Jump to content

அப்போலோவில் திடீர் பரபரப்பு


Recommended Posts

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை

jaya_05273.jpg

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதயநாள அடைப்பை சீர்செய்யவே அவருக்கு ஆஞ்ஜியோ செய்யப்பட்டுள்ளது. ஆஞ்ஜியோ பரிசோதனைக்கு பின் தற்போது முதல்வர் ஐ.சி.யூ பிரிவில் உள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் ஜெயலலிதா. மேலும், காலை 7 மணிக்கு மேல் முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தரும் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு திடீர் உத்தரவு?

400_08231.jpg

முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் இன்று காலை 11 மணிக்கு கட்சி தலைமையகத்துக்கு வரச் சொல்லி அப்போலோவில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாம்.

எதற்காக வரச் சொன்னார்கள் என்ற தகவல் இல்லை.

http://www.vikatan.com/news/politics/74179-admk-mlas-asked-to-assemble-by-11-am.art

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு... ஏதாவது நடந்தால், அப்பலோ.... ஆஸ்பத்திரி கண்ணாடிகள்  நொருங்கும் போலுள்ளது.
எதற்கும்.... அப்பலோ நிர்வாகம், மேலதிக  இன்சூரன்ஸ்  செய்து வைத்திருப்பது நல்லது.

Link to comment
Share on other sites

சசிகலா உறவினர்கள் அவசர ஆலோசனை?

400_09288.jpg

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், திவாகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினர் தற்போது சென்னையில் உள்ளனர்.

பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் ஒன்று கூடி, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.vikatan.com/news/world/74183-sasikalas-relations-in-emergency-meeting-regarding-next-political-steps.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ யின் விடிவு 
நம்மளுக்கு ஏதும் விடிவை தருமா ?

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை செலுத்தும் செயற்கை நுரையீரல்.. இப்படித்தான் வேலை செய்யும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நுரையீரல் செயல்படாத நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜனை செலுத்தும் கருவியாகும். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 12 மணி நேரம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். VIDEO : Jayalalitha shited to ward, says Apollo chief 00:00 / 00:00 : Ad ends in... Powered by 1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது. இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை உபகரணம் உண்டு. இந்த கருவியும் பலனிக்காதபோதே ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்படும். இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த உபகரணம்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணம், ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளும். ஆக்சிஜனை சேர்த்து, கார்பன் டயாக்சைடை வெளியேற்றும். இதயம், நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும். கார்பன் டையாக்சைடு ரத்தத்தில் அதிகம் சேரும்போது அது உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும். ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போதுதான், இந்த கருவி மிகுந்த அவசியப்படுகிறது. இதற்காக, catheter என்ற சிறு கருவி (பேஸ்மேக்கரை போல), இதயத்தின் அருகேயுள்ள மைய ரத்த நாளத்தில் பொருத்தப்படும். செயற்கை பம்ப் ஒன்று, இந்த கருவிக்குள், ரத்தத்தை செலுத்தும். அப்படி ரத்தம் செலுத்தப்படும் முன்பாக, ஆக்சிஜனை கலக்கும் ஒரு கருவி வழியாக அந்த ரத்தம் பாயும். அப்போது உரிய ஆக்சிஜன் ஏற்றப்ட்டு, உடலுக்குள் ரத்தம் செய்வது உறுதி செய்யப்படும். சுவாச கோளாறால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்போது, இது பயன்படுத்தப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-health-what-is-an-ecmo-how-does-it-work-268957.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் எங்கு இருந்தாலும் பரவாயில்லை ..............
சுப்ரமணிய சுவாமி என்ன செய்கிறார் எங்கு போகிறார் என்பதுதான் 
கண்காணிக்க படவேண்டிய முக்கிய விடயம் இப்போது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

ஜெ யின் விடிவு 
நம்மளுக்கு ஏதும் விடிவை தருமா ?

 

1 minute ago, Maruthankerny said:

யார் எங்கு இருந்தாலும் பரவாயில்லை ..............
சுப்ரமணிய சுவாமி என்ன செய்கிறார் எங்கு போகிறார் என்பதுதான் 
கண்காணிக்க படவேண்டிய முக்கிய விடயம் இப்போது. 

