Jump to content

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!


Recommended Posts

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - புதிய தொடர்

 

சசிகலா

ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது; கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம்; கேட்பது எரிச்சலாக இருக்கலாம்; புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், ஜெ. - சசி நட்பின் வரலாற்றில், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருந்தார். இந்த உணர்வுக்கடத்தல்தான், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு, உடலைவிட்டுப் பிரியும்வரை, சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம். 

34 ஆண்டுகளுக்கு முன், கடலூரில் ஜெ. - சசியின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு, பார்த்தால் புன்னகைக்கும் அறிமுகமாக மாறியது; அந்த அறிமுகம், ஜெ. - சசி நட்பாக வளர்ந்தது; அந்த நட்பு, ‘சசிகலா என் உடன்பிறவா சகோதரி’ என்று ஜெயலலிதாவை அறிவிக்கத் தூண்டியது; அந்த அறிவிப்பே, “சசிகலாவைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்ற முடிவுக்கு, ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவைத் தள்ளியது. கடலூரில் ஏற்பட்ட ஜெ. - சசி சந்திப்பின் வரலாறு, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட 34 வருடங்களில் நடந்தது என்ன? 

ஜெயலலிதாவின் வாழ்வில், கடினமான காலகட்டங்கள் உருவானபோது, சசிகலாவின் நட்பு, ஜெயலலிதாவுக்கு அரணாக நின்றது; எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், ரத்தக்களறியாய் கிடந்த, அரசியல் களத்தின் துரத்தல்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. வாழ்நாளின் இறுதிவரை, அபினைப் போல் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் அளித்தது. எதிர்திசையில் பார்த்தால், ஜெயலலிதாவின் நட்பு சசிகலாவுக்கு கோடிகளைக் கொட்டும் பம்பர் பரிசாய் அடித்தது; பொதுவில் அதிகமாய் தலைகாட்டாத சசிகலாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்யும் சக்தியைக் கொடுத்தது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவுக்கு, ‘நிழல்’ தலைவராக வலம்வரும் வாய்ப்பை வழங்கியது. அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் அமராத சசிகலாவுக்கு, ‘நிழல்’ முதல்வராக ஆணையிடும் அதிகாரத்தைக் கொடுத்தது. அது எப்படி? 

286392_10116.jpg

இந்த வாய்ப்பைத் தக்கவைக்க, ஜெயலலிதாவின் பக்கம் இருந்த மற்ற காய்களை, சசிகலா கவனமாக வீழ்த்திக்கொண்டே இருந்தார். தன்னைத்தவிர... தன் குடும்பத்தைத்தவிர, ஜெயலலிதாவின் பக்கம், வேறு யாராவது சேர நினைத்தாலே... அவர்களைக் களையெடுத்துவிடுவார் சசிகலா. அதில், ஒருபோதும் சசிகலா அஜாக்கிரதையாக இருந்தது கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்கும், தயவுதாட்சண்யமே பார்க்கமாட்டார். சசிகலாவின் இந்த வியூகத்தால், ஜெயலலிதா யாரும் இல்லாதவர் ஆனார். வலம்புரிஜான், சசிகலா பற்றி ஒருமுறை குறிப்பிட்டபோது, “மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் மட்டும் சசிகலா இருந்திருந்தால், வெள்ளைக்காரனே இந்தியாவுக்குள் காலடி வைத்திருக்க முடியாது” என்றார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சசிகலாவை இப்படிக் கணித்திருந்தார். தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை என்பதை காலம் நிரூபித்தது. அப்படி சசிகலா வீழ்த்திய காய்கள் யார்... யார்? 

ஜெ. - சசி நட்பால், தமிழகம் சந்தித்த வரலாற்றுச் சோதனைகள் என்ன... ஜெ. - சசி குவித்த சொத்துக்களின் பின்னணி என்ன.... தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இருந்தும், விளாரில் இருந்தும் புற்றீசல்போல் கிளம்பிய சசிகலாவுடைய உறவுகளின் வரலாறு என்ன... 34 வருட ஜெ. - சசி நட்பின் பயணத்தில் மொத்தமாக சசிகலா செய்தது என்ன... செய்யாமல் தவிர்த்தது என்ன... இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பின்னாலும், ‘ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது’ என்று சொல்லப்படுவது எதன் பொருட்டு, அத்தனைக்கும் பதில் சொல்கிறது, ‘சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!’ 

நாளை முதல்...

http://www.vikatan.com/news/coverstory/74533-how-sasikala-became-bestie-of-jayalalithaa-new-series.art

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் - கருணாநிதி நடத்திவைத்த திருமணம்!

 

sasikala_001_12373_17537.jpg

 

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் - கருணாநிதி நடத்திவைத்த திருமணம்!

ஜெயலலிதா

ராமநாதபுரம் டூ மன்னார்குடி  

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு சரியான பிழைப்பு இல்லை. அதனால், வறட்சி மிகுந்த ராமநாதபுரத்தைவிட்டு, சந்திரசேகரன் பிள்ளை வளமான தஞ்சை நோக்கி இடம்பெயர்ந்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ‘ஜாகை’ ஏற்படுத்திக் கொண்டு, அங்கும் தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தையே தொழிலாகச் செய்தார்.  சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன், ஒரு படி மேலே போய், ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ வைத்தார். அப்போது எல்லாம், இங்கிலீஷ் மருந்துகள் விற்கும் ‘மெடிக்கல் ஷாப்’கள் அரிதிலும் அரிது. அதனால், விவேகானந்தன் வைத்து நடத்திய, ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ திருந்துறைப்பூண்டியில் பிரபலமானது. அந்தப் பிரபலம்,  விவேகானந்தனின் வீட்டோடும் ஒட்டிக்கொண்டது.  ‘இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ என்று அவருடைய வீடும் அந்த ஊரில் பிரபலமானது.  மிராசுதாரர் விவேகானந்தன், கிருஷ்ணவேணி என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு, சுந்தரவதனம், வனிதாமணி, விநோதகன், ஜெயராமன், சசிகலா, திவாகரன் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தனர். 5-வது பிள்ளை சசிகலாதான், பின்னாளில் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியானவர்; தமிழக ஆட்சியதிகாரத்திலும், அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்திலும், நம்பர் 2-ஆக  வலம்வந்தவர்.   

திருத்துறைப்பூண்டியில் இருந்த விவேகானந்தன், பிள்ளைகளின் படிப்புக்காக மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தார். காரணம், மன்னார்குடியில்தான் அப்போது, ஆங்கிலேயேர்களால் நிறுவப்பட்ட ‘பின்லே’ போர்டு ஹை ஸ்கூல் இருந்தது. சசிகலா அந்தப் பள்ளியில்தான் படித்தார். பள்ளி நாட்களில் ஓட்டப்பந்தயங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு இருக்கிறார். சில பரிசுகளையும் வாங்கி உள்ளார். மாணவர் மன்றத்தில் பங்களித்துள்ளார். ஆனாலும் பத்தாம் வகுப்போடு சசிகலாவின் படிப்பை வீட்டில் நிறுத்திவிட்டனர். 

11_14556.jpg

‘விளார்’ ஏற்படுத்திய திருப்புமுனை

மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கையாக, சாதரண கனவுகளுடன் இளம் பெண்ணாக திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிகலா. அவரது வாழ்வை அதிகாரமையங்களுக்கு அருகில் கொண்டுவரக் காரணமாக அமைந்தது ‘விளார்’ என்ற ஊர். தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன். அவருடைய மகன் நடராஜன். 60-களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டெரிந்து, தீயாப் பரவிக் கொண்டிருந்த திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும்,  அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965-ம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். மொழிப்போராட்டத்தில் நடராஜனின் சமகாலத்தவர்கள்தான், தி.மு.க முதன்மைச் செயலர் துரைமுருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள். அப்போது, இந்தப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற எல்.கணேசனின் ஆஸ்தான சீடராக நடராஜன் வலம்வந்தார்.  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். அந்தவகையில், ‘விளார்’ நடராஜனுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் உதவியாளர் வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. விளார் விவசாயி மருதப்பனின் மகன் நடராஜன், திருத்துறைப்பூண்டி, இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் விவேகானந்தனின் மகள் சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். 1970-ம் ஆண்டு நடராஜன்-சசிகலா திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தராக விளங்கிய, மன்னை நாராயணசாமி தலைமையில், தி.மு.க தலைவர் கருணாநிதி நடராஜன்-சசிகலா திருமணத்தை நடத்திவைத்தார். வரலாற்று விநோதம் இது!

இந்தக் காலகட்டம்வரை சசிகலாவுக்கு, ஜெயலலிதா என்றால் அவர் எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய ஹீரோவோடு சேர்ந்து நடிக்கும் கதாநாயகி. திரைப்படங்களிலும் போஸ்டர்களில் மட்டும்தான் ஜெயலலிதாவைப் பார்க்க முடியும் என்ற மனநிலைதான் இருந்திருக்க முடியும். ஆனால், காலம் அந்த மனநிலையை வேறுவகையில் மாற்ற, எம்.ஜி.ஆர் மூலம் ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது.

அது என்ன.... 

http://www.vikatan.com/news/coverstory/74629-sasikala-married-natarajan-with-the-blessings-of-dmk-chief-karunanidhi.art

Link to comment
Share on other sites

கேசட் கடை டூ போயஸ் கார்டன்.. சசிகலாவுக்கு ரூட் போட்டுக்கொடுத்த சந்திரலேகா! அத்தியாயம் 3

 

sasikala_001_12373_17537_14415.jpg

1980-கள் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார். அந்தக் கட்டளை கட்சிக்காரர்களுக்கானது மட்டுமே. தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாகவும், முதலமைச்சராகவும் இருந்த எம்.ஜி.ஆரின் அந்தக் கட்டளையை சினிமா உலகமும் பின்பற்றத் தொடங்கியது. அதனால், ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தன. இதனால், சினிமா, எம்.ஜி.ஆர் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே, தனக்கான ஆதார மையமாக வைத்திருந்த ஜெயலலிதாவின் உலகம் சுருங்கியது. ஆனால், அவர் முடங்கிவிடவில்லை. நாடகங்கள் போட்டார். நடித்துக் கொண்டிருந்தார். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனாலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக மிக சிரமமான காலகட்டமாகவே அது இருந்தது.அது கட்சியின் சீனியர்கள் சிலருக்கு ஜெயலலிதா மீது ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

அந்த நேரம் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நிறைய நாடகங்களும் இடம்பெற்றன. ‘காவிரி தந்த கலைச் செல்வி’ என்ற நாடகத்தை நடத்தும் வாய்ப்பை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கலாம் என எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற சீனியர்கள்  பரிந்துரைத்தனர். பெரும் தயக்கத்துக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் ஒத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் சம்மதத்தால், ஜெயலலிதாவும் உற்சாகமானார். மதுரையில் நடைபெற்ற நாடகத்தை ஜெயலலிதா சிறப்பாக நடத்தியதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா மீது இருந்த கோபம் தணிந்தது. 

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா!

 

சசிகலா

சினிமா வாழ்க்கையில் தன்னோடு இணைந்து பலகாலம், பயணித்த ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தார். அப்போது, எம்.ஜி.ஆர்-ன் உடல்நிலையும் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. ஒத்துக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எம்.ஜி.ஆரால் போக முடியாத சூழல் அடிக்கடி ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சிகளுக்கு வேறு சீனியர் தலைவர்களை அனுப்பினால், அதற்கான வரவேற்பு மிக மிக குறைவாகவே இருந்ததையும் எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார். இந்த வெற்றிடத்தை ஜெயலலிதாவை வைத்து நிரப்பலாம் என்று எம்.ஜி.ஆர் கணக்குப்போட்டார். கட்சியின் மற்ற சீனியர்களை தான் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு அனுப்பும்போது கூடும் கூட்டத்தைவிட ஜெயலலிதாவை அனுப்பினால் அதற்கு கூட்டம் அதிகம் கூடும் என்று அவர் கணித்தார். அது பொய்க்கவில்லை. இதையடுத்துத்தான், கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982-ம் ஆண்டு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். அதோடு சத்துணவுத் திட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதாவுக்கு அளித்தார். ஏனென்றால், சத்துணவுத் திட்டத்தை, தனது செல்லப் பிள்ளையாகவே எம்.ஜி.ஆர். கருதினார். அதோடு, நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியையும் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வழங்கினார். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான, சத்துணவுத் திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை ஜெயலலிதா முதன்முதலில் கடலூரில் தொடங்கினார். அப்போது, கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர், பின்னாளில் ஆசிட் வீச்சுக்கு ஆளான சந்திரலேகா. 

ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன் 

கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சி வெகுவாக கவனம் ஈர்த்தது. அதற்கு காரணம், அப்போது, கலெக்டர் சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன். அவர், முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை சிறப்பாக செய்தியாக்கினார். தமிழகம் முழுவதும் திறமையாகக் கொண்டு சேர்த்திருந்தார். ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன் காம்பினேஷன் செய்த வேலை, எம்.ஜி.ஆரை மகிழ்ச்சி அடைய வைத்தது. 

 

chand_sized_15160.png

ஜெயலலிதா நாடாளுமன்ற மக்களவை எம்.பி-யாகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு சந்திரலேகாவை வைத்தே, அரசாங்க விதிகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி சொல்லிக் கொடுக்க வைக்கலாம் என்று நினைத்த எம்.ஜி.ஆர் அவரை சென்னைக்கு மாற்றிக் கொண்டுவந்தார். அப்போது, சந்திரலேகாவிடம் பி.ஆர்.ஓ-வாக இருந்த நடராஜனும் சென்னைக்கு ・டிரான்ஸ்பர்・வாங்கிக் கொண்டார். நடராஜன், தன் மனைவி சசிகலாவுடன், ஆழ்வார்பேட்டையில் குடியேறினார். அவர் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அவருக்கு இருந்தது. புகைப்படம் எடுப்பது பழைய மெத்தட். ஆனால், வீடியோ எடுப்பது புதிய மெத்தட். இது போட்டியில்லாத தொழிலும் கூட. அதனால், ஒரு வீடியோ கடை ஒன்றை ஆரம்பித்தால், அரசு சம்பளத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டார். வீடியோ என்றால் என்ன, வீடியோ கேசட் என்றால் எப்படி இருக்கும்?・என்று தமிழகத்துக்கே தெரியாத காலத்தில், நடராஜன், ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்' என்று அந்தக் கடைக்குப் பெயர். அது சசிகலாவின் அண்ணன் வினோதகனின் நியாபமாக இருக்கலாம் என்கின்றனர். சிலர், அந்தக் கடைக்குப் பெயரே ・சசி வீடியோ விஷன்・தான் என்கிறார்கள்.  அந்தக் கடையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சசிகலாவுடையது. அரசு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்புக்களை நடராஜன், தனது தொடர்புகள் மூலம் பெற்று, அவற்றை தனக்குச் சொந்தமான வீடியோ கடை மூலமே செய்து கொடுத்தார். 

சசிகலா வருகை ஆரம்பம்!

jaya_sasi_first_sized_15231.png

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா...

அதேநேரத்தில் சந்திரலோகவும் ஜெயலலிதாவுக்கு, நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்கள் விதிமுறைகளைப் பற்றிக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘நீங்கள் ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பீர்கள்? நீங்கள் போனபிறகு, எனக்குப் பொழுதே போவதில்லை・என்று ஜெயலலிதா சந்திரலேகாவிடம் குறைபட்டுள்ளார். 党நான் வீடியோ கேசட்டுகளில் படம் பார்ப்பேன். என்னுடைய துறையில் பி.ஆர்.ஓ-வாக இருந்த ஒருவர் வீடியோ கடையும் வைத்துள்ளார். அவரிடம்தான் நான் கேசட் வாங்குவேன். உங்களுக்கும் தரச் சொல்கிறேன்・என்று சொன்ன சந்திரலேகா, உடனடியாக நடராஜன் மூலம் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.  நடராஜன், சசிகலாவிடம் ஆங்கிலப் படங்களின் வீடியோ கேசட்களை கொடுத்து போயஸ் கார்டனுக்கு அனுப்பினார். சசிகலாவின் போயஸ்கார்டன் பயணம் 1982-ம் ஆண்டு இப்படித்தான் தொடங்கியது. 

போயஸ்கார்டனுக்குள் புதிதாக ஒரு பெண் நுழைந்துள்ளார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் என்ன செய்தார்? 

http://www.vikatan.com/news/coverstory/74814-from-video-shop-to-poes-garden---chandralekha-helps-sasikala---series-3.art

Link to comment
Share on other sites

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - அத்தியாயம் 4

 

சசிகலா

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்..

சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார்; அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34 ஆண்டுகள் பயணம் செய்ய வைத்தவர் அவருடைய கணவர் நடராஜன்தான்.  

நடராஜனை வைத்து ஜெயலலிதா போட்ட கணக்கு

சசிகலா-ஜெயலலிதா நட்பை வளர்த்தெடுத்ததிலும் நடராஜனின் பங்கு அளவிட முடியாதது. அதற்கு குறுக்கே, எம்.ஜி.ஆர் போட்ட தடைகளையே சமார்த்தியமாக தகர்த்து எறிந்தார் நடராஜன். எப்படி என்றால், கேசட் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட, சசிகலா ஜெயலலிதா அறிமுகம் கொஞ்சம் நட்பாக துளிர்விடத் தொடங்கி இருந்தது. சசிகலாவின் குடும்ப விபரங்களை ஜெயலலிதா கேட்டுத் தெரிந்துகொண்டார். “ராமநாதபுரத்தில் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சைக்கு தன் முன்னோர்கள் குடிபெயர்ந்த கதை; திருத்துறைப்பூண்டியில் ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடைக்காரர் குடும்பம் என்று தன் குடும்பத்துக்கு பெயர் வந்த கதை; தனது அண்ணன் விநோதகன் டாக்டரான கதை” என்று சசிகலா சொன்னதில், ஜெயலலிதாவுக்கு பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால், சசிகலா அவருடைய கணவரைப் பற்றிச் சொன்னபோது, ஜெயலலிதாவுக்கு கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. “தன் கணவர் நடராஜன், மொழிப்போராட்ட வீரர்; தி.மு.க மாணவர் இயக்கங்களில் பங்கெடுத்தவர்; அண்ணா, கருணாநிதியோடு நல்ல அறிமுகம் உள்ளவர்; பி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றுகிறார்; கலெக்டர் சந்திரலேகாவை தமிழகம் முழுவதும் பிரபலமாக கொண்டு சேர்த்ததில் தன் கணவரின் பங்கு அதிகம்'' என்றெல்லாம், சசிகலா சொல்லச் சொல்ல, ஜெயலலிதா மனதில் மின்னல் வெளிச்சம் பரவியது. 

mn_1_17549.jpg

ஜெயலலிதாவுக்கு நடராஜனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஒரு சுபயோக சுபதினத்தில், சசிகலா புண்ணியத்தில், நடராஜனும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். ‘நடராஜன் தான் நினைத்ததுபோல், மிக சாதூர்யமான ஆள்’ என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டார். ஆனால், அப்போது ஜெயலலிதா தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் எதையும் நடராஜனிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. அது ஒரு சாதரண அறிமுகமாகத்தான் இருந்தது. ஆனால், எப்படியும் இந்த நபர், தனது அரசியல் வாழ்வில், மிகப்பெரிய  அஸ்திரமாக இருக்கப்போகிறார் என்பது ஜெயலலிதாவுக்கு மனதாரப் புரிந்தே இருந்தது. 

இந்த காட்சிகள், போயஸ் கார்டனில் நடந்து கொண்டிருந்தபோதே, எம்.ஜி.ஆருக்கு விஷயம் போனது. அதற்காகவே, ஜெயலலிதாவின் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒற்றர்களை நியமித்து இருந்தார் எம்.ஜி.ஆர். போயஸ் கார்டனுக்குள் வந்துபோகும், புதிய பெண் யார் என்று விசாரிக்கச் சொன்னார். அவர்களை நேரில் வந்து சந்திக்கச் சொன்னார். 

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட்’

mgr_1_17445.png

எம்.ஜி.ஆரின் உத்தரவு, சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவைச் சந்திக்க, போயஸ் கார்டனுக்குப் போனதுபோல், நடராஜனும், சசிகலாவும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்கும் போனார்கள். நடராஜனை நேரில் பார்த்தபோது, எம்.ஜி.ஆருக்கு நன்றாக அவரைத் தெரிந்திருந்தது. தி.மு.க சகவாச நினைவுகள், நடராஜனை எம்.ஜி.ஆரின் நினைவடுக்குகளில் மேலே கொண்டு வந்தன. எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சி. காரணம், “நடராஜனுக்கு ஒரளவுக்கு நிலவரம் தெரியும். எனவே, தான் நினைத்த வேலை எளிமையானது” என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். “போயஸ் கார்டன் வீட்டில் என்ன செய்கிறீர்கள்” என்று ஒப்புக்கு கேட்டு வைத்தார். “ கேசட் கொடுப்பதற்காக என் மனைவி அங்கு போகிறார்” என்று நடராஜனும்  ஒப்புக்கு சொல்லி வைத்தார். சிரித்த முகத்தோடு கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர், சசிகலாவுக்கு கூடுதலாக ஒரு வேலையைக் கொடுத்தார். “போயஸ் கார்டனுக்கு வருகிறவர்கள் யார், ஜெயலலிதா யாரோடு பேசுகிறார், மொத்தமாக அங்கு என்ன நடக்கிறது?” என்பது பற்றி தெளிவாகத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். “இந்தத் தகவல்களை கொடுக்க, எந்த நேரம் வேண்டுமானாலும் சசிகலா, ராமாவரம் தோட்டத்துக்கு வரலாம்... ஜானகி அம்மாள் உள்பட யாரும் தடுக்கமாட்டார்கள்” என்ற உத்தரவாதத்தையும்  எம்.ஜி.ஆர் சசிகலா-நடராஜன் தம்பதிக்கு அளித்திருந்தார். இதை ராமாவரம் தோட்டத்து ஊழியர்களும், பத்திரிகையாளர் வலம்புரிஜானும் பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளனர்.

ஜெயலலிதாவை வைத்து நடராஜன் போட்ட கணக்கு

mn_2_17004.jpg

எம்.ஜி.ஆர் கொடுத்த அசைன்ட்மெண்டுக்கு சரியென்று தலையாட்டிவிட்டு வந்த நடராஜன்-சசிகலா தம்பதி, அந்த திட்டத்தை மாற்றிக் கொண்டதற்கு காரணம் இருந்தது. அப்போது, சசிகலாவின் வீடியோ கடை மூலம், ஜெயலலிதா பங்கேற்ற ஈரோடு, சென்னை நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட்டன. ஜெயலலிதா அந்த வாய்ப்பை சசிகலா-நடராஜனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார். அப்போது, ஜெயலலிதாவுக்குக் கூடிய கூட்டம் நடராஜனை பிரமிப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால், மாணவர் போராட்டங்களுக்கு கூட்டம் திரட்டிய அனுபவம் நடராஜனுக்கு இருந்தது. பத்துப்பேரை ஒரு நிகழ்ச்சிக்கு திரட்டுவதற்குள் நாக்குத் தள்ளிவிடும். ஆனால், ஜெயலலிதாவுக்கு தன்னிச்சையாக சாரை சாரையாக கூட்டம் திரண்டது. சாதாரண விஷயமில்லை இது. இதைப் புரிந்து கொண்ட நடராஜன், இப்போது ஜெயலலிதாவை வைத்து ஒரு கணக்குப்போட்டார். “இப்போதைக்கு எம்.ஜி.ஆர்தான் கட்சி; எம்.ஜி.ஆர்தான் ஆட்சி என்ற நிலை இருக்கலாம்; எம்.ஜி.ஆரைச் சுற்றி இருக்கும் அதிகாரமையங்களில் ஜெயலலிதா கடைசி இடத்தில் இருக்கலாம்; ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதாவால் மட்டும்தான் கட்சியாக முடியும்; அதன்மூலம் ஜெயலலிதாவால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அந்த ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக வேண்டும்; ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக வேண்டுமானால், அது சசிகலாவின் வழியாகத்தான் தனக்குச் சாத்தியம்” என்று தீர்வுகளை அடுக்கியது நடராஜன் போட்ட கணக்கு.  அதனால், ஜெயலலிதாவை வேவு பார்க்கச் சொன்ன, எம்.ஜி.ஆரை எல்லாவழிகளிலும் சமாளிக்க முடிவு செய்தார் நடராஜன். சசிகலாவுக்கும் அதில் சில திட்டங்களைச் சொல்லிக் கொடுத்தார். “எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருப்பதைவிட, ஜெயலலிதாவுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும்” என்று சசிகலாவுக்கு அறிவுறுத்தினார். ஆனால் நடராஜன் சொல்லாமலேயே, சசிகலாவுக்கு இயல்பாக அதுதான் கைவந்தது. “ஜெயலலிதாவும் பெண்; சசிகலாவும் பெண்” என்ற விதி வகுத்த நியதி அது. அதுபோல, தன் மனைவியைத் தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை புதிதாக நெருங்காமல் பார்த்துக் கொண்டார் நடராஜன். சசிகலாவுக்கு முன்பே, ஜெயலலிதாவை நெருங்கி நட்பாக இருந்தவர்களை, எதிர்பாராத நேரங்களில் எல்லாம், அடித்துக் காலி செய்தார் நடராஜன். சசிகலா-ஜெயலலிதாவுக்கு இடையில் இருந்த, சசிகலா-ஜெயலலிதாவுக்கு இடையில் முளைத்த, அத்தனை தலைகளையும் நடராஜன் வெட்டித் தள்ளினார். அன்றும் சரி... இன்றும் சரி... இந்திரஜித்தைப்போல, மறைந்து இருந்தே அம்புகளைத் தொடுத்துப் பழக்கப்பட்டவர் நடராஜன். அவர் எப்போது தாக்குவார்? எப்படித் தாக்குவார்? எங்கிருந்து தாக்குவார் என்று அவர் எதிரிகள் திணறிக் கொண்டிருக்கும்போது, அவர்களை வீழ்த்திவிட்டு, அடுத்த களத்துக்குத் தயாராகிவிடுவார் நடராஜன். ஜெயலலிதாவுக்கு சசிகலாவைத் தவிர வேறு யாருமே இல்லாத நிலையை கச்சிதமாக உ ருவாக்கிய பிறகே ஒய்ந்தார் நடராஜன். 

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்ததுபோல், சசிகலாவுக்குப் பின்னால் நடராஜன் இருந்தார்.

 

(கதை தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/74895-assignment-given-by-mgr-to-sasikala-episode-4.art

Link to comment
Share on other sites

போயஸில் சசிகலாவால் வீழ்த்தப்பட்டவர்கள்! : கேசட் கடை டூ போயஸ் கார்டன்: அத்தியாயம் 5

1216_sasi_10089.jpg

சசிகலா

1982-முதல் ஜெயலலிதாவுக்கு நட்பாக இருந்த சசிகலா, ஆரம்பத்தில் போயஸ் கார்டன் வீட்டில் நிரந்தரமாகத் தங்கவில்லை. அலுவலகத்துக்குப் போவதுபோல்தான், போயஸ் கார்டனுக்குப் போய் வந்தார்; பிறகு,  போயஸ் கார்டன் வீட்டில் இரவில் தங்க ஆரம்பித்தார்; பிறகு, இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து அங்கேயே இருக்கப் பழகினார். யாரையும் எளிதில் நம்பாத ஜெயலலிதா எதற்காக சசிகலாவை இவ்வளவு நம்பினார், அவருக்கு இவ்வளவு இடம் கொடுத்தார்? என்பது பலருக்கும் புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடை, பெங்களூரு ‘பிரைவேட்’ மருத்துவமனைக்குள் ஒளிந்து இருந்தது. அது தனி அத்தியாயம்.  

வலம்புரிஜான், மாதவன் நாயர், ஜெயமணி!

சசிகலா ஜெயலலிதாவின் வீட்டில், அதிகமாகத் தங்க ஆரம்பித்த நேரத்தில், அவருக்கு அதில் கொஞ்சம் தொந்தரவுகள் இருந்தன. சசிகலாவுக்கு முன்பே, ஜெயலலிதா வீட்டுக்குள் வந்தவர்கள், போயஸ் கார்டனில் சசிகலாவைவிட சுதந்திரமாக வலம் வந்தனர்; அவர்கள், ஜெயலிதாவின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்களாக இருந்தனர்; ஊழியர்கள் என்பதைத்தாண்டி, ஜெயலலிதாவோடு ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு ஆத்மார்த்தமான பிணைப்பு இருந்தது; இது சசிகலாவுக்கு சங்கடமாக இருந்தது. இவர்களைத் தொந்தரவுகளாக பார்த்தார் சசிகலா. சசிகலாவால், தொந்தரவாகப் பார்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், மாதவன் நாயர். சந்தியா காலத்தில் இருந்து, ஜெயலலிதா குடும்பத்தோடு இணைப்பில் இருந்தவர். 35 வருட குடும்பப் பழக்கம்.

ஜெயலலிதாவை தூக்கி வளர்த்ததை பெருமையாகக் கருதினால், மாதவன் நாயர் அந்தப் பெருமைக்கு உரியவர்.  அதனால், போயஸ் வீட்டு, வீட்டு வரவு செலவுக் கணக்குகளைப் பார்க்கும் பொறுப்பை, மாதவன் நாயரிடம் ஜெயலலிதா ஒப்படைத்திருந்தார். அதுபோல், ஜெயமணி என்று ஒரு டிரைவர் நீண்ட நாட்களாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். சேடபட்டி முத்தையா சிபாரிசு செய்து அனுப்பிய ஆள் அவர். அதுபோல, எம்.ஜி.ஆர் நடத்திய ‘தாய்’ பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரிஜானும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துபோகும் அதிகாரம் பெற்றவராக இருந்தார். பொது விஷயங்கள், உலக வரலாறுகள், ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுகளுக்குத் தேவையான குறிப்புகள் எடுத்துத் தருவது, பல நேரங்களில் ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சுக்கான உரைகளை எழுதித் தரும் வேலைகளை, வலம்புரிஜானிடம் எம்.ஜி.ஆர் ஒப்படைத்திருந்தார்.   ஜெயலலிதாவுக்கும் வலம்புரிஜான் மீது ஒரு பிரமிப்பும் மரியாதையும் இருந்தது. வலம்புரிஜான், அந்தக் காலத்திலேயே ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழக சட்டசபை மேல்சபை உறுப்பினராகவும் (எம்.எல்.சி) இருந்தவர். ஜெயலலிதாவோடு சேர்ந்து டெல்லிக்கு ராஜ்யசபா உறுப்பினராக சென்று வந்தவர். இவர்களைப் போல, இன்னும் பல ஊழியர்கள் போயஸ் கார்டனில் நிரந்தரமாகவும், அவ்வப்போது வந்து ஊழியம் செய்துவிட்டுப் போகிறவர்களாகவும் இருந்தனர். இவர்களைக் களையெடுக்க நினைத்தார் சசிகலா. நடராஜன் அதற்கான களங்களைத் தயார் செய்தார்.  

valampuri_john_1_12220.png

 

36 ஆயிரம் ரூபாய் ஒரு காரணமா?

