Jump to content

வட மாகாண சபையின் கல்வி மீளாய்வு வழங்கும் படிப்பினைகள்


Recommended Posts

வட மாகாண சபையின் கல்வி மீளாய்வு வழங்கும் படிப்­பி­னைகள்

4-9699f0c3ab7d70e228bc3fbf16db38a7fba1eb4c.jpg

 

வட­மா­காண கல்வி அமைச்சு 2014 ஆம் ஆண்டில் ஒரு பிர­தான பணியைச் செய்­தது. இத்தகைய ஒரு பணியை ஏனைய மாகாண சபைகள் எதுவும் செய்­ய­வில்லை. அதி­காரப் பர­வ­லாக்கல் செயற்­பாட்டின் கார­ண­மாக அர­சியல் யாப்பின் 13 ஆவது திருத்­தத்­தின்­படி கல்வி தொடர்­பான பல அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளிடம் வழங்­கப்­பட்­டன. 350 தேசிய பாட­சா­லைகள் தவிர்ந்த ஏனைய 9700 பாட­சா­லை­களும் மாகாண சபை­களின் அதி­கா­ரத்தின் கீழ் வரு­கின்­றன. மத்­திய அரசு தேசியக் கல்விக் கொள்கை, பாட­சாலைக் கலைத் திட்டம், பாட­நூல்கள் போன்ற பல­வற்­றுக்குப் பொறுப்பு வகித்­தாலும் மாகா­ணங்­களின் கல்வி முன்­னேற்றம் மாகாண சபை­க­ளு­டைய பொறுப்­பாக உள்­ளது.

இப்­பின்­பு­லத்தில் வட­மா­காண கல்வி அமைச்­சா­னது 2014 ஏப்ரல் மாதத்தில் வட­மா­கா­ணத்தின் கல்வி முறை பற்­றிய மீளாய்­வொன்றைச் செய்­தது. 30 ஆண்டு யுத்­தத்தின் பின் கல்வி முறையை ஆராய்ந்து புன­ர­மைப்புச் செய்யும் ஒரு பாரிய முயற்­சி­யாக இது அமைந்­தது. இந்த மீளாய்­வுக்­கான கருத்­த­ரங்கு கல்வி முறையின் செயற்­பா­டுகள், குறை­பா­டுகள் மற்றும் விதி­மு­றை­களை விரி­வாக ஆராய்ந்­தது.

இந்த மீளாய்வுச் செயற்­பாட்­டுக்­கான வச­திப்­ப­டுத்­து­ந­ராகச் செயற்­பட்­டவர் கலா­நிதி என். எதிர்­வீ­ர­சிங்கம். வட­மா­கா­ணத்தின் கல்வித் துறைக்கு ஆலோ­ச­க­ராக விளங்கும் இவர் நியூயோர்க் மற்றும் கலி­போர்­னி­யாவில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி கற்று உயர் பட்­டங்­களைப் பெற்­றவர். யுனெஸ்­கோவின் சிறப்பு ஆலோ­ச­க­ராகப் பணி­யாற்­றிய இவர் ஆசி­ரியர் கல்வித் துறையில் நீண்ட காலம் பணி­யாற்­றி­யவர். அத்­துடன் ஆசிய விளை­யாட்டுப் போட்­டியில் தங்கப் பதக்கம் பெற்­றவர். ஒலிம்பிக் விளை­யாட்டு வீரர். இந்த மீளாய்வுப் பணி­யை­யிட்டு இவர் பாராட்­டுக்­குரி­யவர்.

