Jump to content

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம்


Recommended Posts

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம்

 

 
william_3099604f.jpg
 
 
 

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் நியூஸிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் விளையாடக்கூடும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதல் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 164 ரன்கள் விளாசி அணியின் ஒட்டுமொத்த ரன்குவிப்பில் முக்கிய பங்காற்றினார். இன்றைய ஆட்டத்தி லும் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

நியூஸிலாந்து தொடக்க வீரரான மார்ட்டின் குப்தில் கடந்த ஆட்டத் தில் தனிநபராக போராடினார். 102 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்த அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணை யாக ரன் சேர்க்க தவறினர்.

கடைசி கட்டத்தில் ஓவருக்கு 9 ரன்கள் விகிதம் தேவைப்பட்ட நிலையில் காலின் முன்ரோ, மேட் ஹென்றி ஜோடி அதிரடியாக விளையாடியது. ஆனால் இவர்களை 44 ஓவரில் கம்மின்ஸ் வெளியேற்றியதால் தோல்வி தவிர்க்க முடியாததாக அமைந்தது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுகிறது. கான்பரா மைதானம் வழக்கமாகவே ரன் குவிப்புக்கு சாதகமானதுதான். எனினும் இங்கு நடைபெற்ற கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஆரோன் பின்சுக்கு கான்பரா மைதானம் மிகவும் ராசியானது. கடைசியாக அவர் இங்கு விளை யாடிய 3 ஆட்டங்களில் இரு சதங் கள் அடித்துள்ளார். சிட்னி ஆட்டத் தில் டக்-அவுட் ஆன அவர் இன்று ரன்வேட்டை நிகழ்த்தக்கூடும்.

இரு அணியிலும் இன்று சிறு மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டி தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ் வெல் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியில் கடந்த ஆட்டத்தில் அறிமுக பந்து வீச்சாளராக விளையாடிய பெர்குசன் நீக்கப்படக்கூடும். சிட்னி போட்டியில் அவர் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 73 ரன்களை வாரி வழங்கியிருந்தார். மேலும் 4 நோ பால்கள் வீசி, 4 ப்ரீஹிட்டுகளையும் தாரை வார்த்தார். இதனால் பெர்குசன் நீக்கப்பட்டு டிம் சவுத்தி சேர்க்கப்படக்கூடும்.

மேலும் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் ஹென்றி நிக்கோல்ஸ் அணியிடம் இடம் பெற வாய்ப்புள்ளது. இன்றைய ஆட்டம் வில்லியம்சனுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இதனால் அவர் மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது.

http://tamil.thehindu.com/sports/2வது-ஒருநாள்-போட்டியில்-இன்று-மோதல்-பதிலடி-கொடுக்குமா-நியூஸிலாந்து-வில்லியம்சனுக்கு-100வது-ஆட்டம்/article9412271.ece

Australia 182/1 (33.1 ov)
New Zealand
New Zealand won the toss and elected to field
Link to comment
Share on other sites

இரண்­டா­வது போட்­டி­யிலும் ஆஸி.க்கு இல­குவான வெற்றி
2016-12-06 21:56:15

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக கென்­பெ­ராவில் இன்று நடை­பெற்ற இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 116 ஓட்­டங்­களால் அவுஸ்­தி­ரே­லியா அபார வெற்­றி­யீட்­டி­யது.

 

21108603671-01-02.jpg

 

சிட்­னியில் இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் நியூ­ஸி­லாந்தை 68 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்ட அவுஸ்­தி­ரே­லியா இன்றைய வெற்­றி­யுடன் 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இப்­போ­தைக்கு 2 – 0 என தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

 

இரண்­டா­வது போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த அவுஸ்­தி­ரே­லியா அதன் ஆரம்ப வீரர் டேவிட் வோர்­னரின் பத்­தா­வது சர்­வ­தேச ஒரு நாள் சதத்­துடன் 50 ஓவர்­களில் 5 விக்­கட்­களை மாத்­திரம் இழந்து 378 ஓட்­டங்­களைக் குவித்­தது.

 

முத­லா­வது போட்­டியில் சதம் குவித்த ஸ்டீவன் ஸ்மித் இப் போட்­டியில் அரைச் சதம் ஒன்றைப் பெற்­ற­துடன் டேவிட் வோர்­ன­ருடன் இரண்­டா­வது விக்­கட்டில் 145 ஓட்­டங்­களைப் பகிர்ந்தார்.

 

இவர்­க­ளை­விட ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ் ஆகி­யோரும் அரைச் சதங்­களைப் பெற்­றனர். சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் டேவிட் வோர்னர் இவ் வருடம் இது­வரை 6 சதங்கள் குவித்­துள்ளார்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து 47.2  ஓவர்­களில் சகல விக்­கட்­க­ளையும் இழந்து 262 ஓட்­டங்­களைப் பெற்று தொல்­வியைத் தழு­வி­யது.

 

தனது 100 ஆவது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய அணித் தலைவர் கேன் வில்­லி­யம்­ச­னுடன் ஜேம்ஸ் நீஷாம் மூன்­றா­வது விக்­கெட்டில் 125 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அவுஸ்­தி­ரே­லி­ய­ருக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­ய­போ­திலும் நீஷாம் ஆட்­ட­மி­ழந்த பின்னர் நியூ­ஸி­லாந்தின் எதிர்­பார்ப்பு தவி­டு­பொ­டி­யா­னது.

 

எண்­ணிக்கை சுருக்கம்

 

அவுஸ்­தி­ரே­லியா 50 ஓவர்­களில் 378 – 5 விக். (டேவிட் வோர்னர் 119, மிச்செல் மார்ஷ் 76 ஆ.இ., ஸ்டீவன் ஸ்மித் 72, ட்ரவிஸ் ஹெட் 57, டிம் சௌதி 63 – 2 விக்.)

 

நியூஸிலாந்து 47.2 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 262(கேன் வில்லியம்சன் 81, ஜேம்ஸ் நீஷாம் 74, மார்ட்டின் கப்டில் 45, பெட் கமின்ஸ் 41 –  4 விக்.) 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21108#sthash.FIQuz24i.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.