Jump to content

நாரந்தனை படுகொலை: மூவருக்கு மரண தண்டனை


Recommended Posts

நாரந்தனை படுகொலை: மூவருக்கு மரண தண்டனை
 
 

ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில்,  2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது   ஈ.பி.டி.பியினர்  தாக்குதல் நடத்தி இருவரை  படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/187604/ந-ரந-தன-பட-க-ல-ம-வர-க-க-மரண-தண-டன-#sthash.iiiqCqzH.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆடர் குடுத்த தலீவர் டக்கியங்கிளுக்கு?

Link to comment
Share on other sites

இரட்டை கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை.

elam

இரட்டை கொலை குற்றவாளிகள் மூவருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் , 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

 
குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் இனம் கண்ட மூன்று எதிரிகளுக்கும், இன்றைய தினம் மேல் நீதிபதி இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
 
அத்துடன் 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும், தவறின் ஐந்து வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்பளித்தார். நான்காவது எதிரி குற்றமற்றவர் என கருதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
அதில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகள் மீதான 47 குற்ற சாட்டுக்களில் ஒன்றில் இருந்து 24 வரையிலான குற்ற சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 25 தொடக்கம் 47 வரையிலான குற்ற சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
 
இதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது தலைமறைவாகி உள்ளனர். அவர்களுக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
குறித்த இரு குற்றவாளிகளும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுவதனால் இலங்கை ஜனாதிபதி இங்கிலாந்து நாட்டின் பிரதமருடனான இராஜதந்திர ரீதியில் அணுகி குற்றவாளிகளை இங்கிலாத்தில் இருந்து நாடுகடத்த வேண்டும் என வேண்டும் எனவும் , அதேபோன்று வெளிவிவகார அமைச்சு , வெளிநாட்டு நீதி அமைச்சு, இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர் ஆகியோர் இராஜதந்திர ரீதியாக அணுகி குற்றவாளிகளை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்தார்.
 
அத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு சர்வதேச பொலிசாரின் உதவியை அணுகி குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவு இட்டார்.
 
குறித்த வழக்கின் பின்னணி.
 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
 
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
 
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா ,  ஜீவகன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ் மற்றும் நமசிவாயம் கருணாகர மூர்த்தி ஆகிய நால்வர் கைது செய்யபட்டனர்.
 
இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.  47 குற்றசாட்டுக்கள் முன் வைக்கபட்டு குற்றப் பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
 
அந்நிலையில் பிணையில் விடுவிக்கபட்டு இருந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா ,ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்கள். ஏனைய இரு சந்தேக நபர்களும் வழக்கு விசாரணைகளுக்கு சமூகம் அளித்து வந்தனர்.
 
அதனால்  முதலாம், இரண்டாம் எதிரிகள் அற்ற நிலையில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் உடன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் குறித்த வழக்கு யாழ். மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாக சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அறிவித்தார்.
 
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
அதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் மன்றில் ஆஜராகவில்லை. மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர். மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி எம்.ரெமிடியஸ் ஆஜராகி இருந்தார். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந் ஆஜராகி இருந்தார்.
 
எதிரிகள் தம் மீதான 47 குற்ற சாட்டுக்களையும் மறுத்தனர். அத்துடன் தமக்கு ஜூரி சபை தேவையில்லை எனவும் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை நடாத்துமாறும் கூறி இருந்தனர்.
 
அதனை அடுத்து மன்றில் ஆஜராகாத முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு பகிரங்க பிடிவிறாந்து மேல்நீதிபதி பிறப்பித்தார். அத்துடன் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவியை நாடுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்
 
 குறித்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ம் திகதி வரை தொடர் விசாரணைகளை நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி இருந்தார்.

http://globaltamilnews.net/archives/9591

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில கூடுதலா தூக்குத் தண்டனை குடுக்கிற ஜட்ஜ் ஐயா இவர் தான் போல கிடக்குது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

இலங்கையில கூடுதலா தூக்குத் தண்டனை குடுக்கிற ஜட்ஜ் ஐயா இவர் தான் போல கிடக்குது. :rolleyes:

 

4 hours ago, Nathamuni said:

அப்ப ஆடர் குடுத்த தலீவர் டக்கியங்கிளுக்கு?