இந்த மீளாய்­வையும் எதிர்­கா­லத்­துக்­கான கல்வி தொடர்­பான பரிந்­து­ரை­களைச் செய்­த­வர்கள் கல்­விசார் நிபு­ணர்கள் மட்­டு­மல்ல. மாண­வர்கள் ஆசி­ரி­யர்கள், பாட­சாலை அதி­பர்கள், வலயப் பணிப்­பா­ளர்கள், பொது மக்கள் எனப் பலரும் (400 பேர்­வரை) தமது கருத்­துக்­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் அனுப்­பி­யி­ருந்­தனர். இவர்கள் யாவரும் பங்கு கொண்­ட­மையால் கல்வி அமைச்சின் அணு­கு­முறை ‘கீழி­லி­ருந்து மேலா­ன­தாக’ (Bottom –up) அமைந்­தி­ருந்­தது. மற்­றொரு சிறப்­பம்சம் இம் மீளாய்வுச் செயற்­பாடு மிகக் குறைந்த செலவில் (30 இலட்சம் ரூபா) செய்­யப்­பட்­ட­மை­யு­மாகும்.

அப்­போது நாட்டின் கல்வி அமைச்­ச­ராக இருந்த பந்­துல குண­வர்­த­னவும் கல்வி அமைச்சின் செய­லாளர், மேல­திக செய­லாளர் முத­லிய அதி­கா­ரி­களும் இச் செய­ல­மர்வில் கலந்து கொண்­டனர். இது வட­மா­காண சபை மத்­திய அர­சுடன் தொடர்­பு­களை மேம்­ப­டுத்த உத­வி­யது. அத்­துடன் வட ­மா­காண கல்விப் பிரச்­சி­னைகள் பற்­றிய புரிந்­து­ணர்வு தென்­னி­லங்­கையில் ஏற்­ப­டவும் உத­வி­யது. முக்­கிய மாக தேசிய கல்விக் கொள்­கை­களை உரு­வாக்கும் அதி­கா­ரத்தைக் கொண்ட மத்­திய அரசு, வட­ம­ாகா­ணத்தின் கல்விச் சிந்­த­னை­களை உள்­வாங்­கவும் இச் செய­ல­மர்வு ஒரு வாய்ப்­பினை வழங்­கி­யது. வட­மா­காண கல்வி மீளாய்வு செய­ல­மர்வின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த மத்­திய கல்வி அமைச்சின் உதவி முக்­கி­ய­மா­னது. செய­ல­மர்வின் போது கலந்து கொண்ட மத்­திய கல்வி அமைச்சின் மேல­திக செய­லாளர் பரிந்­து­ரை­களில் 90 சத­வீ­த­மா­ன­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆய்­வ­றிக்­கையின் பண்­புகள்

பதி­னைந்து பிர­தான தலைப்­பு­களில் வட­மாகாணக் கல்வி நிலை மிகவும் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஆசி­ரியர், மாணவர், கல்வி நிர்­வாகம், மாணவர் மற்றும் ஆசி­ரி­யர்­களின் உள­நலன் கற்­பித்தல், கற்றல், பரீட்­சைகள் தனியார் போதனை நிலை­யங்கள், நிய­ம­னங்கள், பதவி உயர்வு, இட­மாற்றம், ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி, தொடர்­கல்வி, தமிழ் மொழி வழிக் கல்வி நிறு­வகம், புதிய பாட­சாலை நிர்­வாகம் எனப் பல தரப்­பட்ட விட­யங்கள் 15 அத்­தி­யா­யங்­களில் ஆரா­யப்­பட்­டுள்­ளன. (180 பக்­கங்கள்) அனே­க­மாக பாட­சாலைக் கல்வி தொடர்­பான சகல விட­யங்­களும் ஆரா­யப்­பட்­டன. மத்­திய அரசின் கீழ்­வரும் கலைத் திட்டம், ஆசி­ரியர் கல்வி, பாட­நூல்கள் போன்ற விட­யங்கள் தவிர ஏனை­யவை யாவும் விரி­வான மீளாய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன.

இவ்­வ­றிக்­கையின் சிறப்­பம்­சங்­களைப் பின்­வ­ரு­மாறு தொகுத்துக் கூறலாம் :

அறிக்­கையின் அமைப்பு சர்­வ­தேச அறிக்­கைளின் பல பண்­பு­களைக் கொண்­டுள்­ளது. வெளி­நாட்டுக் கல்வி நிபு­ணர்­களின் கை வண்­ணத்தை ஒவ்­வொரு அத்­தி­யா­யங்­க­ளிலும் காண முடி­கின்­றது.

