Jump to content

தென்னைமரவாடி கலவரத்தின் 32ஆண்டு – அகலா வடுக்கள்!


Recommended Posts

தென்னைமரவாடி கலவரத்தின் 32ஆண்டு - அகலா வடுக்கள்!

தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கிளாய் காணப்படுகிறது. கொக்கிளாய் நீரேரியும் பறையானாறும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றன. இவைகளின் கரையோரமாக தென்னைமரவாடிக்கிராமம் இருக்கின்றது. தென்னவன் என்ற தமிழ் அரசன் இந்தக் கிராமத்தை ஆண்டதினால் தென்னவன் மரபு வந்த அடி என்பதனால் தென்னைமரவாடி என்ற பெயர் இந்தக் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. காலம் காலமாக இந்தக் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதுநீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு பூர்வீகக் கிராமம்.

முன்னொரு காலத்தில் மக்கள் மகிழ்வும் வளமும் கொண்டதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். இக்கிராமத்தின் ஒரு பகுதி மணலாறுடன் தொடர்புபடுகின்றது. மணலாற்றுப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த சிங்களக்காடையர்கள் 1983 மார்கழி 3ஆம் திகதி அன்று இந்தக் கிராமத்தினுள் நுழைந்து இனக்கவலரவங்களை நிகழ்த்தினார்கள். 14பேர் அந்தக் கவலரத்தில் கொல்லப்பட்டார்கள். மூன்று பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டார்கள். பலர் கடத்திச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஈழப் பிரச்சினையில் முதலில் முதனில் இடம்பெயர்ந்த ஒரு கிராமம்தான் தென்னைமரவாடி.

இந்தக் கிராமத்தில் இனக்கலவரம் நடந்த அன்றையநாளில் நடந்ததை இன்னும் மறக்க முடியாது இருக்கிறார்கள் மக்கள். சந்திக்கும் ஒவ்வொருவரும் அதைக் குறித்துப் பேசுமளவில் அந்தக் கொடுமைகள் ஆழமாக நெஞ்சில் படிந்திருக்கின்றன. கிராமத்தின் மக்கள் தேடித் தேடி வெட்டிக்கொல்லப்படும்பொழுது 18 நாட்கள் காட்டுக்குள் பதுங்கிக் கிடந்து கொக்குத்தொடுவாயிற்குச் சென்று முல்லைத்தீவுக்குச் சென்றாக இந்தக் கொடிய நாட்களை மக்கள் நினைவுகூர்ந்தார்கள். அன்று இந்தக் கிராமத்தைவிட்டு துரத்தப்பட்ட மக்கள் 2010ஆண்டிலேயே மீள்குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் மக்களாகவே வந்து மீள்குடியேறியுள்ளனர்.

இனக்கலவரக் கொலைகளை இன்னமும் மறக்க முடியாத அளவிலேயே நிகழ்கால நிலமைகளும் காணப்படுகின்றன. இந்த மக்கள் கிராமத்தை விட்டு துரத்தப்பட்ட நாட்கள் முதல் அருகில் குடியேற்றப்பட்ட சிங்களக் கிராம மக்கள் இந்த மக்களின் வயல்நிலங்களில் வந்து பயிரச்செய்கையில் ஈடுபடுகிறார்கள்.தென்னைமரவாடிக் கிராமத்தின் ஒட்டுமொத்த நிலங்களையும் அபகரிப்பதற்காகவே இந்தக் கிராமத்தின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டாதிருந்தார்கள். எனினும் தாமாகவே மக்கள் மெல்ல மெல்ல வந்து மீள்குடியேறினார்கள். இலங்கை அரசாங்கம் எல்லைகளில் உள்ள தமிழ் கிராமங்களை தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வருகிறது. அதனால் அந்தக் கிராமங்களுக்கு எந்த விதமான அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்காமல் அதனையே ஒரு நடவடிக்கையாகவும் ஒடுக்குமுறையாகவும் செய்கிறது.

