Jump to content

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! சோகத்தில் தமிழகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார்.

அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு, அப்பல்லோ மருத்துவமனைக்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

மேலும் வதந்திகள் பரவியதை அடுத்து, பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்நிலையில் மருத்துவர்கள் முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சைப் அளித்து வந்தனர். தொடர் கண்காணிப்பில் ஜெயலிலதா வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்றைக்கு விரைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவனைக்குச் சென்ற அவர் பத்து நிமிடங்களில் மருத்துமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்றைய தினம் அப்பல்லோ நிர்வாகக் குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/politics/01/127127

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! சோகத்தில் தமிழகம்! பதற்றமான தமிழகத்தின் நேரலைக்காட்சிக்கள்

 

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார்.

அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு, அப்பல்லோ மருத்துவமனைக்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

மேலும் வதந்திகள் பரவியதை அடுத்து, பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்நிலையில் மருத்துவர்கள் முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சைப் அளித்து வந்தனர். தொடர் கண்காணிப்பில் ஜெயலிலதா வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்றைக்கு விரைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவனைக்குச் சென்ற அவர் பத்து நிமிடங்களில் மருத்துமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்றைய தினம் அப்பல்லோ நிர்வாகக் குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

Violence breaks out at Apollo Hospitals in Chennai after TV channels announced that Tamil Nadu Chief Minister Jayalalithaa has died. There's has been no official confirmation yet. The AIADMK flag is at half-mast at party HQ. 

However, some channels have retracted their earlier reports of her death.

Apollo tweets that team of doctors continuing to provide life saving care.PbQWFgHSiHYAAAAASUVORK5CYII=

 

Hundreds of party supporters were seen around the hospital. AIADMK leaders, MLAs and key executives, including the Chief Secretary, were present on the hospital premises.

According to sources, the AIADMK leaders will be meeting at the party office around 6 p.m.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் சற்றுமுன் காலமானார்

தமிழக முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் பழம்பெரும் நடிகையுமான செல்வி ஜயலலிதா ஜெயராம் அவர்கள்  சென்னை அப்போலோ தனியார் வைத்தியசாலையில் கடந்த ஏழு வாரங்கழுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சற்றுமுன் காலமானார். 

அவரது ஆட்ட்சிக்காலத்தில் ஈழத்தமிழர்களது சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்கள்மீது நிகழத்தப்பட்ட இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம் ஆகியவை தொடர்பாக தமிழக சட்டசபையில் காத்திரமான தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தின் இரும்புப்பெண் என அரசியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களது ஆளுமைகளுடன் கூடிய அரசியல் தலைமை இனிவரும் காலங்களில் தமிழகத்தில் கிடைப்பது சந்தேகமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒரு நடிகையாக எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த இரும்பு பெண்மணி#ஆழ்ந்த இரங்கல்கள் 1f641.png

Link to comment
Share on other sites

ஜெயலலிதா குறித்து பரவும் வதந்தி... தொடரும் சிகிச்சை!

ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை. அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது, தலைமைச் செயலக கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று செய்திகள் வந்தன.ஆனால், தற்போது அவை மீண்டும் ஏற்றப்பட்டு இருக்கின்றன.தமிழக பொறுப்பு ஆளுநரோ, அப்போலோ நிர்வாகமோ  இன்னும் எந்த தகவலையும் ஊர்ஜிதப்படுத்தவில்லை. மேலும் சிகிச்சைகள் தொடர்கிறது என்று அப்போலோ தரப்பில் தகவல் வருகிறது...!. அப்போலோவின் சங்கீதா ரெட்டி அளித்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில் , ' ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தொடர்கிறது' என அறிவித்துள்ளார்

 

http://www.vikatan.com/news/tamilnadu/74242-apollo-and-aiims-continue-to-provide-all-life-saving-measures.art

Link to comment
Share on other sites

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

 
 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்று முன்னர் ( திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு) காலமானார். அவருக்கு வயது 68. முன்னதாக, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக ஜெயலலிதாஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறன்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

ஜெயலலிதா காலமானார்

 ஜெயலலிதா காலமானார்

சில நிமிடங்களுக்கு முன்னதாக, ஜெயலலிதா காலமான செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து, அப்போலோ மருத்துவமனை முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் கதறியழுததை காண முடிந்தது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

http://www.bbc.com/tamil/india-38209176

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி காலமானார்

 

 
jayalalaithaa

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி இன்று காலமானார்.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது. பின் நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றிய அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கார்டியாலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். நன்கு குணமடைந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்தது.  முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து உயிர்பாதுகாப்பு சிகிச்சைகள் தொடர்வதாகவும், அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும் உயர் சிகிச்சை எதுவும் பலன் அளிக்காமல் இதயம் செயல் இழந்ததால் அவர் உயிர் பிரிந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:

* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.

* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.

* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.

* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.

* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது

* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.
http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்

 

 

 

jayalalithaa_23420.jpg
  

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

28_23356.jpg

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.

Jaya_7_23536.jpg

அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.

Jaya_8_23159.jpg

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் துக்கத்தில் விகடனும் பங்கெடுக்கிறான். 
    

ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

http://www.vikatan.com/news/jayalalithaa/74256-tamil-nadu-chief-minister-selvi-j-jayalalithaa-is-no-more.art

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ஒருமாதிரி திருவிளையாடல் முடிந்தது 
....ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் வழியில் ஏழைகளின் ஏந்தலாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா!

 

Jayalalithaa_001_00256.png

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர், கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கியது முதல், கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சாமான்ய மற்றும் ஏழை-எளிய மக்களும், குறிப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்து, அவருக்கு மகத்தான ஆதரவை அளித்தனர்.

ஏழை-எளிய மக்களும், ரசிகர்களும் அளித்த பேரன்பு, எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காதது. திரையுலகில் அளித்த பேராதரவைக் காட்டிலும், அரசியலில் தம்மை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த சாமான்ய மக்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? என்று பல நாட்கள் இரவு, பகலாக எம்.ஜி.ஆர் யோசித்ததன் விளைவாகவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

சத்துணவுத்திட்டம், வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ஏழை மக்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு தடையில்லா இலவச மின்சாரம் என்று, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்தி வைத்த, சாமான்ய மக்களின் நலனில் அன்றாடம் அக்கறை கொண்டு, தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர்.Jayalalitha_Rare_8_1_00575.jpg

கடந்த 1977-ல் ஆட்சியைப் பிடித்தது முதல், 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை, தொடர்ந்து முதல்வராகப் பதவியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரை, தனது அரசியல் ஆசானாகக் கொண்டு, அரசியலில் அவரது வழியைப் பின்பற்றி ஏழை-எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் திகழ்வதற்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா.

தமது 68-வது வயதில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் ஜெயலலிதா. கடந்த 75 நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலைலயில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

எம்.ஜி.ஆர் வழியில், செயல்பட்ட முதல்வர் ஜெயலலிதா, 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தனது ஒவ்வொரு உரையின் போதும், ஜெயலலிதா தவறாமல் குறிப்பிடுவார். 

ஏழை மக்கள் எல்லாமும் பெற வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அல்லும், பகலும் ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்டு வந்த, ஏற்றமிகு ஏந்தலான முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. 

ஏழை மக்களுக்கு என்றென்றும் அரணாக விளங்கிய ஜெயலலிதா-வின் ஆன்மா அவர் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டன் மறைவின்போதும், தெரிவிப்பது போன்ற, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். 

ஏழைகள் வாழ்வில், ஜெயலலிதா தொடங்கி வைத்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், என்றென்றும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

http://www.vikatan.com/news/coverstory/74257-jaya-follows-the-footpath-of-mgrs-path-till-death.art

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

041.gif

ஆழ்ந்த இரங்கலைத் தமிழக உறவுகளோடு பகிர்ந்து கொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

தமிழகத்தில் 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

 

 

maxresdefaultf_01286.jpg

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், பிற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://www.vikatan.com/news/jayalalithaa/74262-jayalalithaa-demise-7-days-state-mourning-in-tamilnadu.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு அஞ்சலிகள்..

ஆளுமையும் துணிச்சலும் மிகுந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.

Link to comment
Share on other sites

கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது: கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
 
 

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, அங்கிருந்து ராஜாஜி ஹாலில் செவ்வாய்க்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

முதலில் முதல்வர் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அக்டோபர் 1-ம் தேதி தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டது.

நுரையீரல் தொற்றை நீக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவர் முதல்வருக்கு நுரையீரல் தொற்றை நீக்குவதற்கான சிகிச்சை அளித்தார். இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் ஜி.கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள், அமெரிக்க மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் அவ்வப்போது வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்துச் சென்றனர். அவர்களது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.

