க்க வேண்டிய முக்கிய இன்சார்ஜ்!

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்... நான்... நான்...

marriage_5_17258.jpg

‘‘உலகிலேயே நடக்காத அளவுக்கு மிக மிக காஸ்ட்லியான ஒரு மொய் விருந்து நடந்தது. வளர்ப்பு மகனுக்குத் திருமணம் என்ற பெயரில் பல ரூபத்திலும் வந்த பரிசுப் பொருட்களை, ஏழாம் தேதி இரவே கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தனர்! தாராளமாக இருநூறு கோடி ரூபாய் தேறும் என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் மிதந்தது சசிகலா குடும்பம்!’’ ‘இப்படி ஒரு திருமணம் நடத்துவதற்காகவே வளர்ப்பு மகனைத் ‘தத்து’ எடுத்தாரா? அல்லது வளர்ப்பு மகனாகச் சுதாகரனை தத்து எடுத்ததால் இப்படி ஒரு ஆடம்பரத் திருமணத்தை நடத்தினாரா?" என்ற சஸ்பென்ஸுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை. மேடைக்கு வந்த பல அரசியல் புள்ளிகளுக்கு வணக்கம் சொல்லிச் சிரித்த முதல்வர், உலகப் புகழ்பெற்ற நடிகரான சிவாஜி கணேசனை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனையவில்லை. முதல் சில நிமிடங்களுக்கு மணமக்களின் இன்னொரு புறம் நின்று பார்த்த சிவாஜி, பிறகு தளர்வுடன் நடந்து தன் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.திருமண சம்பிரதாயங்கள் முடிந்தன. இனி தங்களுக்கு வேலை இல்லை என்று புரிந்ததுமே, சிவாஜி கையசைத்து தன் மனைவியிடம் ஏதோ சொல்ல... ‘பரபர’வென்று மேடையிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டது சிவாஜி குடும்பம். மொத்தத்தில், வெற்றிகரமாக ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று தான் நினைத்ததை மணமேடையிலேயே சசிகலா குடும்பம் அதிரடியாக நிரூபித்துக் காட்டியது.

சுதாகரனுக்கு நடத்திய ஆடம்பரத் திருமணத்தின் மூலம் சசிகலா குடும்பத்தோடு மேலும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு இருந்தார். ஆனால், மக்கள் அவர் மீது வைத்திருந்த இறுக்கமான பிணைப்பை அந்த நேரத்தில் அறுத்துவிட்டு இருந்தனர். 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/98029-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---53.html

Link to comment
Share on other sites

  • 2 months later...

1996-ல் சசிகலா சிறை சென்றபோது என்ன நடந்தது? சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 53

 

சசிகலா, ஜெயலலிதா

டெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை! 
அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே  புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா! 

 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலாவையும் அவரது குடும்ப உறவுகளையும் அரணாக நிறுத்தித்தான், ஜெயலலிதா அரசியல் வெற்றிகளைப் பெறத் தொடங்கினார். ஜெ-சசி உறவைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அதைத் தெரிந்து வைத்திருந்தனர். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளும் அந்த வியூகத்தைப் புரிந்து வைத்திருந்தனர். அதனால், ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமானால், சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் முதலில் குறி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக விதியாக இருந்தது. அதற்கு வசதியாக சசிகலாவின் குடும்பம் தவறுகளையும், ஊழல்களையும், சொத்துக்களையும் மூட்டை மூட்டையாக, கத்தை கத்தையாக கட்டியே வைத்திருந்தது. அதன்விளைவுதான், இன்றும் சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாராவில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்கள் இன்று இப்படி இருப்பதற்குப் பின்னால், டெல்லி இருப்பது எல்லோரும் அறிந்ததே! இல்லையென்றால், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தூசி படிந்துகிடந்த சொத்துக்குவிப்பு வழக்கை, சசிகலா முதலமைச்சராகப் பதவி ஏற்கப்போன நேரத்தில் தூசி தட்டி தீர்ப்புச் சொல்லி இருக்கமாட்டார்கள்! 

