Jump to content

கருணாநிதியின் மருத்துவமனை நிமிடங்கள்! - கோபாலபுரத்தில் கொந்தளித்த அழகிரி


Recommended Posts

கருணாநிதியின் மருத்துவமனை  நிமிடங்கள்!  - கோபாலபுரத்தில் கொந்தளித்த அழகிரி

 

karunanithi%20hos_11110.jpg

ப்போலோ மருத்துவமனையைப் போலவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. ' நோய்த் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் கலைஞர். இன்னும் ஒருவாரம் அவர் சிகிச்சையில் இருப்பார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 25-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைமைக் கழகம், ' வழக்கமாக அவர் உட்கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவரைக் காண வருவதைத் தவிர்த்து, பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல் முழுவதும் மீசெல்ஸ் எனப்படும் சிறு கொப்புளங்கள் பரவிவிட்டதால், மிகுந்த வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடலில் ஆட்டோ இம்யூன்(நோய் எதிர்ப்பு குறைபாடு) பாதிப்பும் ஏற்பட்டது. இதையொட்டி கோபாலபுரத்திலே தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். 

kauvery_11590.jpg"கலைஞரின் உடல்நிலையை அவருடைய மருத்துவர் கோபால்தான் கவனித்து வருவார். மீசெல்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு, சிறப்பு தோல் மருத்துவர் இயேசுதாசன் வரவழைக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவர்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக படுக்கையில் படுத்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், முதுகுப் பகுதியில் புண் ஏற்பட்டுவிட்டது. மீசெல்ஸ் எனப்படும் கொப்புளங்களால் ஏற்படும் வலி ஒருபுறம் இருந்தாலும், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட புண்களால் இரவு நேரத்தில் அவரால் உறங்க முடியவில்லை. வலியால் சிரமப்பட்டு வந்தார். இதை சரிசெய்வதற்காக அவருடைய படுக்கையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இருப்பினும், நேற்று இரவு அவரால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நள்ளிரவு 2 மணியில் இருந்தே உறக்கமில்லாமல் மிகுந்த வேதனையில் இருந்தார்.

ஒருகட்டத்தில், 'புண் ஆறும்வரையில் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பதே நல்லது' என மருத்துவர்கள்  கூறினார். இதன்பின்னர் எந்த யோசனையும் இல்லாமல், காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கலைஞர். அவருடன் பொருளாளர் ஸ்டாலின், துர்கா, செல்வி ஆகியோர் உடன் சென்றனர்" என வேதனையோடு விளக்கினார் அறிவாலய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், " நேற்று மாலை இட்லி சாப்பிட்டுவிட்டு, இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார் கலைஞர். அவரைப் பார்ப்பதற்காக கோபாலபுரத்துக்கு வந்தார் மு.க.அழகிரி. ' கட்சிப் பதவி குறித்து வெளியில் பேசப்படும் சில விஷயங்கள் குறித்து மிகுந்த கோபத்தில் இருந்தார் அழகிரி. ஒருகட்டத்தில், குடும்ப உறவினர்களிடம், ' தலைவர் உடல்நிலை குணமாகி வரும் வரையில் எதைப் பற்றியும் யாரும் பேச வேண்டாம். அவர் நல்லநிலையில் இருக்கும்போதே ஏன் இவ்வாறு செய்தி பரவுகிறது?' எனக் கோபப்பட்டார். அவருடைய கருத்துக்கு குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உடன்பட்டனர்" என விவரித்தார். 

Kauvery-Hospital_11216.jpg

" கலைஞருக்கு உடல்நலமில்லாமல் போனதில் இருந்தே, கட்சித் தலைவர் பதவி குறித்து சில விவாதங்கள் நடந்து வந்தன. குறிப்பாக, செயல் தலைவர் பதவியை முன்னிறுத்தியும் சில விஷயங்கள் பேசப்பட்டன. இதனை அழகிரி ஏற்காமல், 'தலைவருக்குப் பிறகான நிலைமையை, பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். ராஜாத்தி அம்மாளும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

உடல்நிலை பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், 'குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்பதைத்தான் தலைவர் விரும்புகிறார். 'நான் நன்றாக இருக்கிறேன்' என்பதைக் காட்டுவதற்காக, மத்திய அரசின் ரூபாய் நோட்டு பிரச்னைக்கு எதிராக தி.மு.க நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கவும் தயாராக இருந்தார். ஆனால், அவர் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காததால், பேராசிரியர் அன்பழகனுடன் இருக்கும் படத்தை வெளியிட வைத்தார். அவரை வாட்டும் மீசெல்ஸ் பிரச்னை, அவரது அக்கா சண்முக சுந்தரத்தம்மாளுக்கும் இருந்துள்ளது. உடல்நிலையைவிடவும், குடும்ப உறுப்பினர்களின் அடுத்தடுத்த நெருக்கடிகளும் அவருக்கு சிரமத்தைக் கொடுத்து வந்தது. சிகிச்சை முடிந்து வந்த பிறகு, கட்சி தொடர்பான சில அறிவிப்புகளை அவர் வெளியிடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/73891-dmk-chief-karunanidhi-hospitalized-for-measles-treatement.art

Link to comment
Share on other sites

காவேரி மருத்துவமனையும், கோபாலபுரமும்!

