Jump to content

கருணா கைது பின்னணி என்ன?


Recommended Posts

கருணா கைது பின்னணி என்ன?

01sama-cc820499cba4e3a7e772fdcfb9826743fa05c588.jpg

 

விடு­தலைப் புலி­களின் முன்னாள் தள­ப­தியும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் பிரதி அமைச்­ச­ராக இருந்­த­வரும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் உப தலை­வ­ரு­மான கருணா எனப்­படும், விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன், கடந்த வாரம் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் முதன்­மை­யான தள­ப­தி­களில் ஒரு­வ­ராக இருந்த கேர்ணல் கருணா, 2004ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு வெளி­யே­றினார்.

அப்­போது கரு­ணா­வுக்கு, ஐ.தே.க. அர­சாங்­கமும், அதற்குப் பின்னர் வந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கமும், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவும் போது­மான பாது­காப்பை வழங்­கி­யி­ருந்­தன.

விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்­கான முக்­கிய துரும்­பாக அப்­போது கருணா பல்­வேறு உள்­நாட்டு வெளி­நாட்டு தரப்­பு­க­ளினால் கையா­ளப்­பட்டார்.

கிழக்கில் விடு­தலைப் புலி­களை உடைத்து அவர்­களின் படை பலத்தை சிதைத்­தது, தமிழ்­மக்கள் மத்­தியில் வடக்கு, கிழக்கு என்ற பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தி­யது, வன்­னியில் புலி­களின் பலம், பல­வீனம் பற்­றிய இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டது என்­ப­ன­வற்றின் மூலம், நான்­கா­வது கட்ட ஈழப்­போரை அர­சாங்­கத்­துக்குச் சாத­க­மாகத் திருப்­பி­யவர் கருணா.

அதற்­கா­கவே அவ­ருக்கு முன்னாள் ஜனா­தி­பதி ம ஹிந்த ராஜபக் ஷ, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப­த­லைவர் பத­வி­யையும், பிரதி அமைச்சர் பத­வி­யையும் கொடுத்தார். எல்லா வச­திகள், வாய்ப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்தார்.

கடந்த ஆண்டு ஏற்­பட்ட ஆட்சி மாற்றம், மஹிந்த ராஜபக் ஷவை எப்­படி ஓரம்­கட்­டி­யதோ, அது­போ­லவே,, கரு­ணா­வையும் விளிம்பு நிலைக்கு தள்­ளி­யது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அவ­ரது உயர் பதவி பறிக்­கப்­பட்­டது. தேசி­யப்­பட்­டியல் ஆச­னமும் வழங்­கப்­ப­ட­வில்லை.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இருந்து பிரிந்த பின்னர், கருணா குழு என்ற பெயரில் செயற்­பட்ட போதும், அர­சியல் கட்­சி­யாக இயங்­கிய போதும், பல்­வேறு மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்­பாக இருந்தார் என்ற குற்­றச்­சாட்டு கருணா மீது உள்­ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்­கைகள், மனித உரிமை அமைப்­பு­களின் அறிக்­கைகள் இன்னும் பல விசா­ரணை அறிக்­கை­களில், குற்­றச்­செ­யல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­களில் ஒரு­வ­ராக கருணா அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

ஆனாலும், ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு, இரண்டு ஆண்­டுகள் வரை கருணா, எந்த விசா­ர­ணை­க­ளையும் சந்­திக்­காமல், நீதி­மன்றப் படிக்­கட்­டு­க­ளிலும் ஏறாமல் கழித்­தி­ருந்தார்.

கரு­ணாவின் சகா­வான பிள்­ளையான் எனப்­படும், கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன், பல மாதங்­க­ளாக சிறைக் கம்­பி­க­ளுக்குப் பின்னால் அடை­பட்டுக் கிடக்­கின்ற போதும், கரு­ணாவின் சுதந்­தி­ரத்­துக்கு தடை­யேதும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­ட­போது, கரு­ணாவும், கே.பியும் சுதந்­தி­ர­மாக உலாவும் போதும், அர­சியல் கைதி­களை தடுத்து வைத்­தி­ருப்­பதில் அர்த்­த­மில்லை என்று அமைச்­சர்­களே பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்­தனர்.

கே.பியும், கரு­ணாவும் விடு­தலைப் புலி­களின் முன்னாள் முக்­கிய பிர­மு­கர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே அந்தக் கருத்து வெளி­யி­டப்­பட்­டது.

எனினும், கே.பி. மலே­ஷி­யாவில் பிடி­பட்டு, கொழும்பு கொண்டு வரப்­பட்ட பின்னர், தனி­யான ஆயு­தக்­கு­ழுவை வைத்து செயற்­ப­டவோ, மீறல்­களில் ஈடு­பட்­ட­தான குற்­றச்­சாட்­டு­களைச் சந்­திக்­கவோ இல்லை.

