Jump to content

பாகிஸ்தான் நிகாரி கோஷ்


Recommended Posts

பாகிஸ்தான் நிகாரி கோஷ்

தேவையானவை:
 மட்டன் - ஒரு கிலோ
 ஏலக்காய் - 4
 பட்டை, கிராம்பு - தலா ஒன்று
 கறுப்பு ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - கால் கப்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி - நீளவாக்கில் வெட்டியது சிறிது (அலங்கரிக்க)
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 பூண்டு - 3 பல் (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்)
 சின்ன வெங்காயம் - 3 (தோலுரித்து, எண்ணெயில் வதக்கி அரைக்கவும்)
 தயிர் - 3 டேபிள்ஸ்பூன் (நன்றாக அடிக்கவும்)
 கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
 ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 குங்குமப்பூ - அரை டீஸ்பூன் (கால் கப் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்)
 கியூரா எசென்ஸ் - ஒரு துளி
 சப்பாத்தி மாவு - 2 கப் (பிசைந்தது)
 கொத்தமல்லித்தழை - சிறிது (பொடியாக நறுக்கவும்)
 ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

p43a.jpg

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறுப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலையைச் சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் மட்டனைச் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்கவிடவும்.

கொதித்ததும் மூடி திறந்து இஞ்சி-பூண்டு விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், வதக்கி அரைத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் அடித்துவைத்த தயிர், ரோஸ் வாட்டர், கரம் மசாலாத்தூள், ஜாதிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள், ஊறவைத்த குங்குமப்பூ அனைத்தையும் அதனுடன் சேர்த்து மூடி, 3 நிமிடம் வேகவிடவும். கியூரா எசன்ஸ் ஒரு சொட்டு சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு மூடிப்போட்டு பாத்திரத்தை மூடவும்.
சப்பாத்தி மாவை நீளமாக உருட்டி பாத்திரத்தின் விளிம்பைச் சுற்றி காற்றுப் போகாத வண்ணம் ஒட்டவும். தீயைக் குறைத்து வைத்து முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வேகவிடவும்.  பிறகு சப்பாத்தி மாவை நீக்கிவிட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் நீளவாக்கில் நறுக்கிய இஞ்சியைத் தூவி அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும். ரொட்டி, சூடான கோதுமை பரோட்டா மற்றும் சாதத்துடன் சுவைக்கலாம்.

குறிப்பு:
 நாம் உபயோகப்படுத்தும் ஏலக்காய் பாலிஷ் செய்யப்பட்ட பிறகு கிடைப்பது. பாலிஷ் செய்யாமல் கடைகளில் கிடைக்கும் ஏலக்காய்தான் கறுப்பு ஏலக்காய். வட இந்தியாவில் கறுப்பு ஏலக்காய்களை அதிகம் உபயோகிப்பார்கள்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.