Jump to content

கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா//அப்போலோ மர்மங்கள்


Recommended Posts

கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா

Cy6WJDGUcAAn6Ebj_12447.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் நினைவு திரும்பியிருக்கிறது. அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது? என்று கேட்டாராம். டாக்டர்கள் அதற்கு பதில் சொன்னவுடன், 'ஐய்யோ..இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உடனே என் புகைப்படத்தையும், அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்றாராம்.

இதை யாரிடம் சொல்வது என்று குழம்பிப்போன டாக்டர்கள், அந்த அறையை விட்டு வெளியே வந்து சசிகலா தரப்பினரிடம் சொல்லியிருக்கிறார்கள். 'சரி... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். 'இப்போதுதான் அனுதாபம் கூடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், புகைப்படமெல்லாம் வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று பேசிக்கொண்டார்களாம்.  அதன்பிறகு, சில நாட்களில் ஜெயலலிதா உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருக்கிறது. அவரது கடைசி ஆசையை நிறைவேறாமல் செய்துவிட்டது சசிகலா தரப்பு என்று அப்போலோ டாக்டர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/74360-jayalalithaas-unfulfilled-last-wish.art

 

இது போன்ற பல செய்திகள் இனி வரும் நாட்களில் வரத்தான் போகிறது.. ஆதலால் இதே திரியில் நீங்களும் பதியுங்கள் நீங்கள் பார்க்கும் தகவல்களை.

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் அப்போலோ வேதனைகளை விவரிக்கும் சசிகலா! (வீடியோ)

 

பொதுமக்கள் அஞ்சலிக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி, பிரதமர், பிரபல நடிகர், நடிகைகள் எனப்பலர் அஞ்சலி செலுத்தவந்தபோதும் பெரிதான ரியாக்‌ஷன்களும் ஏதும் இன்றி அமைதியாகவே இருந்தார் சசிகலா. பெரும்பாலும் பேசுவதையே தவிர்த்தார். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தன்னுடைய உறவினருக்கு ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களை தன்னை மறந்து சைகையுடன் விவரித்தார் சசிகலா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

 

 

http://www.vikatan.com/news/jayalalithaa/74359-sasikala-describing--pain-of-jayalalithaa-during-her-last-moment.art

Link to comment
Share on other sites

போயஸ் கார்டன் வீடு இனி யாருக்கு சொந்தம்?

 

deepa-_thipak_13138.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது அ.தி.மு.க லகானை கையில் எடுத்துவிட்டார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிற்கு முதல் மரியாதை தராமல் அவரை பின்னுக்கு தள்ளி இவரே கவனித்தார். முறைப்படி, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அவரது ரத்த உறவுமுறை வாரிசான அண்ணன் மறைந்த ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக்... இருவருக்கும்தான் சேர வேண்டும். இதை வலியுறுத்த ஆரம்பித்திருக்கும் ஜெயலலிதாவின் உறவு முறைகள் மீடியாக்களிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

"போயஸ் கார்டன் வீடான "வேதா நிலையம்" ஜெயலலிதாவின் தாயார் சந்தியா விலைக்கு வாங்கியது. ஆக, பூர்வீக சொத்து. எனவே, ஜெயக்குமார் வாரிசுகளுக்குத்தான் போக வேண்டும். இதில் சசிகலாவுக்கு உரிமை இல்லை. இதற்காகத்தான் தீபக்கிற்கு சில சலுகைகளை வழங்கி தன் கஸ்டடியில் வைத்திருக்கிறார் சசிகலா. ஆனால், தீபா அப்படியல்ல..! தனது போயஸ்கார்டனில் உள்ள தன் பங்கை விட்டுதரமாட்டார்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

http://www.vikatan.com/news/jayalalithaa/74374-who-owns-the-poes-gardan-house-hereafter.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில சத்தமே வரேல்லை. இதில விவரமா விவரிச்சது எல்லாம் கேட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வீடியோவில சத்தமே வரேல்லை. இதில விவரமா விவரிச்சது எல்லாம் கேட்டுவிட்டது.

அங்கதான் மர்மமே இருக்குது. :grin:

டிவிட்டர்ல உவர் யார் எண்டு பெரிய விவாதமே நடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வீடியோவில சத்தமே வரேல்லை. இதில விவரமா விவரிச்சது எல்லாம் கேட்டுவிட்டது.

வீடியோவில அம்மா ஆவீ பூந்திரிச்சு. ?

Link to comment
Share on other sites

‘என்ன ஆச்சு எங்கள் ‘அம்மா’-வுக்கு?’ அ.தி.மு.க. அதிகார மையத்துக்கு ஒரு சாமான்ய தொண்டனின் கடிதம்!

 

ஜெயலலிதா

 

எம்.ஜி.ஆர் எனும் ஆளுமை உருவாக்கிய ஜெயலலிதா எனும் சகாப்தம் கட்டிக்காத்த அ.தி.மு.க-வின் இப்போதைய அதிகார மையத்துக்கு ஒரு சாமான்ய தொண்டனின் கடிதம் இது..! 

நேற்று ராஜாஜி அரங்கத்தில், மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி நின்ற அதிகாரமற்ற எளிய தொண்டர்களின் கண்ணீரை மொழியாக்க முடியாது. நிச்சயம் அந்தளவுக்கான சொல்வளம் இந்த சாமான்ய தொண்டனிடம் இல்லை. அந்தளவுக்கு வேதனையிலும் பேரிழப்பிலும் சோர்ந்து சுருண்டிருக்கிறோம். ஆனால், இத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் உங்களிடம் கேட்க எங்களுக்கு சில கேள்விகள் உள்ளன!  

முதலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று தானே சொன்னீர்கள்..! பின் நுரையீரலில் பிரச்னை என்றீர்கள். சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றீர்கள். அதன் பின், ஜெயலலிதா வீடு திரும்புவதை, ஜெயலலிதாவே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். உண்மையில் சொல்லுங்கள்!  இந்த 75 நாட்களில் என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு...?

மேலுள்ள பத்தியில் ‘சொன்னீர்கள்’... ‘என்றீர்கள்’... போன்ற பதங்கள் இருக்கின்றன அல்லவா... அது எதுவும் அரசு நிர்வாகத்தைக் குறிப்பவை அல்ல. அனைத்தும் அப்போலோவை குறிப்பவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர்கள் உடல்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அரசா... இல்லை அப்போலோவா...? மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள். நிச்சயம் அப்போலோவுக்கு இல்லைதானே...?!  ஏன் அரசு மெளனியாக இருந்தது. அதிகாரிகளை தடுத்தது எது... இல்லை யார்...?

அப்போலோவில் ஜெயலலிதாவை நலம் விசாரித்தேன் என்று சொன்னவர்கள் அனைவரும் சந்தித்தேன் என்றுதான் எல்லாம் சொன்னார்களே அன்றி... ’ஜெயலலிதாவைச் சந்தித்தேன்’ என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் ஜெயலலிதாவைச் சந்தித்தது யார்...? அவரை கவனித்துக் கொண்டது யார்...? சசிகலாதான் என்றால்... மத்திய, மாநில மந்திரிகளை தடுக்கும் அளவுக்கு, அவர் மாநில நிர்வாகத்தில் உயரிய பொறுப்பை வகிக்கிறாரா..? இல்லை, அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுவில் இருக்கிறாரா அவர்...?   

இந்த 75 நாட்களில் ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டவில்லை, ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டவில்லை... எதை மறைக்கப் பார்க்கிறார்கள்... யார் மறைக்கப் பார்க்கிறார்கள்...?

ஜெயலலிதா மரணம் என்ற செய்தி டிசம்பர் 5, திங்கட்கிழமை மாலையே தொலைக்காட்சிகளில் ஓடுகிறது. அதுவும் ஜெயா தொலைக்காட்சியில்... அந்தச் செய்தியை ஒளிபரப்பியது யார்...?

’எங்கள் ‘அம்மா’வை... தமிழக முதல்வரை... மன்னார்குடி குடும்பத்தினர் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அவருடைய மரணத்துக்குப் பின்னரும் கூட, அவர்களிடமிருந்து மீட்க... இந்த அரசமைப்பும், அதிகாரிகளும் தவறி விட்டார்கள்!’ என்று கதறுகிறானே அ.தி.மு.கவின் சாமான்ய தொண்டன். உண்மையா...? உண்மையென்றால், வார்டு மெம்பராகக் கூட இல்லாத சசிகலாவுக்கு  மந்திரிகளும், அதிகாரிகளும் அஞ்சி நடுங்குவது ஏன்...?

ஜெயலலிதா இருக்கும் வரை நடராஜனை போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. இன்று அவர் அனைத்திலும் முன்னால் நிற்கிறார். இறுதி ஊர்வலத்திலும் செல்கிறார். மோடி அவரிடம் பேசுகிறார். என்ன நடக்கிறது இங்கே...? யார் அவர்...? மாநில அமைச்சரா... இல்லை, அரசு அதிகாரியா...? இல்லை, இன்னும் மக்கள் தொடர்பு இணை இயக்குனரா...?

ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான், தன் உடன்பிறவா சகோதரி என்றாரே தவிர... திவாகரனை, மஹாதேவனை, வெங்கடேசனை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆனால், நேற்று அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றார்கள்.  ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா பாவமாக ஒரு ஓரத்தில் ராஜாஜி அரங்கத்தில் நிற்கிறார். அவரை ஓரங்கட்டுவது ஏன்...? எதனால்...?

 

Jayalalithaa_demise_001_16535.jpg

இது அனைத்தும் சாமன்ய தொண்டன் எழுப்பும் கேள்விகள்... எளிய கேள்விகள். ஆனால், அர்த்தமான கேள்விகள்.  இதற்கான விடைகளில்தான், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க-வின் எதிர்காலம் இருக்கிறது! 

யாரோ ஆட்சி செய்வதற்காக, தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. குறிப்பாக மன்னார்குடி குடும்பத்தினர் தமிழகத்தில் அதிகார ஆதிக்கம் செலுத்துவதற்காக தமிழர்கள் வாக்களிக்கவில்லை. அதனால்தான், அவர்களால் மன்னார்குடி தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. மக்கள் விரும்பாத ஒரு சாரார், மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது. ஜனநாயகத்துக்கு எதிரானதும் கூட!

 

-ஒரு சாமன்ய தொண்டன்

http://www.vikatan.com/news/tamilnadu/74395-what-happened-to-our-amma-an-open-letter-of-admk-cadre.art

Link to comment
Share on other sites

நடராஜனை சிறையில் தள்ளியதற்காக ஜெ.வை பழிவாங்கி விட்டார் சசிகலா.. சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டு

 

ஜெயலலிதாவின் உடல் பக்கத்தில் நின்று கொண்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதவர் சசிகலா என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

 

சென்னை : 2011ஆம் ஆண்டு சதி செய்த துரோகிகள் என சசிகலா நடராஜன் கும்பலை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். 2011ம் ஆண்டு கணவர், அண்ணனை சிறையில் தள்ளியதற்கு ஜெயலலிதாவை பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அது முதலே ஊடகங்களில் பரபரப்பாக பேட்டியளித்து வருகிறார்.