ஆனால், கரு­ணாவின் தலை­மையில் ஒரு ஆயுதக் குழு இயங்­கி­யது. அதனை அவர் முன்னர் சில ஊடகப் பேட்­டி­களில் மறுத்­தி­ருந்தார். எனினும், ரவிராஜ் கொலை வழக்கின் அர­ச­த்­த­ரப்புச் சாட்சி கூட, கருணா குழு­வுடன் தாம் சேர்ந்து இயங்­கி­யதை உறுதி செய்­தி­ருக்­கிறார், தாம் கரு­ணாவைச் சந்­தித்­த­தையும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

கருணா குழு என்ற பெயரில் கிழக்­கிலும், நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் ஏரா­ள­மான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்­தப்­பட்­டன. ஆட்­க­டத்­தல்கள், கப்பம் பெறுதல், கொலைகள் என்று ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுகள் கருணா குழு மீது சுமத்­தப்­பட்­டன, அவர் அதனை ஒரு­போதும் ஏற்றுக் கொண்­ட­தில்லை. அதனை நிரா­க­ரித்தார்.

இத்­த­கைய மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­களில் தொடர்­பு­பட்­ட­வ­ராக இருந்­தாலும், இப்­போ­தைய அர­சாங்­கமும், கரு­ணாவைப் பாது­காப்­பதில் கவனம் செலுத்­தியே வந்­தது.

ஆனால், கடந்­த­வாரம் கருணா திடீ­ரென நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டார். வாக்­கு­மூலம் பெறு­வ­தற்­காக அழைக்­கப்­பட்ட அவர் உட­ன­டி­யா­கவே கைது செய்­யப்­பட்டு, நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்டார்.

இதை­ய­டுத்து, டிசம்பர் 7ஆம் திகதி வரை அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்டு, நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­லப்­படும் போது, “இத்­துப்­போன வாக­னத்­துக்­காக கைது செய்­தி­ருக்­கி­றார்கள், விரைவில் வெளியே வந்து விடுவேன்” என்ற நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­தி­ய­படி தான் கருணா சென்­றி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், ஹொங்­கொங்கில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட, 800 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான குண்­டு­து­ளைக்­காத வாகனம் ஒன்றே கரு­ணாவை சிறைக் கம்­பி­க­ளுக்குள் தள்ளிச் சென்­றி­ருக்­கி­றது.

அப்­போ­தைய ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரினால் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இந்த வாகனம், மோட்டார் போக்­கு­வ­ரத்து திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. இலக்­கத்­த­கடும் இருக்­க­வில்லை.

இதனால், ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், அந்த வாக­னத்தை கருணா தனது சார­தியின் மூலம் மட்­டக்­க­ளப்பு கிரானில் உள்ள ஒரு வாகனத் திருத்­து­மி­டத்தில் மறைத்து வைத்­தி­ருந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இரண்டு ஆண்­டு­க­ளாக மறைந்து கிடந்த அந்த வாகனம், கடந்த மாத முற்­ப­கு­தியில் நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, கொழும்­புக்கு கொண்டு செல்­லப்­பட்ட பின்னர் தான், கரு­ணா­வுக்கு தொடங்­கி­யது பிரச்­சினை.

இந்த வாகனம் தொடர்­பா­கவும், இதனை பதிவு செய்­யாமல் என்ன தேவைக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது குறித்தும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன.

இதன் தொடர்ச்­சி­யா­கவே, அரச வாக­னத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார் என்ற குற்­றச்­சாட்டில் கருணா கைது செய்­யப்­பட்டார். கருணா மீது இதற்கு முன்னர் கூறப்­பட்டு வந்த குற்­றச்­சாட்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், அவர் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்கு மிகச் சிறி­யது.

அதனால் தான், கருணா “இத்துப் போன வாக­னத்தை வைத்து கைது செய்­தி­ருக்­கி­றார்கள், விரைவில் வெளியே வந்து விடுவேன்” என்று நம்­பிக்­கை­யோடு கூறிச் சென்றார்.

கருணா இந்த விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டமை திட்­ட­மிட்ட ஒரு நட­வ­டிக்கை என்று கூறப்­பட்­டாலும், இது ஒன்றை மறைப்­ப­தற்­காக செய்­யப்­பட்ட இன்­னொரு செயல் போலவே தெரி­கி­றது.

கடந்த மாதம் 29ஆம் திகதி கருணா கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக, கடந்த 23 ஆம் திகதி நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால், விசேட அதி­ர­டிப்­ப­டையின் முன்னாள் கட்­டளை தள­ப­தி­யான ஓய்­வு­பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்­சந்­திர கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்­சந்­திர, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த போது, அவ­ரது பாது­காப்பு ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கவும் முன்னர் பணி­யாற்­றி­யி­ருந்தார். தற்­போது கூட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில், பாது­காப்பு ஆலோ­ச­க­ராக இருந்து வரு­கிறார்.

