Jump to content

முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள்


Recommended Posts

முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள்

3d-9e9dad64ed0bfc2d79ac5c37db9ddfb017460fac.jpg

 

எந்­த­வொரு காரி­யத்­தையும் செய்­வ­தற்கு அதற்­கு­ரிய கருவி முறை­யாக இருக்க வேண்டும். கருவி பழு­த­டைந்து இருந்­தாலோ, முறை­யான கருவி இல்­லா­தி­ருந்­தாலோ அந்த வேலையை சரி­யாக செய்ய முடி­யாது. சில வேளை­களில் முறை­யாக கருவி இருந்­தாலும் அக்­க­ரு­வியை முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தி­னாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடி­யாது. இதுதான் நிய­தி­யாகும். இது போலவே இலங்கை முஸ்­லிம்­களின் அர­சி­யலை முன்­னெ­டுத்துச் செல்லும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நட­வ­டிக்­கை­களும் உள்­ளன.

முஸ்­லிம்­களின் அர­சி­யலைப் பொறுத்­த­வரை அதனை செயற்­ப­டுத்தும் கரு­வி­யாக முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன. இக்­கட்­சிகள் எதுவும் முறை­யாக இருப்­ப­தாக இல்லை. இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் சந்தி சிரிக்கும் படி­யாக மாறி­யுள்­ளன.

எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் காங்­கிரஸ் எனும் கருவி மூலம் முஸ்­லிம்­க­ளுக்கான அர­சி­யலை மிகச் சரி­யாக வழி நடத்திக் கொண்டு சென்றார். அப்­போது முஸ்­லிம்­களின் அர­சி­ய­லுக்­கான கரு­வியும், அதனை இயக்­கி­ய­வரும் மிகச் சரி­யா­கவே செயற்­பட்­டனர் . சமூ­கத்தின் விட­யங்­களில் மிகக் கூடுதல் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. ஆனால், இன்று முஸ்­லிம்­க­ளி­டையே பல கட்­சிகள் உள்­ளன. எல்லாக் கட்­சி­களும் குழப்­பத்தில் உள்­ளன.

ஒற்­று­மைக்குப் பதி­லாக கட்­சிக்­குள்­ளேயே பல முரண்­பா­டுகள் உள்­ளன. அந்த முரண்­பா­டுகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்­கின்­றன. தலை­வர்கள் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களை களை­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காது கௌரவ யுத்தம் நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் பல­வீ­ன­ம­டைந்து கொண்டு செல்­­கின்­றது. முஸ்­லிம்­களின் மீது அர­சியல் ரீதி­ய­ாகவும், இன­வாத அமைப்­புக்­களின் மூல­மா­கவும் முன்வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உரிய பதில்­களை அளிப்­ப­தற்கு முடி­யாத கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் உள்­ளது.

ஒரு சமூ­கத்தின் தலை­வர்­களும், அவர்கள் சார்ந்த கட்­சி­களும் உருப்­ப­டி­யாக இல்­லாது போனால் அச்­ச­மூ­கத்­தினுள் மாற்று இனத்­த­வர்கள், இல­கு­வாகத் தங்­களின் கரு­மங்­களை ஆற்­று­வார்கள். இத­னையே இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்­க­ளிலும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எத்­தனை கட்­சிகள் உள்­ளன. எத்­தனை தலை­வர்கள் உள்­ளார்கள் என்ற எண்­ணிக்­கையில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. உருப்­ப­டி­யாக ஒரு கட்சி, ஒரு தலைவர் இருந்­தாலே போதும். முஸ்­லிம்கள் அர­சியல் ரீதி­யாக தலை நிமிர்ந்து வாழ்­வார்கள். இதனை மர்ஹும் அஷ்­ரபில் கண்டோம். இன்று முஸ்­லிம்­ளி­டையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ், உலமா கட்சி என்று பல கட்­சிகள் உள்­ளன.

இவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை எடுத்துக் கொண்டால் அக்­கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும், செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அலி மற்றும் தவி­சாளர் பசீர் சேகு­தா­வூத்­திற்கும் இடையே பலத்த முரண்­பா­டுகள் உள்­ளன.