சசிகலா

மத்தியில் பி.ஜே.பி அரசாங்கம் இருக்கும் இன்றைய தேதியில் சசிகலா குடும்பம் சந்தித்துக் கொண்டிருக்கும் சோதனையை, மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் இருந்தபோதும் சசிகலா குடும்பம் சந்தித்தது. இப்போது பிரதமர் மோடி; நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அப்போது பிரதமர் தேவேகௌடா; நிதியமைச்சர் ப.சிதம்பரம். இப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தினகரனும், பாஸ்கரனும் வழக்கு வாய்தா என்று அலைந்து கொண்டிருக்கின்றனர். அப்போது-அதாவது 95-ன் இறுதியில்-பாஸ்கரன், தினகரன், சசிகலா, சசிகலாவின் கணவர் நடராசன் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதாகரன், இளவரசி வழக்கு வாய்தா என்று அலைந்து கொண்டிருந்தனர். அன்று சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்தக் குடும்பம், அந்த நேரத்தில் காட்டிய விசுவாசம்தான், அவர்களை அடுத்த 25 ஆண்டுகள் கட்சியைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுத்தது. ஆட்சியில் அதிகாரம் செய்யும் ஆதிக்கத்தைக் கொடுத்தது! 

பாஸ்கரன்-தினகரன் கைது! 

சசிகலாவின் குடும்பத்தில் முதன்முதலில் பணமோசடிக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர் பாஸ்கரன். 1995 செப்டம்பர் 21-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பாஸ்கரன் அப்போது ஜெ.ஜெ டி.வியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அந்த டி.வியின் ஒளிபரப்புக்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு பணம் கொடுத்ததில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில்தான் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பாஸ்கரனுக்கு அந்த வழக்கில், ஜாமீன் கிடைப்பதற்குள் அவருடைய அண்ணன் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், உரிய அனுமதி இல்லாமல் சுமார் 65 கோடி ரூபாயை வெளிநாட்டில் அவர் முதலீடு செய்த குற்றச்சாட்டில் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதோடு காபிபோசா சட்டத்தின் கீழும் அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பாஸ்கரன், தினகரன் கைது செய்யப்பட்ட வழக்குகளில் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அ.தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்ததால், சசிகலா அதைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, தன் பதிலைச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்து கொண்டார். ஆனால், அந்த நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் வந்து அ.தி.மு.கை துடைத்தெறிந்தது. தி.மு.க, த.மா.க, ரஜினி வாய்ஸ் கூட்டணிபோட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சி அமைந்தது. கருணாநிதி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, சசிகலாவை நோக்கி அமலாக்கத்துறையின் பிடி இறுகத் தொடங்கியது. மத்தியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல், வேலைகளை வேகப்படுத்தினார். காரணம் அப்போது ப.சிதம்பரம் , ஜெயலலிதா மீது ஜென்ம விரோதம் கொண்டிருந்தார்.

திருச்சியில் வைத்து ப.சிதம்பரம் தாக்கப்பட்டது, அதன்பிறகும் விடாமல் ஜெயலலிதா சிதம்பரத்துக்குக் கொடுத்த குடைச்சல்களால் அவர் கொதித்துப் போய் இருந்தார். ஜெயலலிதா மீதான அவருடைய அந்தக் கோபம், சசிகலா குடும்பத்தின் மேல் திரும்பியது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே சிதம்பரத்தின் கோபம் வெளிப்பட்டது. அவர் பேசிய இடங்களில் எல்லாம், சசிகலா குடும்பத்தின் சொத்துக்களைப் பட்டியல் போட்டுத்தான் ஜெயலலிதாவை உலுக்கி எடுத்தார். அவர் வெற்றி பெற்று மத்திய நிதியமைச்சரானதும் விடுவாரா? பாஸ்கரன் கைதில் தன் ஆட்டத்தை ஆரம்பித்து, பிறகு தினகரனை வளைத்துப் பிடித்து, சசிகலாவை சிறையில் அடைத்து, ஜெயலலிதாவை சிக்க வேண்டும் என்று வேலைகள் நடந்தன. 

பாஸ்கரன் விசாரணைக்கு வந்தபோது

பாஸ்கரன் கைது செய்யப்பட்டது ஜெ.ஜெ டிவி வழக்கு. அதில் பெரா சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.  பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தியபோது, ஒரு பேக்ஸ் நகல் சிக்கியது. அது மணிலாவில் இருந்து பாஸ்கரன், சசிகலாவுக்கு அனுப்பியது.  அதில் ‘அன்புள்ள சித்தி’ என்று ஆரம்பித்து, ‘கோலாலம்பூர் ராஜூ மூலம் ஜெ.ஜெ டிவி ஒளிபரப்புக்கான பணம் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று பாஸ்கரன் குறிப்பிட்டு இருந்தார். அந்தச் சித்தி சசிகலா என்பதில் யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை! அதனால், அந்தப் பணப் பரிவர்த்தனை பற்றி, ‘தனக்கு எதுவும் தெரியாது’ என சசிகலாவால் மறுக்க முடியவில்லை. அதன் அடிப்படையில் பெரா சட்டம் 8(1)-ன்படி சசிகலாவின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜெ.ஜெ.டிவிக்கு மற்ற உதிரிபாங்கள் வாங்க 1 லட்சத்து 36 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட்ட விவகாரமும் அமலாக்கத்துறையிடம் சிக்கியது. அதுகுறித்து சிங்கப்பூர் ராமச்சந்திரனுக்கு பாஸ்கரன் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘இந்தத் தொகையை சித்தி உங்களிடம் கொடுக்கச் சொன்னார்’ என்று பாஸ்கரன் குறிப்பிட்டு இருந்தார். 