மாமாவுக்கு இப்ப நடுக்கம் தொடங்கியிருக்கும்

அவருக்கான கோடு தான் இது

Link to comment
Share on other sites

ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூவருக்கு மரணதண்டனை

City-01-8d7f944f2184e3fd5de2455cb4f5780a53d399f7.jpg

 

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு; நாட்டைவிட்டு தப்பிச்சென்ற எதிரிகள் இருவரை கைதுசெய்யும் வகையில் அரசாங்கத்திற்கு ஐந்து பரிந்துரைகள்
 (ரி.விரூஷன்)

யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­று­றை பகுதியில் தேர்தல் பிர­சாரத்­திற்­காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர்  மீது தாக்­குதல் நடத்தி இரு­வரை படு­கொலை செய்த துடன் பதி­னெட்டு பேருக்கு காய­ம் ஏற்படுத்திய வழக்கில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இரட்டை மரண தண்டனையும் இருபது வருட கடூழியச் சிறைத்தண்ட னையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சம்பவம் இடம்பெற்றபோது ஈ.பி.டி.பி.யின் ஊர்காவற் றுறைக்கான இராணுவப் பிரிவின் தளபதியாக செயற்பட்ட செபஸ்டியன் ரமேஷ், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா மதனராசா மற்றும் அன்டன் ஜீவராஜா ஆகிய மூவருக்குமே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் நான்காவது எதிரியான ஈ.பி.டி.பி. உறுப்பினர் நவசிவாயம் கருணாகரமூர்த்தி நீதிமன்றத்தினால் விடு தலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த வழக்கில் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்ட முதல் இரண்டு எதி­ரி­களும் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்ள நிலையில், அவர்­களை உட­ன­டி­யாக கைது செய்யும் வகையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஐந்து பரிந்­து­ரை­க­ளையும் சர்­வ­தேச பகி­ரங்க பிடி­யாணையையும் பிறப்­பித்­துள்­ள­துடன், அதனை பொலிஸ் மா அதிபர் ஊடாக நிறை­வேற்­றவும் யாழ்.மேல் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

குறித்த வழக்கின் தீர்ப்­பா­னது நேற்­றைய தினம் யாழ்.மேல் நீதி­மன்­றத்தின் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனால் வழங்கப்பட்டபோதே இந்த பரிந்­து­ரை­களும் உத்­த­ரவும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பவம்

பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­க­ளுக்­காக கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு முன்பு அதா­வது 2001.11.28ஆம் திகதி அன்று ஊர்­கா­வற்­று­றைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை சேர்ந்த மாவை சேனா­தி­ராசா, சிவா­ஜி­லிங்கம், சுரேஷ் பிரே­ம­சந்­திரன், அமரர் நட­ராஜா ரவிராஜ் போன்­ற­வர்கள் 11வாக­னங்­களில் தமது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் சென்­றி­ருந்­தனர். இதன்­போது ஊர்­கா­வற்­று­றையை அண்­மித்த நாரந்­தனை பகு­தியில் வைத்து குழுவொன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை வழி­ம­றித்து துப்­பாக்­கியால் சுட்டும் இரும்பு பொல்­லு­க­ளாலும் அல­வாங்கு மற்றும் கண்டம் கோடரி போன்­ற­வற்­றாலும் வெட்­டியும் அடித்தும் மோச­மான தாக்­குதல் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இச் சம்­ப­வத்தில் ஏரம்பு பேரம்­பலம், ஜோக­லிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் மாவை சேனா­தி­ராசா, சிவா­ஜி­லிங்கம் உட்­பட பதி­னெட்டு பேர்­வரை படு­கா­ய­ம­டைந்­த­துடன் அவர்கள் பய­ணித்த வாக­னங்­களும் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னை­ய­டுத்து இச் சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட தரப்­பினால் வழங்­கப்­பட்ட பொலிஸ் முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து இம் மிலேச்­சத்­த­ன­மான தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி. கட்­சியின் ஊர்­கா­வற்­று­றையின் இரா­ணுவ பிரிவின் தள­ப­தி­யாக இருந்த செபஸ்­ரியன் ரமேஷ், அதே கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த நட­ராஜா மத­ன­ராசா, அன்ரன் ஜீவ­ராஜா மற்றும் நவ­சி­வாயம் கரு­ணா­க­ர­மூர்த்தி ஆகியோர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