Sasikala Pushpa talks about Jayalalitha's death

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே சசிகலாவிற்கு எதிராக பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணமடைவதற்கு முன்பாகவே அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்று சந்தேகம் எழுப்பினார். இந்த நிலையில் இன்று சசிகலா நடராஜனுக்கு எதிராக புதிய புகார் ஒன்றை கிளப்பியுள்ளார் சசிகலா புஷ்பா.

 

மரணமடைந்த ஜெயலலிதாவின் உடன் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் உடலை சுற்றியும் அவரது மன்னார்குடி குடும்பத்தினர்தான் நின்று கொண்டிருந்தனர். சசிகலா குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியது. அதுவும் பார்வையாளர்கள் அருகில் சென்று விடாமல் ஒருவர் நந்தி போல நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோடி வந்தபின்னரே அந்த நபர் நகர்ந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் பேட்டியளித்துள்ள சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் உடலை சுற்றிக் கொண்டு சசிகலா கும்பல் சிரித்து கொண்டிருந்தது வேதனையாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா உடல் பக்கத்தில் நின்று ஒருசொட்டு கண்ணீர் கூட வடிக்காதவர் சசிகலா. அவரது உடலை சுற்றிக் கொண்டு சசிகலா கும்பல் சிரித்து கொண்டிருந்தது வேதனையாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவர், சசிகலா கும்பலால் ஒன்றும் ஜெயலலிதா உருவாக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துரோகிகள்

2011-ம் ஆண்டு சதி செய்த துரோகிகள் என சசிகலா நடராஜன் கும்பலை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். 2011ம் ஆண்டு தம்மை வெளியேற்றியதற்கு ஜெயலலிதாவை பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கணவர், அண்ணனை சிறையில் தள்ளியதற்கு பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றே அதிமுக தொண்டர்கள் வேதனை படுகின்றனர் என்றும் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

 

சசிகலா கும்பல்

தனது கணவனை பழிவாங்கிவிட்டார் என்பதற்காக ஜெயலலிதாவை சசிகலா பாடாய் படுத்திவிட்டார். ஜெயலலிதாவை ஏன் இழந்தோம் என்பதை அதிமுக தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் ஜெயலலிதா உடல்நலம் ஏன் திடீரென்று குன்றியது என்பதையும் யோசிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா மறைவு எனக்கு அரசியல் ரீதியாக பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலா புஷ்பா

குற்றச்சாட்டு சசிகலா கும்பலின் ஆட்டத்தால்தான் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது என சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்த சசிகலாவின் கணவர் நடராஜன், புரட்சித்தலைவரின் இரட்டை இலையும் புரட்சித்தலைவி அம்மாவுடைய உழைப்பும் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்தபோது யார் அடுத்த தலைவர் என்பதை தேர்வு செய்த மிக முக்கியமான தலைவர்களாக நாங்கள் இருந்தோம். அவர்களில் பலர் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-talks-about-jayalalitha-s-death-269251.html
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வீடியோவில சத்தமே வரேல்லை. இதில விவரமா விவரிச்சது எல்லாம் கேட்டுவிட்டது.

காதாலை கேட்டு புரிஞ்சு கொள்ளுறதை விட கைப்பாசை பக்கெண்டு வேக்கிங் பண்ணும் :cool:

Link to comment
Share on other sites

"உப்புமாவை விரும்பிய ஜெயலலிதா'

 

 
jaya2

"கடந்த மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உப்புமாவை விரும்பிச் சாப்பிட்டார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர்.


அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, உடல் நலன் தேறி சிறப்புப் பிரிவுக்கு கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மாற்றப்பட்ட பிறகு அவரது சிகிச்சைக்கு சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி உள்பட 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.


சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உணவை தாமே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார் ஜெயலலிதா. தமக்குப் பிடித்தமான உப்புமா, பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்டவற்றை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்.


உணவு சாப்பிட வேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, "இந்த ஸ்பூன் உப்புமாவை நான் ஷீலாவுக்காக (செவிலியர்) சாப்பிடுகிறேன்; இந்த ஸ்பூனை "சாமு'வுக்காக (செவிலியர் சாமுண்டீஸ்வரி) சாப்பிடுகிறேன்...' என தமக்குத் தாமே ஊக்கப்படுத்திக் கொண்டார்.


ஒரு மணி நேரம் தொலைக்காட்சி... சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு, எங்களுடன் (செவிலியர்கள்) சேர்ந்து திரைப்படங்களின் பழைய தமிழ்ப் பாடல்களைக் கேட்பார். தினமும் 1 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தார். "தாம் உடல் நலம் பெற லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்வதை தொலைக்காட்சியில் பார்த்து ஜெயலலிதா நெகிழ்ந்தார்'' என்றார் செவிலியர் ரேணுகா.


ஃபிஸியோதெரப்பி சிகிச்சைக்காக... ஃபிஸியோதெரப்பி சிகிச்சையின் ஒரு பகுதியாக எங்களுடன் (செவிலியர்கள்) பந்து எறிந்து விளையாடுவதிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டார் ஜெயலலிதா. பயிற்சிகள் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட, உடல் நலனுக்காக அதை அவர் செய்ய மறுப்பதில்லை; ஆனால் "சோர்வாக இருக்கிறேன்; பின்னர் பயிற்சியைச் செய்யலாமா' என ஜெயலலிதா கேட்பதுண்டு. தனது அறைக்குள் யார் நுழைந்தாலும் ஜெயலலிதா புன்முறுவல் செய்து "தாங்களுக்கு நான் ஏதாவது உதவ வேண்டுமா' எனக் கேட்பார் என்கிறார் செவிலியர் தலைமைக் கண்காணிப்பாளர்.

http://www.dinamani.com/tamilnadu/2016/dec/08/உப்புமாவை-விரும்பிய-ஜெயலலிதா-2611795.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா இருந்த அறையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

1aa_12405.jpg

கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து பரபரப்பானது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை. 2-வது தளத்தில் உள்ள MDCCU-வில் உள்ள ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜெயலலிதா. கடந்த 5-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி மறைந்தார் ஜெயலலிதா. இவர் சிகிச்சை பெற்று வந்த அறையின் ஒருநாள் வாடகை தற்போது தெரியவந்துள்ளது.

அப்போலோவில் முதல் தளத்தில் MDCCU extn வார்டு இருக்கிறது. இந்த வார்டில் ஆபத்தான கட்டத்தை தாண்டிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2-வது தளத்தில் உள்ள MDCCU வார்டில் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அறையின் ஒருநாள் வாடகை 25 ஆயிரம் ரூபாய். அதோடு, ஒரு சிறப்பு சிகிச்சை மருத்துவர், நோயாளி ஒருவரை ஒரு முறை பரிசோதித்தால் அதற்கு கட்டணம் 2 ஆயிரம் ரூபாய். இப்படி ஒரு நோயாளியை நாள் ஒன்று எத்தனை முறை மருத்துவர் பரிசோதிக்கிறாரோ, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர வெளிநாட்டு, வெளிமாநில மருத்துவர்களின் வருகைக்கு தனிக் கட்டணம்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கான அறை வாடகை மட்டும் 18,75,000 ரூபாய். மருத்துவர்கள் பரிசோதனைக் கட்டணம், மருந்து செலவு ஆகியவற்றை சேர்த்து தோராயமாக கணக்குப் பார்த்தாலும் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது மருத்துவமனை வட்டாரம்!

http://www.vikatan.com/news/tamilnadu/74453-this-is-the-cost-of-accommodation-for-jayalalithaa-at-apollo-hospital-per-day.art

Link to comment
Share on other sites

'ஐ ஆம் தி பாஸ்...'- லண்டன் டாக்டரை பார்த்து சொன்ன ஜெயலலிதா

apollo-_jaya_13222.jpg

முதல்வர் ஜெயலலிதா இறந்ததையொட்டி அப்போலோவில் இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸுகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஒரு டாக்டர், "முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் சிகிச்சை அளிக்க வந்திருந்தார். அப்போது ஆறுதலாக ஆங்கிலத்தில் அவர் பேசினார். நீங்கள் தைரியமாக இருங்கள். எந்தக் கவலையும் வேண்டாம். உங்களுக்காக பெரிய டீமே சிகிச்சை அளிக்க காத்திருக்கிறது. அந்த டீமிக்கு நான் தான் பாஸ். உங்கள் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்வேன் என்றார். அதை உன்னிப்பாக கேட்ட ஜெயலலிதா தனது கை விரலை உயர்த்தி சைகையில், நீங்கள் பாஸ் அல்ல. நான்தான் பாஸ் என்பதை குறிப்பில் உணர்த்தினார். இதைப்பார்த்த நாங்கள் அசந்துப்போய்விட்டோம்.

சிம்மராசிக்காரச்சே...! அந்த கர்ஜனை அப்போதும் ஒலித்தது. டாக்டர் பெய்லுக்கு அது புரியவில்லை. எங்களுக்கு நன்றாக புரிந்தது. இதற்கிடையில் ஒரு நாள், வீட்டுக்கு ஏன் அழைத்துப்போகவில்லை என்று சொல்லி கடுங்கோபத்தில் இருந்தார். காலை, மதியம், இரவு சாப்பிட மறுத்தார். உண்ணாவிரதப்போராட்டமே நடத்தினார். தகவல் கேள்விப்பட்டு, சசிகலா எங்களிடம் வந்து பேசினார். "வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் பிரச்னை என்னவென்றால், பெரியம்மா...முதல்மாடியில் இருப்பார். கீழே இறங்கிவர மாட்டார். டாக்டர் வந்திருக்கிறார் என்று சொன்னால், கேட்கமாட்டார். நேரம் கழித்துத்தான் வருவார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்...இவர்களெல்லாம் படு பிஸியானவர்கள். ஒரு முறை பொறுத்துக்கொள்வார்கள். அடுத்தடுத்த முறை அழைத்தால், ஏதாவது காரணம் சொல்லி சமாளித்துவிடுவார்கள். இங்கே... ஆஸ்பத்திரியில் இருந்தால் டாக்டர்கள் வந்து பார்க்க வசதியாக இருக்கும். அதனால்தான் நான் டிசம்பர் 15-வாக்கில் வீட்டுக்கு அழைத்து செல்ல நினைக்கிறேன். இதை மனதில் கொண்டு பெரியம்மாவிடம் சமாதானம் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால்தான்..கேட்பார்" என்று சொன்னாராம். அதன்படியே, நாங்கள் சொன்னதும், ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்"  என்றாராம்.

http://www.vikatan.com/news/tamilnadu/74461-i-am-the-boss-here---jayalalithaa-in-apollo.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா கடைசியாக விரும்பி சாப்பிட்ட உணவு இதுதான்!