தொடர் சிகிச்சை காரணமாக நுரையீரல் தொற்று குறைந்து, முதல்வரின் உடல்நிலை சீராகி வருவதாகவும், எனினும் அவர் மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அக்டோபர் 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அக்டோபர் 7 -ம் தேதி, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துப் பேசினார். அக்டோபர் 8-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 10-ம் தேதி கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து சென்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த உள்துறை உள்ளிட்ட இலாகாக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவே தொடர்வார் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 12-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அக்டோபர் 13-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நலம் தொடர்பாக விசாரித்தார்.

அக்டோபர் 22-ம் தேதி ஆளுநர் 2-வது முறையாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் மருத்துவ குழுவினரிடம் விசாரித்தறிந்தார். இதற்கிடையே முதல்வர் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் தமிழகம் முழுவதும் கோயில்களில் யாகம், பூஜைகள் நடத்தினர். இதையடுத்து முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறிது சிறிதாக நீக்கப்பட்டு, இயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு வந்தார். அவருக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த மேரி, சீமா ஆகியோர் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு முதல்வரை மாற்றினர். அப்போது, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, "முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம்" என்றார்.

மாரடைப்பு

முதல்வர் எப்போது வீட்டுக்குச் செல்வார், எப்போது மீண்டும் பணிக்கு வருவார் என கட்சியினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்வர் உடல்நிலை தொடர்பான செய்திகளால் பதற்றம் நிலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய நோய், நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சென்னை வந்தார். ராஜ்பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு அப்போலோ மருத்துவமனை வந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை ஆகியவற்றை அறிந்துகொண்டு, மீண்டும் ராஜ்பவன் திரும்பினார்.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும், அதிமுக பிரமுகர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், 'முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு எக்மோ (ECMO) என்ற கருவி மூலம், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தது.

முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், தீவிர அளித்தும் பயனின்றி முதல்வரின் உயிர் 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டதும் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த அதிமுகவினர் 'அம்மா' என்று கதறித் துடித்தனர். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதனர்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் மருத்துவமனைக்கு வந்து சென்றார்.

செப்டம்பர் 22-ம் தேதி முதல்... 73 நாட்கள்:

செப்டம்பர் 22-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செப்டம்பர் 23-ம் தேதி: "ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார்" என அப்போலோ மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து அனுப்பினார்.

செப்டம்பர் 25-ம் தேதி: சமூக வலைத்தளங்களில் பல்வேறான வதந்திகள் பரவிவந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுவார் என கூறப்படுகிறது. ஆனால், அவை பொய்யானவை அடிப்படை ஆதாரமற்றவை" எனத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 27-ம் தேதி: காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியதாக அதிமுக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 29-ம் தேதி: "தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்" என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அக்டோபர் 1-ம் தேதி: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

அக்டோபர் 2-ம் தேதி: அப்போலோ மருத்துவமனை மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தது.

அக்டோபர் 6--ம் தேதி: அப்போலோ மருத்துவமனி முதன்முறையாக மிக விரிவான மருத்துவ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவி உதவியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, நுரையீரல் தொற்று நீங்க சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 9-ம் தேதி: திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து தமிழக முதல்வர் நலன் விசாரித்துச் சென்றார்.

அக்டோபர் 12-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை கூடுதலாக ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அக்டோபர் 22-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் படுக்கையில் இருந்து எழுந்து அமர முடிகிறது. அவரால் சைகையால் தொடர்பு கொள்ள முடிவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது.

அக்டோபர் 29-ம் தேதி: அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவம்-ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் கையெழுத்து போடாமல், பெருவிரல் ரேகையை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 16-ம் தேதி: "மக்களின் பிரார்த்தனை காரணமான நான் மறுபிறவி எடுத்துள்ளேன்" என முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

நவம்பர் 18-ம் தேதி: முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவிகள் உதவியில்லாமல் இயற்கையாகவே சுவாசிப்பதாக அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். மேலும், முதல்வர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் எனக் கூறினார்.

டிசம்பர் 4-ம் தேதி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கைக் குறிப்பு:

கர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம் - சந்தியா தம்பதியருக்கு 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. இளம் வயதில் சென்னையில் கல்வி பயின்றார். பின்னர், திரைப்படங்களில் நடித்தார். 1982-ம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான மிகப்பெரிய அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

1991-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றார்.

2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா. ஆனால், நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத் தீர்ப்பையடுத்து அவர் பதவி விலகினார். பின்னர் நடைபெற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலை‌யில் 2002-ம் ஆண்டு 3-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார்‌.