தினகரன் கைது செய்யப்பட்டது, சென்னை அபிராமபுரம் வங்கியில் ஆர்.சுசீலா என்பவர் பெயரில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு இருந்தது. அதில், சுசீலா பெயரில் 3 கோடியே 29 லட்சம் ரூபாய் சிங்கப்பூரின் பினாங்கு நகரில் இருந்து வந்ததாக டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அதைக்காட்டி அதே வங்கியில் ‘பரணி பீச் ரிசாட்ஸ்’ என்று நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டு இருந்தது. அந்த ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவும் ஒரு பங்குதாரர். அந்தக் கடனில் வாங்கப்பட்டதுதான் கொடநாடு டீ எஸ்டேட். இது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வித்தை என்று அமலாக்கத்துறை சட்டங்களைக்காட்டி குற்றம் சாட்டியது. வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ-க்கள் சொல்லும் ஆட்களுக்கு சசிகலா தனது கறுப்புப் பணத்தை இந்தியாவில் கொடுத்துவிடுவார். அதற்கு இணையான தொகையை, வெளிநாட்டில் வசிப்பவர்கள் டாலரில் டி.டி. எடுத்து சசிகலாவுக்கு அனுப்பி விடுவார்கள். இப்படி வரும் தொகையை அந்த என்.ஆர்.ஐ-க்கள் பெயரிலேயே வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் வங்கிகளில் லோன் வாங்குவதும், சொத்துக்கள் வாங்குவதும் நடந்தன. இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது அமலாக்கத்துறை! பாஸ்கரன், தினகரன் கைது செய்யப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சசிகலாவுக்குச் சம்பந்தம் இருந்ததை ஆவணங்கள் உறுதி செய்தன. 

நான் போகிறேன் அக்கா...
 
1996  ஜூன் மாதம் 20-ம் தேதி அதற்கு நாள் குறிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் மோப்பம் பிடித்துவிட்ட நடராசன், சசிகலா கைதைத் தடுக்க 10 நாட்களுக்கு முன்பே டெல்லியில் போய் முகாமிட்டார். அங்கு அவர் அதிகம் நம்பியது முன்னாள் உத்தரபிரதேச முதல்வர் முலாயம்சிங் யாதவ் மூலம் காய் நகர்த்தினார். காரணம், அன்றைய தேவேகௌடா அரசாங்கத்தில், முலாயம்சிங் யாதவ் ராணுவ அமைச்சராக இருந்தார். அவர் மூலம் ப.சிதம்பரத்தின் கோபத்தைத் தணிக்கலாம் என திட்டமிட்டார் நடராசன். முலாயம்சிங்கும் நடராசனுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்தார்; ப.சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரின் கோரிக்கையை மறுத்த சிதம்பரம், “அந்தக் குடும்பம் தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம்... உங்களுக்கு முழுமையாகத் தெரியாது; அதனால்தான் என்னிடம் அவர்களுக்காகப் பேசுகிறீர்கள். நான் தேர்தல் வேட்பாளராக இருந்தபோதே, அதிகம் விமர்சித்தது, சசிகலாவின் குடும்பத்தைத்தான்; கேள்வி கேட்டது அவர்கள் சம்பாதித்த சொத்துக்களைப் பற்றித்தான்; இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் நான்தான் இருக்கிறேன்; நானே அவர்களைத் தப்பிக்கவிட்டால் தமிழகத்தில் என்னைப்பற்றி என்ன பேசுவார்கள்?” என்று கறாராகக் கையை விரித்துவிட்டார். அதன்பிறகு நடராசன் ஒரு முடிவுக்கு வந்தவராய், சென்னை திரும்பினார். “சசிகலாவை அமலாக்கத்துறை கைது செய்ய வருவதற்கு முன், நாமே அவரை அமலாக்கத்துறையிடம் ஆஜர்படுத்தி, வழக்கைச் சந்திக்கலாம்” என்பதுதான் நடராசனின் திட்டம்; சசிகலா அதற்குச் சம்மதித்தார்; ஜெயலலிதா தவித்துப் போனார்!