இந்த முரண்­பா­டு­களை தீர்ப்­ப­தற்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் கட்சி மட்­டத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. பின்னர் அது கட்­சியின் ஏற்­பா­டில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இக்­கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பா­டுகள் நீதி­மன்றம் வரை செல்லும் நிலையை தற்­போது அடைந்­துள்­ளது. அவ்­வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை நீதி­மன்­றத்தில் நிறுத்­தினால் கட்­சியின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­று­களோ, தடை­களோ எற்­ப­டலாம். ஏற்­க­னவே, உள்­ளூ­ராட்சித் தேர்­த­லொன்றின் போது முஸ்லிம் காங்­கி­ரஸின் மரச் சின்­னத்­திற்கு நீதி­மன்­றத்­தினால் தடை விதிக்­கப்­பட்­டது. இதனால், அத்­தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டாது சுயேச்­சையில் போட்­டி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் காங்­கி­ரஸில் காணப்­படும் பிணக்குகளும், முரண்­பா­டு­களும் தீர்க்­கப்­ப­டாத வரை அக்­கட்­சி­யினால் புதிய அர­சியல் யாப்பு மற்றும் ஏனைய விட­யங்­களை கையாள முடி­யாது. இன்று வரைக்கும் முஸ்லிம் காங்­கிரஸ், புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­களின் அபி­லா­சை­க­ளுக்­கு­ரிய தீர்­வுகள் பற்­றிய திட்ட வரை­பு­களை முன்வைக்­க­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே முஸ்­லிம்­க­ளுக்கு எதனைத் தருவோம் என்று சொல்ல வேண்­டு­மென்று பகி­ரங்­க­மா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

 முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­சை­க­ளுக்­கு­ரி­ய­வற்றை முஸ்லிம் காங்­கி­ரஸ்தான் முன்வைக்க வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இதுதான் சிறந்த அர­சியல் அணுகு முறை­யாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது தீர்வுத் திட்­டத்தை முன் வைத்­துள்­ளது. அதற்கு முஸ்­லிம்­களும், முஸ்லிம் காங்­கி­ரஸும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென்று நல்­ல­தொரு அணுகு முறையை கையாண்­டுள்­ளது. ஆனால், முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்றை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அது போலவே முஸ்­லிம்­களும் பல பிரச்­சி­னை­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவற்றைக் கூட அக்­கட்­சி­யினால் கையாள முடி­ய­வில்லை.

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற இறக்­கா­மம் பிர­தே­சத்தில் மாணிக்­க­ம­டுவில் சட்­டங்­க­ளுக்கு முர­ணாக புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வாரங்­களில் அது அகற்­றப்­ப­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸார் தெரி­வித்­தனர்.

ஆனால், இன்னும் அது அகற்­றப்­ப­ட­வில்லை. அதனை அகற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எத­னையும் முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்­க­வில்லை. ஆனால், புத்தர் சிலை வைக்­கப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் மதம் மாற­மாட்­டார்கள் என்று பொறுப்­பற்ற கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன.

இலங்கை தௌஹீத் ஜமா­அத்தை பொதுபல சேனா போன்று மஹிந்­த­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு அமைப்பு என்று சொல்லிக் கொண்­டிக்­கின்­றார்கள். இத்­த­கைய பொறுப்­பற்ற கருத்­துக்கள் முஸ்­லிம்­களின் மீது இன­வா­தி­க­ளுக்கு இருக்­கின்ற வெறுப்­பையும், சந்­தே­கத்­தையும் அதி­க­ரிக்­கவே செய்யும் என்­ப­தனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2017ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் புதிய அர­சியல் யாப்பு வரு­மென்ற நம்­பிக்கை தனக்கு இருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கமும் இதே கருத்­தையே சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றது. அப்­ப­டி­யாயின் அந்தப் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­களின் நிலை என்­ன­வென்று முஸ்லிம் கட்­சிகள் எதுவும் சிந்­திப்­ப­தா­கவோ தமது யோச­னை­களை முன்வைப்­ப­தா­கவோ தெரி­ய­வில்லை.

முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் மறக்­கப்­பட்­ட­தொரு பிரச்­சி­னை­யாக உள்ள தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி போன்­ற­தா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் அர­சியல் யாப்­பையும் கையாண்டு கொண்­டி­ருக்­கின்­றது.

