Jump to content

ருசியியல் சில குறிப்புகள்


Recommended Posts

சனிக்கிழமை சமையல்: ருசியியல் சில குறிப்புகள்

 

 
 
 
pa_ra_3098373f.jpg
 
 
 

20-ம் நூற்றாண்டின் விரோதி கிருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக் கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக் குள் சொன்னான். அன்று முதல் இன்று வரை நான் மற்றொன்றினைப் பாராதவன்.

பாரத தேசத்தில் தாவர உணவாளி களின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும், இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க் கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசார பயங்கரவாதிகளின் வீடுகளில் கூட, அடுத்தத் தலைமுறையின் ஊட்டச்சத்து நலன் கருதி ‘வெளியே’ முட்டை சாப் பிட்டுக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கி விட்டார்கள். அது முட்டையின் தாய்க்கு முன்னேற்றம் அடைவதும் காலக்கிரமத்தில் நடந்துவிடுகிறது.

‘‘ஒரு முட்டையை வைத்துக்கொண்டு எத்தனை விதமான பதார்த்தங்கள் சமைக்க முடியும்?’’ என்று என் கல்லூரி தினங்களில் வி.பி. சற்குணநாதன் என்ற நண்பனொருவன் எடுத்துச் சொன்னான். தன் இயல்பில் முட்டைக்கு ருசி கிடை யாது. ஆனால், சேர்மானங்கள் சரியாக அமைந்துவிட்டால் அதை அடித்துக் கொள்ள இன்னொன்று கிடையாது என்பதும் அந்தப் புண்ணியாத்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்தான். ‘‘இன்றைக்கு உனக்கு முட்டையின் அதி உன்னத ருசியை நான் அறிமுகப்படுத்தியே தீருவேன்” என்று சொல்லியிருந்தான். எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந் தது. ஒரு சிறு ஆர்வமும், உடன் பாரம் பரியத் தடையுணர்வும். சரி போ, தூணி லும் துரும்பிலும் இருப்பவன் முட்டை யில் மட்டும் இல்லாமலா போய்விடு வான்? அவன் நம்மை அளித்துக் காப்பான்.

வி.பி. சற்குணநாதன் என்னை அடை யாறு மத்திய கைலாசத்துக்கு எதிர்ப்புறச் சாலையில் அப்போதிருந்த ஓர் அசைவ மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றான்.

உள்ளுக்குள் எனக்கு உதறிக்கொண் டிருந்தது. ஒரு கஞ்சா அல்லது கள்ளச் சாராய அனுபவத்துக்கு முதல்முறை போகும் பதற்றம். வெளியே காட்டிக் கொள்ளாதிருக்க நிரம்ப சிரமப்பட்டேன். முன்னதாக வீட்டுக்குத் தெரியாமல் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் உறவுக்கார உத்தமோத்தமர்கள் இரண்டு பேரை மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன். பித்தெனத் தொடங்கி வைத்த பிள்ளையார் சுழியர்கள். தவிர வும் அவர்கள் கட்டுடல் காளையர்கள். நானோ தர்பூசனிக்குத் தார்ப்பாலின் சுற்றியது போலிருப்பவன்.

‘‘அதாண்டா சங்கதியே. தயிர் சாதம் சாப்ட்டு ஒன்னால ஃபிட்டா இருக்கவே முடியாது. நியூட்ரிஷன் பர்சண்டேஜ் அதுல ரொம்பக் கம்மி. சொல்லப் போனா, இல்லவேயில்ல. நீ திங்கற எதுலயுமே புரோட்டீன் கிடையாது. தெரி யுமா ஒனக்கு?’’ என்றான் சற்குண நல்லவன்.

ஒரு கலவையான உணர்வில் அன்று நானிருந்ததை இப்போது நினைத்துக் கொள்கிறேன். அதற்கு மேலே ஒரு லேயர் பயத்தின் டாப்பிங்ஸ்.

ஆச்சா? மெஸ்ஸுக்குச் சென்று உட்கார்ந்தோம். அழுக்கு பெஞ்சும் ஆடியபாத டேபிளும். ‘‘என்ன சாப்பிடற?’’ என்றான் சற்குணநாதன். என்ன சொல்லலாம்? ஒரு பிளேட் மைசூர் போண்டா. ஒரு மசால் தோசை. பிறகொரு காப்பி!

சற்குணநாதன் முறைத்தான். ‘‘பரோட்டா சொல்றேன். முட்ட பரோட்டா. இங்க அது செம ஸ்பெஷல்’’ என்றான்.

ஆர்டரே கிடைத்துவிட்ட மாதிரி சப்ளையர் நகர ஆரம்பித்தபோது, உயிர்க்குலை நடுங்கும் தொனியில் அலறினேன். ‘‘இருங்க… இருங்க!’’

‘‘என்னடா?’’ என்றான் உத்தம புத்திரன்.

‘‘வேணாண்டா!’’

ஒரு மாதிரி பார்த்தான். ‘‘போடா லூஸு’’ என்று சொல்லிவிட்டு, தனக்கு மட்டும் எடுத்து வரச் சொல்லி சாப்பிட்டு முடித்தான்.

அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங் கள் அவன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா. நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா… கேட்டுக் கேட்டுப் பரிமாறிய சப்ளையரின் அக்கறையே அந்த உணவின் ருசியாக மாறியிருக்க வேண்டும்.

பிறகொரு சமயம் சற்குணநாதன் சொன்னான்: ‘‘வாழ்நாள்பூரா ஒனக்கு ருசின்னா என்னன்னே தெரியாமப் போயிடப் போவுது பாரு!’’

அந்தச் சொல் என்னை உறுத்தியது. ருசி என்பது காற்றைப் போல், கடவுள் போல் அங்கிங்கெனாதபடி நிறைந்திருப் பதல்லவா? ஒவ்வோர் உணவுக்கும் ஒரு ருசி. ஒவ்வோர் உணர்வுமே ஒரு ருசிதான்! இந்தப் பேருலகில் ருசியற்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தோன்றியது.

ஆனால், சிறந்தவற்றைத் தேடிப் பிடிப் பது ஒரு சாகசம். அது ஒரு வீர விளை யாட்டு. பெரும்பாலும் காலைவாரி, எப் போதாவது காலர் தூக்கி விட்டுக்கொள் ளச் செய்கிற சுய குஸ்தி. நான் உணவில் தோயத் தொடங்கியது அதன் பிறகுதான்.

நான் வசிக்கும் பேட்டையில் அக்காலத்தில் தள்ளுவண்டி சுண்டல் வெகு பிரபலம். மணப்பாறை முறுக்கு, திருநெல் வேலி அல்வா, காஞ்சிபுரம் இட்லிபோல அந்தச் சுண்டலுக்கு வாழ்நாள் சந்தா தாரிகள் அதிகம். பத்து இருபது கிலோ மீட்டர் பஸ்ஸேறி வந்தெல்லாம் சாப்பிட்டுப் போகிறவர்கள் இருந்தார்கள். ஒரு பிளேட் சுண்டல் ஐந்து ரூபாய். அதில் எல்லாரீஸ்வரி பொட்டு சைஸுக்கு நாலு மசால் வடைகளை உதிர்த்துப் போட்டு மேலே கொஞ்சம் வெங்காயம், புதினா, கொத்துமல்லி தூவி, அதற்கும் மேலே என்னமோ ஒரு பொடியைப் போட்டுத் தருவார்கள்.

எத்தனை விசாரித்தாலும் அந்தப் பொடியில் என்னென்ன ஐட்டங்கள் கலந் திருக்கின்றன என்பதைப் பிரகஸ்பதிகள் சொல்ல மாட்டார்கள். ஆனால், அந்த அரை ஸ்பூன் பொடித் தூவல் கொடுத்த மணம் பேருந்து நிலையம் முழுவதையும் மணக்கச் செய்துவிடும்.

பிறகு வந்த துரித உணவகங்கள் சுண்டல் கடைகளைச் சாப்பிட ஆரம்பித் தன. பெரிய ஓட்டல்களின் பிராந்தியக் கிளைகள், சிறிய ஓட்டல்களோடு சேர்த் துத் துரித உணவகங்களை விழுங்கத் தொடங்கின. பீட்சாக்காரர்கள் வந்தார் கள். டோர் டெலிவரி சவுகரியத்தில் ஓட்டல்காரர்களின் பிழைப்பில் அரைப் பிடி மண்ணள்ளிப் போட்டார்கள்.

ஆயிற்று, முப்பது வருஷம். அந்தத் தள்ளுவண்டி சுண்டல் கடை பொடியின் நெடி மட்டும் என் நாசியில் அப்படியே தேங்கிவிட்டது!

இடைப்பட்ட காலத்தில் நானொரு உணவுத் தீவிரவாதியாக மாறியிருந் தேன். உடலைத் தாங்கி நிற்பது நாக்கு என்று முடிவு செய்து சகட்டு மேனிக் குச் சாப்பிடத் தொடங்கினேன். இனிப் பென்றால் குவிண்டாலில். காரமெனில் கிலோவில். பட்சண பலகாரம் எது வானாலும் பத்துக்குக் கீழே தொட்டதே கிடையாது.

சொகுசுக்கு பங்கமின்றி என்னளவு தின்று தீர்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கென்யாவில் இருந்து மொடொகெ (Moteke - ஒரு பிரமாதமான வாழைப்பழ டிஷ்), ஜப்பானில் இருந்து யூபா (சோயா பாலில் படியும் ஏடில் இருந்து செய்யப்படுவது) அரபு நிலத்தில் இருந்து ஒட்டகப் பால், சுவிச்சர்லாந்தில் இருந்து சாக்லேட், சைனாவில் இருந்து தேயிலைத் தூள், ஆஸ்திரேலியாவில் இருந்து அசகாய சீஸ் என்று தேடித் தேடி வரவழைத்துத் தின்ற ஜாதி நான்.

ஊறிய ருசிக்கு முன்னால் ஏறிய கலோரிகள் எம்மாத்திரம்? ஆனால், அனைத்தையும் நிறுத்திய நாளில்தான் எனக்கு அந்த சுண்டலுக்கு மேலே போட்ட வண்டலின் சூட்சுமம் பிடிபட்டது.

இது பேசித் தீராத கதை. மெல்லப் பேசுவோம்.

 

- சுவை தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/சனிக்கிழமை-சமையல்-ருசியியல்-சில-குறிப்புகள்/article9408677.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 2: அதி உன்னத ஊத்தப்பம்

 
 
 
 
oothappam_3101905f.jpg
 
 
 

சென்ற வாரக் கந்தாயத்திலே குறிப் பிட்ட விரோதி கிருது வருஷத்து ஜனனதாரி பாராகவன், எனக்கு ரொம்ப நெருக்கமான சினேகிதன். எவ் வளவு நெருக்கம் என்று கேட்பீர் களானால், வங்கியில் பணமெடுக்கப் போகிறவர் நிற்கிற வரிசை நெருக்கத் தைக் காட்டிலும் பெரிய நெருக்கடி நெருக்கம். நடை உடை பாவனையில் ஆரம்பித்து, எடை இடை சோதனை வரைக்கும் என்னை அப்படியே காப்பியடிப்பது அவன் வழக்கம். ரொம்ப முக்கியம், அவனும் ஒரு சிறந்த சாப்பாட்டு ராமன்!

ஓர் உதாரணம் சொன்னால் உங் களுக்கு அவனை அல்லது என்னைப் பின் தொடரலாமா? வேண்டாமா என்று முடிவு செய்ய உபகாரமாயிருக்கும்.

ஒரு சமயம் அவனும் நானும் உத்தி யோக நிமித்தம் காஞ்சிபுரத்துக்கு சிறு பயணமொன்று மேற்கொண்டிருந் தோம். உத்தியோக நிமித்தமென்பது ஒன்றரை மணி நேர வேலையே. எனவே, அதை முடித்த பிற்பாடு என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு பாராகவன் யாருக்கோ போன் செய் தான். அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது. செட்டியார் கடை போன்தான். ஒரு ஏழெட்டு நிமிடம் பேசியிருப்பான். கவனமாக என்னிடம் காசு வாங்கி கடைக்காரருக்குக் கொடுத்துவிட்டு, ‘‘நாம் சில மணி நேரம் இங்கே ஊரைச் சுற்றுவோம். இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பி சின்ன காஞ்சிபுரத்துக்குப் போகிறோம்’’ என்று சொன்னான். பேருக்கொரு தம்பி இருந்தென்ன? ஊருக்கே ஒரு தம்பி உண்டென்றால் அது இங்கேதான்!

மணி அப்போது மதி யம் பன்னிரண்டரை என்று நினைவு. ஒன்றிரண்டு மணி நேரம் சுற்றிக்கொண்டே இருந்தோம். களைப்பாகிவிட்டது. டேய், இரவு வரை ஊர் சுற்றிக்கொண்டாவது எதற்காக அல்லது யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? திருவெஃகா யதோத்காரி யைச் சேவிக்கவா? திருமழிசையாழ்வார் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் சுமாராக எனக்கும் வெண்பா எழுத வரும். விரும்பிக் கேட்பாரானால் ஆழ்வா ரைப் போல் அவர் பேருக்கொன்று எழுத ஆட்சேபணை இல்லை. எனக்காக அவர் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு நான் நின்றிருந்த அரப்பணச் சேரிக்கே வர முடிந்தால் இன்னும் விசேடமாயிற்றே? கால் வலி கொல்கிறது மகனே.

இல்லை. இது பக்தி சம்பந்தப்பட்ட தில்லை. பசி சம்பந்தப்பட்டது என்று பாராகவன் சொன்னான். மாலை வரை நடந்து தீர்த்தால் பசி பிறாண்டும். அதோடு ஒரு சினிமாவுக்குப் போவோம். உள்ளூர் தியேட்டரில் ‘என் தங்கை கல்யாணி’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொலைப் பசியோடு கூட உணர்ச்சி வேகங்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம். சின்ன காஞ்சிபுரம். உலகின் அதி உன்னத ஊத்தப்பமானது அங்கே உள்ள ஒரு ராயர் மெஸ்ஸில்தான் கிடைக்கும்.

ஆன்மாவுக்கு நெருக்கமானவன் யாருக்கோ போன் செய்து விசா ரித்து இப்படியொரு தகவலைச் சொல்லும்போது நான் எப்படி மறுக்க முடியும்? அன்று முழுநாளும் சுற்றித் தீர்த்துவிட்டு சின்னக் காஞ்சிபுரம் ராயர் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டே முக்கால்.

அந்த மெஸ்ஸானது இருட்டிய பிறகுதான் திறக்கும். எட்டு மணிக்கு மேல்தான் கூட்டம் வரும். பதினொரு மணிக்குள் எப்படியும் முன்னூறு நாநூறு ஊத்தப்பங்கள் கபளீகரமாகிவிடும் என்றார்கள்.

இது எனக்கு வியப்பளித்தது. நான றிந்த காஞ்சிபுரமானது, இட்லிக்குப் புகழ்பெற்றது. ரெகுலர் இட்லியல்ல. ‘காஞ்சிபுரம் இட்லி’ என்பது வைஷ்ணவ ருசி அடையாளங்களுள் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. வரதராஜப் பெருமாள் இன்றளவும் தளதளவென மின்னுபுகழ் தேக சம்பத்தோடு இருப்பதற்கு அதுவே காரணம்.

மூன்று தம்ளர் அரிசிக்கு ஒரு தம்ளர் உளுத்தம்பருப்பு. இரண்டையும் சேர்த்தே அரைக்க வேண்டும். கிரைண்டரெல்லாம் அநாசாரம். உரலில் இட்டுத்தான் அரைக்கவேண்டும். அது வும் அரை நறநறப்புப் பதத்தோடு அரையல் நின்றுவிட வேண்டும். பிறகு சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை என ஐந்து ஐட்டங்களை அதே நறநறப்புப் பதத்தில் இடித்து அதன் தலையில் கொட்டி, மேலுக்கு அரை தம்ளர் உருக்கிய நெய், இரண்டு கரண்டி நல்லெண்ணெய் சேர்ப்பது அவசியம். உப்பு சேர்த்துக் கிளறி பொங்க வைத்துப் பிறகு இட்டு அவித்தால் ‘இட்டவி’ என்கிற இட்லி தயார். எள் சேர்த்து அரைத்த மிளகாய்ப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைக் கிலோ கணக் கில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். நிறுத்தத் தோன்றாது.

ஆனால், இங்கு இதனை நிறுத்தி விட்டு மேற்படி ராயர் கடை ஊத்தப்பத் துக்கு வருவோம். நான் அங்கே நான்கு ஊத்தப்பங்களுக்கு ஆணை கொடுத்தேன். காலை சாப்பிட்டதற்குப் பிறகு வேறெதையும் உண்டிராதபடியால் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. இத்தனை மெனக்கெட்டுக் காத்திருந்து வந்திருக்கும் ராயர் கடை ஏமாற்றிவிடக் கூடாது என்று தவிப்பு ஒருபுறம். பத்து மணிக்குமேல் இந்த வெண்ணைக்குச் சென்னை செல்லப் பேருந்து கிட்டுமா என்கிற பயம் ஒருபுறம்.

எல்லாம் சிறிது நேரம்தான். ஊத்தப்பங் கள் வந்தன. பொன்னிறத்துப் பெண் ணுக்கு சந்தனக்காப்பு இட்டாற்போன்ற தொரு நிறம். நடுநடுவே குழித்துக் கொண்ட ஓட்டைகளில் உலகளந்த பெருமாள் உறைந்திருக்கலாம். இதிலும் நெய் - நல்லெண்ணெய் கலந்திருந்ததை நாசி காட்டிக்கொடுத்தது. தொட்டதும் சுட்டதில் ஒரு சுகமிருந்தது. விண் டெடுத்து வாயில் இட்டபோது விண்டுரைக்க முடியாத அதிருசியை அனுபவித்தேன்.

ஒரு விஷயம். தோசை மாவு புளித்தால் ஊத்தப்பம் என்பது அக்வாகார்டில் வடிகட்டிய அயோக்கியத்தனம். ஊத்தப் பத்துக்கு நிறைய மெனக்கெட வேண் டும். அதிகம் புளிக்காத மாவில் சேர்க்கப்படும் ரவையின் அளவு இதில் முக்கியம். தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய்த் தூவல் முக்கியம். விதை எடுத்த பச்சை மிளகாயின் நேரடி வாசனை அதிமுக்கியம். மாவில் சீரக, பெருங்காயச் சேர்மானம் அனைத்திலும் முக்கியம். இவை அனைத்துக்கும் பிறகு சமைப்பவரின் பொறுமை. வருடும் சூட்டில்தான் அடுப்புத் தீ இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்து முடிக்க இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். திருப்பிப் போட்டு மூடி வைத்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள்.

உலகத்தர ஊத்தப்பம் செய்வதென் பது ஆயகலை அறுபத்து நான்கைவிட அசகாயக் கலை. அதை அந்த ராயர் மெஸ்ஸில்தான் நான் உணர்ந்தேன். என்ன ருசி! எப்பேர்ப்பட்ட ருசி! கிரங்கிப் போய் உண்டுகொண்டிருந்தபோது, ‘‘பொடி ஊத்தப்பம் கொண்டு வரவா?’’ என்றார் ராயர். பொடி தோசை போலப் பொடி ஊத்தப்பம் போலும். சரி அதற்கென்ன? கொண்டு வாருங்கள்.

வந்தது. ஒரு விள்ளல். அடுத்த விள்ளல். மூன்றாவது விள்ளலில் நான் அலறியேவிட்டேன். ‘‘ஐயா இது என்ன பொடி? எப்படி இதில் இத்தனை ருசி!’’

கல்லாதாரி சிரித்தார். ‘‘என்ன பொடின்னு தோணறது?'’ என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

அது மிளகாய்ப் பொடிதான். அதைத் தாண்டி அதில் வேறு ஏதோ கலந்திருக் கிறது. என்னவாயிருக்கும்? அவர் சொல்ல வில்லை. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டு, விடைகொடுத்துவிட்டார்.

ஏற்கெனவே சுண்டலின் மேலிட்ட வண்டலின் சூட்சுமம் புரியாது குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு இது இரண் டாவது தாக்குதல். ஏதேது, முடியின்றி மூவுலகில்லாதது போலப் பொடி யின்றி உணவின் ருசியில்லை போலிருக்கிறதே?

சரி, முதலில் பொடியைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிப் பார்த்துவிடுவோம் என்று அன்று முடிவு செய்தேன்.

 

- ருசி தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-2-அதி-உன்னத-ஊத்தப்பம்/article9421300.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 3: நெய்யில் வறுத்த அதிருசி பாதாம்!

 

 
 
 
 
rusi_3104981f.jpg
 
 
 

மதராசப்பட்டணத்தில் புயல் மழைப் புரட்சி எல்லாம் நடக்கும் என்று யாரும் சொப்பனத்தில்கூட நினைத் துப் பார்த்திருக்க முடியாத கடந்த ஜூன் மாதத்திலேயே ஒரு பெரும் புரட்சி இப்புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழ்ந்தது. அது புயல் புரட்சியல்ல. எடைப் புரட்சி. அதுவும் ஒரு நபர் புரட்சி. புரட்சியாளர் வேறு யார்? எனது பிராண சிநேகிதன் பாராகவன்தான்.

அன்றைக்கு அவனுக்கு காஷ்மீரி புலாவ் மசக்கை. ஒரு தமிழ்ப் புலவனை காஷ்மீரப் புலவன் எவ்வாறு எதிர்கொள் வான் என்று பார்த்தே விடுவது. கடிக்குக் கடி நெரிபடும் வறுத்த முந்திரிகள். தவிரவும் பொடியாக நறுக்கிப் போட்ட பரவசப் பைனாப்பிள். இங்கே சில உலர்ந்த திராட்சைகள். அங்கே சில மாதுளை உதிரிகள். முற்றிலும் நெய்யில் சமைத்த நேர்த்தியான மதிய உணவு. ஒரு கட்டு கட்டினால் சொர்க்கம் நாலடி தூரத்தில் தட்டுப்படும்.

எனவே போனோம். எனவே சாப்பிட்டோம்.

வெளியே வந்தபோது பாராகவன் தன்னைச் சற்றுக் கனமாக உணர்ந்தான். எப்போதுமே கனபாடிகள்தான். இருந்தா லும் அன்றைக்குச் சற்றுக் கூடுதல் கன வானாகத் தெரிந்தபடியால் எடை பார்க்க லாமா என்று என்னைக் கேட்டான்.

இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம்? நாம் எடை வளர்ப்பவர்கள். என்றைக்கு எடை பார்ப்பவர்களாக இருந்திருக்கிறோம்?

பரவாயில்லை, இன் றொருநாள் பார்க்கலாம் என்றான். குத்து மதிப்பாக, எண் பத்தைந்துக்கும் தொண்ணூற்றைந்துக் கும் இடைப்பட்ட ஏதோ ஒரு கிலோவில் எடையானது இடைகாட்டி நிற்கும் என்று பட்டது. சரி கேட்டுத் தொலைத்துவிட் டான்; எனவே பார்த்துத் தொலைத்துவிடு வோம் என்று எடை காட்டும் இயந் திரத்தின் மீதேறி நின்றேன். ஒரு ரூபாய் நாணயம் உள்ளே போனதும் அந்தப் பச்சையழகி கண்ணடித்தாள். அடேய், நீ நூற்றுப் பதினோரு கிலோ.

பாராகவனாகப்பட்டவன் உண்மை யில் அன்று மிரண்டு போனான். வளர்ச்சி விகிதம் இப்படியெல்லாம் தறிகெட்டுப் போனால் என்னாவது? தவிரவும் அவன் தமிழ்நாட்டு எதிர்காலம். அவனுக்கு என்னவாவது ஒன்றென்றால் ஒரு சமூ கமே படுத்துவிடும். சமூகமென்பது அவ னோடு சேர்த்து இரண்டரை பேர்தான் என்றாலும் இங்கு படுப்பதுதான் பிரச்சினை.

சரி விட்றா பாத்துக்கலாம் என்று சமா ளிக்கப் பார்த்தேன். அவன் கேட்கிறபடி யாக இல்லை. பத்தாத குறைக்கு அவனது மனைவி என்னமோ ஒரு புதுவித டயட் உள்ளதென்றும், அதில் பட்டினி கிடக்க வேண்டாம் என்றும், இப்போது உண் பதைக் காட்டிலும் இன்னும் ருசியாக உண்ணும் சாத்தியங்கள் உண்டென்றும், மின்னல் வேகத்தில் எடை குறையும் என்றும் சொல்லி வைக்க, அன்று முதல் பாராகவனின் நடவடிக்கைகள் சுத்தமாக மாறிப் போயின.

நாற்பத்தியைந்து வருடங்களாக நான் பார்த்த நல்லவனா அவன்? வெட்கம்! வெட்கம்! அரிசியைத் தொட மாட்டானாம். சர்க்கரையை மறந்துவிட்டானாம். பழங் கள் கிடையாதாம். எண்ணெய் கிடையா தாம். பொழுதுக்குப் பத்திருபது பூரி தின்னக்கூடியவன், இனி கோதுமை தேசத்து ஹன்சிகா மோத்வானியைக் கூட ரசிக்க மாட்டேன் என்று சொன்ன போது எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

அரிசி கோதுமை மட்டுமல்ல; அதனையொத்த வேறு எந்த தானியமும் கிடையாது. பருப்புகள் கிடையாது. பாதாம் அல்வா கிடையாது. ஐஸ் க்ரீம் கிடையாது, மைசூர்பா கிடையாது. உருளைக்கிழங்கு போண்டா கிடையாது. சே, மனிதன் எப்படி வாழ்வது?

அவன் ரொம்பத் தீவிரமாகத் தனது புதிய டயட்டைப் பற்றி என்னிடம் விளக்கத் தொடங்கினான். அதில் எனக்குப் புரிந்ததைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். இப்போது அந்தப் பொடி விவகாரத்தை முடித்துவிடுவோம். இரண்டுவாரக் கடன் பாக்கி.

பாராகவன் தனது புதிய டயட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கி சரியாக ஒரு மாத காலம் கழித்து “வா நாம் எடை பார்க்கலாம்” என்று மீண்டும் அந்த ஓட்டல் வாசல் நாசகார இயந்திரத்துக்கு அழைத் துச் சென்றான். என்ன ஆச்சரியம்?! இயந்திரமானது இம்முறை எடை 102 கிலோ என்றது. ஒரு மாதத்தில் ஒன்பது கிலோ எப்படிக் குறையும்? ஒன்று எடை இயந்திரம் பழுதாகியிருக்க வேண்டும். அல்லது பாராகவன் ஒரு யோகியாகி, பட்டினி பயின்றிருக்க வேண்டும்.

இரண்டும் இல்லை. என் னோடு வா என்று வீட்டுக்கு அழைத்துச் சென்று நூறு பாதாம் பருப்புகளை நெய்விட்டு வறுக்கத் தொடங்கினான்.

டேய் கிராதகா! இது முழுக் கொழுப் பல்லவா? இது உன் னைக் கொன்று விடுமே! இதையா தின மும் உண்கிறாய்?

பொறு நண்பா!

அந்த பாதாமானது பொன்னிறத்தில் வறு பட்டதும் ஒரு கப்பில் கொட்டினான். உப்பு, மிளகுத் தூள் சேர்த்தான். அதன் பின் ஏதோ ஒரு பொடியை தாராளமாக ஒன்றரை ஸ்பூன் அதன் தலை யில் கொட்டி நன்றாகக் கிளற ஆரம்பித்தான். “என்ன பொடி” என்று கேட்டேன்.

“இது தனியா பொடி. சிவப்பு மிள காய், நாலு முந்திரி சேர்த்து மிக்சியில் அரைத்தது” என்று சொன்னான். எனக்கு திக்கென்றது. பாதாமுக்கு முந்திரித் தூவலா? எம்பெருமானே!

“இதோ பார். பாதாம் ருசியானது தான். அதுவும் நெய்யில் வறுத்த பாதாம் அதிருசி ரகம். உப்பு, மிளகுத் தூள் போதவே போதும்தான். ஆனால், அதற்கு மேல் அதில் ஏதோ ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. அது இதில் இருக்கிறது. சற்று ருசித்துப் பார்’’ என்று இரண்டு பாதாம் பருப்பு களை ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தான். பொடி போட்ட பாதாம்.

மென்று பார்த்தபோது அபாரமாக இருந்தது.

“ருசி என்பது காண்ட்ராஸ்டில் உள் ளது மகனே! சாலையில் போகிற சிட்டுப் பெண்களைப் பார்! நீல டாப்ஸுக்கு சிவப்பு ஸ்கர்ட் ஏன் அணிகிறார்கள்? அது கண்ணின் ருசிக்கு அளிக்கப்படும் கருணைக் கொடை. கதிரி கோபால்நாத் சாக்ஸஃபோன் கேட்டிருக்கிறாயா? அநியாயத்துக்குத் தவிலைப் பக்கவாத்தியமாக வைப்பார். அது காதுகளின் ருசிக்குக் கிடைக்கும் காண்ட்ராஸ்ட் காராசேவு. அடுப்பில் கொதிக்கும் சாம்பாரை நுகர்ந்துவிட்டு சட்டென்று வண்டியின் பெட்ரோல் டாங்க் கைத் திறந்து அந்த வாசனையை சுவா சித்துப் பார். உன் நாசியின் மிருதுத் தன்மை கூடியது போலத் தோன்றும்!’’

எனக்குக் கிறுகிறுத்துவிட்டது. என்ன ஆகிவிட்டது இவனுக்கு?