இந்தக் கிராமத்தையும் இன்னொரு மெனிக்பாம் என்றே சொல்வேன். பார்க்கும் இடமெல்லாம் தொண்டு நிறுவனம் அமைத்துக் கொடுத்த தற்காலிக குடிசைகள்தான் தெரிகின்றன. பெரும்பாலான குடிசைகள் இப்பொழுதே பிய்ந்திருக்கின்றன. காற்றும் மழையும் இழுத்துச்செல்லும் இந்தக் கூடாரங்களில்தான் தென்னைமரவாடிக் கிராம மக்கள் கடந்த 2010 முதல் குடியிருந்து வருகிறார்கள். இந்த மக்களின் வீடுகளை அழித்தொழித்த அரசாங்கம் இந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களையும் சுருட்டிக்கொண்டுள்ளது. ஒரு நிரந்தரமான வீடு அல்லது ஒரு பலமான வீட்டைக்கூட இந்தக் கிராமத்தில் காணமுடியவில்லை. போராலும் இனக்கலவரத்தாலும் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் கூடாரங்களில் தவிக்க அருகில் உள்ள 13ஆம் கொலனியில் குடியேற்றப்பட்ட போரால் எந்தப் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்காத பெரும்பான்மையின மக்களுக்கு இந்திய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகள் மக்கள் இல்லாமல் காடு மண்டிய இந்தக் கிராமத்தின் இரவுப் பொழுதுகளை இப்பொழுது யானைகளே ஆழ்கின்றன. இரவாகியதும் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு யானைகள் நுழைந்து மக்களிடம் உள்ள தற்காலிக வீடுகளையும் உடைத்துப்போடுகின்றன. இந்த யானைகளை நினைத்தே உறையும் இரவுகளுடன் இந்த மக்கள் வசிக்கின்றார்கள். அண்மையில் ஒரு சிறுவனுக்கு நடு இரவில் சுகவீனம் ஏற்பட்டது. அவனை வைத்தியசாலைககு கொண்டு செல்ல முடியாத நிலையில் யானைகள் சூழ்ந்துவிட்டன. அதிகாலையில் 13 வயதான அச்சிறுவன் இறந்துபோனான். மின்சாரமும் நல்ல பாதைகளும் வாகன வசதிகளும் இருந்திருந்தால் அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். எப்பொழுதும்ஆபத்தான நிலையிலேயே இந்தக் கிராமமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மணலாறில் உள்ள ஜனகபுர, சிங்கபுர, 13ம் கொலனி முதலிய சிங்களக் கிராமங்களுககு வரும் மின்சார இணைப்புக்கள் இந்தக் கிராமத்தையும் ஊடறுத்துச் செல்கின்றது. ஆனால் இந்தக் கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்தக் கிராமம் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்படுகிறது.இந்தப் புறக்கணிப்பிற்குப் பின்னால்பெரும் அரசியல் உளவியல் உள்ளது. அதில் ஒன்று இந்த மக்களின் காணிகளைப் பறிக்க முற்படும் திட்டம். வயல் இல்லாமல் வாழ்வில்லை என்று சொல்ல வேண்டும். இந்தக் கிராம மக்களின் வயல்கள் இப்பொழுது இவர்களிடம் இல்லை. இந்த மக்கள் அந்த வயல் நிலங்களுக்காகவே இப்பொழுது வாழும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னைமரவாடி, கொhல்லைவெளி, துவாரமுறிப்பு என்று மூன்று குளங்கள் அடங்கப் பெற்ற கிராமத்தில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு இன்று இந்த மக்களுக்கு அவர்களின் பூர்வீக வயல் நிலம் மறுக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக பூர்வீகமாக வயல் விதைத்து வந்த இந்தக் காணிகளை 1983இற்குப் பின்னர் விதைத்து வந்தவர்கள் தொடர்ந்தும் விதைத்து வருகின்றனர். 2010ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறிய பின்னர் கடந்த மூன்று வருடங்களாக தமது வயல் நிலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகின்றார்கள். அடுத்த வருடம் அடுத்த வருடம் என்று சொல்லி ஒவ்வொரு ஆண்டும் சிங்ளவர்கள் வயல்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

பனிக்கவயல் சந்தியில் ஒரு தெரு மணலாறு வழியாக முல்லைத்தீவுப்பக்கம் செல்கிறது. இன்னொரு புல்மோட்டைப்பக்கம் செல்கிறது. பனிக்கவயல் சந்தியிலிருந்து தெனனைமரவாடிச்சந்தி வரை உள்ள வயற்காணிகளை இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் இல்லாமல் காடாக இருந்த இடங்கள் இப்பொழுது குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக வயல் நிலத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தென்னைமரவாடி மக்கள் விதைப்பதற்காக உழுதுவிட்டு வந்தால் மறுநாள் காலையில் சிங்களவர்கள் விதைத்துவிடுகின்றார்கள் அல்லது தென்னைமரவாடி மக்கள் உழுது விதைத்த நிலத்தை மீண்டும் உழுது சிங்களவர்கள் விதைத்து வருகின்றார்கள்.