முஸ்­லிம்கள் என்­னதான் சொல்லிக் கொண்­டாலும் சில நாட்­களின் பின்னர் அதனை மறந்து விடு­வார்கள். உயர்­பீட உறுப்­பி­னர்­களும் தாம் சொல்­­வ­தனை கேட்டு ஆமா­சாமி போடு­வார்கள் என்று புதிய அர­சியல் யாப்­பையும் கருதிக் கொண்­டி­ருப்­ப­தா­கவே தெரி­விக்­கின்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் தமது கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களை மறந்­துள்­ளது. தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தனை கிடப்பில் போட்­டுள்­ளது. மாணிக்­க­மடு சிலை விவ­கா­ரத்தை ஓரங்­கட்டி வைத்­துள்­ளது. சிலை இருந்தால் நமக்­கென்ன என்ற போக்கை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. இவை­யா­வற்­றையும் அக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் ஊமை­க­ளாக பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த ஊமை வேடத்­தினை புதிய அர­சியல் யாப்பில் கடைப்­பி­டிக்க முடி­யாது. முஸ்­லிம்­களின் இந்த நிலை, தீர்­வுக்­காக போராடி பல உயிர்­களை பலி கொடுத்த தமிழ் சமூ­கத்தின் எதிர் பார்ப்­புக்­களை தீயில் போடு­வ­தற்கு பேரி­ன­வா­தி­க­ளுக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும்.

ஆதலால், முஸ்லிம் காங்­கிரஸ் தம்மை உருப்­ப­டி­யாக்கிக் கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளையும், முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க வேண்டும்.

இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை எடுத்துக் கொண்டால் அக்­கட்­சிக்­குள்ளும் முரண்­பா­டுகள் உள்­ளன. கட்­சியின் செய­லாளர் நான்தான் என்று வை.எல்.எஸ்.ஹமீட் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­துள்ளார்.

இதனால், அக்­கட்­சியின் நட­வ­டிக்­கை­க­ளிலும் தளம்பல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. கட்­சியின் தலைவர் றிசாட் பதி­யு­தீ­னுக்கும் வை.எல்.எஸ்.ஹமீட்­டிற்­கு­மி­டையே தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கான நிய­ம­னத்தில் ஏற்­பட்ட முரண்­பாடு நீதி­மன்­றத்தில் கட்­சியை கொண்டு போய் நிறுத்தி வைத்­துள்­ளது. இந்த முரண்­பாட்டைக் தீர்ப்­ப­தற்கும் கட்சி மட்­டத்தில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கூட முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு பற்­றிய தமது திட்ட வரை­பினை அர­சாங்­கத்­திடம் முன் வைக்­க­வில்லை.

முஸ்லிம் காங்­கி­ரஸைப் போல் மேடை­களில் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பற்றிக் பேசிக் கொண்­டி­ருப்­ப­தி­லேயே காலத்தை கழித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

கட்­சியின் ஆத­ர­வு­த­ளத்தை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஆழ ஊன்றச் செய்ய வேண்­டு­மென்­பதில் கச்­சி­த­மாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்கும் அமைச்சர் றிசாட் பதி­யுதீன் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வு எவ்­வாறு அமைய வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை கோர­வில்லை. கட்­சியை வளர்த்துக் கொள்­வதில் வெற்றி கொண்­டாலும், முஸ்லிம் சமூகம் தோல்­வி­ய­டைந்து கொள்­ளு­மாயின் கட்­சியின் வளர்ச்­சி­யினால் முஸ்­லிம்­க­ளுக்கு பய­னில்லை. இன்று முஸ்லிம் கட்சித் தலை­வர்கள் ஏனைய கட்­சி­களைப் போன்று கட்­சியின் ஆத­ரவை வளர்த்துக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றார்­களே அன்றி முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் நிம்­ம­தி­யுடன் ஏனைய சமூ­கங்கள் பெற்­றுள்ள உரி­மை­களை பெற்று வாழ வேண்­டு­மென்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால், அதாவுல்லாவும் சில காலம் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தார் . தற்போது அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவருக்கான மக்கள் ஆதரவு இன்னும் பெரிய வீழ்ச்சியை அடையவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தமை அவரின் தோல்வி என்பதனை விடவும், மஹிந்தராஜபக்ஷவின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக தோற்கடிக்கப்பட்டார் என்றுதான் சொல்லுதல் வேண்டும். இவர் கூட முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வு இவ்வாறுதான் அமைய வேண்டுமென்று அரசாங்கத்திடம் கேட்கவில்லை. இக்கட்சியின் உறுப்பினர்களிடையேயும் முரண்பாடுகள் உள்ளன.

இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் எல்லாம் முரண்பாடுகளினாலும், பிணக்குகளினாலும் சூழப்பட்டுள்ளன. இதனால், அக்கட்சிகள் யாவும் உருப்படியாக இல்லாதுள்ளன. முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலைச் செய்வதற்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இதனைச் செய்யாது போனால் முஸ்லிம் கட்சிகளைப் போன்றே முஸ்லிம் சமூகமும் உருப்படியில்லாத நிலையை அடைந்துவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.