வழக்கு நட­வ­டிக்கை

தொடர்ந்து கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு நட­வ­டிக்­கை­யா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வந்­தி­ருந்­த­துடன் இவ்­வ­ழக்கின் முதலாம் எதி­ரி­யான செபஸ்­ரியன் ரமேஷ் என்­பவர் நீதிவான் நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்ட பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். அதன் பின்னர் வழக்கு நட­வ­டிக்­கையில் வவு­னியா மேல் நீதி­மன்றில் வழங்­கப்­பட்ட பிணையில் இவ் வழக்கின் இரண்டாம் எதி­ரி­யான மத­ன­ராசா என்­ப­வரும் நாட்­டை­விட்டு தப்பிச் சென்­றி­ருந்தார். அதனைத் தொடர்ந்து நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலை­மை­க­ளினால் இவ் வழக்­கா­னது திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் சட்­டமா அதி­பரால் இவ்­வ­ழக்கு தொடர்­பாக குறித்த நான்கு எதி­ரி­க­ளுக்கும் எதி­ராக 47 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வழக்­கா­னது 2006.06.26ஆம் திகதி யாழ்.மேல் நீதி­மன்றில் பாரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் தொடர்ந்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தி­ருந்­தன.

இவ்­வா­றான நிலையில் கடந்த மாதம் 2016.11.21ஆம் திகதி முதல் இவ் வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் முன்­னி­லையில் பதி­னைந்து நாட்கள் தொடர்ந்து விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­படி இவ் வழக்கின் முதலாம் இரண்டாம் எதி­ரிகள் இல்­லாத நிலையில் (மூன்றாம் நான்காம் எதி­ரி­க­ளுடன்) வழக்கை நடத்­தவும் அவர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி றெமி­டியஸ் முன்­னி­லை­யா­கு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டது. அத்­துடன் இதில் குற்­றம்­சாட்­டப்­பட்ட நான்கு எதி­ரி­களும் சம்­பவம் நடந்த சமயம் அவ்­வி­டத்தில் இல்லை என்­பது தொடர்­பாக தம்மால் நிரூ­பிக்­கப்­படும் எனவும் (டிவன்ஸ் ஓவ் அலிபாய்) மன்­றுக்கும் சட்­டமா அதி­ப­ருக்கும் அறி­யத்­த­ரப்­பட்­டி­ருந்­தது. இதனை தொடர்ந்து சாட்சி பதி­வுகள் ஆரம்­ப­மா­கின. இதன்­படி கண்ட சாட்­சிகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சாட்­சி­களும் சட்ட வைத்­திய அறிக்கை பிரேத பரி­சோ­தனை அறிக்கை குறித்த எதி­ரி­களை கைது செய்த பொலிஸ் அதி­கா­ரியின் சாட்சி போன்ற அனைத்தும் மன்றில் பதிவு செய்­யப்­பட்­ட­துடன் அவர்­க­ளது சாட்­சி­யங்கள் எதிர் தரப்பு சட்­டத்­த­ர­ணியால் குறுக்கு விசா­ர­ணை­களும் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றை­விட இவ் வழக்கில் சாட்­சி­யாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­வர்கள் தற்­போது உயி­ருடன் இல்­லாத நிலை­யிலும் அல்­லது அவர்கள் குறிப்­பிட்ட முக­வ­ரியில் இல்­லாத நிலையில் அவர்கள் நீதிவான் நீதி­மன்றில் வழங்­கிய சாட்­சி­யங்கள் மேல் நீதி­மன்ற வழக்கில் சான்று பொரு­ளாக இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு சட்­டமா அதிபர் திணைக்­கள அரச சட்­ட­வா­தி­யான நாக­ரட்ணம் நிஷாந்­தி­னு­டய நெறிப்­ப­டுத்­தலில் தொடர்ந்து வழக்கு விசா­ரணை நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­று­வந்­தி­ருந்­தன. அத்­துடன் நேற்­று­முன்­தினம் இவ் வழக்கு தொடர்­பாக அனைத்து சாட்­சிப்­ப­தி­வு­களும் தொகுப்­பு­ரையும் நிறை­வ­டைந்­தி­ருந்­த­துடன் நேற்­றைய தினம் தீர்ப்­புக்­காக வழக்­கா­னது எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