அவனேதான் சொன்னான். “நான் இந்த பாதாமுக்கு என்ன பொடி சேர்க் கலாம் என்று ஆராய்ச்சி செய்துகொண் டிருந்தபோதுதான் உள்ளுணர்வு அந்த வாசனையைக் கண்டறிந்தது. அன்று பாய்க்கடை தள்ளுவண்டி சுண்டலில் தூவப்பட்டது தனியா பொடிதான். ஆனால், அதில் நாலு கற்பூரவல்லி இலை சேர்த்து இடிக்கப்பட்டிருந்தது. சின்னக் காஞ்சிபுரத்துப் பொடி ஊத்தப் பம் நினைவிருக்கிறதா? அந்த மிளகாய்ப் பொடியோடு ரெண்டு ஏலக்காயும் எள்ளும் இடித்துச் சேர்த்திருந்தார்கள்!’’

ருசியின் அடிப்படை, நூதனம். அது மணத்துக்குச் சரிபாதி இடமளிப்பது. ஆனால், டயட்டில் ருசிக்கு ஏது இடம்?

அவன் சிரித்தான்.

நாக்கைக் காயப்போடுவது டயட் டல்ல நண்பா; உடம்புக்கு ஊறானதைக் கண்டுபிடித்து நகர்த்துவதுதான் டயட் என்று சொன்னான்.

 

- மேலும் ருசிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-3-நெய்யில்-வறுத்த-அதிருசி-பாதாம்/article9431748.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 4: பசி, சீனி, தானியம் கூடாது!

 

 
taste_3108367f.jpg
 
 
 

எனக்கு தேக திடகாத்திரம் காட்டுவதில் இஷ்டம் கிடையாது. ஓடுவது, பஸ்கி எடுப்பது, கனம் தூக்குவது, ஜிம்முக்குச் சென்று ஜம்மென்று ஆவதெல்லாம் சொகுசு சவுகரியங்களுக்கு ஹானியுண்டாக்கும். அவை எப்பவுமே நமக்கு ஆகாத காரியம். உட்கார்ந்த இடத்தில் உலகத்தை ஜெயிக்க என்னென்ன பிரயத்தனங்கள் உண்டோ, அதைச் செய்து பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. எனது அதிகபட்ச ஆரோக்கியம் சார்ந்த எதிர்பார்ப்பு என்னவென்றால், குனிந்தால் நிமிர்ந்தால் மூச்சுப் பிடித்துக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்பதுதான்!

ஆ, மூச்சுப்பிடிப்பு! அது தர்ம பத்தினி இனக்குழுவைச் சேர்ந்ததொரு காத்திர இம்சை. வந்துவிட்டால் லேசில் போகாது. உருண்டு திரண்ட உடற்பந்தில் அந்து எந்தப் பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும் சொல்ல முடியாது. நான் உரமிட்டு வளர்த்த சதைப்பற்று மிக்க உடலானது, விதியேபோல் அடிக்கடி அப்பிடிப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவது வழக்கம். கடந்த சில வருஷங்களில் இந்த மூச்சுப் பிடிப்புச் சங்கடமானது ஒரு தீவிரவாத மனோபாவத்துடன் அடிக்கடி என்னை உபத்திரவப்படுத்திக்கொண்டிருந்தது. எதைக் குறைத்தால் இதைச் சரிக்கட்டலாம் என்று யோசித் துக்கொண்டிருந்தபோதுதான் எடை குறைத்தால் சரியாகும் என்று அசரீரி கேட்டது.

அங்கும் சிக்கல். நம்மால் ஓடியாட முடியாது. டயட் இருந்து குறைக்கலாம் என்றால் பசி தாங்கும் வல்லமை கிடையாது. நாவையும் நாபிக்கமலத்தையும் காயப்போட்டு வாழ்வதைக் காட்டிலும் ஜீவன்முக்தி அடைந்துவிடலாம். இது வெறும் பலவீனங்களாலான ஜீவாத்மா. பழிவாங்குதல் தகாது.

வேறென்ன செய்யலாம் என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்தபோது சில உத்தமோத்தமர்கள் ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி என்பதை இரு வழிகளில் உற்பத்தி செய்யலாம். முதலாவது மாவுச்சத்து மூலம். அது நாம் எப்போதும் சாப்பிடும் அரிசி பருப்பு வகையறா. இரண்டாவது கொழுப்பு மூலம். இது பலான பலான வகையறா. மாவு ஜாதி அரிசி பருப்புகளைக் குறைத்து, கொழுப்பு ஜாதி பால் பொருட்கள் மற்றும் கொட்டை வகையறாக்களை உண வாக்கிக் கொள்வதன்மூலம் எடை யைக் குறைத்துவிட முடியும்.

இத்தகவல் மிகுந்த கிளுகிளுப்பைக் கொடுத்தது. ஏனென்றால், பகவான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்புறம் சீரார் தயிர் கடைந்து, மோரார் குடமுருட்டி, ஆராத வெண்ணெய் விழுங்குவதென்றால் நமக்கு அல்வா உண்பது போல. எனவே முயற்சி செய்து பார்த்துவிடலாமே?

உடலியக்கத்துக்கான மொத்த சக்தியில் எழுபது சதவீதத் தைக் கொழுப்பில் இருந்து பெறுவது. ஒரு இருபத்தி ஐந்து சதத்தைப் புரதத்தில் இருந்து கபளீகரம் செய்வது. (இது கொஞ்சம் பேஜார். தாவர ஜீவஜந்துக்களுக்கு எத்தனை பரதம் ஆடினாலும் புரதம் கிட்டுவது கடினம். நிறைய மெனக்கெட வேணும்.) ஒரு ஐந்து சதம் போனால் போகிறது, மாவுப் பொருள் வழிச் சக்தி.

இதுவே அசைவ உணவாளிகளென்றால் மேற்படி ஐந்து சத மாவுச் சத்து கூட இல்லாமல் மொத்தத்தையுமே கொழுப்பு மற்றும் புரதத்தில் இருந்து எடுத்துவிட முடியும். நமக்குப் பிராப்தம் அப்படி இல்லையே? விளைகிற எந்தக் காய்கறியைத் தொட்டாலும் அதில் கார்போஹைட்ரேட் உண்டு. காதற்ற ஊசிகூடக் கடைவழிக்கு வரும். ஆனால் 'கார்ப்'பற்ற காய் எதுவும் கடைத்தெருவுக்கு வராது என்பதுதான் யதார்த்த பதார்த்தம்.

விஷயத்துக்கு வருகிறேன். எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவு பண்ணியாகிவிட்டது. மேற்படி கொழுப்புப் புரட்சிக்கும் மனத்தளவில் தயாராகி ஒரு மருத்துவ சீலரை அணுகினேன். அவர் என் நண்பர். பெயர் புரூனோ. என்னைப் போலவே அகன்று பரந்த தேக சம்பத்து உள்ளவர். பிரமாதமாக ஜோதிடமெல்லாம் பார்ப்பார். காரசாரமாக எழுதுவார். வம்படியாக ஃபேஸ்புக் சண்டைகளில் பங்கு பெறுவார். மட்டுமன்றி, ஓய்ந்த பொழுது களில் மூளை, நரம்பு, மூட்டுப் பிராந்தியங்களில் உண்டாகும் வியாதிகளுக்கும் சொஸ்தமளிக்கும் வினோத ரசமஞ்சரி அவர். சொல்லும், வைத்தியரே! நான் என்ன செய்யலாம்?

ஒரு பேப்பரை எடுத்தார். மூன்று வரி எழுதினார். பசி கூடாது. சீனி கூடாது. தானியம் கூடாது. முடிந்தது கதை.

மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்ப சுலப சாத்தியமாகத் தெரியும். கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் இது பகாசுர வம்சத்தையே கபளீகரம் செய்யக்கூடியது என்பது புரியும்.

பசி கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் சீனி கூடாது என்றால்? இனிப்பான எதுவும் கூடாது என்று அர்த்தம். சீனிதானே கூடாது? வெல்லம் கூடும், கருப்பட்டி கூடும், தேன் கூடும் என்றெல்லாம் சொல்லப்படாது. அதெல்லாம் அபிஷ்டுத்தனம்.

தானியமென்றால் அரிசி தொடங்கி கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், க.உ.து.ப. பருப்புகள் வரை எதுவும் கூடாது. இதில் சிறுதானியம் என்று சொல்லப்படுகிற குதிரைவாலி, தினை, சாமை ரகங்களும் விலக்கல்ல.

அட எம்பெருமானே, ஒரு சொகுசு ஜீவாத்மா வேறு எதைத்தான் தின்று உயிர் வாழும்?

டாக்டரான நல்லவர் ஒரு தீவிர அசைவி. நடப்பன, ஊர்வன, பறப்பனவற்றில் செரிப்பன என்னவாக இருந்தாலும் அவருக்குச் சம்மதமே. அவற்றில் தானியமில்லை. சீனி இல்லை. அவை குப்பையுணவும் இல்லை. தவிரவும் பெரும்பாலும் நற்கொழுப்பு. தரமான புரதம். இட்லி மாவு, அடை மாவு தொடங்கி எந்த மாவுச் சத்தும் கிடையாது.

‘என்னைப் பார், எப்படி இளைத்துவிட்டேன்!' என்று காட்டிக்காட்டி இரும்பூதெய்தினார். பேசியபடியே ஒரு சின்ன டப்பாவில் எடுத்து வந்திருந்த வறுத்த பாதாமை மொக்கிக்கொண்டிருந்தார்.

அவர் இளைத்திருந்தது உண்மையே. அதுவும் நம்ப முடியாத அளவில்.

ஆனால் பாவப்பட்ட பாராகவன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிறவனல்லவா? அவன் எப்படி ஓடிய ஆட்டையும் பாடிய மாட்டையும் பசித்துத் தின்னுவான்? தவிரவும் எனக்குப் பசிகூடப் பெரிய விஷயமில்லை. உண்ணுவதில் ருசி பெரிய விஷயம்.

உங்களுக்கு ஒரு தயிர்சாதம் எப்படித் தயாரிப்பது என்று தெரியுமா? தயிர் சாதத்துக்குத் தேவை, தயிரல்ல. நன்கு சுண்டக் காய்ச்சிய முழுக் கொழுப்புப் பால் மட்டுமே. பால் சாதம் கலந்து அரை ஸ்பூன் புளிக்காத தயிரை மேலே தெளித்துவிட்டால் போதும். அதுவே சில மணி நேரங்களில் தயிர்சாதமாகிவிடும். புளிக்காத அதிருசித் தயிர் சாதம். மேலுக்கு நீங்கள் வெள்ளரி போடுகிறீர்களோ, கேரட் போடுகிறீர்களோ, மாதுளைத் தூவுகிறீர்களோ, முந்திரி வறுத்து சொருகுகிறீர்களோ, அது உங்களிஷ்டம். என்னைப் போன்ற ரசனையாளி என்றால் ஒரு கை வெண்ணெய் அள்ளிப் போட்டுக் கலக்கத் தோன்றும். தாளிக்கும் கடுகை நெய்யில் தாளித்து, கொஞ்சம் மூடி வைத்திருந்து பிறகு திறந்து உண்டு பாருங்கள். பகவான் கிருஷ்ணரும் பாராகவனும் அவ்வாறு உண்டு வளர்ந்தவர்களே.

எனவே, ருசிசார் சமரசங்களே இல்லாத ஒரு சவுக்கியமான மாற்று உணவைக் கண்டறிந்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். அதற்கு முதலில் நீ சமைக்கக் கற்க வேண்டுமடா என்றான் என்னப்பன் இருடீகேசன்.

சமையல் என்ற ஒன்றில்லாமல் சாப்பாடு என்ற இன்னொன்று வராது என்ற அளவில் மட்டுமே அதுநாள் வரை நான் அறிந்திருந்தேன். இப்போது நானே சமைப்பதென்றால் நல்லது பொல்லாததற்கு யார் பொறுப்பு?

நானேதானாயிடுக என்றான் நம்பெருமான். விட்டு வைப்பானேன்? முதல் காரியமாக சரவணா ஸ்டோர்ஸுக்குப் போய் ஒரு ஏப்ரன் வாங்கி வந்தேன்.

 

- மேலும் ருசிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-4-பசி-சீனி-தானியம்-கூடாது/article9442879.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 5: ஆண்களின் கலையான சமையல்!

 

 
 
raghavan_3111212f.jpg
 
 
 

காலப் பெருவெளியில் கணக்கற்ற ரக சாத்தியங்களை உள்ளடக்கிய சமையற் கலையில் எனக்கு முத்தான மூன்று பணிகள் மட்டும் செவ்வனே செய்ய வரும். அவையாவன:

வெந்நீர் வைத்தல். பால் காய்ச்சுதல். மோர் தயாரித்தல்.

கொஞ்சம் மெனக்கெட்டு அரிசி களைந்து குக்கரில் வைத்துவிட முடியும் என்றே தோன்று கிறது. ஆனால் ஒரு தம்ளர் அரிசிக்கு மூன்று தம்ளர் தண்ணீரா, இரண்டரைதானா என்பது குழப்பும். உதிர்சாத வகையறாக்க ளுக்கென்றால் தண்ணீரைச் சற்றுக் குறைத்து வைக்கவேண்டுமென்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் எவ்வளவு குறைத்து?

தவிரவும் அந்தக் குக்கரின் தலைக்கு கனபரிமாணம் சேர்க்கும் விஷயத்தில் எப்போதும் குழப்பமுண்டு. பரிசுத்த ஆவி எழுப்பப்பட்ட பிறகு வெய்ட் போடவேண்டுமா? அதற்கு முன்னாலேவா? இதுவே இட்லியென்றால் தலைக்கனம் கிடையாது. அதற்கென்ன காரணம்? அதுவும் தெரியாது.

வீட்டில் இத்தகு சந்தேகாஸ்பதங்களைக் கேட்டுத் தெளிய எப்போதும் உள்ளுணர்வு தடுத்துக்கொண்டே இருக்கும். துறையைத் தூக்கி நமது தலையில் கிடத்திவிட பெண்குலமானது உலகெங்கும் தயாராயிருக்கும். வம்பா நமக்கு? எனவே, உண்ண மட்டும் அறிந்தவனாகவே உடல் வளர்த்தாகிவிட்டது.

யோசித்துப் பார்த்தால், சமையல் என்பதே ஆண்களின் கலையாகத்தான் காலந்தோறும் இருந்துவந்திருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற சமையற்கலைஞர்கள் அனைவரும் ஆண்கள். மகாபாரதத்தில் பீமன் சமைப்பான். நள சரித்திரத்தில் நளனே சமைப்பான். புராணத்தை விடுங்கள். நாளது தேதியில் ஒரு வெங்கடேஷ் பட், ஒரு தாமு, ஒரு நடராஜன் அளவுக்கு எந்த மகாராணி இங்கு ஆள்கிறார்? நமது பிராந்தியம்தான் என்றில்லை. உலக அளவிலேயே சமையல் என்பது ஆண்களின் கோட்டையாகத்தான் இருக்கிறது. மெக்சிகோ வைச் சேர்ந்த ஒராபெஸா, பெருவின் காஸ்டன் அக்யூரியோ, எகிப்தில் வசிக்கிற ஒசாமா எல் சயீத், இங்கிலாந்தின் கார்டன் ரம்ஸே போன்ற மடைக் கலை மன்னர்களெல்லாம் மில்லியனில் சம்பளம் வாங்கும் வல்லிய விற்பன்னர்கள்.

அட, அத்தனை தூரம் ஏன்? நமது திருமணங்கள் எதற்காவது பெண்கள் சமைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே அவர்கள் காய்கறி நறுக்குவார்கள். சுற்றுவேலைகள் செய்வார்கள். அடுப்படி ராஜ்ஜியம் ஆண்களுக்கு மட்டும்தான்.

விசேஷ சமையலுக்கு ஆணென்றும் வீட்டுச் சமையலுக்குப் பெண்ணென்றும் விதிக்கப் பட்டதன் பின்னால் சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. எடுத்துப் போட்டு விளக்கினால் நாளை முதல் எனது தர்ம பத்தினியானவள் என்னை அதர்ம பட்டினி போட்டுவிடும் அபாயம் உள்ளது. எனவே இங்கிதனை நிறுத்திக்கொள்கிறேன். நமது கதைக்கு வரலாம்.

ஏப்ரன் வாங்கினேன் என்று போன வாரம் சொன்னேன் அல்லவா? அதை ஒருநாள் வீட்டில் மனைவி இல்லாதபோது ரகசியமாக அணிந்து பார்த்தேன். எனக்கென்னமோ அது பனியனைத் திருப்பிப் போட்டுக்கொண்ட மாதிரியே இருந்தது. நிலைக் கண்ணாடியில் பார்த்தபோது பதினான்காம் லூயிக்குப் பைத்தியம் பிடித்துப் பாதி ஆடையைக் கிழித்துவிட்டுக் கொண்டாற்போலவும் தோன்றியது. தவிரவும் கழுத்து, தோள்பட்டைப் பிராந்தியங்களை அது மூடவில்லை. நமக்கு மூக்கு அரித்தாலும் சரி, நெற்றியில் வியர்வை சிந்தினாலும் சரி, உடனே வலக்கரம்தான் மேல் நோக்கி எழும். தோள்பட்டையில் ஒரு தேய். முடிந்தது கதை. அதற்குதவாத ஏப்ரனால் வேறென்ன லாபமிருந்து என்ன பயன்?

சரி, வாங்கியாகிவிட்டது. இனி சிந்திப்பது இம்சை.

ஆனால் சுயமாக சமைக்கிற முடிவில் பின்வாங்கத் தயாரில்லை என்பதால் ஆயத்தங்களில் இறங்கினேன். வாணலி தயார். வெண்ணெய் தயார். பனீர் தயார். தயிர் தயார். அதி ருசியாக ஒரு பனீர் டிக்கா செய்துவிடுவது எனது திட்டம்.

வேறு வழியில்லை. எனது புதிய உணவு முறைக்கு வடவர் சரக்குகள்தாம் ஒத்து வரக்கூடியவை. தனித் தமிழ்த் தயாரிப்புகளில் கார்போஹைட்ரேட் ஆதிக்கம் அதிகம். எனவே மனதளவில் தமிழனாகவும் வயிற்றளவில் வடவனாகவும் இருந்தாக வேண்டியது என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிய புதிய விதி. பனீர் டிக்கா. பாலக் பனீர். பனீர் மஞ்சூரியன். பனீர் பட்டர் மசாலா. முழுக்கொழுப்பெடுத்தவனின் முக்கிய ஆகாரம் இப்படியானவை.

ஆச்சா? பனீர் டிக்கா. அதைச் செய்வது எப்படி? முன்னதாக ஏழெட்டு சமையல் குறிப்புகளைப் படித்து ஒப்பீட்டாய்வு செய்துவைத்திருந்தேன்.

அதன்படி ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொண்டேன். மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி. கொட்டு அதன் தலையில். உப்புப் போடும்போது ஒரு கணம் தயங்கினேன். உப்பின் அளவு தயிரின் அளவுக்கானதா? பனீரின் அளவுக்கானதா? இரண்டுக்கும் சேர்த்தா? எம்பெருமானை வேண்டிக்கொண்டு ஒரு குத்து மதிப்பாக அள்ளிப் போட்டுக் கிளறி வைத்தேன்.

பிறகு பனீரைச் சதுரங்களாக்குதல்.

கத்தியைக் கையில் எடுத்தபோது எங்கிருந்தோ உக்கிரமானதொரு பின்னணி இசை கேட்டது. மானசீகப் பண்பலையின் மான சேத முன்னறிவிப்பா அது? பழகிய சவரக் கத்தியில் கூட நமக்குச் சரியாகச் சிரைக்க வராது. இதுவோ மின்னும் புதுக்கத்தி. வெண்ணை வெட்டியின் கன்னி முயற்சி படுதோல்வி கண்டால் பெரிய அவமானமாகிவிடுமல்லவா?

இஷ்ட தெய்வங்களையெல்லாம் கஷ்ட சகாயத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டபடிக்கு பனீரை நறுக்கத் தொடங்கினேன். பாதகமில்லை. சதுரமானது சமயத்தில் அறுகோண, எழுகோண வடிவம் கொண்டதே தவிர துண்டுகள் தேறிவிட்டன.

அதைத் தூக்கி தயிர்க் கலவையில் போட்டேன். ஊறட்டும் சரக்கு. ஏறட்டும் மிடுக்கு.

அடுப்பில் தோசைக் கல்லை ஏற்றினேன். சட்டென்று ஒரு குழப்பம் வந்தது. வீட்டில் இரும்பு தோசைக் கல் ஒன்று இருக்கிறது. இண்டாலியத்தில் ஒன்று. நான் ஸ்டிக் ஒன்று. தோசைக்கு ஒன்று, சப்பாத்திக்கு ஒன்று, பழைய மாவென்றால் ஒன்று, புதிதாக அரைத்ததென்றால் மற்றொன்று என்று பெண் தெய்வம் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். என் பனீருக்கு கதிமோட்சம் தரவல்லது இதில் எது?

தெரியவில்லை. இனி யோசித்துப் பயனுமில்லை. கல்லில் கொஞ்சம் வெண்ணெய் விட்டு இளக்கி, தயிரில் தோய்த்த பன்னீர்த் துண்டுகள் நான்கை எடுத்து அதில் வைத்தேன். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தபோதுதான் சதிதர்மிணியின் அசரீரிக் குரல் ஒலித்தது. பனீர் டிக்காவுக்கு தோசைக் கல் சரிப்படாது. அதை அவனில் வைத்து க்ரில் செய்வதே சிறப்பு.

இந்த மைக்ரோவேவ் சனியனில் எனக்கு வெந்நீர் வைக்க மட்டும்தான் தெரியும். க்ரில் என்றால் பால்கனியில் வைப்பது என்றும் தெரியும். பனீர் டிக்காவை க்ரில் செய்வது என்றால் என்ன?

ஒரு மாதிரி ஆகிவிட்டது. பாதி முயற்சியில் புறமுதுகிடவும் விருப்பமில்லை. சரி போ, இன்றெனக்கு என்ன வருகிறதோ அதுதான் பனீர் டிக்கா.

ஒரு தீவிரவாதியின் உக்கிரத்துடன் அத்தனைத் துண்டுகளையும் அடுத்தடுத்து தோசைக் கல்லில் சுட்டுத் தீர்த்தேன். தயிரில் ஊறிய பனீர், அந்த தோசைக் கல்லை சர்வநாசமாக்கியிருந்தது. சுரண்டி எடுக்கப் பல மணிநேரம் பிடிக்கக்கூடும். அதனாலென்ன? நான் முக்கால்வாசி ஜெயித்திருந்தேன்.

பிறகு வெங்காயம் குடைமிளகாய் வதக்கல் கள். தக்காளி வரிசைகளில் அவற்றை இடை சொருகி, பனீர்த் துண்டுகளின்மீது அலங்கரித்து, பல்குத்தும் குச்சியால் உச்சந்தலையில் ஓங்கி ஒரு குத்து. முடிந்தது மாபெரும் கலை முயற்சி.

அன்றெனக்குப் புரிந்தது. அடிப்படைகூடத் தெரியாதவன் என்றாலும் ஓர் ஆண் சமைக்கப் புகுந்தால் தனி ருசியொன்று தன்னால் சேரும்.

அந்த பனீர் டிக்கா உண்மையிலேயே நன்றாக இருந்ததாக என் மனைவி சொன்னார். ஒரே கிளுகிளுப்பாகிவிட்டது. அன்றெல்லாம் வெங்கடேஷ் பட்டைப் புறமுதுகிடச் செய்ய வேறென்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தேன்.

என்ன ஒன்று, இத்தனை களேபரத்தில், எடுத்து வைத்த ஏப்ரனைத்தான் மாட்டிக்கொள்ள மறந்துவிட்டிருந்தேன்.

- மேலும் ருசிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-5-ஆண்களின்-கலையான-சமையல்/article9452780.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 6: விருந்து ருசிக்க விரதமென்ற ஊக்க மருந்து!

 

 
para_3114591f.jpg
 
 
 

இன்றைக்குச் சற்றேறக்குறைய இரு பது இருபத்தியிரண்டு வருஷங் களுக்கு முன்னால் ஒருமுறை உத்தியோக நிமித்தம் கவுஹாத்திக்குப் போகவேண்டியிருந்தது. அது ஒரு பொதுத்தேர்தல் சமயம். பத்திரிகையாள லட்சணத்துடன் நாலைந்து வடக்கத்தி மாகாணங்களில் சுற்றிவிட்டு, அப்படியே மேற்கு வங்கம் போய், அங்கிருந்து கவுஹாத்தி.

நமக்கு வேலையெல்லாம் பிரமாத மில்லை. எங்கு போனாலும் போஜனம் தான் பிராணாவஸ்தை உண்டாக்கும். யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வெளியூர்ப் பிரயாணங்களின்போது நான் ஞானப்பழம் தேடியலைந்த முருகப் பெருமானாகத்தான் இருந்திருக்கிறேன். ஞானப்பழம் கிட்டாத பிராந்தியங்களிலும் வாழைப்பழம் கிட்டிவிடும் என்பதே நமக்குள்ள ஆசுவாசம்.

ஒரு தாவர ஜந்துவின் சிக்கல்கள் அனந் தம். லட்டு நிகர்த்த புவியில் வசிக்கும் மனுஷகுமாரன்களில் அறுதிப் பெரும் பான்மையினர் மாமிச பட்சிணிகள் என் பதே காரணம். என்ன செய்ய? மைனாரிடி மகானுபாவர்களுக்கு எப்போதும் சிக்கல்; எல்லா விஷயத்திலும் சிக்கல். இதனா லேயே எங்கு போவதென்றாலும் முதற் காரியமாக அங்குள்ள சைவ உணவகங் களைப் பற்றித்தான் விசாரிப்பேன். கைவசம் நாலைந்து போஜனாலயங் களின் பெயர்களையாவது முகவரியோடு கேட்டு எழுதி எடுத்துக்கொள்ளாமல் இந்தத் தேர் எங்கும் கிளம்பாது.

ஆனால் அஸ்ஸாமுக்குப் போன போது அதற்கு சாத்தியமில் லாமல் போய்விட்டது. அங்கே எனக்குத் தெரிந்த வர்களும் கிடையாது; என்னை அறிந்தவர்களும் கிடையாது. எம்பெரு மான் ஒருத்தனைத் தவிர. சரி, அவன் நம்மை அளித்துக்காப்பான் என்று கிளம்பி விட்டேன். அந்தப் பிரகஸ்பதியோ, அந் நேரம் பார்த்து மழைக்கால விடுமுறையில் போய்விட, என்பாடு பேஜாராகிப் போனது.

போய்ச் சேர்ந்த முதல் நாள் ஒரு சைவ உணவகத்தைத் தேடி சுமார் நாலு மணி நேரம் அலைந்தேன். அதுவும் அடித்துக் கவிழ்த்த பெருமழையில். ஒவ்வொரு இடத்திலும் உள்ளே போய்த்தான் விசா ரிக்க வேண்டியிருந்தது. உத்தமோத்த மர்கள் ஒருத்தராவது பெயர்ப் பலகையை ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டுமே? ம்ஹும். எல்லா போர்டுகளும் குப்புறத் தொங்கும் வவ்வால் எழுத்துக்களா லேயே அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அன்று நான் கண்ட அஸ்ஸாமியர்கள் மொழி விஷயத்தில் சமரசமே விரும்பாத வர்கள். எழுத்தானாலும் பேச்சானாலும் மண்ணின் மொழி மட்டும்தான். மருந் துக்கும் இங்கிலீஷ் கிடையாது. மறந்து போய்க் கூட ஹிந்தி கிடையாது. எனக் குத் தமிழைத் தாண்டி மேற்படி இரு மொழிகளில் ஒன்றைச் சுமாராகப் பேச வரும். இன்னொன்றை எழுத்துக்கூட்டிப் படிக்க வரும். என்ன பிரயோஜனம்? அஸ் ஸாமி தெரியாதவனுக்கு அங்கே அன்னப் பிராப்தி கிடையாது என்றது ஊழ்.

அன்றைக்கெல்லாம் ரொம்ப சிரமப் பட்டுவிட்டேன். அசட்டுத் தித்திப்பும் அரைப் புளிப்பும் சேர்ந்த கொழுக்கட்டை மாதிரியான ஒரு நொறுக்குத் தீனி கவுஹாத்தி ரயில் நிலையத்தில் அகப்பட் டது. அப்புறம் இரண்டு நேந்திரம்பழங் களைச் சேர்த்து ஒட்டிய அளவில் காயா பழமா என்று தெரியாத ஸ்திதியில் ஏதோ ரக வாழை. தப்பித்தவறிக்கூட ருசித்து விடலாகாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விளைந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒரு பைநிறைய வாங்கி வைத்துக்கொண்டு நாளெல்லாம் தின்றுகொண்டிருந்தேன். கொட்டும் மழையில் இடையிடையே புருஷலட்சண காரியத்தையும் பார்த்தபடிக்கு அன்றைய பொழுதை ஒருவாறு நிறைவுசெய்த நேரம், உள்ளூர் பத்திரிகை நிருபர் ஒருவரின் சகாயத்தால் ஒரு சைவ உணவகத்துக்கு வழி சித்தித்தது.