Jaya_Vanakam_long_12294.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது, நடந்த முக்கிய நிகழ்வுகளை அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் கூறும்போது, "ஜெயலலிதா ஒரு கட்டத்தில் நல்ல நினைவுடன் இருந்தார். அப்போது அவருக்கு பிடித்த அறந்தாங்கியைச் சேர்ந்த சமையல்காரரை கார்டனில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர். இங்கே இருந்தபடி, ஜெயலலிதா விரும்பிக்கேட்ட சில உணவுகளை செய்து கொடுத்தார்கள். இப்படித்தான் ஒருமுறை...உப்புமா பை மை குக் என்று ஆங்கிலத்தில் எழுதிக்காட்டினார். உடனே செய்துகொடுத்தார்கள்.

இன்னொரு முறை... பிஸிபேலாபாத், உருளைக்கிழங்கு பொறியல்... இரண்டையும் அவரது இன்னொரு சமையல்காரை விட்டு அவர் கைப்பக்குவப்படி செய்து கேட்டார். அதன்படியே செய்து கொடுத்தார்கள். ஆசையாக ப்ளேட்டையே பார்த்தவர், ஒரு ஸ்பூன் மட்டுமே சாப்பிட்டார். மீதியை சாப்பிட முடியவில்லை. அதேபோல், ஃபில்டர் காப்பி விரும்பிக்குடிப்பார். கார்டியாக் அரெஸ்டு ஏற்படுவதற்கு கொஞ்சம் முன், ஸ்பெஷல் காப்பியை சாப்பிட்டார். பிறகு, திடீரென வாந்தி எடுத்திருக்கிறார். குடித்த காப்பி அப்படியே வெளியே வந்துவிட்டது. மூச்சிரைப்பு ஏகத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. கண் சொருகிவிட்டது. இவைதான்.. ஹார்ட் அரெஸ்டு என்பதற்கான அறிகுறிகள். பதறியபடி நர்ஸ் ஓடிவர நாங்கள் உள்ளே நுழைந்தோம்" என்று சொல்லி கண்ணீர் சிந்தினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/74458-jayalalithaa-loved-to-eat-this-food-when-she-is-sick.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு வருவதற்கு முன், போயஸ் கார்டனில் என்ன நடந்தது? #VikatanExclusive

 

 

ஜெயலலிதா இறந்த அன்று போயஸ்கார்டனில் நடந்த பரபரப்பு காட்சிகளை  டைம் டூ டைம் விவரிக்கிறார் அன்று பாதுகாப்பில் இருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.

jaya_dead_15519.jpg


  "முதல்வர் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமை. அவருடைய இறப்பு அறிவிப்பு வருவதற்கு முன் மாலை போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அடுத்தடுத்து கார்கள் வந்தன. அந்த நேரத்தில் ஜெயலலிதா அப்போலோவில் சீரியஸாக இருந்தார் என்றுதான் எங்களுக்கு தகவல். காரை எட்டிப் பார்த்தோம். சசிகலாவின் உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள் என பலர் ஒன்றன்பின் ஒன்றாக வந்தனர். இவர்களை உள்ளே விடலாமா? என்கிற குழப்பம். அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம் தொடர்புகொண்டு எங்கள் உயர் அதிகாரி பேசினார். ’அனுமதியுங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் உள்ளே நுழையவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று  எச்சரிக்கப்பட்டவர்கள் பலரும் இருந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவர்கள் டூரிஸ்ட் ஸ்பாட் போல வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மன்னார்குடியில் இருந்து வந்திருந்த பெண்கள் பட்டாளம், ' ஒ...இதுதான் பெரியம்மா அறையா? இதுதான் சின்னம்மா அறையா? இதுதான் பூஜை அறையா?' என்றெல்லாம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர். தஞ்சாவூர் பக்கத்திலிருந்து ஒரு வயதான பெண்மணி வந்திருந்தார். அவர் நேராக மேக்கப் அறையில் போய் தன்னை அலங்கரிக்க ஆரம்பித்தார். அவர் சில வருடங்களுக்கு முன்பு, அம்மாவின் கோபத்துக்கு ஆளானவர். அவர்கள் அனைவருக்கும் உணவு தயாரானது. இஷ்டப்பட்ட உணவை சமைக்கச் சொல்லி சாப்பிட்டனர். 

போயஸ் கார்டனில்  சமையல் செய்துவந்த 66 வயது பெண்மணி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். சிவகங்கையைச் சேர்ந்தவர். கடந்த பல வருடங்களாக, போயஸ் கார்டனில் தங்கி உணவு தயாரித்துக் கொடுத்து ஜெயலலிதாவை அசர வைத்தவர். ஜெயலலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். சசிகலா உறவினர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி பேசிக்கொள்வதை சமையல்அறை ஒரத்தில் நின்று பதற்றத்துடன் கேட்டார். கண்ணீர் விட்டார். அவர் அன்று முழுக்க சாப்பிட வில்லை. ஆனால், சசிகலாவின் உறவினர்களுக்கு சமைத்துப்போட்டார். மாலை 7 மணி இருக்கும். அப்போலோவில் இருந்து போன் வந்தது. வீட்டில் இருந்த பணிப்பெண்களுடன் சசிகலா பேசினார்.

மடிசார் பட்டுப்புடவை, கைக்கடிகாரம், வைரம் பதித்த டாலர் செயின், மோதிரம்...   இதையெல்லாம் எடுத்துக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்கள்.  அப்போதே எங்களுக்குப் புரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாகிவிட்டது என்று! வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தோம். 'இது தெரியாதா?...பெரியம்மா உடல்நிலை ரொம்பவும் மோசமாகிவிட்டது. எந்த நேரமும் காலமானார் நியூஸ் வெளியாகலாம். அதுமாதிரி அறிவிக்கப்பட்டவுடன், அவரது உடலைப் போர்த்த அவர் விரும்பி அணியும் மடிசார் புடவையை கேட்டார்கள். அவரை அலங்கரித்துவிட்டு இங்கே கொண்டு வருவார்கள். சிறிதுநேரம் வைத்திருந்துவிட்டு  ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுபோக திட்டமிட்டிருக்கிறார்கள்' என்றார்கள். வாசலில் காவலுக்கு நின்ற எங்களின் கண்களில் நீர் பனித்தன. வெளியே காட்டிக்கொள்ளமுடியாத நிலைமை!


மாவிலை, சந்தனக்கட்டைகள்... இப்படி ஒவ்வொன்றாக வீட்டுக்கு வந்தன. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வருவதற்கு முன்பே, அவருக்கான இறுதிச் சடங்குப் பொருட்கள் போயஸ் கார்டனை வந்தடைந்தன. இரவு 11.30 மணி இருக்கும். எங்கள் வயர்லெஸ் அலறியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்போலோ நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தகவல் வந்தது. அதிர்ந்துபோனோம். போயஸ் கார்டனில் இருந்த பணிப்பெண்கள், சமையல்காரர், வீட்டு வேலை செய்கிறவர்கள் என அனைவரும் கதறி அழுதனர். டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை ஜெயலலிதாவின் உடலுடன் ஆம்புலன்ஸ் வந்தது. ஜெயலலிதாவின் உடலை இறக்கி நடு ஹாலில் டைனிங் டேபிள் இருந்த இடத்தில் வைத்தார்கள். எங்கிருந்தோ ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை அழைத்துவந்தார்கள். பிறந்த வீட்டு கோடி என்கிற முறையில் புதிய புடவை ஒன்றை ஜெயலலிதாவின் உடல் மீது சசிகலா போர்த்தினார். உடன் தீபக்கும் நின்றார். 'இவர்தானே...ரத்த உறவு. சசிகலா போடுகிறாரே?' என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம். 

jayalalith_deAD_15146.jpg


 அந்த நேரத்தில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், செக்யூரிட்டிகள்..என்று அந்த தெருவில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். துக்கம் அனுஷ்டிப்பதற்காக அவர்களை உள்ளே அனுமதித்தோம்.  அப்போது மடிசார் புடவை, நகைகள் அணிவிக்கப்பட்டு தூங்குவது போல காட்சியளித்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். அவர் அருகில் தீபக் நின்றிருந்தார். சசிகலா குடும்பத்தினர் வந்து முன்னால் நின்றனர். அர்ச்சகர் முதலில் மாவிளையில் தண்ணீர் தெளித்தார். மஞ்சள் சந்தனத்தை ஜெயலலிதாவின் கைகளில் பூசினார் சசிகலா. அதன் பின் சில சம்பிரதாயங்களை திவாகரனில் ஆரம்பித்து ஆண், பெண்... என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்த எங்களைப்போன்ற பணியாளர்களும் ஜெயலலிதாவின் உடலை வணங்கினோம். எல்லாம் முடிய காலை 5.30 மணி ஆகிவிட்டது. பிறகு, ஜெயலலிதாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்றனர். வேதா இல்லத்தில் சிங்கம் போல வளைய வந்த ஜெயலலிதாவை அந்த நிலைமையில் பார்த்த எவருக்கும் கண்கள் குளமாகி இருக்கும்!” என்று கலக்கமான குரலில் சொல்லி முடித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/74474-final-moments-that-happened-in-poes-garden-on-05122016.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு என்ன? #Verified

 

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது தெரியுமா?

2016 சட்டமன்ற தேர்தலின் போது ஆர்.கே நகரில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் அவர் தெரிவித்திருந்த சொத்து விவரங்கள் இவைதான்.

ஜெயலலிதா மொத்த சொத்து மதிப்பு ரூ. 118 கோடியே 58 லட்சம்

அசையும் சொத்துகள்

அசையும் சொத்து என்ற வகையில் நகை, வாகனங்கள் போன்றவற்றின் மதிப்பு 41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 ரூபாய்.

அசையா சொத்துகள்

நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்தின் மதிப்பு ரூ. 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய். அசையா சொத்தில் போயஸ் கார்டன், மந்தவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டடங்களும் அடங்கும். இதைத்தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஹைதராபாத்திலும் 17.93 ஏக்கர் இருக்கிறது.

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ. 10 கோடியே 63 லட்ச ரூபாய். இதில் இரண்டு கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் முதலீடாக ரூ. 27 கோடியே 44 லட்ச ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பில் முடக்கப்பட்ட தங்கம் 21280.30 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ.