அம்மாவுக்குப் பின்.... அ.தி.மு.க. வுடன் இணைய.... பா. ஜ. க. ஏற்கெனவே.... காயை  நகர்த்திக் கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஜெயலலிதா உடல்நிலை : முதன்முதலாக இரண்டு ஊடகவியலாளர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி!

ஜெயலலிதா உடல்நிலை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 70 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நேற்று மாலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதய நோய் நிபுணர்கள் முதல்வர் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

முதல்வர் உடல் நிலை கவலைப்படத்தக்க வகையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வந்த தகவலால் தமிழகம் பரபரத்தது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அப்போலோவில் குவிய ஆரம்பித்தனர். தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கவர்னர் வித்தியாசாகர் ராவ் மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார். இரவே அப்போலோ வந்த அவர் முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்தார். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் தொடர்ந்து தமிழக நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.  சென்னை உட்பட முக்கிய நகரங்களில் மத்திய படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் போலீசார் அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். விடுப்பு எடுக்காமல் அனைவரும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலை நீடிக்க போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து வெளி வரும் செய்திகள் மக்களிடையே பீதியை அதிகரித்து விடக்கூடாது. தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு வரக்கூடாது என்று தமிழக அரசு வட்டாரமும், அ.தி.மு.க மேலிடமும் கருதியதாகத் தெரிகிறது.

Apollo_1_07438_07273.jpg


இதையடுத்து இரண்டு முக்கிய தொலைகாட்சி சேனல்களின் ஆசிரியர்களை அப்போலோ வரும் படி அ.தி.மு.க தலைமை அழைத்திருக்கிறது. இதையடுத்து தந்தி தொலைகாட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, புதிய தலைமுறை தொலைகாட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் இருவரும் நேற்று நள்ளிரவு அப்போலோ அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் அ.தி.மு.க வட்டாரத்தின் சார்பிலும், மருத்துவமனை வட்டாரத்தின் சார்பிலும் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும், தொடர்ந்து முதல்வர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரத்த நாள அடைப்பை சரி செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும், 24 மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் உடல் நிலையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் உடல் நலம் பிரார்த்திப்போம்...

http://www.vikatan.com/news/tamilnadu/74185-jayalalithaa-health-condition--television-channel-editors-visit-apollo.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ADMK முக்கிய தலைவர்களை அப்பலோ மருத்துவமனை வருமாறு அப்பலோ நிர்வாகம் வேண்டுகோள்

இன்றைய நாள்... தமிழகத்திற்கு சோதனையான நாளாக இருக்கப் போகின்றது. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

 

அம்மாவுக்குப் பின்.... அ.தி.மு.க. வுடன் இணைய.... பா. ஜ. க. ஏற்கெனவே.... காயை  நகர்த்திக் கொண்டுள்ளது.

இவர்கள் கட்சி தாவுவதில் என்ன புதிதாக இருக்க போகிறது 
அது வழமையான தமிழ்நாட்டு செய்திதானே.

சுவாமிக்கும் ஜெ க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இருவருக்கும் சி ஐ ஏ யின் 
தொடர்பும் உண்டு.

ஜெயை சிறைக்கு அனுப்பியது சுவாமி வழக்கு போடததெல்லாம் நாடகம் 
சிறைக்கு போனதுதான் ஜெ க்கு சாதகமானது. 

இவர்களுடைய நகர்வுகள் பல ஆண்டு திட்ட்ங்களுடன் நகர்பவை 
அதில்தான் மாற்றம் .... தடுமாற்றம் போன்றவை நிகழ சத்தியம் உண்டு. 

Link to comment
Share on other sites

அப்போலோவில் அதிமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டம் தொடங்கியது!

400_11193.jpg

முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. முன்னதாக முதல்வரின் பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. அப்போலோ மருத்துவமனையின் மெயின் பிளாக் தரைத்தளத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. இரண்டாவது தளத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அங்கு நடப்பவற்றை கவனித்து வருகிறாராம். சிறிது நேரத்தில் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/politics/74193-admk-mla-emergency-meeting-starts-in-apollo.art

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெ.,வுக்கு என்ன சிகிச்சை?
 