யார் பெத்த பிள்ளையோ. தென் தமிழ்க் கோடியில் இருந்து வந்திருந்த ஜீவாத் மாவை ஒருவேளையாவது ஒழுங்காகச் சாப்பிட வைத்து அழகு பார்க்க நினைத்து அவரே என்னை அழைத்துப் போனார். போகிற வழியெல்லாம் அஸ்ஸாமிய உணவு வகைகளின் அருமை பெருமை களைச் சொல்லிக்கொண்டு வந்தார்.

அங்கே அரிசிதான் பிரதானம். நம்மைப் போலத்தான். ஆனால் முழுத்தாவர உணவு விரும்பிகள் அநேகமாகக் கிடையாது. எல்லா உணவகங்களிலும் மீன் உண்டு. கறி உண்டு. வெஜிடேரியன் உணவகம் என்று சொல்லப்பட்ட இடங்களி லும்கூட முட்டை அவசியம் உண்டு.

எம்பெருமானே என்று என் அந்தராத்மா அலறியது.

பிரச்சினையில்லை; உங்களுக்கு சுத்த சைவ வகையறாக்களை நான் வாங்கித் தருகிறேன் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

உணவகமானது, நான் தங்கியிருந்த இடத்திலிருந்து முப்பது நிமிட தூரத்தில் வந்து சேர்ந்தது. உள்ளே சென்று அமர்ந் ததும் நண்பர் நானாவித ஐட்டங்களை எனக்காக ஆர்டர் செய்தார். மொஹுரா பித்தா (Mohura Pitha) என்கிற பூரண கொழுக்கட்டை பாணியிலான ஒன்று. ஆனால் அதில் வெல்லப் பூரணம் இல்லை. சர்க்கரையும் தேங்காயும் சேர்ந்த பூரணம். சாக்கோர் கர் (Xakor Khar). இது வாழைக்காயைச் சீவி, வெயிலில் காயப்போட்டு, கருவாடாக்கி பிறகு அதனோடு பாலக் கீரையைச் சேர்த்து வதக்கிச் செய்யப்படுகிற பொரியல். முற்றிலும் கடுகு எண்ணெயால் சமைக்கப் படுவது. அப்புறம் லப்ரா (Labra) என்றொரு பதார்த்தம். கிடைக்கிற அத்தனை காய்கறி களையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைத்து திருவாதிரைக் களிபோல் கிளறி, உப்பு - சர்க்கரை இரண்டையும் சம அளவுக்குப் போட்டுச் சமைக்கிறார்கள். கடைசியாக சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்புக்கும் கூட்டுக்கும் இடைப்பட்ட ரகத்தில் பை ருஜுங் (Sbai Rujung) என்ற திடதிரவாதி வஸ்து.

ஆணையிட்ட ஐட்டங்கள் மேசைக்கு வந்து சேர்ந்தன. என் கண்கள் நன்றி அல்லது காரத்தில் கலங்கிவிட்டன. இரண்டு நாள்கள் நான் கவுஹாத்தியில் சுற்றத் திட்டமிட்டிருந்தேன். எங்கே அன் றிரவே டெல்லி சலோ என்று கிளம்பிவிட நேருமோ என்ற அச்சம் தீர்ந்தது. நண்பர் என்னைச் சாப்பிட வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

விதி அங்குதான் சிரித்தது. என்னால் நான்கு கவளங்களுக்குமேல் சாப்பிடவே முடியவில்லை. வயிறு கல்போல் இருந் தது. காலை முதல் சாப்பிட்டுத் தீர்த்த ராட்சத வாழைப் பழங்களும் அந்தக் கொழுக்கட்டை அல்லது மூசுண்டை ரக நொறுக்குத் தீனியும் அந்த இரவு உணவை உள்ளே இறங்கவிடுவேனா என்றன. நண்பரோ என்னை ஒரு பீம்பாயாக எண்ணி மேலும் மேலுமென சொல்லிக்கொண்டே இருந்தார். நான் போதும் போதுமென அலறிக்கொண்டே இருந்தேன்.

'என்ன நீங்கள் இப்படிக் கொறிக் கிறீர்கள்? தலைநகரின் ஆகச் சிறந்த ஓட்டல் இது. இந்த ருசியை நீங்கள் வேறு எங்குமே பெற முடியாது. திரும்ப நீங்கள் எப்போது அஸ்ஸாம் வருவது, எப்போது இம்மண்ணின் பாரம்பரிய உணவினங்களை ருசிப்பது?'

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. பசிக்குமோ என்ற பயத்திலேயே அன் றைக்குப் பத்துப் பன்னிரண்டு வாழைப் பழங்களைக் கபளீகரம் செய்திருந்ததைப் பற்றிப் பிரஸ்தாபிக்க நாணமாக இருந்தது. நாளெல்லாம் தேடிக் கிடைத்த நல்லுணவு. ஆனால் நமக்கு வாய்த்தது நாலு வாய் மட்டும்தானா?

மூச்சைப் பிடித்துக்கொண்டு நண்ப ருக்காக மேலும் கொஞ்சம் உண்டேன். உணவானது நாபிக்கமலத்தில் இருந்து மேலெழுந்து, தொண்டைக்குப் பக்கத் தில் வந்துவிட்டாற்போலிருந்தது. தலை சுற்றியது. போதும் என்று எழுந்து விட்டேன். அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். எனக்கு அந்தச் சாப்பாடு பிடிக்கவில்லை என்று நினைத்துவிட்டார். உண்மையில் அது ஒரு சிறந்த விருந்து தான். பசி பயத்தில் நான் நாளெல்லாம் தின்றிருந்த பழங்கள் அதன் ருசியை மறைத்துவிட்டிருந்தன.

என்னளவில் அது பெரிய இழப்புதான். சந்தேகமே இல்லை. மறுநாள் என்னால் அந்த உணவகத்துக்குப் போக முடிய வில்லை. மீண்டும் பழங்கள் உண்டு பயணத்தை முடித்துக்கொண்டு திரும் பும்படியாகிவிட்டது.

அச்சம்பவத்துக்கு மிகப்பல வருஷங் களுக்குப் பிறகுதான் ஒரு விருந்தை எப்படி எதிர்கொள்வது என்ற கலையைப் பயின்றேன். விருந்து ருசிப்பதற்கு விரதமென்ற ஊக்க மருந்து ஊசி அவசியம் என்பதும் அப்போதுதான் புரிந்தது.

- மேலும் ருசிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-6-விருந்து-ருசிக்க-விரதமென்ற-ஊக்க-மருந்து/article9465509.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும் பாணி உன்னதமான நகைச்சுவை உணர்வை மட்டுமல்ல நாவின் சுவையுடன் நளபாகத்தின் நளினங்களையும் உரசிச் செல்கின்றது....!

தொடருங்கள் நவீனன்....! tw_blush: 

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 7: பாதி பழுத்த வாழைப் பழம்

 

 
 
 
 
banana_3117804f.jpg
 
 
 

எனது ஸ்தூல சரீரத்தின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கலாம் என்று முடிவு செய்து அரிசிசார் உணவினங்களில் இருந்து கொழுப்புசார் ருசியினத்துக்கு மாறியதைச் சொன்னேன் அல்லவா? அப்போது எனக்கு அறிமுகமாகி நண்பரானவர், சவடன் பாலசுந்தரன். எனக்கு நிகரான கனபாடிகளாக இருந்தவர். நடந்து செல்கிற சமூகத்தின் ஊடாக உருண்டு செல்கிற உத்தமோத்தமர் குலம். ஏதோ ஒரு கட்டத்தில் விழித்தெழுந்து, கொழுப்பெடுத்தால் கொடியிடை அடையலாம் என்பதைத் தெரிந்துகொண்டு கட்சி மாறியவர். எண்ணி ஆறு மாதங்களில் சுமார் 35 கிலோ எடையைக் குறைத்த பெரும் சாதனையாளர்.

அவர்தான் எனக்கு அட்சதையைப் போட்டு முதல்முதலில் விரதத்துக்குப் பிடித்துத் தள்ளினார். ‘‘வயித்த மடிச்சிக் காயப் போடுங்க சார்!’'

நமக்குத் துணி மடிக்கக்கூட வராது. இதில் வயிற்றை எங்கே மடிப்பது? அப்புறம் காயப் போடுவது?

‘‘பண்ணிப் பாருங்க சார். ஒடம்பு சும்மா காத்து மாதிரி லேசாயிடும். அப்ப முன்னவிட நல்லா சாப்டுவீங்க!'’

ஆ! இதைச் சொன்னாரே, இது நல்ல விஷயம். இயல்பில் நான் அதிகம் உண்பவனல்ல. ஆனால், அரை வாய் சாப்பிட்டாலும் அது அரச போஜனமாக இருந்தாக வேண்டும். நான் வளர வழியுண்டோ இல்லையோ, நா வளர நாலு பக்கமும் வாசல் திறந்து வைத்தவன்.

ஒரு சமயம் திம்மம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். ஊர் சின்னதுதான். ஆனால், சரியான மலைக்காடு. ஒரு கடை கண்ணி கண்ணில் படவில்லை. நான் போன முகூர்த்தத் தில் மாநிலம் தழுவிய கடையடைப்பு வேறு நடந்துகொண்டி ருந்தபடியால், சுத்தம். ஒரு மாதிரி மதியம் 3 மணி வரை வெறும் தண்ணீர் குடித்து சமாளித்துக்கொண்டிருந்தேன். அதற்குமேல் தாங்கவில்லை. ‘‘இனி பொறுப்பதில்லை தம்பீ, என்னத்தையாவது கொண்டு வா!’’ என்று ஒரு பழங்குடியின் குடிசை வாசலில் உட்கார்ந்துவிட்டேன்.

அங்கிருந்த ஒரு சபரிக் கிழவி அன்று என் பசியைத் தீர்த்தாள். பாதி பழுத்த வாழைப் பழத்தை வேகவைத்துச் சாப் பிட்டிருக்கிறீர்களா? அன்று எனக்குக் கிடைத்தது அதுதான். இனிப்பின் சாயலோடு இட்லியின் மிருதுத்தன்மை சேர்ந்த உணவு.

இதற்குத் தொட்டுக்கொள்ள என்னவாவது கிடைத்தால் சிறப்பாக இருக்குமே?

ஆனால், கிழவி பார்த்த பார்வை சரியில்லை. இதற்கெல் லாமா ஒரு ஜென்மம் தொட்டுக்கொள்ளக் கேட்கும்? ‘‘வேண்டு மானால் சர்க்கரை தருகிறேன்’’ என்றாள். ம்ஹும். அது சரிப் படாது. உப்புமாவுக்கு சர்க்கரை கேட்கிறவர்களையே தேசப் பிரஷ்டம் செய்ய வேண்டுமென்று நினைப்பவன் நான். இதில் வேகவைத்த வாழைப் பழத்துக்குச் சர்க்கரையாவது? அபசாரம்.

‘‘வேறென்ன இருக்கிறது?’’ என்று கேட்டேன். ‘‘முதல் நாள் வைத்த ரசத்தைத் தவிர ஒன்றுமில்லை’’ என்று சொல்லிவிட்டாள்.

ஒரு கணம் யோசித்தேன். வாழைப் பழத்துக்கு ரசம்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? அசட்டுத்தனத்துக்கு ஓர் அழகுண்டு. அதைத் திருட்டுத்தனமாக ரசிக்கவும் முடியும்.

‘‘அம்மா, கோபித்துக்கொள்ளாமல் அந்த ரசத்தை எடுத்து வருவீர்களானால் கோடி புண்ணியம் உமக்குண்டு.”

அவர் பார்த்த பார்வைதான் கொஞ்சம் நாராசமாக இருந்தது. ஆனால், அந்த ரசம் பிரமாதம். நிறையப் பூண்டு இடித்துப் போட்ட காரசாரமான தூதுவளை ரசம். மறு கொதிப்பில் அதன் ருசி மேலும் கூடியிருக்க வேண்டும்.

நான் அந்த வேகவைத்த பழங்களை ரசத்தில் பிய்த்துப் போட்டேன். இரண்டு நிமிடம் ஊறவிட்டு ரசம் சோறு போலவே அள்ளி அள்ளி உண்டேன். வாழ்நாளில் அப்படியொரு ருசி மகா சமுத்திரத்தில் அதன்பின் முக்குளித்தெழ வாய்க்கவில்லை.

இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த அபார ருசியை எனக்கு அன்றைய முழுப்பட்டினிதான் அதில் அளித்திருக்க வேண்டும் என்று படுகிறது. ஒரு முழு 24 மணி நேரத்தை நீரால் மட்டுமே வயிற்றை நிரப்பி, 25-வது மணிநேரம் வழக்கமாகச் சாப்பிடுவதைச் சாப்பிட்டுப் பாருங்கள்! வழக்கத்தைவிடப் பல மடங்கு ருசிக்கும்.

நம்மூரில் ஒரு பழக்கம். என்னத்தையாவது நல்ல விஷயத்தைச் சொல்லிவைக்க நினைத்தால், உடனே அதை பக்தி பார்சலில் சுற்றிக் கொடுத்துவிடுவார்கள். திங்களானது சிவனுக்குரியது. செவ்வாய் முருகனுக்கு உகந்த தினம். வியாழன் என்றால் குரு. வெள்ளிக்கிழமைக்குத் திருமதி மகாவிஷ்ணு. சனியென்றால் திருமலையப்பன். மற்ற தினங்களில் மேற்படி தெய்வங்கள் சிறு விடுப்பு விண்ணப்பம் அனுப்பிவிடுவார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. சஷ்டி விரதம். சபரிமலை விரதம். ஏகாதசி விரதம். கிருத்திகை விரதம். எது மிச்சம்? எத்தனையோ இருக்கிறது. இஷ்டத்துக்கு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நான் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். சும்மா ஒரு இதுக்குத்தான். உண்மையில் எனது ஏகாதசி விரதம் எம்பெருமானுக்கே அத்தனை சரியாகப் புரியாது என்று நினைக்கிறேன்.

விளக்குகிறேன்.

பொதுவாக ஏகாதசி விரதம் என்பதை நமது மகாஜனம் அணுகும் விதம் வேறு விதமானது. ‘ஒரு பொழுது' என்பதற்கு உண்மையான அர்த்தம், ஒருவேளை மட்டும் சாப்பிடுவது என்பது. ஆனால், ஒருவேளை மட்டும் சாப்பாடு, மற்றவேளை வளைத்துக்கட்டி டிபன் என்று ஆல்டர் செய்யப்பட்டுவிட்டது அது. சிலர் காலை உணவை மட்டும் தவிர்த்துவிட்டு மதியம் சாப்பிடுவார்கள். இரவுக்கு இரண்டு பழங்கள், பால்.

இதுவா விரதம்? இதில் அக்கிரமம் என்னவென்றால், ஏகாதசியன்று கொலைப் பட்டினி கிடந்த மாதிரி மறுநாள் காலை சேர்த்து வைத்து கபளீகரம் செய்துவிடுவார்கள். சும்மா சொல்லிக்கொள்ளவேண்டியது. நானும் விரதம் இருந்தேன்.

இந்த மரபான அக்கிரமத்தை ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்தேன். எனவே என்னுடைய ஏகாதசி விரதத்தை இவ்வாறாக வகுத்துக்கொண்டேன்:

ஏகாதசிக்கு முதல் நாள் ராத்திரி திருப்தியாகச் சாப்பிட்டுவிடுவது. அதற்குப் பிறகு எதுவும் கிடையாது. தாகமெடுத்தாலும் தண்ணீர், பசித்தாலும் தண்ணீர். ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.

பொதுவாக ஏகாதசிக்கு விரதமிருப்பவர்கள் மறுநாள் காலைதான் விரதம் முடிப்பார்கள். நமக்கு அதெல்லாம் இல்லை. நான் விரதம் முடிக்கும் நேரம்தான் எனக்கு ஏகாதசியும் முடியும். எனவே அன்றிரவே. என் கணக்கு சரியாக 24 மணிநேரம். முடிந்தது கதை.

ஒரு 200 கிராம் பனீர். இன்னொரு 200 கிராமுக்கு நெய்யில் சமைத்த என்னவாவது ஒரு காய்கறி. இட்டமுடன் தொட்டுக்கொள்ள இதமான வெண்ணெய். சவுகரியம் இருந்தால் சாலட் அல்லது சூப். போதவில்லையா? 25 கிராமுக்கு ஒரு சீஸ் க்யூப். அப்புறம் ஒரு கப் தயிர்.

எனது ஏகாதசி விரதமானது ஏகாதசி தினத்தன்றே இரவு சுமார் 10 மணிக்குப் பூரணமடையும். அந்த முழுக் கொழுப்புணவுக்குப் பிறகு துவாதசிக் கொண்டாட்டமெல்லாம் கிடையாது. மறுநாள் காலை வெறும் தண்ணீர்.

இதனை என் ஈரோட்டு நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, ‘‘அட என்னய்யா நீர்! விரதம் முடிக்கத் தெரியாதவராக இருக்கிறீரே. நான் அனுப்புகிறேன் பாரும், எனது விரத முடிப்பு மெனுவை'’ என்று ஒன்றை அனுப்பிவைத்தார்.

மிரண்டு போனேன். நாவுக்குச் சேவகம் செய்வதில் நானெல்லாம் அவரிடம் மடிப் பிச்சை ஏந்தவேண்டும். அந்த மகானுபாவரைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

- மேலும் ருசிப்போம்

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-7-பாதி-பழுத்த-வாழைப்-பழம்/article9480495.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 7: உப்புமாவின் ருசி என்பது..

 
 
 
 
upuma1_3124615f.jpg
 
 
 

தமிழர்களால் மிக அதிகம் தூற்றப்பட்ட ஓர் உணவு உண்டென்றால் அது உப்புமாவாகத்தான் இருக்க முடியும். எனக்கு உப்புமா பிடிக்கும் என்று சொல்கிற பிரகஸ்பதிகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமே.

உப்புமா மீதான இந்த துவேஷம் நமக்கு எப்படி உண்டானது என்று யோசித் துப் பார்த்தால் கிடைக்கும் பதில்களில் ஒரே ஒரு காரணம்தான் நியாயமானதாக இருக்கும். அது, உப்புமாவை வெகு சீக்கிரம் சமைத்துவிட முடியும் என்பது தான்! உடனே கிடைத்துவிடும் எதற்கும் அத்தனை மதிப்பு சேராது என்பது இயற்கையின் விதி. அவ்வகையில் உப்புமா ஒரு பாவப்பட்ட சிற்றுண்டி.

ஆனால், முற்றிலும் மாறுபட்ட கல் யாண குணங்களால் வடிவமைக்கப்பட்ட ஜீவராசியான எனக்கு, உப்புமா என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதன் மீதான நீங்காத விருப்பத்தை மிகச் சிறு வயதுகளில் என் பாட்டி உருவாக்கினார். விடுமுறை நாட்களில் சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாட்டி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உப்புமா பிராப் தம் சித்திக்கும்.

பாட்டியானவருக்கு அன்றைய தேதி யில் ஒரு டஜனுக்குச் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். நாலைந்து மகள்கள், இரண்டு மூன்று மகன்களைக் கொண்ட பிரம்மாண்ட குடும்ப இஸ்திரி அவர். எப்போதேனும் தான் நடக்கும் என்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடுகிற நாட்களில் அவருக்கு மூச்சுத் திணறிவிடும். அத் தனை பேரையும் உட்கார வைத்து தோசை வார்த்துப் போடுவதோ, பூரிக் கடை திறப்பதோ நடைமுறை சாத்தியமற்றது. தவிரவும் பகாசுர வம்சத்தில் உதித்தோர் யாரும் ஒன்றிரண்டுடன் திருப்தி கொள்பவர்களும் அல்லர்.

எனவே பாட்டி உப்புமா என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துவிடுவார்.

‘‘பிள்ளைகளா, இன்று அரிசி உப்புமா!’’

பாட்டியின் அரிசி உப்புமா வேள்வி யானது அரிசியை நனைத்து உலர்த்தி மாவு மெஷினுக்கு எடுத்துச் செல்வதில் தொடங்கும். அரிசிப் பதமும் இல்லா மல், ரவைப் பதமும் இல்லாமல் அவருக்கென ஒரு திரிசங்கு பதம் உண்டு. காசித் துண்டால் பரபரவென முதுகு தேய்க்கிற பதம் அது. அந்தப் பதத்தில் அதை அரைத்து எடுத்து வருவார். பரம தரித்திர சிகாமணியான என் தாத்தா, வீட்டுச் செலவுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடுத்த பணத்தோடு சரி. பாட்டி அதன்பிறகு எப்படிச் சமாளித்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது.

எனவே அரிசி உப்புமாவுக்கு அலங் கார விசேஷங்கள் ஏதும் இருக்காது. வெண்கலப் பானையில் அதிகம் எண்ணெய் காணாத, சும்மா தாளித்த வெறும் அரிசி உப்புமா. உண்மையில் அதைத் தின்னுவது சிரம சாத்தியம்தான். ஆனாலும் பாட்டியெனும் புத்திசாலி ஒரு காரியம் செய்வாள். சமைத்து இறக்கிய அரிசி உப்புமாவின் மீது ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு நெய்யை ஊற்றி கப்பென்று மூடி வைத்துவிடுவாள்.

பத்திருபது நிமிஷங்களுக்குப் பிறகு அந்த உப்புமா பாத்திரத்தைத் திறந்தால் அடிக்கும் பாருங்கள் ஒரு மணம்! அந்த மணம்தான் அந்த உப்புமாவின் ருசியாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது என்று இப் போது தோன்றுகிறது. தோட்டத்தில் பறித்த பாதாம் இலைகளைக் கழுவி, ஆளுக்கு இரண்டு கரண்டி உப்புமாவைப் போட்டு, ஓரத்தில் ஒரு துண்டு மாங்காய் ஊறுகாயை வைத்துத் தருவார் பாட்டி.

என் சிறு வயதுகளில் உண்ட அந்த அரிசி உப்புமா இன்று வரை நாவில் நிற்கிறது.

பின்னாளில் வந்து சேர்ந்த என் தர்ம பத்தினி, கோதுமை ரவை உப்புமாவில் ஒரு புரட்சி செய்யும் முடிவுடன் வீட்டில் சாம்பார் வைக்கும் அனைத்து தினங்களிலும் இரவு உணவு கோதுமை ரவை உப்புமா என்றொரு சட்டம் கொண்டு வந்தார். இக்கலவரமானது எந்தளவுக்குச் சென்றது என்றால், காலை சமையல் கட்டில் இருந்து சாம்பார் வாசனை வரத் தொடங்கினாலே, ‘‘அப்பா இன்னிக்கு நைட் டின்னருக்கு ஓட்டலுக்குப் போலாமா?’’ என்று என் மகள் கேட்க ஆரம்பித்தாள்.

உண்மையில் கோதுமை ரவை உப்புமாவும் ஒரு நல்ல சிற்றுண்டிதான். சேர்மானங்கள் அதில் முக்கியம். உப்புமா வின் ருசி என்பது அதில் இடித்துச் சேர்க் கப்படும் இஞ்சியால் பூரணமெய்துவது. நீங்கள் எண்ணெயைப் பீப்பாயில் கொண்டு கொட்டுங்கள். மணக்க மணக்க நெய்யூற்றித் தாளியுங்கள். காய்கறிகள் சேருங்கள். வேர்க்கடலையோ, முந் திரியோ வறுத்துத் தூவுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உப்புமா ருசிப்பது இஞ்சியால் மட்டுமே. எவ்வளவு அதிகம் இஞ்சி சேருகிறதோ, அவ்வளவு அதிக ருசி.

என் நண்பர் ஈரோடு செந்தில்குமார் ஒரு ருசிகண்டபூரணர். திடீரென்று இரு பத்தி நாலு மணிநேர உண்ணாவிரதம், நாற்பத்தியெட்டு மணிநேர உண்ணா விரதம் என்று அறிவித்துவிட்டு வெறுந் தண்ணீர் குடித்துக்கொண்டு கிடப்பார். விரதம் முடிகிற நேரம் நெருங்குகிறபோது வீறுகொண்டு எழுந்துவிடுவார்.

‘‘சுவாமி! என்னோட இன்னிய மெனு சொல்றேன் கேளும். ஆறு முட்டை. முன்னூத்தம்பது கிராம் பன்னீர் உப்புமா. நூத்தம்பது கீரை. நூத்தம்பது வாழத்தண்டு. நூறு தயிர், ரெண்டு க்யூப் சீஸ். பத்தாதோன்னு எழுபது கிராம் வெண்ணெயும் முப்பது கிராம் நெய்யும் சேத்துக்கிட்டேன்.’’

மனைவியை இம்சிக்காத உத்த மோத்தமர் அவர். தனக்கு வேண்டியதைத் தானே சமைத்துக்கொள்கிற சமத்து ரகம்.

ஒருநாள் நட்டநடு ராத்திரி பன் னெண்டே காலுக்கு போனில் அழைத் தார். அப்போதுதான் விரதம் முடித்து, விருந்தை ருசித்திருப்பார் போலிருக் கிறது.

‘‘சுவாமி, உமக்கு அமிர்தத்தோட ருசி தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கங்க. நாலு கரண்டி நல்லெண்ணெய் எடுத்துக்கங்க. கடாய்ல ஊத்திக் காயவிட்டு ரெண்டு கரண்டி சாம்பார் மொளவொடி சேரும். காரம் சுருக்குனு இருந்தாத்தான் ருசிக்கும். ஆச்சா? அப்பறம், வரமொளவொடித் தூள் நாலு கரண்டி. வரமல்லி வாசம் பிடிக்கும்னா சாம்பார்த் தூள் அரகரண்டி எக்ஸ்ட்ரா. உப்பு, பெருங்காயம் உம்ம இஷ்டம். இதெல்லாம் வரிசையா போட்டா தளபுள தளபுளன்னு எண்ண கொதி வந்துரும். அடங்கறப்ப ஆஃப் பண்ணீரும். அஞ்சு நிமிஷம் மூடி வெச்சிட்டு அப்பறம் எடுத்து பன்னீர் உப்புமாவுக்குத் தொட்டு சாப்ட்டுப் பாரும். எங்க ஊர்ல மீனை வறுத்து வெச்சிக்கிட்டு இதத் தொட்டு சாப்டுவாங்க. மீனவிட இது பனீருக்குத்தான் அருமையாச் சேரும்!’’

பல வருஷங்களுக்கு முன்னால் டெல்லியில் கணபதி என்று எனக்கொரு நண்பர் இருந்தார். இப்போது இல்லை. காலமாகிவிட்டார். யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். ஒருநாள் அவர் எனக்கு கீரை உப்புமாவை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அது உத்தரபிரதேசத்தில் குருட்சேத் திரத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு டவுன். இப்போது பேர் மறந்துவிட்டது.

ரவையுடன் பாலக் கீரையைச் சேர்த்து வேகவைத்திருந்தார்கள். மிளகாய் சேர்மானம் கிடையாது. குறுமிளகுதான். நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய். விசேடம் அதுவல்ல. கேரட்டுடன் பொடிப்பொடியாக நறுக்கிய கொய்யாக் காயை அந்த உப்புமா முழுதும் தூவிக் கொடுத்தார்கள். ருசி என்றால் அப்படியொரு ருசி!

உப்புமாவுக்கு இம்மாதிரியாகக் கொஞ்சம் கேனத்தனமான, அல்லது கலை மனத்துடன் அலங்கார விநோதங் கள் செய்தால் அது ஓர் உன்னதப் பட்சணமாகிவிடுகிறது.

சர்க்கரை தூவிய உப்புமாவை என்றாவது மசால் தோசைக்குள் வைத்து ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு மினியேச்சர் சொர்க்கம்.

- மேலும் ருசிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-7-உப்புமாவின்-ருசி-என்பது/article9507390.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 9: கோயில் பிரசாதங்களின் மகிமை!

 

 
spa_3128012f.jpg
 
 
 

தங்கத் தமிழகத்தில் பக்தி இயக்கம் பெருகி வேரூன்றியதில் கோயில்களின் பங்கைவிட, கோயில் பிரசாதங்களின் பங்கு அதிகம் என்பது என் அபிப்பிராயம். பின்னாட்களில் ஈவெரா பிராண்ட் நாத்திகம், இடதுசாரி பிராண்ட் நாத்திகம், இலக்கிய பிராண்ட் நாத்திகம் எனப் பலவிதமான நாத்திக நாகரிகங்கள் வளரத் தொடங்கிய போது, கோயிலுக்குப் போக விரும்பாத வர்களும் பிரசாதம் கிடைத்தால் ஒரு கை பார்க்கத் தவறுவதில்லை.

இதில் ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். தூண், துரும்பு வகையறாக் களில் எல்லாம் வேலை மெனக்கெட்டுப் போய் உட்கார்ந்துகொள்பவன் ஒரு புளியோதரையிலும் சர்க்கரைப் பொங் கலிலும் மட்டும் இருந்துவிட மாட்டானா என்ன?

வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கமே இல்லை. எனக்குப் பெரு மாளைப் பிடிக்கும். பிரசாதங்களை ரொம்பப் பிடிக்கும்.