தனக்கு கடனாக 2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 ரூபாய் உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா சொன்ன தகவலின்படி அவருக்கு சொந்தமாக ஒன்பது கார் உள்ளன. இதில் ஒரு அம்பாசிட்டர் கார் முப்பது வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கிறார்.

1_13552.png 

 Untitled_13127.png

ஜெயலலிதா உயில் எதாவது எழுதி வைத்திருந்தாரா என்பது இதுவரை தெரியவில்லை. இதுபற்றி அவரது தொண்டர்கள் சிலரிடம் பேசியபோது, போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக்க போவதாக தெரிவித்தார். சிறுதாவூர் தோட்டத்தில் ஒரு மணி மண்டபமும் கட்ட அதிமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை செய்து வருகிறார்கள். 

உயில் எதுவும் இல்லாதபட்சத்தில் ஜெயலலிதாவின் 100கோடிக்கும் அதிகமான சொத்து கட்சிக்கு செல்லலாம். 

http://www.vikatan.com/news/tamilnadu/74465-what-is-the-total-value-of-jayalalithaas-properties.art?artfrm=editor_choice

Link to comment
Share on other sites

எப்படி இருக்கிறது போயஸ் கார்டன்?  அதிரும் அடுத்தடுத்த காட்சிகள் 

 

poes_garden_1_17510.jpg

பரபரப்புடன் காணப்படும் போயஸ் கார்டன் இப்போது கூடுதல் பரபரப்பாகி உள்ளது. இதுவரை நடந்திராத வகையில் போர்டிகோவில் சசிகலாவின் பென்ஸ் எம்.எல் என்ற வகை கார் புதியதாக இடம்பிடித்துள்ளது. 

வி.வி.ஐ.பிக்கள் வாழும் பகுதி போயஸ் கார்டன். இதில் 81, வேதா நிலையத்தில் கெடுபிடிகளுக்கு பஞ்சமிருக்காது. அவ்வழியாக செல்பவர்களிடம் கூட பல கேள்விகளை கேட்டு துளைக்கும் காவல்துறை. அந்தளவுக்கு பல பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டதுதான் வேதாநிலையம் என்றழைக்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டபிறகே யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுவர். 

ஜெயலலிதாவைப் பார்க்க கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் கட்டுக்கடங்காது. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையாவது நம்மீது பட்டுவிடாதா என்ற தவிப்பில் காத்திருக்கும் தொண்டர்கள் கூட்டம். காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்து தொண்டர்களையும், மக்களையும் கைகளை கூப்பியபடி மெல்லிய புன்னகையோடு ஜெயலலிதாவைப் பார்த்து புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும். ஆனால் அந்த கோஷங்கள் இப்போது போயஸ் கார்டனில் இல்லை.

கவலைதோய்ந்த முகத்துடன் கரைவேட்டிகளோடு காட்சியளிக்கும் தொண்டர்களின் கூட்டம் குறைந்துள்ளது. வேதா நிலையத்திலிருந்து என்ன தகவல் வரும், யாரெல்லாம் உள்ளே, வெளியே செல்கிறார்கள் என்ற கண்காணிப்போடு மீடியாக்களும் காத்திருக்கின்றனர். 

ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் வீடு இப்போது எப்படி இருக்கிறது என்று உள்விவரம் தெரிந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அதே பாதுகாப்பு, கெடுபிடி இப்போதும் அங்கு இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் அம்மா இன்னும் அங்கேதான் இருக்கிறார் என்ற நினைவுகளை சுமந்தபடி இருக்கின்றனர். முதல்தளத்தில் ஜெயலலிதாவின் அறை. அதன் அருகில்தான் கட்சியினரை சந்திக்கும் அறை. இப்போது காலியாக காட்சியளிக்கின்றன. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், நந்தகுமாரை தற்போது பார்க்க முடியவில்லை. அடுத்து உதவியாளரான ஹரி மட்டும் கவலையுடன் இருக்கிறார்.  மேலும், ஜெயலலிதாவின் கார் மட்டுமே முன்பு போர்டிகோவில் நிறுத்தப்படும். தற்போது அந்த இடத்தில் டி.என். 1111 என்ற வாகன பதிவுடன் கூடிய சசிகலாவின் பென்ஸ் எம் எல் என்ற வகை கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறைக்கு சசிகலா சென்று வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அந்த அறை பூட்டியே இருந்துள்ளது. சசிகலாவும், இளவரசியும் தங்களது அறைகளை விட்டு அவ்வளவாக வெளியே வருவதில்லையாம். ஆக மொத்தத்தில் வேதா நிலையத்தில் முழுஅமைதி நிலவுகிறது" என்றார் 

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று காலை போயஸ் கார்டனுக்கு சென்றனர். அவர்களுடன் சசிகலா, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அந்த முடிவுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அடுத்து யார் பொதுச் செயலாளர், கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும், ஜெயலலிதா இல்லாத இந்த சமயத்தில் எதிர்கொள்ளப் போகும் சவால்களை எப்படி சமாளிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 அ.தி.மு.க.வின் அதிகார மையம் சசிகலாவை நோக்கியே செல்லத் தொடங்கி உள்ளது. 

http://www.vikatan.com/news/jayalalithaa/74485-the-happenings-in-poes-garden-after-jayalalithaas-death.art

Link to comment
Share on other sites

81, வேதா இல்லம், போயஸ் கார்டன்... இப்போது எப்படி இருக்கிறது?

வேதா இல்லம்

த்தனை வருடங்களாக தமிழகத்தின் தலைப்பு செய்தியாக இருந்த இடம் போயஸ் கார்டன். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம் இருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் சுற்றி வந்தோம். பல்வேறு ஊர்களிலிருந்து வரும் தொண்டர்கள் மெரினாவில் அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அடுத்து வருவது போயஸ் கார்டன் வேதா  இல்லம் இருக்கும் பகுதிக்கு தான்.

வேதா இல்லம்

நேற்றும், நேற்று முன் தினமும் வேதா இல்லத்துக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கேமராவோடு செல்லும் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கேமராவை அங்கே இருக்கும் ஒருவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று வந்தோம். இருபது இருபது பேராக தடுப்புகளில் வரிசைப்படுத்தி உள்ளே அனுமதிக்கிறார்கள். வேதா இல்லத்தின் போர்டிகோ வரையில் வரிசையாக சென்றால் அங்கே இருக்கும் அதிமுக நிர்வாகி ஒருவர் "அம்மா இந்த இடத்துல தான் எல்லோரையும் வரவேற்பாங்க, டிவியில பார்த்து இருப்பீங்கள்ல." எனச் சொல்ல எங்களோடு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் அங்கேயே தரையில் வீழ்ந்து வணங்கி எழுந்தார். உடன் வந்தவர் அவரை தூக்கி அழைத்துச் சென்றார். இன்னொருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய, "தம்பி, தயவுசெஞ்சு போட்டோ எடுக்காதிங்க, வாட்ஸாப்ல பாக்குறிங்கதானே... எப்படியெல்லாம் வருதுன்னு" என அதட்டினார் அந்த நிர்வாகி. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். சரியாக ஓரிரு நிமிடங்கள் தான் அனுமதி. வேதா இல்லத்தை விட்டு வெளியே வந்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் பேசினோம். எல்லோருடைய பேச்சிலும் வருத்தம் நிறைந்திருக்கிறது.                 

"நான் இந்த பகுதில வீட்டு வேலை செஞ்சுட்டு இருக்கேன் தம்பி. அம்மா தினமும் இந்த வழியாதான் போவாங்க..வருவாங்க. பாக்குறதுக்கே கண்கொள்ளா காட்சியா இருக்கும். அவ்வளவு கம்பீரம். நான் பாக்குறப்பலாம் சிரிச்சுகிட்டே தான் இருப்பாங்க. ஆனா திடீர்னு அவங்க காலமாகிட்டாங்கன்னு சொல்றத கேட்டப்போ மனசு ரொம்ப கனமாகிடுச்சு. ஏதாவது பண்டிகை நாள், அவங்க பிறந்த நாள்ன்னு கட்சிகாரங்க இனிப்பு, புடவைன்னு எல்லோருக்கும் கொண்டு வந்து கொடுத்துட்டு போவாங்க. நேத்து ஒரு பையன்... பாவம் சரியா நடக்க முடியாது போல. கையில ரெண்டு குச்சிய வைச்சு நின்னுகிட்டு ரொம்ப நேரம் இந்த தெருவையே பார்த்துட்டு இருந்தான். அதை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு தம்பி." என கலங்கிறார் கஸ்தூரி என்கிற மூதாட்டி.

வேதா இல்லம்

போயஸ் கார்டன் பகுதியில் துணி தேய்க்கும் கடையை நடத்தி வருகிறார் சேகர். அவரிடம் பேசினோம்..,

"ரொம்ப வருஷமா இங்கே தான் கடை நடத்திட்டு இருக்கேன். இதோ இந்த ரோட்டுல தான் சார் அம்மா போவாங்க. அவங்க கார் வருதுன்னாலே இந்த தெரு அவ்வளவு அமைதியாகிடும். சென்னையில இருக்குற மத்த ஏரியா மாதிரி இல்லை சார். எப்பவும் அமைதியா இருக்கும். ஒரு சண்டை சச்சரவுன்னு எதுவும் இருக்காது. எல்லாம் அவங்க இருந்ததுனால தான். எவ்வளவு பெரிய பதவியில இருக்கற கட்சிக்காரங்க கூட எங்களை மாதிரி ஆளுங்ககிட்ட எந்த வம்புக்கும் வர மாட்டாங்க. எல்லாமும் அம்மா பக்கத்துலயே இருக்காங்கிற பயம் தான். அவங்களை மாதிரி தைரியமான ஆளை பார்க்கவே முடியாதுங்க" என்றார்

 

வேதா இல்லம்

யிலாடுதுறையிலிருந்து வேதா இல்லத்தை பார்த்துவிட்டு கலங்கிய கண்களோடு வெளிவந்த பெண்கள் மூன்று பேர் அங்கே மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்தை வணங்கி கொண்டிருந்தனர். அந்த படத்திற்கு கீழே மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. அவர்களிடம் பேசினோம்..,

"மயிலாடுதுறையிலருந்து நாங்க மூணு பேரும் கிளம்பி வந்துட்டோம் சார். அம்மாவை பார்க்கணும்னு எங்களுக்கு ரொம்ப நாள் ஆசை. ஆனா கடைசி வரைக்கும் அவங்கள பார்க்கவே முடியல. ரெண்டு நாளா சென்னையில தான் இருக்கிறோம். மதியம் தான் மெரினாவுல இருக்குற அம்மா நினைவிடத்துக்கு போய் வந்தோம். பெண்களுக்காக நிறைய பண்ணிருக்காங்க எங்கம்மா. அவங்க பேசுறதை பார்த்தாவே அவ்வளவு தைரியம் வந்துடும். ஒரு பொண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்காங்க. எவ்வளவு துணிச்சல் சார். மனசெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. டிவியில கூட அம்மா வீட்டை இனி பார்க்க முடியுமோ என்னவோன்னு தான் இங்கே வந்தோம் சார். அதிர்ஷ்டமா அம்மா வாழ்ந்த வீட்டுக்குள்ளேயே போயிட்டு வந்துட்டோம்." என்கிறார் பழனியம்மாள்.    