இவ­ரது கைது அர­சியல் மட்­டங்­களில் பெரி­ய­ளவில் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஏனென்றால், ஓய்­வு­பெற்ற பின்னர், விசேட அதி­ர­டிப்­ப­டையின் வாக­னத்தைப் பயன்­ப­டுத்தி, அர­சாங்­கத்­துக்கு 140,000 ரூபா இழப்பை ஏற்­ப­டுத்­தினார் என்­பதே இவர் மீதான குற்­றச்­சாட்டு.

பல நூறு கோடி ரூபா மோச­டி­களை செய்­த­வர்கள் என்று குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள், அர­சாங்க சொத்­துக்­களை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்­தி­ய­வர்கள் என்று குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் பலரும், சுதந்­தி­ர­மாக உலா வந்து கொண்­டி­ருக்கும் போது, பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்­சந்­திர மட்டும் கைதா­னதன் பின்­னணி பல­ருக்கும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

போரின் இறு­திக்­கா­ல­கட்­டத்தில், விசேட அதி­ர­டிப்­படைத் தள­ப­தி­யாக இருந்த இவர், கிழக்கில் புலி­களின் கடைசி அணி­களை வேட்­டை­யாடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டவர்.

போரில் பங்­கெ­டுத்த தள­பதி ஒருவர், சாதா­ர­ண­மான ஒரு குற்­றத்­துக்­காக கைவி­லங்­கி­டப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்ட காட்சி ஊட­கங்­களில் வெளி­யா­ன­போது, தெற்கில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த விவ­காரம், ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு சென்­ற­போது, பொலிஸ் மா அதி­ப­ரிடம் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார் என்றும், செய்­திகள் வெளி­யா­கின.

எனினும், அடுத்­த­டுத்த நாட்­க­ளி­லேயே பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்­சந்­திர பிணையில் விடு­விக்­கப்­பட்டார். ஜனா­தி­ப­தியின் அறி­வு­றுத்­தலே அதற்குக் கார­ண­மாக இருக்­கலாம்.

ஏற்­க­னவே, சில வழக்­கு­களில் கைதான இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரிகள் விட­யத்­திலும், ஜனா­தி­பதி அதி­ருப்தி வெளி­யிட்ட சில நாட்­க­ளி­லேயே அவர்கள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டமை நினை­வி­ருக்­கலாம்.

எவ்­வா­றா­யினும், பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்­சந்­தி­ரவின் கைது அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதன் மீதான கவ­னத்தை திசை திருப்­பவே, அதே குற்­றச்­சாட்டில் கரு­ணாவின் கைது நடந்­தி­ருக்­கி­றது.

கருணா மீது ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுகள் கூறப்­ப­டு­கின்ற நிலையில், வாக­னத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார் என்று சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு மிகச் சிறி­யது.

அதே­வேளை, கரு­ணா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களை அர­சாங்கம் விசா­ரணை செய்யும் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருந்­தாலும், அதற்­கான தருணம் இப்­போது வந்து விட்­டதா என்று தெரி­ய­வில்லை.

ஏனென்றால், கரு­ணாவை முன்னர், பயன்­ப­டுத்திக் கொண்­ட­வர்­களில் பலர் இன்­னமும் அதி­கா­ரத்தில் இருக்­கின்­றனர். அவர்கள் கரு­ணாவை நெருக்­க­டியில் சிக்­க­வைத்து வேடிக்கை பார்க்­க­மாட்­டார்கள்.

அவர்கள் ஏவிய அம்பு தான் கருணா. எனவே, அந்த அம்பு எங்கிருந்து ஏவிவிடப்பட்டது என்ற இரகசியங்கள் அம்பலமாவதை, அவரைப் பயன்படுத்திக் கொண்ட எவரும் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

இந்தக் கவசம் தான் கருணாவை இதுவரையில் பாதுகாத்து வந்தது. இனிமேலும் அதுவே கருணாவின் பலமாக இருக்கும்.

மனித உரிமை காரணங்களுக்காக கருணாவை சிறைக்குள் தள்ளும் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இன்னும் வலுவான குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருவதாகவே தெரிகிறது. சில கொலை வழக்குகளின் விசாரணைகளில் வெளிப்படும் தகவல்கள், கருணாவுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியவை.

விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த காலத்தில் கருணாவுக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது. ஆனால், புலிகளை உடைத்து, அரசாங்கத்துடன் இணைந்த பின்னர் கருணா தனது எல்லா மதிப்பையும் இழந்து போனார்.

அதனால் தான், கருணாவின் கைது, தமிழ் மக்கள் மத்தியில் எந்த மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கவில்லை. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-7

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.