மாதவன் நாயருக்கு முதலில் குறிவைக்கப்பட்டது. அவர்தான், போயஸ் கார்டனுக்குள், சசிகலாவின் சுதந்திரத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவர். காசு விஷயத்திலும், மாதவன் நாயர் கறார் பேர்வழி. எனவே, அவரைக் களையெடுப்பதுதான் முதல்வேலை என்று நடராஜனிடம் சொன்னார் சசிகலா. மாதவன் நாயரைத் தோண்ட ஆரம்பித்ததில், அவருடைய வங்கிக் கணக்கு மட்டும் சிக்கியது. அதில், சொந்தக் கணக்கில் மாதவன் நாயர், 36 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அதை ஒரு விஷயமாக்கி, ஜெயலலிதாவிடம் கொண்டுபோனார் சசிகலா. “மாதவன் நாயர் தப்புக் கணக்கு எழுதி, நீங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைச் சுரண்டுகிறார். அவருடைய வங்கிக் கணக்கில் 36 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.

அவருக்கு எங்கே இருந்து வந்தது இவ்வளவு பணம்” என்று  ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பினார் சசிகலா. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கவில்லை; மாதவன் நாயரிடமும் விளக்கம் கேட்கவில்லை; 35 வருடங்கள் வேலை பார்ப்பவர் கணக்கில் 36 ஆயிரம் இருக்காதா? என்று யோசிக்கவும் இல்லை. மாறாக, “மாதவன் நாயரை இனிமேல் வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா. அதுபோல, டிரைவர் ஜெயமணி, “வீட்டுக்குள் நடப்பதை வெளியில் பேசிக் கொண்டு திரிகிறார்; ஜானகி அம்மாளுக்காக, உங்களை வேவு பார்க்கும் ஆள் தான், இந்த ஜெயமணி. அதற்காகத்தான், சேடபட்டி முத்தையா ஜெயமணியை இங்கு வேலைக்கு சேர்த்துள்ளார்” என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதோடு, ஜெயமணியின் வேலையும் காலி. அதற்குப் பிறகு, அந்த இடங்களுக்கு புதிய ஆட்கள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள், நடராஜன் அனுப்பிய ஆட்கள். புதிய ஆட்களுக்கு ஜெயலலிதா வீட்டில் வேலையும் சம்பளமும் ஏற்பாடு செய்து கொடுத்தார் நடராஜன். அவர்கள், அதற்குப் பதிலாக சசிகலாவிடம் விசுவாசத்தையும் மரியாதையையும் காட்டினார்கள். 

வலம்புரிஜானும் ஒரு அட்டைப்படமும்  
 
வலம்புரிஜானைப் பொறுத்தவரை, அவரும் சாதரண ஆள் கிடையாது. அரசியல் அறிந்தவர்; அதற்குள் இருக்கும் அபாயங்களை உணர்ந்தவர். அவரை ஜெயலலிதாவின் வட்டத்தில் இருந்து பிரிக்கவேண்டுமானால், வேறு வகையில் வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்தார் நடராஜன்.  அதற்கு கே.ஏ.கே-வின் தயவை நாடினார் நடராஜன். அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு, சினிமாவில் பலம், ஆர்.எம்.வீரப்பன் என்றால், அரசியலில் பலம், கே.ஏ.கே என்பார்கள். அவருக்கே தெரியாமல், அவர் மூலம் காய்களை நகர்த்தினார் நடராஜன். அந்தக் காலகட்டத்தில் நடராஜன், கே.ஏ.கே-வின் ஆளாக வலம் வந்தவர் என்பது இங்கே குறிப்பிட வேண்டியது.  வலம்புரிஜானுக்கு எதிரான செய்திகளை கே.ஏ.கே நடராஜன் மெல்ல மெல்ல கடத்திக்கொண்டே இருந்தார். அந்தச் செய்திகள், கே.ஏ.கே மூலம் ஜெயலலிதா, ஜானகி, எம்.ஜி.ஆர் என்று எல்லாத் திசைகளுக்கும் போனது. அதைத்தான் எதிர்பார்த்தார் நடராஜன். 

jaya_sasi_15_1_12135.jpg

அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு பல நாட்கள் இருவரும் பேசாமல் இருந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த விரும்பிய சிலர், வலம்புரிஜான் பொறுப்பில் இருந்த, ‘தாய்’ பத்திரிகையில் ஒரு அட்டைப்படத்தை பிரசுரிக்கச் சொன்னார்கள். ‘எம்.ஜி.ஆர்-ஜானகி’ இளமைக்காலத்தில் சேர்ந்து எடுத்த படம் அது. நல்ல விஷயம்தானே என்று நினைத்த வலம்புரிஜான், அந்தப் படத்தை அட்டையில் வைத்தார். இதே நேரத்தில், ஜெயலலிதாவுக்கும் ஜானகி அம்மாளுக்கும் கடும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த விபரத்தை வலம்புரிஜான் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், அதைக் கச்சிதமாக கவனத்தில் வைத்திருந்த நடராஜன், ‘தாய்’ அட்டைப்படத்தை ஜெயலலிதாவின் கவனத்துக்கு சசிகலா மூலம் கொண்டுபோனார். அதோடு, “வலம்புரிஜான் ஜானகி அம்மாளின் ஆள். அதனால்தான், எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாளும் பேசிக் கொள்ளாத இந்த நேரத்தில் இப்படி ஒரு அட்டைப் படத்தைப்போட்டு, அவர்களை சமாதானம் செய்கிறார். அதன்மூலம் உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைவெளியை அதிகரிக்கப் பார்க்கிறார்” என்று ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். ஆத்திரமடைந்த ஜெயலலிதா, வலம்புரிஜானைத் தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தார். அதில் குழம்பிப்போன வலம்புரிஜான், நமக்கு எதற்கு வம்பு என்று நினைத்து அடுத்த வாரம் ஜெயலலிதாவின் போட்டோ ஒன்றை அட்டையில் போட்டார். ஆனால், விடவில்லை நடராஜன். அதையும் பிரச்னை ஆக்கினார்.

இந்தமுறை ஜெயலலிதா அட்டை படத்தை, ஜானகி அம்மாள் கவனத்துக்கு கொண்டுபோனார். அதோடு, “வலம்புரிஜான் எப்போதும் ஜெயலலிதாவின் ஆள்; ஜெயலலிதாவை அரசியலில் வளர்து எடுக்க துடிக்கிறார்; ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சுக்களை இவர்தான் எழுதித் தருகிறார்; ஜெயலலிதாவை கட்சியில் செல்வாக்கு மிக்கவராக மாற்றவே, ‘தாய்’ பத்திரிகையில் அவர் படத்தைப் போட்டுள்ளார்” என்று அங்கும் ஒரு விளக்கத்தை கொடுத்தார். அதோடு நிறுத்தவில்லை, ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு, “உங்கள் படத்தை மிக மோசமான தெளிவில்லாத ‘லே-அவுட்’ செய்து பத்திரிகையில் வலம்புரிஜான் பிரசுரித்துள்ளார். இதன்மூலம், உங்களை அவமானப்படுத்த நினைக்கிறார்” என்று ஜெயலலிதாவுக்கும் ஒரு தகவலைச் சொல்லி வைத்தார். இப்படியாக, வலம்புரிஜானுக்கு எதிராக தொடர்ந்து நடராஜன் காய்களை நகர்த்திக் கொண்டே இருந்தார். நடராஜன் பரப்பிய இந்தச் செய்திகள் மின்னல் வேகத்தில் சென்று  சேர்ந்தன.

இந்த விஷயத்தில், பத்திரிகைக்கு செய்தி ஆசிரியராக இருந்த வலம்புரிஜான், ஒரு பி.ஆர்.ஓ-விடம் தோற்றுத்தான் போனார். நடராஜன் பரப்பிய செய்திகளுக்கு, விளக்கம் கொடுக்கவே, வலம்புரிஜானுக்கு நேரம் சரியாக இருந்தது. ஜெயலலிதாவுக்கும் அவர் மேல் இருந்த நம்பிக்கை போனது. ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவே, வலம்புரிஜானுக்கு எதிராக எம்.ஜி.ஆரிடம் பேசவும், அவரை மட்டம் தட்டி வைக்க எம்.ஜி.ஆரோடு சண்டை போடவும் செய்தார். நடராஜனின் உள்ளடி வேலைகள் அந்தளவுக்கு வேலை செய்தன. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவர்களை கணக்கெடுப்பது, அவர்களுடை பலவீனங்களை புரிந்து கொள்வது, தவறுகளை தெரிந்து கொள்வது, அதை ஜெயலலிதாவிடம் கச்சிதமாகக் கொண்டுசேர்ப்பது, அவர்களால், ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப்போகிறது என்று பீதியைக் கிளப்புவது என்று நடராஜன் செயல்பட்டார்.  நடராஜனின் இந்த செய்வினைகளை, தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயலலதாவுக்கு நெருக்கமானவர்கள் முடங்கிப்போனார்கள். போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் இதே வேலையைத்தான் நடராஜன் பார்த்தார். 

நடராஜன் வெட்டிய பள்ளத்தில் திருநாவுக்கரசர், சேலம் கண்ணன், ஆர்.எம்.வீரப்பன் என்று வரிசையாக பலர் வீழ்ந்தனர். 

(கதை தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/75064-from-cassette-shop-to-poes-garden-cadres-overthrown-by-sasikala--chapter-5.art

Link to comment
Share on other sites

கார்டனுக்கு சசிகலா... கட்சிக்கு நடராஜன்... - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை - அத்தியாயம் 6

 

1216_sasi_12109.jpg

1973 முதல் 1980-வரை, ‘எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா’ சந்திப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஜெயலலிதாவை, தன் நாட்களில் மட்டுமல்ல, நினைவுகளில் இருந்தே, அகற்றி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். உண்மையில், அபபோது, அவர் மகிழ்ச்சியாக இருந்தார். தனிக்காட்டு ராஜாவைப்போல், கட்சியையும் ஆட்சியையும் நடத்திச் சென்றார். 1982-ல் ஜெயலலிதா கட்சிக்குள் வந்ததும், எம்.ஜி.ஆரின் நிம்மதி தொலையத் தொடங்கியது; அவருக்குத் தலைவலி ஆரம்பித்தது; அ.தி.மு.க-வில் ஏட்டிக்குப் போட்டிகள் தலைதூக்கின. எம்.ஜி.ஆரின் இரண்டு கரங்களாகத் திகழ்ந்த சீனியர்கள் ஒன்றைச் சொல்வார்கள்; அந்த வழியில் எம்.ஜி.ஆரைக் கொண்டுபோக நினைப்பார்கள். அதில், ஏதாவது ஒரு இடத்தில் வந்து, ஜெயலலிதா ‘செக்’ வைப்பார்; கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்; பத்திரிகைகள் பரபரப்பாகும்; இந்தச் சலசலப்புக்கும் பரபரப்புக்கும் காரணம் யார்? என்று தொண்டர்கள் ஆர்வமாகத் தேடுவார்கள். அனைத்துக்கும் காரணகர்த்தா, ‘ நான்தான்’ என்று ஜெயலலிதா அங்கே காட்சியளிப்பார். உண்மையில், இப்படி எல்லாம்  செய்வதற்கு அன்றைய ஜெயலலிதாவுக்கு விபரம் போதாது. நடைமுறைகள் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவை அப்படி வழிநடத்தியவர் நடராஜன். 

சசிகலா

 

ஜெயலலிதாவின் முதலமைச்சர் கனவு!

சாதாரண கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அப்போதே முதலமைச்சர் கனவு வந்திருந்தது. கட்சியில்  ‘நம்பர் ஒன்’ எம்.ஜி.ஆர் மட்டும்தான். அவரைத்தவிர மற்றவர்கள் பூஜ்யம் என்றே ஜெயலலிதா மதிப்பிட்டு இருந்தார். “இத்தனை பூஜ்ஜியங்களை வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆரால் ஆட்சியைப் பிடித்து, பூஜ்ஜியங்களுக்கும் ராஜ்ஜியத்தில் பொறுப்பு கொடுத்து,  வெற்றிகரமாக அதைக் கொண்டு செலுத்த முடிகிறது என்றால், அது தன்னால் முடியாதா?” என்று கருதினார் ஜெயலலிதா. அவரின் கண்களுக்குள், குடியேறி இருந்த இந்தச் சந்தேகக்  கனவைக் கலைத்துவிடாமல், கண்களை எரிக்கும் லட்சிய வெறியாக அதை வளர்தெடுத்தார் நடராஜன். அது ஜெயலலிதாவுக்கான லட்சியம் அல்ல; ஜெயலலிதா மூலம் தன் மனைவி சசிகலாவுக்கான லட்சியம்; தன் மனைவி சசிகலா மூலம், அது தனக்கான லாபம்” என்பது நடராஜனின் எண்ணமாக இருந்திருக்கலாம். 

கார்டனுக்குள் சசிகலா!

இந்த லட்சிய இலாபங்களை அடைய, போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா சில வேலைகளைச் செய்தார்; அ.தி.மு.க- என்ற கட்சிக்குள்  சில வேலைகளைச் செய்தார். போயஸ் கார்டன் ஊழியர்களுக்கு வேட்டு வைத்து சிதறடித்தைப்போல, அவ்வப்போது, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துபோகிறவர்களுக்கும் வெடி வைத்தார் சசிகலா. அதில் சிக்கிச் சிதறியவர்களில் முக்கியமானவர், ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி லீலா. தோட்டம் வளர்ப்பதில் லீலா கெட்டிக்காரர். ஜெயலலிதா, மனம்விட்டுப்பேசும் ஒரு சில தோழிகளில் லீலாவும் ஒருவர். ஒரு நாள் லீலாவைத் தொடர்பு கொண்ட ஜெயலலிதா, சில புத்தகங்களை கொண்டுவரச் சொன்னார். ஜெயலலிதா சொன்னநாளில், சொன்ன நேரத்துக்கு லீலாவும் வந்தார். ஆனால், அவருக்கு வாசலிலேயே முட்டுக்கட்டை விழுந்தது. “இன்றைக்கு அம்மா யாரையும் வரச்சொல்லவில்லையே” என்றார் போயஸ் கார்டன் வாசல்  செக்யூரிட்டி. இது சசிகலாவின் வேலை. திகைத்துப்போன லீலா, “இல்லையே... இன்றைக்குத்தானே என்னை வரச் சொன்னார்” என்றார். “எங்களுக்கு அப்படி ஒரு தகலும் இல்லை. வேண்டுமென்றால், நீங்கள் வேண்டுமானால், உள்ளே வெயிட் பண்ணுங்கள்” என்று வேண்டாவெறுப்பாக உள்ளே அனுப்பினார் செக்யூரிட்டி. லீலாவுக்கு அப்போதே மனம் விட்டுப்போனது. “சரி வந்ததுவந்துவிட்டோம்.... உள்ளே ஒரு எட்டுப்போய் காத்திருக்கலாம்” என்று வீட்டுக்குள் வந்து அமர்ந்தார் லீலா. 

final_2_12251.jpg

ஜெயலலிதா அப்போது மாடியில் இருந்தார். அவருக்கும் லீலா வந்த தகவல் சொல்லப்படவில்லை. தகவல் சொல்ல வேண்டிய சசிகலா, சொல்லவில்லை. ஆனால், லீலாவிடம் வந்து, “ஜெயலலிதா உங்களை இன்னொரு நாள் வரச் சொல்லிவிட்டார். நீங்கள் இப்போது கிளம்பலாம்” என்றார். லீலாவுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. “நம்மை வரச் சொல்லிவிட்டு, வந்தபிறகு பார்க்க முடியாது எனத் திருப்பி அனுப்பினால், என்ன அர்த்தம்” என்று சினந்து கொண்டே சென்றுவிட்டார். அவர்போனபிறகு, “ஜெயலலிதாவிடம் சென்ற சசிகலா, “உங்களைப் பார்க்க லீலா வந்தார்... காத்திருக்கச் சொன்னேன், எனக்கு காத்திருக்க எல்லாம் நேரமில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்” என்றார். இப்போது, ஜெயலலிதாவுக்கு  கோபம், “அவர் வந்து எவ்வளவு நேரம் ஆனது” என்று சசிகலாவிடம் கேட்டார். “இப்போதுதான் வந்தார். வந்ததும் ஜெயலலிதா எங்கே?” என்றார். “5 நிமிடங்களில் வந்துவிடுவார். வெயிட் பண்ணுங்கள் என்றேன். ஆனால், அவர் கேட்கவில்லை” என்று சசிகலா சொன்னதை ஜெயலலிதா அப்படியே நம்பினார். “ஒரு 5 நிமிடம் கூட எனக்காகக் காத்திருக்க முடியாதா?” என்று என்று ஜெயலலிதாவுக்கும் கோபமும் ஏமாற்றமும். அதோடு அவர் லீலாவைத் திருப்பி எப்போதும் அழைக்கவே இல்லை. அதன்பிறகு, எப்போதும் லீலாவை அழைக்காதபடி, சசிகலா பார்த்துக்கொண்டார். 

கட்சிக்குள் நடராஜன்!

இதையே, கட்சிக்குள் வேறு விதமாக நடராஜன் செய்தார். அன்றைக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவர் ஜனார்த்தனன். அன்றைக்கு ஜெயலலிதா கட்சியின், சாதரண கொள்கை பரப்புச் செயலாளர் அவ்வளவுதான். இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால்,  ஜனார்த்தனனை இன்றைக்கு ஜெயலலிதா இருந்த இடத்திலும், ஜெயலலிதாவை இன்றைக்கு நாஞ்சில் சம்பத் இருக்கும் இடத்திலும் வைத்துப் பார்க்க வேண்டும். 

final_3_12287.jpg

அப்போது, அ.தி.மு.க சார்பில், ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குத் தலைமை அன்றைக்கு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜனார்த்தனன். ஆனால், வேறு சில வேலைகளால்,  அந்த கூட்டத்தில் ஜனார்த்தனன் கலந்து கொள்ளவில்லை. கட்சி அரசியலில் இது சாதரண விஷயம். ஆனால், ஜனார்த்தனன் கலந்து கொள்ளாததை அரசியல் ஆக்கினார் ஜெயலலிதா. அப்போது, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கட்சியின் சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், “கட்சிக்காரர்கள் கஷ்டப்பட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். அதில் போய் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் மனம் புண்படும். அது கட்சியை பலவீனப்படுத்தும். ஆகவே, அந்தக்கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு, அந்த நோட்டீஸ் விவகாரத்தை எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொண்டு சேர்த்தார். 

“ஒரு கொள்கை பரப்புச் செயலாளர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு எப்படி நோட்டீஸ் அனுப்பலாம்?” என்று கட்சிக்குள் சீனியர்கள் உறுமினர். “அந்தம்மா, கேட்பது நியாயம்தான்” என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். இந்த யோசனை, யோசனையை செயல்படுத்திய ஜெயலலிதா, ஜெயலலிதா செய்ததைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்த்ததற்குப் பின்னால் இருந்தது, சாட்சாத் பி.ஆர்.ஓ நடராஜன் தான். இதில், மனதளவில் அடிபட்ட ஜனார்த்தனன், மெல்லவும் முடியாமல், விளக்கம் சொல்லவும் முடியாமல் அவமானத்தால் குறுகிப்போனார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் ஏதோ செய்து அவரைச் சமாதானப்படுத்தினார். இது சாதரணமான விவகாரமாகத் தோன்றலாம். ஆனால், கட்சியில் உள்ள பெரும்பகுதி தொண்டர்களின் பார்வையை, ஜெயலலிதாவின் மேல் திரும்ப வைத்தது. “கட்சியில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் எல்லாம் சும்மாதான்... இனி எல்லாம் அம்மாதான்” என்று அப்போதே அவர்களை குழப்பி அடித்தது. அன்று ஜெயலலிதா செய்ததை, இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றைக்கு  அ.தி.மு.க-வில் இருக்கும் நாஞ்சில் சம்பத், விளக்கம் கேட்டு, ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா? அப்படி அனுப்பினால், நாஞ்சில் சம்பத் அடுத்த நொடி கட்சிக்குள் மட்டுமல்ல.. வேறு எங்கேயாவது, எதுவாகவாவது இருக்க முடியுமா? ஆனால், எம்.ஜி.ஆர் காலத்தில், ஜெயலலிதா அப்படி ஒரு காரியத்தைச் செய்தார். நடராஜன் அதைச் செய்ய வைத்தார். ஜெயலலிதாவுக்குப் பின்னால் நடராஜன் இருப்பதை அறிந்த, மூத்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், அப்போதே நடராஜனின் வளர்ச்சியை வீக்கம் என்று வருணித்தார். 

எம்.ஜி.ஆரின் தந்திரம்!

கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கும் சீனியர்களுக்கும் ஏற்பட்ட இந்த முட்டல்மோதலை எம்.ஜி.ஆர் ஒருபக்கம் ரசித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. “தன் கண் முன்னாலேயே, ‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து, இவர்தான்’ என்று யாரும் யாரையும் பேசவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார். அதற்காக, இரண்டாம் இடத்தில் உள்ள சீனியர்களை ஜெயலலிதாவை வைத்தும், ஜெயலலிதாவை இரண்டாம்கட்ட சீனியர்களை வைத்தும் தலையில் தட்டிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த வித்தையை, ஒரு கட்டத்துக்கு மேல், அவருக்கே எதிராகப் பயன்படுத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. அதற்குப் பின்னால் இருந்தவர்கள் சசிகலா-நடராஜன்.

http://www.vikatan.com/news/coverstory/75184-from-cassette-shop-to-poes-garden--poes-for-sasikala---party-for-natarajan-chapter-6.art

Link to comment
Share on other sites

சசிகலா ஜெயலலிதாவின் ஆளா... எம்.ஜி.ஆர். ஆளா? - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை அத்தியாயம் 7

 

sasi121199_12276.jpg

 

அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா,  எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார்; ஜானகி,  ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார்;  சசிகலாவும் நடராஜனும் இன்னும் நூதனமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகிய மூவருக்கும் எதிராக அவ்வப்போது எறிந்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எல்லோரின் ஆயுதங்களும், அதனதன் இலக்கைச் சரியாக வீழ்த்தி வெற்றியைக் கொடுத்தன;  எம்.ஜி.ஆருக்கு வேதனையைக் கொடுத்தன. 

ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நோக்கி எறிந்த ஆயுதம்!?

jaya_old_1_11346.jpg

ஜெயலலிதா ஒருமுறை அமெரிக்கா கிளம்பினார். அரிதாக அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் அதுவும் ஒன்று. போகும்போது, வருமானவரி நடைமுறைகளைச் சமாளிக்க, “நான் ‘ட்ரீட்மென்ட்டு’க்காகவே அமெரிக்கா போகிறேன்” என்று வருமானவரி அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்துவிட்டுப்போனார். இந்த விவகாரம் வெளியில் கசிந்து, “ஜெயலலிதாவுக்கு விபரீதமான நோய்” என்று, தி.மு.க பத்திரிகையான, முரசொலியில் செய்தி வந்தது. ஜெயலலிதா,  எம்.ஜி.ஆரை உலுக்கி எடுத்தார். இந்தச் செய்தியைப் பரப்பியவர்களை, கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். ஜெயலலிதாவின், ஆத்திரத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அவசியமே இல்லை. ஏனென்றால், முரசொலியில் வெளியாகி இருந்த அந்தச் செய்தி, ஜெயலலிதாவைவிட, எம்.ஜி.ஆரை, அதிகம் வேதனைப்படுத்தி இருந்தது. விசாரணையில் இறங்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கடிதத்தை ‘டீல்’ செய்த அதிகாரிகளை எம்.ஜி.ஆர் ‘டீல்’ செய்தார். அதில் ஒரு அதிகாரிக்கு வேலையே போனது. ஆனாலும்கூட, எம்.ஜி.ஆருக்கு சமாதானம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் தொடர்பான தகவல்களில், ஏதோ ஒரு தவறு ஒளிந்திருப்பதாக அவர் உள்மனம் சொன்னது. கடிதம் வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆரால், வெளியிடச் சொன்னவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் அவருக்கு உறுத்தலாக இருந்தது. 

சசிகலா, ஜெயலலிதா மீது எறிந்த ஆயுதம்!

today3_11076.jpg

கடிதத்தை வெளியிட்டவரை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு எம்.ஜி.ஆர் இருந்தார். அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு, ரகசிய விசாரணை ஒன்றை நடத்திக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய விசாரணை சசிகலாவிடம் வந்து முடிந்தது. “கடித விவகாரம் எப்படி வெளியானது?” என்று எம்.ஜி.ஆர் சசிகலாவிடம் கேட்டார். “ஜெயலலிதாதான் கடிதத்தை வெளியிட்டார்” என்று சசிகலா ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். அதோடு, வருமானவரி அதிகாரி ஒருவர் போயஸ் தோட்டத்துக்கு வந்து போன விபரங்களையும் எம்.ஜி.ஆரிடம் தெளிவாகச் சொன்னார். சசிகலாவின் பதிலில், எம்.ஜி.ஆரின் கேள்விகள் அனைத்துக்கும் பதில் இருந்தது. ஆடிப்போனார் எம்.ஜி.ஆர். “தான் கற்றுக்கொண்ட அரசியலில், இப்படி ஒரு பாடம் சொல்லித்தரப்படவில்லையே!” என்று மிரண்டுவிட்டார். இந்தத் தகவலை எம்.ஜி.ஆருக்குச் சொல்லிவிட்டு, அதற்கு உபகாரமாக, பட்டிவீரன் பட்டியில் தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு சசிகலா, மெடிக்கல் 'சீட்' ஒன்றை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு மூன்று நாட்கள் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. கடித விவகாரத்தில் நாடகமாடிய ஜெயலலிதா மீது அவர் கோபத்தில் இருந்தார். அதன்பிறகு, வழக்கம்போல், மாம்பலம் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சந்திப்பு நடைபெற்றது. ஜெயலலிதா மீதான எம்.ஜி.ஆரின் கோபம் அவ்வளவுதான். 

திசை திருப்பிய நடராஜன்!

today4_11301.jpg

பி.ஆர்.ஓ-ஆக இருந்த நடராஜன், பதவி உயர்வுக்காக போராடிக் கொண்டு இருந்தார். நடராஜன் பணிபுரிந்த துறையின் அமைச்சராக அப்போது இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு நெருக்கமானவர், ‘தாய்’ பத்திரிகை ஆசிரியர் வலம்புரிஜான். அதனால் நடராஜன், அடிக்கடி வலம்புரிஜானை சந்தித்து, “எனது பதவி உயர்வுக்காக ஆர்.எம்.வீ-யிடம் பேசுங்கள்” என்று கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், ஏனோ நடராஜனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அப்போதே ஆர்.எம்.வீரப்பன், நடராஜனை கணித்து இருந்திருக்க வேண்டும். ஆனால், தன் கோரிக்கையை ஆர்.எம்.வீ-க்கு கொண்டு செல்லாமல், வலம்புரிஜான்தான் முட்டுக்கட்டை போடுகிறார் என்று புரிந்துகொண்டார் நடராஜன். அதனால், நடராஜனின் கோபம் அவர் மீது திரும்பி இருந்தது. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள நடராஜனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம், கடித விவகாரத்தில் கிடைத்தது. ஜெயலலிதாவைச் சந்தித்த நடராஜன், “கடித விவகாரத்தை வெளியிட்டது நீங்கள்தான் என்று வலம்புரிஜான் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆர் உங்கள் மீது கோபமாக இருந்தார்” என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்போது, ஜெயலலிதாவின் கோபம், வலம்புரிஜான் மீது திரும்பியது. வலம்புரிஜானை வார்த்தைகளால் எரித்துவிட்டார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை கடித விவகாரத்தை வெளியில்விட்டது ஜெயலலிதா; ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் தன்னை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தது வலம்புரிஜான். இரண்டு வில்லங்கமான புரிதல்களுக்கு இடையில், சசிகலா-நடராஜன் இருந்தனர். போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், இராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமானவர்களாகவும் சசிகலா-நடராஜனின் பயணம் தொடர்ந்தது. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/75333-sasikala--mgrs-bestie-jayalalithas-bestie-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---7.art

Link to comment
Share on other sites

நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை. அத்தியாயம்-8

 

சசிகலா

1980-களுக்குப் பிறகு, ஜெயலலிதா எதைக்கேட்டாலும், அதைச் செய்து  கொடுக்கும் மனநிலைக்கு வந்திருந்தார் எம்.ஜி.ஆர். சில நேரங்களில், ஜெயலலிதாவின் சில கோரிக்கைகளை மட்டும் எம்.ஜி.ஆர் நிராகரிப்பார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் என்ன மாயம் நிகழ்ந்தது என யாருக்கும் புரியாது... “எம்.ஜி.ஆர் நிராகரித்த கோரிக்கைகளை, எம்.ஜி.ஆர் நிறைவேற்றச் சொல்லிவிட்டார்” என்று எம்.ஜி.ஆரிடம் இருந்தே உத்தரவு வரும். அடம்பிடித்தோ, ஆர்ப்பாட்டம் செய்தோ அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் எம்.ஜி.ஆரிடம் தனது காரியத்தைச் சாதிக்காமல் ஓயமாட்டார் ஜெயலலிதா. ‘எம்.ஜி.ஆரிடம் எப்படிக் கேட்டால் கிடைக்கும்’ என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது. ஆனால், எதைக் கேட்கவேண்டும், எப்போது கேட்க வேண்டும் என்பதில் மட்டும் அவருக்குக் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அந்த தடுமாற்றத்தில் இருந்து ஜெயலலிதாவை தெளிய வைத்தவர்கள் சசிகலா, நடராஜன் தம்பதிதான். 