உல­க­ளா­விய ரீதியில் கல்வித் துறையில் பயன்­ப­டுத்­தப்­படும் பல புதிய எண்ணக் கருக்­களின் அடிப்­ப­டையில் இந்த மீளாய்வு அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாகப் பல்­வகை விவேகம் பரி­சோ­தனை முறைக் கற்­பித்தல், சுய­கற்றல் மாண­வரின் உள­நலன் போன்ற விட­யங்கள்

* 15 பிர­தான அத்­தி­யா­யங்­க­ளுக்கு அப்பால் பல தக­வல்­க­ளையும் எண்ணக் கருக்­க­ளையும் உள்­ள­டக்­கிய 11 பின்­னி­ணைப்­புகள் அறிக்­கையில் காணப்­ப­டு­கின்­றன. இவை பல முக்­கிய தக­வல்­களைத் தரு­கின்­றன.

* அவ்­வாறே அறிக்­கையில் தரப்­பட்­டுள்ள ஏரா­ள­மான அட்­ட­வ­ணை­களும் உருக்­களும் வழங்கும் தக­வல்­களும் ஏராளம்.

* அறிக்­கையில் தரப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களும் மீளாய்வு அணுகுமுறை­களும் நாட்டின் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கும் ஒரு பிர­தான படிப்­பி­னை­யா­கவும் வழி­காட்­டி­யா­கவும் உள்­ளன.

* பல பரிந்­து­ரைகள் வட­மா­கா­ணத்­துக்கு மட்­டு­மின்றி முழு நாட்­டுக்கும் பொருத்­த­மு­டை­ய­தாக விளங்­கு­கின்­றன. உதா­ர­ணமாக உடல் ரீதி­யான தண்­ட­னைகள் தடை செய்­யப்­படல் வேண்டும் என்ற பரிந்­துரை, சகல தக­வல்­க­ளையும் கொண்ட கல்வி முகா­மைத்­துவ தகவல் முறைமை பற்­றிய பரிந்­துரை, 16 வய­துக்கு மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு தொடர் கல்வி பாட­சா­லை­களை அமைத்தல் போன்­றன.

* எவ்­வா­றா­யினும் நாடெங்­கி­லு­முள்ள தமிழ் மொழி வழிப் பாட­சா­லை­களில் கலைத் திட்டம், பாட நூல்கள் ஆசி­ரியர் பயிற்சி என்­ப­வற்­றுக்­கான ஒரு தனி­யான நிறு­வ­னத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற பரிந்­துரை மிகவும் துணிச்­ச­லா­னதும் பொருத்­த­மா­னதும் ஆகும்.

* மொத்­தத்தில் தேசி யக் கல்வி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­க­ளோடு (1991, 2003) ஒப்­பி­டும்­போது இவ்­வ­றிக்­கையும் அவை போன்றே சம அள­விலும் அதற்கும் அதி­க­மா­கவும் கல்வித் துறையில் ஈடு­பா­டு­டை­ய­வர்­க­ளுக்கு ஒரு சிறந்த உசாத்­து­ணை­யா­கவும் சிந்­தனைக் களஞ்­சி­ய­மா­கவும் அமைந்­துள்­ளது.

இவ்­வ­றிக்­கையின் ஒரு பிர­தான அம்சம் பொது மக்­களும் பாட­சாலைக் கல்­வி­யோடு தொடர்­பு­டை­ய­வர்­களும் வழங்­கிய கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் 10 பக்­கங்­களில் முறை­யாகத் தொகுத்துத் தந்­தி­ருக்­கின்ற பாங்­காகும்.