 
 
Tamil_News_large_166368920161205112459_318_219.jpg
 

சென்னை: முதல்வர் ஜெ., செப்.22ம் தேதி, நுரையீரலில் ஏற்பட்ட மூச்சு முட்டல் (Pulmonary edema) காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இதையடுத்து, ‛‛அவர் எப்போது விரும்பினாலும் வீடு திரும்பலாம்'' என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்தார்.


கார்டியாக் அரெஸ்ட்: இவ்வாறு அவர் அறிவித்த சில நாட்களில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. மாரடைப்பு என்று தமிழக மக்கள் பொதுவாக சொன்னாலும், டாக்டர்கள் கூறும்போது, ‛‛இப்பிரச்னையை ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் என பிரித்து சொல்ல வேண்டும்.

ஹார்ட் அட்டாக் என்பது, இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இருதயத்திற்கு செல்ம் ரத்தத்தின் அளவு குறைந்து, இருதய துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது.


ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‛‛கார்டியாக் அரெஸ்ட்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கார்டியாக் அரெஸ்ட் என்பது இருதயம் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடுவது என்கிறார்கள் டாக்டர்கள்.

 

எக்மோ கருவி:

 

 

இதுகுறித்து அப்பல்லோ டாக்டர்கள் சிலர் கூறும்போது, ‛ஜெ.,வுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்கனவே உள்ளது. கார்டியாக் அரெஸ்ட்டும் ஏற்பட்டுள்ளதால், எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகள், நுரையீரல் மற்றும் இருதயத்தை வெளியில் இருந்து இயக்குவது. இதைப் பொருத்தி 8 மணி நேரம் டாக்டர்கள் கண்காணித்திருக்கலாம். அவர் உடல்நிலை சீராக இருந்திருந்தால், ரத்தக் குழாய் அடைப்பு ஆஞ்சியோ மூலம் இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு இருக்கலாம்.

இவை எல்லாமே பொதுவாக இப்படி ஏற்படுபவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சை. முதல்வருக்கும் இப்படி செய்யப்பட்டிருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1663689

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம்: அப்போலோ புதிய அறிக்கை

 

apollo_statement_12051.jpg

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உடல்நலம் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் முதல்வரின் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால் நேற்றிரவு கடைகள், பெட்ரோல் பங்க் மூடப்பட்டது, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை இயக்குநரகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/74208-apollo-says-jayalalithaa-continues-to-be-very-critical.art

Link to comment
Share on other sites

அப்போலோ மருத்துவர்களுக்கு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

 

apollo-_jaya_13074.jpg

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் க்ரிட்டிக்கல் மெடிக்கல் கேர் வார்டில் (MDCCU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடயே, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டது. அதில், முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் கருவிகளின் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். "மருத்துவமனை வளாகத்தில் அசாதரணமான சூழல் நிலவுவதால், பல்வேறு இடங்களில் உள்ள நமது மருத்துவமனைகளில் வைத்து உங்களுடையே நோயாளிகளை 3 நாட்கள் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று அப்போலோ மருத்துவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது!

http://www.vikatan.com/news/tamilnadu/74212-apollo-gives-important-announcement-to-its-doctors.art

Link to comment
Share on other sites

சென்னையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
 
தலைமைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக இருப்போம்: எழுதிக்கொடுத்தனர் எம்.எல்.ஏ.,க்கள்

மாலை 3 மணிக்கு அப்பல்லோ அடுத்த அறிக்கை ?

 

பெற்றோருக்கு பள்ளிகள் 'எஸ்.எம்.எஸ்.'!

 

sms_school_15304.jpg

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கையை இன்று மதியம் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளது. அதில், இன்று பள்ளிகள் மாலை 2 மணியுடன் முடிவடைகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் வந்தவுடன் பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதின. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்!

http://www.vikatan.com/news/tamilnadu/74220-cm-health-issue-all-schools-send-sms-to-parents.art

Link to comment
Share on other sites

அப்போலோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு!

 

apollo-_jaya_15090.jpg

ஊழியர்களை அவசரம் அவசரமாக வீட்டுக்குப் புறப்படச் சொல்லி உத்தரவிட்டுள்ளது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, 73-வது நாள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முதல்வர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனை செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியும் இதனை உறுதி செய்தார்.