சசிகலா-நடராஜன்-ஜெயலலிதா பரஸ்பர லாபங்கள்!

கட்சியில் எந்தப் பொறுப்பை வாங்க வேண்டும்; வாங்கிய பொறுப்பை வைத்து என்ன செய்ய வேண்டும்; செய்ததை எப்படிச் செய்தியாக்க வேண்டும்; செய்தியை எப்படிப் பரபரப்பாக்க வேண்டும்; அந்தப் பரபரப்பால், உடனே நிகழப்போவது என்ன? எதிர்காலத்தில்  பலனாக விளையப்போவது என்ன... என்றெல்லாம், நடராஜன் சசிகலாவுக்குச் வகுப்பெடுத்தார். சசிகலா, அதை ஜெயலலிதாவுக்கு சொல்லிக் கொடுத்தார். அப்படி மூன்றுபேரும் சேர்ந்து குறிவைத்ததுதான் ஜெயலலிதாவுக்கான டெல்லி நாற்காலி. நடராஜன்-சசிகலா சொன்னவற்றை எல்லாம், ஜெயலலிதா பரிட்சித்துப் பார்த்தார்; பரிட்சார்த்த முயற்சிகள் அத்தனையும் பலன் கொடுத்தன. ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வில் செல்வாக்கும் பதவியும் கூடிக் கொண்டே போனது. சசிகலா-நடராஜன் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது; பரஸ்பரம் பலன்களை அறுவடை செய்து கொண்டனர்.  1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குப் பறந்தார் எம்.ஜி.ஆர். அந்த இக்கட்டான நேரத்தில், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வந்தது. முதலமைச்சர் பதவியை எம்.ஜி.ஆரிடம் பறிகொடுத்துவிட்டு,  7 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த கருணாநிதி களத்தில் இறங்கினார். இந்தத் தேர்தலில் எப்படியும் எம்.ஜி.ஆரிடம் இருந்து முதல் அமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுமல் அவர் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்து போராடுபவனுக்குத்தானே வேகம் அதிகம். அந்த வேகத்தில் அன்று இருந்தார் கருணாநிதி. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் இங்கில்லாமல், அமெரிக்காவில் இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த, கருணாநிதி தந்திரமாகப் பிரசாரம் செய்தார். ஒருபக்கம், “ஏழு ஆண்டுகள் என்னைத் தண்டித்தது போதாதா? இப்போதாவது வாய்ப்புக் கொடுங்கள்” என்று உருகினார் கருணாநிதி; மற்றொரு பக்கம், “என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்; எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அவரிடம் ஆட்சியைப் பத்திரமாக ஒப்படைக்கிறேன்” என்று இறங்கினார் கருணாநிதி. வேறோரு பக்கம், “எம்.ஜி.ஆர் இனி வரவேமாட்டார். அதனால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போடுவது செல்லாத ஓட்டுக்குச் சமம்” என்று தி.மு.ககாரர்கள் பிரசாரம் செய்தனர். “கருணாநிதியின் இந்தத் தந்திரப் பிரசாரத்துக்கு, நம் தலைவன் இல்லாத நேரத்தில், தமிழகம் பலியாகிவிடக்கூடாது” என்று ஒட்டுமொத்த அ.தி.மு.க-வினரும் உயிரைக்கொடுத்து வேலை பார்த்தனர். கடைசியாக, “எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இறந்துவிட்டார்” என்று திட்டமிட்ட வதந்தியைப் பரப்பினார்கள் சிலர். 

எம்.ஜி.ஆர்-ஜானகி வீடியோவில் ஜெயலலிதா!

mgr_rmv_fina_17052.jpg

எதிரிகளின் இந்தத் தந்திரத்தில், தமிழகம் குழம்பிப் போனது; அ.தி.மு.க கூடாரம் தோல்வி பயத்தில் கலங்கிப் போனது. கருணாநிதியின் தந்திரங்களை முறியடிக்க வேண்டுமானால், எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கிறார் என்பதை தமிழக மக்களுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க-வுக்கு உருவானது. எம்.ஜி.ஆருக்கு எப்போதும், வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்காக ஒரு முறியடிப்புத் தந்திரத்தைச் செய்தார். ஏ.வி.எம். சரவணன் உதவியிடன், “எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி, எப்போதும்போல் அவர் இயல்பாக பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்தார். அதில் எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்து, தமிழகம் முழுவதும் போட்டுக்காட்டினார். மக்களுக்கு இருந்த குழப்பம் தீர்ந்தது. தேர்தலில் அ.தி.மு.கவையே மீண்டும் வெற்றி பெற வைத்தனர். அமெரிக்காவில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். 

ஆர்.எம்.வீரப்பனின் இந்த வீடியோ வியூகம்தான், அந்தத் தேர்தலில் அ.தி.முக கரை ஏறியதற்கு முக்கியக் காரணம். அந்த வீடியோவில், ஜானகி அம்மாளோடு எம்.ஜி.ஆர் பேசுவது, சாப்பிடுவது போன்ற காட்சிகளும் இருந்தன. இதில் எப்படியாவது ஜெயலலிதா இடம் பிடித்துவிட வேண்டும் என்று நடராஜன் சசிகலாவிடம் சொன்னார். சசிகலா, அதை ஜெயலலிதாவிடம் அழுத்திச் சொன்னார். அதற்கான வேலைகளில் ஜெயலலிதாவை இறக்கிவிட்டனர். அவரும் யார் யாரிடமோ பேசி, “அந்த வீடியோ படத்தில், எப்படியாவது தன்னையும் இணைக்க வேண்டும்” என்றார். அது நடக்கவில்லை. அப்படியானால், “ஜானகியோடு எம்.ஜி.ஆர் இருக்கும் காட்சிகளையாவது வெட்டுங்கள்” என்றார். அதுவும் முடியவில்லை. அப்போது, ஜெயலலிதாவை ஒரு விரோதியாகவே பார்த்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் எல்லா கோரிக்கைகளையும் நொறுக்கித் தள்ளினார். கடைசியில், நடராஜன் வேறோரு வேலையில் இறங்கினார். “ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சேர்ந்து நடித்த படக் காட்சிகளை இணைத்து, அவற்றை தமிழகம் முழுவதும் ஒளிபரப்பலாம்” என்று அவர் திட்டம் வைத்திருந்தார். ஜெயலலிதாவும் அதற்குச் சம்மதித்தார். ஆனால், அதன்பிறகு, என்ன நினைத்தாரோ அந்த யோசனையை ஜெயலலிதா கைவிட்டுவிட்டார்.   

தேர்தல் வெற்றிக்கு காரணம் ஜெயலலிதா!

ஜெயலலிதா ஓய்ந்தாலும், நடராஜன் விடுவதாக இல்லை. “ஜெயலலிதாவின் பிரசாரம் சிறப்பாக இருந்தது; ஜெயலலிதா கூட்டங்களுக்கு, மக்கள் அலை அலையாய்த் திரண்டனர்; தேர்தல் வெற்றியில் ஜெயலலிதாவின் பங்கு பிரதானம்” என்பதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவரச் செய்திருந்தார் நடராஜன். இவை எதிர்வரும் நாட்களில், பிரமாதமாகப் பயன்படும் என்றும் ஜெயலலிதாவுக்குச் சொல்லி இருந்தார். அதேபோல, எம்.ஜி.ஆர் சிகிச்சை முடித்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், “அ.தி.மு.க பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு, ஜெயலலிதாவே காரணம்” என்பதுபோல, அவரிடம் சிலர் சொன்னார்கள். அவர்களை நடராஜனும் ஜெயலலிதாவும் அப்படிச் சொல்ல வைத்திருந்தனர். அந்த சமயங்களில் ஆதாரங்களாக, நடராஜன் முன்பே வெளிவர வைத்திருந்த செய்திகள் சமர்பிக்கப்பட்டன. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நடராஜன் மிகத் திறமையாக செய்து வைத்திருந்தார். 

டெல்லி தர்பாரில் ஜெயலலிதா!

nadaran_final2_17375.jpg

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கி, டெல்லிக்கு அனுப்பினார். தமிழகத்துக்கு அது பரபரப்புச் செய்திதான். ஆனால், “ஜெயலலிதா என்று ஒரு நட்சத்திரம் டெல்லி வானில் தோன்றி உள்ளது” என்பதை டெல்லிவாலாக்களுக்கு சுட்டிக்காட்ட ஒரு விளம்பரம் தேவை என்று உணர்த்தினார் நடராஜன். ஜெயலலிதாவுக்கும் அது சரியென்றுபட்டது. ஆனால், விளம்பரம் கொடுப்பதற்கும்கூட, காரண காரியங்கள் வேண்டும் அல்லவா? அதற்காக நடராஜன் அன் கோ ஒரு யோசனையை முன்வைத்தது. அறிஞர் அண்ணா, டெல்லி மேல்சபை உறுப்பினராக இருந்தபோது, அவர் அமர்ந்த இருக்கையை,  ஜெயலலிதாவை அமரவைப்பது என்பதுதான் அந்த யோசனை. இந்த யோசனை ஜெயலலிதாவுக்கும் பிடித்து இருந்தது. வழக்கம்போல், அதைச் செய்துதரச் சொல்லி, எம்.ஜி.ஆரை நெருக்கினார்; வேறு வழியில்லாமல், ஜெயலலிதா கேட்டதைச் செய்துகொடுக்க,  டெல்லி சீனியர்களுக்கு எம்.ஜி.ஆர் உத்தரவு அனுப்பினார். கடைசி நேரத்தில், நாடாளுமன்றச் செயலாளர் அலுவலகத்தில்  பேசி அவர்கள், அறிஞர் அண்ணா அமர்ந்த  இருக்கையை ஜெயலலிதாவுக்கு பெற்றுத் தந்தனர். அன்றே டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில், இந்தச் செய்திதான் பிரதானமாக கொண்டு செல்லப்பட்டது. பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் சூட்கேஸ் ஒன்றையும் ஜெயலலிதா அன்பளிப்பாக வழங்கினார். அதற்குப் பலன் இல்லாமல் இல்லை. எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி பரவலாக வெளியானது. எல்லாம் நடராஜன் அருள். டெல்லியில் ஜெயலலிதாவின் அரசியல் பார்வை விசாலமானது. அங்கு மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதை ஜெயலலிதா புரிந்து கொண்டார். மத்திய அரசின் அதிகாரத்தோடு ஒப்பிட்டால், மாநில அரசுக்கு ஒரு கார்ப்பரேஷனுக்கு இருக்கும் அதிகாரம்தான் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார். மத்திய அரசு நினைத்தால் மாநில அரசை எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிக்கலாம் என்பதையும் கண்டுகொண்டார். 

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியோடு நெருக்கம்!

jaya_indira_final_17119.jpg

டெல்லியில் இந்திரா காந்தியின் உதவியாளராக இருந்தவர் பார்த்தசாரதி அய்யங்கார். ஜெயலலிதா அவரை நெருங்கினார். அவர் மூலம், இந்திரா காந்தியை நெருங்கினார். அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்கள் யாருக்கும் சொல்லாமல், இந்திராகாந்தியை தனியாக சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார் ஜெயலலிதா. இந்தத் தகவல் அறிந்த எம்.ஜி.ஆர், அப்படி ஒரு சந்திப்பு நடக்காமல் தடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் முடியவில்லை. டெல்லியில் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, ஜெயலலிதா இந்திராகாந்தியை சந்தித்துவிட்டார். இதற்குப் பின்னால் நடராஜன் இல்லை. ஆனால், இந்திராகாந்தியிடம் ஜெயலலிதா பேசிய விஷயத்துக்குப் பின்னால் நடராஜன் இருந்தார். ஜெயலலிதா, இந்திராகாந்தியுடன் என்ன பேசினார் என்பதை எம்.ஜி.ஆரால் கடைசிவரை தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், கடைசியில் டெல்லி பத்திரிகையாளர்கள், அங்குள்ள சில அதிகாரிகளின் தயவில், எம்.ஜி.ஆர் கவனத்துக்கு அந்த விபரங்கள் கொஞ்சம் வந்தன. இந்திராகாந்தியிடம் பேசிய ஜெயலலிதா, “எம்.ஜி.ஆர் என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுகிறார்; காரணம், நான் ஒரு பெண் என்பதால், அவருக்கு அந்தப் பொறாமை வந்துள்ளது; எனவே, என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு தாங்கள் உதவ வேண்டும்; ஐ.நா-வுக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில், என்னையும் அனுப்ப வேண்டும்” என்று சொன்னதாக எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் தகவல்கள் கிடைத்தன. இதுபோன்ற ஆலோசனைகளை ஜெயலலிதாவுக்கு கொடுப்பது யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையில் அடுத்து இறங்கினார் எம்.ஜி.ஆர். அப்போது, சசிகலா-நடராஜன் என்ற பெயர்கள் அவர் காதுக்குப் போகவில்லை. ஆனால், வேறோரு பெயர் எம்.ஜி.ஆரின் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தப் பெயர் சேலம் கண்ணன். எம்.ஜி.ஆரால், டெல்லி ராஜ்ய சபா உறுப்பினராக அனுப்பி வைக்கப்பட்டவர். டெல்லியில் ஜெயலலிதாவுக்கு சில உதவிகளை சேலம் கண்ணன் செய்தது உண்மைதான்; அங்குள்ள மற்ற அ.தி.மு.க எம்.பிகளோடு,  ஜெயலலிதா முரண்பட்டாலும்... மற்றவர்கள் ஜெயலலிதாவோடு முரண்பட்டாலும், சேலம் கண்ணன் அவரை முழுமையாக ஆதரித்தார். அதனால், தனது டெல்லி வீட்டுக்கு வந்து பேசும் அளவுக்கு சேலம் கண்ணனுக்கும் ஜெயலலிதா இடம் கொடுத்திருந்தார். ஜெயலலிதாவோடு தனக்கு இருக்கும் இந்த நட்பை மிகப்பெருமையாக சேலம் கண்ணன் மற்ற அ.தி.மு.க எம்.பிகளிடம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைத்து பெருமிதத்தோடு சொல்வார். அதில் அவருக்கு ஒரு ஆனந்தம். ஆனால், அதுவே அவருக்கு அவஸ்தையையும் கொண்டு வந்தது. ஆம்... ஜெயலலிதாவுக்கு டெல்லியில் காய் நகர்த்த சேலம் கண்ணன்தான் ஆலோசனைகள் கொடுக்கிறார் என்று எம்.ஜி.ஆரிடம் மற்றவர்கள் போட்டுக் கொடுத்தனர். எம்.ஜி.ஆரும் அதை அப்படியே நம்பினார். ராமாவரம் தோட்டத்துக்கு சேலம் கண்ணனை வரவழைத்து,  தனது வழக்கமான சிகிச்சையை கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகு, நீண்ட நாட்களுக்கு சேலம் கண்ணன் ஒடுங்கிப் போய் இருந்தார். உண்மையில் சேலம் கண்ணன் இதுபோன்ற ஆலோசனைகளை ஜெயலலிதாவுக்குச் சொல்பவர் அல்ல. அந்தக் காலத்தில் அவருக்கே, அவ்வளவு அனுபவமும் உருவாகி இருக்கவில்லை. சேலம் கண்ணனைப் பொறுத்தவரை, எல்லா விஷயத்திலும்  ஜெயலலிதாவை முரட்டுத்தனமாக ஆதரித்தவரே தவிர, ஐடியாக்கள் கொடுத்தவர் அல்ல. அதைச் செய்தவர்கள் சசிகலாவும் நடராஜனும். இந்த நேரத்தில், டெல்லியில் இந்திராவின் காலம் முடிந்துபோனது. அவர் தன் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு,  டெல்லியில் இருந்து இந்தியாவை ஆளும் பிரதமராக ராஜிவ் காந்தி வந்திருந்தார். ஜெயலலிதா இப்போது, ராஜிவ் காந்தியை நெருங்கி தன் அரசியல் முன்னேற்றத்துக்கு உதவக் கோரிக்கை வைக்கும் முயற்சிகளில் இறங்கி இருந்தார் அல்லது சசிகலா-நடராஜனால் இறக்கிவிடப்பட்டு இருந்தார்.  

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/75612-delhi-darbar-of-sasikala-and-natarajan-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---8.art

Link to comment
Share on other sites

“ராஜீவ் சொன்ன ரகசியம்” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம் - 9

 

sasifolder1_11161.jpg

மெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில், எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் கனவு, நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. நடராஜனும் சசிகலாவும் ஜெயலலிதாவிடம் இருந்த அந்த நெருப்பை ஊதி பெருந்தீயாய் வளர்த்துக் கொண்டிருந்தனர். அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு ஆதரவானவர்களை சசிகலாவும் நடராஜனும் ஒன்று திரட்டி ஆதரவு கேட்டனர். அதே நேரத்தில், புதிய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்கலாம் என்ற எண்ணத்தையும் ஜெயலலிதாவின் சிந்தனையில் ஏற்றி வைத்தனர்.  

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்..  தமிழகத்தில் ஜெ-சசி-நடராஜன்...

சசிகலா

“எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் எப்படி இருக்கிறார்?” என்ற விஷயம் மட்டும், ஜெயலலிதா-சசிகலா-நடராஜன் என்ற மூன்று பேரின் முயற்சிகளுக்கு, முட்டுக்கட்டையாக இருந்தது. எம்.ஜி.ஆர் குணம்பெற்றுத் திரும்பிவிடுவாரா? திரும்பமாட்டாரா? என்பது பற்றி இவர்களுக்குத் தெளிவான தகவல் கிடைக்கவில்லை. அதனால், இவர்களின் முயற்சிகளில் கொஞ்சம் தேக்கம் இருந்தது. “ஒருவேளை எம்.ஜி.ஆர் நலமுடன் திரும்பிவிட்டால்... அவருக்கு எதிராக, தாங்கள் எடுத்த முயற்சிகள் அவருக்குத் தெரிந்துவிட்டால்.. தங்களை ஒழித்துக்கட்டிவிடுவார்” என்ற அச்சம் ஜெயலலிதா, சசிகலா, நடராஜனுக்கு இருந்துகொண்டே இருந்தது. இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதைப்போல, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களுக்கு குழப்பம் மிஞ்சியது. ஏனென்றால், அவர்களுக்கும்  எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றிய உருப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஜெயலலிதா-சசிகலா-நடராஜன் கூட்டணிக்கும், கட்சியின் சீனியர்களுக்கும் இப்படிப்பட்ட இரும்புத்திரையைப் போட்டு வைத்தவர் வேறு யாரோ அல்ல... எம்.ஜி.ஆரேதான் போட்டு வைத்தார். தனது உடல்நிலை பற்றி, தமிழகம் அறிந்து கொள்ள இருந்த வழிகள் அத்தனையையும், எம்.ஜி.ஆர் இறுக்கமாக பூட்டிவைத்தார்; நேரில் சந்திக்கப்போனவர்களையும்  குழப்பிவைத்து திருப்பி அனுப்பினார். 

எம்.ஜி.ஆர் நடிப்பில் ஏமாந்த சிவாஜி!

“தமிழகத்தில் இருந்து, தன்னைப் பார்க்க வருபவர்களிடம், தான் நலமாக இல்லை; குணமடைந்து திரும்புவது கடினம்” என்பதைப்போலவே எம்.ஜி.ஆர் காட்டிக் கொண்டார். அதை நம்பி ஏமாந்தவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். எம்.ஜி.ஆரை நலம் விசாரிக்க சிவாஜி கணேசன் அமெரிக்கா சென்றபோது, “தன் உடல்நிலை மிக மிக மோசமான நிலையில் இருப்பதாகவே” எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆரின் அந்த தேர்ந்த நடிப்பை, நடிப்பு பாடத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சிவாஜியால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழகம் திரும்பிய சிவாஜி கணேசன், “எம்.ஜி.ஆர் மிக மோசனமான நிலையில் இருக்கிறார். அவர் மீண்டுவருவது மிகச் சிரமம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தகவல் சொன்னார். அந்த அளவுக்கு, இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் திறமையாகவும் கவனமாகவும் செயல்பட்டார்.

mgr_america_13204.jpg

சிவாஜியைப்போல, தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் கம்பெனி அதிபர் சையது யூசுப்பும், எம்.ஜி.ஆரைப் பார்க்க அமெரிக்க சென்றார். அவர்போனபோது, எம்.ஜி.ஆர் கண்ணையே திறக்கவில்லை. சையது யூசுப்பும், “தனக்கு நெருங்கிய வட்டத்தில் எம்.ஜி.ஆர் குணமடைவது கடினம்” என்றே சொல்லிவைத்தார். எம்.ஜி.ஆர் குறித்து இப்படிப்பட்ட தவறான தகவல்களை எம்.ஜி.ஆரே பரப்பினார். “தான் இல்லாதபோது, தமிழகம் என்ன பேசுகிறது... தன் எதிரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள்... தன்னைச் சுற்றி இருப்பவர்கள், என்னவிதமாக நிறம் மாறுகிறார்கள்” என்பதை அறிந்து கொள்ள எம்.ஜி.ஆர் நடத்திய நாடகம் இது. தன்னைப் பற்றி எந்தத் தகவலையும் தமிழகத்துக்கு வெளிப்படுத்தாத எம்.ஜி.ஆர், தமிழகத்தில் நடப்பதைத் தான் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கவனமாகச் செய்து வைத்திருந்தார். காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ஒரு ரிப்போர்ட், ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்து ஒரு ரிப்போர்ட் என்று இரண்டு ரிப்போர்ட்களை எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்துகொண்டே வாங்கினார். அவற்றைக் கவனமாகப் படித்து, இரண்டு ரிப்போர்ட்களும் முரண்படும் விஷயங்களில், உண்மைத் தெரிந்துகொள்ள, மூன்றாவதாக ஒரு அணியையும் ரகசியமாக ஏற்படுத்தி வைத்திருந்தார். இப்படிச் செய்ததில், எம்.ஜி.ஆருக்கு ஒரு ஆனந்தம்... அல்லது அது அவருடைய ராஜதந்திரம். 

நடராஜன் ஒரு நாகப்பாம்பு: ஆர்.எம்.வீ

final_3_13485.jpg

எம்.ஜி.ஆரின் தந்திரங்களை அறியாத, ஆர்.எம்.வீரப்பன், “கட்சியைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள, எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறார்” என்று உதட்டளவில் சொன்னார்.  ஆனால், மனதளவில் அவரும் குழப்பத்தில்தான் இருந்தார். அதனால்தான், “எம்.ஜி.ஆர் இனி பழைய கார்களை பயன்படுத்த முடியாது” என்று நினைத்து, பிரத்யேகமாக ஒரு புதிய வாகனத்தை ஏற்பாடு செய்து தயாராக வைத்திருந்தார்(அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்த அந்த வாகனத்தைத் எம்.ஜி.ஆர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவர் தனது வழக்கமான காரையே பயன்படுத்தினார் என்பது தனிக்கதை). சிவாஜியின் வாக்குமூலம், சையத் யூசுப் சொன்ன தகவல்கள், ஆர்.எம்.வீரப்பன் தயார் செய்த புதிய வாகனம் போன்ற விஷயங்கள் எல்லாம், ஜெயலலிதா,சசிகலா,நடராஜனுக்கு கூடுதல் தெம்பை அளித்தன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்கும் முயற்சிகளில் துணிந்து இறங்கினார்கள். “எம்.ஜி.ஆர் திரும்பமாட்டார்... அடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாதான்” என்ற தங்களின் பிரச்சாரத்தை கட்சிக்குள் தீவிரப்படுத்தினார்கள்; ஜெயலலிதாவின் ஆதரவாளர்களை கட்சிக்குள் ரகசியமாக ஒன்று திரட்டினார்கள்; அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி-ஜெயலலிதா சந்திப்புக்கும் நடராஜன் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். இவற்றை எல்லாம் அறிந்து ஆர்.எம்.வீரப்பன் கொதித்துப்போனார். தனக்கு வேண்டியவர்களிடம் நடராஜனை திட்டித் தீர்த்தார். “நடராஜனை வளர அனுமதித்தது... நாகப் பாம்புக்கு பால் வார்த்ததற்குச் சமம்” என்று தன் மனவேதனையை நெருக்கமானவர்களிடம் கொட்டித் தீர்த்தார். கட்சியில் இருந்து ஜெயலலிதாவை ஓரம்கட்டுவதற்கான சில வேலைகளைத் துணிந்து செய்தார். டெல்லியில் உள்ள  தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். அதோடு, அ. தி.மு.க-வின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சீனியர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, ராஜிவ் காந்தியை சந்திக்க ஆர்.எம்.வீரப்பனும் டெல்லி போனார். 

ராஜீவ் சொன்ன ரகசியம்!

rajiv_jaya_1_13333.jpg

தமிழ்நாடு இல்லத்தில் இடம் மறுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, நடராஜன்  பத்திரிகையாளர் சோலையையும் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார். பத்திரிகையாளர் சோலை, டெல்லி அசோக ஹோட்டலில் ஜெயலலிதாவுக்கு ஒரு அறையைத் தயார் செய்து கொடுத்ததோடு, பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் உதவினார். பத்திரிகையாளர் சோலை, வினோபாவின் பூ தான இயக்கத்தில் இருந்தவர். அப்போது, அந்த இயக்கத்தில் இருந்த நிர்மலா தேஷ் பாண்டே என்பவருடன் இணக்கமான நட்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த நிர்மலா தேஷ் பாண்டே, ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். அவர் மூலம் பேசி,  ராஜீவ் காந்தி-ஜெயலலிதா சந்திப்புக்கு பத்திரிகையாளர் சோலை ஏற்பாடு செய்தார். இந்திராகாந்தியின் உதவியாளராக இருந்த பார்த்தசாரதி அய்யங்கார் மூலமும் நடராஜன் விடாமல் முயற்சி செய்தார். இரண்டில் ஒன்றின் மூலம், ஜெயலலிதாவுக்கு ராஜிவ் காந்தியின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. ராஜிவ் காந்தியைச் சந்தித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் திரும்புவாரா? என்பது சந்தேகம்தான். இந்த நேரத்தில் ஆர்.எம்.வீரப்பன் போன்ற சீனியர்கள், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்துகிறார்கள்; என்னை ஓரம்கட்டப் பார்க்கிறார்கள்; அதனால் எனக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டு சிரித்த ராஜிவ் காந்தி, “எம்.ஜி.ஆர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இப்போது இல்லை. இன்னும் 10 நாட்களில் இந்தியா திரும்பிவிடுவார். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். ராஜீவ்காந்தி சொன்னதுபோலவே, எம்.ஜி.ஆர் அடுத்த பத்து நாட்களில் திரும்பி வந்தார். ஜெயலலிதா திகைத்துப்போனார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய எம்.ஜி.ஆர், “தான் இல்லாதபோது கட்சிக்குள் தனக்கு விரோதமாக செயல்பட்டவர்களை கண்டித்துக்கொண்டும், களையெடுத்துக் கொண்டும் இருந்தார்.” அவருடைய அக்னிப் பார்வையில் இருந்து வழக்கம்போல், தப்பித்துக்கொண்ட ஜெயலலிதா, மீண்டும் ராஜிவ் காந்தியை சந்திக்கும் முயற்சிகளில் வேகம் காட்டினார்.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/75829-secret-conversation-between-rajiv-and-jaya-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---9.art

Link to comment
Share on other sites

சசிகலா, ஜெயலலிதாவின் மாய உலகம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம் - 10

 

 

345_10323.jpg

“இழப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், ‘பகுத்தறிவுவாதம்’ வீரியமாய் வேலை செய்யும். “பெறுவதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், சோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகம் உள்ளிட்ட இத்யாதிகள், தந்திரமாக வேலை செய்யும். பணம், பதவி, அதிகாரத்தோடு வலம் வருபவர்கள், அவர்களின் சுகபோகங்களுக்கு காரணமானவற்றில், எது ஒன்றையும் இழந்துவிடக்கூடாது என்று துடிப்பார்கள். அந்தத் துடிப்பின் பதட்டத்தில் ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றை நாடுவார்கள்; இருப்பதைவிட அதிகமாகப் பெற ஜாதகத்தை அலசுவார்கள்; தகுதிக்கு மீறியதை அடைய மாயம், மாந்தீரிகங்களில் வழி தேடுவார்கள்.

346_10400.jpg

இவை எல்லாம், பலிக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. அவர்களுக்குச் சாதகமாக சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளே அவர்களுக்குத் தேவை. அதுவே, அவர்களை ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கும். இப்படிப்பட்ட மாய மயக்கத்தையும் ஜெயலலிதாவுக்கு சசிகலா ஊட்டிவிட்டார். ஜெயலலிதா-சசிகலா நட்பின் வரலாற்றைப் புரட்டினால், அதில் ஜோதிடம், ஜாதகம், மாயம்,  மாந்தீரிகம், யாகம், பூஜை-புனஸ்காரங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் கொட்டிக் கிடக்கும்.

கைரேகை ஜோதிடம் எம்.ஜி.ஆர்!

ஜெயலலிதா, திரைவானில் நட்சத்திரமாக மின்னிய 60-களில், அவரிடம் இதுபோன்ற விஷயங்கள் குறித்து ஆர்வம் எதுவும் ஏற்பட்டு இருக்கவில்லை. 70-களுக்குப் பிறகு, திரைவானில் மங்கி, நாடக மேடைகளில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதும்,  இதுபோன்ற விஷயங்களில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை எதுவும் துளிர்விட்டு இருக்கவில்லை. ஆனால், 1982-க்குப் பிறகு ஜெயலலிதாவின் கவனம் ஜாதகம், ஜோதிடம், மாயம், மாந்தீரிகம் பக்கம் திரும்பியது. அவர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தது, சசிகலா அவருடன் நெருங்கியது, ஜோதிடம், ஜாதகத்தில் அவருக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது என்ற மூன்றும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தன. ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட இந்தப் புதிய மாற்றத்துக்கு காரணகர்த்தாக்கள்,  எம்.ஜி.ஆர், சசிகலா என்ற இருவரே. 

mgr_27_15428.jpg

எம்.ஜி.ஆர்  ஜோதிடத்தில் அபார நம்பிக்கை உள்ளவர். இதை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கமாட்டார்கள். அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, அவர் ஜோதிடத்தையும் துணைக்கு வைத்துக் கொள்வார். மேலும், அவரே கைரேகை பார்ப்பார். விளையாட்டாக ஆரம்பித்து, ஒரு காலகட்டத்தில் மற்றவர்களுக்கு பலன் சொல்லும் அளவுக்கு அதில் எம்.ஜி.ஆர் தேர்ச்சி பெற்றிருந்தார். எம்.ஜி.ஆரின் இந்த நடவடிக்கை அவருக்கு நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் ஆச்சர்யத்தையும், இலேசான ஆர்வத்தையும் துளிர்விட வைத்தது. அதை, சசிகலா பெரும் விருட்சமாக ஜெயலலிதாவிடம் வளர்தெடுத்தார். 