பிரசாதம் என்று நான் சொல்லுவது பிரபல கோயில்களின் பிரத்தியேக அடையாளங்களையல்ல. உதாரணத் துக்கு, திருப்பதி என்றால் நீங்கள் லட் டைச் சொல்லுவீர்கள். பழனி என்றால் பஞ்சாமிர்தம். அதுவல்ல நான் சொல்லு வது. இந்தப் பிரபலப் பிரசாதங்களுக்கு அப்பால் ஒவ்வொரு கோயிலிலும் வேறு சில ரகங்கள் அபார சுவையோடு தளிகையாகும். திருப்பதியில் எனக்கு லட்டைவிட கோயில் தோசை ரொம்பப் பிடிக்கும். பர்கரில் பாதியளவுக்கு கனத்திருக்கும் தோசை. அதை நெய் விட்டு வார்ப்பார்களா, அல்லது நெய்யில் குளிப்பாட்டி வார்ப்பார்களா என்று தெரியாது. மிளகு சீரகமெல்லாம் போட்டு ஜோராக இருக்கும். ஆறினால் நன்றாயிராது; தொட்டுக்கொள்ள சட்னி வேண்டும் என் பதெல்லாம் கிடையாது. மந்தார இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்பி விடலாம். இரண்டு மூன்று நாள் வைத் திருந்து சாப்பிட்டாலும் ருசி பங்கம் கிடையாது.

இங்கே, சிங்கப்பெருமாள் கோயில் புளியோதரையும் அந்த ரகம்தான். நல்லெண்ணெய், மிளகு. இந்த இரண் டும்தான் இந்தப் புளியோதரையின் ஆதார சுருதி. ஒரு வாய் மென்று உள்ளே தள்ளினால் அடி நாக்கில் இழுக்கும் பாருங்கள் ஒரு சுகமான காரம்! அதை ஒரு வாரத்துக்குச் சேமித்து வைத்து அவ்வப்போது கூப்பிட்டுச் சீராட்ட முடியும்.

திருவாரூருக்குப் பக்கத்தில் திருக் கண்ணபுரம் என்று ஒரு திவ்யதேசம் இருக்கிறது. சௌரிராஜப் பெருமாள் அங்கே பிரபலஸ்தர். அவருக்கு முனியதரன் பொங்கல் என்று ஒன்றை நட்ட நடு ராத்திரி அமுது செய்விப்பார்கள். யாரோ முனியதரன் என்கிற குறுநில மன்னர்பிரான் ஆரம்பித்து வைத்த வழக்கம். இன்றைக்கு வரைக்கும் கோயிலில் பெருமாளுக்கு இந்த நடு ராத்திரி டின்னர் உண்டு. முனியதரன் படைத்ததென்னவோ வெறும் அரிசி, பருப்பு, உப்பு சேர்த்த மொக்கைப் பொங்கல்தான். பரிமாண வளர்ச்சியில் இன்று இப்பொங்கல் அமிர்த ஜாதியில் சேர்ந்துவிட்டது.

மிகச் சிறு வயதில் இந்த ஊர் உற்சவத் துக்கு ஒரு சமயம் போயிருக்கிறேன். நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது யாரோ எழுப்பும் சத்தம் கேட்டது. கொதிக்கக் கொதிக்க உள்ளங்கையில் பிரசாதத்தை வைத்துக்கொண்டு அப்பா நின்றிருந்தார். சூடு பொறுக்காமல் சர்வர் சுந்தரம்போல் அவர் பொங்கல் பந்தை பேலன்ஸ் செய்யத் தவித்து என் வாயில் சேர்த்த காட்சி இப்போதும் நினைவில் உள்ளது. வாழ்நாளில் அப்படியொரு பொங்கலை நான் உண்டதே இல்லை. அது வெறும் நெய்யும் பாலும் பருப்பும் சேர்வதால் வருகிற ருசியல்ல. வேறு ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது. பெரும் தங்கமலை ரகசியம்.

இந்தப் பிரசாத வகையறாக்களில் நவீனத்துவத்தைப் புகுத்தியவர்கள் என்று ஹரே கிருஷ்ணா இயக்கத்தவர் களைச் சொல்லுவேன். பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது அங்கு நான் கண்டது பிரசாத ஸ்டால் அல்ல. பிரசாத ஹால். பந்தி பரிமாறுகிற மாதிரி வரிசையாக டேபிள் போட்டு நூற்றுக்கணக்கான பிரசாத வெரைட்டி காட்டி மிரட்டிவிட்டார்கள். சகஸ்ர சமோசா, கைவல்ய கட்லெட், தெய்வீக ரசகுல்லா, பக்தி பர்கர், பரவச பீட்ஸா, மதுர மசாலா தோசை.

ஆன்மிக ஆம்லெட் மட்டும்தான் இல்லை.

யோசித்துப் பார்த்தால் பக்தியே ஒரு ருசிதான். எங்கோ தொலைதூரத்தில் இருந்து பித்துக்குளி முருகதாஸின் ஒலித்தட்டுக் குரல் கேட்டால், அடுத்தக் கணம் எனக்குக் கண் நிறைந்துவிடும். பண்டிட் ஜஸ்ராஜின் மதுராஷ்டகம் கேட்டிருக்கிறீர்களா? கிருஷ்ணனே இறங்கி வந்து பால்சாதம் ஊட்டிவிடுவது போல இருக்கும். ரசனை, மனநிலை சார்ந்தது. அனுபவிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆழம் பார்த்துவிட வேண்டும்.

ஒருசமயம் சிங்கப்பூர் போயிருந்த போது, ‘கோகுல்' என்றொரு ஹோட்ட லுக்குச் சென்றிருந்தேன். அது ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற ஹோட்டல். மெனு கார்டில் மட்டன், சிக்கன் என்றெல்லாம் இருந்ததைக் கண்டதும் திகிலாகிவிட்டது.

என்ன அக்கிரமம் இது! கிருஷ்ணர் சிங்கப்பூர் போனபோது கட்சி மாறிவிட்டாரா என்ன?

ஹரே கிருஷ்ணா என்று அந்தராத்மா வில் அலறிக்கொண்டு எழுந்தபோது, உடனிருந்த என் நண்பர் பத்ரி ஆசுவாசப்படுத்தினார். அது சும்மா ஒரு எஃபெக்டுக்காகச் சேர்ப்பதுதானாம். டோஃபு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி நான் வெஜ் கடிக்கிற உணர்வைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. பன்னாட்டுப் பயணிகள் வந்து போகிற பிரதேசம். பெயரளவில் அசைவம் சேர்ப்பதில் பாவமொன்றுமில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! கொஞ் சம் ஆசுவாசமடைந்த பிறகு ரொஜாக் என்றொரு ஐட்டத்தை ஆர்டர் செய்து, சாப்பிட்டுப் பார்த்தேன். பழங்கள், பாலாடைக்கட்டி, டோஃபு, வெல்லம், சீரகம் என்று கையில் கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துக்கொட்டிக் கிளறி, தக்காளி சூப் மாதிரி எதிலோ ஒரு முக்குமுக்கி எடுத்து வந்து வைத்தார்கள். அசட்டுத் தித்திப்பும் அநியாயப் புளிப்புமாக இருந்த அந்தப் பதார்த்தம் ஒரு கட்டத்தில் எனக்குப் பிடித்துவிடும்போல் இருந்தது.

இன்னொன்று கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நண்பராகப்பட்டவர் விநோதமான ஒரு பேரைக் கொண்ட (மீ கொரெய்ங் என்று ஞாபகம்) ஏதோ ஒரு மலாய் உணவுக்காகக் காத்திருந்தார். முன்ன தாக மெனு கார்டில் அதன் சேர்மானங் களையெல்லாம் ஊன்றிப் படித்து நாலைந்து பேரிடம் விசாரித்த பிறகுதான் அதை உண்ணத் தயாராகியிருந்தார். கோர நாஸ்திக சிகாமணியான அவரை பகவான் கிருஷ்ணர் தமது உணவகம் வரைக்கும் வரவழைத்துவிட்டதை எண்ணி நான் புன்னகை செய்துகொண் டிருந்தபோது அவர் ஆணையிட்ட உணவு வகை மேசைக்கு வந்து சேர்ந்தது.

நண்பர் சாப்பிட ஆரம்பித்தார்.

‘நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். முதல் வாய் உண்டபோது சிரித்தபடி தலையசைத்தார். இரண்டா வது, மூன்றாவது, நான்காவது கவளம் உள்ளே போனபோது மீண்டும் கேட்டேன், ‘பிடித்திருக்கிறதா?’

மீண்டும் அவர் தலையசைத்தார். ஆனால் ஏதோ சரியில்லாத மாதிரி தோன்றியது. ஒரு கட்டத்தில் வேகவேக மாகச் சாப்பிட ஆரம்பித்தார்.

அந்த உணவகத்தில் மிக மெல்லிய ஒலியளவில் கிருஷ்ண பஜன் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாள கதிக்கு ஏற்ப அவர் உண்டுகொண்டிருந்த மாதிரி தோன்றியது. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவர் பிளேட்டை விடுத்து, என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.

ஆ! எப்பேர்ப்பட்ட அற்புதத் தருணம் அது! தமது பள்ளி நாள் தொடங்கி, கடவுள் இல்லை என்று சொல்லி வளர்ந்த பிள்ளை அவர். தென் தமிழ் தேசத்தில் இருந்து எங்கோ மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்து வந்து அவரை இப்படிக் கிருஷ்ண பக்தியில் கரைய வைத்த பெருமானின் லீலா விநோதம்தான் எப்பேர்ப்பட்டது!

நான் புல்லரித்து நின்றபோது நண்பர் சொன்னார், ‘செம காரம்’.

- மேலும் ருசிப்போம்

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-9-கோயில்-பிரசாதங்களின்-மகிமை/article9521308.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 10: கூழ் குடித்துப் பார்த்தால்தான் என்ன?

 
tre_3134791f.jpg
 
 
 

மனுஷகுமாரனாகப் பிறந்த காலம் முதல் என்னால் இன்றுவரை முடியாத காரியம் ஒன்றுண்டு. மேலே சிந்திக்கொள்ளாமல் சாப்பிடுவது.

கையால் எடுத்துச் சாப்பிடுவது, ஸ்பூனால் அலேக்காகத் தூக்கி உள்ளே தள்ளுவது, அண்ணாந்து பார்த்து கொட கொடவென தொண்டைக் குழிக்குள் கொட்டிக்கொள்வது, ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது, கலயத்தை வாய்க்குள் ளேயே திணித்து பாயின்ட் டு பாயின்ட் அடிப்பது உள்ளிட்ட நானாவித உபாயங் களிலும் பல்லாண்டுகாலப் பயிற்சியும் முயற்சியும் செய்து பார்த்துவிட்டேன். ம்ஹும். கறை படாத கரங்கள் இருந்து என்ன பிரயோசனம்? கறை படியாத சட்டை இன்றுவரை எனக்கு வாய்த்ததில்லை.

உண்பது ஒரு கலை. உதட்டில்கூட சுவடு தெரியாமல் உண்கிறவர்கள் சில ரைப் பார்த்திருக்கிறேன். சீனத் திரைப் படங்களில் நீள நீள நாக்குப் பூச்சி நூடுல்ஸை இரட்டைக் குச்சியால் அள்ளி உண்ணும் சப்பை மூக்கு தேவதை களை எண்ணிப் பெருமூச்சு விட்டிருக் கிறேன். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கதாநாயகராகப்பட்டவர் எத்தனை நளினமாக மது அருந்துவார்! என் நண்பர் பார்த்தசாரதி டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் அழகைப் பார்ப்பதே ஒரு ஒடிசி நடனம் பார்ப்பது போலிருக்கும்.

எனக்கு இதையெல்லாம் ரசிக்கவும் வியக்கவும் முடியுமே தவிர, ஒருநாளும் செய்து பார்க்க முடிந்ததில்லை. சாப்பிட உட்கார்ந்தால் தட்டு பரமாத்மா, நான் ஜீவாத்மா. விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் பரமாத்மாவைச் சென்றடைவது ஒன்றே நமது இலக்கு. கண்ணை மூடிக்கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஜட உலகம் மறந்துவிடும். பரிமாறுகிறவர்களும் மறைந்து, பல காரங்கள் மட்டுமே சிந்தனையை ஆக்கிரமிக்கும். சிந்தனை தப்பில்லை. அது அவ்வப்போது சிந்திவிடுவதுதான் பெரும் சிக்கல்.

இது ஏதோ திரவ வகையறாக்களுக்கு மட்டும் பொருந்துவது என்று எண்ணி விடாதீர்கள். சாம்பார் சாதம், ரசம் சாதமும் சிந்தும். சனியன், தரையில் சிந்தினால் துடைத்து எடுத்துவிடலாம் என்றால் அவையும் சட்டையில் மட்டுமே சிந்தும். இந்த வம்பே வேண்டாம் என்று புளியோதரை, எலுமிச்சை சாதம் எனத் தடம் மாற்றிப் பயணம் மேற்கொண் டாலும் சட்டைப் பையில் நாலு பருக்கை அவசியம் இருக்கும்.

நுங்கம்பாக்கத்தில் ராஜ்பவன் உண வகத்தின் வாசலில் ஒரு ஐஸ் க்ரீம் கடை உண்டு. எனக்கு அந்தக் கடையில் கோன் ஐஸ் சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். மதிய உணவுக்கு அந்தப் பக்கம் போக நேர்ந்தால் கண்டிப்பாக ஐஸ் க்ரீம் சாப்பிடாமல் திரும்பியதில்லை. அப்போதெல்லாம் பெரும்பாலும் பார்த்த சாரதியுடன்தான் போவேன்.

ஒரு ஐஸ் க்ரீமைத் தின்று முடிக்க மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடம் ஆகுமா? அந்த ஐந்து நிமிட அவகாசத்தில் என் கரம் சிரம் புறமெல்லாம் அந்தச் சிறிய கோன் ஐஸ் வண்ணம் தீட்டிவிடும். வாழ்நாளில் ஒருமுறை கூட கோனை உடைக்காமல் நான் கோன் ஐஸ் ருசித்ததில்லை. ஆனால் அந்த துஷ்டப் பண்டமானது பார்த்தசாரதியை மட்டும் ஒன்றும் செய்யாது. ஒரு குழந்தையைக் கையாளும் தாயின் லாகவத்தில் அவர் கோன் ஐஸைக் கையாள்வார். கையை ஆட்டி ஆட்டிப் பேசினாலும் ஒரு சொட்டுகூட அவருக்குச் சிந்தாது. உண்ட சுவடே இல்லாத உதட்டை கர்ச்சிப்பால்வேறு ஒற்றிக்கொள்வார். பார்க்கப் பார்க்கப் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரியும். என்ன செய்ய? என்னைத் தின்னத் தெரிந்தவனாகவும் அவரை உண்ண அறிந்தவராகவும் படைத்த பரதேசியைத்தான் நொந்து கொள்ள வேண்டும்.

ஒரு சமயம் திருச்சி தென்னூரில் ஏதோ ஒரு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டிருந் தார்கள். கூட்டம் மாலைதான். பகல் பொழுது முழுக்க என் வசம் இருந் தது. சும்மா ஊரைச் சுற்றலாம் என்று புறப்பட்டு மதியம் வரைக்கும் சுற்றிக்கொண்டே இருந்தேன்.

பசி வந்த நேரம் கண்ணில் ஒரு கடை தென்பட்டது. ‘முனீஸ்வரன் துணை கம்மங்கூழ்' என்ற சாக்பீஸ் போர்டுடன் சாலையின் ஒரு ஓரமாக நின்றிருந்த தள்ளுவண்டி.

அட, ஒருவேளை கூழ் குடித்துப் பார்த்தால்தான் என்ன? கம்பங்கூழ் ஆரோக்கியமானது. கம்பங்கூழ் குளிர்ச்சி தரக்கூடியது. கம்பில் இரும்புச் சத்து அதிகம். தவிரவும் பிறந்த கணம் முதல் சென்னைவாசியாகவே வாழ்ந்து தீர்ப் பவனுக்கு இம்மாதிரித் தருணங்களெல் லாம் எந்த விதமான கிளுகிளுப்பைத் தரும் என்று லேசில் விவரித்துவிட முடியாது.

ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்து எடுத்த எடுப்பில் இரண்டு சொம்பு கூழ் வாங்கினேன்.

முதல் வாய் ருசித்தபோது ஒரு மாதிரி இருந்தது. பழக்கமின்மையால் எழுந்த தயக்கம். இரண்டாவது வாய் குடித்தபோது அதன் வாசனை கொஞ்சம் பிடித்த மாதிரி தென்பட்டது. கடகட வென்று ஒரு சொம்புக் கூழையும் குடித்து விட்டு வைத்தபோது அபாரம் என்று என்னையறியாமல் உரக்கச் சொன்னேன்.

‘‘நல்லாருக்குங்களா? அதான் வேணும். நம்முது மெசின்ல குடுத்து அரைக்கற கம்பு இல்லீங்க. உரல்ல போட்டு இடிக்கிற சரக்கு. வெறகு அடுப்பு, ஈயப் பானைதான் சமைக்கறதுக்கு பயன்படுத்தறது. அப்பத்தான் மணம் சரியா சேரும்’’ என்றார் கடைக்காரர்.

காய்ச்சுகிறபோது உப்பு. காய்ச்சி இறக்கியதும் சிறு வெங்காயம். ஆறியபின் கெட்டி மோர். இவ்வளவுதான் கம்பங்கூழுக்கு. விசேஷம் அதுவல்ல; கூழுக்குத் தொட்டுக்கொள்ள நாலைந்து விதமான பதார்த்தங்களை அந்தக் கடைக்காரர் கொடுத்தார். அதில் ஒன்று புளிச்சாறில் ஊறவைத்த பச்சை மிளகாய்.

இதைச் சற்று விளக்கவேண்டும். மிகவும் குறைவாக நீர் சேர்த்து, புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொதிக்க வைத்துவிட வேண்டியது. அது உருண்டு திரண்டு பசை போல் வந்ததும் பச்சை மிளகாயின் விதைகளை அகற்றி (தேவைப்பட்டால் கொஞ்சம் சேர்க்கலாம்) நீள நீளத் துண்டுகளாக அந்தக் கொதியில் போட்டு அப்படியே ஊறவிடுவது. கொஞ்சம் மஞ்சள் தூள். சற்றே உப்பு. வேறு எதுவும் அதில் கிடையாது. ஆனால் எப்பேர்ப்பட்ட ருசி தெரியுமா!

அந்தக் கம்பங்கூழும் புளி மிளகாயும் என் காலம் உள்ளவரை நினைவை விட்டுப் போகாது. காரணம் அதன் ருசி மட்டுமல்ல; காணாதது கண்டாற் போல அன்றைக்கு மூன்று சொம்பு கம்பங்கூழை வாங்கிக் குடித்து மூச்சு விட்ட பிறகு பூவுலகுக்குத் திரும்பி வந்தேன். பார்த்தால் என் சட்டையெல் லாம் கூழ். சட்டைப் பையில் சொருகி யிருந்த பேனாவின் மூடிக்குள் வரை ஊடுருவியிருந்தது அக்கூழ்மாவதாரம்.

திடுக்கிட்டுவிட்டேன். அடக்கடவுளே! விழாவுக்கு இந்தச் சட்டையுடன் எப்படிப் போய் நிற்பது? மாற்றுச் சட்டை ஏதும் கைவசம் இல்லை.

''தொடச்சி விட்டுருங்க தம்பி. போயி ரும்’’ என்றார் கடைக்கார நல்லவர்.

வேறு வழி? கூழ் பட்டுப் பாழ்பட்ட இடங்களையெல்லாம் நீர்விட்டுத் துடைத்தேன். அதற்குப் பேசாமல் குளித்திருக்கலாம். முழுச் சட்டையும் நனைந்து கசங்கிவிட்டது.

சரி போ, சட்டையில் என்ன இருக் கிறது? தவிரவும் ‘எழுத்தாளனாகப்பட்ட வன் எப்போதும் ஒரு ஏடாகூடம்தான்’ என்பதை இச்சமூகம் இந்நாட்களில் நன்கறிந்திருக்கும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு மாலை வரை அதே சட்டையில் சுற்றிவிட்டு, விழாவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

நடந்த விழா முக்கியமல்ல. முடிந்த பிறகு புகைப்படக்காரர் சொன்னார். ‘‘காலர்ல எதோ கறை பட்டிருக்கு சார்.’’

அது அந்தப் புளி மிளகாய்ப் பசையின் கறை.

கொண்டையை மறைக்கத் தெரியாதவனெல்லாம் இப்படித்தான் கால் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டுரை எழுதிக்கொண்டிருப்பான்.

 

பா.ராகவன்

- மேலும் ருசிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-10-கூழ்-குடித்துப்-பார்த்தால்தான்-என்ன/article9549780.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 11: பனீர் புராணம்!

 

 
 
 
para_3137599f.jpg
 
 
 

பனீர் என்பது ஒரு சத்வ குண சரக்காகும். ஆனால், தமிழ் நாட்டில் இது படுகிற பாடு சொல்லி முடியாது. குழம்பில் போடப்படுகிற பெங்களூரு கத்திரிக்காயைவிடக் கேவலப்படுத்தப்படுகிற வஸ்து ஒன்று உண்டென்றால் அது பனீர்தான்.

சமீப காலமாகத் தொலைக்காட்சிகளில் ‘இவளுக்கு பனீர் சமையல்னா ரொம்ப பிடிக்கும்’ என்று ஆரம்பித்து ஒரு விளம்பரம் வருகிறது. ‘பத்தே நிமிடத்தில் பனீர் சமையல்’ என்று இன்னொரு விளம்பரம். ஆனால், விளம்பரத்தில் இவர் கள் காட்டுகிற காட்சியெல்லாம் சபைக் குறிப்பில் இருந்து நீக் கப்பட்ட வரிகளைப் போலத்தான் பனீரை முன்னிறுத்துகின்றன.

உண்மையில் பனீர் ஒரு சிறந்த உணவுப் பொருள். நான் அரிசிக்கு மாற்றாகக் கடந்த பல மாதங்களாக அதைத்தான் சாப்பிடுகிறேன். ஒருவேளை உணவுக்கு 200 கிராம் பனீர் போதும். இதில் சுமார் 40 கிராம் கொழுப்பு, 35 கிராம் புரதம் கிடைத்துவிடும். சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகளில் நாலில் ஒரு பங்கு சேதாரமின்றி வந்து சேர்ந்துவிடும். அதைவிட விசேஷம் என்னவென்றால், பனீரில் கார்போஹைடிரேட் கிடையாது. நான் சொன்ன 200 கிராமில் மொத்தமே இரண்டு கிராம் மாவுச் சத்துதான் தேறும். எனவே, இதில் தேக ஹானி கிடையாது.

‘ஐயோ கொழுப்பைத் தின்று ஜீவ சமாதி அடைவதற்கா?’ என்று அலறாதீர். பனீரில் உள்ளது நல்ல கொழுப்பு. இது உயிரை எடுக்காது. மாறாக காயகல்பம் சாப்பிட்ட கந்தர்வ குமாரனைப் போல் தேக சம்பத்தை ஜொலி ஜொலிக்கப் பண்ணிவிடும். என்ன ஒன்று, ஒருவேளைக்குப் பனீர், மறுவேளைக்குப் பலான சாப்பாடு என்று கலந்தடிப்பது தகாது. தேக இயந்திரமானது ஒன்று கொழுப்பில் இயங்கவேண்டும். அல்லது கார்போஹைடிரேடில் இயங்க வேண்டும். இரண்டையும் கலப்பது பெட்ரோல், டீசல் இரண்டையும் சேர்த்தடித்து வண்டியோட்ட முயற்சி செய்வது போலாகும். புரியும்படிச் சொல்லுவதென்றால், பனீர் பட்டர் மசாலா நல்லது. அதையே சப்பாத்திக்கோ, புல்காவுக்கோ தொட்டுக்கொண்டு சாப்பிடுவது கெட்டது.

இந்தியாவில் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்தே பனீர் உணவு இருந்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஆதி நூலாகக் கருதப்படும் ‘சரக சம்ஹிதை’யில் கொதிக்கும் பாலில் எலுமிச்சை நிகர்த்த புளிப்புப் பண்டம் சேர்த்துக் கொழுப்பைப் பிரித்தெடுத்துத் தயாரிக்கப்படுகிற வஸ்துவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குஷானப் பேரரசர் கனிஷ்கரைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவருக்கும் அவர் காலத்திய வடக்கத்தி மாகாணவாசிகளுக்கும் பனீர் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கிறது.

சிலபேர் ரிக் வேத காலத்திலேயே பனீர் உண்டு என்பார்கள். எனக்கென்னமோ அதெல்லாம் உலகின் முதற்குரங்கு தமிழ்க் குரங்கு என்பது போலத்தான் தோன்றுகிறது. தொன்மம் மட்டுமே சிறப்பல்ல. இன்றும் தழைக்கிறதா? தீர்ந்தது விஷயம்.

அது நிற்க.

நான் பனீரை முக்கிய உணவாக்கிக்கொண்ட சிறிது காலத்திலேயே அதில் சமைக்கவும் கற்றுக்கொண்டேன். பனீரை சாதம் போல் உண்ணலாம். உப்புமா செய்யலாம். பொங்கல் செய்யலாம். டிக்கா போன்ற தந்தூரி வகையறாக்களை முயற்சி செய்யலாம். ஒன்றுமே இல்லாவிட்டாலும் வெறுமனே நறுக்கிப் போட்டு ரெண்டு பிடி வெங்காயம் தக்காளி சேர்த்து வெண்ணெயில் வதக்கி எடுத்தால் தேவாமிர்தமாக இருக்கும்.

எத்தனையோ நற்சாத்தியங்கள் இதில் உள்ளதென்றாலும் நமது உணவகங்களில் இந்தப் பனீரை என்ன பாடு படுத்தி எடுக்கிறார்கள் என்று லேசில் விளக்கிவிட முடியாது. பெரும்பாலும் வீட்டில் சாப்பிட முடியாத தினங்களில் இந்தக் கிங்கரர்களிடம் மாட்டிக்கொண்டு விடுவேன். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு வடக்கத்தி உணவை என்னென்னக் கருமாந்திரங்களைச் சேர்த்து சமைத்தாலும் நமது மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பதே சித்தாந்தம்.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு வடக்கத்தி துரித உணவகம் இருக்கிறது. பிராந்தியத்தில் மிகவும் பிரசித்தம். இங்கே பனீரைப் பலவிதங்களில் சமைத்து அல்லது போஸ்ட் மார்ட்டம் செய்து தருவார்கள். எதையும் இரண்டு வாய்க்கு மேல் உண்ண முடியாது. ஒன்று, நூறு கிராம் பனீரில் நூறு கிலோ மிளகாயைக் கொண்டு கொட்டுவார்கள். அல்லது பனீரை வதக்குவதற்குமுன் சமுத்திரத் தண்ணீரில் அலசி எடுத்துவிடுவார்கள். கேட்டால், அதுதான் வடக்கத்தி ஸ்டைல். பாலக் பனீர் என்னுமொரு பேரதிசயப் பண்டத்தை இவர்கள் சமைத்துத் தருகிற விதத்தைப் பற்றி இன்னொரு பண்டார மும்மணிக் கோவைதான் எழுதவேண்டும். சைவ நெறி காப்போரைப் பண்டாரம் என்பார்கள். மேற்படியாளர்கள் சைவ நரி மேய்ப்பர்கள்.

இன்னொரு பிரசித்தி பெற்ற உணவகம், பனீர் உப்புமாவை கேப்பைக் களி ருசியில் தயாரித்து வழங்க வல்லது. இந்த உணவகத்துக்கு ஊரெல்லாம் கிளைகள் வேறு. ஸ்தல மகிமைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு விதமான களி ருசியைக் கொண்டு வருவார்கள். சென்னை, பாளையங்கோட்டை, வேலூர் வகையறா ருசி. கேட்டால், ‘வேணான்னா சொல்லுங்க, ரவா ரோஸ்ட் கொண்டாரேன்’ என்பார் சேவக சிகாமணி.

சாப்பிடுவது எப்படி ஒரு கலையோ, அதே போலத்தான் சமைப்பதும். ‘பனீரில் நான் அதன் மிருதுத் தன்மையாக இருக்கிறேன்(!)’ என்று கீதையில் எம்பெருமான் சொல்லியிருப்பதும் அதனால்தான். துரதிருஷ்டவசமாக எடிட்டர்கள் அந்த வரியைக் கபளீகரம் செய்துவிட்டார்கள். மேற்படி மிருதுத் தன்மைக்கு அலங்காரம் செய்வது மட்டும்தான் சமைப்பவர்களின் வேலையே தவிர, திட்டமிட்டுப் படுகொலை முயற்சி செய்தாலொழியப் பனீரைக் கெடுக்க முடியாது.

எனக்குத் தெரிந்து சென்னையில் பனீரைக் கலையுணர்வுடன் கையாளத் தெரிந்த சமையல் விற்பன்னர்கள், திநகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள சங்கீதாவில் உள்ளார்கள். கொஞ்சம் யோசித்தால் கத்திப்பாரா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள அபூர்வாவையும் சொல்லலாம்.

இந்த அபூர்வாவில் உத்தியோகம் பார்க்கிற அத்தனை நாரீமணிகளும் அஸ்ஸாமுக்குக் கிழக்கில் இருந்து மொத்த கொள்முதலாக வந்து சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். மூக்கையும் முழியையும் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒரு பனீர் டிக்காவை எப்படி அலங்கரிப்பது என்று நன்கு அறிந்த தேவதைகள். ஒற்றை வெங்காயத்தை மெல்லிய பூமாலை போல் சுருள் சுருளாக அரிந்து டிக்காவுக்கு சாற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். தக்காளியானது மாலையில் சொருகிய வண்ண மலரேபோலப் பிணைந்து கிடக்கும். கொத்துமல்லிச் சட்னிக்கு மேலே தேங்காய்ப்பூ தூவி வைக்கிற பெருங்கலையுள்ளம் வாய்த்தவர்கள். உணவின் ருசியானது, பரிமாறப்படும் விதத்திலும் உள்ளது என்பதை இவர்கள் அறிவார்கள்.

