Jump to content

காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும்


Recommended Posts

காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும்

Page-06-b3b375b528bd2454e0cda7de5d3da8355b8e4187.jpg

 

கியூ­பாவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், உலகப் புகழ்­பெற்ற புரட்­சி­யா­ள­ரு­மான பிடல் காஸ்ட்­ரோவின் மரணம், உல­கெங்கும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யதைப் போலவே, தமி­ழர்கள் மத்­தி­யிலும் அதன் தாக்கம் உண­ரப்­பட்­டி­ருக்­ கி­றது. ஏனென்றால், இரு­பதாம் நூற்­றாண்டின் பின் அரைக் காலப் பகு­தியில் தமி­ழர்கள் மத்­தியில் காஸ்ட்ரோ மிகவும் பிர­ப­ல­மான ஒரு­வ­ராகத் திகழ்ந்­தவர்.

தனி­நாடு கோரிப் போராட்டம் நடத்­திய தமிழ் அமைப்­பு­களால் முன்­னு­தா­ரணம் கொண்ட தலை­வர்­களில் ஒரு­வ­ராகப் பார்க்­கப்­பட்­டவர். அதனால் தான், பிடல் காஸ்ட்­ரோவின் மரணம் உல­கெங்கும், ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தைப் போலவே, தமி­ழர்கள் மத்­தி­யிலும் பலத்த உணர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில், காஸ்ட்­ரோ­வுக்கு அஞ்­சலி செலுத்தும், பதாகை வைக்­கப்­பட்­டி­ருந்­ததும், காஸ்ட்­ரோவின் மறை­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இரங்கல் அறிக்கை வெளி­யிட்­டதும், அந்த உணர்­வ­லை­களின் பிர­தி­ப­லிப்புத் தான்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் 62ஆவது பிறந்­த­நாளில் தான், பிடல் காஸ்ட்­ரோவின் மரணச் செய்தி வெளி­யா­னது. அதனைத் தப்பும் தவ­று­மாக விளங்கிக் கொண்ட பலரும், பிர­பா­க­ரனின் பிறந்த நாளில் பிடல் காஸ்ட்ரோ மறைந்­த­தாக சமூக ஊட­கங்­களில் பதி­வு­களை இட்டு, கதை கட்­டி­யி­ருந்­தனர்.

ஆனால், காஸ்ட்­ரோவின் மரணம், பிர­பா­க­ரனின் பிறந்த நாளான, நவம்பர் 26 ஆம் திகதி நிக­ழ­வில்லை. அதற்கு முதல் நாளான, நவம்பர் 25ஆம் திகதி இரவு 10.29 மணி­ய­ளவில் தான் பிடல் காஸ்ட்ரோ மர­ண­மானார்.

இதனை அவ­ரது சகோ­த­ரரும், கியூ­பாவின் அதி­ப­ரு­மான ராவுல் காஸ்ட்ரோ அரச தொலைக்­காட்­சியில் நிகழ்த்­திய உரையில் அறி­வித்­தி­ருந்தார்.

பிடல் காஸ்ட்ரோ உலகப் புகழ்­பெற்ற புரட்­சி­யா­ள­ராக இருந்­தாலும், முன்­னு­தா­ரணம் மிக்க தலை­வ­ராக விளங்­கி­யி­ருந்­தாலும், இலங்­கையில் தமி­ழர்­களின் உரிமைப் போராட்டம் சார்ந்து அவரோ, அவ­ரது கியூபா தேசமோ கரி­சனை கொண்­டி­ருந்­த­தில்லை என்­பது கசப்­பான உண்மை.

அமெ­ரிக்­கா­வுக்குச் சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கி­யவர், அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­பான சி.ஐ­.ஏயின் 600 இற்கு மேற்­பட்ட கொலை முயற்­சி­களில் இருந்து உயிர் தப்­பி­யவர், இலத்தீன் அமெ­ரிக்க நாடு­க­ளிலும், மூன்றாம் உலக நாடு­க­ளிலும், மக்கள் புரட்­சி­க­ளுக்கு வித்­திட்­டவர், அத்­த­கைய புரட்­சி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கி­யவர் என்று பிடல் காஸ்ட்­ரோ­வுக்கு பல அடை­மொ­ழிகள் உள்­ளன.

அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக, கியூ­பாவை தனது முழு­மை­யான கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த பிடல் காஸ்ட்ரோ, தனக்குப் பின்னர் தனது சகோ­த­ர­ருக்கு அதி­கா­ரத்தைக் கொடுத்து, வாரிசு அர­சி­யலை ஊக்­கு­வித்­தவர் என்ற கறை, அவர் மேல் இருக்கத்தான் செய்­கி­றது.

கியூ­பாவில் சிறந்த மருத்­துவ வசதி, கல்வி வசதி, வீடு உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களைக் கொடுத்து, மக்­களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்­பாக மாற்றிக் காட்­டி­யவர் காஸ்ட்ரோ.

ஆனாலும், மக்­க­ளுக்கு முழு­மை­யான ஜன­நா­யக உரி­மை­களை ஒரு­போதும் திறந்து விடத் தயா­ராக இருக்­க­வில்லை. மனித உரி­மைகள் விட­யத்தில் அவர் மோச­மான அணு­கு­மு­றை­யையே கடைப்­பி­டித்தார். யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு போல, அமெ­ரிக்­கா­வுக்கு அரு­கி­லேயே இருந்து கொண்டு அதற்கு எப்­போதும் குடைச்­சலைக் கொடுக்­ கின்ற ஒரு­வ­ராகத்தான் பிடல் காஸ்ட்ரோ விளங்­கினார்.

இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி மைப் போராட்­டத்­துக்கு கியூ­பாவின் ஆத­ ரவு கடைசி வரையில் கிடைக்­காமல் போன­மைக்கு, இந்­தியா ஒரு காரணம், காஸ்ட்­ரோவின் கொள்கை இன்­னொரு காரணம்.

இந்­தியா, ரஷ்யா உள்­ளிட்ட நாடு­க­ளு டன் நெருக்­க­மான உறவை கியூபா பேணி வந்­தது. இலங்கைப் பிரச்­சி­னை யில் இந்­தி­யாவின் தலை­யீ­டுகள் நீண்­ட­கா­ல­மா­கவே காணப்­பட்டு வந்­தன. தன்னை மீறி வேறெந்த நாடும் இந்த விவ­கா­ரத்தில் தலை­யீடு செய்­வதை இந்­ தியா விரும்­ப­வில்லை. இந்­தி­யாவின் இந்த நிலைப்­பாட்டை மீறிச் செயற்­பட பிடல் காஸ்ட்ரோ ஒரு­போதும் விரும்­ப­வில்லை.

அதே­வேளை, இலங்­கையில் தமிழ் மக்­களின் போராட்­டத்­துக்­கான ஆத­ரவை இந்­தியா விலக்கிக் கொண்ட பின்­னரும் கூட கியூ­பாவின் தலை­வ­ராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, இந்த விட­யத்தில் தலை­யீடு செய்­யவோ, தமிழ் மக்­க­ளுக்கு தார்­மீக ஆத­ரவை அளிக்­கவோ தயா­ராக இருக்­க­வில்லை.

அணி­சேரா நாடுகள் செல்­வாக்குப் பெற்­றி­ருந்த கால­கட்­டத்தில் பிடல் காஸ்ட்ரோ அதன் செல்­வாக்கு மிக்க தலை­வ­ராக விளங்­கினார். இலங்­கையும் அணி­சேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகித்­ததால், இலங்கை அர­சாங்­கத்தின் நண்­ப­னாக இருக்­கவே காஸ்ட்ரோ விரும்­பினார். இதனால், தமிழ் மக்­க ளின் போராட்­டத்தின் மீதான நியா­யத்தை- உலகப் புரட்­சி­யா­ள­ராக விளங்­கிய பிடல் காஸ்ட்­ரோ­வினால் புரிந்து கொள்ள முடி­ய­வில்லை. உரி­மை­க­ளுக்­காக போரா­டிய ஓர் இனம் மிகப்­பெ­ரிய அழி­வு­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருந்தபோது, கியூபா அமைதி காத்து அந்த அழி­வு­க­ளுக்குத் துணை போயி­ருந்­தது.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் என்ற பெயரில், அமெ­ரிக்கா தொடங்கி வைத்த உல­க­ளா­விய போரை, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் இலங்­கையில் பின்­பற்­றியபோது, கியூ­பாவும் அதற்கு ஆத­ர­வ­ளித்­தமை வேடிக்கை.