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இதில் என்ன பங்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சசிகலாவுக்கு இதுபோன்ற விஷயங்களில் இருந்த நம்பிக்கையில் அவர் பெரிதாக தலையிடவில்லை. சசிகலா ஒவ்வொரு அசைவையும் குறிபார்த்து, ஏடு படித்து, ஜோதிடம் கேட்டு,  மாயம் வைத்து,   மாந்தீரிகம் செய்தே சாதிக்க முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கை உள்ளவர். அவருடைய கணவர் நடராஜனின் பகுத்தறிவு வாதங்கள் எதுவும் சசிகலாவிடம் எடுபடவில்லை என்பதே உண்மை.

இதுபோன்ற விஷயங்களில் சசிகலாவின் ‘மாயம்மா’, அவருடைய  அண்ணி சந்தான லெட்சுமிதான். இவர் சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி. சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்ற நிலையில் ஜெயலலிதா இருந்தபோது, சந்தான லெட்சுமியின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்ற நிலையில் சசிகலா இருந்தார். சந்தானலெட்சுமி சொன்ன விஷயங்களை சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சொன்னார்.  ஜாதகம், ஜோதிடம், மாயம், மாந்தீரிகம், யாகம் போன்ற விஷயங்களினால் ஜெயலலிதா மனதில் மாயக் கனவுகளை சசிகலா விதைத்தார்; அவற்றில் சில நனவானபோது, ஜெயலலிதா அதில் மயங்கினார்.  அவருக்கு அது பிடித்தமானதாக இருந்தது. இப்படி ஏற்பட்ட மயக்கம், ஜெயலலிதாவின் மனதை ஜோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகத்துக்குள் கட்டிப்போட்டது; இதன் மூலம் சசிகலாவிடம் ஜெயலலிதா இறுக்கமாக பிணைக்கப்பட்டார். “சாதரணப் பணிப்பெண்ணாக வந்த சசிகலாவை, ஜெயலலிதா இவ்வளவு நம்புவதற்கு, ஜாதகமும், மாயமந்திரங்களும்தான் காரணம்” என்று சொல்கிறவர்கள், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கட்சிக்குள்ளும் இன்னும் இருக்கிறார்கள். 

ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!

jaya_sasi_27_15123.jpg

சசிகலா, ஜெயலலிதாவின் ஜாதகத்தையும் தனது ஜாதகத்தையும் ஏற்கெனவே கணித்து வைத்திருந்தார். அதில், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் யோகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அதைச் சொல்லிச் சொல்லியே ஜெயலலிதாவுக்கு ருசி ஏற்றி வைத்திருந்தார். அதன்பிறகுதான், ஜெயலலிதா தன்னுடைய ஜாதகங்களை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராகப்போய் பலன் கேட்டார். கேட்ட இடங்களில் எல்லாம், ஜெயலலிதாவின் ஜாதகத்துக்கு சாதகமான வார்த்தைகளே வந்து விழுந்தன. அதில் அவர் மனம் குளிர்ந்து போனார். அந்த நேரத்தில், டெல்லியில் ஜாதகம் பார்ப்பதில் வல்லவராக இருந்தவர், ‘பாபாஜி’ பத்திரிகை ஆசிரியர் லெட்சுமண் தாஸ். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் பத்தி எழுதக்கூடியவர்; டெல்லி பிரபலங்களுக்கு மிக நெருக்கமானவர்;  முன்னாள் பிரதமர்கள் ராஜிவ் காந்தி, சந்திரசேகர், அர்ஜூன் சிங் போன்றவர்களுக்கு ஜாதகம் பார்த்துப் பலன் சொல்பவர்; தமிழ்நாடு காங்கிரஸில் வாழப்பாடி ராமமூர்த்தியோடு தொடர்பில் இருந்தவர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 30 நாட்களில் மரணம் அடைவார் என்று எழுதிக் கொடுத்தவர் என லெட்சுமண்தாஸ் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். அவரிடம் ஜெயலலிதா ஜோதிடம் கேட்க ஆர்வமாக இருந்தார். ஆனால், தான் ஜாதகம் கேட்கும் தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். அதனால், தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் மூலம், தனது ஜாதகத்தைக் கொடுத்து அனுப்பினார். லெட்சுமணன்தாஸ், “ஜெயலலிதா எம்.பி. பதவியைவிட மிகப்பெரிய பதவியை அடைவார்; ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு; ஜெயலலிதா எந்த அளவுக்கு புகழோடு இருந்தாரோ, அதே அளவுக்கு மக்களால்  தூற்றவும் படுவார்; ஜெயலலிதாவுக்குப் பில்லி சூனியங்களால் ஆபத்து உண்டு” என்று கணித்துக் கொடுத்தார்.

“தனக்கு ஆபத்தை உருவாக்கப்போகும், அந்தப் பெண், ஜானகி அம்மாள்தான்” என்று ஜெயலலிதா அப்போது நம்பினார்.  இதற்குப் பிறகு, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஜெயலலிதா தன்னுடைய ஜாதகத்தைப் பரிட்சித்துப் பார்ப்பார். ஒருகட்டத்தில் அவரே, ஜோதிடம் கற்றுக் கொள்ள முயன்றார். ஆனால், அது ஈடேறவில்லை. ஆனால், நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. சிவகங்கை முத்துக்காமாட்சி, கொக்கிரகுளம் பீர் முகமது, ரவி விளங்கன் என்று குறி சொல்பவர்கள் பலரை ஜெயலலிதா அறியத் தொடங்கினார். ஜெயலலிதாவின் கவனத்துக்கு இவர்களை ஒருவர் மாற்றி ஒருவராக சசிகலா அறிமுகம் செய்து கொண்டே இருந்தார். இப்படித் தொடர்ந்த நம்பிக்கைதான், கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கு வருபவர்களிடம் கூட, ஜாதகத்தையும் கேட்டு வாங்கும் பழக்கம் இப்போதும் அ.தி.மு.க-வில் இருக்கிறது.

தமிழக முதல்வர் சசிகலா!

http---photolibrary.vikatan.com-images-g

ஜெயலலிதாவின் மனம் மந்திரவாதத்தில் கொண்ட நம்பிக்கையில் மயங்கிக்கிடந்தது. அதைத் தெளியவிடாமல் சசிகலா வைத்திருந்தார். மித்ரன் நம்பூதிரியிடம் குறி கேட்பது, வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடு பார்ப்பது, சேலையூர் ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பது, சோட்டானிக்கரையில் மாயம் செய்வது, கானாடுகாத்தானில் மாந்தீரிகம் செய்வது, கொல்லிமலைச் சாமியார்களிடம் வாக்கு கேட்பது என்று நீண்டு, ஜோதிடக்காரர்களையும், மந்திரவாதிகளையும் தேடி வெளிமாநிலங்களுக்குப்போகும் நிலை உருவானது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஜோதிடர், காழியூர் நாராயணன். இவர்தான், 2016-வரை ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கை அசைக்க முடியாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தவர் (1994-ல் வெளிவந்த தனது புத்தகத்திலேயே இதை வலம்புரிஜான் குறிப்பிட்டுள்ளார்).

தனது ஜாதகத்தின்படி வைணவத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால்தான், ஜெயலலிதா அடிக்கடி திருப்பதிக்குச் செல்ல ஆரம்பித்தார். கட்சிக்கு சின்னம் சேவலா? புறவா? என்று வந்தபோது, அதையும் திருப்பதி ஏழுமலையான் முன்பு சீட்டுக்குலுக்கிப்போட்டுத்தான் சசிகலா, சேவல் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதாவுக்காக இத்தனை ஜோதிடர்களையும், மாந்தீரிகர்களையும் ஏற்பாடு செய்யும் சசிகலா, தன்னுடைய ஜாதகத்தைக் கணிக்காமல் இருப்பாரா? சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர், வடுகப்பட்டி தர்மராஜன். அவர், “ஒரு காலத்தில் சசிகலா, தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகிவிடுவார்” என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருந்தார். வடுகப்பட்டி தர்மராஜன் அன்று போட்ட புதிருக்கு பதில் கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் வடுகப்பட்டி தர்மராஜன் சொன்னது பலிக்குமா? பலிக்காதா? என்பது தெரிந்துவிடும்.

http://www.vikatan.com/news/coverstory/76123-secret-world-of-jaya-and-sasikala--how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-10.art

Link to comment
Share on other sites

'எங்கே என் கடிதம்?' ஜெயலலிதாவின் ருத்ரதாண்டவம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம்-11

 

sasiki_16205.jpg

 

ஜெயலலிதா- சசிகலா நட்பு, உலகின் பார்வைக்கு பட்டவர்த்தனமாகத் தெரிவது. ஆனால், அதற்குள் தெரியாமல், மறைந்து, கரைந்து இருப்பது, சசிகலாவின் கணவர் நடராஜனின் ‘ரோல்’. ‘சசிகலா தான் இனிமேல், தனக்கு எல்லாம்’ என்ற  எண்ணத்தை நோக்கி, ஜெயலலிதாவைத் தள்ளிய காரணங்கள், ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நடராஜன் இருந்தார். தூக்கத்திலும் விழித்திருந்து, விதியை மாற்றும் நடராஜன், ஜெயலலிதா எழுதிய ஒரே ஒரு கடிதத்தை வைத்து 4 காரியங்களைச் சாதித்துக் கொண்டார். சசிகலா-ஜெயலலிதா நட்பை மேலும் நம்பிக்கைக்கு உரியதாக்கியது, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது, தி.மு.க கூடாரத்தையும், அதன் தலைவர் கருணாநிதியையும், உச்சக்கட்ட எரிச்சலாக்கியது, தமிழகம் முழுவதும் தன்னை ஹீரோவாக்கிக் கொண்டது என்று நான்கு காரியங்களைச் சாதித்துக்காட்டினார். 

அந்த நாள்: 1989 மார்ச் 15

‘‘என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்; அரசியலைவிட்டு முழுமையாக ஒதுங்குகிறேன்’’ என்ற அர்த்தத்தில் ஜெயலலிதா ஏழு கடிதங்களை எழுதினார். அந்த நாள், மார்ச் 15, 1989. 

சசிகலா

 

அன்று, சசிகலா, சென்னையில் இருந்து, திருத்துறைப்பூண்டிக்குக்  கிளம்பினார். தன் தயார் வீட்டுக்குக் கிளம்பிய சசிகலாவை, நடராஜன், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று  வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினார். அப்போது, சசிகலா-நடராஜனின் வீடு, ஆழ்வார்பேட்டை, பீமண்ணா கார்டன் தெருவில் இருந்தது. போயஸ் கார்டன் வீட்டு மாடியிலும், நடராஜனுக்கு நிரந்தரமாக ஒரு அறை இருந்தது. ஆனால், சசிகலா ஊரில் இருக்கும்போது மட்டும்தான், நடராஜன் அங்கு தங்குவார். சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்றால், நடராஜன் அங்கு தங்கமாட்டார். அன்றைய தினமும், சசிகலா, ஊருக்குக் கிளம்பிவிட்டதால், இரவு நேராக ஆழ்வார்பேட்டை வீட்டுக்குச் சென்றார் நடராஜன். அவர் வீட்டுக்குள் நூழைந்ததும், தொலைபேசியில்  அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், போயஸ் கார்டனில், ஜெயலலிதாவின் ப்யூன். அவரும் நடராஜன் நியமித்த ஆள்தான். “மேடம், திடீரென டிரைவரை அழைத்து, 7 கடிதங்களைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்றில் சபாநாயகர் முகவரி இருந்தது; மற்ற 6 கடிதங்களில் பத்திரிகை அலுவலகங்களின் முகவரி இருக்கிறது; கடிதத்தில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை” என்று நடராஜனுக்கு வரலாற்றுத் தகவலைச் சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

amma-1_14128.jpg

“பத்திரிகை அலுவலகம், சபாநாயகர் விலாசத்துக்கு இந்த நேரத்தில், ஜெயலலிதா கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் இதுபற்றி, சசியிடம் ஜெயலலிதா எதுவும் சொல்லவில்லை, ஜெயலலிதா சொல்லி இருந்தால், சசி தன்னிடம் நிச்சயம் அதைச் சொல்லி இருப்பார். நம்மிடமும் ஜெயலலிதா எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால், சசி, ஊரில் இல்லாத நேரத்தில், ஜெயலலிதா இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால், எதையோ நமக்குத் தெரியாமல் செய்யப் பார்க்கிறார். இதில் நிச்சயமாக ஏதோ வில்லங்கம் இருக்கிறது” என்று மின்னலைப்போல் கணித்த நடராஜன், கச்சிதமாக காரியத்தில் இறங்கினார். போயஸ் கார்டனில் கிளம்பிய கார் போகும் எந்த வழியில் போகும் என்பதை யூகத்தில் கணித்த நடராஜன், உடனடியாக தன்னுடைய ஆட்கள் சிலரை அனுப்பினார். “ஜெயலலிதாவின் காரை வழியிலேயே மடக்கி, டிரைவரிடம் இருக்கும் கடிதங்கள் ஒன்றுவிடாமல் பறித்துக் கொண்டு வாருங்கள்” என்று அவர்களுக்கு  உத்தரவிட்டார்.  

நடராஜன் அனுப்பிய ஆட்கள், “ஜெயலலிதா வீட்டில் இருந்து கிளம்பிய காரை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகில் மடக்கினார்கள்.  டிரைவரிடம் இருந்த கடிதங்களைப் பறித்தார்கள். அவற்றைக் கொண்டுவந்து நடராஜனிடம் கொடுத்துவிட்டு, தலையைச் சொரிந்து கொண்டு நின்றவர்களுக்கு, 500 ரூபாயை கொடுத்தனுப்பினார் நடராஜன். அந்தப் பணம், ஊருக்குக் கிளம்புவதற்கு முன், நடராஜனின் செலவுக்கு, சசிகலா கொடுத்துச் சென்ற பணம். அதன்பிறகு, கடிதத்தைப் பிரித்துப் படித்துப்பார்த்த நடராஜன் அதிர்ந்துபோனார். கடிதத்தில், “நான் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன். என்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதி கையெழுத்துப்போட்டு இருந்தார் ஜெயலலிதா. அதைப் பத்திரமாக வீட்டுப் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, போயஸ் கார்டனுக்குப் போன் போட்டார். அங்குள்ள வேலையாட்கள் அனைவரையும், “கிளம்பிவிடுங்கள். யாரும் அங்கு இருக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு  வழக்கம்போல், தனது வேலைகளைப் பார்க்கப்போய்விட்டார். மறுநாள் வழக்கம்போல், போயஸ் கார்டன் வீட்டுக்குப்போய் தன் வேலைகளையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் நடராஜன். ஜெயலலிதாவிடம் இவரும் எதையும் சொல்லவில்லை. ஜெயலலிதாவும் நடராஜனிடம் எதையும் கேட்கவில்லை.

எங்கே என் கடிதம்? ருத்ரதாண்டவம் ஆடிய ஜெயலலிதா!

காலையில் பத்திரிகைகளைப் புரட்டிய ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி. “எந்தப் பத்திரிகையிலும் தன்னுடைய ராஜினாமா செய்தி வரவில்லை” என்று கொந்தளித்தவர், முதல் நாள் கடிதம் கொடுத்து அனுப்பிய டிரைவரைப் பிடித்து விஷயத்தைக் கேட்டார்.  நடராஜனின் வேலைகள், அனைத்தையும் டிரைவர் மூலம் தெரிந்துகொண்ட ஜெயலலிதா, போயஸ் கார்டனில் நடராஜனைத் தேடினார். ‘அவர் கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டார்’ என்று தகவல் அறிந்து உடனே, நடராஜனின் ஆழ்வார்ப்பேட்டை  வீட்டுக்கு ஆத்திரத்துடன் கிளம்பிப்போனார். அங்குபோய், ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். அந்தநேரத்தில், நடராஜனுடன் அங்கு பேசிக் கொண்டிருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவின் கோபத்தைப் பார்த்து ஓடி ஒளிந்துவிட்டனர்.  “எங்கே என் கடிதம்? அதைப் பறிக்க நீங்கள் யார்? என்னுடைய முடிவுகளில் நீங்கள் ஏன் தலையீடுகிறீர்கள்?" என்று கேட்டு அவர் போட்ட சண்டையில், ஆழ்வார்பேட்டை பீமண்ணா கார்டன் தெரு அலறியது. நடராஜன் வீட்டை இரவும் பகலுமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த, உளவுத்துறை போலீஸுக்கு, மிகப் பெரிய இரை கிடைத்தது. நடராஜன், ஜெயலலிதாவுக்குள் நடக்கும் தகராறு பற்றி உடனே மேலிடத்துக்கு தகவல் கொடுத்தனர். ஜெயலலிதாவின் கோபத்தைப் பார்த்து நடராஜன் ஆச்சரியப்படவில்லை. அது அவர் அறிந்ததுதான். “உங்கள் கடிதம் பீரோவில் இருக்கிறது. பீரோவைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சசி ஊருக்குப் போய் இருக்கிது. அது வந்ததும் பேசிக் கொள்ளலாம். நீங்கள் இப்போது கிளம்புங்கள்” என்று சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். ஜெயலலிதாவின் ஆத்திரம் அடங்கவில்லை. திருத்துறைப்பூண்டிக்கு போன் செய்து, சசிகலாவைப் பிடித்தார்.  ‘எங்கே என் கடிதம்? பீரோ சாவி யாரிடம் உள்ளது’ என்று ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு சசிகலாவிடம் எந்தப் பதிலும் இல்லை. உடனே, நீ கிளம்பி சென்னை வா... என்று அவருக்கு உத்தரவுபோட்டார் ஜெயலலிதா. 

jaya_sasi_first_sized_14343.png

சசிகலா 17-ம் தேதி கிளம்பி சென்னை வந்தவர், நேராக ஜெயலலிதாவைப் போய்ச் சந்தித்தார். ஜெயலலிதா கேட்கும் எந்தக் கேள்விக்கும் சசிகலாவிடம் பதில் இல்லை. “நான்போய் அவரிடம் விசாரித்துவிட்டு வருகிறேன்” என்று சொன்ன சசிகலா ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு வந்து நடராஜனிடம் விபரங்கள் கேட்டார். “கடிதம் வீட்டில்தான் இருக்கிறது. ஜெயலலிதாவிடம் பேசி, நீ அவரைச் சமாதானப்படுத்து. இப்போது ராஜினாமா செய்யக்கூடாது. அவரை அரசியலில் பெரிய ஆளாக்குவது என் பொறுப்பு என்று சொல்” எனச் சொல்லி அனுப்பிவைத்தார். 'நீங்களும் என்னுடன் வாங்க' என்று சசிகலா அழைத்தபோது,  “ஜெயலலிதாவின் கடிதம் வீட்டில் இருக்கிறது. நாம் இரண்டு பேரும் இல்லாத நேரத்தில், யாராவது அதை எடுத்து வெளியிட்டுவிட்டால், நம் மீது தீராப் பழி வந்து சேரும். ஏற்கெனவே, நம் திருமணம் கலைஞர் தலைமையில் நடந்ததால், நம்மை தி.மு.க-வின் ஆட்கள் என்று சொல்கிறார்கள். அதனால், நீ மட்டும்போய் அந்த அம்மாவை சமாதானம் செய். நான் வீட்டில் இருக்கிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். சசிகலா ஜெயலலிதாவை சமாதானம் செய்ய போயஸ் கார்டனுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அதற்குள் பீமண்ணா கார்டன் தெருவில் உள்ள ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்குள் புகுந்தது போலீஸ். நடராஜனை அள்ளிக் கொண்டு போய் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. எந்தக் கடிதத்தை நடராஜன் மறைத்தாரோ, அந்தக் கடிதத்தை போலீஸ் பறித்தது. கருணாநிதி அதை முரசொலியில் பதிப்பித்தார். இப்போது, ஜெயலலிதாவுக்கு நடராஜன் மீது இருந்த கோபம் போய்விட்டது. அது கருணாநிதியின் மேல் திரும்பியது. தி.மு.க கூடாரம் எரிச்சலானது. கைது செய்யப்பட்ட நடராஜன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அது எப்படி நடந்தது... 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/76375-where-is-my-letter-jaya-angers-over-natarajan---how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-11.art

Link to comment
Share on other sites

"சசிகலா, ஜெயலலிதா விதியை மாற்றிய நடராஜன்" : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-12

 

நடராஜன்

ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம், நடராஜனோடு முடிந்திருக்கும். ஆனால், அதை தமிழக அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்த பிரச்னையாக கருணாநிதி மாற்றினார். நடராஜனிடம் கடிதம் இருக்கிறது என்ற விபரத்தை தெரிந்துகொண்டு அவரைப் போலீஸ் கைது செய்ததா? அல்லது உண்மையிலேயே நடராஜன் மீது வந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் கைது செய்ததா? என்பதில் இரண்டுவிதமான கருத்துகள் இன்றும் இருக்கின்றன. எது... எப்படியோ...கைதுக்கான காரணம் சில நாள்களில் காணமல் போனது. ஆனால், கைது செய்தபோது, நடராஜன் வீட்டில் சிக்கிய கடிதமும், அதை முரசொலியில் கருணாநிதி வெளியிட்டதும், 30 ஆண்டுகால தமிழக அரசியலைத் திசைமாற்றிவிட்டது. நடராஜன் என்ற நபரை தமிழகம் அறிந்த பிரபலமாக்கியது. 

நடராஜன் வீட்டில் நடந்த காட்சிகள்!

நடராஜன் திடீரென அபிராமபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சிறிதுநேரம் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்துவிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டுபோனார்கள். அப்போது, போலீஸ் கமிஷனராக இருந்த துரை, நடராஜனை விசாரித்தார். விசாரணை முடிந்ததும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நடராஜனை நிறுத்தினார்கள். சைதாப்பேட்டை நீதிபதி நடராஜனை சிறைக்கு அனுப்பாமல், நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவித்தார். இந்தக் காட்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, மற்றொரு புறம் வேறு சில காட்சிகளும் நடந்தன. நடராஜன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, வேறோரு போலீஸ் ‘டீம்’ நடராஜனின் வீட்டுக்குள் நுழைந்தது. பீரோவை உடைத்து, அதில் இருந்த சில வெள்ளிப்பொருட்கள், பேப்பர் ஆவணங்களை அள்ளிச் சென்றது. அந்தப் பேப்பர் ஆவணங்களில் தான், ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் இருந்தது. அதுதான், ஜெயலலிதாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜினாமா கடிதம். அதன்பிறகு தன் கடைசி மூச்சுவரை, பொது வாழ்வில் இருந்து விடைபெறுவதாக ஒருநாளும் ஜெயலலிதா சொல்லவில்லை. 

http___photolibrary.vikatan.com_images_g

தி.மு.க-வில் நடந்த காட்சிகள்!

ஜெயலலிதாவின் ராஜினாமா கடித விவகாரம், கருணாநிதியின் கவனத்துக்குப் போனதும், “அந்த அம்மாவப் பத்தி எனக்குத் தெரியும். ரொம்ப எமோஷனல் டைப். கோபத்துல என்ன செய்றோம்னு தெரியாம, எதையும் செய்யும். இந்தக் கடிதம் எந்தச் சூழ்நிலையில எழுதுனதுன்னு விசாரிக்கனும். அப்புறம் இதுபத்தி முடிவு பண்ணலாம்” என்றுதான் சொல்லி இருக்கிறார். அப்போது அங்கு இருந்த முரசொலிமாறன், “அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் செய்ததுபோல், முரட்டுத்தனமாக நாம் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று வலியுறுத்தி உள்ளார். அதையும் கேட்டுக்கொண்ட கருணாநிதி, “நாம் அப்படிச் செய்தால், அதற்காகவே அந்த அம்மா மீண்டும் போடித் தொகுதியில் போட்டியிடும்... அதில் நிச்சயம் வெற்றி பெறும். அதனால், இந்த விவகாரத்தில் நிதானமாகவே இருப்போம்” என்றுதான் சொல்லி உள்ளார். ஆனால், பிறகு கருணாநிதியின் மனது எப்படி மாறியது? அந்த நேரத்தில், “ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் அரசியலில் இருந்து ஒய்வுபெறப்போகிறார் ”என்று பல அ.தி.மு.க சீனியர்களே சொல்லிக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இந்த தகவலை அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது கருணாநிதியின் கவனத்துக்கு ஏற்கெனவே வந்திருந்தது. அதையும் பரிசீலித்துப் பார்த்த கருணாநிதி, “ஜெயலலிதாவின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம்; ஆனால், அவர் விருப்பப்படி, இந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிடலாம்” என்ற முடிவுக்கு வந்தார். கருணாநிதியின் அந்த முடிவு தவறானது என்பதை காலம் அவருக்குப் பிறகு பல சமயங்களில் உணர்த்தியது.

KARUNANIDHI_14218.jpg

போயஸ் கார்டன் காட்சிகள்!

ராஜினாமா கடிதத்தைப் பறித்து, அதை ஒளித்துவைத்த நடராஜன் மீது தாங்கமுடியாத ஆத்திரத்தில் இருந்தார் ஜெயலலிதா. ஆனால், தன்னுடைய ராஜினாமா விவகாரத்தில் கருணாநிதி காட்டும் ஆர்வம், ஜெயலலிதாவின் அரசியல் ஆர்வத்தை அணையவிடாமல் செய்தது. அந்த நேரத்தில் போயஸ் கார்டனுக்கு வந்த எஸ்.டி.எஸ், சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு போன்றவர்கள் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தினார்கள். எல்லாம் கருணாநிதியின் வேலை என்று எடுத்துச் சொன்னார்கள். “நான் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கருணாநிதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அப்படியானால், உண்மையிலேயே கருணாநிதி நம்மைப் பார்த்து பயப்படுகிறார்” என்று அந்தத் தருணத்தில் இருந்துதான் ஜெயலலிதா உறுதியாக நம்பத் தொடங்கினார். இப்போது, ஜெயலலிதாவுக்கு நடராஜன் மீது இருந்த கோபம் தணிந்தது; கருணாநிதி மீது வெறுப்பு அதிகரித்தது. அதையொட்டி. அவர் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கருணாநிதியை திட்டித் தீர்த்தார் ஜெயலலிதா; நடந்த விவகாரங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் கருணாநிதி. நடராஜனின் உள்கட்சி எதிரிகளான சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசரிடமே நடராஜனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் ஜெயலலிதா. தமிழக அரசியல் களம் விறுவிறுப்பான சினிமாவைப் போல் நகர்ந்தது. அதன் ஹீரோ பாத்திரத்தை அட்டகாசகமாகச் செய்து கொண்டிருந்தார் நடராஜன். 

jaya123_14085.jpg

கடிதத்தை தொடர்ந்து 1989-ல் நிகழ்ந்த சர்ச்சைகள்...

முதலமைச்சர் கருணாநிதி: எங்கேயோ, என்னமோ நடக்கிறது. பெல்ட்டால் அடித்துக் கொள்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். நமக்கென்ன வந்தது?' என்று நாம் சாதாரன பொறுப்பிலே இருந்தால் சொல்லி விடலாம். ‘சிட்பண்ட்' நடத்துகிறார்கள். பத்துப் பேரிடம் பணம் வாங்குகிறான். தர வேண்டிய பணத்தை ஒழுங்காகத் தராவிட்டால், ஏமாந்தவன் புகார் செய்கிறான். அந்தப் புகாரில் நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? கட்சி வைத்திருக்கிறோம்... கேட்கக் கூடாது என்றால் கட்சி வைத்திருப்பது ஏமாற்றுவதற்காகவா?

எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா: தமிழக அரசியலில் நடராஜன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதி இந்த அளவுக்குக் கீழே இறங்கிச் செயல்படுவார் என்று நடராஜனோ, நானோ எதிர்பார்க்கவில்லை. இந்தக் கொடுமைகளைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. சிறைக் கொடுமைகளைச் சந்தித்து எனது உயிரையே தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன்.

நடராஜன்: தனது ராஜினாமா கடிதத்தையும் அறிக்கையையும் கிழித்துப் போட்டுவிடும்படி ஜெயலலிதா என்னிடம் டெலிபோனில் கூறினார். ஆனால், அவற்றை ஜெயலலிதா மற்றும் எனது மனைவி சசிகலா ஆகியோர் முன்னிலையில்தான் கிழித்துப் போட வேண்டும் என்று அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தேன். என்னைக் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஜெயலலிதா கடிதம் மற்றும் அறிக்கை விவரங்களை வெளியிட்டால் எனக்குத் தகுந்த சன்மானம் தருவதாகவும், என்னை மீண்டும் அரசு வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை காட்டினார்கள். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்: ராஜினாமா கடிதத்தை நடராஜன் கிழித்துப் போடுவது சரியல்ல; ஜெயலலிதாதான் கிழிக்க வேண்டும். எனவே, அவரிடமே கொடுத்துவிடலாம் என்று தான் பத்திரமாக நடராஜன் வைத்திருந்தார். அதற்குள் போலீஸார் கைப்பற்றி விட்டனர்.

ஆலடி அருணா: ராஜினாமா கடிதம் எழுதியது உண்மை. ஆனால், அதை அனுப்பி வைக்கவில்லை என்று வெட்கமின்றி ஜெயலலிதா வாதிடுகிறார். ‘கடிதத்தை அனுப்பி வைக்க வில்லை' என்று இப்போது மறுக்கிறாரே... இதுதான் கட்சிக்காரர்களின் நிர்ப்பந்தத்தால், ஒப்பாரியால் புரிந்திடும் செயல்! உண்மையில் அவராக மனம் மாறியிருந்தால் அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும் அல்லது நடராஜனிடம் இருந்து திரும்பி வாங்கியிருக்க வேண்டும்.