ஒரு சமயம் இந்தச் சப்பை மூக்கு தேவதைகளைப் போல நாமும் வெங்காயத்தை அரிந்து பார்த்தால் என்ன என்று ஓர் ஆசை வந்தது. மனைவி அருகே இல்லாததொரு சுதினத்தில் என் பிரத்தியேகக் கத்தி கபடாக்களை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து, லாகவமாக அதில் கத்தியைச் சொருகி, கணக்கு வாத்தியார் காதைத் திருகுகிற மாதிரி அப்படியே அதைத் திருகிப் பார்த்தேன். முதல் சுற்று சரியாக வந்துவிட்டது. இரண்டாம் சுற்றில் கத்தி நகர்ந்துவிட்டது.

நறுக்கிய வரை தூரப் போட்டுவிட்டு மீண்டும் அதே முயற்சி. இம்முறை கத்தியைச் சொருகிய விதமே தப்பு. காயமே இது பொய்யடா என்று காறித் துப்பிவிட்டது வெங்காயம். அதையும் கழித்துவிட்டு மீண்டுமொரு முயற்சி. சுமார் அரை மணிநேரம் அந்த ஒரு வெங்காயத்துடன் துவந்த யுத்தம் நடத்திவிட்டு, இறுதியில் அற்புதமாகத் தோற்றுப் போனேன்.

நறுக்கத் தெரியாதவனுக்கு வறுக்கத் தெரியும். அன்றைக்கு நான் சமைத்த பனீர் புர்ஜி சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்தது. தனியொரு காவியமாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

 

- தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-11-பனீர்-புராணம்/article9559506.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளபாகம் நன்றாகப் போகின்றது....!  tw_blush:

தொடருங்கள் நவீனன்....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 12: மனைவி இனத்தைச் சேர்ந்த தயிர்!

 

 
 
ss_3139935f.jpg
 
 
 

அன்றைக்கு என் மனைவி வீட்டில் இல்லை. எனவே, சமையல றையை முற்றுகையிட்டுக் கைப்பற்றுவது எனக்கு எளிதாக இருந்தது. முன்னதாக மனைவி ஊருக்குப் போயிருக்கிற தினங்களில் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் புரியலாம் என்று சிந்தித்து, ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருந்தேன். அதன்படி எனது முதல் முயற்சியை பனீர் டிக்காவில் தொடங்கினேன்.

இந்த பனீர் டிக்காவின் ருசிக்கு அடிப் படை, தயிர். தயிர்தான் டிக்காவின் உள்ளுறை பிரம்மம். அந்தத் தயிரானது அதிகமாகவும் ஆகிவிடக் கூடாது, குறைந் தும் போய்விடக் கூடாது. புளித்திருக் கவும் கூடாது, இனிப்பாகவும் இருந்து விடக் கூடாது. கல்லால் உடைக்க வேண் டிய அளவுக்குக் கெட்டிப் பட்டிருக்க வேண்டியது அனைத்திலும் அவசியம். அந்தக் கெட்டித் தயிரை நீர் சேர்க்காமல் கடைந்து நுங்கு பதத்துக்குக் கொண்டு வரவேண்டியது முக்கியம். ஒரு சிறந்த பனீர் டிக்காவை ருசிப்பதற்கு நீங்கள் முழுக் கொழுப்புப் பாலில் தோய்த்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தயிர் உருவாக்கத்தில் நமது பங் களிப்பு ஒன்றுமில்லை என்பதால் அன்றைக்கு எனக்கு மிகச் சிறந்த தயிர் வாய்த்துவிட்டது. காஷ்மீரத்து மிளகாய்த் தூள் கொஞ்சம், பொடித்த கடுகு கொஞ்சம். சீரகம் மற்றும் தனியாத் தூள் கொஞ்சம், அரைச் சிட்டிகை மஞ் சள் தூள், அளவோடு உப்பு. சேர்த்துக் கலக்கினால் முடிந்தது கதை.

தயிரைத் தயார் செய்துவைத்து விட்டுத்தான் வெங்காய நறுக்கலில் உட்கார்ந்தேன். பொது வாக நமது உணவகங் களில் வெங்காய விற் பன்னர்கள் பனீர் டிக்கா வுக்கு என சிறப்பு மெனக் கெடல் ஏதும் செய்ய மாட்டார்கள். தடி தடியாகக் கிண்ணம் போல நறுக்கி, அதே அளவு தடிமனில் தக்காளி மற்றும் குடை மிளகாயையும் சேர்த்து நறுக்கி, மூன்றின் இடையே பனீரைச் சொருகி, பல் குத்தும் குச்சியால் அதன் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி கொண்டுவந்து வைத்து விடுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு தண்டக் கருமாந்திரத் தயாரிப்பு. சற்றும் கலையுணர்ச்சி இல்லாமல் உருவாக்கப்படுவது. அந்த அபூர்வா ஓட்டல் அஸ்ஸாமிய நாரீமணியைப் பற்றிச் சொன்னேனே? அவரைப் போல நூதனமாக ஏதாவது முயற்சி செய்வதே உணவுக்கு நாம் செய்யும் மரியாதை.

ஆச்சா? வெங்காய துவந்த யுத்தம் ஆரம்பமானது. ஒரு வெங்காயத்தை, ஒரு துண்டு கூடக் கீழே விழாமல் முற்றிலும் சுருள் சுருளாக, மெலிதாக ஒரே வளையம்போல் வார்த்தெடுப்பது என்பது ஒரு பெரும் வித்தை. இதற் கென என்னவாவது கருவி கண்டுபிடிக் கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிய வில்லை. அந்த அஸ்ஸாமியப் பெண் கையாலேயே வெங்காய மாலை தொடுத் ததைக் கண்ணால் கண்டுவிட்ட படியால் நாமும் முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால்,முற்றி லும் காந்தியவாதியான எனக்குக் கத்தியைச் சரியாகப் பயன்படுத்தவர வில்லை. எத்தனை லாகவமாக அதை வெங்காய வடிவத்துக்கு வளைத்து மடித்தாலும் நான் கோக்க நினைத்த மாலையானது இரணிய கசிபு வதைப் படலத்தை உத்தேசித்தே நகர்ந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் வெங்காயத்தோடு துவந்த யுத்தம் நிகழ்த்திவிட்டு, இறுதியில் துவண்டு தோற்றேன். ரொம்ப அவமானமாகப் போய்விட்டது.

நாராசமாக நறுக்கப்பட்ட வெங் காயத்தை வீணாக்க முடியாது. ஒரு சிறந்த பனீர் டிக்காவுக்கு அதை உப யோகிக்கவும் முடியாது. என்ன செய்ய? ஃப்ரிஜ்ஜில் இருந்த பனீரை வெளியே எடுத்து வைக்க மறந்துவிட்டிருந்தேன். பனீர் ஒரு பத்து நிமிடங்களாவது அறை வெப்பத்தில் இருந்தால்தான் வெட்டுவதற்கு நெகிழ்ந்து கொடுக்கும். ஃப்ரிஜ்ஜில் இருந்து வெளியே எடுத்த வேகத்தில் கத்தியைக் கொண்டுபோய் அதன் கன்னத்தில் வைத்தால் வடிவம் கண்ணராவியாகிவிடும்.

என்ன ஒரு இம்சை! மேலும் பத்து நிமிடங்கள் பனீருக்காகக் காத்திருந்து, அதைச் சதுரங்களாக்கித் தயிரில் போட்டு ஊற வைப்பதற்குள் தயிரின் குணம் மாறிவிடும். இந்தத் தயிரானது, மனைவி இனத்தைச் சேர்ந்த ஒரு பொருள். என்ன செய்தாலும் முகம் சுளிக்கும். பதம் தவறினால் கதம் கதம்.

என்ன செய்யலாம் என யோசித்தேன். நான் ருசித்து உண்பது மட்டுமே இதில் விஷயமல்ல. நான் வசிக்கிற அச்சுவெல்ல அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் எனக்கு கோபால் என்ற நண்பரொருவர் இருக்கிறார். கம்யூனிஸ்ட் என்றாலும் அடிப்படையில் கலை மனம் கொண்டவர். அவரைக் கூப்பிட்டுக் கொஞ்சம் ருசி பார்க்கச் சொல்லிவிட்டால் போதுமானது. மனைவி ஊரில் இருந்து திரும்பும் போது வாசலிலேயே நிறுத்தி எனது தீர பராக்கிரமங்களைப் பிரஸ்தாபித்து விடுவார்.

ஆக, அந்த எண்ணத்திலும் மண். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். டிக்கா முடியாது என்று தெரிந்துவிட்டது. எனவே மாற்றுப் பாதையில் போவது என முடிவு செய்து, எனது அன்றைய நூதனத் தயாரிப்பு ஒரு பனீர் கிச்சடி யாக இருக்கும் என்று எனக்குள் அறி வித்துக்கொண்டேன். இப்போது பனீரை நறுக்க வேண்டிய அவசியமில்லை. இளகிய பதம் தேவையில்லை. பரோட்டா வுக்கு மாவு பிசைவது போல எனதிரு கரங்களாலும் பனீர்க் கட்டியை ஏந்திப் பிடித்துப் பிசைந்து கொட்டினேன்.

சட்டென்று ஒரு பயம் பிடித்துக்கொண் டது. அடக்கடவுளே! கிச்சடிக்குத் தயிர் எப்படிச் சேரும்? அசகாய மசாலாக் கலவையெல்லாம் தயாரித்து அதன் தலையில் கொட்டி சமாஸ்ரயணம் செய்து வைத்திருக்கிறேனே? அத்தனை யும் வீணா?

மீண்டும் யோசித்து கிச்சடி யோசனை யைக் களி யோசனையாக மாற்றிக் கொண்டேன். களிப்பூட்டும் களி. அடுப் பில் வாணலியை ஏற்றி, இரண்டு கரண்டி நெய்யை ஊற்றி நாலு கடுகு, இரண்டு குண்டு மிளகாய்களைப் போட்டெடுத்து எனது வெங்காய சம்ஹார சரக்கை அவிழ்த்துக் கொட்டி வதக்க ஆரம்பித் தேன். களிக்கு வெங்காயம் உண்டா என் றெல்லாம் கேட்கப்படாது. கலைஞன் ஒரு வினோத ரச மஞ்சரி. அவன் என்னவும் செய்வான். ஆக, வெங்காயம் வதங்கி யது. இப்போது உதிர்த்துப் பிசைந்த பனீரை அதில் போட்டுக் கொஞ்சம் தண் ணீர் ஊற்றினேன். சட்டென்று தயிர் நினை வுக்கு வந்தது. ஐயோ தண்ணீர் எதற்கு? நிறுத்திவிட்டு, எடுத்துக் கொட்டு தயிரை.

இந்த உலகில், வாணலியில் வதங்கு கிற ஒரு வஸ்துவில் தயிரைக் கொட்டி வேகவிட்ட ஒரே ஜென்மம் நானாகத் தான் இருப்பேன். பிரச்சினை என்ன வெனில், முதலில் மறந்துபோய் சேர்த்து விட்ட தண்ணீரும் தயிரும் கலந்து, எனது களியானது மோரில் வேகத் தொடங்கி யது. ரொம்பக் கேவலமாக இருக்குமோ என்று பயம் வந்து சட்டென்று அடுப்பை அணைத்தேன். படாதபாடு பட்டு கொதித் துக்கொண்டிருந்த அந்த மோர்க் கரை சலை வடித்து வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றினேன்.

ஆனது ஆகிவிட்டது. இனி நடப்பது எம்பெருமான் செயல். தக்காளி, குடை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி என்று கிடைத்தது அனைத்தையும் அள்ளிக்கொட்டி என்னமோ ஒன்றைச் செய்து முடித்தேன். நான் செய்ததில் ஒரே நல்ல காரியம், அடுப்பை மிதமான சூட்டிலேயே பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்ததுதான்.

உண்டு பார்த்தபோது திகைத்து விட்டேன். உண்மையில் அது ஒரு நூதன பனீர் புர்ஜி. உப்புமாவுக்கும் பொங்கலுக்கும் பிறந்த கலப்புக் குழந்தைபோல் இருந்தது.

இன்னொரு முறை செய்வேனா என்று தெரியாது. அற்புதங்கள் எப்போதா வதுதான் நிகழும்.

 

- மேலும் ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-12-மனைவி-இனத்தைச்-சேர்ந்த-தயிர்/article9570671.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா.ராகவன் ஒவ்வொன்றையும் என்யோய் பண்ணி எழுதுகிறார்...சாப்பாட்டு ரசனை உள்ள மனிசன்

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 13: நல்ல உணவா... நாராச உணவா?

 

 
 
ragahavan_3142330f.jpg
 
 
 

இன்றைக்குச் சுமார் 9 ஆண்டு களுக்கு முன்புவரை உணவைப் பற்றிய எனது புரிதல் ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக மட்டுமே இருந்தது. அதாவது, உணவு என்பது நாவை சந்தோஷப்படுத்தி, வயிற்றில் சென்று சேருகிற வஸ்து. அது நல்ல உணவா… நாராச உணவா? உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா… கொள்ளாதா? நமக்கு ஏற்றதா… இல்லையா? இது அவ சியமா, பிந்நாளைய உபத்திரவங் களுக்கு அச்சாரமா என்றெல்லாம் யோசித்தே பார்க்க மாட்டேன். எந்தப் பேட்டையிலாவது என்னவாவது ஒரு பலகாரம் பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் போதும். உடனே என் மூஞ்சூறு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்.

ருசி மிகுந்த ஒரு மலாய் பாலை அருந்துவதற்காக தர்ம க்ஷேத்திரமாம் குரோம்பேட்டை யில் இருந்து புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணம்செய்து மண்ணடியை அடைவேன். குறிப்பிட்ட சேட்டுக்கடையானது விளக்கு வைத்து ஓரிரு மணிநேரங்களுக்குப் பிறகே திறக்கப்படும். அதன் பிறகு விறகடுப்பை மூட்டி அண்டாவில் பாலைக் கொட்டி அதன் தலைமீது வைத்துக் காயவிட்டு, அவர் வியாபாரத்தைத் தொடங்க அநேகமாக ஒன்பதரை, பத்து மணியாகிவிடும். ஜிலேபி, கலர் பூந்தி, பால்கோவா என்று அந்தக் கடையில் வேறு சில வஸ்துக்களும் கிடைக்குமென்றாலும் அங்கே மொய்க்கிற கூட்ட மெல்லாம் அந்த மலாய் பாலுக்காகத்தான் வரும்.

எனக்குத் தெரிந்து பாலில் உண்மை யிலேயே சுத்தமான காஷ்மீரத்துக் குங்குமப்பூ சேர்த்த ஒரே நல்ல சேட்டு அவர்தான். ஏலக்காய் போடுவார். சிட் டிகை பச்சைக் கற்பூரம் போடுவார். முந்திரி பாதாம் பிஸ்தா வகையறாக் களைப் பொடி செய்து போடுவார். கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்ப்பார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உலர்ந்த வெள்ளரி விதைகளை ஒரு தகர டப்பியில் இருந்து இரு கைகளாலும் அள்ளி அள்ளி எடுத்து அதன் தலையில் கொட்டுவார்.

மேற்படி சேர்மானங்களெல்லாம் ஜீவாத்ம சொரூபம். பாலானது பரமாத்ம சொரூபம். இரண்டும் உல்லாசமாக ஊறியபடிக்கு விசிஷ்டாத்வைதபரமாக விறகடுப்பில் கொதித்துக் கிடக்கும். சேட்டானவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய கரண்டியைப் போட்டு நாலு கிளறு கிளறிவிடுவார். பிராந்தியத்தையே சுண்டி இழுக்கிற மணம் ஒன்று அதன்பின் வரும். அப் போதுதான் வியாபாரம் ஆரம்பமாகும்.

அந்த மலாய் பால், ஒருவேளை முழு உணவை நிகர்த்த கலோரி மிக்கது என்பதறியாமல், மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பாலுக்காகப் போய் நிற்பேன். அது ஒரு காலம்.

மேற்படி மண்ணடி சேட்டு மலாய் பால், கற்பகாம்பாள் மெஸ் ரவா ரோஸ்ட், மைலாப்பூர் ஜன்னல் கடை பொங்கல் வடை, வெங்கட்ரமணா தேங்காய் போளி என்று பிராந்தியத்துக்கொரு பலகார அடையாளமாகவே தருமமிகு சென்னை என் மனத்தில் பதிந் திருந்தது.

ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் பத்ரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் அதுவரை போயிராத இடம். மெடிமிக்ஸ் ஆயுர்வேத சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்துகிற உணவகம். சஞ்சீவனம் என்று பேர்.

வழக்கமான உணவகம்தான். ஆனால் அங்கே தனிச்சிறப்பான முழுச் சாப்பாடு ஒன்று உண்டு. இயற்கை மருத்துவ நெறிக்கு (நேச்சுரோபதி) உட்பட்டுத் தயாரிக்கப்படுகிற உணவு என்று சொன்னார்கள்.

போய் உட்கார்ந்ததும் முதலில் மைல் நீள வாழையிலையின் ஒரு ஓரத்தில் ஒரு துண்டு நேந்திரம்பழத்துண்டு வைப்பார் கள். அதன்மீது ஒரு ஸ்பூன் தேங்காய்ப் பூ தூவுவார்கள். அடேய், நான் மலை யாளி என்பது அதன் அர்த்தம். அதன் பிறகு சொப்பு சாமான் சைஸில் ஐந்து கண்ணாடிக் கிண்ணங்களில் வண்ணமய மான ஐந்து பானங்கள் வரும். ஒன்றில் கீரைச் சாறு. இன்னொன்றில் புதினா அரைத்துவிட்ட மோர். பிறகு ஏதேனுமொரு கொட்டைப் பயிரில் தயாரித்த சாறு. வாழைத்தண்டு சாறு. சாஸ்திரத்துக்கு ஒரு பழச்சாறு.

முடிந்ததா? இந்த ஐந்து பானங்களை அருந்தியானதும் ஐந்து விதமான பச்சைக் காய்கறிகளைக் கொண்டு வந்து வைப்பார்கள். சாலட் என்கிற காய்க் கலவை அல்ல. தனித்தனியே ஐந்து பச்சைக் காய்கறிகள். அதைச் சாப்பிட்ட பிற்பாடு, அரை வேக்காட்டுப் பதத்தில் மேலும் ஐந்து காய்கறிகள் வரும். அதையும் உண்டு தீர்த்த பிறகு முழுதும் வெந்த காய்கறிகள் இன்னொரு ஐந்து ரகம். கண்டிப்பாக ஒரு கீரை இருக்கும்.

ஆக மொத்தம் பதினைந்து காய்கறிகள் மற்றும் ஐந்து பானங்கள். உண்மையில் இவ்வளவுதான் உணவே. ஆனால் நமக்கெல்லாம் சோறின்றி அமையாது உணவு. எனவே கேரளத்து சிவப்பு குண்டு அரிசிச் சோறும் பருப்பும் கேட்டால் கொடுப்பார்கள். அதெல்லாம் முடியாது; எனக்கு சாம்பார் ரசம் இல்லாமல் ஜென்ம சாபல்யம் அடையாது என்பீர்களானால் அதுவும் கிடைக்கும்.

எதற்குமே அளவு கிடையாது என்பது முக்கியம். எதிலுமே குண்டு மிள காயோ, வெங்காயமோ, பூண்டோ, எண் ணெயோ, புளியோ கிடையாது என்பது அதிமுக்கியம். இந்த ராஜபோஜனத்தை முழுதாக உண்டு முடித்தால் ஆயிரம் கலோரி சேரும். இது ஒரு நாளில் நமக்குத் தேவையான மொத்த கலோரி யில் கிட்டத்தட்ட சரிபாதி.

விஷயம் அதுவல்ல. இதே ஆயிரம் கலோரிக்கு நீங்கள் வேறு என்ன சாப்பிட்டாலும் வயிறு புளிப் பானை போலாகிவிடும். ஆனால், இந்தக் குறிப் பிட்ட சாப்பாடு பசியைத் தீர்க்குமே தவிர வயிற்றை அடைக்காது. உண்ட உணர்வே இன்றி பசியழிப்புச் சேவையாற்றும் அந்நூதன உணவு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. திரும்பத் திரும்ப அந்த உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுப் பார்த்தேன். கூடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறையைப் பற்றிப் படிக்கவும் ஆரம்பித்தேன்.

அதர்வன வேதத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியத்துக்கு அண்ணனா, தம் பியா என்றொரு விவாதம் ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவானாலும் இரண்டும் சகோதர ஜாதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுர்வேதம் என்பது சுக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கைக்கான அறிதல் முறை. வெறும் மருத்துவமாக மட்டுமே அறியப்பட்டிருந்தாலும் இதில் வேறு பல சங்கதிகள் இருக்கின்றன. சமையல் கலையைப் பற்றி ஆயுர்வேதம் பேசும். சாப்பாட்டு முறை பற்றிப் பாடம் எடுக்கும். சட்டென்று அங்கிருந்து கிளம்பி விவசாயம் செய்வதைக் குறித்து விளக்கம் சொல்லும். கொஞ்சம் அறிவியல் வாசனை காட்டும். தடாலென்று தடம் மாறி ஜோதிட விளக்கம் சொல்லும். இன்னதுதான் என்று கிடையாது. மனுஷனாகப் பட்டவன் சவுக்கியமாக வாழவேண்டும். அதற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் இதில் உண்டு.

அடிப்படையில் ஆயுர்வேதம் சுட்டிக் காட்டுகிற ஒரு முக்கியமான சங்கதி என்னவென்றால், இப்புவியில் நம் கண் ணுக்குத் தென்படுகிற அத்தனைத் தாவரங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மருத்துவ குணம் கொண்டதுதான். சில வற்றின் பயன்பாடு நமக்குத் தெரிந் திருக்கிறது. இன்னும் தெரியாத ரக சியங்கள் எவ்வளவோ உள்ளன. ஆரோக்கியமானது, நமது உடலுக்குள் உற்பத்தியாகிற சமாசாரம். இத் தாவரங்கள் அதைப் போஷித்து பீமபுஷ்டி அடைய வைக்க உதவுபவை.

சஞ்சீவனத்தில் உண்ட உணவும் இங்குமங்குமாகப் படித்த சில விஷயங் களும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ண ஆரம்பித்தன. அதுவரை எனக்கு எண்ணமெல்லாம் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவே இருந்தது. இனிப்பு என்றால் கிலோவில்தான் உண்ணவே ஆரம்பிப்பேன். அது டன்னிலும் குவிண் டாலிலும் போய் நிற்கும். பரோட்டா வில் ஆரம்பித்து பீட்சா வரை தேக ஹானிக்கு ஆதாரமான சகலமான உண வினங்களையும் ஒரு வேள்வியைப் போல் தின்று தீர்த்துக்கொண்டிருந்தேன்.

சட்டென்று ஒருநாள் போதும் என்று தோன்றியது. அன்றைக்குத்தான் இரண்டு முழு திருப்பதி லட்டுகளை ஒரே மூச்சில் கபளீகரம் செய்திருந்தேன்.

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-13-நல்ல-உணவா-நாராச-உணவா/article9580651.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 14: திவ்யமான திருப்பதி லட்டு!

 

 
 
 
laddu_3144922f.jpg
 
 
 

சென்ற வாரக் கட்டுரையின் கடைசி வரியில் இரண்டு திருப்பதி லட்டுகளைப் பிடித்து உட்கார வைத்திருந்தேன். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் உண்டதெல்லாம் போதும் என்ற ஞானம் உதித்ததைச் சொன்னேன். திருப்பதி பெருமாள் கேட்டதெல்லாம் தருவார் என்பார்கள். திருப்பதி லட்டு கேட்காத ஒன்றைத் தரும் என்று அன்றுதான் எனக்குப் புரிந்தது. ஞானம் கிடக்கட்டும். அந்த லட்டைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

இந்தப் பூவுலகத்தில் கிடைக்கிற அத்தனை சுவைகளையும் ஒரு தட்டில் வைத்து எதிர்ப்புறம் ஒரு திருப்பதி லட்டை வைத்தால் நான் இரண்டாவதைத் தான் எடுப்பேன். இத்தனைக்கும் லட்டு என்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத வஸ்து. சமூகத்தில் யாருக்குமே ருசியான லட்டு பிடிக்கத் தெரியவில்லை என்பது என் அபிப்பிராயம். அதுவும் கல்யாண வீட்டு லட்டு என்பது ஒரு காலக்கொடுமை. எண்ணெயில்தான் பொரிக்கிறானா, குரூடாயிலைக் கொண்டு கொட்டுகிறானா என்று எப்போதும் சந்தேகாஸ்பதத்தோடே அணுக வேண்டியிருக்கும். நிஜ லட்டின் ருசியானது மிகச் சில இடங்களில் மட்டுமே தரிசனம் கொடுக்கும். பெரும் பாலும் சேட்டுக் கடைகளில்.

அடிப்படையில் லட்டின் பிறப்பிடம் குஜராத் என்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம். அங்கே அதனை மோத்தி சூர் லாடு என்பார்கள். 12-ம் நூற்றாண்டு குஜராத்திய இலக் கியங்களில் ஆதி லட்டு பற்றிய குறிப்புகள் இருப் பதாகச் சொல்கிறார்கள். கடலை மாவு, சர்க்கரைக் கரைசல் (கம்பிப் பாகு பதம் முக்கியம்), நெய், திராட்சை, ஏலம், முந்திரி. அவ்வளவு தான். எளிய ஃபார்முலாதான் என்றாலும் செய்முறை அத்தனை எளிதல்ல.

இந்தக் கம்பிப் பாகு என்பது ஒரு பேஜார். கொஞ்சம் முன்னப்போனால் ஒட்டாது. அரை விநாடி தாமதித்து விட்டாலும் லட்டின்மீது ஓர் உப்பளம் ஏறி உட்கார்ந்துவிடும். லட்டில் சர்க்கரை படிவதென்பது பார்க்கக் கண்ணராவி யான சங்கதி. அதைத் தின்று தீர்ப்பது அதைவிட ஆபாசம். (இதே ஆபாசம் பாதுஷாவிலும் அடிக்கடி நிகழும்)

ஒரு முறை பெங்களூருக்குச் சென் றிருந்தபோது எம்டிஆரில் சாப்பிட்டேன். அங்கிருந்த மாஸ்டர் ஒருத்தர்தான் அந்தப் பதத்தைப் பற்றிச் சொன்னார். சர்க்கரையைக் காய்ச்சும்போது மெல் லிய மெரூன் நிறத்துக்கும் முழுத் தங்க நிறத்துக்கும் நடுவே ஒரு பாதரச நிறம் சில விநாடிகளுக்கு வரும். அந்த நிறம் தென்பட்டதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். லட்டுப் பாகுப் பதம் என்பது அதுதான். இந்தப் பதத்தின் சூத்திரதாரிகள் திருப்பதியில் இருக்கிறார்கள் என்பதும் அவர் சொன்னதுதான்.

உண்மையில் லட்டு கண்டுபிடிக்கப் பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் திருப்பதி லட்டு என்ற இனமே உருவானது. சரியாகச் சொல்லுவதென்றால் 18-ம் நூற்றாண்டு. அதற்கு முன்னால் வண்டிச் சக்கரம் மாதிரி பிரம்மாண்டமான வடைகளும் வெண் மற்றும் சர்க்கரைப் பொங்கலும்தான் திருப்பதி பிரசாதம். இப்போதும் உண்டென்றாலும் லட்டு பிறந்த பிறகு வடை, பொங்கல் வகையறாக்களின் மவுசு அங்கே குறைந்துவிட்டது.

திருப்பதியில் லட்டு பிடிப்பதற்கென தனியாக ஒரு சமையல்கூடம் இருக்கிறது. பொட்டு என்று அதற்குப் பேர். சம்பந்தமில் லாத யாரையும் அங்கே உள்ளே விட மாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இந்த லட்டு பிடிக்கும் ஜோலி பார்த்தார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது. தினசரி 7 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 400 லிட்டர் நெய் என்று புழங்குகிற பேட்டைக்கு எத்தனை பேர் இருந்தால் கட்டுப்படியாகும் என்று யோசிக்க ஆரம்பித்தால் லட்டை மறந்துவிடுவோம்.

நமக்கு நபர்களா முக்கியம்? அந்த லட்டு எப்படி அத்தனை ருசிக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு காலத்தில் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் பதில் கிடைத்தது.

குஜராத்திக்காரர்கள் உட்பட லட்டு செய்வோர் அத்தனை பேரும் பொதுவாக பூந்தியை எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடுவார்கள். திருப் பதிக்காரர்கள் கொஞ்சம் வேறு மாதிரி. அவர்கள் பூந்தி பொரிப்பதற்கே நெய்யைத்தான் உபயோகிக்கிறார்கள். தவிர ஒரு ஈடு பூந்தி எடுத்தாகிவிட்டால் மறுகணமே அடுப்பில் காயும் நெய்யை எடுத்துக் கீழே கொட்டிவிடுவார்கள். நெய் யாகப்பட்டது கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்ட வஸ்து. கொஞ்சம் காய்ந்த துமே அதன் வாசனை மாறத் தொடங்கி விடும். வாசனை மாறிய நெய் என்பது பொய்யே அன்றி வேறில்லை.

திருப்பதியிலேயே தாயார் சந்நிதி லட்டுக்கும் மலை மீதிருக்கும் பெருமாள் கோயில் லட்டுக்கும் வித்தியாசம் உண்டு. எல்லாம் சேர்மான சதவீத மாறுபாடு களால்தான்.