வழக்கின் சாரம்சம்  இதன்­படி நேற்­றைய வழக்­கிற்­கான தீர்ப்பின் போது யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் தனது தீர்ப்­பு­ரையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். இதன்­படி, 

குறித்த வழக்கில் 1ஆம், 2ஆம், 3ஆம் எதி­ரி­க­ளுக்கு எதி­ராக கடந்த 2001.11.28ஆம் திகதி நாரந்­தனை எனும் இடத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தில் சட்­டமா அதி­பரால் இரண்டு கொலை குற்­றச்­சாட்­டுக்­களும் பதி­னெட்டு பேரை படு­காயம் விளை­வித்த குற்றச் சாட்­டுக்­களும் மூன்று வாக­னங்­களை சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­பட்டு வழக்­கா­னது மேல் நீதி­மன்றில் பாரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி இவ் வழக்கில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட முதலாம் இரண்டாம் எதி­ரிகள் வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்று தற்­போது இங்­கி­லாந்தில் வசிப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச பொலிஸார் ஊடாக பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் இவர்கள் இன்றி வழக்கு நட­வ­டிக்­கை­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. அந்­த­வ­கையில் இவ் வழக்கு விசா­ர­ணை­யா­னது நேற்­று­முன்­தினம் அரச சட்­ட­வாதி மற்றும் எதிர் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக செய்­யப்­பட்ட தொகுப்­பு­ரை­க­ளுடன் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு நேற்­றைய தினம் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி இத் தீர்ப்­பா­னது 140பக்­கங்­களை கொண்­ட­தாக காணப்­படும் நிலையில் தீர்ப்பில் முக்­கி­ய­மான விட­யங்கள் எதி­ரி­க­ளுக்கும் விளங்க கூடிய வகையில் வாசித்து காட்­டப்­பட்­டது.

இதன்­படி இவ் வழக்கில் முக்­கிய சாட்­சி­யான சிவா­ஜி­லிங்கம் இவ் வழக்கின் முதலாம் மற்றும் மூன்றாம் எதி­ரிகள் முறையே நெப்­போ­லியன், ஜீவ­ராஜா ஆகி­யோரை பெயர் குறிப்­பிட்டு அடை­யாளம் காட்டி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அத்­துடன் தாக்­குதல் நட­வ­டிக்­கை­யின்­போது சாம்பல் நிற பிக்கப் வாக­னத்தில் மத­ன­ராசா என்­பவர் அவ் விடத்­திற்கு வந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ­ரு­டைய இச் சாட்­சி­யத்தை ஒப்­பு­றுதி செய்யும் வகையில் இரண்­டா­வது கண்­கண்ட சாட்­சி­யான கன­க­ரத்­தினம் விந்­த­னது சாட்­சியம் காணப்­பட்­டி­ருந்­தது. இவரும் எதி­ரி­க­ளது பெயர் குறிப்­பிட்டு அவர்­களை அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார். இதன்­படி மூன்­றா­வது எதிரி தற்­போது கூண்டில் இருப்­ப­தா­கவும் முதலாம் இரண்டாம் எதிரி தற்­போது கூண்டில் இல்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனை தொடர்ந்து மாவை சேனா­தி­ராசா