படிப்­பினை

இந்த அறிக்­கை­யா­னது மற்­றொரு பெரும் முக்­கி­யத்­து­வத்தைக் கொண்­டது. மாகாண சபைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு பாட­சாலைக் கல்விப் பொறுப்பு அவற்­றிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு 3 தசாப்த காலம் ஆகி­விட்­டது. ஆனால் இத்­த­கைய மீளாய்வு முயற்சி இத்­த­கைய முறையில் எங்கும் செய்­யப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. வட­மா­காண சபை இவ்­வி­ட­யத்தில் ஒரு சிறந்த முன்­னு­தா­ர­ண­மாக அமைந்து ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு ஒரு வழி­காட்­டி­யாக அமைந்­துள்­ளமை ஒரு குறிப்­பிட்ட சாதனை என்றே சொல்ல வேண்டும்.

வட­மா­காண சபையின் மீளாய்வு அறிக்­கை­யினால் பெரிதும் கவ­ரப்­பட்ட தேசியக் கல்வி ஆணைக்­குழு நாட்­டி­லுள்ள ஏனைய 8 மாகா­ணங்­களும் தமது பிர­தே­சங்­களில் இத்­த­கைய மீளாய்­வொன்றைச் செய்ய வேண்டும் என ஆர்வம் கொண்­டது. அதன் கார­ண­மாக தே.க. ஆணைக்­குழு ஒன்­பது மாகா­ணங்­களின் கல்வி அமைச்­சர்கள், கல்வித் துறை அதி­கா­ரி­களைக் கொண்ட மா­நாடு ஒன்றை நடத்­தி­யது. இம் மா­நாட்டில் வட­மா­காணக் கல்வி அமைச்­ச­ரான குரு­குலராஜாவும் மற்றும் கல்வி அதி­கா­ரி­களும் கலந்துகொண்­டனர்.

சென்ற அக்­டோபர் மாதம் ஏழாம் திகதி இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடந்த இச் செய­ல­மர்வில் வட­மா­காணக் கல்வி மீளாய்வு அறிக்கை ஏனைய மாகா­ணங்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இது போன்ற ஆய்­வு­களை அவர்­களும் மேற்­கொள்ள வேண்­டு­மென்று வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. வட­மா­காண கல்வி மீளாய்வு அறிக்­கையின் உள்­ள­டக்­கமும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. ஏனைய மாகா­ணங்கள் இவ்­வா­றான அறிக்­கை­களைத் தயா­ரிப்­ப­தற்­கான முறை­யியல், அதற்­கான வள­வா­ளர்கள் பற்­றியும் ஆரா­யப்­பட்­டது.

வட­மா­காணக் கல்வி அமைச்சர் குரு­கு­ல­ராஜா­வும் யாழ். பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் சர்­வேஸ்­வ­ரனும் தாங்கள் மீளாய்வு அறிக்­கையைத் தயா­ரிக்க மேற்­கொண்ட வழி முறை­களைப் பற்றி விரி­வாக உரை­யாற்­றினர். வழி­காட்டல் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு தகவல்கள் திரட்­டப்­பட்­டமை, அவற்றின் அடிப்­ப­டையில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்ட வழி­முறை இம் மீளாய்­வுக்குத் திரட்­டப்­பட்ட நிதி வளங்கள் போன்ற விட­யங்கள் விளக்­கப்­பட்­டன.

வட­மா­காணக் கல்வி மீளாய்வுச் செயற்­பாட்­டி­னூ­டாகப் பெறப்­பட்ட அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் ஏனைய மாகா­ணங்­க­ளுக்கும் வழி­காட்டற் குழுக்­களை நிய­மிப்­பது என்றும் மீளாய்­வுக்­கான வேலைத் திட்டம் ஒன்றை மாகா­ணங்கள் ஒன்­றரை மாத காலத்­திலும் வரைந்து கொள்­வ­தென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