ழக்கமாக ஜெயலலிதா வெளிவந்து புன்னகையோடு 'வணக்கம்' சொல்லும் வேதா இல்லத்தின் கதவு மூடப்பட்டு தான் இருந்தது..!!

http://www.vikatan.com/news/tamilnadu/74515-vedha-illam-is-now-open-to-public.art

Link to comment
Share on other sites

அன்பும், அறிவாற்றலும் நிறைந்த நண்பரை இழந்துவிட்டோம்: நெகிழும் அப்போலோ மருத்துவக் குழு

 

 
அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது | படம்: கே.வி.ஸ்ரீநிவாஸ்
அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது | படம்: கே.வி.ஸ்ரீநிவாஸ்
 
 

அன்பும், அறிவாற்றலும் நிறைந்த நண்பரை இழந்துவிட்டோம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களை ஜெயலலிதாவின் மற்றொரு சுவாரஸ்யமான முகத்தைப் பார்த்து வியந்துபோய் இருக்கின்றனர். அந்த வியப்பில் இருந்து சற்றும் விலகாதவர்களாக அவர்கள் பல தகவல்களை நம் முன் எடுத்து வைக்கின்றனர்.

"அன்பும், அறிவாற்றலும் நிறைந்த நண்பரை இழந்துவிட்டோம்" இப்படித்தான் அவருக்கு சிகிச்சை அளித்த மொத்த குழுவும் அவரது பிரிவை உணர்கிறது.

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் பரபரப்பாக இருந்த மருத்துவமனை வளாகத்தில் தற்போது ஏதோ ஒர் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகின்றனர் மருத்துவமனை ஊழியர்கள் சிலர்.

'கிங்காங்' - செவிலியர்களை செல்லமாக அழைத்த ஜெ:

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த ஊழியர்கள் அனைவருக்குமே ஜெ-வைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. கேள்விகளை முன்வைக்க தேவையில்லாமல் இருந்தது. அவர்களாகவே முன்வந்து அவ்வளவு தகவல்களைப் பகிர்ந்தனர்.

8 மணி நேரம் என்ற கணக்கில் 3 ஷிப்ட்களில் 16 செவிலியர்கள் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்துள்ளனர். அவர்களில் மூவர் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்கள். சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டேஸ்வரி ஆகிய மூன்று செவிலியர்களையும் ஜெயலலிதா செல்லமாக 'கிங்காங்' என்று அழைத்துள்ளார்.

அப்போலோவில் ஜெயலலிதா இருந்த நாட்கள் குறித்து நர்ஸ் ஷீலா கூறும்போது, "ஜெயலலிதாவுக்கு மருத்துவ பணிவிடைகள் செய்ததை பெரும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் நாங்கள் வரும்போது புன்முறுவலோடு எங்களை வரவேற்பார். 'நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் ஒத்துழைக்கிறேன்" என்பார். சோர்வாக உணர்ந்தபோதுகூட பயிற்சிகளை செய்யமாட்டேன் என கூற மாட்டார் 'இதை நான் பின்னர் செய்யலாமா' என்றுதான் கேட்பார்.

பிசியோதெரபி சிகிச்சைகள் ஆரம்பித்தபோது பந்துகளை எங்கள் மீது தூக்கிவீசி விளையாடுவார். திட உணவு கொடுக்க ஆரம்பித்தபோது மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் அதை சாப்பிடுவார். 4 கரண்டி மட்டுமே சாப்பிட்டார். ஒவ்வொரு கரண்டி உணவையும் இது ஷீலா சிஸ்டருக்காக என்ற வரிசையில் ஒவ்வொரு செவிலியர் பெயரையும் கூறி சாப்பிடுவார். இந்தி, ஆங்கிலப் பாடல்களைக் கேட்டு ரசிப்பார்" என்றார்.

நர்ஸ் ரேணுகா கூறும்போது, "அந்த 70 நாட்களில் நடந்த எதையுமே என்னால் மறக்க இயலாது. அவரால் எழுத முடிந்தபோது அவருக்குத் தேவையான உணவு வகைகளை அவரே பட்டியலிட்டார். பொங்கல், உப்புமா, தயிர் சாதம், உருளைக்கிழங்கு அவருடைய விருப்பமான உணவாக இருந்தது. அவருக்கு சமையல் செய்வதற்காகவே தனி சமையலறையும் இருந்தது. அவருடைய தனிப்பட்ட சமையல்காரர் வரவழைக்கப்பட்டு சமையல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். சில நேரங்களில் உணவின் சுவை குறித்து கிண்டலாகப் பேசுவார். நாங்கள் அனைவரும் கோட நாடு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அங்குவந்தால் சுவையான தேநீர் தருவதாகக் கூறினார். தான் பணிக்குத் திரும்பியதும் எல்லோரும் சட்டசபைக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்" என்று தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

மருத்துவர்களுடனும் வேடிக்கையாகப் பேசிய ஜெ.

ஜெயலலிதாவின் அன்பான பேச்சு மருத்துவர்களையும் கவர்ந்திருந்தது. குறிப்பாக பெண் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சத்யபாமா, "என்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றினால் நான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என ஒருநாள் கூறினார். அதுமட்டுமல்லாமல், 'நான் முதல்வராக இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறேன்' என்றார்" எனக் கூறினார்.

இதேபோல் மற்ற பெண் மருத்துவர்களிடம் அவர்களது குடும்பம் குறித்து விசாரித்திருக்கிறார். காலையில் சீக்கிரமாக பணிக்கு வருவது கடினமாக இல்லையா? ஏன் இன்னும் வீட்டுக்கு கிளம்பவில்லை போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளார். உடல்நலத்தைப் பேணுங்கள் என்றும் சரும பாதுகாப்பு குறித்தும் அடிக்கடி பேசுவாராம்.

எத்தகைய சூழலில் அவர் இருந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்கவரும் மருத்துவர்கள் அவர் முன் நின்றுகொண்டு விசாரிக்காமல் அமர்ந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அறைக்கு வரும் முன் கதவைத் தட்டிவிட்டு அனுமதி கேட்டு வர வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்களில் ஒருவரான ரமேஷ் வெங்கடராமன், "எனக்கு ஏன் இந்த சிகிச்சை அளிக்கிறீர்கள். இதனால் எனக்கு நன்மை ஏற்படும். இதற்கு மாற்றாக வேறு சிகிச்சை இருக்கிறதா என்றெல்லாம் விசாரிப்பார். சில நேரங்களில் வென்டிலேட்டரை தனது வசதிக்கேற்ப இயக்கும்படி கூறுவார். நாங்கள் அளித்த அத்தனை சிகிச்சைக்கும் முழு ஒத்துழைப்பு நல்கினார்" என்றார்.

'நான்தான் பாஸ்'

ஒரு முறை லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், ஜெயலலிதாவுக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருந்த செவிலியர்களிடம் சற்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். முதல்வராகவே இருந்தாலும் மருத்துவ விஷயங்களில் கெடுபிடிகளை தளர்த்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். அப்போது படுக்கையில் படுத்திருந்த ஜெயலலிதா, "இங்கு நான்தான் பாஸ்" என்று பொருள்படும் வகையில் சைகையில் புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த அனைவரும் சிரித்து மகிழ்ந்துள்ளனர்" என்று தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் பாபு கே. ஆப்ரஹாம்.

அப்போலோ மருத்துமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு நம்முடன் பகிர்ந்து கொள்ள எண்ணற்ற நினைவலைகள் உள்ளன.

http://tamil.thehindu.com/tamilnadu/அன்பும்-அறிவாற்றலும்-நிறைந்த-நண்பரை-இழந்துவிட்டோம்-நெகிழும்-அப்போலோ-மருத்துவக்-குழு/article9417635.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்...: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!

 

jayasasikala_3101399f.jpg
 
 
 

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த நாளில் அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. அந்த இறுக்கமான தருணத்தில் அப்போலோவில் இருந்த கட்சிப் பிரமுகர்கள், சசிகலா தரப்பினர், அதிகாரிகள், கார்டன் உதவியாளர்கள் எனப் பலரிடமும் பேசியதில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இதோ:

கடந்த 5-ம் தேதி மாலை.. 5.30 மணி இருக்கும். ஜெ.யின் உடல்நிலை குறித்த குளறுபடிகள் வெளியில் தெரியவந்த நேரம். அப்போலோவின் இரண்டாம் தளத்தில் அனுமதிக்கப்பட்ட சிலர் நடப்பது எதுவும் புரியாமல் காத்திருந்தார்கள். சில நிமிடங்களில் தனி அறையில் இருந்து கலங்கிய விழிகளுடன் சுடிதாரில் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா வெளியே வந்தார். அவரை இளவரசி (சசிகலாவின் அண்ணன் மனைவி) ஒருபுறம் தாங்கிப் பிடித்திருக்க, மறுபுறம் இளவரசியின் மகன் விவேக் கைகளைப் பற்றியிருந்தார்.

சசிகலாவின் தோற்றம் கண்டு, அங்கு இருந்தவர்களால் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகியிருக்கலாம் என்பதை உணர முடிந்தது. சசிகலாவிடம் எதுவும் கேட்க இயலாத நிலையில் அமைச்சர்கள் இருபுறமும் சோகத்துடன் விலகி நின்றிருந்தனர்.

சரத்குமார் மட்டும் அருகில் சென்று, ‘நீங்கதான் தைரியமா இருக்கணும் மேடம்’ என்று சொன்னார்.

எல்லோரையும் நிமிர்ந்து பார்த்த சசிகலா உடைந்து அழ ஆரம்பித்தார்.

‘அக்காவை இந்த கோலத்தில் பார்க்க முடியவில்லையே.. அவங்க இல்லாம நாளைக்கு என்ன செய்யணும்னு கூடத் தெரியலியே..’ என்று தேம்பிய சசிகலாவுக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு சட்டென்று தன்னைத் தேற்றிக் கொண்டவராக, ஜெ. இருந்த அறைக்குள் சென்றார்.

எந்த இக்கட்டிலும் கலங்காதவராக, நல்லது கெட்டதுகளில் ஜெயலலிதா வுக்குப் பின்னால் கம்பீரமாக நிற்ப வருமாக அறியப்பட்ட சசிகலா, உடைந்து அழுதது அங்கிருந்தவர்களால் வித்தியாசமாகவே பார்க்கப்பட்டது. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்தம்பித்து நின்றிருந்தார்கள்.