சாட்­சி­ய­ம­ளிக்­கை­யிலும் எதி­ரி­க­ளது பெயர் குறிப்­பி­டப்­பட்டு சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் தனக்கும் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் இதில் சிவா­ஜி­லிங்கம் மோச­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ரவி­ராஜின் வாக­னத்­தி­லேயே தாம் வைத்­தி­ய­சா­லைக்கு வந்­தி­ருந்­த­தா­கவும் இதன்­போது கமல்ஸ்ரோன் ஏரம்பு பேரம்­பலம் ஆகியோர் உயி­ரி­ழந்­தி­ருந்­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் இவ்­வ­ழக்கில் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் என்­ப­வ­ரது சாட்­சி­யமும் மன்றால் முக்­கிய சாட்­சி­யாக கவ­னத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போ­திலும் அவ­ரது சாட்­சி­ய­மா­னது எதிர்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணியால் குறித்த விசா­ரணை செய்­யப்­படும் போது அவ­ரது சாட்­சி­யத்தை முறி­ய­டிக்கும் வகையில் அமை­ய­வில்லை என்­ப­தையும் மன்­றா­னது கவ­னத்தில் கொண்­டி­ருந்­தது. இத­னை­விட இவ் வழக்கில் முக்­கிய கண்­கண்ட சாட்­சி­யான அமரர் நட­ராஜா ரவிராஜ் என்­ப­வ­ரது சாட்­சி­ய­மா­னது நீதிவான் நீதி­மன்றில் பதிவு செய்­யப்­பட்டு அங்கு குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் அவ­ரது சாட்­சி­யத்தில் குறித்த எதி­ரி­க­ளான நெப்­போ­லியன் மத­ன­ராசா ஆகி­யோ­ரது பெயர் குறிப்­பி­டப்­பட்டு அடை­யாளம் காட்­டப்­பட்­டி­ருந்­தது. எனவே அவ­ரது சாட்­சி­யமும் இவ் வழக்கில் சான்­றாக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும் மாவை சேனா­தி­ரா­சாவின் மெய்ப்­பா­து­கா­வலர் வழங்­கிய சாட்­சி­யத்­திலும் மாவைக்கு தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இத் தாக்­குதல் சம்­ப­வத்தின் போது தாம் மாவை சேனா­தி­ரா­சாவை கட்­டிப்­பி­டித்த போதிலும் தாக்­கு­தல்­தா­ரிகள் தன்னை இழுத்து கீழே விழுத்தி விட்டு அவ­ருக்கு தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும் இதன்­போது மாவை சேனா­தி­ரா­சாவின் தலையில் இருந்து இரத்தம் வந்­ததை தாம் கண்­ட­தா­கவும் அவர் தனது சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். இவற்­றை­விட அமரர் ரவி­ராஜின் மெய்ப்­பா­து­கா­வ­லர்­களும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­த­துடன் குறித்த சம்­ப­வத்தில் கொலை செய்­யப்­பட்ட இரு­வ­ரது பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யிலும் காய­ம­டைந்­த­வர்­களின் சட்ட வைத்­திய அறிக்­கை­யிலும் மொட்­டை­யான ஆயு­தங்­க­ளான அல­வாங்கு போன்­ற­வற்றால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட காயங்கள் உள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­ட­துடன் மர­ணத்­திற்­கான கார­ணங்­களும் காயங்கள் தொடர்­பா­கவும் விரி­வாக கூறப்­பட்­டி­ருந்­தது.