2006-ல் அதிமுக ஆட்சியை இழந்தது. 2011-ம் ஆண்டு மீண்டும் முதல்வரானார். 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதல்வர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து 5-வது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/கோடானுகோடி-மக்களை-மீளாத்-துயரில்-ஆழ்த்திவிட்டு-அம்மா-உயிர்-பிரிந்தது-கண்ணீரில்-மிதக்கிறது-தமிழகம்/article9412027.ece?homepage=true

Link to comment
Share on other sites

விடைபெற்ற சகாப்தம்!

 

 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: பிடிஐ
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: பிடிஐ
 
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் - வழிபடப்பட்டவர் என்றும்கூடச் சொல்லலாம் - எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை 'அம்மா' என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களில் பெரும் பகுதியினர் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பெண் சக்தியின் அடையாளமாக வரித்துக்கொண்டார்கள். 'ஒரு மரணம் யாராலும் நிறைக்க முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது' என்ற வார்த்தைகள் ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் முழுக்கப் பொருந்தக் கூடியது. 1948, பிப்ரவரி 24 அன்று மைசூர், மாண்டியாவில் பிறந்த ஜெயலலிதா, தன்னுடைய 68-வது வயதில் 2016 டிசம்பர் 5 அன்று விடைபெற்றுக்கொண்டார்.

எந்த ஒரு வரலாற்று ஆய்வாளரையும் வசீகரிக்கக் கூடிய வாழ்க்கை ஜெயலலிதாவினுடையது. கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு இணையான ஏற்ற இறக்கங்களையும் துயரங்களையும் சவால்களையும் ஆச்சரியங்களையும் விசித்திரங்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் சுவாரசியங்களையும் கொண்டது. பிரத்யேகமானது. இன்றைய கர்நாடகத்தில் பிறந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை, அவருடைய சிறுவயதிலேயே தமிழகத்தோடு பிணைந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஜெயலலிதா, குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலையிலிருந்த ஒரு தாயால் வளர்க்கப்பட்டவர். படிப்பிலும் பன்மொழித் திறனிலும் சிறந்து விளங்கியவர், விருப்பமே இல்லாமல்தான் திரைத் துறையில் காலடி எடுத்துவைத்தார். ஆனால், அவர் அளவுக்கு வெற்றிகளைக் குவித்த நடிகை இன்றளவும் தென்னிந்திய சினிமாவில் கிடையாது. அடுத்து, அரசியலிலும் அப்படியே நடந்தது.

திரைத் துறையில் அவருக்குப் பக்க பலமாக இருந்த எம்ஜிஆரின் அதிமுகவில் 1982-ல் உறுப்பினரானார் ஜெயலலிதா. அதே ஆண்டு, அக்கட்சியின் மாநாட்டில் 'பெண்ணின் பெருமை'என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வரவேற்பு அடுத்த ஆண்டே அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் அவரை அமர்த்தியது. அடுத்த ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினரானார். 1984 முதல் 1989 வரை அப்பதவியில் இருந்தவரை இடையில் நேரிட்ட எம்ஜிஆரின் மரணம் அடுத்த கட்டம் நோக்கித் தள்ளியது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமசந்திரன் தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்த கட்சி, அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது. தொடர் விளைவாக, ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள அதிமுக ஜெயலலிதாவின் கைக்குள் முழுமையாக வந்தது. ஜெயலலிதாவையும் அரசியலிலிருந்து விலக்கும் முயற்சிகள் அரசியல் களத்தில் தொடங்கியபோதுதான் விஸ்வரூபம் எடுத்தார் அவர். 1989 மார்ச் 25 அன்று தமிழக சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவத்துக்குப் பின் பெருத்த அவமானத்தோடு "இனி இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்" என்று சபதமிட்டுப் புறப்பட்ட ஜெயலலிதா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் சபதத்தை நிறைவேற்றினார். தன்னுடைய 43-வது வயதில் 1991-ல் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவரே தமிழகத்தின் இளவயது முதல்வர்.

அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் வென்றார், தோற்றார், மீண்டும் வென்றார், மீண்டும் தோற்றார்; ஊழல் வழக்குகளை எதிர்கொண்டார்; சிறை சென்றார்; பதவி விலகினார்; வழக்கில் வென்று மீண்டும் பதவியில் அமர்ந்தார்; தொடர்ந்து வழக்குகளை எதிர்கொண்டார். ஒருவிஷயம், தமிழகத்தின் அரசியலிலிருந்து விலக்க முடியாத பெரும் மக்கள் சக்தியாக அவர் விளங்கினார். 2014 மக்களவைத் தேர்தலில் பெருமளவில் தனித்து நின்று, மாநிலத்தின் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களவையில் அதிமுகவை அமர்த்தியது, அவருடைய வெற்றிகளிலேயே மகத்துவமானது. குடும்ப அரசியலுக்கு எதிரானவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய குடும்ப உறவுகளிடமிருந்து முற்றிலுமாக விலகியே இருந்தார். ஆனால், 'நிழல் அதிகார மையங்கள்' அவருடைய ஆட்சிக் காலம் முழுவதும் நீடித்தன. அவையே கட்சித் தொண்டர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அவரை விலக்கியும் வைத்தன. தன் வாழ்நாளில் அவர் எதிர்கொண்ட மிகப் பெரிய விமர்சனம் இது. ஆராதனை வழிபாட்டுக் கலாச்சாரத்தில், ஒரு நபர் ராணுவம் எனச் செயல்பட்ட ஜெயலலிதாவுக்கு அந்தப் பலமே பலவீனமாகவும் ஆனது. அதிமுகவில் செயலூக்கம் நிறைந்த தலைவர்கள் பலர் இருந்தாலும், அடுத்த கட்டத்தில் அவருக்கு இணையான ஒருவரை அவர் உருவாக்கிடவோ, மக்களிடத்தில் வழிகாட்டிச் செல்லவோ இல்லை. ஜெயலலிதா நீங்கலாக எவர் ஒருவரையும் தலைமை இடத்தில் பொருத்திப் பார்த்துப் பழக்கமில்லாத அதிமுகவின் அடுத்த கட்டப் பயணம் எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய சவால்கள் இனிதான் தொடங்குகின்றன.

பிறப்பினால் ஒரு பிராமணப் பெண்ணான ஜெயலலிதா, பிராமணர்களுக்கு எதிர் இயக்கமாகத் தோன்றிய திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்தது ஒரு வரலாற்று முரண். தேசியம் என்ற பெயரில் ஒற்றையாட்சியின் கீழ் படிப்படியாக இந்தியாவைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராகவும் மதவாத அரசியல் தமிழகத்தில் பரவ ஒருவகையில் சவாலாகவும் இருந்தவர் ஜெயலலிதா. தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து கடைசிக் காலம் வரை மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர். அந்த வகையில், இந்தியாவின் பன்மைத்துவத்துக்குத் தொடர்ந்து பங்களித்துவந்தவர். வெகுஜனத் திட்டங்கள் என்ற பெயரில் மேட்டிமைவாதிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களைத் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய சமூகநல அரசியலில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதல் நகர்ப்புறச் சலுகை விலை அரசு உணவகங்கள், மருந்தகங்கள், மாணவர்களுக்கான மடிக்கணினிகள், ஏழைகளுக்கான கால்நடைகள் திட்டம் வரை பல திட்டங்கள் புரட்சிகரமானவை. இன்றைக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்தத் திட்டங்கள் பிரதியெடுக்கப்படுவது அவருடைய அரசியலின் முக்கியத்துவத்தைச் சொல்லக் கூடியது.

தமிழகத்துக்கு இது பேரிழப்பு. சவாலான இந்தக் காலகட்டத்தையும் நம் மாநிலம் கடந்து வரத்தான் வேண்டும்!

http://tamil.thehindu.com/opinion/editorial/விடைபெற்ற-சகாப்தம்/article9412066.ece?homepage=true

Link to comment
Share on other sites

இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உருவாகியிருக்கிறது: மோடி இரங்கல்

 

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் மோடி, தனது இரங்கலை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

modi_jaya_00041.png

"செல்வி ஜெயலலிதாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார் ஜெயலலிதா.

மக்களுக்காகவே யோசிப்பது, பெண்களுக்காக போராடுவது, ஏழைகளின் நலனுக்காகவே சிந்தித்தது போன்றவை எனக்கு மிகவும் ஊக்கம் அளிததது. இந்த துயரமான சம்பவத்தில், எனது எண்ணங்களும், ஆறுதல்களும், தமிழக மக்களுடன் இருக்கும்.

இந்த பெரும் துயரில் இருந்து அனைவரும் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரை பல சமயங்களில் சந்தித்த தருணங்களை நினைவு கூர்கிறேன். அவரது ஆன்மா  சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் " என ட்விட் செய்து இருக்கிறார். 

I will always cherish the innumerable occasions when I had the opportunity to interact with Jayalalithaa ji. May her soul rest in peace.

http://www.vikatan.com/news/jayalalithaa/74259-modi-tweets-on-the-demise-of-jayalalithaa.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.