சிறிது நேரத்திலேயே, ’நடக்கக் கூடாதது நடந்து விட்டது’ என்பதை அப்போலோவின் இரண்டாம் தளத்தில் காத்திருந்தவர்களால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரும் வெகு அமைதியாகப் பேசிக் கொண்டனர். அவர்களின் பேச்சில் சுற்றி வந்த விஷயங்கள்:

‘கட்சி என்ன ஆகும்னு தெரியலியே.. யாரை சி.எம். ஆக்குறது? திரும்பவும் ஓ.பி.எஸ்.தானா? தனக்கு எந்தப் பதவியும் வேணாம்னு சின்னம்மா சொல்றாங்களாமே? அதை அவுங்க சொந்தங்களே ஏத்துக்கலயாமே? எதுவா இருந்தாலும் பொதுக்குழு கூட்டி அப்புறமா பாத்துக்கலாம்னு சின்னம்மா சொல்லிட்டாங்களாமே?’

தளத்தில் நடந்த பேச்சுக்கள் அனைத் தும் சசிகலாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. கூர்ந்து கேட்டுக் கொண்ட சசிகலா, ‘இக்கட்டான நேரத்தில் எல்லாம் ஓ.பி.யைத்தான் சி.எம். ஆக்கினாங்க அக்கா. இதுவும் இக்கட்டான நேரம்தான். அவங்க தேர்ந் தெடுத்த ஓ.பி.யைத்தான் நானும் தேர்ந் தெடுக்க முடிவு பண்ணிருக்கேன்’னு உறுதியாக சொல்லிவிட்டார்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் ஆர்வம் காட்டாமல், இரண்டா வது தளத்தின் வலது வராண்டாவின் கடைசி பெஞ்சில் தனியாக அமர்ந் திருந்தார் ஓபிஎஸ். டீ குடிக்கச் சொல்லி அவரிடம் சிலர் கேட்க, ’வேண்டாம்’ என சைகையில் சொன்னார்.

ஜெயலலிதா இறந்தது உறுதியான நிலையில், அங்கு இருந்த எல்லோருமே சில நிமிடங்கள் அழுதபடி நின்றிருந்தனர்.

அடுத்து செய்ய வேண்டியவை குறித்துப் பேசுவதற்காக சசிகலாவின் அருகில் போய் அதிகாரிகள் நின்றனர். தயங்கியபடியே, ‘அடக்கம் பற்றி முடிவு செய்யணும் மேடம். கார்டனிலேயே அடக்கம் பண்ணிறலாமா? ’ என்றனர்.

சற்றும் தாமதிக்காமல், ‘அக்காவை எம்ஜிஆர் சமாதியிலேயேதான் அடக்கம் செய்யணும். எம்ஜிஆருக்குப் பக்கத்தில்தான் அக்கா இருக்கணும்’ என்று தீர்மானமாகச் சொன்னார்.

‘மெரினாவில் அடக்கம் செய்வதில் கோர்ட் சிக்கல் இருக்கிறதே..’ என்று இழுக்க.. ‘கூடுதலாக இடம் எடுத்துச் செய்தால்தான் பிரச்சினை வரும். எம்ஜிஆர் சமாதியிலேயே இடம் எடுத்தால் எந்த சிக்கலும் வராது’ என்று சொல்ல.. அதிகாரிகள் அமைதியானார்கள். அதேபோல் எம்ஜிஆருக்கு இறுதி அஞ்சலி நடந்த ராஜாஜி ஹாலிலேயே அக்காவுக்கும் இறுதி அஞ்சலி நடக்கட்டும் என்று சசிகலா சொன்னார்.

ஷீலா பாலகிருஷ்ணன் அருகில் சென்று, சசிகலாவை அவ்வப்போது தேற்றினார். அக்கா விருப்பப்படி நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்படியே தொடர்வார்கள் என்பதையும் ஆணித்தரமாக சொன்னதில் அங்கிருந்தவர்களுக்கு தெளிவு கிடைத்தது போல் ஆனது.

அப்போது அங்கு வந்த ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன், ‘ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் முடிந்துவிட்டது’ என்றார். அப்போதும் சசிகலா உள்ளிட்ட அனைவரும் உடைந்து அழுததைக் காண முடிந்தது.

ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டுவரப்பட்டபோது கடுமையான கெடுபிடிகள் இருந்தன. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி அப்பு, உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் இறுகிப்போய் நின்றார்கள். கார்டனின் வேலைக்காரப் பெண்கள் கதறினார்கள். அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவின் உடலைப் பார்க்க கார்டனுக்குள் சில நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

கடுமையான கெடுபிடி நிலவிய அந்த நேரத்தில், கேட்டில் நின்று கதறிய அஞ்சலை என்கிற பெண்ணை மட்டும் பாதுகாப்பு அதிகாரிகள் கார்டனுக்குள் அனுமதித்தார்கள். அவர் கார்டனுக்குள் அவ்வப்போது வந்து வேலை பார்க்கும் பெண்ணாம். ஆம்புலன்ஸுக்குப் பின்னால் சசிகலா காரில் வந்தபோது இந்தப் பெண் கதறியதை பார்த்து, உள்ளே அனுமதிக்கச் சொல்லியிருக்கிறார்.

அரை மணி நேரம் மட்டுமே கார்ட னில் ஜெ. உடலுக்கு சடங்குகள் நடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஜெ.யின் உடல் அங்கேயே இருந்தது. ஜெயலலிதா வுக்குப் பிடித்த பச்சை நிறச் சேலையை சசிகலா உடுத்திவிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கைக்கு வாட்ச் கட்டிவிட்டு, தனது இரு கைகளாலும் முகத்தைப் பிடித்து சசிகலா கதறியிருக்கிறார்.

‘அக்கா, நீங்க இல்லாத வீட்ல இனிமே நான் என்னக்கா பண்ணப் போறேன். எல்லா எடத்துலயும் நீங்கதானக்கா தெரியுறீங்க..’ என்று பிதற்றியபடி ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகிலேயே சசிகலா அமர்ந்திருக்கிறார். விடிய விடிய ஜெயலலிதா உடலின் மீது கைவைத்துக் கொண்டு கலங்கியபடியே அமர்ந்திருக்கிறார் சசிகலா.

‘விடிஞ்சுருச்சு. ராஜாஜி ஹால் கொண்டு போயிறலாமா?’னு தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சொன்னப்ப கூட, சசிகலா அருகில் போய் சொல்ல அனைவருமே தயங்கினர். ஜெயலலிதாவின் உடலை தூக்கும் போது சசிகலாவை, கார்டனில் பணிபுரியும் பெண்கள்தான் ஆறுதலாகத் தாங்கிக் கொண்டனர்.

நர்ஸிடம் மன்னிப்பு கேட்ட ஜெயலலிதா

அப்போல்லோவில் அட்மிட்டான மூன்றாவது நாள் ஜெயலலிதாவின் உடல்நிலை சற்று மோசமானது. அன்று இரவு ஜெ. திடீரென கண் விழிக்க சசிகலா சட்டென எழுந்து என்ன என்று கேட்டிருக்கிறார். அப்போது பணியில் இருந்த நர்ஸ் கண் அயர்ந்துவிட, அவரை எழுப்பச் சொல்லி இருக்கிறார் ஜெ. ‘நாங்க தூங்காம இருக்கோம். நீ இப்படி தூங்கலாமா’ என அந்த நர்ஸை கடிந்து கொண்டாராம் ஜெ. அடுத்த சில நாட்களில் சுய நினைவு பறிபோகும் அளவுக்கு ஜெ.யின் உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்களின் தொடர் முயற்சியால் ஒரு வாரத்தில் நினைவு திரும்பியது.

ஆனாலும் ஜெ.க்கு எந்தளவுக்கு நினைவு திரும்பி இருக்கிறது என்பதை மருத்துவர்களால் அறிய முடியவில்லை. அப்போது அந்த நர்ஸ் அறைக்குள் வர, அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஜெ. ‘நான் பேசியதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே… வேதனையில் அப்படி பேசிவிட்டேன்’ என ஜெ. சொல்ல, பதறி இருக்கிறார் அந்த நர்ஸ். ஜெ.க்கு முழுவதுமாக நினைவு திரும்பிவிட்டது என்பதை அதை வைத்தே மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/அப்போலோவில்-கரைந்த-கடைசி-நிமிடங்கள்-ஜெஜெயலலிதாவின்-உயிர்த்தோழி-ஆகிய-சசிகலா/article9418655.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

அப்போலோ செவிலியர்களிடம், ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன்!

 

apollo_600_jaya_11154.jpg

ஜெயலலிதாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் பரபரப்பானது மருத்துவமனை மட்டுமல்ல அங்கிருந்த ஊழியர்களும்தான். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்த செவிலியர்கள். 

அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் மூன்று ஷிப்ட்டில் பணியாற்றி வருகின்றனர். காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையும் அவர்கள் பணி தொடர்கிறது. மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள MDCCU வார்டில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். பணி நேரத்தில் மூன்று செவிலியர்கள் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளனர். இரண்டு செவிலியர்கள், ஜெயலலிதா அருகில் நின்று கொண்டே கவனித்து வந்தனர். ஒரு செவிலியர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் குறிப்பு எடுத்துக் கொள்வார்.

இரவுப் பணி முடிந்து செல்லும் செவிலியர்கள், காலை பணிக்கு வரும் செவிலியர்களிடம், ஜெயலலிதாவுக்கு இந்த வகையான சிகிச்சையும், மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இனி அவருக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை, மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துச் செல்வார்கள். அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் ஜெயலலிதா சற்றே கடுமையாக நடந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் செவிலியர்கள் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது, ஜெயலலிதா வலியால் துடித்துள்ளார். இதனால் பதறிப் போன செவிலியர்கள், பணிவிடை செய்வதை நிறுத்தி விட்டனர். "வலி தாங்க முடியவில்லை. ஏதேனும் செய்யுங்கள்!" என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. 

ஒருமுறை காலை பணியில் இருக்கும் செவிலியர்கள், அன்று கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், பணிவிடைகள் குறித்து ஜெயலலிதாவிடம் கூறியுள்ளனர். அப்போது, Don't disturb me. I want to take rest என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கையால் சில நேரங்களில் ஜெயலலிதா மருந்துகள் கூட எடுக்காமல் இருந்துள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம், செவிலியர்கள் கூறியுள்ளனர். அவருக்கு மருந்து கொடுக்க வேண்டியது உங்களது கடமை என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்!'' என்கிறார்கள்  மருத்துவமனை வட்டாரத்தில்!

http://www.vikatan.com/news/tamilnadu/74532-what-jayalalithaa-said-of-apollo-nurses.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா இருந்த ஐஸ் பெட்டியை டிசைன் செய்தவரின் நேர்காணல்!