இத்­தாக்­குதல் சம்­ப­வ­மா­னது ஊர்­கா­வற்­று­றைக்கு தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக சென்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரை திருப்பி அனுப்ப வேண்டும் என்­ப­தற்­காக அர­சியல் கட்­சி­யினால் நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வ­மாகும். ஆனால் இச் சம்­ப­வத்தால் அப்­பா­வி­யான ஆத­ர­வா­ளர்கள் மர­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் இத் தீர்ப்பில் எந்­த­வி­த­மான அர­சியல் சார்­பு­களும் உள்­வாங்­கப்­ப­ட­வு­மில்லை அதற்­கான தேவையும் இல்லை.

தற்­போது எதி­ரி­த­ரப்பு சார்பில் இவ் வழக்­கா­னது ஆரம்­பிக்­கப்­படும் போது குறித்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்ட நான்கு எதி­ரி­களும் சம்­பவம் இடம்­பெற்­ற­போது அச்­சம்­பவ இடத்தில் இல்லை என்­பதை நிரூ­பிப்­ப­தாக (டிவன்ஸ் ஓவ் அலிபாய்) அவர் தரப்பு சட்­டத்­த­ரணி குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் இவ் வழக்கின் முதலாம் இரண்டாம் எதி­ரிகள் சார்­பாக அவர்கள் மன்றில் முன்­னி­லை­யாகி தாம் இவ்­வி­டத்தில் நிற்­க­வில்லை என்­பது தொடர்­பாக சாட்­சி­யமும் வழங்­க­வில்லை. அவர்கள் தரப்பில் யாரும் மன்றில் முன்­னி­லை­யாகி அதனை நிரூ­பிக்­கவும் இல்லை. எனவே அவர்கள் தரப்பு டிவன்ஸ் ஓவ் அலிபாய் மன்­றினால் தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கின்­றது. இதில் மூன்­றா­வது எதிரி நீதி­மன்றில் சத்­தியம் கூறி சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தாம் சம்­பவ தினத்­தன்று காலை 9.30மணி­ய­ளவில் மனை­வியை ஊர்­கா­வற்­றுறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கூட்டி சென்று விட்டு அங்­கி­ருந்து காலை 10.30 அல்­லது 10.45மணி­ய­ளவில் சந்­தைக்கு சென்று மீன் வாங்­கிக்­கொண்டு வீடு சென்று சமைத்­துக்­கொண்­டி­ருந்­த­தா­கவும் பின்னர் வைத்­தி­ய­சா­லையில் இருந்து மனைவி 11.45 மணி­ய­ளவில் அல்­லது 12.00மணி­ய­ளவில் வீடு வந்து என்­னிடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஈ.பி.டி.பியி­ன­ருக்கும் மோதல் நடை­பெற்­ற­தாக ஆட்கள் கதைக்­கினம் என்று கூறி­ய­போ­துதான் எனக்கு இச் சம்­ப­வமே தெரியும் என தெரி­வித்­தி­ருந்தார். இதே கருத்­தையே அவர் சார்பில் சாட்­சி­ய­ம­ளித்த அவ­ரது மனை­வியும் கூறி­யி­ருந்தார். ஆனாலும் குறிக்­கப்­பட்ட மூன்­றா­வது எதிரி வைத்­தி­ய­சா­லையில் சென்று மீண்டும் மனைவி வீட்டில் காணும் இடைப்­பட நேரத்தில் அவர் எங்­கி­ருந்தார் என்­பதை அவ­ரது மனை­வியால் கூற­மு­டி­யாது. அத்­துடன் அவரும் அச்­ச­ம­யத்தில் அதா­வது அவ் இடைப்­பட்ட நேரத்தில் எங்­கி­ருந்தேன் என்­பதை நிரூ­பிக்­க­வில்லை. எனவே அவ­ரது சாட்­சி­யத்­தையும் மன்­றா­னது நிரா­க­ரிக்­கின்­றது.

இதே­வேளை இவ் வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட நான்­கா­வது எதி­ரி­யான நவ­சி­வாயம் கரு­ணா­க­ர­மூர்த்தி என்­பவர் இச் சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை என அரச சட்­ட­வா­தியும் தனது தொகுப்­பு­ரையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் அவ­ருக்கு எதி­ரான சிவா­ஜி­லிங்கம் மாத்­தி­ரமே சாட்­சி­ய­ம­ளித்­துள்ள நிலையில் அவ­ரது சாட்­சி­ய­மான ஏனைய பிறி­தொரு சாட்­சி­யத்தால் ஒப்­பு­றுதி செய்­யப்­ப­ட­வு­மில்லை. அத்­துடன் குறித்த எதிரி மன்றில் சத்­தியம் செய்து அளித்த சாட்­சி­யத்தில் தாம் சம்­பவ இடத்தில் நிற்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன் அதனை அவ­ரது வாகன சார­தியின் சாட்­சி­யி­னூ­டா­கவும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். எனவே அவர் இவ் வழக்கின் தொடர்­பு­பட்­டுள்ளார் என்­பது நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்பால் நிரூ­பிக்­கப்­ப­டா­ததால் அவர் இவ் வழக்கில் இருந்து விடு­தலை செய்­யப்­ப­டு­கின்றார்.

பரிந்­து­ரைகள்.

குறித்த வழக்கில் முதல் மூன்று எதி­ரி­களும் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்ள நிலையில் இதில் முதல் இரு எதி­ரி­களும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது வெளி­நாட்­டிற்கு தப்பிச் சென்­றுள்ள நிலையில் அவர்கள் இரு­வரும் அங்கு ஆடம்­பர வாழ்க்கை வாழ்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­துடன் நீதி­மன்ற தீர்ப்­புக்­க­ளா­னது முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டியும் உள்­ளது. எனவே குறித்த இரு­வ­ரையும் கைது செய்து இங்­கி­லாந்­திற்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான நாடு­க­டத்தும் ஒப்­பந்­தங்­க­ளூ­டாக இலங்­கைக்கு நாடு­க­டத்த வேண்டும் என்ற அடிப்­ப­டையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இவ் நீதி­மன்­ற­மா­னது பரிந்­து­ரை­களை முன்­வைக்­கின்­றது.