போரின் இறு­திக்­கட்­டத்தில் கொள்கை ரீதி­யாக முரண்­பட்ட சக்­திகள் ஒன்­றி­ணைந்து நின்று இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தன. ம ஹிந்த ராஜபக் ஷ அரசின் போர் வெற்றி பெற்­ற­மைக்கு அது பிர­தான கார­ண­மாக இருந்­தது.

எதிர் எதிர் அணியில் இருந்த அமெ­ரிக்­காவும் கியூ­பாவும் ஒன்­றாக நின்­றன. அது­போல இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் ஒன்­றாக நின்­றன. இதனால் தான், தமி­ழர்­களின் ஆயுதப் போராட்டம் நசுக்­கப்­பட்ட போர், ஒரு வித்­தி­யா­ச­மான பரி­மா­ணத்தைக் கொண்­ட­தாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்­திய ஊட­க­வி­ய­லாளர் மோகன் கே.ரிக்கு எழுதி, ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழகம் வெளி­யிட்ட, After the Fall : Sri Lanka in Victory and என்ற நூலில், இந்த விடயம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

“இலங்­கையில் புலி­களை வெற்றி கொண்ட முறை­களை முன்­னு­தா­ர­ண­மா கக் கொண்டு, மியன்மார் உள்­ளிட்ட நாடு­களில் போரை வெற்றி கொள்ளும் முயற்­சிகள் வெற்றி பெற­வில்லை. ஏனென்றால், சர்­வ­தேச சக்­தி­களின் ஒன்­றி­ணைவு மற்றும் சூழ்­நிலை மாற்­றங்கள் கார­ண­மா­கவே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் வெற்றி கொள்­ளப்­பட்­டது. இவ்­வா­றா­ன­தொரு சூழல் இனிமேல் உலகின் எந்­த­வொரு நாட்­டிலும் இடம்­பெற முடி­யாது” என்று இந்­திய ஊட­க­வி­ய­லாளர் மோகன் கே.ரிக்கு தனது நூலில் எழு­தி­யி­ருக்­கிறார்.

இலங்கைப் போர் விட­யத்தில் கியூ­பாவும் கூட தனது பிர­தான எதி­ரி­யான அமெ­ரிக்­கா­வுடன் முரண்­ப­ட­வில்லை.

போர் முடி­வுக்கு வந்த பின்­னரும் கூட, இலங்கை அரசின் நண்­ப­னாக இருப்­ப­தற்கே கியூபா விரும்­பி­யது. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னங்­களைத் தோற்­க­டிப்­ப­தற்கு, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுடன் கியூ­பாவும் இணைந்து செயற்­பட்­டி­ருந்­தது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்தின் மீறல்­க­ளுக்கு எதி­ராகப் பல இலத்தீன் அமெ­ரிக்க நாடுகள் குரல் கொடுத்த போதிலும், கியூ­பாவும் வெனி­சு­வே­லாவும் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தைக் காப்­பாற்­று­வதில் தீவிர கவனம் செலுத்­தி­யி­ருந்­தன.

காஸ்ட்ரோவின் மரணத்தை பேரிழப் பாக தமிழர்கள் நினைவு கூர்ந்தாலும், அவரது புரட்சி தனது நாட்டையும் அதன் நலன்களையும் மாத்திரமே இலக்காகக் கொண்டிருந்தது. தமிழர் விவகாரத்தில் கியூபாவினதும், காஸ்ட்ரோவினதும் அணுகுமுறைகள் இந்த உண்மையைத் தான் உணர வைத்திருக்கிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.