ஆச்சா? இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு மிகச் சிறு வயது களில் இருந்தே திருப்பதி லட்டென்றால் ரொம்ப இஷ்டம். இதற்குக் காரணம் என் அப்பா.

எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் அப்பா ஒரு சர்க்கரை நோயாளி. என்னை மாதிரி உத்தம புத்திரர்கள் அவருக்கு மூன்று பேர் உண்டு. மூன்று உத்தமன்களை ஒழுங்காக வளர்க்கத் தான் முதலில் நன்றாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து, அவர் சர்க்கரை சாப்பிடுவதை விட்டார்.

விட்டார் என்றால், முழுமையாக விட் டார். எப்பேர்ப்பட்ட மேனகை ஊர்வசியும் அவரைச் சலனப்படுத்திவிட முடியாது. காப்பிக்குச் சேர்க்கிற சர்க்கரை முதல் பொங்கல் பண்டிகைக்குச் செய்கிற அக்கார அடிசில் வரை எதையும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார். எனக்குத் தெரிந்து சுமார் 40 வருடங்களாக இனிப்பு என்பதை எண்ணிக்கூடப் பார்க்காத ஒரு ஜென்மம் உண்டென்றால் இந்த உலகில் அது அவர் மட்டுமாகத்தான் இருப்பார்.

அப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலிக்கு ஒரே ஒரு பலவீனம் உண்டு. யாராவது திருப்பதி லட்டு என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் ஒரு சிட்டிகை விண்டு வாயில் போட்டுக்கொள்வார். ஒரு சிட்டிகையில் என்ன கிடைத்துவிடும்? பிரசாதம் என்று புருடா விட முடியாது. ஏனென்றால் மற்ற கோயில் பிரசாதங் களையெல்லாம் அவர் சீந்தக்கூட மாட்டார். திருப்பதி லட்டென்றால் மட்டும் ஒரு சிறு விள்ளல்.

இதற்கு என்ன காரணம் என்று பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். அதன் ருசியைத் தவிர இன்னொன்று தோன்றியதில்லை. பிரச்சினை என்ன வென்றால் அவரால் அந்த ஒரு சிறு விள் ளலில் அந்த ருசியின் பூரணத்தைப் பெற்று விட முடிந்தது. எனக்கு ஒன்று இரண்டு மூன்று என்று லைன் கட்டி வைத்து முழுக்கத் தின்று தீர்த்தாலும் அரைத் திருப்திதான் வரும். தனிப்பட்ட முறையில் இது எனக்குப் பெரிய தோல்வி என்று தோன்றும். பன்னெடுங்காலம் போராடிப் பார்த்தும் என்னால் அந்த ஒரு துளி உலகை வெல்ல முடியவில்லை.

ஒவ்வொரு முறை திருப்பதி லட்டு உண்ணும்போதும் எனக்கு இந்த ஞாபகம் வந்துவிடும். சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு ஒரு விள்ளலோடு நிறுத்திக்கொள்ளப் போகிறேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் ஒருநாளும் முடிந்ததில்லை. அது நப்பாசை அல்ல. பகாசுரத்தனமும் அல்ல. உணவின் ருசியை ஒரு வேட்டை நாய்போல் அணுகும் விதத்தின் பிரச்சினை என்று தோன்றியது.

நீங்கள் அணில் சாப்பிடும்போது பார்த் திருக்கிறீர்களா? யாரோ கொள்ளையடித் துப் போய்விடுவார்கள் என்ற அச்சத்துட னேயேதான் அது சாப்பிடும். உண்பதில் அதன் வேகமும் தீவிரமும் வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது. ஆனால் ருசிகரம் என்பது தியானத்தில் கூடுவது. பண்டத்தில் பாதி, மனத்தில் பாதியாக இரு தளங்களில் நிற்பது. இதைப் புரிந்து கொண்டதால்தான் என் அப்பாவால் ஒரு விள்ளல் லட்டில் பரமாத்மாவையே தரிசித்துவிட முடிந்திருக்கிறது.

அது விளங்கியபோதுதான் என்னால் அனைத்தையும் விட்டொழிக்க முடிந்தது.

 

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-14-திவ்யமான-திருப்பதி-லட்டு/article9590603.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 15: ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாய்!

 

 
para_3147300f.jpg
 
 
 

தமிழனுக்குத் தமிழாசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பொருள், ஊறுகாய். வினைத் தொகைக்கு இதைத் தவிர இன்னொரு உதாரணம் சொல்லக்கூடிய ஆசிரியர் யாராவது தென்பட்டால் விழுந்து சேவித்துவிடுவேன்.

நான் ஆறாங் கிளாஸோ, ஏழாங்கிளாஸோ படித்துக் கொண்டிருந்தபோது இதே வினைத் தொகைக்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோது சுடுகாடு என்று சொன்னேன். உத்தமோத்த மரான அந்தத் தமிழாசிரியர் அன்று முதல் என்னை ஓர் அகோரி மாதிரி பார்க்கத் தொடங்கினார். இதெல்லாம் செய்வினை செயப்பாட்டு வினையல்ல. கர்ம வினை!

கிடக்கட்டும். உங்களுக்கு ஒரு விஷ யம் தெரியுமா? ஈரேழு பதினான்கு உலகுக்கும் ஊறுகாயை அறிமுகப்படுத் தியது இந்தியாதான். மத்தியக் கிழக்கு மக்கள் பேரீச்சம்பழத்தில் ஊறுகாய் போட்டு அது ரொட்டிக்குச் சேராமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த போது, ஐரோப்பிய தேசத்து காரப் பிரியர்கள் வெள்ளரிக்காயில் ஊறு காய் போட்டுப் பரீட்சை பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஆப்பிள் பழத்தில், அன்னாசிப் பழத்தில், வாழைக் காயில் எல்லாம் ஊறுகாய் போட சீனர்களும் மங்கோலியர்களும் முயற்சி பண்ணிக்கொண்டிருந்தபோது, இந்தியர்கள்தாம் ஊறுகாய்க்கு உகந்த காய்களைக் கண்டறிந்து பேரல் பேரலாக ஸ்டாக் வைத்து சாப்பிட்டவர்கள். மா, நெல்லி, எலுமிச்சையெல்லாம் ஊறு காய்க்கு என்றே அவதரித்த காய்கள் என்பது இந்தியர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பல காலம் வரை தெரியாது.

சரியாகச் சொல்லுவது என்றால் இயேசு நாதருக்கு ஆயிரத்தி எழுநூறு வருடம் மூத்தது இந்திய ஊறுகாய். மற்ற தேசத்தவர்களுக்கு இயேசு பிறந்து எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வெள்ளரிக்காய் ஊறுகாய் மட்டும்தான் தெரியும். நம்மாட்கள்தான் சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே வினைத்தொகை ருசி கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இந்தக் கதை இப்போது எதற்கு என்பீர்களானால் ஒரு சங்கதி இருக் கிறது. எனக்கு ரொம்ப நாளாக ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாயை ருசி பார்க்க வேண்டுமென்று ஓர் இச்சை.

இந்த நாகா ஜொலாகியா என்பது அஸ்ஸாமுக்கு அந்தப் பக்கம் மட்டும் விளைகிற ஒரு மிளகாய் ரகம். 2007-ம் ஆண்டு வரை உலகின் அதி பயங்கரக் கார மிளகாய் என்று அறியப்பட்டது இதுவே. (இப்போது ட்ரினிடாடில் விளைகிற ஏதோ ஒரு ரகம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது)

மேற்படி நாகா ஜொலாகியாவை சும்மா நாக்கோரம் வைத்துப் பார்த் தாலே நாலு நாளைக்கு கார்க் கழண்டு விடும் என்பார்கள். ஆனால் மேகாலயா, நாகாலாந்து பகுதிகளில் வசிக்கும் ஆதிகுடி மக்கள் இந்த மிளகாயில் ஊறுகாய் போட்டு பத்திரப்படுத்தி வைத்து சாதம் பிசைந்து சாப்பிடுவார்கள். கற்பனை செய்ய முடியாத உச்சக்கட்ட காரத்தில் அவர்களுக்கு போதை மாதிரியோ, ஞானம் மாதிரியோ என்னமோ ஒன்று அவசியம் கிடைக்கத்தான் வேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?

நான் அஸ்ஸாமுக்குப் போனபோது அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்க வில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போகிற வாய்ப்பும் கிடைக்க வில்லை. ஆனால், கொல்கத்தாவுக்கு ஒரு முறை போனபோது மேற்படி நாகா ஜொலாகியாவின் ஒண்ணுவிட்ட சித்தப்பா பையன் முறை வரக்கூடிய வேறொரு மிளகாயாலான ஊறுகாயை ருசி பார்க்க வாய்த்தது.

உண்மையில் கொல்கத்தாவில் நான் உண்ண விரும்பியது ரசகுல்லா உள்ளிட்ட வண்ணமயமான வங்காளி இனிப்புகளைத்தான். மிஷ்டி தோய் என்ற இனிப்புத் தயிர் அங்கே ரொம் பப் பிரபலம். ராத்திரி வேளைகளில் வீதியோரங்களில்கூடக் கிடைக்கும். சிறிய மண் குடுவைகளில் பனங்கற் கண்டு, ஏலம் மணக்கத் தோய்த்து வைக்கப்பட்ட கெட்டித் தயிர். ஒரு நாலைந்து சிறு பானைத் தயிர் குடித்து முடித்த பிறகு என்னுடன் வந்திருந்த நண்பர் (அவர் ஒரு மராட்டியக் கவிஞர்) சட்டென்று கேட்டார், ‘‘இந்த இனிப்புத் தயிருக்குக் காரசாரமாக மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?’’

அசப்பில் கேனத்தனமான யோசனை யாகத் தெரிந்தாலும் இம்மாதிரி கிறுக்குத் தனங்களில்தான் தரிசனம் மாதிரி என்னவாவது ஒன்று சித்தித்துத் தொலைக்கும்.

‘‘ஆனால் கண்டிப்பாக பாக்கெட் ஊறுகாய் கூடாது!’’ என்று சொன்னேன்.

‘‘வா என்னோடு’’ என்று என்னை உள் ளூர் இலக்கியப் பிரகஸ்பதி ஒருத்தரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

நான் தமிழன். நண்பரோ சிங்க மராட் டியர். நாங்கள் பார்க்கப் போன இலக்கிய வாதியாகப்பட்டவர் ஒரு வங்காள நாட காசிரியர். தெரியாத்தனமாக எங்களுக்கு அங்கே ஒரு விருது கொடுக்கக் கூப் பிட்டிருந்தார்கள். விருதுதான் கொடுத்து விட்டார்களே என்று, மூச்சு விட்டுக் கொண்டிருக்கிற சமயமெல்லாம் இலக்கிய விசாரம் மட்டுமேவா செய்து கொண்டிருக்க முடியும்? நமக்குப் பேரிலக்கியமானது நாக்கில் பிறந்து நெஞ்சில் நிறைவது. எழுதுவதெல்லாம் அதன் விளைவான சிற்றிலக்கியம் மட்டுமே.

எனது மராட்டிய நண்பரும் இந்த விஷயத்தில் என்னை மாதிரியான ஆசாமியாகவே இருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. மேற்படி வங்கத்து நாடகாசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் கதவைத் தட்டியபோது மணி ராத்திரி ஒன்பது இருக்கும்.

‘‘வாருங்கள்’’ என்றார் வங்கத் தங்கம்.

‘‘உட்கார்ந்து பேச அவகாசமில்லை நண்பரே. படு பயங்கரக் காரத்தில் ஒரு மிளகாய் ஊறுகாய் வேண்டும். என்ன பிராண்ட் சரியாக இருக்கும்?’’ என்றார் மராட்டியக் கவிஞர்.

ஏற இறங்கப் பார்த்த நாடகாசிரியர், ‘‘பிராண்டெல்லாம் சரிப்படாது. ஒரு நிமிடம் இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு என்ன கொடுப்பது என்று அவரது தர்மபத்தினி சிந்தனை வயப்பட்டிருக்க வேண்டும்.

‘‘அவர்களுக்குக் கொஞ்சம் ஊறு காய் வேண்டும்’’ என்றார் சிநேகித சிரோன்மணி.

குடிகாரப் பாவிகள் என்று அந்தப் பெண் தெய்வம் நினைத்திருக்கக்கூடும். என்ன செய்ய? ஆசை வெட்கம் மட்டுமல்ல; நளின, நாகரிக, நானாவித நாசூக்கு வகையறாக்களையும் சேர்த்து அறியாது.

கொஞ்சம் முறைத்துவிட்டு அந்தப் பெண் உள்ளே போனபோது நான் வங்காள நண்பரிடம் விளக்கம் சொன் னேன்: ‘‘இது சாராய சகாயத்துக்கல்ல. மிஷ்டி தோய்க்குத் துணையாகுமா என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக!’’

அவரும் நம்பிய மாதிரி தெரிய வில்லை. மராட்டியக் கவிஞனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ‘‘நண்பரே, இன்றிரவு நீங்களும் எங்களுடன் மிஷ்டி தோய் சாப்பிட வரவேண்டும். ஓரிரவில் ஓரண்டா அளவுக்குத் தயிர் குடித்து கின்னஸ் சாதனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்!’’

அவர் மறுத்துவிட்டார். ஆனால், அன்றைய எங்கள் இரவை வண்ண மயமாக்குவதற்கு அவசியமென நாங்கள் கருதிய மிளகாய் ஊறுகாய் கிடைத்துவிட்டது. ‘‘இது மிஜோரம் ஸ்பெஷல் ஊறுகாய். ரொம்ப காரம். அளவோடு சாப்பிடுங்கள்!’’

அவரது மாமியார் வீடு மிஜோரத்தில் இருந்ததோ என்னமோ. கபோதிகள் போயும் போயும் ராத்திரி வேளையில் வந்து ஊறுகாய் கேட்டு நிற்கிறார்களே என்ற வினோதக் கடுப்பில் ஒரு பாலிதீன் கவர் நிறைய ஊறுகாய் அடைத்துக் கொடுத்து அனுப்பிவைத்தனர் அந்த சதிபதியினர்.

ஊறுகாய் வந்துவிட்டது. அடுத்தது என்ன? அந்த இனிப்புத் தயிர்தான்.

நாங்கள் இருவரும் பலபேரிடம் விசாரித்து அலைந்து எஸ்பிளனேடி லேயே தலை சிறந்த மிஷ்டி தோய் கடை எது என்று தெரிந்துகொண்டு அங்கு சென்றோம். அரை ஜாண் உயரப் பானைகளுக்குள் அடைபட்ட தயிர். மேலே கோவணத்தில் பாதியளவு கொண்ட துணியால் இறுக்கிக் கட்டி யிருந்தது.

‘‘எத்தனை பானைகள் வாங்கலாம்?’’ என்றார் நண்பர்.

எனக்கு நாலு அவருக்கு நாலு என்று கணக்கிட்டு, கொசுறாக இரண்டு சேர்த் துப் பத்துப் பானை தயிர் வாங் கிக் கொண்டு அறைக்குத் திரும்பி னோம்.

உண்மையில் அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. உச்ச இனிப்பும் உச்சக் காரமும் இணைவது ஓர் உன்மத்த நிலை என்பதை அன்று அறிந்தேன். விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

 

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-15-நாகா-ஜொலாகியாவில்-போட்ட-ஊறுகாய்/article9601051.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 16: காரத்தின் கசப்பும், நடன சுந்தரியின் நளினமும்!

 

 
1_3149818f.jpg
 
 
 

வட கிழக்கு மிளகாய் ரகங்களின் கவித்துவக் காரம் பற்றியும், எனது மராட்டியக் கவி நண் பருடன் மிஷ்டி தோய்க்கு மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட முடிவு செய்தது பற்றியும் சென்ற கட்டுரையில் சொல்ல ஆரம்பித்தேன் அல்லவா? அதை முடித்துவிடுவோம்.

சிவப்பு நாகா அல்லது பேய் நாகா என்று அழைக்கப்படுகிற நாகா ஜொலா கியா இனத்தில் அதைப் போலவே கொலைக்காரம் கொண்ட வேறு சில உப மிளகாய்கள் உண்டு. அந்த வங்காள நாடக சிரோன்மணி எங்க ளுக்குக் கொடுத்தனுப்பிய மிஜோரத்து ஊறுகாயானது அப்படியான மிளகாயில் போடப்பட்டது. அசப்பில் உறை ரத்தம் போலவே இருந்தது. மிளகாயும் மசாலாவும் சுமார் ஆறு மாதங்களாக ஊறிக்கொண்டிருப்பதாக நண்பர் சொல்லியிருந்தார். அது ஊற ஊறக் காரம் ஏறுகிற ரகம். வழக்கமாக நாம் ஊறுகாய் போடப் பயன்படுத்துகிற நல்லெண்ணெய் அதில் கிடையாது. பதிலாக, அடி நாக்கில் சற்றுக் கசப்பை ஏற்றிக்கொடுக்கிற கடுகு எண்ணெய்.

பொதுவாகவே காரத்தின் இடுப்பில் படிந்த கசப்பு, ஒரு நடன சுந்தரியின் நளினம் கொண்டது. தனியாக அதை உணர முடியாது. கண்ணீரின் உப்பைப் போன்றது அது. சாப்பிட்டு ஆனதும் காரம் அடங்கி, வியர்த்துக் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக நிதான நிலைக்கு வந்து சேரும்போது அடித் தொண்டையில் மிக மெலி தாகக் கசக்கும். நன்றாக இருக்கும்.

சில ரக மிளகாய்களுக்கு இயல் பிலேயே இந்த இடுப்பில் படிந்த கசப்புச் சுவை உண்டு. காரத்தின் வீரியத்தில் அது சட்டென்று தெரியாதே தவிர, அதையும் இனம் கண்டு ஆராய்ந்து வைத்திருக்கிற பிரகஸ்பதி கள் இருக்கிறார்கள். மோரிச் என்று ஒரு மிளகாய் இருக்கிறது. இது பங்களாதேஷில் அதிகம் விளையும். பூட் ஜொலாகியா மிளகாய் இனத்தைச் சேர்ந்தது.

இந்த மோரிச்சில் மேற்படி கசப்பு சற்று அதிகமாகவே உண்டு. கிழக்கு வங்காளத்துக் கிங்கரர்கள் இந்த மிளகாயைக் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவார்கள். அது வீரம் விளைந்த மண்ணோ இல்லையோ, காரம் விளைந்த மண். கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் கதவு வரை இழுத்துச் சென்று காட்டிவிட்டு வரக்கூடிய காரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை விரும்பிச் சமைத்து உண்கிறவர்களின் மனநிலையை ஆராய்ந்து பார்த்தால் என்னவாவது ஞானம் சித்திக்கலாம்.

இருக்கட்டும். நாம் மிஜோரத்து மிளகாய் ஊறுகாய்க்கு வருவோம். அது நாகா ஜொலாகியா அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார். அந்த இனத்தைச் சேர்ந்த வேறு ஏதோ ஒரு மிளகாய். அவர் சொன்ன பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால் அதை ருசி பார்த்த அனுபவம் இந்த ஜென்மத்துக்கு மறக்காது.

குட்டிப் பானைகளில் மிஷ்டி தோய் வாங்கிக்கொண்டு ஊறுகாய் சகிதம் நானும் என் மராட்டிய நண்பரும் தங்கி யிருந்த விடுதி அறைக்கு வந்து சேர்ந் தோம். உட்கார்ந்ததுமே ஒரு தட்டை எடுத்து வைத்து ஊறுகாய் கவரை அவிழ்த்துக் கொட்டினார் நண்பர்.

அடேய், இது தொட்டுக்கொள்ள மட்டுமே. அதற்கெதற்கு இவ்வளவு?

எப்படியும் ஒரு பத்திருபது பேர் தொட்டுக்கொண்டு சாப்பிடும் அளவுக்கு அதில் ஊறுகாய் இருந்தது. ஆனால் மராட்டிய சிங்கமோ தன் ஒருவனுக்கே அது போதாமல் போய்விடுமோ என்று அச்சப்படுவதாகத் தெரிந்தது. எனக்குப் பிரச்சினை இல்லை. இயல்பிலேயே எனக்குக் காரம் ஒவ்வாது. சற்றே காரமான வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்டாலே கதறிக் கண்ணீர் விட்டுவிடுவேன்.

ஆனால், ருசி பார்க்கிற விஷயம் என்று வந்துவிட்டால் எனக்குக் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. அந்த மிஜோரத்து மிளகாய், மிஷ்டி தோயுடன் எப்படிச் சேரும் என்று அறியும் ஆவல் கட்டுக் கடங்காமல் இருந்தது. என்னைவிட என் நண்பருக்கு.

அவர்தான் ஆரம்பித்தது. முதலில் சுண்டு விரலால் கொஞ்சம் ஊறுகாயை வழித்தெடுத்து நாக்கில் தடவி சப்புக் கொட்டினார். அதன்மீது ஒரு ஸ்பூன் மிஷ்டி தோயைவிட்டு சேர்த்து மீண்டும் சப்புக் கொட்டினார். ஸ்ர்ர்ர்க்க்க்ஸ்ர்ர்ஸ்க்ற்ற்ற்க் என்று விநோதமாக ஒரு சத்தம் எழுப்பினார்.

‘‘என்ன?’’

‘‘பிரமாதம். சாப்பிடு!’’ நண்பர் கொடுத்த உற்சாகத்தில் நான் கொஞ்சம் ஊறுகாயை வழித்தேன். நாக்கு அருகே கொண்டு சென்றபோது கணப்பொழுது தயங்கினேன். சரித்திரப் புகழ்வாய்ந்த வடகிழக்குக் காரம். உள்ளுக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி அடித்தது. எதற்கும் இருக்கட்டும் என்று முதலில் அந்த இனிப்புத் தயிரை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டேன். அதன்மீது ஊறுகாயைச் சேர்த்து, சற்றே பதம் பார்த்தேன்.

பரவாயில்லையே, அப்படியொன் றும் கொல்லும் காரமில்லையே என்று எண்ணி, அடுத்த முறை முதலில் ஊறுகாயை நாக்கில் தடவிக்கொண்டு அதன்மீது தயிரை விட்டேன். சப்புக் கொட்டி நன்றாக உண்டேன். இப்போ தும் ருசிக்கத்தான் செய்தது.

‘‘அடேய் கவிஞா, நீ சொன்னது சரி. இனிப்புக்குச் சரியான துணை காரம்தான். இந்த விநோதக் கலவை அருமையாக இருக்கிறது!’’ என்று மனமாரப் பாராட்டினேன். பரபரவென்று இருவரும் ஒரு குப்பித் தயிரை ஊறு காய் சேர்த்து காலி செய்து முடித்தோம்.

இரண்டாவது தயிர்ப் பானையை எடுத்து வைத்தபோதுதான் விபரீதம் விளைந்தது. கவிஞனாகப்பட்டவன் இன்னொரு யோசனை சொன்னான். ஒரு ஸ்பூன் ஊறுகாயை அப்படியே எடுத்து அந்தக் குட்டிப் பானைத் தயிரில் கலந்துவிட வேண்டியது. பிறகு தயிரை ஸ்பூனால் எடுத்து உண்ணலாம்.

விதி யாரை விட்டது? ஒரு ஸ்பூன் என்றவன் சற்று தாராளமாகவே எடுத்துத் தயிரில் கொட்டிக் கலந்தான். அந்தக் கடும் சிவப்பும் தயிரின் பிரமாதமான மென்மையும் மணமும் சேர்ந்து நூதனமான ஒரு கிறக்கத்தைக் கொடுக்க, என்னை மறந்து அந்தப் பானையை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டேன்.

அரை வினாடி. ஒரு வினாடி. ஒரு சில வினாடிகள்.

என் நாக்கு, கன்னத்தின் உட்பகுதி கள், தொண்டை, உணவுக் குழாயெங் கும் காரம் பரவி தீப்பிடிக்கத் தொடங் கியது. இனிப்புத் தயிர் எங்கே போன தென்றே தெரியவில்லை. தயிரின் இனிப் பைக் கொன்று காரம் அங்கு கோலோச்சத் தொடங்கிவிட்டது. ‘ஆ, இது காரம்!’ என்று உணர்வதற்கு முன்னால் அது காதுகள் வரை பாய்ந்து எரிய ஆரம்பித்தது. தாங்க முடியாமல் அலறத் தொடங்கினேன்.

கவிஞன் பயந்துவிட்டான். ஓடிச் சென்று எங்கிருந்தோ பாட்டில் பாட்டிலாக ஐஸ் வாட்டர் எடுத்து வந்து ஊற்றினான். நான் மிச்சமிருந்த எட்டு பானைத் தயிரையும் குடித்து, அதற்குமேல் சில குடங்கள் தண்ணீரையும் குடித்து, நாலு வாழைப்பழம் சாப்பிட்டு என்னென் னவோ செய்தும் அடங்கவில்லை. உடம்பெல்லாம் உதறி, வியர்த்துக் கொட்டி, இதயத் துடிப்பு எகிறிவிட்டது.

சுண்ணாம்புக் காளவாய்க்குள் உட லின் உள்ளுறுப்புகளைத் தோய்த் தெடுத்த மாதிரியே உணர்ந்துகொண் டிருந்தேன். ஜென்மத்துக்கும் மறக்காத காரம் அது.

முதலில் ருசித்த ஒரு சொட்டு ஊறு காய்க்குப் பிறகு அதைச் சாப்பிடவே வழி யற்றுப் போய்விட்ட அந்த மராட்டிய நண்பனிடம் மறுநாள் மன்னிப்புக் கேட்டேன். ‘‘உனக்கு ஒரு பானை தயிராவது நான் மிச்சம் வைத் திருக்கலாம்.’’

‘‘அதனால் பரவாயில்லை. நேற்று நீ ஆடிய ஊழித்தாண்டவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். புரியாவிட்டாலும் பரவாயில்லை. படிக்கிறேன், கேள்!’’

சிங்க மராட்டிய மொழி எனக்குத் தெரியாது. அவன் கவிதை நன்றாகத் தான் இருந்திருக்க வேண்டும். சொல் லாட்சியில் காரத்துக்கு நிகரான முரட்டுத்தனமும் தெரிந்தது. ஆனால் அந்தக் கடுகெண்ணெய் வாசனைதான் இல்லை.

 

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-16-காரத்தின்-கசப்பும்-நடன-சுந்தரியின்-நளினமும்/article9611195.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 17: உடலைக் குறைக்க மேற்கொண்ட பிரயத்தனம்!

 
rusi_3152282f.jpg
 
 
 

வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத் தில் இலக்காகிப் போனேன்.

அதற்கு முன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து குறைவான, கொழுப்பு அதிக மான உணவு வகைகளை உண்ணு வதன்மூலம் பிதுரார்ஜித சொத்தாக தேகத்தில் சேர்த்துவைத்த கெட்ட சரக்கையெல்லாம் அழித்தொழிக்கிற திருப்பணி.

இந்தக் குறை மாவு நிறைக் கொழுப்பு உணவு முறையில் இறங்கிய நாளாக நான் வழக்கமாக உண்ணும் சாப் பாட்டுப் பக்கம் ஒருநாளும் திரும்பிய தில்லை. அதாவது, சாதம் கிடையாது. சாம்பார், ரசம் வகையறாக்கள் கிடை யாது. அப்பள இன்பம் இல்லை. அதிரச, தேன்குழல், அக்கார அடிசில் இல்லை. தானியமும் இனிப்பும் எந்த ரூபத்திலும் உள்ளே போகாத உணவு முறை இது. பால், தயிர், பன்னீர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டியென பிருந்தா வனத்துக் கிருஷ்ண பரமாத்மாவின் சமகால எடிஷனாக ஒரு வாழ்க்கை. அவ்வப் போது பாதாம்.எப்போதா வது பிஸ்தா. அளவின்றிக் காய்கறிகள். அதிகமாகக் கீரை இனம்.

இப்படிச் சாப்பிட ஆரம்பித்து ஒரு ஆறு மாத காலத்தில் இருபத்தி மூன்று கிலோ எடையைக் குறைத்திருந்தேன். எந்த குண்டோதரன் கண்ணைப் போட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை, திடீ ரென ஒரு கெட்ட நாளில் எடைக் குறைப்பானது நின்று போனது.

நானும் என்னென்னவோ செய்து பார்த் தேன். விரதங்கள், காலை நடை என்று வழக்கத்தில் இல்லாதவற்றையெல்லாம் கூட. ம்ஹும். பத்து காசுக்குப் பயனில்லை. நின்ற எடை நின்றதுதான். என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் உடல் அறிவியலைப் படித்துப் பார்த்தேன். பிறந்தது முதல் மாவுச் சத்து உணவை மட்டுமே உண்டு வருகிறவர்கள் நாம். சட்டென்று உடலுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்து, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, கொழுப்பில் உடலியந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது எடை குறைந்தது. இதற்கு ஆன அவகாசத்தில் உடம் பானது கொழுப்புணவுக்குப் பழகிப் போய்விட்டிருக்கிறது.

எதுவுமே பழகிவிட்டால் ஒரு அசமஞ்சத்தனம் வரத்தானே செய் யும்? சம்சார சாகரம் சத்தம் போட் டால் கண்டுகொள்கிறோமா? மேலதிகாரி முகத்தில் விட்டெறிந்தால் பொருட் படுத்துகிறோமா? ஆனால் மதுக்கடை கள் மூடப்படுகிற சேதி வந்தால் அதிர்ச்சியடைந்துவிடுகிறோம். ஏனென் றால், அதெல்லாம் நடக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நடக்க வாய்ப்பில்லாதவை நடக்கிறபோதுதான் அதிர்ச்சி என்ற ஒன்று தொக்கி நிற்கும்.