முத்துச்சாமி: ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பதவி விலக முடிவு செய்தது உண்மை. நாங்கள் அவரை 'குணமாகும்வரை ஓய்வில் இருங்கள்' என்றோம். ஆனால், அவருக்குப் பணி செய்ய முடியாமல் பதவியில் இருக்க விருப்பம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் 'நான் இல்லா விட்டால் கூட மற்றவர்களால் அ.தி.மு.க.வை வழிநடத்திச் செல்ல முடியும்' என ஜெயலலிதா நம்பி, விலக விருப்பம் தெரிவித்திருக்கலாம்.

திருநாவுக்கரசு: போலீஸ் கமிஷனர் துரை தனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட்டு ஒரு அரசியல்வாதி போல நடப்பதை கவர்னரும், மத்திய உள்துறை மந்திரியும் தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் போக்கை அரசு உடனே கைவிட வேண்டும். தொடர்ந்து இதே வழியில் காவல்துறை செயல்படுமானால் நாங்களும் டாக்டர் ராமதாஸ் வழியைப் பின்பற்றிப் போராட நேரிடும். தேர்தலில் நிதியாகவும், நன்கொடையாகவும் வாங்கப்பட்ட மொத்த தொகை 3 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயாகும். இதில் 3 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி இருப்பது 13 லட்சம் ரூபாய்தான். இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், திருப்பிக் கொடுத்து வருகிறோம்.

'என் அரசியல் வாழ்க்கை இனிதான் ஆரம்பம்'-நடராஜன்! 

1_14129.jpg

ஜெயலலிதாவின் முதுகெலும்பாகிவிட்ட நடராஜன் கைது செய்யப்பட்டு கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபோதும் சரி, நீதிமன்றத்துக்கு வந்தபோதும் சரி... கொஞ்சமும் கவலையின்றிக் கலகலவென்று சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தபோது நடராஜனிடம் திருநாவுக்கரசு “இப்ப நீதாம்ப்பா ஹீரோ..." என்றார். சட்டென்று நடராஜன் ''இதை முன்னாடியே ஒப்புக்கொண்டிருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்..." என்றார். என்னை மோசடி வழக்கில் மாட்டிவிட்டதன் மூலம் என் வாழ்க்கையை அழித்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம்... எனது அரசியல் வாழ்க்கையே இனிதான் ஆரம்பம்..." என்று அன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடராஜன் தெரிவித்தார். “விதியை எப்படி மாத்தறே'ன்னு கேட்பீங்களே... இப்பப் பார்த்தீங்களா...? என்னைக் கன்னாபின்னாவென்று பேசிய திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் தான் இப்ப என்னைப் பாதுகாக்கிற கவசம்...'' என்றார். அன்று தொடங்கிய நடராஜனின் திரைமறைவு அரசியல் பயணம், இன்று சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக்கி, அதன் தலைமை அலுவலகத்தில் உரையாற்ற வைத்ததுவரை தொடர்கிறது. 

(கதை தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/76470-natarajan-man-who-changed-the-destiny-of-sasikala-and-jayalalithaa--how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-12.art

Link to comment
Share on other sites

துணை முதல்வர் ஜெயலலிதா! நடராஜன் போட்ட திட்டம், சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம் - 13

சசிகலா

 

 

‘ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதே, தன் வாழ்நாள் லட்சியம்’ என்று சத்தியம் செய்து கொண்டார் நடராஜன் அதற்கான வழிகள் அத்தனையையும் அவரே உருவாக்கினார்; வழிகளில் வந்த தடைகளை எல்லாம் வெட்டி வீழ்த்தினார். நடராஜன் ஒருபோதும் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கவில்லை; ஜெயலலிதாவையும் காத்திருக்கவிடவில்லை. ‘காரியத்தில் இறங்குவோம்... சந்தர்ப்பம் கனிந்துவரும்...’ என்று முழுமையாக நம்பினார்; தான் நம்பியதையே, ஜெயலலிதாவையும் நம்பவைத்தார். நடராஜனின் நம்பிக்கை வீண் போகவில்லை.  

சசிகலா

1987-ல், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இரண்டாவது முறையும் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட அவர் தயாரானார். 1984-ல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துத் திரும்பிய எம்.ஜி.ஆர் சிறிது நாட்கள் நலமாக வலம்வந்தார். ஆனால், உள்ளுக்குள் அவரது உடல், நாளுக்கு நாள் பழுதாகிக் கொண்டே வந்தது. முதுமை ஒருபுறம் அவரை உருக்கி எடுத்தது. எம்.ஜி.ஆரின் இந்தப் பிரச்னைகளை துல்லியமாக கணித்துக் கொண்டே வந்தது நடராஜன், ஜெயலலிதா, சசிகலா கூட்டணி. 

1984-ல் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவை பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தார்; ஜெயலலிதாவுக்கான கட்சி நிகழ்ச்சிகளைக் குறைத்தார்; டெல்லியில் இருந்த  தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவைத் துரத்தினார். எம்.ஜி.ஆர் திரும்பும்வரை, கட்சியில் இருந்து ஜெயலலிதாவை ஓரம்கட்டி வைத்திருந்தார் ஆர்.எம்.வீரப்பன். அதைப்போன்றதொரு நிலை, இனி ஒருநாளும் ஜெயலலிதாவுக்கு கட்சிக்குள் வரக்கூடாது என்று தீர்மானித்து, அதற்கான வேலைகளில் சசிகலாவும் நடராஜனும் இறங்கினார்கள். ஆர்.எம்.வீரப்பனின் அந்தச் செயல்களால் ரணமாகிப் போய் இருந்த ஜெயலலிதாவும், அவரைப் பழி தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கட்சியிலும் ஆட்சியிலும் ஆர்.எம்.வீரப்பனின் ஆதிக்கத்தைக் காலி செய்தால்தான், ஜெயலலிதாவால் அதிகாரத்தைப் பெற முடியும் என்பதை உணர்ந்த இந்தக் கூட்டணி, 1984-க்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பனுக்கு பொறி வைத்தது. அதில், ஆர்.எம்.வீரப்பன் மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்களும் வரிசையாக வந்து விழுந்தனர்.

10 அமைச்சர்கள் பதவி நீக்கம் - எம்.ஜி.ஆர் அதிரடி!

சசிகலா

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் துரையரசன்; எம்.எல்.ஏ-வாக இருந்தவர்; இடையில் அ.தி.மு.க-வுக்கு வந்தவர். அ.தி.மு.க-வில் இருக்கும்போதே,  தி.மு.க தலைவர்களையும், அ.தி.மு.க தலைவர்களையும் ஒன்றாக மேடையேற்றி பிரம்மாண்ட விழா ஒன்றினை அறந்தாங்கியில் நடத்தினார். அதில், ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்டார். தி.மு.க தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். என்ன நோக்கத்தில் ஆர்.எம்.வீரப்பன் அந்த விழாவில் கலந்து கொண்டார், அறந்தாங்கி துரை எதற்காக அந்த விழாவை ஏற்பாடு செய்தார் என்பது யாருக்கும் புரியாத புதிர். ஒருவேளை அறந்தாங்கித் தொகுதியில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த திருநாவுக்கரசை, மட்டம் தட்டுவதற்காக ஆர்.எம்.வீரப்பன் அதில் கலந்து கொண்டிருக்கலாம். அவர் கலந்துகொண்டதோடு, அமைச்சர்கள் வெள்ளூர் வீராசாமி, கோவேந்தன் உள்ளிட்டவர்களையும் கலந்து கொள்ள வைத்தார். ஆர்.எம்.வீ-யின் இந்த செயல்பாடு, திருநாவுக்கரசை அதிகமாகக் காயப்படுத்தியது. கொதித்துப்போனவர் ஜெயலலிதாவிடம் விபரத்தைச் சொன்னார்; எம்.ஜி.ஆரிடம் போய் முறையிட்டார். “ஆர்.எம்.வீரப்பன் அந்த விழாவில் கலந்துகொண்டதே தவறு. மற்ற அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது அதைவிடத் தவறு. இதை நீங்கள் கண்டிக்க வேண்டும்” என்று எம்.ஜி.ஆரிடம் எடுத்துரைத்தார். இந்த விவகாரத்தை ஜெயலலிதாவும் தனது வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொன்னார். “ஆர்.எம்.வீரப்பனை தலையில் தட்டி வைக்கவில்லை என்றால் அது கட்சிக்கும் உங்களுக்கும் ஆபத்து” என்று எம்.ஜி.ஆரை அச்சுறுத்தினார். நடராஜன் இந்த விவகாரத்தை, ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிரான பிரசாரமாகவே பரப்பினார். உடல்நிலை, ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் போன்றவற்றால், அந்த நேரம் எம்.ஜி.ஆரும் கொஞ்சம் சஞ்சலமாகவே இருந்தார். எல்லோரையும் சந்தேகத்துடனே அணுகினார். தன் நிழலைக்கூட நம்புவதற்கு எம்.ஜி.ஆர் அஞ்சிய காலகட்டம் அது. அதனால், சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கிளம்பும் முன் கட்சியில், ஆட்சியில்... சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அவரும் வந்திருந்தார். அவருடைய உதவியாளர் பரமசிவத்திடம், இரண்டு விரல்களைக் காட்டி, “இரண்டுபேரை பதவி நீக்கம் செய்யுங்கள்” என்று சொல்லி ஏற்கெனவே எம்.ஜி.ஆர் சொல்லி இருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்தார். அதனால் அதிகபட்சம் சைகைகளில்தான் அவர் உத்தரவுகள் வரும். எம்.ஜி.ஆர் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள, பரமசிவமும் தனது இரண்டு விரல்களை உயர்த்திக்காட்டி, ‘இரண்டே பேர்தானே’ என்று அழுத்திக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால் அதன்பிறகு, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு அன்றாடம் வந்த தகவல்கள், இரண்டுபேர் மட்டும் இருந்த அந்தப் பட்டியலின் நீளத்தை நீட்டிக் கொண்டே போனது. இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி இருந்தது. அந்த நேரத்தில்தான் ஆர்.எம்.வீ-யின் விவகாரத்தை திருநாவுக்கரசும் ஜெயலலிதாவும் கொண்டு வந்தனர். அதனால், ஆர்.எம்.வீ-யையும் அந்தப் பட்டியலில் சேர்த்து, 10 என்று எண்ணிக்கையை ‘ரவுண்டாக்கி’,  10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர். கட்சிக்குள் ஜெயலலிதாவின் கனவுகளை காலி செய்வதற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதிகாரம் இழந்தார்; அவமானத்தால் கூனிக் குறுகிப்போனார். 

துணை முதலமைச்சர் ஜெயலலிதா! - நடராஜன் போட்ட திட்டம்!

“ஆர்.எம்.வீரப்பனின் அதிகாரம் பறிபோய்விட்டது; எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்; முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற, இதைப்போன்றதொரு ஒரு அரிய வாய்ப்புக் கிடைக்காது” என்று கணக்குப்போட்ட நடராஜன் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினார். முதலமைச்சர் நாற்காலியை எம்.ஜி.ஆர் விட்டுத்தரமாட்டார் என்பது நடராஜனுக்கும் ஜெயலலிதாவுக்கும் தெரியும். அதனால், துணை முதலமைச்சர் நாற்காலியில் ஜெயலலிதாவை இப்போதைக்கு அமர்த்தலாம்; முதலமைச்சர் நாற்காலியைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கினார் நடராஜன். 

சசிகலா

“ஆர்.எம்.வீரப்பனுக்கு 70 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. எம்.ஜிஆரின் உடல்நலம் மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார். அதில் அவமானம் அடைந்த வீரப்பன் எம்.ஜி.ஆருக்கு எதிராக நிச்சயம் செயல்படுவார். அவர் அமெரிக்கா சென்றதும், ஆர்.எம்.வீரப்பன் கட்சியை உடைப்பார். ஆட்சியைக் கைப்பற்றுவார். அதைத் தடுத்து, கட்சியையும் ஆட்சியையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் போல் செல்வாக்கு உள்ளவர் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். அதனால், ஜெயலலிதாவை துணை முதலமைச்சராக்க வேண்டும்” என்ற பிரசாரத்தை நடராஜன் முன்னெடுத்தார். நடராஜனின் இந்த யோசனை ஜெயலலிதாவுக்குப் பிடித்துப்போனது. அதனால், இதன் சாரத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்றார். ஜெயலலிதா அதை நேரடியாகச் செய்யாமல், திருநாவுக்கரசு மூலம் செய்ய வைத்தார். உண்மையிலேயே, அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு 70 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தது. அவர் சட்டசபைக்குள் நுழைந்தால், 70 எம்.எல்.ஏ-க்களும் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். இது எம்.ஜி.ஆருக்கும் நன்றாகத் தெரியும். அதேசமயம் ஆர்.எம்.வீ- தனக்கு எதிராகப்போவார் என்று எம்.ஜி.ஆர் நம்பவில்லை. அதனால், நடராஜன்,ஜெயலலிதா பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர் மசியவில்லை. “ஆர்.எம்.வீரப்பன் அப்படிக் கலகம் செய்தால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திப்பேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனின் அதிகாரத்தைப் பறித்த நடராஜன், ஜெயலலிதா கூட்டணியால் துணை முதலமைச்சர் என்ற  அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாமல் போனது.  

தலைநகரம் எம்.ஜி.ஆருக்குத் தந்த அவமானம்!

எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றார். இந்த முறை, கட்சிக்குள் ஜெயலலிதாவை எதிர்க்க வலிமையான எதிரிகள் யாரும் இல்லை; இருந்த எதிரிகளிடம் ஜெயலலிதாவை எதிர்க்க அதிகாரம் இல்லை. ஆர்.எம்.வீரப்பன் உள்பட 10 பேரின் பல்லைப் பிடுங்கி இருந்தார் எம்.ஜி.ஆர். இது ஜெயலலிதாவுக்கு அசுர பலத்தைக் கொடுத்தது. ஜெயலலிதா, நடராஜன், சசிகலா கூட்டணி அடுத்தகட்ட வேலைகளை விறுவிறுவெனத் தொடங்கியது. “எம்.ஜி.ஆருக்கு என்ன பிரச்னை? அவர் எவ்வளவு நாட்கள் உயிரோடு இருப்பார்” என்பதை நடராஜன் விசாரிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவில் ஜப்பான் டாக்டர் ஹான் என்பவர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை கொடுத்து வந்தார். அதனால், அவரிடம் இருந்து எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைப் பெற, தனது கிழக்காசிய நண்பர்கள் மூலம் நடராஜன் முயற்சித்தார். அவர்கள் விசாரித்துச் சொன்னதில், “எம்.ஜி.ஆருக்கு இனிமேல் சுத்தமாகப் பேச்சுவராது. ஆனால், அவருடைய வாழ்நாள் கணக்கைப் பற்றி எதுவும் சொல்லமுடியாது” என்ற தகவல் மட்டும் நடராஜனுக்கு கிடைத்தது. கிடைத்த தகவலை ஆட்டத்தை வெற்றிகரமாக ஆடுவதற்கு போதும் என்று முடிவு செய்த நடராஜன், டெல்லியில் ‘லாபி’ செய்ய ஜெயலலிதாவைப் பணித்தார். நடராஜனின் யோசனைப்படி டெல்லி பறந்த ஜெயலலிதா, “தன்னைத் துணை முதலமைச்சராக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார். ஜெயலலிதாவின் கோரிக்கைகளை டெல்லி இப்போது கொஞ்சம் கனிவோடு பரிசீலித்தது. ஜெயலலிதா-ராஜிவ் நட்பு அதற்கு காரணமாக அமைந்தது. தன்னை நோக்கி முதல்வர் நாற்காலி நகர்ந்து வருகிறது என்று ஜெயலலிதா நம்பினார். அதே நேரத்தில், எம்.ஜி.ஆர் கொஞ்சம் குணமடைந்து மீண்டும் தமிழகம் திரும்பினார். நடராஜனும் ஜெயலலிதாவும் டெல்லியில் செய்த லாபி எம்.ஜி.ஆர் கவனத்துக்கு வந்தது. அதை முறியடிக்க, அவரே நேரடியாகக் கிளம்பி டெல்லி சென்றார். தலைநகரம் கசப்பான அனுபவங்களோடு எம்.ஜி.ஆரை வரவேற்றது; அதை தன் வாழ்நாள் அவமானமாகக் கருதினார் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதாவை கட்சிக்குள் வளர்த்துவிட்டதற்காக வழக்கம்போல்  வருத்தப்பட்டார் எம்.ஜி.ஆர். 

டெல்லியில் நடந்தவை என்ன?

(கதை தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/76717-natarajan-planned-deputy-cm-chair-for-jayalalithaa-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---13.art

Link to comment
Share on other sites

‘டெல்லியில் பறந்த ஜெயலலிதா கொடி!' : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 14

சசிகலா

 

 

எம்.ஜி.ஆர் அணி - ஜெயலலிதா அணி!

இரண்டாவது முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆர், உடல்நலம் தேறி இந்தியா திரும்பினார். உடல்நலம் தேறி இந்தியா வந்தவருக்கு, மனநோயை வரவழைக்கும் அளவுக்குப் பிரச்னைகளை உருவாக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா. தமிழகத்துக்குள் காலடி வைத்ததும், ‘தான் இல்லாத போது கட்சிக்குள் என்ன நடந்தது’ என்று வழக்கம்போல் எம்.ஜி.ஆர் விசாரிக்க ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர்

தனக்கு நம்பிக்கையான பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், கட்சிக்காரர்கள் என எல்லோரிடமும் விசாரித்தார். எல்லோரும் விதவிதமான தகவல்களைச் சொன்னார்கள். எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தன. காரணம், கட்சியின் விசுவாசிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர் அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைத்து வைத்திருந்தார் நடராஜன்.

தொலைபேசியில் மிரட்டிய டெல்லி!

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் குழப்பத்தில் இருந்தார். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு, குழப்பத்தோடு எம்.ஜி.ஆருக்கு உதறலையும் சேர்த்து உண்டாக்கியது. டெல்லியில் இருந்து பேசியவர்கள், ‘ஜெயலலிதாவுக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும்’ என்றார்கள். எம்.ஜி.ஆர் சார்பில் டெல்லிக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தவர் அவருடைய உதவியாளர் பரமசிவம். அவர் பக்குவமாக “எம்.ஜி.ஆர் நேரில் வந்து விபரமாகப் பேசுவார்” என்று பதில் சொன்னார். ஆனால், டெல்லி அதைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கவில்லை. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னது. உச்சக்கட்ட வெறுப்படைந்த எம்.ஜி.ஆர் ஒருகட்டத்தில், ‘பதவியைத் துறந்துவிடுவேன்’ என்று டெல்லியைப் பயமுறுத்திப் பார்த்தார். அதற்கு, ‘உங்கள் பதவி விலகலை கவர்னர் ஏற்றுக் கொள்ளமாட்டார்’ என்று எதிர்முனையில் இருந்து மிரட்டல் வந்தது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத பரமசிவம், “தலைவர் இப்போது ஓய்வில் இருக்கிறார், பிறகு பேசுங்கள்...” என்று சொல்லித் தொலைபேசியைத் துண்டித்துவிட்டார். டெல்லியில் இருந்து வந்த மிரட்டல் எம்.ஜி.ஆரை உலுக்கியது. ‘ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்யக்கூடியவர்தான்’ என்பது அவருக்குத் தெரியும். ஆனால், ‘சசிகலாவையும் நடராஜனையும் குறைத்து மதிப்பிட்டது எவ்வளவு பெரிய தவறு’ என்பதை எம்.ஜி.ஆர் அப்போது உணரத் தொடங்கினார். ‘கட்சிக்குள் ஜெயலலிதாவின் கதையை முடித்துவிட்டால், நடராஜன், சசிகலாவின் கதையும் தானாக முடிந்துவிடும்’ என்று ஆத்திரத்தில் முடிவெடுத்தார். “அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவுடன் பேசக்கூடாது” என்று உத்தரவிட்டார். அதைக் கறாராகக் கண்காணிக்க தனது உதவியாளர் பரமசிவத்திடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனால், மிகத் தாமதமாக பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவால் எந்தப் பயனும் விளையவில்லை. எம்.ஜி.ஆர் கையை மீறி எல்லாம் அப்போதே போய் இருந்தது. உடைந்து போய் இருந்த எம்.ஜி.ஆரை பத்திரிகையாளர் சோலை வந்து ஆறுதல் சொல்லித் தேற்றினார்.

டெல்லியில் பறந்த ஜெயலலிதா கொடி!

அமெரிக்காவில் இருந்து திரும்பிய மறுவாரமே டெல்லி கிளம்பினார் எம்.ஜி.ஆர். இந்தமுறை, தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல் நண்பர் ஒருவருடன், ‘கிரேட்டர் கைலாஷ்’ என்ற இடத்தில் தங்கினார். டெல்லியில் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், எல்லாப் பேச்சுவார்த்தையின் நோக்கமும் ஒன்றாகவே இருந்தது. “ஜெயலலிதாவை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும்; அவருக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும்” என்ற ஒரே நோக்கம்தான் அத்தனைப் பேச்சுவார்த்தைகளிலும் வலிமையாக வலியுறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் மிரண்டு போனார்; அவருக்கு காய்ச்சல் கண்டது. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தம்பிதுரை, தன் பங்குக்கு எம்.ஜி.ஆரின் காய்ச்சலை கூடுதலாகக் கொதிக்கவைத்தார். “எம்.ஜி.ஆரின் பதவியை டெல்லியில் பேசி தான்தான் காப்பாற்றி வருகிறேன்” என்றார். “ஜெயலலிதா, நீங்கள் இருக்கும்போதே முதலமைச்சர் ஆகிவிடுவார். அதற்கு நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உங்கள் ஆட்சியைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை டெல்லி உருவாக்கும்” என்று சொல்லி எம்.ஜி.ஆரைப் பயமுறுத்தினார். தம்பிதுரையிடம் தனது பதற்றத்தை வெளிக்காட்டாத எம்.ஜி.ஆர், விரைவில் தேர்தல் வந்துவிடும். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூலாகப் பதில் சொன்னார்.

rajiv_jaya_1_15138.jpg

 

ஆனால், உள்ளுக்குள் இந்த விவகாரத்தை இதோடு விடக்கூடாது என்று முடிவுகட்டினார். டெல்லியில் எம்.ஜி.ஆர் சிலரைச் சந்திக்க முடிவுசெய்தார். ஆனால், அங்கு அவருக்கு ஆதரவாக எந்தக் கரமும் நீளவில்லை. எல்லாக் கதவுகளும் எம்.ஜி.ஆருக்கு அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஜெயலலிதாவின் ஆதிக்கம் டெல்லியில் கொடி கட்டிப் பறந்தது. எம்.ஜி.ஆரின் கொடியை அகற்றிவிட்டு, அ.தி.மு.க என்ற கம்பத்தில் ஜெயலலிதாவின் கொடியே அப்போது டெல்லியில் பறந்தது. எம்.ஜி.ஆர் புழுவாகத் துடித்துப்போனார். சோகத்தோடு விமானம் ஏறிய அவர், தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். சென்னையில் வந்து இறங்கியதும், அமைச்சர்கள் பொன்னையன், முத்துச்சாமி ஆகியோரை அழைத்தார். ஜெயலலிதாவிடம் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் யாராவது பேசுகிறார்களா? என்று விசாரித்தார். அவர்கள் எம்.ஜி.ஆருக்குத் திருப்தியான பதில் ஒன்றைச் சொல்லி வைத்தனர். ஆனால், உண்மையில், ஜெயலலிதாவோடு பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருந்தனர். பேசாமல் ஒதுங்கியவர்களை, நடராஜன் இழுத்துவந்து பேசவைத்தார். அப்படிச் செய்ய ஒவ்வொருவருக்கும் ஒரு விலையை நிர்ணயம் செய்து வைத்திருந்தார் நடராஜன். எம்.ஜி.ஆருக்கு வேதனையைத் தரும் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், டெல்லியில் இருந்து மீண்டும் அவருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பும் அவரை மேலும் நோகடிக்கும் ஒன்றாகவே நீடித்தது. ஒருபக்கம் ஜெயலலிதாவோடும், மறுபக்கம் டெல்லியோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/76846-the-rise-and-rise-of-jayalalithaa-in-delhi--how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---14.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா vs எம்.ஜி.ஆர்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 15

sasikala சசிகலா

ஜெயலலிதா vs எம்.ஜி.ஆர் காலகட்டம்!

ஜெயலலிதாவின் ஆதிக்கம் டெல்லியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு டெல்லியில் உருவாகாத செல்வாக்கு, ராஜீவ்காந்தி காலத்தில் உருவாகி, உச்சத்தில் போய் நின்றது. அதைப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு குடைச்சல் கொடுக்க முடியுமோ... அவ்வளவு குடைச்சலைக் கொடுத்தார் ஜெயலலிதா. அவர் சொன்னதை எல்லாம் டெல்லி நம்பியது; டெல்லி நம்பும்படி அவர் தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தார்; இந்த விவகாரத்தில் இருந்து, வெளியேற வழி தெரியாமல் எம்.ஜி.ஆர் தன்னைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக ஏதாவது செய்யலாமா என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எம்.ஜி.ஆருக்கு எதிராக எதையெல்லாம், செய்ய முடியுமோ அவற்றைச் செய்தே முடித்திருந்தார் ஜெயலலிதா. அதற்காக அவர் கையில் எடுத்த பல விவகாரங்களில், விடுதலைப் புலிகள் விவகாரமும் ஒன்று. 

விடுதலைப் புலிகள் விவகாரம்!

mgr எம்.ஜி.ஆர்  பிரபாகரன்

விடுதலைப்புலிகளுக்கு அப்போது தமிழகத்தில் வெளிப்படையான ஆதரவு இருந்தது. தமிழகத்தின் இந்த மனநிலை, மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை. அது மத்திய-மாநில அரசுகளின் உரசலாக மாறி இருந்தது. அப்படிப்பட்ட சிக்கலான காலகட்டத்தில்தான், எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளை கூடுதலாக ஆதரித்தார்; அதில் அவருக்கு ஆயிரம் அரசியல் இருந்தது; உணர்வுரீதியான பிணைப்பும் இருந்தது. எம்.ஜி.ஆரின் இந்த நிலைப்பாட்டை வைத்து, அவருக்கு எதிராகப் பலர் வேலை பார்த்தனர். ஜெயலலிதா தரப்பில் இருந்து, எம்.ஜி.ஆருக்கு எதிராகச் சிலர் வேலை பார்த்தனர். அவர்களுக்கு தலைமையேற்று யார் வழி நடத்தியிருப்பார் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. விடுதலைப்புலிகள் என்றால் யார், அவர்கள் ஏன் போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறார்கள், எப்படிப் போராடுகிறார்கள் என்று எதுவுமே தெரியாத நிலையில்தான் அன்றைக்கு ஜெயலலிதா இருந்தார். அப்படி இருந்தவருக்கு, விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்தியவர் நடராஜன். முக்கியமாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கும், தமிழகத்தில் உள்ள மாநில அரசுக்கும் உள்ள கடுமையான முரண்பாடுகளை அவர் புட்டு புட்டு வைத்தார். எம்.ஜி.ஆர் தலைமையிலான மாநில அரசாங்கம், விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதை ஜெயலலிதாவுக்கு அவர் அழுத்திச் சொன்னார்.

எம்.ஜி.ஆர் கொடுத்த பணமும்... வரதாபாய் நடத்திய பேரணியும்...

நடராஜன் அழுத்திச் சொன்ன விவகாரம் ஜெயலலிதா மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்த விஷயத்தைத் தனக்கு ஆதாயமாக மாற்றிக் கொடுக்கும், ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தார் அவர். அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன. ஒன்று... இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெற்ற பேரணி, இரண்டு... விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 5 கோடி ரூபாய் கொடுப்பதாக எம்.ஜி.ஆர் அறிவித்தது. இந்த இரண்டு விவகாரங்களை  மத்திய அரசிடம் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னார் ஜெயலலிதா. காரணம் அப்போது, ‘எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. குறைந்தபட்சம் துணை முதலமைச்சர் நாற்காலியிலாவது அமர்ந்துவிட வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும் நிலையில் அவர் இருந்தார். ‘எம்.ஜி.ஆர் ஆட்சி ‘டிஸ்மிஸ்’ ஆனாலும்கூட பரவாயில்லை’ என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்க, பக்கத் துணைக்கு நடராஜன் இருந்தார்; சசிகலா இருந்தார்; சசிகலா குடும்பத்தின் பின்னணி இருந்தது.

Rajivgandhi ஜெயலலிதா ராஜீவ் காந்தி

இந்த நேரத்தில்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 கோடி ரூபாய் அளிக்கப்போவதாக சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதைக்கேட்ட, இலங்கை அரசாங்கம் அலறிக் கொண்டு, ராஜீவ்காந்தியிடம் ஒப்பாரி வைத்தது. ராஜீவ் காந்தி,“புலிகளுக்கு  பணம் கொடுக்க வேண்டாம்” என்று எம்.ஜி.ஆருக்குத் தகவல் அனுப்பினார். ஏற்கெனவே, மத்திய அரசு மீது கசப்பு உணர்வில் இருந்த எம்.ஜி.ஆர், இந்த விவகாரத்தில் திருப்பி அடிக்க முடிவு செய்தார். “நான் அறிவித்த தொகையை புலிகளுக்கு ஏற்கெனவே கொடுத்துவிட்டேன்; கொடுத்த பிறகுதான் அதை அறிவித்தேன்” என்று எம்.ஜி.ஆர் பதில் அனுப்பினார். ஆனால், உண்மையில் அப்போது அவர் அறிவிப்பு மட்டுமே செய்திருந்தார். பணத்தைக் கொடுத்திருக்கவில்லை. மத்திய அரசு கொடுக்க வேண்டாம் என்று சொன்னதற்கு, இரண்டு நாட்கள் கழித்தே எம்.ஜி.ஆர் புலிகளுக்கு பணம் கொடுத்தார். இந்த விவகாரத்தை அறிந்தவர்கள் வெகு சிலரே. ஆனால், இந்தத் தகவல், ராஜீவ் காந்திக்கு உதவியாளராக இருந்த பார்த்தசாரதி அய்யங்கார் மூலம் ராஜீவ் காந்திக்கு உடனே சென்றது. உளவுத்துறை சொல்வதற்கு முன்பே, இந்தத் தகவல் ராஜீவ் காந்தியின் காதுகளுக்குப் போய் இருந்தது. யார் சொல்லி இருப்பார்கள் என்ற ஆராய்ச்சிக்கே அவசியமில்லை. உடனே, மத்திய அரசு கொந்தளித்தது. ‘கொடுக்காத பணத்தை கொடுத்துவிட்டதாகச் சொல்வதும், அதன்பிறகு கொடுப்பதும் ஏன்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கியது மத்திய அரசு. அதுபற்றிய சர்ச்சைகள் எழுந்தபோது, “இதைப் பற்றிய கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றவை” என்று எம்.ஜி.ஆர் கறாராகப் பதில் கொடுத்தார். 