தடுத்த ஜெயலலிதா... தவிர்த்த சசிகலா!  

சசிகலா கைது செய்யப்பட்டபோது

நடராசன் திட்டத்தை சசிகலா, ஜெயலலிதாவிடம் சொன்னார். ஆனால், ஜெயலலிதாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. “பிரதமர் தேவேகௌடாவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொறு சசி” என சசிகலாவுக்குச் சமாதானம் சொன்னார் ஜெயலலிதா. அந்த நேரத்தில், ‘ஜெயலலிதாவுக்குச் சாதகமான சூழல் டெல்லியில் இல்லை’ என்பது சசிகலாவுக்குப் புரிந்தது. அதனால், “இல்லை அக்கா... அவர் வந்து அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லிருக்கார்... நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது” என்று சொல்லிவிட்டு அமலாக்கத்துறையிடம் ஆஜராகக் கிளம்பினார். நடராசனும் சசிகலாவோடு கிளம்பினார். அந்த நேரத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதுவும் கில்லாடி நடராசனின் திட்டம்தான். ஒருவேளை பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பெரிதாகி, சசிகலாவின் ஆஜர் விவகாரம் சிறிதாகும் என்பது அவர் எண்ணம். அன்று காலை, 11.05 மணிக்கு சசிகலா, ஜெயலலிதாவுக்கு ராசியான பச்சைக் கலர் புடவை-ஜாக்கெட் அணிந்து அமலாக்கத்துறை பிரிவு விசாரணைக்கு வந்தார்.

இரண்டு கண்டஸா கார்கள், இரண்டு அம்பாசிடர் கார், ஒரு டாடா சுமோவில் சசிகலாவின் குடும்பம் அவருக்கு அரணாக வந்தது. சசிகலாவும் நடராசனும் கண்டஸா காரில் வந்தனர். அவர்களோடு சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன், விநோதகனின் மகன் மகாதேவன், நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன், மைத்துனர் காளிதாஸ், வழக்கறிஞர்கள் ஜீனசேனன், தளவாய் சுந்தரம், போஸ் உள்ளிட்டவர்கள் வந்தனர். சசிகலா காரைவிட்டு இறங்கியபோது அவரை அணைத்துக் கொண்டு சென்றார் நடராசன். அதன்பிறகு ஜெ.ஜெ டி.வி-க்கு வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கியது, அபிராமபுரம் வங்கியில் பல கோடி ரூபாய் வெளிநாட்டுப் பணம் முதலீடு செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களைக் கேட்டு, 9 பக்கம் அறிக்கை தயார் செய்யப்பட்டது. எழுத்துப்பூர்வமாக அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார் சசிகலா. இரவு சுமார் ஒன்பதே முக்கால் மணிக்குத்தான் சசிகலாவிடம் விசாரணை முடிந்தது. அதன்பிறகு, “உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் உங்களை நாங்கள் கைது செய்கிறோம்; மற்றபடி உங்களுக்கான உரிமைகள் அனைத்தும் கொடுக்கப்படும்” என்றார் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அதைக்கேட்ட சசிகலா லேசாகக் கலங்கி அழுதார். 

சசிகலா, நடராசன் கைது! 

சசிகலா, தினகரன், நடராசன்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சசிகலாவை ஏற்றிச் சென்ற ஜீப்பில், அப்போதைய அமைச்சர் இந்திரகுமாரியும் ஏறிக் கொண்டார். அந்தநேரத்தில் அதைப் படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை நடராசனின் ஆட்கள் தாக்கினர். அதில் நடராசன் மீது பத்திரிகையாளர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், நடராசனை விசாரணை செய்ய சென்னை மாநகர இணை போலீஸ் கமிஷ்னர் அமித்வர்மா அழைத்துச் சென்றார். நடராசன் ஏற்றப்பட்ட ஜீப் அண்ணாநகர் நோக்கிப் போனது. சசிகலா ஏற்றப்பட்ட ஜீப் சூளைமேட்டுக்குப் போனது. காரணம், இரவாகிவிட்டதால் மஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சசிகலாவை ரிமாண்ட் செய்வதற்காக அங்கு கொண்டு போனார்கள். மாஜிஸ்திரேட் சசிகலாவை 15 நாட்கள் ரிமாண்ட் செய்வதாக அறிவித்தார். அதைக் கேட்டதும் மயக்கம் வந்தவரைப் போல் சசிகலா அங்கிருந்த பெண் காவலர்களின் தோளில் சாய்ந்தார். மேலும், அப்போதே சசிகலாவுக்கு கண்ணில் பிரச்னை இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் சசிகலாவின் வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர். அப்போது சசிகலா மாஜிஸ்திரேட்டிடம் வந்து, “என் கண்ணில் 20 தையல் போடப்பட்டுள்ளது. அதனால், வழக்கமாக என்னைப் பரிசோதிக்கும் டாக்டர்கள்தான் இனியும் எனக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கேட்டார். அதைக் கேட்ட மாஜிஸ்திரேட், “சிறை அதிகாரிகள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார். 