இதன்­படி இலங்கை ஜனா­தி­பதி இங்­கி­லாந்து பிர­தம மந்­தி­ரி­யுடன் இரா­ஜ­தந்­திர ரீதியில் தொடர்பு கொண்டு குறித்த இரு எதி­ரி­க­ளையும் நாடு கடத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என மன்­றா­னது ஜனா­தி­ப­திக்கு பரிந்­துரை செய்­கின்­றது. இலங்கை வெளி­நாட்டு அமைச்­சா­னது இங்­கி­லாந்து நாட்டு வெளி­நாட்டு அமைச்­சுடன் இரா­ஜ­தந்­திர தொடர்பை ஏற்­ப­டுத்தி குறித்த இரு­வ­ரையும் நாடு­க­டத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மன்­றா­னது பரிந்­துரை செய்­கின்­றது. அதே­போன்று இலங்கை சட்­டமா அதிபர் இங்­கி­லாந்து நாட்டு சட்­டமா அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு நாடு கடத்­து­வதில் உள்ள சட்ட சிக்­கலை நிவர்த்தி செய்து அவர்­களை உட­ன­டி­யாக எதி­ரிகள் இரு­வ­ரையும் நாடு கடத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என மன்­றா­னது பரிந்­துரை செய்­கின்­றது. வெளி­வி­வ­கார அமைச்­சி­னதும் நீதி­ய­மைச்­சி­னதும் செய­லா­ளர்கள் குறித்த எதி­ரிகள் இரு­வரும் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் வெளி­நாட்­டுக்கு தப்­பிச்­சென்­றமை தொடர்­பாக முழு­மை­யான அறிக்­கையை மூன்று மாத காலத்தில் மன்­றுக்கு சமர்­பிக்க வேண்டும் என பரிந்­து­ரைப்­ப­துடன் அவ்­வா­றில்­லா­து­விடின் குறிக்­கப்­பட்ட அமைச்சின் செய­லா­ளர்கள் மன்­றுக்கு அழைக்­கப்­பட்டு விளக்கம் கோரப்­ப­டு­வார்கள் என்­ப­தையும் மன்­றா­னது தெரி­விக்­கின்­றது. அத்­துடன் இங்­கி­லாந்­துக்­கான இலங்கை தூதுவர் அந்­நாட்டு உள்­நாட்டு அமைச்­சுடன் தொடர்­பு­கொண்டு இரு­வ­ரையும் நாடு­க­டத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் இவ் நீதி­மன்­றா­னது பரிந்­துரை செய்­கின்­றது. அத்­துடன் குறித்த இரு­வ­ருக்கும் தொடர்ந்தும் சர்­வ­தேச பொலிஸார் ஊடாக பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இதனை உட­ன­டி­யாக நட­மு­றைப்­ப­டுத்­து­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு மன்­றா­னது உத்­த­ரவு பிறப்­பிக்­கின்­றது.

எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி விண்­ணப்பம்

குறித்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள மூன்று எதி­ரி­க­ளுக்கும் அவர்­க­ளது குற்­றத்­திற்கு எதி­ராக வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் மர­ண­தண்­ட­னையை மன்­றா­னது மீள் பரி­சீ­லனை செய்து அத­னை­விட குறைந்த தண்­டனை வழங்­க­வேண்­டு­மென குறிப்­பிட்­டி­ருந்தார். ஏனெனில் இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தேச ரீதி­யான மனித உரிமைச் சட்டப் பிர­க­ட­னங்­களில் அவற்றை தமது நாட்­டிலும் நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்ற அடிப்­ப­டை­யிலும் ஒப்­பந்­தங்­களைச் செய்­துள்ள நிலையில் இம்­ம­ர­ண­தண்­டனைத் தீர்ப்பை மன்­றா­னது மீள் பரி­சீ­லனை செய்­ய­வேண்டும். 

சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்கை அர­சாங்­க­மா­னது மரண தண்­ட­னைக்கு எதி­ரான நாடு என்ற நிலைப்­பாட்டை வெ ளிப்­ப­டுத்தும் வகையில் இம்­ம­ரண தண்­டனைத் தீர்ப்பைக் குறைத்து அதற்குப் பதி­லாக வேறொரு தீர்ப்பை வழங்­கு­வ­த­னூ­டாக இலங்கை சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் நாக­ரி­க­மான நாடாக காட்­ட­மு­டியும் என்­ப­தோடு அதற்கு இந்­நீ­தி­மன்­றத்தின் இத்­தீர்ப்பு அடித்­த­ள­மாக அமை­ய­வேண்டும். அத்­துடன் குறித்த மூன்­றா­வது எதிரி உடல்­நிலை சீரின்மை என்­ப­தையும் இவர் சிறு­வ­ய­தி­லேயே தவ­றாக தலை­வர்­களால் வழி­ந­டத்­தப்­பட்டார் என்­ப­தையும் கருத்­தி­லெ­டுத்து மர­ண­தண்­ட­னைக்கு குறை­வான தீர்ப்பை வழங்­க­வேண்டும் என எதிர்த் தரப்பு சட்­டத்­த­ரணி றெமீ­டியஸ் குறிப்­பிட்டார்.இரட்டை மரண தண்­ட­ணையும்  

20 வருட கடூ­ழிய சிறையும்

குறித்த வழக்கில் சட்­டமா அதிபர் 1தொடக்கம் 24வரை­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளாக சட்­ட­வி­ரோ­த­மாக கூட்டம் கூடிய குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஆனாலும் சட்­ட­வி­ரோ­த­மாக கூட்டம் கூடி­ய­மைக்கு ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்டோர் காணப்­பட வேண்டும் என சட்டம் கூறும் நிலையில் இவ் வழக்கில் நான்கு பேரே எதி­ரி­க­ளாக கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டில் இருந்து நான்கு எதிரிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர். எனினும் குறித்த மூன்று எதிரிகளும் 25ஆவது குற்றச்சாட்டாக பொது எண்ணத்துடன் ஏரம்பு பேரம்பலம் என்பவரை மூன்று எதிரிகளும் எனைய 50 அல்லது 60பேரூடன் இணைந்து கொலை செய்தமை 26ஆவது குற்றச்சாட்டாக ஜோகலிங்கம் கமல்ஸ்ரோன் என்பவரையும் குறித்த மூன்று எதிரிகளும் அவர்களோடு இணைந்து 50 அல்லது 60 பேர் கொலை செய்தமை மற்றும் சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா ஆகியோர் உட்பட பதினெட்டு பேரை காயப்படுத்தியமை போன்ற எனைய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக மன்றினால் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே குறித்த மூன்று எதிரிகளான நெப்போலியன், மதனராசா, ஜீவராஜா ஆகிய மூவரும் மாவை சேனாதிராசாவை படுகாயம் ஏற்படுத்தியமைக்காக 5ஆண்டுகள் கடுழிய சிறைத் தண்டனையும் 10ஆயிரம் ரூபா தண்டமும் கட்ட தவறின் 6மாத கால கடுழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. அதேபோன்று சிவாஜிலிங்கத்திற்கு குறித்த மூன்று எதிரிகளும் படுகாயம் விளைவித்தமைக்கு 5ஆண்டு கால கடழிய சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபா தண்டமும் செலுத்த தவறின் 6மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. இவற்றைவிட குறித்த மூன்று எதிரிகளும் இச் சம்பவத்தில் இருவரை படுகொலை செய்தமை மற்றும் எனையோருக்கு காயம் ஏற்படுத்தியமை வாகனங்களை சேதப்படுத்தியமை போன்ற அனைத்திற்குமாக இரட்டை மரண தண்டனையும் 20வருட கால கடூழிய சிறைத்தண்டனையும் 1இலட்சம் ரூபா தண்டப்பணமும் செலுத்த தவறின் 5ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் விதிப்பதுடன் இவ் தண்டனைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது சிறைத்தண்டனையாக குறைக்கப்படினும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் இவ் நீதிமன்றம் எதிரிகளுக்கு தீர்ப்பளிக்கின்றது.

மேலும் குறித்த மரண தண்டனையானது ஜனாதிபதியால் அவர் விரும்புகின்ற இடத்தில் அவர் விரும்பும் நேரத்தில் எதிரிகளின் கழுத்தில் சுருக்கிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு இவர்களது உடலில் இருந்து உயிரை பிரிக்குமாறு இந்நீதிமன்றானது தீர்ப்பளிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்பெழுதிய பேனையை முறித்தெறித்து மின்சாரத்தை துண்டித்து உத்தரவிட்டார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-08#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.