எம்.ஜி.ஆரின் இரண்டாவது டெல்லி பயணம்!

rajivgandhi mgr

மற்றொரு விவகாரம், டெல்லியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடந்த பேரணி. அப்போது மும்பையின் ‘டான்’ ஆக செயல்பட்ட, வரதா பாய் என்ற வரதராஜ முதலியார், அந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதில், அ.தி.மு.க சார்பில் வலம்புரிஜான் கலந்து கொண்டார். இதையடுத்து சிலர், அந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை பின்னணியில் இருந்து செய்தவரே எம்.ஜி.ஆர்தான் என்று மத்திய அரசுக்கு தகவல் அனுப்பினர். இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில்தான், எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது முறையாக டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது டெல்லி சென்ற எம்.ஜி.ஆர் எங்கும் தங்காமல் நேராக, ராஜீவ் காந்தி வீட்டுக்குச் சென்றார். ராஜீவ் காந்தி முன்னிலையில் எம்.ஜி.ஆரை மத்திய அரசு அதிகாரிகள், ‘விடுதலைப் புலிகளை ஏன் இப்படி ஆதரிக்கிறீர்கள்’ என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர். அதற்கு எம்.ஜி.ஆர், “இப்போது இருக்கும் சூழ்நிலையில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றால், மொத்த தமிழ்நாடும் ஆட்சிக்கு எதிராகத் திரும்பிவிடும்” என்று எம்.ஜி.ஆர் பதில் சொல்லி முடித்துக் கொண்டார். அங்கிருந்து இந்த முறையும் அமைதியில்லாமல் தமிழகம் திரும்பினார்.  விடுதலைப்புலிகள் விவகாரத்தில், மத்திய அரசு கொடுத்த நெருக்கடி எம்.ஜி.ஆருக்கு தலைவலியைக் கொடுத்தது. ஆனால், அதைவிட ‘தான் யாரை கட்சியில் வளர்த்துவிட்டோமோ, அவர்களே தனக்கு எதிராகச் செயல்படுகிறார்களே’ என்ற வேதனை அவருக்கு தலையில் இடியாய் இறங்கி இருந்தது.

அதைத்தானே, எம்.ஜி.ஆருக்கு எதிரானவர்கள் எதிர்பார்த்தனர்!

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/77092-jayalalithaa-vs-mgr-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---15.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலுக்குள்ளேயே இவ்வளவு தாய(ம்) விளையாட்டு என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விதமான சதுரங்க விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்.....!  :unsure: 

Link to comment
Share on other sites

ஒரு விழா... இரண்டு அழைப்பிதழ்கள்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 16

 

 

 

எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்!

எம்.ஜி.ஆர், தன் வாழ்வின் இறுதி நாட்களை இனம் கண்டு எண்ணத் தொடங்கி இருந்தார்; டாக்டர்களின் அறிவுரைகள், நம்பிக்கை வார்த்தைகளில் அவர் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார்; அவருக்குள் உருவாகி இருந்த அவநம்பிக்கையை, அவ்வப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தார்; ‘என்னை எங்கு புதைப்பீர்கள்’ என்று கேட்டு மரணத்துக்கு, தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்; உயில் எழுதினார்; அதில், தான் செய்த காரியங்களுக்கான காரணங்களை விளக்கினார்; தன் வளர்ப்புப் பிள்ளைகள் யார் என்பதை அதில் பட்டியல் இட்டார்; எம்.ஜி.ஆரின் உயிலில் எந்தப் பக்கத்திலும், ஜெயலலிதா என்ற பெயர் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் இறுதிக்காலத்தில் ஜெயலலிதா கொடுத்த துயரங்கள், அவரை அந்த முடிவை நோக்கித் தள்ளி இருந்தன; டெல்லியில் ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆர் மனதில் ஏற்பட்ட காயம், ரணமாகிப்  போய் இருந்தது; அது, அவருடைய வாழ்நாளில், அதற்கு முன்பு அவர் அனுபவித்த ரணங்களைவிட, பல மடங்கு வேதனையைக் கொடுத்தது. அதை ஆறவிடாமல், மேலும் மேலும் புண்ணாக்கும் வேலைகளைச் செய்து கொண்டே இருந்தார் ஜெயலலிதா. சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தங்களை முழுவதுமாக இணைத்துக் கொண்டனர். 1987-ன் இறுதியில், எம்.ஜி.ஆருக்கு எதிரான ஜெயலலிதாவின் தீவிர செயல்பாடுகளில், துணிந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடராஜன். நடராஜனின் அந்தத் துணிச்சல், சசிகலாவை மேலும் மேலும் ஜெயலலிதாவோடு இறுக்கிப் பிணைத்தது.

இரண்டு துருவங்கள்... இரண்டு திட்டங்கள்...

எம்.ஜி.ஆர்

சென்னை, கத்திப்பாரா சந்திப்பில் அப்போது நேரு சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. ராஜீவ் காந்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் ஆளுக்கொரு திட்டத்தோடு செயல்பட்டனர். ராஜீவ்காந்தி கலந்து கொள்ளும் அந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்று எம்.ஜி.ஆர் திட்டமிட்டார்; அதில், கண்டிப்பாக கலந்துகொண்டேயாக வேண்டும் என்று ஜெயலலிதா முடிவெடுத்தார். ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது, அதற்கான வேலைகளைத் திட்டமிடுங்கள் என்று ஆர்.எம்.வீரப்பனிடம் எம்.ஜி.ஆர் பொறுப்பை ஒப்படைத்தார். ‘ராஜீவ் நிகழ்ச்சியில், நான் கலந்து கொண்டேயாக வேண்டும்.’ அதற்கான வேலைகளைப் பாருங்கள் என்று நடராஜனிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்தார் ஜெயலலிதா. இப்படி, ‘நேரு சிலை திறப்புவிழா’ என்ற ஒற்றை நிகழ்ச்சியை முன்வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு துருவங்கள், இரண்டு திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட்டனர். 

எதிர்காலம் என் கையில்!

ராஜீவ் காந்தி கலந்து கொள்ளும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆங்கிலத்தில் உரையாற்றுவதன் மூலம், தன் செல்வாக்கை தொண்டர்களிடமும், தொண்டர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை ராஜீவ் காந்தியிடமும் நிரூபிக்க நினைத்தார் ஜெயலலிதா. அதன்மூலம், ‘அ.தி.மு.க-வின் எதிர்காலம் தான்தான்’ என்பதை தமிழகத்துக்குச் சொல்ல வேண்டும் என்பது ஜெயலலிதாவின் திட்டம். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, ‘ஜெயலலிதாவுக்கு கட்சியில் எந்தச் செல்வாக்கும் இல்லை’ என்பதை ராஜீவ் காந்திக்கும், தொண்டர்களுக்கும் நிருபிக்க நினைத்தார். அதனால், ஜெயலலிதா மேடையேறக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அதன்மூலம், அ.தி.மு.க-வின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலமும் நான் மட்டுமே என்று உணர்த்த விரும்பினார் எம்.ஜி.ஆர். நேரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தனக்குத் தெரிந்த டெல்லி தொடர்புகள் அனைத்தையும் ஜெயலலிதா பயன்படுத்தினார். டெல்லியில் இருந்து ஜெயலலிதாவுக்காக வந்த அத்தனை அழுத்தங்களையும் எம்.ஜி.ஆர் நிராகரித்தார். இந்த இரு துருவங்களின் பனிப்போரில், ஜெயலலிதாவுக்காக நடராஜன் வியூகம் வகுத்தார்; எம்.ஜிஆருக்காக ஆர்.எம்.வீரப்பன் வியூகம் வகுத்தார். 

ஒரு விழா! இரண்டு அழைப்பிதழ்கள்!

நேரு சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. அதில், ‘ஜெயலலிதாவின் பெயர் வரக்கூடாது’ என்று சொன்ன எம்.ஜி.ஆர் அந்தப் பொறுப்பை வீரப்பனிடம் ஒப்படைத்தார். அப்போது வீரப்பன், விழாவில், ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது; கலந்து கொண்டாலும் மேடையேறக்கூடாது; மேடைக்கு வந்துவிட்டாலும் பேசக்கூடாது; மீறிப் பேசினால், தொண்டர்களை வைத்துக் கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி, ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தலாம் என்று ஒரு திட்டத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னார். ஆனால், எம்.ஜி.ஆர் அதை ஏற்கவில்லை. இதில் ஏதாவது ஒரு விவகாரம் வெளியாகிவிட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் என்று அவர் அஞ்சினார். 

வீரப்பன்,எம்.ஜி.ஆர்

அதனால், அழைப்பிதழிலேயே ஜெயலலிதாவின் கதையை முடித்துவிடலாம் என்று முடிவு செய்தார் வீரப்பன். ஜெயலலிதாவின் பெயர் இல்லாமல் அழைப்பிதழ்களை அச்சடிக்க உத்தரவிட்டார். பொதுத்துறையின் மேற்பார்வையில் செய்தித்துறை அந்த அழைப்பிதழ்களை அச்சடித்தது. ஆனால், அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களில் ஜெயலலிதாவின் பெயர் இருந்தது. சிலவற்றில் இல்லாமலும் இருந்தது. இரண்டுமாதிரியாகவும் அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதிர்ச்சி... ஆச்சரியம்... இயலாமை... கோபம் என்று கலவையான உணர்ச்சிக்குள் வீழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் சாகசங்களும் சாமர்த்தியமும் எம்.ஜி.ஆரின் தோல்விகளை, அவரது இறுதிக்காலத்தில் தெளிவாக அவருக்கு எடுத்துச் சொன்னது. வீரப்பனை அழைத்து விசாரித்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.ஜி.ஆரைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிர்ச்சியாக இருந்தது. அச்சகத்தில் விசாரித்தபோது, ராமவரம் தோட்டத்தில் இருந்து ஓரு அழைப்பிதழுக்கு உத்தரவு வந்ததுபோல, போயஸ் தோட்டத்தில் இருந்து மற்றொரு அழைப்பிதழுக்கான உத்தரவு வந்தது என்று அவர்கள் ஒப்பித்தனர். எம்.ஜி.ஆர் தன் விதியை மட்டும் அப்போதைக்கு நொந்து கொண்டார். வேறு வழியில்லாமல், போயஸ் தோட்டத்தில் இருந்து வந்த  உத்தரவை யார் கொடுத்தார்கள் என்று அடுத்து விசாரிக்க ஆரம்பித்தார். 

நடராஜனின் காரியங்களும்... காரணங்களும்..

நடராஜன்

இரண்டுவிதமான அழைப்பிதழ்களை அச்சடிக்கச் சொன்னது யார் என்று விசாரித்தபோது, விசாரிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருசேர கை காட்டிய நபர் நடராஜன். அவர்தான், ஜெயலலிதாவின் பெயர் போட்டும் சில அழைப்பிதழ்களை அடிக்கும் யோசனையைச் சொன்னவர்; தனக்கு இருக்கும் தொடர்புகள் மூலம் அதை, எம்.ஜி.ஆரின் அரசாங்கத்திலேயே சாதித்துக் காட்டியவர். இந்த உண்மை வெளிவந்தபோது, அதை நம்ப எம்.ஜி.ஆரே சிரமப்பட்டார். ஆனால், நம்புவதற்கு கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த நாட்களில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன், இத்தகைய சாகசத்துக்கு துணிந்தார் என்றால், அதற்கு காரணம் அவருடைய எதிர்காலத்திட்டம்தான். எம்.ஜி.ஆர் என்ற சர்வ வல்லமை படைத்த மனிதரைப் பகைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற நடராஜன் உதவினார் என்றால், அவருக்கு, அவர் மீது நம்பிக்கை இருந்தது; அவருடைய எதிர்காலத்திட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தது. அது நிறைவேறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார்; அவருக்குப் பக்கத்தில் இருக்கும் தன் மனைவி அதிகார மையமாக மாறுவார்; அதன்மூலம் தான் நிழல் முதலமைச்சராக வலம் வருவோம் என்பதை அவர் அப்போதே கணித்திருந்தார்போல.

(கதை தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/77464-two-invitations-for-a-single-function-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-16.art

Link to comment
Share on other sites

"2 பெண்கள்... 2 ஜோடிக் கண்கள்...வெறித்த பார்வைகள்!" சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 17

சசிகலா

எம்.ஜி.ஆரின் வெற்றி! ஜெயலலிதாவின் தோல்வி!

சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் களை கட்டின. ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்தார்;  அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி லாபியால், இந்தமுறை ஒன்றும் செய்யமுடியாமல் போனது. ராஜீவ் காந்தியும் இதில், எம்.ஜி.ஆரைக் கட்டாயப்படுத்தவில்லை. காரணம், அந்த விழாவுக்கு ராஜீவ் காந்தியோடு சேர்ந்து சோனியா காந்தியும் வருவதாகத் திட்டம் இருந்தது. ஜெயலலிதா-சோனியா ஒரே மேடையில் அமர்வது, ராஜீவ் காந்திக்கு எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கும் என்பது ராஜீவ் காந்திக்குத்தான் தெரியும்.

அதனால், அவரும் இந்த விவகாரத்தில் பதுங்கிக் கொண்டார். எம்.ஜி.ஆரின் உத்தரவை மீறி, இரண்டு அழைப்பிதழ்களை நடராஜன் அச்சடித்த விவகாரமும் வேறு பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனால், ஜெயலலிதாவால் வழக்கமான தனது பாணியில் எம்.ஜி.ஆரைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ‘என்ன செய்வீர்களோ தெரியாது... ஜெயலலிதா கூட்டத்துக்கே வரக்கூடாது...’ என்று எம்.ஜி.ஆர் நேரடியாக உத்தரவு பிறப்பித்து இருந்ததால், ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர்கள், போலீஸ், கட்சிக்காரர்கள், எம்.ஜி.ஆர் விசுவாசிகள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக நெருப்பு வளையம் போட்டு வைத்தனர். அதை உடைத்துவிட்டு உள்ளே நுழைய ஜெயலலிதாவால் அப்போது முடியவில்லை.

ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு முன் பலமுறை தோற்றுப்போன எம்.ஜி.ஆர், இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் பிடிவாதம், அரசியல், ஆள்பிடிப்பு எல்லாம் இந்தமுறை எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போனது.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் அடைந்த இறுதி வெற்றி இதுவே; ஜெயலலிதா, எம்.ஜி.ஆரிடம் அடைந்த இறுதி தோல்வி இதுவே; நேரு சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. 1987 டிசம்பர் 22-ம் தேதி அந்தச் சிலைத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது; ராஜீவ் காந்தி-சோனியா காந்தியோடு வந்து கலந்து கொண்டார்; எம்.ஜி.ஆருக்கு அந்த விழாவில் இளமை திரும்பி இருந்தது; 42 வயது எம்.ஜி.ஆரைப் போல் இருந்தார்; அணையப்போகிற விளக்கு பிரகாசமாக ஒளி வீசியது! 

ராஜிவ்காந்தி எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் மறைந்தார்! தமிழகம் அழுதது!

ராஜீவ் காந்தியை வழியனுப்பி வைத்த எம்.ஜி.ஆர் நிம்மதியாக ராமவாரம் திரும்பினார். இனி ஜெயலலிதாவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்த அவர், அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கி வைத்து இருந்தார்; அவற்றை முழுவதுமாக முடித்து, ஜெயலலிதாவின் அரசியல் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரத்தில், தமிழகத்தின் தலைவிதி வேறு மாதிரி எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜெயலலிதாவின் கதையை எம்.ஜி.ஆர் முடிக்க நினைத்த நேரம்தான், ஜெயலலிதாவின் கதையை  தமிழக அரசியலில் தொடங்க நினைத்தது விதி. 22-ம் தேதி சிலை திறப்பு விழா முடிந்ததற்கு மறுநாள், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிக மோசமானது. காலையிலேயே அவர் அதை உணரத் தொடங்கி இருந்தார்; ஆனால், வெளியில் சொல்லவில்லை; சமாளித்துக் கொண்டு இருந்தார்; ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை; மாலை 4 மணிக்கு அவருக்கு வாந்தி ஏற்பட்டது; டாக்டர்கள் வந்து பரிசோதித்துவிட்டு, ஒய்வெடுக்கச் சொன்னார்கள்; ஆனால், இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது, அதில் இருந்து எம்.ஜி.ஆர் மீளவில்லை; 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது; 40 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில், 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் அரங்கில், என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரையும், எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை ஏதோ ஒருவிதத்தில் சலனப்படுத்தி இருந்தது. அதனால், மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றுமொரு பெண்... 

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா நிற்கும் படம்

24-ம் தேதி அதிகாலை இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. உடனே, கறுப்புச் சேலை அணிந்துகொண்டு தனது காரில், ராமவரம் கிளம்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவோடு இன்னொரு பெண்ணும் அந்தக் காரில் அமர்ந்திருந்தார். ராமவரம் தோட்டத்தின் கேட்டில், ஜெயலலிதா சென்ற கார் மறிக்கப்பட்டது; உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கறார் காட்டப்பட்டது. அந்த வார்த்தைகளைக் கேட்ட ஜெயலலிதா, வெறிபிடித்ததுபோல் காரில் இருந்து இறங்கினார். “என் தலைவர் வீட்டுக்குள் போக என்னைத் தடுக்கிறீர்களா? வழியை விடுங்கள்” என்று கத்தினார் ஜெயலலிதா; அந்தச் சத்தத்தில் தோட்டத்தின் கதவுகள் திறந்தன; ராமவரம் தோட்டத்து வீட்டில், மூன்றாவது மாடியில் எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதைத் தெரிந்து கொண்டு நேராக ஜெயலலிதா அங்கே போனார். அவருடன் காரில் வந்த அந்தப் பெண்ணும் ஜெயலலிதாவுக்குப் பின்னாலே போனார்.

ஆனால், அங்கு உள்ள பலருக்கு அந்தப் பெண்ணை யார் என்றே அடையாளம் தெரியவில்லை. மூன்றாவது மாடியிலும் ஜெயலலிதாவுக்கு அறைக் கதவுகள் திறக்கவில்லை; மறித்தவர்களிடம் ஜெயலலிதா வாக்கு வாதம் செய்தார்; ஒன்றும் நடக்கவில்லை; அறைக் கதவுகளில் தன் தலையை முட்டினார்; அதற்கும் யாரும் மசியவில்லை.  அதே நேரத்தில், எம்.ஜி.ஆரின் உடல், மற்றொரு வாசல் வழியாக, ‘லிப்ட்’ மூலம் மாடியில் இருந்து இறக்கப்பட்டு, ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. அதைத் தெரிந்து கொண்ட ஜெயலலிதா வேகமாக கீழே இறங்கி, ஆம்புலன்சில் ஏற முயன்றார். ஆனால், அதற்குள் ஆம்புலன்ஸ் வேகமெடுத்துப் பறந்தது.

ஜெயலலிதா விடவில்லை. தனது காரில், தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு, ஆம்புலன்சைத் துரத்திக் கொண்டே போனார். ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மண்டபத்தின் பின்வாசல் வழியாக கறுப்பு நிற உடையில் ராஜாஜி ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. அவருடைய கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பேறிப் போய் இருந்தன. ஜெயலலிதாவோடு அந்தப் பெண்ணும் வந்தார். தன்னுடைய கண்ணசைவில், எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் பிம்பத்தைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஜெயலலிதாவால், இப்போது அவர் உடல் அருகில் செல்லக்கூட ஏராளமான தடைகள் இருந்தன. அவற்றை உடைத்து,  இறந்துபோன எம்.ஜி.ஆரின் உடல் அருகில் போய் நிற்க, ஜெயலலிதா ஒரு தொடர் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. 

2 பெண்கள்... 2 ஜோடிக் கண்கள்... வெறித்த பார்வைகள்...

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உடலை, சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா; கண்களில் நீர் தளும்பி நின்றது; ஆனால், வாய்விட்டு அழவில்லை; முகம் இறுக்கம் அடைந்து போய் இருந்தது; எம்.ஜி.ஆரின் தலைக்கு அருகில் சென்று நின்று கொண்டார்; ஜெயலலிதாவின் கைகள் எம்.ஜி.ஆர் வைக்கப்பட்டு இருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றிக் கொண்டன. ஜெயலலிதாவுக்கு நேர் எதிரில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார். எம்.ஜி.ஆரின் உடலை தன்னுடைய கர்சிப்பால் ஜெயலலிதா அவ்வப்போது துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்; அமைச்சர் பொன்னையன் எம்.ஜி.ஆரின் உடலைத் தொட முயன்றபோது, அவரது கைகளை வெடுக்கென்று தள்ளிவிட்டு அவரை முறைத்தார் ஜெயலலிதா; இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதாவின் கண்கள், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன; ஜெயலலிதாவோடு சேர்ந்து எம்.ஜி.ஆரின் உடலைத் துரத்தி வந்த மற்றொரு பெண், ஜெயலலிதாவுக்குப் பின்னால் நின்றார்; வி.ஐ.பி-கள் வரும் நேரங்களில், அந்தப் பெண் ஜெயலலிதாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டார். அந்தப் பெண்ணின் கண்களும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. 36 மணிநேரம் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் உடலைவிட்டு நகரவில்லை.

mgr_death_1_12134.png

ஜெயலலிதா முதல் நாள் கறுப்புச் சேலையில் / இரண்டாவது நாள் வெள்ளைச் சேலையில் 

அதே 36 மணிநேரம் ஜெயலலிதாவைத் தனியாகவிட்டுவிட்டு அந்தப் பெண்ணும் நகரவில்லை. வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மட்டும், அங்கிருந்து கிளம்பிய ஜெயலலிதா உடைமாற்றிக் கொண்டு அடுத்த அரை மணிநேரத்தில், ராஜாஜி ஹாலுக்கு வந்துவிட்டார். முதல் நாள் கறுப்புச் சேலையில் இருந்தவர், இரண்டாவது நாள் வெள்ளைச் சேலையில் வந்திருந்தார். ஜெயலலிதாவுடன் வந்த பெண்ணும் ஜெயலலிதா கிளம்பியபோது கிளம்பினார். மீண்டும் ஜெயலலிதா வந்தபோது, அவர்கூடவே வந்துவிட்டார். இப்படி பிடிவாதமாக ராஜாஜி ஹாலில் நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவை, அங்கிருந்தவர்கள், பெரிதாக மதிக்கவில்லை; ஜெயலலிதாவோடு வந்த அந்தப் பெண்ணை யாருக்கும் அடையாளமே தெரியவில்லை. எம்.ஜி.ஆர் உடலுக்குப் பின்னால் நின்று கொண்டு, எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அந்த இரண்டு பெண்களின்... 2 ஜோடிக் கண்களின்... வெறித்த பார்வைக்குள் கனன்று கொண்டிருந்தது, தமிழகத்தின் 30 ஆண்டுகால அரசியல்...

எம்.ஜி.ஆர் உடலுக்குப் பின்னால், மற்றவர்களால் பெரிதாக மதிக்கப்படாமல் நின்று எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்கு நிரந்தரப் பொதுச் செயலாளர் ஆனார்; 6 முறை முதலமைச்சரானார்; அன்று அதே ராஜாஜி ஹாலில், ஜெயலலிதாவை பெரிதாக கருதாத, ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன், ராஜராம், பொன்னையன், தம்பிதுரை உள்ளிட்டவர்கள், அதன்பின் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டனர். எம்.ஜி.ஆர் மறைவில் பின்னால் இருந்த ஜெயலலிதா, அதன்பிறகு வந்த 30 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சியின் சர்வ சக்தியாக விளங்கினார். எம்.ஜி.ஆர் மறைவில், ஜெயலலிதாவுக்குப் பின்னால் நின்று கொண்டு, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியானர்; அடுத்துவந்த 30 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவின் பின்னால் இருந்து, எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை அந்தப் பெண் ஆட்டிப்படைத்தார்; ஜெயலலிதாவின் ஆட்சியை அந்தப் பெண்ணே நடத்தினார்; 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முன்னால் வந்து ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். 

(கதை தொடரும்...)

http://www.vikatan.com/news/coverstory/77730-this-is-what-happened-at-mgr-last-ritual1-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-17.art

Link to comment
Share on other sites

"யார் முதல்வர்?" மோதிய மூன்று முகங்கள் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 18

சசிகலா

அரசியல் என்றால் அப்படித்தான்...

1987 டிசம்பர் 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். 24, 25-ம் தேதிகள் என இரண்டு நாட்கள், அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட இரண்டே மணிநேரத்தில், நாவலர் நெடுஞ்செழியன், பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான், எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன்,  தற்காலிகமாக, பொறுப்பு முதல்வர்தான்; முழுமையான முதல்வராக அவர் ஆகவில்லை; ஆக்கப்படவில்லை; “இன்னும் எம்.ஜி.ஆர் அமர்ந்து ஆட்சி நடத்திய முதல்வர் நாற்காலி காலியாகத்தான் இருக்கிறது. அதைக் கைப்பற்றியே தீரவேண்டும்” என்று வெறிபிடித்து அலைந்தவர்கள், ராஜாஜி ஹாலில் சோக முகமூடியோடு வலம் வந்தனர்; அவர்களின் உடல் தான் ராஜாஜி ஹாலில் சுற்றிக் கொண்டிருந்தது; மனம், முதல்வர் நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது; அவர்களின் உள்ளம் முழுவதும், அதற்கான உள்ளடி வேலைகளால் நிரம்பித் தளும்பின; அந்தத் தளும்பல் துளிகள், எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி ஹால் முழுவதும் சிதறித் தெறித்தன. 

ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்ட டிரக்கில் ஏற முயலும் ஜெயலலிதா

2017 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்துபோனதும், அன்று இரவே பன்னீர் செல்வம் முதலமைச்சராக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் அரசியலின் பாலபடம் தெரியாதவர்கள்; எம்.ஜி.ஆர் இறந்தபோது நடந்ததை அறியாதவர்கள்; அவர்கள்தான் இன்று நடப்பதை அசிங்கமாகவும் ஆச்சரியமாகவும பார்க்கிறார்கள்; ஆனால், அன்று நடந்ததை அறிந்தவர்களுக்குத் தெரியும்... ‘இன்று நடந்ததும் நடப்பதும் புதிததல்ல’ என்று; அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று... 

முதல்வர் நாற்காலியை குறிவைத்த மூன்று முகங்கள்...

எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி ஹாலில், முதல்வர் நாற்காலிக்காக மூன்று முகங்கள் காய் நகர்த்திக் கொண்டிருந்தன. அதில் முதல் முகம் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் உடலுக்கு அருகில் பிடிவாதமாக 36 மணி நேரம் நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவின் கண்கள் ரத்தச் சிவப்பேறி இருந்தன; அவர் கைகளில் ரத்தக் கோடுகள் பதிந்திருந்தன; அவை, ஜெயலலிதாவை  எம்.ஜி.ஆர் தலைமாட்டில் இருந்து அப்புறப்படுத்த நினைத்தவர்களால் ஏற்பட்ட நகக் கீறல்கள். உடல்சோர்வு, நகக் கீறல்கள், மனக் காயங்கள், தொடர் அவமானங்கள்... என அத்தனையையும் தாங்கிக் கொண்டு, கால்கடுக்க நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவின் ஒரே நோக்கம் ‘முதல்வர் நாற்காலி’; அவருடைய வெறித்த பார்வைகளில், அதற்கான திட்டங்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன; அந்தத் திட்டம் தோற்றால், தனக்கு நேரிடும் சூன்யமான வீழ்ச்சியும் ஜெயலலிதாவின் வெறித்த பார்வைக்குள் வந்து போய் இருக்க வேண்டும். 

எம்.ஜி.ஆர் ஜானகி

எம்.ஜி.ஆர் இருக்கும் மேடையில் இடது ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் நாவலர் நெடுஞ்செழியன்

முதல்வர் நாற்காலியை குறிவைத்த ‘மிஸ்டர் 2’ நாவலர் நெடுஞ்செழியன்; அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆரோடு அரசியலைப் பரிட்சித்துப் பார்த்த, திராவிட இயக்க முன்னோடி அவர்; எல்லா இடத்திலும் ‘நம்பர் 2’ ஆகவே, இருந்து விரக்தி அடைந்து போய் இருந்தவர்; எம்.ஜி.ஆர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில் பொறுப்பு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார்; இப்போதும் அவருக்கு வாய்த்தது இரண்டாம் இடம்தான். ஆனால், இதற்கு முன்பு அவருக்கு வாய்க்காத வகையில், முதல் இடம்... முதல்வர் இடம்... தொட்டுவிடும் தூரத்திலேயே இருந்தது. அதைத் தொட்டே தீரவேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தார். 

முதல்வர் நாற்காலியைக் குறிவைத்த மூன்றாவது முகம், ஆர்.எம்.வீரப்பன்; எம்.ஜி.ஆரின் சினிமாப் பயணத்தில் இருந்து, எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து வருபவர்; எம்.ஜி.ஆரின் வலதுகரம்; சமயங்களில் எம்.ஜி.ஆரின் இதயம், மூளை எல்லாம் ஆர்.எம்.வீதான். இத்தனை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து வந்தவருக்கு, தற்போது முன்னோடி இல்லை. ஆனால், அவருக்குப் பின்னால், 86 எம்.எல்.ஏ-க்கள் நின்றனர்; அந்தப் பலம் தந்த திடம், ஆர்.எம்.வீ-யையும் ஆட்டிப்பார்த்தது; அவருக்கும் எம்.ஜி.ஆர் நாற்காலியில் அமர ஆசை வந்தது; அவருக்கு குறுக்கே நிற்கும், ஜெயலலிதா ஒரு பொருட்டே அல்ல; நெடுஞ்செழியனுக்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லை. அதனால் அவரை, இரண்டாவது இடத்திலேயே மண்ட வைத்துவிட்டு, முதல்வர் இடத்துக்கு நகர்ந்தே தீரவேண்டும். முதல்வர் நாற்காலியை அடைந்தால்தான், எம்.ஜி.ஆரின் நிழலாய் வலம் வந்ததற்கும், 1984-ல் நடைபெற்ற தேர்தலை - எம்.ஜி.ஆரை அமெரிக்காவில் படுக்கவைத்துக் கொண்டே - வென்று காட்டியதற்கும் வரலாற்றில் அர்த்தம் இருக்கும் என்று ஆர்.எம்.வீரப்பனின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. 