இந்த நிலையில், ஊழியர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் திடீரென அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் இதர ஊழியர்கள் அவசரம் அவசரமாக வீ்ட்டுக்குப் புறப்பட்டு செல்கின்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/74225-apollo-gives-important-announcement-to-its-employee.art

நிலைமை கைமீறிவிட்டது: ரிச்சர்டு பீலே

 

 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

'நேற்று மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தீடீரென இதயத்தின் இயக்கம் முடங்கியதை கேட்டபோது வருத்தமாக இருந்தது. அப்போலோவில் அவருக்கான சிகிச்சையைக் கொடுத்தபின், அவர் உடல் நலம் முன்னேறியதைக் கண்டு நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், அவர் உடல்நலம் எவ்வளவு முன்னேறினாலும், மேற்கொண்டு பிரச்னைகள் வரக்கூடிய ஆபத்து எப்போதுமே இருந்தது. 

 

beale_15469.jpg
 

இப்போதுள்ள நிலை மிகமிக மோசம்தான். ஆனால், இதுவரைக்கும் எங்களால் செய்ய முடிந்ததை எல்லாம் செய்துவிட்டோம். முதல்வருக்கு மிகவும் அனுபவமுள்ள, பல்துறை எக்ஸ்பர்ட்டுகள் அடங்கிய குழு சிகிச்சையளித்து வருகிறது. இப்போது Extracorporeal life support எனும் சிகிச்சையில் இருக்கிறார். இதுதான் இருப்பதிலேயே நவீன சிகிச்சை. உலகின் சிறந்த மருத்துவமனைகள் இந்த சூழ்நிலையில் இந்த முறையைத்தான் கையாள்வார்கள். இந்த தொழில்நுட்பம் அப்போலோவில் இருப்பது, அம்மருத்துவமனையின் உயர் தரத்தையே காட்டுகிறது. மேலும், அப்போலோ மற்றும் எய்ம்ஸ் குழுவினர் முதல்வருக்கு எப்போதும் உலகத்தரமான சிகிச்சையைக் கொடுத்திருக்கிறார்கள். 

richard_bele_15108.jpg

இந்த இக்கட்டான சூழலில் முதல்வரையும், அவரது குடும்பத்தையும், அவருக்காக அக்கறை காட்டுபவர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் சுற்றியே என் எண்ணங்கள் இருக்கின்றன. 

http://www.vikatan.com/news/tamilnadu/74224-richard-beale-explains-about-jayalaithaas-health.art

ஜெயலலிதா இறுதி கட்டத்தில் ; லண்டன் வைத்தியர் அதிரடி அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முடிந்த வரை சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டோம் என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாலும் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளித்தும் முதல்வரின் உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

488588.jpg

http://www.virakesari.lk/article/14173

Link to comment
Share on other sites

மாலை 6 மணிக்கு மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
 
சென்னைக்கு கூடுதலாக 2 ஐ.ஜி.,க்கள் நியமனம்
 
பாதுகாப்பு பணி: 1500 துணை ராணுவத்தினர் சென்னை வlந்தனர்
 
ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம்: லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே
 
 
Link to comment
Share on other sites

அப்போலோவை அலற வைத்த 'அம்மா' கோஷம்

 

apollo-_admk_16348.jpg

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்து இன்று மதியம் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை இன்று மதியம் புதிய அறிக்கையை வெளியிட்டது.

அப்போலோவிலிருந்து வரும் தகவல்களைப் பார்த்து மருத்துவமனையின் வெளியே காத்திருக்கும் தொண்டர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். அம்மா எழுந்து வாருங்கள் என்று தொண்டர்கள் உருக்கமாக கதறினர். இந்த கதறல் சத்தம் கிரீம்ஸ் சாலையே பரபரப்பாக்கியது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/74230-admk-party-cadres-crowded-in-apollo.art

அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு மாரடைப்பு

 

400_16077.jpg

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதைக் கேள்விப்பட்ட வட சென்னை அதிமுக செயலாளரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு இதயத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவர் வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாலை காலை அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.

http://www.vikatan.com/news/politics/74231-admk-perambur-mla-suffers-heart-attack-after-learning-about-jayalalithaas-cardiac-arrest.art

Link to comment
Share on other sites

கோபாலபுரத்தில் நேற்றிரவு நடந்தது என்ன?