இந்த நிகழ்வுகள் 30 வருடங்களாக அகதிகளாக நொந்த நிலத்தை இழந்து எங்கெங்கோ எல்லாம் அலைந்த மக்களை கடுமையாக நோகடிக்கின்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி இந்த மக்களுக்கு அநீதி இழைக்கின்றார். அவருக்கு அஞ்சி பிரதேச சபைச் செயலாளரோ, கிராம சேவகரோ எதையும் செய்கின்றார்களில்லை. காணி விடயத்தில் தலையிட்டால் இடமாற்றம் வரும் என்று எச்சரிக்கப்படுகின்றது.. இந்த மக்களை இந்தப் பகுதியை விட்டு துரத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிந்த மக்கள் இதை எதிர்கொண்டேதமது போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இலங்கை அரசும் அதன் நிர்வாகமும் சிங்கள அரசாகவே செயற்படுகின்றது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அந்த ஒடுக்குமுறை இந்தக் கிராமத்திலும் உள்ளது. காணிக்குள் இறங்கவேண்டாம் என்று காவல் துறை கட்டளையிட்ட நிலையில் சிங்களவர்கள் இறங்கி வயல் விதைக்கின்றார்கள். தமிழர்கள் வயல்களுக்குள் இறங்கினால், ஆமி வரும் பொலிஸ் வரும் அமைச்சர் வருவார் என்று தென்னைமரவாடி மக்கள் சொல்கிறார்கள். காணிக்குள் இறங்கவேண்டாம் என அறிவுறுத்திய பின்னரும் ஒருநாள் சிங்களவர்கள் 5 உழவு இயந்திரங்களைக் கொண்டு வந்து உழுதுகொண்டிருந்தார்கள். 119 இலக்கத்திற்கு பத்து முறை அழைத்துச் சொல்லியபோதும் காவல்துறையினர் வரவில்லை என்கிறார்கள் மக்கள்.

இந்த நில அபகரிப்புக் தலைவானாகச் செயற்படுகின்றார் சுசந்த புஞ்சி நிலமே. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சரான இவர் சிங்களப் பேரினவாத நோக்கத்தில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து அவற்றில் சிங்கள மக்களை குடியேற்றத் துடிப்பவர். தற்பொழுது ஜனகபுர, சிங்கபுர போன்ற கிராமங்களின் காவலனாக இவரே உள்ளார். தென்னைமரவாடிக் கிராம மக்களின் வயல் நிலங்களை மாத்திரமல்ல அவர்களின் வாழ் நிலங்களையும் பறிப்பதே இவரது நோக்கம். இவரே முரண்பாடுகளையும் அபகரிப்புக்களையும் தூண்டி விடுகின்றார். தமது வயல்நிலங்களை கோரும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் புஞ்சி நிலமே இராணுவப் புலனாய்வாளர்கள் இறக்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தப் பகுதிக்கு ஒருமுறை வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் புலிகள் இருந்தால் இப்படி எல்லாம் செய்வார்களா? அவர்கள் இல்லாத காரணத்தால்தான் இப்படியெல்லாம் செய்கின்றார்கள் என்று பேசியதாக மக்கள் சொன்னார்கள். மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய இந்தக் கிராமத்திற்கு திருமலையிலிருந்து மின்சாரம் எடுத்துதருவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன் என்று சம்பந்தர் கூறி அன்றிரவே சிங்களத்தில் முற்றுமுழுதாக எழுதப்பட்ட மின்சார பிரதான இணைப்பு கல்வெட்டு ஒன்று திறக்கப்பட்டது. ஆனால் மின்சாரம் வரவில்லை.