ஒதுங்கி நின்ற ஜானகி... அழைத்து வந்த ஆர்.எம்.வீ...

ஜெயலலிதா எம்.ஜி.ஆர் ஜானகி

ராஜாஜி ஹாலில் இருந்து எம்.ஜி.ஆர் உடலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஜானகி

அரசியல், முதல்வர் நாற்காலி என்ற எந்த எண்ணமும் இல்லாமல் ஜானகி அம்மாள் ராமவரம் தோட்டத்தில் முடங்கிக் கிடந்தார். முதல்வர் நாற்காலி அவருக்குத்தான் வாய்த்தது என்பது தனிக்கதை. ‘ஜெயலலிதா பிடிவாதமாக எம்.ஜி.ஆர் தலைமாட்டில் நிற்பதும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ராமவரத்தில் முடங்கிக் கிடப்பதும் எதிர்கால ஆபத்து’ என்று அப்போதே கணித்தார் ஆர்.எம்.வீரப்பன். “எல்லா டி.வியிலும் ஜெயலலிதாவின் முகமே தெரிகிறது... இது நல்லதல்ல... உடனே, ஜானகி அம்மாளை, ராஜாஜி ஹாலுக்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார். அதன்பிறகுதான் ஜானகி அம்மாள் ராஜாஜி ஹாலுக்கு வந்து எம்.ஜி.ஆர் உடல் அருகில் அமர்ந்தார்; ஜானகி அழுதார்; மயங்கினார்; ஒய்வெடுத்தார்; சமயங்களில் இயல்பாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா அசையவில்லை; உறுதியாக நின்றார்; எதற்கும் குலையாத உறுதி அது; ஜெயலலிதாவின் அந்தப் போக்கு, முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தவர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது; ஜானகியின் குடும்பத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது; அவர்கள், ஜெயலலிதாவை எப்படியாவது அங்கிருந்து அகற்றிவிடத் துடித்தனர்; அதற்கான நேரம் வாய்த்தது. 25-ம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு, எம்.ஜி.ஆரின் உடல் இறுதி ஊர்வலம் கிளம்பியது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ராணுவ டிரக்கில் எம்.ஜி.ஆர் உடல் ஏற்றப்பட்டது. அப்போது, அந்த டிரக்கில் ஏறுவதற்கு ஜெயலலிதா   முயன்றார். ராணுவ அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவுக்கு கை கொடுத்து உதவினார். அப்போது அங்கு வந்த ஜானகியின் தம்பி மகன் நடிகர் தீபன், ஜெயலலிதாவை முந்திக் கொண்டு டிரக்கில் ஏறினார். ஏறியவர், ஜெயலலிதாவின் நெற்றியில் கைவைத்து அவரைக் கீழே தள்ளினார். ஆனால், டிரக்கின் பிடியை ஜெயலலிதா விடவில்லை. உடனே, தீபனுக்கு ஆதரவாக சற்றுத் தள்ளி நின்ற எம்.எல்.ஏ கே.பி.ராமலிங்கம், தண்டாரம்பட்டு வேலு ஆகியோர் ஓடி வந்து, ஜெயலலிதாவைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். ராணுவ அதிகாரி ஒருவர் ஜெயலலிதா, கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டார். நிலைமை மோசமானது. விபரீதத்தைப் புரிந்து கொண்ட போலீஸ்காரர்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகிவிடும் என்று ஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொன்னார்கள். புரிந்துகொண்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்டு இருந்த டிரக்கை மூன்று முறை வலம் வந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். சசிகலாவை அழைத்துக் கொண்டு நேராக, போயஸ் தோட்டத்துக்கு வந்த ஜெயலலிதா, தன் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டார். பல மணிநேரம் கழித்தும் அவர் வெளியில் வரவில்லை. இரவு 8 மணிக்குமேல் போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்து வந்த ஜெயலலிதா, தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். நடராஜன், ஜெயலலிதாவின் ஆதரவாளர்களைத் திரட்டும் வேலையில் பிஸியாகிப் போய் இருந்தார். 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/77797-who-is-cm-triangle-political-war--how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---18.art

Link to comment
Share on other sites

"முதல்வரே... பொதுச் செயலாளரே..." : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 19

சசிகலா

முதல்வரே... பொதுச் செயலாளரே... 

எம்.ஜி.ஆர் உடல் கிடத்தப்பட்டு இருந்த ராணுவ டிரக்கில் ஜெயலலிதாவுக்கு இடம் மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாகக் கீழே தள்ளிவிடப்பட்டார். அப்போது, ஜெயலலிதாவிடம், தண்டாரம்பட்டு வேலுவும், கே.பி.ராமலிங்கமும் நடந்த கொண்ட விதம் அருவருப்பானது. ஜெயலலிதாவுக்கு மறக்கமுடியாத மனக்காயத்தை உண்டாக்கியது. ஜெயலலிதா அவரது வாழ்வில் சந்தித்த, மோசமான... மிக மோசமான தருணங்களில் ஒன்றாக அதுவும் அமைந்தது. ஆனால், ஜெயலலிதா அசரவில்லை. ஆற்றாமை, கோபம், வெறியோடு தன் வீட்டுக்குப் போனவர்,  தனது அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டார். பல மணி நேரங்கள் அந்த அறைக்குள்ளேயே தனித்து இருந்தவர் இருந்தவர், இரவு 8 மணிக்குப் பிறகு பால்கனிக்கு வந்து, வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்களைச் சந்தித்தார். அவர்களின் முன் உரையாற்றிய ஜெயலலிதா, “உங்க எல்லோருக்கும் நன்றி! வருங்கால முதல்வர், பொதுச் செயலாளர் அப்டின்னு என்னைச் சொன்னீங்க.... ஆனால், நான் எந்தப் பதவிக்கும் சொத்து சுகத்துக்கும் ஆசைப்படவில்லை. தலைவர் எனக்கு நிறைய கட்டளைகள் இட்டிருக்கிறார்; அதை இப்போது சொல்ல மாட்டேன்; சமயம் வரும்; அப்போது சொல்வேன்; அதுவரை பொறுமையாக இருங்கள்... சந்தப்பவாத அரசியலுக்கு மட்டும் இடம் தராதீங்க...” என்று சொல்லி வணக்கம் வைத்துவிட்டு, மின்னலைப்போல் மறைந்தார். 

ஜெயலலிதா

வெளியில் வந்த உள்பகை!

மறுநாள் மீண்டும் (1987 டிசம்பர் 26) ஜெயலலிதா, தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கையில் அறிக்கை ஒன்று இருந்தது. அதில், தீபன் தன்னைத் தாக்கியதையும், எம்.எல்.ஏ-க்கள் திட்டியதையும், ‘நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் விளக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார். ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்கள், அ.தி.மு.க-ன் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்கு இதுபோன்ற அசாம்பாவிதங்கள் நடைபெற்று இருந்தால் அது வேறு; எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லாத போது, ஜெயலலிதாவுக்கு அப்படி நடந்தது வேறு. அதனால், இந்த விவகாரம், தமிழக மக்கள் மனதில், ஜெயலலிதா மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது; அ.தி.மு.க தொண்டர்களில் பலரை ஜெயலலிதா பக்கம் திருப்பியது; அ.தி.மு.க என்ற கட்சிக்குள் இருக்கும் உள்பகையை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

ஆர்.எம்.வீரப்பன்

சசிகலா குடும்பமும்... போயஸ் தோட்டமும்!

எம்.ஜி.ஆர் இறந்ததையடுத்து ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்கள், சசிகலா தவிர்த்து அவருடைய குடும்பத்தையும் போயஸ் தோட்டத்துக்குள் கொண்டு வந்தது. அதற்கு முன்புவரை, சசிகலா மட்டும் அங்கு இருந்தார்; நடராஜன் அவ்வப்போது வந்து போகிறவராகவும், ஆலோசனைகள் சொல்கிறவராகவும் மட்டுமே இருந்தார். எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு வலுவான பாதுகாப்பு நிரந்தரமாகத்  தேவைப்பட்டது. சசிகலாவின் தம்பி திவாகரன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இந்த அடிப்படையில் சசிகலாவின் குடும்பம் மெல்ல மெல்ல போயஸ் தோட்டத்துக்குள் வந்து சேரத் தொடங்கியது. 

ஆர்.எம்.வீ, நாவலர் ஆடிய எம்.எல்.ஏ-க்கள் வேட்டை!

இதே நேரத்தில், அ.தி.மு.க-வில் பதவிக்காக கடும் போர் நடந்தது. நாவலர் நெடுஞ்செழியனும் ஆர்.எம்.வீரப்பனும் எதிர் எதிர் அணியாக மாறி, அந்தப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். அ.தி.மு.க என்ற கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தேடித் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர் இறந்த அன்று இரவே ஆர்.வீரப்பனின் ஆட்கள், கையெழுத்து வேட்டையைத் தொடங்கி இருந்தனர். எம்.ஜி.ஆரை அடக்கம் செய்த பிறகு, அதைத் தீவிரப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்த வேகத்தை பார்த்து, ஒரு கட்டத்தில் வீரப்பனே மிரண்டுபோனார். “தலைவர் இறந்த உடனே நாம் இவ்வளவு வேகம் காட்டுவது நல்லதல்ல... சில மாதங்கள் பொறுத்திருந்துவிட்டு, பிறகு ஆட்சியைக் கைப்பற்றலாம்” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னார். ஆனால், ஆர்.எம்.வீ-யின் ஆட்கள், “இந்த வாய்ப்பை நழுவவிட்டால், இதற்குப் பிறகு உங்களுக்கு எதிர்காலம் இல்லை; உங்களுக்கு இல்லையென்றால் எங்களுக்கும் எதிர்காலம் இல்லை..” என்றனர். ப.உ.சண்முகம், பொன்னையன், பிலிம் இன்ஸ்டியூட் கெஸ்ட் ஹவுஸ், அசோக ஹோட்டல்களில் ஆர்.எம்.வீ ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கான அறைகள் தயாரானது. வேட்டையாடப்பட்டவர்கள் அங்கு வைத்து பூட்டப்பட்டனர். 

நெடுஞ்செழியன்

இந்தத் தகவல் அறிந்த நாவலர் கொந்தளித்தார். “ஆர்.எம்.வீரப்பனின் கையெழுத்து வேட்டை உடனே நிறுத்தப்பட வேண்டும்” என்றார். ஆர்.எம்.வீரப்பனின் ஆட்கள், “130 எம்.எல்.ஏ-க்களையும் கூட்டுவோம்; யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும்; வெல்பவர்கள் தலைவராகட்டும்...” என்றனர். இந்த சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து, நாவலர் கும்பலுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், 1984-ல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, ஆர்.எம்.வீரப்பன் இப்படி ஒரு பரிட்சையை நடத்தி வெற்றி பெற்றவர். அதே பரிட்சை இப்போது நடந்தாலும் அவர்தான் வெல்வார். அதனால், இதற்கு ஒத்துக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் நாவலரை வற்புறுத்தினார்கள். நாவலருக்கும் அது புரிந்தே இருந்தது. என்ன செய்யலாம்... என்ன செய்யலாம்... என்று அவர் யோசித்துக் கொண்டே இருந்தார். 

சமரசத் திட்டமும்... தலையில் இறங்கிய இடியும்...

ஆர்.எம்.வீரப்பன், நாவலர், ஜெயலலிதா கோஷ்டிகள் நடத்திக் கொண்டிருந்த பதவிச் சண்டைக்கு இடையில், பழனி பெரியசாமி, மாதவன், ராகவனந்தம் போன்றவர்கள் சமரசத் திலகங்களாக வலம் வந்தனர். அவர்கள் மூவரும் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களையும் சந்தித்து சமரசத் திட்டம் ஒன்றைக் கொடுத்தனர். எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவை தொடரட்டும்; நெடுஞ்செழியன் முதலமைச்சராக தொடரட்டும்; ஆர்.எம்.வீரப்பன் உதவி முதலமைச்சராக இருக்கட்டும் என்பதுதான் அவர்களின் சமரசத்திட்டம். இதற்கு ஆர்.எம்.வீரப்பன் சம்மதித்தார். நாவலர் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். முதல்நாள் இதற்கு வீரப்பன் ஒத்துக் கொண்டார். நாவலர் அமைதியானார். சமரசத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு வாழ்த்துச் சொல்ல மறுநாள் சிலர் சென்றனர். அவர்களிடம் “நாவலர் முதலமைச்சரா...? நான் துணை முதலமைச்சரா...? இதற்கு நான் எப்போது சம்மதித்தேன்? என்று கேட்டு மீண்டும் குழப்பத்தைத் தொடங்கி வைத்தார். அதோடு, தான் முதலமைச்சராவதற்காக ஆதரவு கேட்டு, ஜானகி அம்மாளைச் சந்திக்க ராமவரம்  தோட்டம் நோக்கிப் புறப்பட்டார். ஆர்.எம்.வீரப்பனின் இந்த குளறுபடியால், மீண்டும் கொதிநிலைக்குப்போனார் நாவலர். “ஆர்.எம்.வீரப்பன் ஜானகி அம்மாளிடம் ஆதரவு கேட்கப்போகிறரா? அப்படியானால், நாம் ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்போம்...” என்ற முடிவுக்கு வந்தார் நாவலர். உடனே, கிளம்பி ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ் தோட்டம் போனார் நாவலர். 

எதிர் எதிர் திசையில் அமைந்த இரண்டு தோட்டங்களைத் தேடிப் போன ஆர்.எம்.வீ, நாவலர் இருவருக்கும் அங்கு பரிசாக பூங்கொத்துக்கள் கிடைக்கவில்லை; மாறாக, பேரதிர்ச்சி அவர்கள் தலையில் இடியைப் போல் இறங்கியது!

கதை தொடரும்....

http://www.vikatan.com/news/coverstory/78057-yes-she-is-general-secretary-and-cm-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---19.art

Link to comment
Share on other sites

எதிர்பார்க்காத எதிரிகள்! எதிர்பார்க்காத தாக்குதல்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 20

 

சசிகலா

 

நெடுஞ்செழியன்எம்.ஜி.ஆர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து நின்றனர். அவர்களுக்குள்தான் போட்டி என்ற நிலை உருவானது; அல்லது உருவாக்கப்பட்டது. அதில் மதி மயங்கிப்போய் இருந்த நாவலரும், ஆர்.எம்.வீரப்பனும் இரண்டு விசயங்களை மறந்து போய் இருந்தனர். ஒன்று, ஜெயலலிதாவும் போட்டியில் இருக்கிறார் என்பது. இரண்டு, ஜானகியும் போட்டிக்கு வரலாம் என்பது. இந்த இரண்டு விஷயத்தையும் அவர்கள் கணிக்கத் தவறியதன் விளைவு, எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காத திசையில் இருந்து, எதிர்பார்க்காத எதிரியாக ஜானகி புறப்பட்டு வந்து கள நிலவரத்தை புரட்டிப் போட்டார்.

மற்றொருபுறம், ஜெயலலிதா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி இருந்தார். இதேபோல, எம்.ஜி.ஆரின் முதல்வர் நாற்காலிக்குச் சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனும், நெடுஞ்செழியனும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் நாற்காலியை பிறகு பிடித்துக் கொள்ளலாம் என்று அசட்டுத் தைரியத்தில் இருந்தனர். ஆனால், ஜானகியும் ஜெயலலிதாவும் இவர்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக, களத்தில் சுழன்றனர். பொதுச் செயலாளர் நாற்காலியையும் குறிவைத்துச் சண்டை போட்டனர். ஜானகிக்காக அவருடைய ‘கிச்சன் கேபினட்’ வேலை பார்த்தது. ஜெயலலிதாவுக்காக, ‘சசிகலா-நடராஜன் அன் கோ’ வேலை பார்த்தது.

நானே முதல்வர்... வீரப்பனுக்கு ஜானகி கொடுத்த ‘ஷாக்!'

janaaki_jaya_alter_19225.png

“86 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. ஜானகி அம்மாள் ஆதரவும் இருந்தால், நாம் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்க முடியாது” என்று நினைத்த ஆர்.எம்.வீரப்பன் அதற்காக ராமவரம் தோட்டத்துக்கு போனார். வீரப்பன் அங்கு போவதற்கு முன்பே, ஜானகி அம்மாளைச் சுற்றி இருக்கும் ‘கிச்சன் கேபினட்’, “நீங்களே  முதலமைச்சர் ஆக வேண்டும்” என்று அவரை வற்புறுத்தி மனதைக் கரைத்து இருந்தது. அவர்களோடு அமைச்சர் முத்துச் சாமியும் சேர்ந்து கொண்டு செயல்பட்டார். ஜானகி சம்மதம் தெரிவித்ததும், ஜானகியின் சம்மதத்தைச் சொல்லி கட்சிக்காரர்களின் ஆதரவைத் திரட்ட களம் இறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் அமைச்சர் முத்துச்சாமி. இந்த விபரம் எதுவும் தெரியாமல், ஆர்.எம்.வீரப்பன் ராமவரம் தோட்டத்துக்குச் சென்று, ஜானகி அம்மாளிடமே ஆதரவு கேட்டார். அவரிடம், “நானே முதலமைச்சர் ஆகலாம் என்று நினைக்கிறேன்” என்று ஜானகி அம்மாள் சொன்னபோது, ஆர்.எம்.வீரப்பனுக்கு தொண்டை வறண்டது; நெஞ்சு அடைத்தது; கண்கள் இருட்டியது; தன் கனவு தன் கண் முன்னாலே உடைந்து நொறுங்கியதை அவர் உணர்ந்தார்; நிதானத்துக்கு வர நீண்ட நேரம் ஆனது. ஆனால், ஜானகி சொன்னதைத் தவிர ஏற்பதைத் தவிர ஆர்.எம்.வீரப்பனுக்கு வேறு வழியே இல்லை!

நானே பொதுச்செயலாளர்... நாவலருக்கு ஜெயலலிதா கொடுத்த ‘ஷாக்’ 

ஜெயலலிதா, நாவலர் நெடுஞ்செழியன்

வீரப்பன் பின்னால் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதா பின்னால் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள். வீரப்பனை எதிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதாவின் ஆதரவு தேவை என்ற முடிவுக்கு வந்த நாவலர், போயஸ் கார்டனுக்குப் போனார். “உங்களுக்கு கட்சியில் அதிக இடைஞ்சல் கொடுத்தவர் வீரப்பன். அவர் முதலமைச்சராகிவிட்டால் உங்களுக்கு மேலும் சிக்கல்தான். அதனால், என்னை ஆதரியுங்கள்” என்று நாவலர் ஜெயலலிதாவிடம் கேட்டார். ஜானகிக்காக அவருடைய கிச்சன் கேபினட் வேலை பார்த்ததுபோல், ஜெயலலிதாவுக்காக, திருநாவுக்கரசு, சேலம் கண்ணன், பண்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் வேலை பார்த்தனர். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஒன்றிணைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்படித்தான் திரட்டிப் பார்த்தாலும், 33 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை.

ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கணிசமாக ஜெயலலிதாவை ஆதரித்தனர். இதைவைத்துக் கணக்குப்போட்ட நடராஜன், “எம்.எல்.ஏ-க்களை ஒன்றிணைப்பது முக்கியம்தான். ஆனால், எம்.எல்.ஏ-க்கள் மட்டும் எதிர்காலம் அல்ல; கட்சியைக் கைப்பற்ற வேண்டும். அதுதான் ஜெயலலிதாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதற்கு, இதைவிட விட சிறப்பான தருணம் ஒன்று வாய்க்காது. கட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால், ஜெயலலிதா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும்” என்ற தனது திட்டத்தை ஜெயலலிதாவின் மனதில் ஆழமாகப் பதியம் போட்டிருந்தார். (அதே திட்டத்தைத்தான் இன்று சசிகலா விஷயத்திலும் நடராஜன் நடைமுறைப்படுத்தி உள்ளார்). ஜெயலலிதாவுக்கும் நடராஜனின் திட்டம் தெளிவாகப் புரிந்தே இருந்தது. தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த நாவலர் நெடுஞ்செழியனிடம், “தன்னைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்க ஒத்துக் கொண்டால், தன்னுடைய ஆதரவைத் தருகிறேன்” என்று சொன்னார். ராமவரம் தோட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் எப்படி உணர்ந்தாரோ... அப்படித்தான் போயஸ் தோட்டத்தில் நாவலரும் உணர்ந்தார். ஜெயலலிதா சொன்னதை ஏற்பதைத்தவிர நாவலருக்கும் வேறு வழியே இல்லை!

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/78145-unexpected-attack--how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-20.art

Link to comment
Share on other sites

ஜானகி முதல்வர், ஜெ. செயலாளர் - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 21

சசிகலா, ஜெயலலிதா

ராமவரத்தில் அறிவித்தார் ஜானகி!

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் அமைந்த ஆட்சிக்கு, ‘முதலமைச்சராக நானே பொறுப்பு ஏற்கிறேன்’ என்றார் ஜானகி; ஜானகி சொன்னதை முத்துச்சாமி முன்மொழிந்தார்; ஆர்.எம்.வீரப்பன் வேறு வழியே இல்லாமல் அதை வழிமொழிந்தார். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா வர வேண்டும் என்றார் நடராஜன்; ஜெயலலிதாவும் அதையே முன்மொழிந்தார்; நாவலர் நெடுஞ்செழியன் வேறு வழியே இல்லாமல் அதை வழிமொழிந்தார். அதுவரை பனிப்போர் மட்டுமே நிகழ்த்தி வந்த ஜா. அணியும், ஜெ. அணியும் நேருக்கு நேர் நின்று போர் செய்யப் புறப்பட்டன. 

ஜானகி

ஜானகி முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கு, பெரும்பகுதி எம்.எல்.ஏ-க்களை தாரை வார்த்துக் கொடுக்கப்போவது நாம்தான். அதனால், ஆட்சி அதிகாரம் நம் வகுத்துக் கொடுக்கும் கோட்டில்தான் சூழலும் என்பது ஆர்.எம்.வீ-யின் நம்பிக்கையாக இருந்தது. அதுபோல, எம்.எல்.ஏ-க்கள் ஆதரவும் இல்லாமல், மாவட்டச் செயலாளர்களின் தயவும் இல்லாமல், தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கும் இல்லாமல், ஆர்.எம்.வீரப்பனை எதிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதாவோடு இணக்கமாகப் போனால்தான் முடியும் என்று நினைத்தார் நாவலர் நெடுஞ்செழியன். இதுபோன்ற காரணங்களால், ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஜானகி, ஜெயலலிதா தலைமைகளை ஒத்துக் கொண்டனர். இப்போது ஜெயலலிதாவின் வசம் 40 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்; ஜானகியின் வசம் 97 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். தமிழக கவர்னர் குரானா சம்மதித்தால் இருவரில் ஒருவரை ஆட்சியமைக்க அழைக்கலாம். அதைக் கணக்குப்போட்டு, சென்னையில் களேபரங்கள் தொடங்கின. 1987 டிசம்பர் 31-ம் தேதி, ராமவரம் தோட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார் ஜானகி. சந்திப்பு நடப்பதற்கு முன்பே, ப.உ.சண்முகம், “அம்மா மனம் நொந்துபோய் இருக்கிறார்; அதனால், அவரிடம் தேவையில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்” என்று பத்திரிகையாளர்களுக்கு கட்டளை இட்டார். ஜானகியை நாற்காலியில் உட்கார வைத்து தூக்கிவந்தனர். பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜானகி, “முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்” என்று சொல்லி முடித்துக் கொண்டார். அதன்பிறகு, ஜானகி பெயரில் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை அமைச்சர் ப.உ.சண்முகம் வாசித்தார். ஆர்.எம்.வீரப்பனும் அவரது ஆதரவாளர்களும் பரபரப்பாக சுற்றி வந்தனர். அதன்பிறகு, காட்சிகள் பரபரப்பாயின. 

லாயிட்ஸ் சாலையில் அறிவித்தார் ஜெயலலிதா!

மற்றொரு புறம், சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம். நடராஜன், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோர் முயற்சியால், ஜெயலலிதா ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. அ.தி.மு.க என்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்தனர். 

நாவலர், ஜெயலலிதா

லாயிட்ஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,  இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோது, ‘ஜெயலலிதா வாழ்க’ என்ற கோஷம் லாயிட்ஸ் சாலையை அதிரவைத்தது. அந்த நேரத்தில், அதே அலுவலகத்தில் பக்கத்து அறையில் அமர்ந்திருந்த எதிர்கோஷ்டியான மாதவன், ராகவானந்தம், ஹண்டே, காளிமுத்து ஆகியோர் இந்த அதிர்வின் எரிச்சல் தாங்காமல், தங்கள் இருந்த அறையின் கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனர். உடனடியாகக் கட்சித் தொண்டர்கள் நிறைந்த பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதாக ஜெயலலிதா அறிவித்தார். அந்தக் கூட்டத்தில், “தான் அரசியலைவிட்டு விலக எண்ணியபோது, அதை தடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்... அப்போது அவர், என் அன்னை சந்தியா படத்தின் மீது அவர் சத்தியம் வாங்கி, இனிமேல் அரசியலைவிட்டுப் போகக்கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டார். அதனால்தான், நான் அரசியலில் நீடிக்கிறேன்... ஜானகியை முதலமைச்சராகவிடக்கூடாது.; நாவலர் முதலமைச்சராக வேண்டும்; எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவை தொடர வேண்டும்” என்று அப்போது தன் ஆதரவாளர்களுக்கு முன்னால் பேசினார் ஜெயலலிதா. 

டெல்லி தர்பாரில் ஜா. அணி-ஜெ. அணி!

ஜானகிஜெயலலிதாவின் விஸ்வரூபத்தைப் பார்த்த ஜானகி அணியினர், வேகவேகமாக முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றும் வேலைகளில் இறங்கினர். அதைத் தெரிந்து கொண்ட நடராஜன், ஜெயலலிதாவுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டால் தனிக்கட்சி ஆரம்பித்து, அதையே உண்மையான அ.தி.மு.க என்று அறிவித்து, இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டார். அதோடு, “ஜானகி அ.தி.மு.க உறுப்பினரே அல்ல; அவர் முதலமைச்சர் ஆகக்கூடாது” என்று ஒரு வழக்கறிஞரை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட வைத்தார் நடராஜன். நடராஜனையும் ஜெயலலிதாவையும் நன்றாக அறிந்து வைத்திருந்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் பெயர் வருவதுபோல எட்டு விதமான கட்சிப் பெயர்களை உருவாக்கி, அவற்றை முன்கூட்டியே பதிவு செய்தும் வைத்தார். ஜானகி தரப்பு மத்திய அரசின் உதவியைப் பெற டெல்லிக்குப் பறந்தது; அதற்கு முட்டுக்கட்டைபோட ஜெயலலிதா தரப்பும் டெல்லிக்குப் பறந்தது. ஜெயலலிதா சார்பில் எம்.பி குழந்தைவேலு போனார்; ஜானகி தரப்பில், தம்பித்துரை அங்கிருந்து பல வேலைகளைப் பார்த்தார். இரண்டு கோஷ்டிகளும் டெல்லியின் ஆதரவு தங்களுக்குத்தான் என்று மார்தட்டிக் கொண்டன. டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி ஜெயலலிதாவை ஆதரிக்க நினைத்தார். ஆனால், ஜனாதிபதி வெங்கட்ராமனும், தமிழக ஆளுநர் குரானாவும் ஜானகி அம்மாள்தான் வரவேண்டும் என்று நினைத்தனர். அதிலும் கவர்னர் குரானா, ஜானகி அம்மாளின் அதிகாரப்பூர்வ ஸ்போக்ஸ்பெர்சனாகவே மாறிப் போய் இருந்தார். இவர்களோடு, ஆரம்பத்தில், தமிழக இ.காங்கிரஸ் தலைவரான மூப்பனாரும் ஜானகியைத்தான் ஆதரித்தார். கவர்னர் குரானா ஜானகியை முதலமைச்சராக்குவதில் மிகமிக வேகமாகச் செயல்பட்டார்.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/78694-cm-janaki-gs-jayalalithaa---how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---21.art?artfrm=read_please

Link to comment
Share on other sites

கிச்சன் கேபினட் vs போயஸ் கேபினட்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 22

சசிகலா, ஜெயலலிதா

ராமவரம் தோட்டத்தில் அமர்ந்து, ‘கிச்சன் கேபினட்’ அரசியல் நடத்திக் கொண்டிருந்த ஜானகியும், போயஸ் தோட்டத்தில் இருந்து ‘குழப்ப அரசியல்’ நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதாவும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தார்கள். எம்.ஜி.ஆர் இறந்த அன்று, ராமவரம் தோட்டத்தில் வைத்து அவருடைய உடலுக்கு ‘டிரெஸ்ஸிங்’ நடந்தபோது, ஜெயலலிதா அங்கு நுழைய முயன்று பிரச்னை செய்தார். அந்த நேரத்தில் ஆத்திரத்தில் கொந்தளித்த ஜானகி, “இன்னும் 10 நாட்களில் ஜெயலலிதாவை தமிழகத்தைவிட்டே துரத்துவேன்” என்று சூளுரைத்தார்.

ஜானகி, ஜெயலலிதா

ஜானகி நேரடி அரசியலில் குதித்ததற்கு அந்தச் சூளுரையும் முக்கியமானதொரு காரணம். ‘ஜானகி தனது அந்தரங்க எதிரி மட்டுமே’ என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு, அவருடைய நேரடிய அரசியல் பிரவேசம் பேரதிர்ச்சியாக அமைந்தது. ஜானகியை தன் அரசியல் எதிரியாக ஜெயலலிதா கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. ஆனால், நிஜத்தில் நடந்தபோது, தன்னால் வீழ்த்தப்பட வேண்டியவர்களின் பட்டியலில், ஜானகியை முதல் இடத்துக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா. அது, எம்.ஜி.ஆர் என்ற புனித பிம்பத்தின் மனைவியான ஜானகிக்கும், திரைவாழ்வில் அவருக்கு விருப்பமான கதாநாயகியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கும் இடையிலான அரசியல் போரை உக்கிரப்படுத்தியது. 