சிறையில் சலுகைகள்! 

அதன்பிறகு சசிகலா சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறைக் கண்காணிப்பாளராக இருந்த ராஜ்குமார், சிறையில் நகைகள் அணிய அனுமதி இல்லை என குறிப்பிட, “என் நகைகள் காணாமல் போனால்கூட நான் புகார் சொல்லமாட்டேன். ஆனால், நகைகள் என்னிடமே இருக்கட்டும்” என்று குறிப்பிட, அதன்பிறகு அதிகாரிகள் பொறுமையாக சிறை விதிகளை எடுத்துச் சொல்லி உள்ளனர். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த சசிகலா, “என்ன விதி? யார் சொன்னது? உங்க சி.எம்-கிட்ட வேண்டும் என்றாலும் நான் பேசுகிறேன்’’ என்று பிடிவாதம் பிடித்துள்ளார். அதன்பிறகு அதிகாரிகள் பேசிப்புரிய வைத்ததும், “அவரே தன் கையில் இருந்த வளையல், காதில் இருந்த தோடு, கழுத்தில் இருந்த செயினைக் கழற்றிக் கொடுத்துள்ளார். அந்த நகைகள் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மூலம் போயஸ் தோட்டத்துக்குச் சென்றன. அதன்பிறகு அப்போது இருந்த ராஜ்குமார் சசிகலாவுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுத்தார். ஜெயலலிதாவும் சசிகலாவும் கோலேச்சிய அ.தி.மு.க ஆட்சியில், தினகரன் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என அந்த ராஜ்குமார் தூக்கியடிக்கப்பட்டவர் என்பது தனிக்கதை! நடராசன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரத்தில், ஜெயலலிதாவின் வளர்பபு மகனும், சசிகலாவின் அக்காள் மகனுமான சுதாரகனுக்கும் அமலாக்கத்துறை ஒரு சம்மனை அனுப்பியது. அவர் விசாரணைக்குப் போய்க்கொண்டு இருந்தார். 

ஜெயலலிதாவிடம் சசிகலா சொன்ன ரகசியம்! 

ஜூன் 21-ம் தேதி, சசிகலாவைச் சிறையில் போய்ச் சந்தித்தார் ஜெயலலிதா. உணர்ச்சிகரமான அந்தச் சந்திப்பு அப்போதைய சிறைக் கண்காணிப்பாளர் அறையில் நடந்தது. சசிகலாவைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கறாராகச் சொன்னதால் அந்த ஏற்பாடு. ஏ.சி. இல்லாத கண்காணிப்பாளர் அறையில் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தார் ஜெயலலிதா. தனியாகச் சந்திக்க வேண்டும் என்றாலும், யாராவது ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பது சிறை விதி. அதனால், சிறைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் மட்டும் ஜெ.-சசி சந்திப்பில் உடன் இருந்தார். சசிகலாவைக் கண்டதும், கதறி அழுதுவிட்டார். அதற்குச் சாட்சியாக அமர்ந்திருந்தவர் ராஜ்குமார். உணர்ச்சிகரமான அந்தச் சந்திப்பில் மேலும் வலுப்பட்டது ஜெ.-சசி நட்பு. காரணம், அப்போது ஜெயலலிதாவிடம் சசிகலா சொன்ன ரகசியம்தான். அதைக்கேட்டதும் ஆடிப்போனார் ஜெயலலிதா. இனி எந்த நிலையிலும் சசிகலாவைவிட்டுப் பிரியக்கூடாது என்று ஜெயலலிதா முடிவெடுத்த அந்தத் தருணம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று! 

ஜெயலலிதாவிடம் சசிகலா சொன்னது என்ன? 

தொடரும்... 

http://www.vikatan.com/news/coverstory/104904-sasikala-arrested-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---53.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.