 

கோபாலபுரம்

டந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (4-12-16) இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், அ.தி.மு.க தொண்டர்களும், அப்போலோ முன்பு திரண்டுள்ளனர். தமிழகம் முழுவதுமே ஒருவித பரப்பரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மருத்துவமனையைச் சுற்றி ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சி.ஆர்.பி.ஃஎப் படைவீரர்களும் குவிக்கப்பட்டனர். சென்னையில்  மக்கள் கூட்டமாக நிற்கக் கூடாது என்பதில் காவல்துறை மிகவும் கவனமாக உள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி வீடு மற்றும் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி காலனி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார் அவரசரமாக குவிக்கப்பட்டனர். அதன்பின் அந்தப் பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் மின்தடை பாதிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடத்துக்கு மேல் அந்த பகுதியே இருட்டாக காணப்பட்டது. கருணாநிதியின் வீடுகளுக்கு தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும், தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

- ஜெ. அன்பரசன்

http://www.vikatan.com/news/tamilnadu/74235-what-happened-in-gopalapuram-yesterday.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

ஜெயலலிதாவுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை செலுத்தும் செயற்கை நுரையீரல்.. இப்படித்தான் வேலை செய்யும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நுரையீரல் செயல்படாத நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜனை செலுத்தும் கருவியாகும். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 12 மணி நேரம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். VIDEO : Jayalalitha shited to ward, says Apollo chief 00:00 / 00:00 : Ad ends in... Powered by 1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது. இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை உபகரணம் உண்டு. இந்த கருவியும் பலனிக்காதபோதே ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்படும். இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த உபகரணம்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணம், ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளும். ஆக்சிஜனை சேர்த்து, கார்பன் டயாக்சைடை வெளியேற்றும். இதயம், நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும். கார்பன் டையாக்சைடு ரத்தத்தில் அதிகம் சேரும்போது அது உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும். ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போதுதான், இந்த கருவி மிகுந்த அவசியப்படுகிறது. இதற்காக, catheter என்ற சிறு கருவி (பேஸ்மேக்கரை போல), இதயத்தின் அருகேயுள்ள மைய ரத்த நாளத்தில் பொருத்தப்படும். செயற்கை பம்ப் ஒன்று, இந்த கருவிக்குள், ரத்தத்தை செலுத்தும். அப்படி ரத்தம் செலுத்தப்படும் முன்பாக, ஆக்சிஜனை கலக்கும் ஒரு கருவி வழியாக அந்த ரத்தம் பாயும். அப்போது உரிய ஆக்சிஜன் ஏற்றப்ட்டு, உடலுக்குள் ரத்தம் செய்வது உறுதி செய்யப்படும். சுவாச கோளாறால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்போது, இது பயன்படுத்தப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-health-what-is-an-ecmo-how-does-it-work-268957.html

நுரையீரல் செயற்படாது விட்டால் என்னதான் செயற்கையாக ஒக்சியனைச் செலுத்தினாலும் பயனில்லை. ஏனெனில் நுரையீரல் செயர்ப்படாதுவிடில் தொடர்ந்து சிறுநீரகம் உட்பட அனைத்துப் பாகங்களும் படிப்படியாகச் செயலிழக்கும். செயற்கையாக இதயத்துடிப்பை ஏற்படுத்துவதுபோல்செய்து மற்றவரை ஏமாற்றலாம் சில நாட்களுக்கே தவிர காப்பாற்றவே முடியாது. என் அம்மாவுக்கு நடந்தது இப்படித்தான்.

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

 

Link to comment
Share on other sites

3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி ஜெயலலிதா இறந்துவிட்டதாகப் போட்டிருப்பது உண்மையா ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

 உண்மை

முதல்வர் ஜெயலலிதா காலமானார்
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா (வயது 68)  காலமானார்.  சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.
 
கடந்த செப்டம்பர் 22-ந் தேதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.  75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தார்.  இன்று மாலையில் அவர் மறைந்தார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=179005

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்று நேரலையில் கூறுகிறார்களே.

Link to comment
Share on other sites

1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்று நேரலையில் கூறுகிறார்களே.

 

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் - தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.

 

Apollo Hospitals deny news of #Jayalalithaa death

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.