ஜானகி ராமச்சந்திரன் என்னும் நான்...

ஜானகி, கவர்னர் குரானா

டெல்லியில் ஜானகியை முதலமைச்சராக்க ஆதரவு திரட்டும் வேலையில் அ.தி.மு.க-வினரைவிட, அன்றைய தமிழக கவர்னர் குரானா விறுவிறுப்பாக செயல்பட்டார். அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனை சம்மதிக்க வைத்தார். ஜனாதிபதியின் சம்மதத்தை வைத்து பிரதமர் ராஜீவ் காந்தியை சரிக்கட்டினார். அவர்கள் மனம் மாறுவதற்குள், அவரச அவரசமாக ஜானகியை அழைத்துப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1987 ஜனவரி 7-ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், “ஜானகி ராமச்சந்திரனாகிய நான்...” என்று உறுதிமொழி ஏற்று தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஆனார் ஜானகி அம்மாள். முதலமைச்சர் ஆகிவிட்ட ஜானகியின் முன், இரண்டு  சவால்கள் இமயம் போல் வளர்ந்து நின்றன. ஒன்று, சட்டமன்றத்தில் தன் தலைமையில் அமைந்த அரசாங்கத்துக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். இரண்டாவது, தமிழகத்தின் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு சவால்களிலும் ஜானகியை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதாவுக்கான சவால்.  அதில் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்ய, நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் பாடுபட்டனர். அவர்களுக்குத் தளபதியாக இருந்து வழிநடத்திக் கொண்டிருந்தார் சசிகலாவின் கணவர் நடராஜன். அப்போது நடராஜன் ஆற்றிய பங்களிப்பு ஜெயலலிதாவை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் ஏணியில் ஏற்றிக் கொண்டே போனது. 

ஜா.- ஜெ. முதல் நேரடி மோதல்!

ஜெயலலிதா

அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகம், ஜானகி-ஜெயலலிதாவின் முதல் நேரடி மோதலுக்கான களமாக அமைந்தது. 1987 ஜனவரி 13-ம் தேதி ஜானகி - ஜெயலலிதா இரு கோஷ்டியினரும் தங்களது செயற்குழு கூட்டத்தைத் தலைமைக்கழகத்தில் நடத்துவதாக அறிவித்தனர். தமிழக அரசியல்களம் கொதிக்கத் தொடங்கியது. இந்த ரணகளத்தில் களமிறங்க போலீஸ் தடுமாறியது. ஏதேனும் விபரீதம் நடந்தால் அது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்கிற பயம் அவர்களுக்கு! தமிழக ஆளும் கட்சியில் நடக்கும் இந்தக் கோஷ்டிப் பூசல் போலீஸுக்கே புது அனுபவமாக இருந்தது. இரண்டு கோஷ்டிகளிடமும் வேறு வேறு நாளில் கூட்டத்தை  நடத்திக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தது போலீஸ். ஜானகி அணியில் வீரப்பனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் செயற்குழு கூட்டத்தை ரத்து செய்ய விடாப்பிடியாக மறுத்தனர்!
ஜெயலலிதா அணி என்ன சொல்லி இருக்கும் என்பதை நாம் இங்கே சொல்லவே தேவையில்லை.  ஆனால், இடையில்  நடந்த ஒரு திருப்பத்தால், போலீஸ் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. ஆம், டெல்லியின் நேசக்கரம் தேடிப் போன முதல்வர் ஜானகி என்ன நினைத்தாரோ, தனது கிச்சன் காபினெட் மூலம் தங்கள் செயற்குழு கூட்டத்தை ரத்து செய்ய டெல்லியில் இருந்தே உத்தரவு போட்டார். கூடவே தலைமைக்கழகத்தைப் பூட்டி சாவியை எடுத்து வந்துவிடுங்கள் என்றும் உத்தரவிட்டார். 
ஜெயலலிதா செயற்குழுவை நடத்தியே தீருவது என்ற உறுதியில் இருந்தார். 13-ம் தேதி காலை ஒன்பது மணியிலிருந்தே அவ்வை சண்முகம் சாலையை போலீஸ் வளைத்து ஆக்கிரமித்துக் கொண்டது. போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டது. தெருவின் இரண்டு புறங்களிலும் திரண்ட தொண்டர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பத்து மணிக்கு ஜெயலலிதாவின் கார் முன் செல்ல, வி.ஐ.பி.-க்களின் கார் தொடர்ந்து வந்து தலைமைக்கழகத்துக்கு சுமார் ஐம்பதடிக்கு முன்னாலே நின்றது. ஜெயலலிதா முன் செல்ல, மற்றவர்கள் அ.தி.மு.க அலலுவலகத்தை நோக்கிச் சில அடிகள் நடந்தவுடனேயே போலீஸ் அவர்களைத்  தடுத்து நிறுத்தியது.

ஜெயலலிதா மீது நடந்த லத்திசார்ஜ்!

நாவலர் நெடுஞ்செழியன், ஜெயலலிதா, திருநாவுக்கரசு

“நாங்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள். எங்கள் கட்சி அலுவலகத்துக்குப் போக எங்களை யாரும் தடுக்க முடியாது" என்று குரலை உயர்த்தினார் ஜெயலலிதா; ஆனால், போலீஸ் அதற்குப் பணியவில்லை. “உங்கள் தடையை மீறுகிறோம்... எங்களைக் கைது செய்யுங்கள்" என்று சொல்லிப் பார்த்தார். “கைது செய்யவும் உத்தரவில்லை" என்றார் அன்றைய துணை கமிஷனர் சியாம் சுந்தர். ஜெயலலிதா போலீஸைத் தள்ளிக்கொண்டு முன்னேறினார். முன்னாள் அமைச்சர்களும், ஆதரவாளர்களும் ஜெயலலிதாவைப் பின் தொடர்ந்தனர். ‘யாரையும் கைது செய்யக்கூடாது... கூட்டத்தை அடித்துக் கலையுங்கள்' என்று அங்கேயிருந்த போலீஸ் ஜீப்பில் இருந்த  மைக் அலறியது. அவ்வளவுதான்... போலீஸ் லத்திகள் காற்றில் சுழலத் தொடங்கின. ஜெயலலிதா மீது ஒரு அடி விழுந்தது! அடுத்த அடி விழும் முன் உதவியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். மற்றொரு லத்தி பண்ருட்டி ராமச்சந்திரனின் இடது கால் தொடையைப் பதம் பார்த்தது. அது தாங்காமல் அவர் மயங்கிச் சரிந்தார். நெடிய உருவம் கொண்ட நாவலரின் தோள்பட்டையை ஒரு லத்தி தாக்கியது. அவருக்கு கண்கள் இருண்டன. தன் உருவத்தைப்போலவே நெடிய அரசியல் வாழ்வை உடைய நாவலர் வாங்கிய முதல் முதல் போலீஸ் அடி அதுவே! குழந்தைவேலு எம்.பி-யின் வேட்டி பறிபோயிற்று! தோளில் இருந்த துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு ஓடினார். அடிவாங்கிய ஜெயலலிதாவும் முன்னாள் அமைச்சர்களும் அப்படியும் தலைமைக்கழகக் கட்டடத்தை நோக்கியே பாய்ந்தார்கள். பத்து நிமிடத்துக்குள் வி.ஐ.பி.-க்கள் ஒருபுறமும், தொண்டர்கள் மற்றொருபுறமும் சிதறிக் கிடந்தனர். முன்னோக்கி நடந்த ஜெயலலிதா தலைமைக்கழகத்தின் இரும்புக் கேட்டுக்கு, இரண்டு அடி முன்னால் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மறியல் ஆரம்பித்த ஜெயலலிதா, அங்கிருந்த கூட்டத்தினரிடம் பேசுவது போல் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். நேரம் ஓடிற்று, உட்கார்ந்துவிட்ட தலைவர்களிடம் கலைந்து போகுமாறு சமாதானத் தூது அனுப்பினர் போலீஸ் அதிகாரிகள்; தலைவர்கள் மறுத்தனர்; பிறகு, “உங்களை எல்லாம் கைது செய்கிறோம்" என்று கூறி, அங்கே காத்திருந்த பல்லவன் பஸ்ஸில் ஏறச் சொன்னார்கள். மறுத்துவிட்டார் ஜெயலலிதா. “போலீஸ் வேனில் ஏற்றுவதாக இருந்தால் வருகிறேன்... பஸ்ஸில் வர முடியாது" என்றார்.

ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கை உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கிருந்து என்ன உத்தரவு வந்ததோ... ஜெயலலிதா கேட்டபடி, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். தொண்டர்கள் மூன்று பல்லவன் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். போலீஸ் வேனும் பேருந்தும் அங்கிருந்து சீறிக் கிளம்பின. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/78893-kitchen-cabinet-vs-poes-cabinet-how-sasikala-became-bestie-of-jayalalithaa---chapter-22.art

Link to comment
Share on other sites

இரண்டாவது அனுதாப அலை: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 23

சசிகலா, ஜெயலலிதா

ஜானகியின் இறக்கமும்... ஜெயலலிதாவின் ஏற்றமும்... 

ஜானகிஜானகி முதலமைச்சர் ஆகிவிட்டார்; அந்த அமைச்சரவையின் ஆட்டத்தைக் குலைக்க வேண்டும்; ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; அதற்குப்பிறகு வரும் தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்; அதுவரை பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், நாவலர் நெடுஞ்செழியனை ஜெயலலிதாவின் பக்கமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அடுக்கடுக்காக பல திட்டங்களுக்கு  ‘ஸ்கெட்’ போட்டு வைத்திருந்தார் நடராஜன். இது தெரியாமலே, ஜெயலலிதாவுக்காக நாவலர் நெடுஞ்செழியன், ராஜாராம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் ஓடி ஓடி உழைத்தனர்; நடராஜனின் திட்டங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக்கொண்டே இருந்தது; போயஸ் கேபினட்டின் நடவடிக்கைகள் புரியாமல், ஜானகியின் ‘கிச்சன் கேபினட்’ தப்பும் தவறுமாகவே அடுத்தடுத்த அடிகளை வைத்தது; ஒவ்வொரு அடியும் அவர்களை அரசியல் ஏணியில் இருந்து கீழே இறக்கிறது; ஜெயலலிதாவை மேலே ஏற்றியது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, அ.தி.மு.க அலுவலகத்தின் முன் ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டமும் அந்நிகழ்வை ஒட்டி ஜானகி எடுத்த நடவடிக்கைகளும் அரசியல் வரலாற்றில் பதிவாகி உள்ளன.    

போர்க்களமான போயஸ் கார்டன்!

ஜெயலலிதாஅவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த ஜெயலலிதாவும், அ.தி.மு.க தலைவர்களும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அங்கிருந்து சீறிக் கிளம்பிய அந்த வேன் நீதிமன்றத்துக்கோ, காவல் நிலையத்துக்கோ, வழக்கமாக இதுபோன்ற அரசியல்கட்சிகளின் போராட்டக்காரர்களை அடைத்து வைக்கும் திருமண மண்டபத்துக்கோ போகவில்லை. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கே போனது. போயஸ் கார்டன் சந்துக்குள்  போலீஸ் வேன் திரும்பத் தொடங்கியதும், வேனுக்குள் இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட ஆரம்பித்தனர். வேன் ஜெயலலிதா வீட்டு முன் நின்றது. ‘அனைவரும் வேனில் இருந்து இறங்குங்கள்’ என்று போலீஸ் உத்தரவிட்டது. வேனுக்குள் இருந்தவர்கள் இறங்க மறுத்தனர். “நாங்கள் உங்களைக் கைது செய்யவில்லை; உங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து இங்கே சேர்த்துள்ளோம்... அவ்வளவுதான்" என்றது போலீஸ். “எங்களுக்கு உங்களின்  பாதுகாப்புத் தேவையில்லை; எங்களை மறுபடியும் தலைமைக்கழகத்தின் முன் இறக்குங்கள்; நாங்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்துகொள்வோம்” என்றார் ஜெயலலிதா. அதற்கு போலீஸ் மறுப்புத் தெரிவித்தது. ஜெயலலிதா சொன்னதை போலீஸ் கேட்கவில்லை; போலீஸ் சொன்னதை ஜெயலலிதா கேட்கவில்லை. இந்தநிலையில், போயஸ் கார்டனில் தொண்டர்கள் திரளத் தொடங்கினர். தெருவின் எல்லா சந்திப்புக்களையும் ‘லாக்' செய்தது போலீஸ். அந்தத் தெருவில் வசிப்பவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தொண்டர்கள் ஆவேசம் அதிகமானது! வழக்கமாக அமைதியாக இருக்கும் அந்தச் சாலை கட்சித் தொண்டர்களின் முழக்கங்களால் அதிர்ந்தது; அங்கு வசிப்பவர்கள் நடுங்கிப் போனார்கள். அதே நேரத்தில் மூன்று பல்லவன் பேருந்துகளில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க தொண்டர்களை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இறக்கிவிட்டது போலீஸ். அதைத் தெரிந்து கொண்ட நடராஜன், உடனடியாக அந்தக் கூட்டத்தை போயஸ் கார்டனுக்கு திருப்பிவிடச் சொன்னார். கிடைத்த ஆட்டோக்களையும் லாரிகளையும் பிடித்து அந்தக் கூட்டமும் போயஸ் கார்டனில் வந்து குவிந்தது!

இரண்டாவது அனுதாப அலை!

ஒருபுறம் ‘வேனில் இருந்து இறங்க முடியாது' என்று சொல்லும் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள்... இன்னொரு புறம் “அவர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரக் கூடாது” என்று சொல்லும் உயர் அதிகாரிகள்! இவர்களுக்கிடையே சிக்கித் தவித்தனர் இந்த விவகாரத்தைக் கையாண்ட போலீஸ் அதிகாரிகள்!

ஜெயலலிதா

மூன்று மணி நேரம் நடந்த இந்த நாடகத்தின் ‘க்ளைமாக்ஸ்’,  “உங்களைக் கைது செய்திருக்கிறோம்... இப்போது ஜாமீனில் விடுகிறோம்” என்றது போலீஸ்! “நாங்கள் ஜாமீனே கேட்கவில்லை; நாங்களே கேட்காமல், நீங்களாக எப்படி ஜாமீன் கொடுக்க முடியும்? நீங்கள் கொடுக்கும் ஜாமீன் எங்களுக்குத் தேவையில்லை” என்றது ஜெயலலிதா கோஷ்டி! மறுபடியும் மேலதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீஸ், ‘கைது செய்த உங்களை விடுதலை செய்கிறோம்' என்று அறிவித்தது. அன்று ஜெயலலிதா மீது விழந்த தடியடியும், தலைவர்கள் மீது நடந்த தாக்குதலும் ஜெயலலிதா ஆதரவு கோஷ்டி மீது ஒரு அனுதாபத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடந்தபோது, ராணுவ டிரக்கில் இருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டபோது, அவருக்கு சாதகமாக தமிழக மக்கள் மனதில் முதல் அனுதாப அலை அடித்தது. ஆர்ப்பட்டத்தில் ஜெயலலிதா மீது விழுந்த அடி, தமிழக மக்கள் மனதில் இரண்டாவது அனுதாப அலையை உருவாக்கி அதில் ஜெயலலிதாவை நனைய வைத்தது. ஆனால், இந்தக் காட்சிகளும் அது அரங்கேற்றப்பட்ட ஆர்ப்பாட்ட நாடகங்களும் நடராஜன் நடத்திய பல ஒத்திகைகளால்தான் வெற்றிகரமாக ஓடியது. 

ஆர்ப்பாட்டத்துக்கான திட்டம் உருவான கதை! 

ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டம் 1988 ஜனவரி 13-ம் தேதி நடந்தது. ஆனால், அதற்கு முன்பு இப்படிப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஏதும் திட்டமிடப்படவில்லை. மாறாக, ஜனவரி 11-ம் தேதி. ஜெயலலிதா, மதுரையிலிருந்து  நான்கு நாள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தைத் துவக்குவார்' என்று வேறோரு நிகழ்ச்சிதான் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்காக 10-ம் தேதி இரவு, பாண்டியன் எக்ஸ்பிரஸில் பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம், கோவை செழியன் ஆகியோருக்கு டிக்கெட் போடப்பட்டு தயாராக இருந்தது. திருநாவுக்கரசு மட்டும் 10-ம் தேதி காலை விமானத்தில் மதுரைக்குப் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன. ஆனால், ஒன்பதாம் தேதி காலையில் இந்தத் திட்டங்கள் எல்லாம் தலைகீழாய் மாறுவதற்கான அறிகுறிகள் போயஸ் கார்டன் வீட்டில் தென்பட்டன. அன்று காலையில் இருந்தே ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை. ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை' என்று அனைவருக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்களுக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை. மதுரையில் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள், பெரிய ஹோட்டல்களில் ரூம்களைத் ‘புக்’ செய்துவிட்டுக்  காத்திருந்தனர். மதுரை கூட்டத்துக்குப் பிரம்மாண்ட போஸ்டர்களும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இப்படி எல்லாம் தயார்நிலையில் இருந்தபோது, திடீரென்று ஜனவரி 10-ம் தேதி காலையில் ‘ஜெயலலிதா கூட்டம் ரத்து' என்று பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தார். அதற்குக் காரணம், அந்த நேரம் முதலமைச்சர் ஜானகி டெல்லி சென்றிருந்தார். பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்தித்து, தன் ஆட்சிக்கு ஆதரவு கேட்பதற்காகப் போய் இருந்தார்.

55748_b2f7bb3d_148143783394_640_466_1726

அ.தி.மு.கவோடு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க இரண்டாக உடைந்து நிற்பதை விரும்பவில்லை. அதைக் கணித்து, ஜானகி அம்மாளிடம் ஒரு சமாதானத் திட்டத்தை ராஜீவ்காந்தி தரப்பு முன்வைத்தது. அதற்கு ஜானகி என்ன சொன்னாரோ தெரியவில்லை... ஆனால், ஜெயலலிதாவுக்கு கூட்டம் செயற்குழு கூட்டம் நடத்தும் நாளில், தன்னுடைய ஆதரவாளர்கள் நடத்தத் திட்டமிட்டு இருந்த செயற்குழு கூட்டத்தை ரத்து செய்தார். அதன்பிறகு, ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டவர்கள்,  ‘டெல்லி சமாதானத்தை விரும்புகிறது' என்ற தகவல் கொடுத்தனர். அத்துடன் ஒரு சமாதானத் திட்டத்தையும் முன்வைத்தனர். அதில், “ஜானகி முதலமைச்சர்; ஜெயலலிதா பொதுச் செயலாளர்; இருக்கின்ற அமைச்சரவை அப்படியே நீடிக்கும்” என்று இருந்தது. இந்தத் தகவல் வெளியில் கசிந்ததும், ‘டெல்லியின் உத்தரவினால்தான், ஜெயலலிதா மதுரைக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்' என்று வதந்திகள் பரவின. ஜெயலலிதாவை நம்பிப் போன முன்னாள் அமைச்சர்கள் குழம்பிப் போனார்கள். ‘ஜெயலலிதாவை நம்பியது தவறோ!' என்றுகூட அவர்களுக்குப் பயம் உண்டானது. ‘முதல் கோணல்... முற்றிலும் கோணல்' என்ற விரக்தி பேச்சுக்கள் தலைதூக்கின. ஆனால், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் கேபினட் தெளிவாக யோசித்து திட்டமிட்டது. ‘டெல்லியின் சமாதானம் நமக்கு உதவாது; ஜானகி அரசுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை; அவர்களோடு இணைந்து இரண்டாண்டுகள் ஆட்சி நடந்தால், பிறகு நாம் மக்களைச் சந்திக்கவே முடியாது; மேலும் காங்கிரஸ் சொல்லும் இந்த சமாதானத்திட்டம் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.-வை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்’ என்று நடராஜன் ஆணித்தரமாக வாதிட்டார். அப்படியானால் என்ன செய்வது என்று யோசித்தபோது நடராஜனே அதற்கும் ஒரு திட்டம் வைத்திருந்தார். “அ.தி.மு.க-வை அழிக்க காங்கிரஸ் போட்ட சமாதானத் திட்டத்தை அடித்து நொறுக்க வேண்டும்; தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும்; மக்களின் கவனத்தை நம்பக்கம் திருப்ப வேண்டும்; அதற்கு உடனடியாக செயற்குழுவைக் கூட்ட வேண்டும்” என்றார். அதற்கு எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.  ‘‘கட்சிக் கட்டடத்தில் நுழைந்தே தீருவது, அதற்குத் தடை விதித்தால், அதையும் மீறுவது. சிறை சென்றாலும் பரவாயில்லை. அதுதான் நமக்கு அனுதாபத்தைப் பெற்றுத் தரும்' என்று முடிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதா கோஷ்டி சாதுரியமாக விரித்த இந்த வலையில், ஜானகி அரசு வசமாகச் சிக்கியது. நடராஜன் எதிர்பார்த்தபடி, ஜெயலலிதாவும் அவரது கோஷ்டியும் தமிழக மக்களின் அனுதாபத்தைப் பெற்றது. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/79003-the-second-sympathy-wave-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-23.art

Link to comment
Share on other sites

ஜானகி தூது! கருணாநிதி மறுப்பு!, சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 24

திருநாவுக்கரசு, நடராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்

திருநாவுக்கரசு, நடராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்

‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆவேசத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். ஜானகியின் போராட்டத்துக்குத் மூன்று பேர் நன்னம்பிக்கை முனைகளாக இருந்தனர். ஜெயலலிதாவின் போராட்டத்துக்கு மூன்றுபேர் மூளையாகத் திகழ்ந்தனர். இவர்கள் உருட்டிய பகடையில் தமிழக அரசியல் பரமபதம் ரணகளமாகக் காட்சியளித்தது.

ஜா. அணியின் அதிரடி ஆட்டம்! 

ஜானகிமுதலமைச்சர் ஜானகி, “தனது ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கு எதையும் தரத் தயார்... டெல்லியில் யார் காலிலும் விழத் தயார்.... ராமாவரம் தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண மூட்டைகளை எவ்வளவு வேண்டுமானாலும் அவிழ்க்கத் தயார்”என்று எதற்கும் தயார் நிலையில் இருந்தார். ஜா. அணியின் சலுகை பேரங்களுக்கு அடிபணியாத எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல்கள் விலையாக வைக்கப்பட்டன. அன்றைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனை கைக்குள் வைத்திருந்த ஜா. அணி, “தங்களை ஆதரிக்கவில்லை என்றால் ‘கட்சி மாறி’ என்று பட்டம் சூட்டி எம்.எல்.ஏ பதவியை பறித்துவிடுவோம்” என்று ஜெ. அணி எம்.எல்.ஏ-க்களை மிரட்டிப் பார்த்தது; அதற்கு மசியாதவர்களை வழிக்குக் கொண்டுவர, போலீஸ் பட்டாளம் ஏவிவிடப்பட்டது; அதற்கும் பணியாத எம்.எல்.ஏ-க்களின் மனைவிமார்களுக்கு பணக்கட்டுக்களைக் காட்டி மனமாற்றம் செய்யப்பட்டது. இவை அனைத்தையும் தாண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரமாக மீண்டும் ஒரு சமரசத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், “நாவலர் நெடுஞ்செழியனுக்கு துணை முதலமைச்சர் பதவி; மற்றவர்களுக்கு அமைச்சரவையில் இடம் உறுதி" என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதேநேரத்தில், “ஜெயலலிதாவைவிட்டு நிரந்தரமாக ஒதுங்க வேண்டும்; ஜெயலலிதாவை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும்” என்று ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்த சமரசத் திட்டத்தை எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போனவர் ஜானகியின் சகோதரர் நாராயணன் என்ற மணி.  நாவலரிடமும் பண்ரூட்டி ராமச்சந்திரனிடம் போய் இதைச் சொன்னபோது, அவர்கள் மரியாதையாகவே நாரயணனைத் துரத்தி அடித்தனர். 

ஜானகி தூது! கருணாநிதி மறுப்பு!  

அன்பழகன், கருணாநிதிகட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் ஆரம்பத்தில் எந்தப் பக்கமும் சாயாமல், நடுநிலை மாயையில் சிக்கி இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் முன்னாள் சபாநாயகர் க.ராஜராம். இந்தியாவில் அப்போது இருந்த சமாஸ்தானத்து மன்னர்கள், திவான்கள், பகதூர்கள், டெல்லி அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்று பெரிய இடங்களில் செல்வாக்குப் பெற்றவர். அவரும் ஜா. அணியா? ஜெ.அணியா? என்ற குழம்பிய நிலையில்தான் இருந்தார். அந்த நேரத்தில், ஹைதராபாத் சென்றிருந்த ராஜராமை, அங்கு முகாமிட்டு இருந்த ஜனாதிபதி வெங்கட்ராமன் சந்திக்க வரச் சொன்னார். சந்திக்கப்போன ராஜாராமிடம், “நான் ஜானகி ஆட்சியைத்தான் தமிழகத்தில் நிலை நிறுத்தப்போகிறேன்... அதனால் அவரைப் போய் ஆதரியுங்கள்” என்று அன்புக் கட்டளையிட்டார். ராஜாராமால் அதைத் தட்டமுடியவில்லை. எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரிடம் பேசி அமைச்சரவையில் ராஜாராமை சேர்க்க வைத்தவர் ஜனாதிபதி வெங்கட்ராமன்தான். அந்த நன்றிக்கடன் ராஜாராமை ஜா. அணியை ஆதரிக்க வைத்தது. ராஜாராம் லேசுப்பட்ட ஆள் இல்லை. அவர் இன்னொரு வீரப்பனுக்குச் சமம். விறுவிறுவென வேலைகளை முடுக்கிவிட்டார். உச்சபட்சமாக, அ.தி.மு.க ஆட்சி நீடிக்க, கருணாநிதியிடமே ஆதரவு கேட்டார் ராஜாராம். “கருணாநிதியையும் பேராசிரியர் அன்பழகனையும் சந்தித்து ஜானகியின் ஆட்சி நீடிக்க ஆதரவு தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். ராஜராம் சொல்வதைக் கேட்ட கருணாநிதி ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஆனால் கருணாநிதிக்குப் பக்கத்தில் இருந்த க.அன்பழகன், “எங்களால் இதற்கெல்லாம் ஆதரவு தர முடியாது” என்று பட்டென்று சொன்னார். ஆனாலும், ராஜாராம், ஆர்.எம்.வீரப்பனின் முயற்சியால், இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் நடிகர் சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும், தங்கபாலு ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் விலைபேசி வளைக்க முடிந்தது. இவற்றை எல்லாம் தாண்டி ஜானகி அணிக்கு, ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் குரானா, சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகியோர் வலுவான நன்னம்பிக்கை முனைகளாக இருந்து ஆதரவு கொடுத்தனர். 

சிறைவைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்!

ஜா.அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஜெயலலிதா ஆடி கொஞ்சம் ஆடிப்போனது உண்மைதான். ஆனால், அசந்துவிடவில்லை. வாழ்வா? சாவா? போராட்டத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடு இறங்கி வேலை பார்த்தனர். அந்த அணியில் பலர் இருந்தாலும், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, நடராஜன் ஆகியோர் மூன்று மூளைகளாக இருந்து யோசித்துக் காய் நகர்த்தினார்கள். ஜானகி அணியின் அதிரடியில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விலைபோவதைத்தடுக்க அவர்களை வட இந்தியச் சுற்றுலாவுக்கு அனுப்பினார்கள். சட்டசபை தொடங்கும் நாள் நெருங்க ஆரம்பித்ததும், வட இந்தியாவில் இருந்த எம்.எல்.ஏ-க்களை மீண்டும் தமிழகத்துக்கே அழைத்து வந்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் அவர்களை ஒப்படைத்து பத்திரமாக வைக்கும் பொறுப்பைக் கொடுத்தனர்.

ஜெயலலிதா

அவர், விருதுநகரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பஞ்சுமில் ஒன்றில் ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களை பதுக்கி வைத்தார். பஞ்சுமில்லில் தற்காலிக அறைகள் தயார் செய்யப்பட்டு அங்கு சகல வசதிகளும் செய்யப்பட்டன. எம்.எல்.ஏ.-க்கள் ஆனந்தன். பஞ்சவர்ணம், பாலகிருஷ்ணன், லட்சுமி,சேடப்பட்டி முத்தையா, தாராபுரம் பெரியசாமி, உப்பிலியாபுரம் சரோஜா, வெள்ளைக்கோயில் துரை ராமசாமி. பொள்ளாச்சி ரத்தினம், குத்தாலம் பாப்பா சுப்ரமணியன், உத்திரமேரூர் நரசிம்மபல்லவன், சேலம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் துரை அன்பரசன், திண்டுக்கல் பிரேம்குமார், சீர்காழி பாலகிருஷ்ணன், பள்ளிப்பட்டு நரசிம்மன், பெரியகுளம் சலீம், சங்ககிரி தனபால், குறிஞ்சிப்பாடி தங்கராஜ், குளத்தூர், நாச்சிமுத்து, கடையநல்லூர் பெருமாள், கோபிசெட்டிப்பாளையம் செங்கோடன், பவானிசாகர் சின்னச்சாமி, கண்டமங்கலம் சுப்பிரமணியம் ஆகியோர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தனர். ஆட்களை அடைத்து வைத்து காவல் காக்கும் வேலை மட்டும்தான் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு. ஆனால், அவருடைய செயல்பாடுகளுக்கான உத்தரவுகள் எல்லாம், போயஸ் கார்டனில் இருந்து வந்தன. பெரும்பாலும் அந்த உத்தரவுகளைப் பிறப்பித்தவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரனும், நடராஜனும்தான். 

இவ்வளவு தகிடுதத்தங்களுக்குப் பிறகு தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சட்டசபை கூடியது. அங்கு நடத்தப்பட வேண்டிய நாடகத்துக்கான ஒத்திகைகள் ஏற்கனவே பலமுறை பார்க்கப்பட்டதால், வெற்றிகரமாக அது சட்டமன்றத்தில் அரங்கேற்றப்பட்டது. ஜானகியின் நாற்காலி ஆட்டம் காணத் தொடங்கியது. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/79185-karunanidhi-denied-janaki-request-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---24.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.