 

ஜெயலலிதா

ப்போலோவில் 22 செப்டம்பர் -16 தொடங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 டிசம்பர்-16 அன்று திடீர் மாரடைப்பு ஏற்பட, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை பலனளிக்காமல் 5 டிசம்பர்-16 அன்று இரவு 11:30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறந்த ஜெயலலிதாவின் உடலை அப்போலோவிலிருந்து போயஸ் தோட்டம், ராஜாஜி ஹால் தொடங்கி எம்.ஜி.ஆர் சமாதியில் அவர் அடக்கம் செய்யப்படும் வரை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தது அவரை வைத்திருந்த ஐஸ் பெட்டி. இதனை ’flying squad ambulance service' -ன்  டாக்டர். சாந்தகுமார்தான் தயாரித்திருந்தார். ஜெ.வின் இறுதி நிமிடங்களுக்குப் பிறகு அவரது பூத உடலைப் பார்த்த சிலரில் ஒருவர். டாக்டர்.சாந்தகுமார் நம் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்.

shantakumar_13525.jpgமுதல்வரின் உடலை எடுத்துச் செல்ல என்ன மாதிரியான பெட்டி தேவைப்பட்டது?

அதிக அழுத்தம் கொண்டு நீண்ட நேரம் உடலை சில்லுப்பாக வைத்திருக்கும் பெட்டி ஒன்று தேவைப்பட்டது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அப்படியான பெட்டியை தயாரிப்பது வழக்கம், இரண்டு நாட்களுக்கு முன்பே அப்படி ஒரு புது பெட்டியை நான் தயார் செய்திருந்தேன். தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்டது. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆனது. முதல்வரின் உடலை எடுத்துச் செல்லதான் அதனை தயாரித்தேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எத்தனை மணிக்கு உங்களிடம் ஐஸ் பெட்டி கேட்டார்கள்?

அப்போலோ நிர்வாகத்திலிருந்து 11:45க்கு அழைப்பு வந்தது. முதல்வருக்கு என்றார்கள்.

முதலில் 10-11 மணிக்கு கேட்டார்கள் என்றீர்கள், பிறகு 11-11:30 என்றீர்களே?

அது முதல்வர் இறந்தது தாங்காமல் எமோஷனில் சொன்னேன் 11:50க்குதான் அங்கிருந்து அழைப்பு வந்தது.

இறந்த அவரது உடலைப் பார்த்த முதல் சில பேரில் நீங்களும் ஒருவர்...

ஆமாம்!. எப்படி நாம பார்த்தோமோ அப்படியே இருந்தது அந்த முகம். ஒரு மாசு இல்லை. பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவங்களை நாங்க நான்கு பேர் சேர்ந்துதான் ஐஸ் பெட்டியின் மீது தூக்கி வைத்தோம். இத்தனைக்கும் அவர் வெயிட்டாக இருப்பார் என்றார்கள். தூக்கும்போது சாதாரண எடைதான் இருந்தார்.

184381_%281%29_13563.jpg

அப்படியேதான் இருந்ததா? அவங்க முகத்தில் கன்னத்தில் இடது பக்கம் நான்கு ஓட்டை இருந்ததே?

நாங்கள் தூக்கி வைக்கும்போது முகத்தில் அந்த ஓட்டைகள் இல்லை. நாங்கள்தான் முகத்தை மற்றும் கை கால்களைக் கட்டினோம். அதற்குப் பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும்போதுதான் அந்த ஓட்டை இருந்தது. சிலர் அதனை எம்பாமிங் ஓட்டை  என்கிறார்கள். ஆனால், நாங்கள்  எம்பாமிங்  செய்யப்பட்ட உடலைதான் பெட்டியில் வைத்தோம்,

நீங்கள் பார்க்கும்போது கன்னத்தில் ஓட்டை இல்லையா?

நிச்சயமாக நான் பார்க்கும்போது அப்படி ஓட்டை இல்லை.

http://www.vikatan.com/news/coverstory/74542-interview-of-doctor-shantakumar-who-designed-the-ice-box-to-carry-jayalalithaa-finally.art

Link to comment
Share on other sites

ஜெ. இறுதிச்சடங்கு.. சம்பிரதாயத்தை மீறினாரா சசிகலா?

 

sasikala-_jaya_death_1_17351.jpg

ஜெயலலிதாவின் மறைவால் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக மக்களை, அவர் மறைவு குறித்து எழும் பல்வேறு சர்ச்சைகளும், பதில்கள் இல்லாத கேள்விகளும் மேலும் அதிக வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த இறுதிச் சடங்கு குறித்தும் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ‘சமயச் சம்பிரதாயப் படி பரிபூரணமாக அவரது இறுதிச்சடங்கு நிகழவில்லை’ என்று குறிப்பிட்டு, பெரும் மனக்குமுறல்களுடன் ஆன்மீக பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, புகழ்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தபோதும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னை ஆன்மிக பிடிப்புள்ளவராகவே வெளிப்படுத்திக்கொண்டார். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட  ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். வைஷ்ணவ தர்ம சாஸ்திரங்களையும் ஆசாரஅனுஷ்டானங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடியவர். விஷ்ணு  சஹஸ்ரநாமத்தை சில நிமிடங்களில் பாராயணம் செய்து விடக் கூடியவர். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை பார்த்தசாரதி பெருமாள், திருவரங்கம் ரங்கநாதர் மீது அதீத பக்தி கொண்டவர் என்பது நாடறிந்த விஷயம். அவ்வளவு ஏன், ஒருநாள்கூட தமது நெற்றியில் சூர்ணம் தரிக்காமல் (கோபிநாமமாக திலகம் அணிந்திருப்பார்) இருந்ததில்லை. அந்தளவுக்கு அவர் பெருமாள் பக்தை. ஆனால், அவரது இறுதிச் சடங்கு வைணவ சம்பிராதயப்படி நடைபெறவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

‘முதல்வர் என்பவர் சமயச் சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அடிப்படையில் பார்த்தாலும், தனிமனிதருக்கு உரிய உரிமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் மறைந்தபோது, அவர்களின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் அவரவர் சம்பிரதாய முறைப்படி முழுமையாக நடந்தேறின. தகனக்கிரியை நிகழ்ந்தபிறகு, அஸ்தியை வைத்தே நினைவிடம் எழுப்பினார்கள். ஆனால், அம்மா அவர்களின் விஷயத்தில் அந்தமாதிரியான சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. நடந்தவை அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே நடந்தன. 
முறைப்படி ரத்தசொந்தமான ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் மூலமாகவே அனைத்தையும் செய்திருக்கவேண்டும். ஆனால், அவரை அருகில் வைத்துக்கொண்டு சசிகலாவே அனைத்தையும் செய்தார். இதையெல்லாம் விட, தீபக் பேண்ட்-சர்ட் போட்டுக்கொண்டும், காலணிகளைகூட கழற்றாமலும் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் காரியங்கள் செய்ததும், சசிகலா பால் தெளித்த தனது கைகளை தேவாதிபட்டரின் வஸ்திரத்தில் துடைத்துக்கொண்டதும் மறைந்த ஆத்மாவை அவமதிக்கும் செயல். மரியாதை செலுத்த வந்த ராகுல்காந்திகூட காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டே அருகில் வந்தார். அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும்கூட இவர்களுக்கு இல்லையே...’ என்று நீள்கிறது அவர்களது மனக்குமுறல்கள்.

இதுகுறித்தும் இறுதிச்சடங்கு-சம்பிரதாயங்கள் குறித்த நியமங்களை விவரிக்கச் சொல்லியும் வைணவ வேதபண்டிதர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள், தங்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோடு தங்களின் விளக்கத்தை முன்வைத்தார்கள்.

‘‘முதல் விஷயமாக, திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஒருவர் இறுதிச்சடங்கில் ஈடுபடுவது வழக்கம் இல்லை. ஆனால், அம்மா அவர்களுக்கு இறுதிச்சடங்கு காரியங்களை நடத்திவைத்த தேவாதிபட்டர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிவதாக அறிகிறோம். அது உண்மையெனும்பட்சத்தில், அவர் எப்படி இறுதிச் சடங்கு நிகழ்த்த ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது அவர் எந்தக் கோயிலிலும் கைங்கர்யம் செய்யவில்லை என்றாலும்கூட, அவரும் வைணவ சம்பிராதயங்களை அறிந்தவராகவே இருப்பார். அப்படிப்பட்டவர் இப்படி அரைகுறையாகச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?  எந்தக் குறையும் இல்லாமல், முழுமையாக நடத்தியிருக்கலாமே என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்’’ என்று குறைபட்டுக்கொண்டவர்களிடம் சம்பிரதாய விதிகள் குறித்துக் கேட்டோம்.

‘‘ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்ட ஜெயலலிதா ஆசாரமான ஐயங்கார் குலத்தில் பிறந்தவர். அவருடைய இறுதிச் சடங்கு அவர்களுடைய குல மரபுப்படி நடைபெறவில்லை. பிராமணர் குலத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதுதான் வழக்கம். 
அதாவது ஒற்றை மூங்கில் கழியில் பாடை செய்து அதில் தென்னை கீற்று மட்டை பரப்பி, அதில் இறந்தவரின் உடலை வைத்து காடு வரைக்கும் சுமந்துசென்று தகனம் செய்வதுதான்  காலம் காலமாய் கடைப்பிடிக்கும் வழக்கம். இந்தக் காரியத்தை, எவர் வந்தாலும் வராவிட்டாலும் இறந்த 24 மணி நேரத்துக்குள் நடத்தவேண்டும்.

தகனம் செய்வதற்கு முன் சுடுகாட்டிலும் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள், பாசுரங்கள் சொல்வார்கள். மறுநாள்தான் சஞ்சயனம் எனப்படும் பால் தெளியல் நடைபெறும். தொடர்ந்து 3-ம் நாள் முதல், 10-ம் நாள் வரையிலும் நித்ய கர்மாக்கள் உண்டு. 11-ம் நாள் ஒத்தன், 12-ம் நாளன்று சபிண்டிகரணம், 13-ம் நாளன்று கிரேக்கியம் ஆகியன நடக்கவேண்டும். இந்த நாளில் மணவாளமுனி பாராயணம், ராமானுஜர் பாசுரம், பல்லாண்டு பாசுரம் ஆகியவற்றை நிகழ்த்தி, பல்வகை தானம் செய்வார்கள். இவற்றையெல்லாம் செய்து இறந்தவரை அவருடைய மூதாதையருடன் சேர்த்துவைக்கும் சடங்கு இது.