செயற்­றிட்­டத்தை ஆராய்ந்து திருத்­தங்­களை மேற்­கொள்ளக் கல்வி வலய மட்­டத்தில் குழுக்­களை அமைத்தல், தேவை­யான மனித மற்றும் நிதி வளங்­களைத் திரட்­டுதல், வழி­காட்டற் குழுக்­களின் உத­வி­யுடன் செயற்­றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி மாகாணக் கல்வி முறையின் மீளாய்வு அறிக்­கையைத் தயா­ரித்தல், ஒவ்­வொரு மாகா­ணத்தின் கல்வி மேம்­பாட்­டுக்கும் தேவை­யான கொள்கைப் பரிந்­து­ரை­களைத் தயா­ரித்தல், இவை அனைத்து மாகா­ணங்­களின் பரிந்­து­ரை­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசியக் கல்வி முறைக்­கான அறிக்கை ஒன்றைத் தயா­ரித்தல் இவையே இச் செய­ல­மர்வில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­க­ளாகும்.

வட­மா­காண மீளாய்வின் தனிச் சிறப்பு

இம்­மீ­ளாய்வு வட­மா­கா­ணத்தின் எதிர்­காலக் கல்வி வளர்ச்­சிக்­கான ஒரு கல்வித் திட்­டத்தை முன்­வைக்­கின்­றது. ‘ஆராய்ச்­சி­யி­னூ­டாக அபி­வி­ருத்தி’ காணும் நவீன அணு­கு­முறை பின்­பற்­றப்­பட்­டுள்­ளது. அத்­துடன் மேல் மட்டத் திட்­ட­மிடல் வல்­லுநர் அடிமட்டக் கருத்­துக்­க­ளையும் உள்­வாங்கி Bottom – up முறையில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இம் மீளாய்வின் கார­ண­மாக ஏனைய மாகா­ணங்­களும் தமது கல்வி முறை தொடர்­பான மீளாய்­வு­களைச் செய்ய ஊக்­கு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அவ்­வ­கையில் மாகாண மீளாய்வுக் குழு நாட்டுக்கும் எட்டு மாகாணங்களுக்கும் ஒரு முன்னோடியாக உந்துச் சக்தியாக அமைந்துள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க விடயம்.

வட­மா­காண சபையின் பல்­வேறு முன்­னெ­டுப்­பு­களும் தலை­வரின் சிந்­த­னை­களும் உரை­களும் சரி­வரப் புரிந்து கொள்­ளப்­ப­டாது பேரின சிந்­த­னை­யா­ளர்­களின் தர்க்­கத்துக் கொவ்­வாத விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளாகி உள்ள நிலையில் வட­மா­காண சபையின் மீளாய்வு தெற்கில் கூர்ந்து நோக்­கப்­பட்­டுள்­ளமை ஒரு குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­ற­மாகும். இப்­பின்­பு­லத்தில் இத்­த­கைய நற்­ப­ணிகள் தென்­னி­லங்கை மக்­களைச் சரி­யாகச் சென்­ற­டைய இச் செய­ல­மர்வு கார­ண­மாக அமைந்­துள்­ளது என்­பது ஒரு பிர­தான விடயம்.

இதற்­கெல்லாம் உறு­து­ணை­யாக அமைந்­தவர் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேரா­சி­ரியர் லக் ஷ்மன் ஜய­திலக ஆவார். அவரே வட மாகாண அறிக்­கையின் முக்­கி­யத்­து­வத்தை நன்­றாகப் புரிந்து கொண்­டவர். அவ்­வ­றிக்கை தயா­ரிக்­கப்­படக் கையா­ளப்­பட்ட முறை­யினைத் தென் மாகா­ணங்­க­ளுக்கு அவர்­களே (கல்வி அமைச்சர் குரு­கு­ல­ரா­ஜாவும் சகாக்­களும்) அறி­வு­றுத்த வேண்டும் எனக் கரு­தினார். அதன் கார­ண­மா­கவே இச் செய­ல­மர்வை அவர் ஒழுங்கு செய்து வட, தென் தரப்­பி­னரைச் சந்­தித்து கலந்துரையாட சகல ஏற்பாடுகளையும் செய்தார். இப்புத்தாக்க முயற்சிக்குரிய சகல பாராட்டுகளும் அவருக்கே உரியன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-06#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.