நிற்க. விஷயத்துக்கு வருகிறேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண் டும் தொடங்குவதற்கு, உடம்புக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தால் தப்பில்லை என்றார்கள் சில அற்புத விற்பன்னர்கள். அதாவது, எந்த மாவுச் சத்து மிக்க உணவை விலக்கி, கொழுப்பின்மூலம் எடையைக் குறைத்தேனோ, அதே மாவுச் சத்து உணவை மீண்டும் ஒருநாள் தடாலடியாக உண்பது. கொழுப்புக்குப் பழகிய உடலானது, இந்த திடீர் அதிர்ச்சியைத் தாங்காமல் கொஞ்சம் நிலை தடுமாறும். இன்சுலின் சுரப்பு மட்டுப்படும். ரத்த சர்க்கரை அளவு ஏறும். பழைய கெட்டத்தனங்கள் அனைத்தும் மீண்டும் தலையெடுக்கும்.

வா ராஜா வா என்று காத்திருந்து அனைத்தையும் உலவவிட்டு, தடா லென்று மீண்டும் அடுத்த நாள் கொழுப்புக்கு மாறும்போது உடலுக்கு அதிர்ச்சியின் உச்சம் சித்திக்கும். எனவே மீண்டும் எடைக்குறைப்பு நிகழ ஆரம்பிக்கும் என்பது இந்த இயலின் அடிப்படை சித்தாந்தம்.

செய்து பார்க்கலாம் என்று தோன்றி யது. தோதாக வீட்டில் ஒரு விசேஷம் வந்தது.

எப்பேர்ப்பட்ட அபார விருந்திலும் சிந்தை குலையாதிருந்த தவ சிரேஷ் டன் அன்று தொந்திக் குறைப்பு அல்லது கரைப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாகப் பண்டிகைச் சமையலை ஒரு கை பார்க்க முடிவு செய்தான்.

அன்றைய என் மெனுவில் மோர்க் குழம்பு இருந்தது. பருப்புப் போட்ட தக்காளி ரசம் இருந்தது. உளுந்து வடையும் அரிசிப் பாயசமும் இருந்தன. வாழைக்காய், பீன்ஸ் போன்ற நான் தொடக்கூடாத காய்கறிகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அப்பம் இருந்தது. வாழைப்பழ அப்பம். மெத்து மெத்தென்று அசப்பில் ஹன்சிகா மோத்வானியின் கன்னம் போலவே இருக்கும். அழுத்தி ஒரு கடி கடித்து ஆர அமர மெல்லத் தொடங்கினால் அடி நாக்கில் இருந்து நுனி வயிறு வரை ருசித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் வெண்ணெய் தோய்த்து உண்ணும் அப்பத்துக்காகவே நான் கோகுலாஷ்டமியை மிகவும் விரும்பு வேன். கிண்ணம் நிறைய வெண்ணெய் வைத்துக்கொண்டு, பத்துப் பன்னிரண்டு அப்பங்களைப் பொறுக்க தின்று தீர்ப் பது ஒரு சுகம். ஏப்பம் வரை இனித்துக் கொண்டிருக்கிற அற்புதம் வேறெந்தப் பலகாரத்துக்கும் கிடையாது.

ஆனால் எனது மேற்படி விஷப் பரீட்சை தினத்தில் நான் அப்பத் துக்கு வெண்ணெய் தொட்டுக்கொள்ள வில்லை. நெய் சேர்க்கவில்லை. கொழுப்புணவின் குலக் கொழுந்து களான அவற்றை முற்றிலும் விலக்கி, எதெல்லாம் எனது உணவு முறைக்கு நேர் எதிரியோ அவற்றை மட்டுமே உண்ணுவதென்று முடிவு செய்திருந்தேன்.

முன்னதாக இந்தப் பரீட்சார்த்தக் கலவர காண்டத்துக்குத் தயாராகும் விதமாக இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்தேன். தண்ணீ ரைத் தவிர வயிற்றுக்கு வேறெதையும் காட்டாமல் காயப் போடுதல் இங்கே அவசியமாகிறது. அது ஒரு பிரச்சினை இல்லை என்று வையுங்கள். கொழுப்புணவு உண்பவனுக்குப் பசி இருக்காது. விரதமெல்லாம் மிகச் சுலபமாகக் கைகூடிவிடும். சற்றும் சோர்வின்றி நாற்பத்தியெட்டு மணி நேரம், எழுபத்தி இரண்டு மணி நேரம் விரதமிருப்பவர்கள் எல்லாம் உண்டு. நான் இருந்தது வெறும் இருபத்தி நான்கு மணி நேர விரதம்தான்.

அந்த விரதத்தை முடித்துவிட்டு மேற்படி கார்போஹைடிரேட் விருந்துக் குத் தயாரானேன். முற்றிலும் மாவு. முற் றிலும் எண்ணெய். முற்றிலும் இனிப்பு வகைகள். எப்படியும் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி உடம்புக்குள் ஒரு பெரும் புரட்சி நடந்தே தீரும் என்று தோன் றியது. என்னவாவது நடந்து மீண்டும் எடை குறைய ஆரம்பித்தால் போதும் எம்பெருமானே என்று வேண்டிக் கொண்டு ஒரு கட்டு கட்ட ஆரம்பித் தேன். வடைகளையும் அப்பங்களையும் தாராளமாக உண்டேன். வாழைக்காயா னது எனது பிராண சிநேகிதன். பல மாதங் களாக அதை நினைத்துக்கூடப் பாரா திருந்தேன். அன்றைக்கு காணாதது கண் டாற்போல் அள்ளி அள்ளி உண்டேன்.

எப்படியும் ஒரு மூவாயிரம் கலோ ரிக்கு உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். மூச்சு முட்டி, போதும் என்று தோன்றியபோதுதான் நிறுத்தினேன். தண்ணீர் குடிக்கக்கூட இடமின்றி, தள்ளாடிச் சென்று அப்படியே படுத்துத் தூங்கியும் போனேன்.

ஆக, பரீட்சை எழுதியாகிவிட்டது. இனி இது பலன் தர வேண்டும்.

இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டம்தான் முக்கியமானது. இருபத்தி நான்கு மணி நேர முழு உண்ணாவிரதத் துக்குப் பிறகு மாவுச் சத்து மிக்க ஒரு விருந்தை உண்பதோடு இது முடிவ தில்லை. அந்த விருந்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக இன்னொரு இருபத்தி நாலு மணி நேர உண்ணாவிரதம் தேவை. கொழுப்புணவில் இருக்கும்போது உண்ணாவிரதம் சுலபம். ஆனால் அரிசிச் சோறுக்கு அது ஆகாது. பசி வயிற்றை எரித்துவிடும்.

அப்படி எரிப்பதில்தான் காரிய சித்தி என்றார்கள் உத்தமோத்தமர்கள். என்ன கெட்டுப் போய்விடும்? சரி என்று அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தேன்.

அதன்பிறகு நடந்த கலவரத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

 

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-17-உடலைக்-குறைக்க-மேற்கொண்ட-பிரயத்தனம்/article9624299.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 18: அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?

 

 
 
 
rusi_3152282f.jpg
 
 
 

இந்த எடைக்குறைப்பு என்பது ஓர் அகண்ட பரிபூரணானந்த லாகிரி. கொஞ்சம் ருசித்துவிட்டால் மனுஷனை ஒரு வழி பண்ணாமல் ஓயாது. நானெல்லாம் பிறந்தது முதலே அடை, வடை வகையறாக்களுடன் இடைவெளியின்றி உறவா டிய ஜந்து.

நடுவே இடை என்ற ஒன்றும் எடை என்ற மற்றொன்றும் இருப்பது பற்றியெல்லாம் எண்ணிக் கூடப் பார்த்தது இல்லை. விரோதிக்ருதுவில் ஆரம் பித்து ஹேவிளம்பி முந் தைய வருஷம் வரைக்கும் அங்ஙனமே இருந்துவிட்டு, சட்டென்று ஒருநாள் பார்த்து, எடையைக் குறைப்போம் என்று இறங்கினால் இப்படித்தான் ஏடாகூடங்களை எதிர்கொள்ள நேரிடும்.

’கார்ப் ஷாக்’ என்கிற தடாலடி ஒரு நாள் உணவு மாற்ற உற்சவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். முழுநாள் உண்ணாவிரதம், மாவுச் சத்து மிக்க ஒரு முழு விருந்து, அதன்பின் மீண்டும் ஒரு முழுநாள் உண்ணாவிரதம் என்பது என் திட்டம். சரியாக இதனைச் செய்து முடித்தபின், அடுத்த நாள் காலை எடை பார்த்தால் கண்டிப்பாக இரண்டில் இருந்து மூன்று கிலோ வரை குறைந்திருக்கும் என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், நான் எடை பார்த்தபோது தொள்ளாயிரம் கிராம் ஏறியிருந்தேன். குலை நடுங்கிவிட்டது. இதென்ன அக்கிரமம்! இந்த இயலின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கார்ப் ஷாக்கின் மூலம் எடைக் குறைப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லியி ருப்பது உண்மையென்றால் எனக்கு எப்படி ஒரு கிலோ ஏறும்? எந்தக் கேடுகெட்ட சைத்தான் எனக்குள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு, இப்படியொரு போட்டி அதிமுக நடத்த ஆரம்பித்திருக்கிறான்? புரியவில்லை.

இதில் உச்சக்கட்ட வயிற்றெரிச்சல் ஒன்று உண்டு. என் நண்பர் ஈரோடு செந்தில்குமாரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? தமிழகத்தில் அவரை விஞ்சிய கனபாடிகள் ஒருவர் இந்நாளில் இருக்க முடியாது. நமக்கெல்லாம் 192 என்றால் நோட்டுப் புத்தகம்தான் நினைவுக்கு வரும். அவர் எடையில் அந்த எண்ணை எட்டிப் பிடித்தவர். அவருக்கும் என்னைப் போல் ஒருநாள் இந்த எடைச் சனியனைக் குறைத்தால் தேவலை என்று தோன்றி, கொழுப்புணவுக்கு மாறி சர்வ அநாயாசமாக ஐம்பது கிலோ குறைத்தவர். அதோடு மனிதர் திருப்தியடைந்தாரா என்றால் இல்லை.

தனது ஸ்தூல சரீரத்துக்கு அந்த கார்ப் ஷாக் உற்சவத்தை அடிக்கடி கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சென்றவாரம் நான் ’விளக்கு’ வாங்கிய அதே சமயம் செந்திலும் அந்தப் பரீட்சையில் இறங்கினார். ஆனால், அவர் என்னைக் காட்டிலும் பலமடங்கு வீரியம் மிக்க விரத பயங்கரவாதி. என்னால் 24 மணி நேரம் உண்ணாமல் இருக்க முடியும். அதன்பின் ஒரு பிரேக் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். செந்தில் 32 மணி நேரம் 48 மணி நேரமெல்லாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடியவர். சரியாகச் சொல்வ தென்றால் உண்ணுவதில் உள்ள அதே தீவிரம் அவருக்கு உண்ணாது இருப்பதிலும் உண்டு.

அப்பேர்ப்பட்ட மகானுபாவர் இம் முறை 72 மணி நேர உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். முனிபுங்க வர் மாதிரி ஓரிடத்தில் அக்கடாவென்று உட்கார்ந்து கண்ணை மூடித் தவம் செய்வதென்றால் இப்படி உண்ணாதிருப் பது பெரிய பாதிப்பைத் தராது. அக்காலத்து முனிவர்களெல்லாமே இம்மாதிரி கொழுப்புணவு உண்டு, உடம்பைப் பசிக்காத நிலைக்குப் பழக்கிக்கொண்டுதான் தவத்தில் உட்காருவார்கள்.

நவீன உலகில் புருஷ லட்சண மாக உத்தியோகம் என்று என்னவா வது ஒன்றைச் செய்து தீர்க்க வேண்டி யிருக்கிறதே? என் நண்பர், அதையும் செய்தபடிக்குத்தான் விரதமும் இருப்பார்.

இம்முறை அவர் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எதுவும் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தபோது முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை. விரதம் என்றால் ஜீரோ கலோரி என்று அர்த்தம். போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் சேர்க்காத, சர்க்கரை போடாத கடும் காப்பி வேண்டுமானால் அருந்திக்கொள்ளலாம். நூறு மில்லிக்கு ஒரு கலோரிதான் அதில் சேரும். அது நாலு முறை சுச்சூ போனால் சரியாகிவிடும்.

நான் சொன்னேன், இது உதவாது. விரத இலக்கணங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தும் எனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒத்துவரவில்லை. நாமெல்லாம் பிறவி கார்போஹைடிரேட் அலர்ஜியாளர்கள். ஒருவேளை அரிசிச் சோறு உண்டால்கூட ஒரு கிலோ ஏற்றிக்காட்டுகிற உடம்பை ஓரளவுக்குமேல் தேர்வு எலியாகப் பயன்படுத்தக்கூடாது.

அவர் கேட்கிற ஜாதியில்லை. திட்டப்படி 72 மணி நேர விரதத்தை நடத்தி முடித்தார். விரதம் முடித்தபோது அவர் சாப்பிட்டவை இவை: ஐந்து முட்டைகள், கால் கிலோ தந்தூரி சிக்கன், கால் கிலோ பார்பெக்யூ சிக்கன், கால் கிலோ க்ரில்டு சிக்கன், ஒரு ப்ளேட் பன்னீர் ஃப்ரை, பத்தாத குறைக்கு ஒரு எலுமிச்சை ஜூஸ்.

என்னடா ஒரே காட்டான் கோஷ்டியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? நண்பர் ஒரு காலத்தில் ஜீவகாருண்யவாதியாக இருந்தவர்தான். எடைக் குறைப்பில் தீவிரம் ஏற்பட்டதும் கன்வர்ட் ஆகிப் போனவர். அதை விடுங்கள். திட்டம் பலன் கொடுத்ததா? அதுதான் முக்கியம்.

விரதத்துக்குப் பிறகு மேற்படி அசாத் திய விருந்தையும் உண்டு முடித்து, மறுநாள் காலை எடை பார்த்திருக்கிறார். எடை மெஷின் சுமார் ஆறு கிலோ குறைத்துக் காட்டியிருக்கிறது!

ரொம்ப யோசித்த பிறகு, எனக்கு இதற்கு பதில் கிடைத்தது. உடம்பு வாகு என்று சொல்லுவார்கள். என்னதான் பிறந்தது முதல் உண்டு களித்த உணவினம் என்றாலும் எனது தேகமானது கார்ப் சென்சிடிவ் தேகம். காணாதது கண்ட மாதிரி ஒருநாள் உண்டு தீர்த்தாலும் கறுப்புப் பணம் சேர்த்துப் பதுக்கும் பரம அயோக்கியனைப் போல் உடம்புக்குள் ஒரு லாக்கர் திறந்து பதுக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடத்தான், சேமிக்கவே தெரியாத கொழுப்புணவுக்கு மாறினேன். அதற்கொரு அதிர்ச்சி, அப்புறம் ஒரு முயற்சி என்று போங்காட்டம் ஆடினால் ஒரு கிலோ என்ன, ஒரு குவிண்டாலேகூட ஏறத்தான் செய்யும்.

செத்தாலும் இனி விஷப் பரீட்சைகள் கூடாது என்று அப்போது முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு மூன்றுவேளை முழு உணவும் முப்பது வேளை நொறுக்குணவும் தின்றுகொண்டிருந்தவன் நான். மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கு சாக்குப் பை எடுத்துச் சென்று கிலோ கணக்கில் இனிப்பு மற்றும் கார வகையறாக்களைக் கொள்முதல் செய்து வந்து வைத்துக்கொண்டு, ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிப்பேன்.

2 அல்லது 3 மணி வரை எனக்கு எழுதும் வேலை இருக்கும். எழுதிக்கொண்டே சாப்பிடுவேனா அல்லது சாப்பிட்டுக்கொண்டே எழுதுவேனா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், என்னைப் போல் விடிய விடிய உண்டு தீர்த்தவன் இன்னொருத்தன் இருக்க முடியாது.

அதிலிருந்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கி இன்று ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு என்னும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். மதியம் 1 மணிக்கு சாப்பிட்டால் அதோடு மறுநாள் மதியம் 1 மணிதான். நடுவே இரண்டு கறுப்பு காபி மட்டும் உண்டு. எடைக் குறைப்பு வெறி குறைந்துவிட்டது இப்போது. ஆனால், உடம்பு சிறகு போலாகி வருவதை உணர்கிறேன். பசி இல்லை. சோர்வில்லை. எவ்வித உபாதைகளும் இல்லை. நோயற்று வாழ இதுதான் ஒரே வழி.

அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?

முடியும். பார்த்துவிடலாம்.

 

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-18-அதெப்படி-ஒருவேளை-மட்டும்-உண்டு-வாழமுடியும்/article9646415.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 19: திருப்தி என்பது பசியடங்கல் இல்லை!

 

 
 
 
 
rusi_3156956f.jpg
 
 
 

ம்ஹும், இவன் சரிப்பட மாட் டான். நாக்குக்குச் சேவகம் பண்ணிக் கொண்டிருந்த பிரகஸ்பதி தேக சவுக்கியத்துக்கு உண்ணாவிரதம் இருப் பதைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டானே என்று நினைப்பீர்களானால் சற்று அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். வேகம் குறைய ஆரம்பித்த கணிப்பொறியை ஃபார்மட் செய்து வேகம் கூட்டுவது போல, செயற்பாட்டு வீரியம் மட்டுப்பட்ட இல்லத்தரசி, அம்மா வீட்டுக்குப் போய்த் தங்கி சார்ஜ் ஏற்றி வருவது போல, காய்ந்த கண்டலேறில் கடல் மாதிரி பக்கத்து மாநிலத்து நதி பெருக்கெடுத்தாற்போல, ஒரு விரதமானது நமது ருசி நரம்புகளை எத்தனை உத்வேகத்துடன் தூண்டிவிடும் என்பதை லேசில் சொல்லிவிட முடியாது.

உடனே ஞாபகத்துக்கு வருகிற ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். சமீபத்தில் ஒருநாள் நான் விரதம் முடிக்கிற நேரம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும்படி ஆனது. வீடு ஒரு சவுகரியம். இஷ்டப்பட்ட மாதிரி என்ன வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உண்ணுவதில் அளவு காக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவிர நமது மெனுவை முன்கூட்டித் தீர்மானித்து, அதற்கான அலங்கார விசேஷங்களை நாமே பார்த்துப் பார்த்துச் செய்து புசிக்கலாம். ஓட்டலுக்குப் போனால், பிரகஸ்பதி என்ன வைத்திருக்கிறானோ அதுதான். அது என்ன லட்சணத்தில் உள்ளதோ, அதுவேதான். இத னாலேயே பெரும் பாலும் என் உணவு வேளையை வீட்டில் உள் ளது போலப் பார்த்துக்கொள்வேன்.

அன்றைக்கு விதியானது என்னை வெளியே கொண்டுபோய்ப் போட் டது. சரி பரவாயில்லை; ஓட்டல்காரர் களும் ஜீவராசிகள்தானே; பேசி சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்து ஓர் உணவகத்துக்குச் சென்று உட் கார்ந்தேன். சப்ளையர் சிகாமணி வந்தார்.

‘‘சகோதரா, நான் சற்று வேறு விதமாகச் சாப்பிடுகிற வழக்கம் கொண் டவன். மிரளாமல் சொல்வதை முழுக்க உள்வாங்கிக் கொள். உன் ஓட்ட லில் இன்றைக்கு என்ன காய்கறி, கூட்டு வகையறா?’’ என்று ஆரம்பித் தேன்.

அவன் முட்டை கோஸும் முருங்கைக் காய் கூட்டும் என்று சொன்னான்.

‘‘நல்லது. பனீர் புர்ஜி அல்லது பனீர் டிக்கா இருக்கிறதா?’’

‘‘புர்ஜி இல்லை. டிக்கா உண்டு’’ என்றான்.

‘‘நான் தனியாகக் காசு கொடுத்து விடுகிறேன். எனக்கு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய் வேண்டும். கிடைக்குமா?’’

மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். நான்மறைகளுள் ஒன்று கழண்டவன் என்று எண்ணியிருக்கக்கூடும். ‘‘கிடைக் கும்..’’ என்றான்.

‘‘அப்படியானால் ஒன்று செய். ஒரு பெரிய கப் நிறைய முட்டை கோஸ். இன்னொரு பெரிய கப்பில் முருங்கைக் கூட்டு. ஒரு கப் வெண்ணெய். ஒரு பனீர் டிக்கா. இவற்றோடு ஒரு கப் தயிர். இதை முதலில் கொண்டு வா’’ என்று ஆணையிட்டேன்.

‘‘சாப்பாடு?’’ அவன் சந்தேகம் அவனுக்கு.

இதுதானப்பா சாப்பாடு என்று சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந் தேன். சற்று நேரத்தில் முட்டை கோஸை முதலில் எடுத்து வந்து வைத்தான். அளவெல்லாம் போதுமானதுதான். ஆனால், அந்தத் தாவர உணவானது தனது தன் மென் பச்சை நிறத்தை முற்றிலும் இழந்து, மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு செங்கல் சுவரில் முதுகைக் கொண்டுபோய்த் தேய்த்த நிறத்தில் இருந்தது.

இந்த முட்டை கோஸ் ஒரு வினோத மான காய். குக்கரிலோ, மைக்ரோ வேவ் அடுப்பிலோ அதை வேகவைத்து விட்டால் தீர்ந்தது. நிறம் செத்துவிடும். என்னளவில் ஓர் உணவின் ருசி என்பது அதன் சரியான நிறத்துக்குச் சமபங்கு தருவது. உண்மையிலேயே, நிறமிழந்த காய்கறிக்கு ருசி மட்டு. மேலுக்கு நீங்கள் என்ன மசாலா போட்டு அலங்காரம் செய்தாலும் அது விளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரிதான்.

இதை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, உத்தமன் அந்த முருங்கைக் கூட்டைக் கொண்டுவந்து வைத்தான். அநியாயத் துக்கு அதன் மேற்புறம் சூழ்ந்த பெருங்கடலாக ஓர் எண்ணெய்ப் படலம். வடக்கத்திய சப்ஜி வகையறாக்களை எண்ணெயால் அலங்கரித்து எடுத்து வந்து வைப்பார்களே, அந்த மாதிரி. எனக்கு உயிரே போய்விடும் போலாகி விட்டது. ஏனென்றால் மூன்று அல்லது நான்கு பிறப்புகளுக்குத் தேவையான எண்ணெய் வகையறாக்களை உறிஞ்சிக் குடித்து முடித்துவிட்டு, இனி எண்ணெய் என்பதே வாழ்வில் இல்லை என்று முடிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன.

ஆனாலும், என்ன செய்ய? அங்கு வாய்த்தது அதுதான்.

அடுத்தபடியாக பனீர் டிக்கா வந்தது. இந்த பனீர் டிக்காவில் சேர்மானமாகிற தயிரின் அளவு, தன்மை பற்றியெல் லாம் ஏற்கெனவே இங்கு சொல்லி யிருக்கிறேன். மேற்படி உணவக மடைப் பள்ளி வஸ்தாதுக்கு பனீர் டிக்கா என்பது பனீரில் செய்யப்படுகிற பஜ்ஜி என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். எனவே பனீரை வேகவைத்து, மிளகாய்ப் பொடி சேர்த்த தயிரில் நன்றாக நாலு புரட்டு புரட்டிக் கொடுத்தனுப்பிவிட்டார்.

மொத்தத்தில் அன்றெனக்கு வாய்த் தது பரம பயங்கரமான பகலுணவு. 24 மணி நேர விரதத்தை அப்படியே 48 மணி நேரமாக நீட்டித்துவிடலாமா என்று நினைக்க வைத்துவிட்டது. ஆனால், நான் கலைஞனல்லவா? கண்றாவிக் கசுமாலங்களுக்குக் கவித்துவப் பேரெழில் கொடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

‘‘தம்பி, உங்கள் ஓட்டலில் சீஸ் இருக்குமா?’’

‘‘இன்னாது?’’

‘‘சீஸப்பா! பாலாடைக்கட்டி. துண்டு களாகவோ கூழாகவோ அல்லாமல் ஸ்லைஸாக வரும். சாண்ட்விச்சில் உபயோகிப்பார்கள்.’

போய் விசாரித்துவிட்டு இருக்கிறது என்றான். ‘‘அப்படியானால் அதில் ஒரு ஏழெட்டு ஸ்லைஸ்கள் வேண்டும்’’ என்று வம்படியாகக் கேட்டு வாங்கினேன். வண்ணமிழந்த முட்டை கோஸைப் பிடிப்பிடியாக அள்ளி ஒவ்வொரு ஸ்லைஸுக்குள்ளும் வைத்து, பூரணக் கொழுக்கட்டை போலப் பிடித்தேன். சூப்புக்கு வைத்திருந்த மிளகுத் தூளை மேலுக்குக் கொஞ்சம் தூவி சாப்பிட்டுப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது.

அதேபோல, அந்த எண்ணெய் முருங்கைக் கூட்டை ஒரு தட்டில் சுத்த மாக வடித்துக் கொட்டிவிட்டு 50 கிராம் வெண்ணெயை அதன் தலையில் கொட்டி, நன்றாகக் கலந்து உண்டு பார்த்தபோது இன்னொரு கப் கேட்கலாம் என்று தோன்றியது.

அந்தப் பனீர் டிக்காவைத்தான் பரதேசி கிட்டத்தட்ட வன்புணர்ச்சி செய் திருந்தான். சகிக்க முடியாத காரம் மற்றும் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்பு. ஒரு கணம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதன் மீது படிந்திருந்த தயிர்ப் படலத்தை மொத்தமாக வழித்துத் துடைத்தெறிந்து விட்டு ஒரு அவகேடா ஜூஸ் வாங்கி (பட்டர் ஃப்ரூட் என்பர்) அதில் தோய்த்து உண்ண ஆரம்பித்தேன். எனக்கே சற்றுக் கேனத்தனமாகத்தான் இருந்தது. ஆனால், ஒரு நீண்ட விரதத்துக்குப் பிந்தைய அந்த உணவு கண்டிப்பாக எனக்கு ருசித்தாக வேண்டும். திருப்தி என்பது பசியடங்குவதில் வரு வதல்ல. ருசி அடங்குவதில் மட்டுமே கிடைப்பது.

இதற்குள் ஓட்டலுக்குள் ஏதோ ஒரு வினோத ஜந்து நுழைந்துவிட்டது என்ற தகவல் பரவி பலபேர் நான் சாப்பிடும் சவுந்தர்யத்தை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு என்னவிதமாக பில் போடுவது என்று ஓட்டல் நிர்வாகம் கூடி ஆலோசிக்கத் தொடங்கியது. நான் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, பரபரவென்று அனைத்தையும் உண்டு முடித்தேன். விரதம் முடித்ததல்ல என் மகிழ்ச்சி. மிக மோசமான ஓர் உணவை எளிய பிரயத்தனங்கள் மூலம் ருசி மிக்கதாக மாற்ற முடிந்ததே சாதனை.

இந்தப் பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முழு 24 மணி நேரம் உண்ணாதிருப்பது எப்படி என்று பார்த்துவிடலாம்.

 

- ருசிக்கலாம் |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-19-திருப்தி-என்பது-பசியடங்கல்-இல்லை/article9657801.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 20: விரதம் எதற்கு?

 

 
 
ss_3159424f.jpg
 
 
 

முழுநாள் விரதம். அதைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தோம் இல்லையா? முடித்துவிடுவோம்.

விரதங்களை இரவுப் பொழுதில் தொடங்குவது நல்லது. இது ஏதடா, நாமென்ன நடுநிசி யாகம் செய்து இட் சிணியையா வசப்படுத்தப் போகிறோம் என்று நினைக்காதீர். ஒரு நாளில் நாம் தவிர்க்கவே கூடாதது இரவு உணவு. இந்த ரெடிமிக்ஸ்காரர்கள், ஓட்ஸ் வியாபாரி கள், சீரியல் உணவு தயாரிப்பாளர்கள் கூட்டணி வைத்து சதி பண்ணித்தான் காலை உணவைக் கட்டாயமாக்கியது. உண்மையில், காலை சாப்பிடாதிருந் தால் எந்தப் பிரச்சினையும் இராது. சொல்லப் போனால் காலைப் பசி என்ற ஒன்று நமக்கு இயல்பில் கிடையவே கிடையாது.

புரியவில்லை அல்லவா? உங்கள் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கவனித்துப் பாருங்கள். காலை டிபன் சாப்பிட அசகாய சண்டித்தனம் செய் வார்கள். மிரட்டி, அதட்டி, திணித்துத் தான் பெரும்பாலான அம்மாக்கள் அனுப்பி வைப்பார்கள்.

அதே பிள்ளை கள் மாலை பள்ளி விட்டுத் திரும்பி வந்ததும் என்ன கொடுத்தாலும் அள்ளி அள்ளி கபளீகரம் செய்வதைப் பார்த்தால் சற்று விளங்கும். மனிதப் பிறவிக்குப் பசிக்கத் தொடங்குவதே மதியத்துக்குப் பிறகுதான். இதுதான் இயற்கை.