பிறகு ஓராண்டு வரையிலும் மாதாந்திர திதியன்று கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளும் உண்டு. அதேபோல், ஐயங்கார் குடும்பத்தில் இறந்தவர்களை அவர்களின் வாரிசுகளோ அல்லது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளோ தர்ப்பையை எரித்து அதைக் கொண்டு தகனம் செய்வார்கள்.

நேரடி ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசுதான் உண்டு எனில், அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பேரன் காரியங்கள் செய்ய வேண்டும். திருமண பந்தத்தில் இணையாதவர்களுக்கு ரத்தவழிச் சொந்தங்கள்... சகோதரர் வழிப் பிள்ளைகள் செய்யலாம். எந்த உறவுகளும் இல்லாதவர் எனில், அவருக்கு ‘கோவிந்த கொள்ளி’ என்று வேற்று நபர்கள் காரியம் செய்யலாம். கோவிந்தகொள்ளி வைப்பதற்கும் உரிய சடங்குகள் உண்டு’’ என்று விளக்கியவர்கள், தங்கள் பங்குக்கு தங்களது மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்தார்கள்.
‘‘இறந்து போனவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லாவிட்டால், ரத்த சம்பந்த உறவு உள்ள ஒருவர் இறுதிச் சடங்குகளைச் செய்யலாம். அப்படிப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சம்பந்த உறவாக அவருடைய அண்ணன் மகன் தீபக் இருக்கிறார். அவரைக் கொண்டு முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவரை கடைசியில் பேருக்குத்தான் இறுதிச் சடங்குகளைச் செய்யவைத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுவிட்டால் உடனே தகனம் செய்துவிடவேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாலையில் போயஸ் கார்டனிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லும் நிலையில், அவருடைய உடலை உடனே தகனம் செய்யாமல் மாலைவரை காத்திருக்கவைத்தது சாஸ்திர விரோதம் என்றுதான் சொல்லவேண்டும். இது ஒருபுறமிருக்க...

காலையில் நேராக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு, மாலையில் உரிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அடுத்ததாக, இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் சாஸ்திரிகளைக் கொண்டு வேதம், பிரபந்த பாராயணம் செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. 

பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு பெருமாள் மாலையும், வஸ்திரமும் அணிவித்து மரியாதை செய்திருக்கலாம். அதுகூட செய்யவில்லை. பிராமண குடும்பங்களில் இறந்தவர்களை தகனம் செய்துவிட்டு, மறுநாள் அஸ்திக்குத்தான் பால் தெளித்தல் நடைபெறும். ஆனால், இங்கே தகனம் செய்யாததுடன், சவப்பெட்டியை குழியில் இறக்கியதுமே பாக்கெட் பாலை பீய்ச்சித் தெளித்தது பெரும் தவறு. சந்தனக் கட்டைகளையும் குழிக்குள் வீசி எறிந்திருக்கக்கூடாது. 

மொத்தத்தில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் கடைப்பிடிக்கவில்லை என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு நிறையவே வருத்தம் இருக்கிறது’’ என்றவர்களிடம், ‘ஒருவர் கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இறந்துவிட்டால், அவருக்கு மாதம்தோறும் செய்யும் சடங்குகளையும் வருடாந்திர திதி கொடுக்கவும் ஏதேனும் சட்டதிட்டங்கள் இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘வைத்தியநாத தீக்ஷிதியம் போன்ற பழம்பெரும் நூல்கள் சம்ஸ்கார விஷயங்கள் குறித்து விளக்குகின்றன. ஒரு பிராமணப் பெண் திருமணம் ஆகாமல் இறந்துவிட்டால், அவருக்கு மாதாந்திர சடங்குகளோ வருடாந்திர திதியோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருடாந்திர திதி நாளில் கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்தாலே போதும்’’ என்று பதில் தந்தவர்கள், ‘‘அதிலும் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்த நேரம் மிகச்சரியாக தெரிந்தால்தான் இறப்பு திதியை (திதி நாளை) தெளிவாகக் கணிக்க முடியும். 5-ம் தேதியன்று இரவு 11:30 மணிக்குதான் அம்மா அவர்களின் உயிர் பிரிந்ததாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சர்ச்சைகள் எழாமல் இல்லையே. அப்படியிருக்க திதியை எப்படிக் கணிப்பது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களின் மனதில், அவர் குறித்து தொக்கி நிற்கும், பதில் அறிய முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/74565-did-sasikala-follow-traditional-values-during-jayalalithaas-funeral.art

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக  மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு.

முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவ்வப்போது தமிழச்சி அதிரடி பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் நேற்று அவர் எழுதிய பதிவு இதோ,

ராம்குமார் இறந்தது செப்டம்பர் 19 / 2016.

ராம்குமார் இறந்த இரண்டு நாட்களில், ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை’ என்று அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 22/2016.

செப்டம்பர் 30-இல், ‘ஜெயலலிதா மாரடைப்பால் இறந்து விட்டார்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருந்த தகவல் எனக்கு முன்தினமே கிடைத்தது.

ஜெயலலிதா எதற்காக பலியாக்கப்பட்டார் என்கிற பல தகவல்களை நாங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தோம். [நாங்கள் என்று சொல்வதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த சில நல்லவர்களும் அதில் அடக்கம்]

ராம்குமார் சிறைக்குள் கொல்லப்படுவதற்கு முன்தினம் செப்டம்பர் 18இல், சிறைக்குள் இருந்த ஒரு காவலர் மாற்றப்படுகிறார். அதற்கு பிறகே மறுதினத்தில் ராம்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

இத்திட்டத்தை முன்கூட்டியே தெரிவித்த அந்த நபர், ‘ஏதோ நடக்கப்போகிறது’ என்று பயந்தார். அதை அப்போதே நான் எழுதி இருக்க வேண்டும்.

ஆனால், “நாளை ஜாமீனில் ராம்குமாரை வெளியே விட்டுவிடுவார்கள். தமிழகமே உற்று நோக்கும் இந்த வழக்கில் சிறைக்குள் ராம்குமார் கொல்லப்பட்டால் தமிழக அரசுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே ராம்குமாரை வெளியே அனுப்பிவிட்டு அவனை கொல்லவே திட்டமிடும்” என்று கூறினேன். ஆனால் அந்த நபர் சொன்னது போலவே சிறைக்குள் ராம்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த தகவல் சொன்ன நபரே செப்டம்பர் 28 இல், “ஜெயலலிதாவிற்கு உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. மூளைச்சாவு நடந்து கொண்டிருக்கிறது” என்றார். அதை எனக்கு சொன்னது செப்டம்பர் 29 இல்.

‘நாம் எழுதுவோம்’ என்றேன்.

“தமிழ்நாட்டில் பதட்டம் மட்டுமல்ல, அது கலவரங்களை ஏற்படுத்தும் நிலைக்கு செல்லும்” என்றார்.

தமிழக மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்ல வேண்டும். பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் இந்து பரிவாள அமைப்புகளின் அராஜகங்களை நாம் அம்பலப்படுத்தியே தீர வேண்டுமென செப்டம்பர் 29 இல், “ஜெயலலிதா இறந்துவிட்டார்” என்கிற தகவலை அறிவித்தேன்.

அதிர்ச்சி அடைந்த அந்த அரசியல் வட்டாரம் திட்டத்தை மாற்றிக் கொண்டது. அப்போலோ, “ஜெயலலிதா இறக்கவில்லை. சாதாரண ஜீரம்தான். இரண்டு நாட்களில் சென்று விடுவார்” என அறிவித்தது.

திட்டங்கள், குழப்பங்கள், பதற்றங்கள், அச்சங்கள், தடுமாற்றங்கள், உளறல்கள் என அடுத்த இரு மாதங்களில் பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் நிலை இருந்தது.

என்னை பேச விடாமல் செய்வதற்காக வழக்கு போட்டு அச்சுறுத்தியது. வீட்டு தொலைபேசியில் இலண்டனில் இருந்து கொலை மிரட்டல்கள் விடுத்தது. “சுவாதி / ராம்குமார் கொலை வழக்கு குறித்து பேசினால் கொல்லப்படுவாய்” என மிரட்டியது. ப்ரெஞ்ச் காவல்துறை கவனத்திற்கு இத்தொலைபேசி கண்காணிப்பில் சென்றது.

வழக்கு பாயும் என்று அச்சுறுத்திய தமிழக / இந்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை 50 நாட்களாகியும் எடுக்கவில்லை. எனவே நானே முன்வந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.

“ப்ரெஞ்ச் அம்பாசி மூலமாக விளக்கம் கேட்கப்பட்டது. 25 நாட்களாக முரணான பதில்கள் வந்தன. ப்ரெஞ்ச் வழக்கறிஞரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி இருந்ததால் ‘ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் அது வதந்தி என்று சொல்வது தவறு’ என வாதிட்டார். இந்தியாவிற்குள்ளும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையிலேயே டிசம்பர் 5 இல் ஜெயலலிதா இறந்து விட்டதாக தமிழக அரசும் அப்போலோவும் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 22 க்கு பிறகு ஜெயலலிதா எந்த அறிக்கையும் விட்டிருக்க முடியாது. கையெழுத்து போட்டிருக்க முடியாது. கைநாட்டு வேண்டுமானால் சுயநினைவு இல்லாத அவரின் கைநாட்டாக இருக்கும்.

எனவே ஜெயலலிதா, ‘சசிகலா, மன்னார் மாபீயா கூட்டணிக்கோ அல்லது வேறு நபர்களுக்கே அவருடைய சொத்துக்களை செப்டம்பர் 2016க்கு பிறகு எழுதி வைத்திருந்தால் அது செல்லாதவை’ என அறிவிக்கும் நடவடிக்கையை உண்மையான அதிமுக தொண்டர்கள் எடுக்க வேண்டும்.

சசிகலா மன்னார் கூட்டணி தமிழ்நாட்டு அரசியலை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தைவிட ஜெயலலிதா சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மத்திய அரசுக்கு ஒத்துழைத்தனர்.

ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது சசிகலா / இளவரசி தவிர வேறு யாரும் ஜெயலலிதா அறைக்குள் நுழையாதபடி பார்த்துக் கொண்ட சசிகலாவின் அதிகாரம் மக்களதிகாரமல்ல… சூழ்ச்சி…. மாபீயா கூட்டத்தின் கைக்கூலி… ஈனபுத்தி கொண்ட தமிழீன துரோகி.

இவரை தமிழ்நாட்டு மக்கள் அரசியலுக்குள் வராதபடி அப்புறப்படுத்தாவிட்டால் ஒட்டு மொத்த தமிழீனமும் கேணயர்கள்தான் என்பதை நாமே ஒத்துக் கொள்ள வேண்டும்.

http://www.sangamamfm.com/2016/12/09/முதல்வர்-ஜெயலலிதா-தொடர்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.