83இல் இடம்பெயரும்பொழுது இந்தக் கிராமத்தில் சமார் 450 குடும்பங்கள் வசித்திருக்கின்றன. தற்பொழுது வெறும் 150 குடும்பங்களே திரும்பியிருக்கின்றன. நிலத்தை இழந்து வடக்கு கிழக்கு மாத்திரமின்றி பலர் வெளிநாடும் சென்றுவிட்டனர். லண்டனில் ஏழு வருடங்கள் வசித்துவிட்டு இந்த கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறார் விநாயகம். அவரின் ஒரு மகள் கனடாவிலும் ஒரு மகன் லண்டனிலும் வசிக்கின்றனர். அம்மா பிறந்து வளர்ந்த இடம். அம்மாவுக்கு அவர்களின் மூதாதையர்கள் கொடுத்த நிலம். இதை எப்படி விட்டுவிட்டு வசிப்பேன் என்று குறிப்பிட்டார்.விநாயகம். தற்காலிகமான அவரது வீட்டின் நடுவில் அம்மாவின் படத்தை மாட்டியிருப்தை காட்டினார். வேறு எதுவும் வேண்டாம் எங்களுக்கு இந்த நிலம் மட்டுமே வேண்டும் என்பதுதான் இந்தக் கிராம மக்களின் குரலாக இருக்கிறது.

இந்த ஊரில் இடிந்து போன பின்னரும் இன்னமும் தொன்மையை உணர்த்தும் கட்டிடங்களுடன் இருக்கிறது கோயில் கட்டிடம். கொட்டடி கந்தசுவாமி கோயில் எனப்படும் இந்தக் கோயிலை திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மிகவும் தென்மை வாய்ந்த இக் கோயில் பல நூறு வருடங்களின் முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் உள்ள சில கிணறுகள்கூட அவ்வாறு பழமைய மிகுந்த கட்டிட கலையால் அமையப்பெற்றிருக்கிறது. கிரமாத்தில் பழைய வீடுகளில் எஞ்சியிருந்து இரண்டு வீடுகளின் சுவர் மாத்திரமே. அதில் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் விரைவில் நாடு திரும்ப இருக்கிறார்கள். வெளிநாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த அவர்கள் இந்தக் கிராமத்திற்கே திரும்புகிறார்கள்.

இன்று எங்களுக்காக கேக்கிறதுக்கு ஆட்கள் இல்லை என்பதுதான் இச்சனங்களின் நெஞ்சில் பெருந்துயரமாய் இருக்கின்றது. திருமலை நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது தென்னைமரவாடிக் கிராமம். முல்லை நகரத்திலிருந்து கொக்கிளாயின் எதிர் கரையில் இருந்தாலும் மணலாற்றின் வழியாக வரும் தரைவழிப்பாதை ஊடாகவே தென்னைமரவாடிக் கிராமத்திற்கு வர வேண்டும். நகரங்களுக்கும் பெரு வழிகளுக்கும் மிகத் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தின் கைவிடப்பட்ட ஒடுக்குமுறை மிகுந்த காட்சி என்பது ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் துயரத்தின் குறுக்குவெடடு முகமாகவே தெரிகிறது.

இந்தக் கிராம மக்களின் வயல் நிலங்களை மீட்பது மிகவும் அவசியமானது. வயல் நிலங்கள் இல்லாவிட்டால் இந்த மக்களுக்கு தொழிலோ வருமானோ இருக்காது. அதனால் இந்த மக்கள் இந்த இடத்தைவிட்டு இடம்பெயர நேரிடும். இந்த மக்களின் வயல்நிலங்களை அபகரிப்பவர்களின் நோக்கமும் அதுவே. ஏனெனில் வடக்கு கிழக்கிற்கு இடையில் உள்ள கிராமங்களை அபகரித்து அங்கு சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழ் தாயகத்தை பிளவுபடுத்துவதே திட்டம். தமது வாழ் நிலத்திற்காவும் வயல் நிலத்திற்காகவும் போராடும் தென்னைமரவாடிக் கிராம மக்களுக்காக அவசியமாகவும் அவசரமாகவும செயலாற்ற வேண்டும். ஏனெனில் இந்த கிராமத்தில் கைத்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கு என்கிற தாயகத்தின் இருதயத்தில் கை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பாளர்கள்.

-தீபச்செல்வன்

http://thuliyam.com/?p=50237

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.