எனவே விரதங் களை இரவில் ஆரம் பிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

என் 24 மணிநேர உண்ணாவிரதம் இன்றிரவு 10 மணிக்குத் தொடங்கு கிறது என்றால், ஒன்பதரைக்கு நான் சாப் பிட உட்காருவேன். அப்போது உண்ணு வது வெறும் சாப்பாடல்ல; அமர்க் களமானதொரு விருந்தாக அது இருக்கவேண்டும். ஒரு சாம்பிள் மெனு சொல்லவா?

நெய்யில் சமைத்த பனீர் ஒரு கால் கிலோ. தேங்காய் சேர்த்து, அதேபோல் நெய்யில் சமைத்த ஒரு காய் 200 கிராம். கத்திரிக்காய், வெண்டைக்காய், கோஸ், காலி ஃப்ளவர், பூசணிக்காய், சுரைக்காய் என்று எதுவாகவும் இருக் கலாம். தரைக்கு அடியில் விளையும் காய்கறிகளை மட்டும் நான் சேர்ப்ப தில்லை. என் பிரியத்துக்குரிய உருளைக் கிழங்கை நான் விவாகரத்து செய்து சுமார் 10 மாதங்கள் ஆகின்றன. ஆச்சா? ஒரு காய்கறி சூப் சேருங்கள். வேண் டிய அளவுக்கு இதில் சீஸ் போடலாம். ருசி அள்ளும். பனீர், காய்கறி வகை யறாக்களுக்குத் தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய்ச் சட்னி அல்லது வேறெ தாவது சட்னி. ஒரு கப் முழுக் கொழுப்பு தயிர். பத்தாத குறைக்கு 50 கிராம் வெண்ணெய்.

இந்த மாதிரி ஒரு விருந்தை என்றாவது ஒரு நாளாவது முயற்சி செய்து பாருங்கள். ருசியில் சொக்கிப் போய்விடுவீர்கள்.

இதில் அரிசி கிடையாது. கோதுமை, சோளம், க. பருப்பு, உ.பருப்பு, ப.பருப்பு, து.பருப்பு உள்ளிட்ட எந்த தானிய வகையறாவும் கிடையாது. எண்ணெய் கிடையாது. முழுக்க முழுக்க நல்ல கொழுப்பும், நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குறைந்த அளவு கார்போஹைடிரேடும்தான் இருக் கும். உடம்புக்கு ஒன்றும் செய்யாது. இதைச் சாப்பிட்டு, 10 நிமிஷம் காலாற நடந்துவிட்டுப் படுத்துவிட்டால் முடிந்தது.

காலை உறங்கி எழும்போது ஃப்ரெஷ் ஷாக இருக்கும். புத்துணர்ச்சியைக் கூட்டிக்கொள்ள பால் சேர்க்காத ஒரு கருப்பு காப்பி குடிப்பேன். அதில் ஒரு கலோரிதான் இருக்கும் என்பதால் அதனால் விரதம் கெடாது. இல்லாவிட் டால் சிட்டிகை உப்புப் போட்டு பச்சைத் தேநீர் அருந்தலாம். ஆனால், சர்க்கரை சேர்க்கக்கூடாது.

இதன்பிறகு வெறும் தண்ணீர் மட்டும் தான். ஒரு மணி நேரத்துக்கு அரை லிட்டர் என்பது என் கணக்கு. விரதம் இருக்கும்போது இப்படித் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பது அவசியம். என்ன ஒரு ஏழெட்டு முறை கூடுதலாக சுச்சூ வரும். அவ்வளவுதானே தவிர, உடம்பு டீ ஹைடிரேட் ஆகாமல் இருக் கவும் உள்ளே போன கொழுப்புணவு சக்தியாக உருப்பெறவும் இது அவசியம்.

இம்மாதிரியான விரதம் இருக்கும் போது பசி என்ற உணர்வே வராது. இதுவே நீங்கள் முதல் நாள் இரவு ரெகுலர் சாப்பாடோ, பரோட்டா சப்பாத்தி வகையறாக்களையோ, ஃப்ரைட் ரைஸ், புலாவ் இனங்களையோ ஒரு கை பார்த்திருந்தீர்கள் என்றால் காலை எழுந்ததுமே பசிக்கும். 9 மணிக்கே என்னத்தையாவது கொண்டு வா என்று வயிறு ஓலமிடும். அது மாவுச் சத்து உள்ள உணவு வகையின் கல்யாண குணம். மிஞ்சிப் போனால் அன்று மதியம் வரை சாப்பிடாமல் இருக்க முடியும். அதற்குமேல் தாங்காமல் மாயாபஜார் ரங்காராவ் ஆகிவிடுவோம்.

தானிய உணவுக்கு பதில் கொழுப்பு உணவு உட்கொள்ளும்போது பசியுணர்ச்சி மட்டுப்படும். உள்ளே போகும் கொழுப்பு தவிர, ஏற்கெனவே அங்கே பிதுரார்ஜித சொத்தாக சேக ரித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பும் சேர்ந்து எரிந்து சக்தியாக மாறும்.

இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும். இத்தனைக் கொழுப்பு சாப்பிட்டால் உடனே மோட்ச சம்பந்தம் வந்துவிடாதா?

என்றால், வராது! தானியங்களைத் தவிர்த்துவிட்டு, கொழுப்பை மட்டும் உணவாகக் கொள்ளும்போது ஹார்ட் அட்டாக் பிரச்சினை இராது என்பதே பதில். இரண்டும் சேரும்போதுதான் சிக்கல்.

இதே விரத ஸ்டைலை அசைவ உணவு கொண்டும் முயற்சி செய்யலாம். சிக்கன், மட்டனில் எல்லாம் கார்போஹைடிரேட் கிடையாது. இஷ்டத்துக்கு வெளுத்துக் கட்டலாம். என்ன ஒன்று, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று இறங்கிவிடாதிருக்க வேண்டும். பிரச் சினை அந்தப் பிரியாணி அரிசியில் தானே தவிர, சிக்கனிலோ மட்டனிலோ இல்லை என்பது புரிந்துவிட்டால் போதும்.

முதல் நாள் இரவு 10 மணிக்கு விருந்து முடித்து, விரதம் தொடங்கி னோம் அல்லவா? சரியாக அதே நேரத்தில் மறுநாள் விரதத்தை முடித்துவிட வேண்டும். முந்தைய நாளைப் போலவே ஒரு மகத்தான முழு விருந்து. இந்தப் பாணி விருந்து - விரத முயற்சியில் உடம்பு இயந்திரமானது பரம சுறுசுறுப்படைந்து வேகம் பெறும். மூளை மிக வேகமாக சிந்திக்கும். என்னைப் போல் நாளெல்லாம் நாற்காலி தேய்க்கிற ஜென்மங்களுக்கு இந்த ஒருவேளை உணவு முறை பெரிய வசதி. எடை கூடாது. கண்ட கசுமால வியாதிகள் அண்டாது. எப்போதும் பசி, எப்போதும் தீனி, அதனாலேயே உடல் பருமன் என்னும் தீரா மாய வட்டத்தில் இருந்து எளிதாக வெளியேறிவிட முடியும்.

இன்னொன்றும் செய்யலாம். விரதம் முடித்த மறுநாள் காலை ஒரு கீரை ஜூஸ் அருந்துங்கள். அரைக் கட்டு கீரையை ஆய்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பிடி புதினா, பிடி கொத்துமல்லி, 10 கருவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் சீரகம், மிளகு, ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், நாலு பல் பூண்டு, ஒரு பிடி தேங்காய் சேர்த்து அப்படியே பச்சையாக மிக்ஸியில் அரைத்து எடுத்தால் முடக்கத்தான் கீரை சேர்த்து அரைத்த தோசை மாவு மாதிரி ஒரு ஜூஸ் வரும். இதில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு அப்படியே குடித்துவிடுங்கள். பச்சைக் கீரை வாசனை ஒத்துக்கொள்ளாது என்றால் கொதித்த நீரில் கீரையை ஒரு ஐந்து நிமிடம் போட்டெடுத்து வடிகட்டலாம்.

இந்த கீரை ஜூஸானது ஒரு டிடாக்ஸ் தெய்வம். தேகஹானிக்குக் காரணமான கெட்ட சக்திகளை மொத்தமாகக் கழுவிக் கொட்டிவிடும். உடம்பு ஒரு சிறகு போலிருக்கச் செய்யும்.

இப்படியெல்லாம் விரதம் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்றால் ஒரே ஒரு பதில்தான். இன்னும் விதவி தமாக ருசித்துத் தீர்க்க உடம்பு நன்றாக இருக்க வேண்டாமா?

- ருசி தொடரும்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-20-விரதம்-எதற்கு/article9672982.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 21: வெயில் வேதனைகள்!

 

 
 
ss_3161596f.jpg
 
 
 

இந்த வருஷத்து வெயில் ஒருவழி பண்ணிவிடும் போலி ருக்கிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது எதற் காவது பார்த்தே தீரவேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் சந்திக்கலாமா என்று கேட்க ஆரம்பித்திருக் கிறேன். நடுநிசி நாயாகக்கூட இருந்து விட்டுப் போய்விடலாம். நடுப்பகல் வேளைகளில் வெளியே போக நான் தயாரில்லை.

இந்த வெயில் காலங்களின் பெரிய பிரச்சினை, வேலை கெட்டுவிடும் என்பது. நூறு சதம் ஒழுங்கான காரியம் ஒன்றை இப்பகல்களில் கண்டிப்பாகச் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். ஏ.சி அறைக்குள் பதுங்கிக்கொண் டாலும் நம்மையறியாமல் ஒரு சோர்வு ஒட்டிக்கொள்ளும். ராத்திரி 10 மணிக்கு வரவேண்டிய அலுப்பும் களைப்பும் மத்தியானமே வந்து தொலைக்கும்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள் என்று சொன்னால், சரி என்போம். ஆனால், குடிக்கிற அளவு ஏறவே ஏறாது. மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு இரண்டில் இருந்து மூன்று லிட்டர் நீர் அருந்துவோம். இந்த வெயிலுக்கு அதெல்லாம் எந்த மூலைக்கு?

என் நண்பர் குமரேசன் ருசி மிக்க குடிநீர் ரெசிபி ஒன்று சொல்வார். கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், பிரமாதமாக இருக்கும்.

நாலைந்து லிட்டர் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி எடுத்து வைத்துவிட வேண்டும். இரண்டு எலுமிச்சங்காய், இரண்டு எலுமிச்சம்பழம், இரண்டு வெள்ளரி எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சங்காய்களை இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு விடுங்கள். பழங்களைப் பிழிந்துவிட வேண்டும். வெள்ளரியைத் தூள் தூளாக நறுக்கிப் போட்டு மூடிவிடுங்கள். விரும்பினால் கொஞ்சம் புதினா சேர்க்கலாம்.

இதை அலங்கரிப்பதற்கு இன்னொன் றும் செய்யலாம். நாட்டு மருந்துக் கடைகளில் பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி என்று கேட்டால் ஒரு பொடி தரு வார்கள். மெல்லிய பச்சைக் கற்பூர வாசனையோடு ஜோராக இருக்கும். அதில் இரண்டு சிட்டிகை தூவி, அப் படியே தண்ணீரை மூடி வைத்து விடுங்கள். முழு ராத்திரி மூடியே இருக் கட்டும். மறுநாள் காலை இந்நீரை வடிகட்டி பாட்டில்களில் எடுத்துக் கொண்டு வெளியே போகலாம். ருசி, மணம் என்பதைத் தாண்டி சட்டென்று சக்தி கொடுக்கும் நீர் இது.

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வரு கிறது. கண்றாவியான ஒரு கோடை காலத்தில் பதேபூர் சிக்ரியைப் பார்க்கப் போயிருந்தேன். தெரியுமல்லவா? பேரரசர் அக்பர் கட்டிய கோட்டை நகரம். ஒரு காலத்தில் ரொம்ப அழகான ஊராக இருந்திருக்குமோ என்னமோ. நான் போனபோது கோயம்பேடு மார்க் கெட்டின் சற்றே விரிந்த வடிவமாகக் காட்சியளித்தது.

எங்கு பார்த்தாலும் குப்பை. எல்லா பக்கங்களில் இருந்தும் துர்நாற்றம். பாதை எது? பிளாட்ஃபாரம் எது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கடைகள் ஆக்கிரமித்த நகரமாக இருந்தது அது. எங்கெங் கிருந்தோ வந்து குவிந்துகொண்டே இருந்த சுற்றுலாப் பயணிகள் யாரும் அந்த ஊரை விட்டு நகரவே மாட்டார் களா என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குக் கூட்டம் இறுகிக்கொண்டே போனது.

வெயிலோ, வந்தாரை வறுத்தெடுக் கும் பணியில் வெகு மும்முரமாக இருந்தது. எத்தனை தண்ணீர் குடிப்பது? எவ்வளவு குளிர்பானம் அருந்துவது? காலை 8 மணிக்கு சுற்ற ஆரம்பித்த வனுக்கு 11 மணியளவில் லேசாக மயக்கம் வந்துவிட்டது. வியர்வைக் கசகசப்பும் ஜனக் கூட்ட நெரிசலும் சகிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் அக்பரின் கோட்டை எத்தனை அழகாக இருந்து என்ன? ஒரு கல்லைக் கூட ரசிக்க முடியவில்லை.

10 நிமிஷம் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்தேன். சற்று தூரத்தில் யாரோ வியாபாரி பானையில் மோர் விற்றுக் கொண்டிருந்தான். அங்கும் கூட்டம். கியூவில் நின்றுதான் மோர் வாங்கியாக வேண்டும். கொஞ்சம் கூட்டம் குறைந்தபின் வாங்கலாம் என்று எண்ணி அமைதி காத்தேன். ஆனால், கூட்டம் குறைவதாக இல்லை. சரி, இதிலெல்லாம் ரோஷம் பார்க்கலாகாது என்று எழுந்து போய் வரிசையில் நின்றுகொண்டேன்.

மேலும் 10 நிமிடங்களுக்குப் பிறகே மோர் வியாபாரியை நெருங்க முடிந்தது. அவன் முன் இரண்டு பானைகள் இருந்தன. ஹிந்தி என்ற ஒரு மொழி இருந்தது. இரண்டில் எது வேண்டும் என்று அவன் கேட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நானறிந்த மொழிகளிலே இனிதான தமிழில் கேட்டதற்கு பதில் இல்லை. சரி போ என்று ஆங்கிலத்தில் அதையே திரும்பக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் இல்லை. ஆனால், ஹிந்தியில் மட்டுமே சொன்னான். கேவலம் ஒரு தம்ளர் மோருக்கு இத்தனை சொற்களை விரயம் செய்ய வேண்டுமா என்று தோன்றியது. இரண்டிலொரு பானை யைச் சுட்டிக்காட்டி, ‘‘அதையே கொடு’’ என்று சொல்லிவிட்டேன்.

அவன் பானையைத் திறந்தான். நீண்ட கரண்டி ஒன்றை அதன் உள்ளே விட்டு லாகவமாக இந்தப் பக்கம் ரெண்டு, அந்தப் பக்கம் ரெண்டு கலக்கு. எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி நீட்டினான். வாங்கிக்கொண்டு, அடுத்த பிரகஸ்பதி வாங்கிய மறு பானை மோரை எட்டிப் பார்த்தேன். அதில் மட்டும் கருவேப் பிலை, பச்சை மிளகாய், கடுகு வகை யறாக்கள் இருந்தன. ஓஹோ, அது மசாலா மோர்; இது சாதா மோர் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, வாங்கிவிட்டபடியால் ஒரு வாய் அருந்தினேன்.

மோசமில்லை. மோர் நன்றாகவே இருந்தது. அந்த மறுபானை மோர் இன் னுமே நன்றாக இருக்கக்கூடும். அதை ருசிக்க வேண்டுமென்றால் மீண்டும் வரிசையில் நின்றாக வேண்டும். எனவே அந்த ஆசையை விலக்கிவிட்டு என் கோப்பை மோரை அருந்தி முடித்தேன்.

கொஞ்சம் தெம்பு வந்துவிட்டதோ? அக்பரின் கோட்டைக்குள் பிரவேசித் தேன். சிவப்பு வண்ணக் கட்டிடக் காவியம் அது. என்னமாய்த்தான் உட் கார்ந்து ப்ளூ ப்ரிண்ட் போட்டிருப்பார் களோ தெரியவில்லை. அங்குலம் அங்குலமாக ரசித்து ரசித்துக் கட்டப் பட்ட கோட்டை.

பார்த்தபடியே உப்பரிகைப் பக்கம் போய்ச் சேர்ந்தபோது எனக்குள் என்னவோ நிகழ்ந்து கொண்டிருப்பது போல் இருந்தது. ஆனால், என்னவென்று சரியாகத் தெரியவில்லை. தொண்டை வறண்டது. தாகமென்றால் கொலை தாகம். இத்தனைக்கும் இரண்டு லிட்டர் தண்ணீர் உள்ளே போயிருக்கிறது. மேலுக்கு ஒரு கோப்பை மோர். அதெப்படி பத்தே நிமிடங்களில் இப்படியொரு தாகம் வரும்?

தாகம் தவிர, என் எதிரே போய்க்கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் இரண்டு தலைகள் இருப்பது போலத் தெரிந்தது. பதினாறாம் நூற்றாண் டில் புதைந்த மனிதர்களா இவர்கள்? எல்லோரும் எப்படி உப்பரிகையின் கைப்பிடிச் சுவரைத் தாண்டி அந்தர வெளியில் பறக்கிறார்கள்? அட நாமும் பறந்து பார்த்தால்தான் என்ன?

கைப்பிடிச் சுவர் அருகே வந்து நின்றேன். நின்றேனா, படுத்தேனா என்று சரியாக நினைவில்லை. ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஒரு வருடமோ கழித்துக் கண்விழித்தபோது நடந்தது புரிந்தது. மறுபானையில் இருந்ததல்ல; எனக்கு அவன் எடுத்துக் கொடுத்த பானையில் இருந்ததுதான் மசாலா மோர். சனியன், என்னத்தைப் போட்டுக் கலக்கியிருந்தானோ? உயிரே போய் வந்தாற்போலாகிவிட்டது. கரணம் தப்பி னால் பீர்பால் மடியில்போய் உட்கார்ந் திருப்பேன்.

திரும்பும்போது மறக்காமல் அந்த மோர்க்காரனிடம் விசாரித்தேன். அடேய் அதில் என்னத்தைப் போட்டுத் தொலைத் திருந்தாய்?

பதில் சொன்னான். இந்தியில்தான் சொன்னான். ஆனால் புரிந்தது. அன்று எடுத்த முடிவுதான். எப்பேர்ப்பட்ட தாகமாயினும் வெளியே எதையும் வாங்கிக் குடிப்பதில்லை.

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-21-வெயில்-வேதனைகள்/article9683716.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 22: பூண்டின் மகத்துவம்!

 

 
1_3166553f.jpg
 
 
 

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் ஓர் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரம் ப்ரிஜ்ஜில் ஒரு பூண்டு டப்பா வைத்திருப் பான். மொத்த குளிர்சாதனப் பெட்டியையும் அதன் நெடி நாறடித்துக்கொண்டிருந்தாலும், தன்னிடம் பூண்டு இல்லவே இல்லை என்று சாதிக்கப் பார்ப்பான்.

கையும் பூண்டுமாக ஒரு கட்டத்தில் பிடிபடும்போது ஆவேசமடைந்து அந்தப் பூண்டு ஊறுகாய் டப்பாவைத் திறந்து சிங்க்கில் கொட்டிக் கழுவிவிடுவான். குளிர் சாதனப் பெட்டி அளவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பூண்டின் நெடி, அப்போது அபார்ட்மெண்ட் முழுதும் ஆளத் தொடங்கும்.

அந்தக் கதாபாத்திரத்தின் விவரிக்க முடியாத ஒரு பெரும் துக்கத்தின் குறியீடாகப் பூண்டின் நெடி நிறைந்து பரவுகிற ஜாலம் அந்த அத்தியாயம் முழுதும் நிகழ்ந்திருக்கும்.

உண்மையில் எனக்குப் பூண்டு பிடிக்கத் தொடங்கியதே அந்தக் கதையைப் படித்த பிறகுதான். அதற்கு முன்னால் வரை சகிக்க முடியாத துர்நாற்றம் என்று அதைத் தள்ளி வைத்திருந்தேன். ஏனோ அதன்பின் எனக்குப் பூண்டின் வாசனை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு சமயம் செட்டிநாட்டு அரண்மனைக்குப் போயிருந்தேன். என்னோடு புகைப்படக் கலைஞர் யோகாவும் வந்திருந்தார். பத்திரிகைப் பணி, என்னமோ சிறப்பிதழ், பேட்டி இத்தியாதி. வேலை முடிந்த பிற்பாடு அங்கேயே சாப்பிட்டுப் போகலாம் என்று சொல்லி உட்காரவைத்துவிட்டார்கள். அரண்மனைச் சாப்பாடெல்லாம் நாம் எப்போது அனுபவிப்பது? சரி, வாய்த்த வரை வரப்பிரசாதம் என்று அமர்ந்துவிட்டேன்.

‘‘நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களல்லவா?’’ என்று கேட்டார் சமஸ்தானத்து நளபாகச் சக்கரவர்த்தி.

‘‘ஐயோ இல்லை…’’ என்று நான் அலறியதில் அவருக்கு மிகுந்த வருத்தம். அரண்மனை வளாகத்திலேயே ஒரு முற்றத்தில் நூற்றுக்கணக்கான கோழிகள் தானியப் படுக்கையின் மீது மேய்ந்துகொண்டிருந் ததைக் கண்டேன். அவற்றில் ஒன்றை அவர் உத்தேசித்திருக்கலாம். தவிரவும் அரண் மனைக்கு வந்து செல்லும் விருந்தாளியை அசறடித்துப் பார்க்க நினைத்திருக்கலாம். எப்படியானாலும் அவருக்கு ஏமாற்றம்தான். ‘‘ஐயா எனக்குத் தயிர் சாதம் போதும்’’ என்ற பதில் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை என்று புரிந்தது.

‘‘செட்டிநாட்டு சமையலில் அசைவம் போலவே சைவத்திலும் சில சாகசங்கள் செய்ய முடியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்’’ என்று சொல்லிவிட்டுத் தனது ஆயுத பரிவாரங்களுடன் சமையலறைக்குப் போய்விட்டார்.

அன்றைய அந்த விருந்தை என்னால் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. அரை ஃபர்லாங் நீளத்துக்கு ஒரு வாழையிலை போட்டார்கள். இலையின் மேற்பகுதியில் இடது மூலை தொடங்கி வலது மூலை வரை வரிசையாக ஆறேழு வகைக் காய்கறிகள், கூட்டு, துவையல் இனங்கள். பொடி வகைகள், மூன்று வித ஊறுகாய். வழக்கமான சாம்பார், ரச வகையறாக்களுக்கு அப்பால் செட்டிநாட்டு ஸ்பெஷல் என்று சொல்லி ஒரு குழம்பைக் கொண்டு வந்தார்கள். அது பூண்டுக் குழம்பு.

பதமான காரத்தின் அடியாழத்தில் ஒரு மெல்லிய இனிப்புப் படலம் உண்டு என்பதை அன்று நான் அறிந்தேன். சட்டென்று எழுந்த சந்தேகத்தில், ‘வெல்லம் போடுவீர்களா?’ என்று கேட்டதற்கு, இல்லை என்று பதில் வந்தது. ஆனாலும் அந்தக் குழம்பு உண்டு முடித்த பின் இனித்தது. அது காரத்தில் தோய்த்த இனிப்பு. அன்று மாலை வரை என் கையில் பூண்டு மணந்துகொண்டே இருந்தது. சோப்புப் போட்டுக் கழுவினாலும் அந்த வாசனை போகவில்லை. கையே அப்படி என்றால் வாய் எப்படி இருந்திருக்கும்!

எனக்கு அந்தப் பூண்டுக் குழம்பு ரொம்பப் பிடித்துவிட்டது. எத்தனையோ உணவகங்களில், வீட்டில் எளிதாகச் செய்யக்கூடியதுதான். ஆனாலும் அந்த அரண்மனைக் குழம்புக்கு என்னமோ ஒரு விசேஷம் இருப்பதாகப்பட்டது. அது என்ன?

அந்த சமையல் கலைஞரிடமே கேட்டேன். ஒரு குழம்பை நாவில் இருந்து நேரே நினைவுக்குக் கடத்தும் சூட்சுமம் எது?

‘‘புளி எத்தனை பழையதாக இருக்கிறதோ, அந்தளவுக்குக் குழம்பில் ருசி கூடும்’’ என்றார் அவர். புதிய புளியில் அத்தனை ருசி சேராது என்பது அவர் சொன்னது. பூண்டு ஆட்சி புரிந்தாலும் புளியில் இருக்கிறது சங்கதி!

ஆனால், பூண்டை ஓர் உணவாகப் பார்ப்பதைவிட மருந்தாகக் கருதுவதே சரி. இதில் இருக்கிற ‘அலிஸின்’என்கிற பரப்பிரும்மம், நோய் எதிர்ப்பு சக்தி தருவதில் ஆரம்பித்து, புற்றுநோய் வராமல் தடுப்பது வரை ஏகப்பட்ட காரியங்களை அமைதியாகச் செய்யவல்லது. இதே ‘அலிஸின்’தான் பூண்டின் வாசனைக்கும் காரத்துக்குமேகூடக் காரணம் (இது வெங்காயத்திலும் ஓரளவு உண்டு). ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் மற்றும் டிரைகிளிசரைட் என்கிற கெட்ட கொலஸ்டிரால் இனங்களை சம்ஹாரம் செய்வது இதற்குப் பிடித்த காரியம்.

என்ன பிரச்சினை என்றால் இத்தனை சகாயம் தரும் பூண்டை சமைத்துச் சாப்பிடுவது அத்தனை பிரயோசனம் இல்லை. ‘அலிஸின் குற்றுயிரும் குலை உயிருமாக ஆகிவிடும். பச்சையாக உண்பதுதான் பலன் தரக்கூடியது. பச்சையாகச் சாப்பிட்டுவிட்டு நாற்றத் துழாய்முடி நாராயணனாக உலா வந்தால் நோய்நொடி மட்டுமல்ல; சுற்றமும் நட்பும்கூடச் சற்றுத் தள்ளிப் போகிற அபாயம் உண்டு. அதெல்லாம் பரவாயில்லை என்பீர்களானால், தினமுமே நாலு பல் பூண்டு உள்ளே போகும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப நல்லது.

இன்றைக்கு ஒரு தீவிரவாத கோஷ்டி, தினசரி காலை வெறும் வயிற்றில் இந்தப் பச்சைப் பூண்டைச் சாப்பிடுவது நல்லது என்று சொல்லிக்கொண்டு நாடெங்கும் கிளம்பியிருப்பதைக் காண்கிறேன். அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க இதை ஓர் உபாயமாகச் சொல்கிறார்கள். நானேகூட யாரோ சொன்னதைக் கேட்டுக் கொஞ்ச நாள் இந்த மாதிரி விடிந்து எழுந்ததும் நாலு பூண்டை நறுக்கி வெந்நீரில் மாத்திரை போல் விழுங்கி வந்தேன். இதன் நிகர லாபம் அசிடிடி பிரச்னையாகத்தான் இருந்ததே தவிர, எடைக் குறைப்பல்ல.

பச்சையாக உண்ணவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, பல் விளக்கியதுமே பகாசுரத்தனம் காட்டவேண்டும் என்பதில்லை. காய்கறிகளைச் சமைத்த பிறகு நாலைந்து பூண்டுகளைப் பச்சையாக நறுக்கி அதன் தலையில் போட்டு ஒரு கிளறு கிளறி உண்டால் முடிந்தது ஜோலி.

ஒருமுறை ராமேசுவரத்துக்குப் போயிருந்தபோது மண்டபம் அகதி முகாம் அருகே ஓர் உணவகத்தில் பகல் உணவு சாப்பிடப் போய் உட்கார்ந்தேன். மேசை மீதிருந்த ஊறுகாய்க் கிண்ணத்தில் பூண்டு ஊறுகாய் இருந்தது. கொஞ்சம் நப்பாசைப் பட்டு பிடி சாதத்தில் அதைக் கலந்து உண்டு பார்த்தேன். அதிகம் காராமல், ருசியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று நினைத்து மேலும் நாலு பிடி சாதத்துக்கு ஊறுகாய் போட்டுப் பிசைந்து உண்டேன். மேலும் ருசித்தது. அன்றைக்கு சாம்பார், ரசமே வேண்டாம் என்று முடிவு செய்து ஊறுகாய் சாதம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.

எப்படியும் வயிற்று வலி அல்லது வெளியேற்ற நடவடிக்கையில் கலவரம் என்று என்னவாவது ஒன்று வந்தே தீரும் என்று தோன்றியது. அன்றைக்கு உண்ட அளவுக்கு வேறெப்போதுமே நான் ஊறுகாய் உண்டது இல்லை. உடல் உபாதைத் தவிர அந்தப் பூண்டு நெடி ஒரு வாரத்துக்கு என்னைவிட்டு போகாது என்றும் தோன்றியது. என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது சப்ளையர் சிகாமணி ஓர் உபாயம் சொன்னார்.

பூண்டு உண்டபின் ஒரு பிடி பச்சரிசியை வாயில் போட்டு மென்று துப்பிவிட்டால் வாசனை போய்விடும்!

அசோகமித்திரனின் கதாபாத்திரத்துக்கு இந்த யோசனை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-22-பூண்டின்-மகத்துவம்/article9708528.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.