 

காவேரி

சென்னையில், அப்போலோ-வுக்குப் பிறகு இப்போது பரபரப்பாக இருக்கும் இடம் காவேரி மருத்துவனை! கிரிம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமத்திக்கப்பட்டு 60 நாட்கள் கடந்துவிட்டன. அவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை கலைஞர் கருணாநிதி சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவேரி மருத்துவமனை வரலாறு

சென்னை ஆழ்வார்பேட்டையில், அமைந்திருக்கிறது காவேரி மருத்துவமனை. சென்னையில், 200 படுக்கை வசதிகளுடன் உலக அளவிலான நவீன மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளது இம்மருத்துவமனை. அவசரசிகிச்சை, குழந்தைகள் பிரிவு, மனநலப் பிரிவு, பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை, அழகுக்கான அறுவைசிகிச்சை, பொது அறுவைசிகிச்சை எனப் பலவகையான உயர்தர சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், முதன்முதலில் திருச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை சென்னை, காரைக்குடி, ஓசூர் ஆகிய இடங்களிலும் உள்ளன.

karunanidhi_13525.jpg

கருணாநிதி ஏன் அனுமதிக்கப்பட்டார்?

93 வயதாகும் கருணாநிதி கடந்த சில நாட்களாக  தட்டம்மையால் பாதிக்கபட்டுள்ளார். அவர் உடல் முழுவதும் மீசெல்ஸ் எனப்படும் சிறு கொப்புளங்கள்பரவிவிட்டதால், மிகுந்த வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடலில் ஆட்டோ இம்யூன் பாதிப்பும் ஏற்பட்டது. இதன் விளைவாக நேற்று இரவு முதல், அவருக்கு காய்ச்சலும் அதிகமாகியுள்ளது.கடந்த 10 நாட்களாகவே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டு உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தவரை இன்று அதிகாலை 5.40 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

கனிமொழியும் காவேரி மருத்துவமனையும்

கடந்த 2014-ம் ஆண்டு கருணாநிதி மகளான கனிமொழி உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டார். அப்போது மயக்க நிலையில் இருந்த அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் அவரது உடல் சோர்வு மற்றும் மன சோர்வுக்காக கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் காவேரி மருத்துவமனை அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

Untitled-3_13166.jpg

காவேரி... அப்போலோ...!

இன்று அதே காவேரி மருத்துவமனையில்,  கருணாநிதி அனுமதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'கருணாநிதிக்கு  நீர்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியான முதல் நாள் அறிக்கையில், 'நீர்ப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டார்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பிறகு, வந்த அறிக்கைகளில் நுரையீரல் பாதிப்பு என குறிப்பிடப்பட்டது. பிறகு, இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பெயல், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எனப் பலரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், இன்னும் உடல் நலம் பெற்று அவர் வீடு திரும்பவில்லை. விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மருத்துவமனை அறிக்கையில் அளிக்கப்படும் தகவல்கள் மட்டுமே தலைவர்களின் உடல்நிலை பற்றித் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை. அவர்கள் இருவருக்கும் தேவைப்படும் சிகிச்சைகள் உரிய மருத்துவர்களைக் கொண்டு அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இருவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக மக்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்! 

http://www.vikatan.com/news/tamilnadu/73910-dmk-chief-karunanidhi-admitted-in-kauvery-hospital.art

Link to comment
Share on other sites

தளர்ந்த உடல்... தளராத தலைமை... கருணாநிதி கடந்து வந்த பாதை !

 

b1_13475.jpg

ரசியல் மேடையில் இந்த கதையை நீங்கள் பல முறை கேட்டிருக்கலாம். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை எத்தனை முறை சொல்லி இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. தன் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவமாக இதை அவர் சொல்வதுண்டு. அவரது தன்னம்பிக்கையை, விடா முயற்சியை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது இந்த சம்பவம்.

ஒரு ஆண்டுக்கு முன்னர்,  கருணாநிதியிடம் 'இத்தனை வயதாகிவிட்டது. அரசியலில் எப்படி இவ்வளவு சலிப்பில்லாமல் இயங்குகிறீர்கள்? ஓய்வு எடுக்கலாம் என தோன்றியதே இல்லையா' என அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் இந்த சம்பவத்தை அடிக்கோடிட்டு தான்.

b2_13061.jpg

அரசியல் நான் விரும்பிய பாதை

"பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்து சென்று விட்டோம். 'என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்' என்றார் நண்பன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான் நீந்த வேண்டும்' என்று சொன்னேன்.இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை" என்றார் அவர்.

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதியைப் போல வெற்றி கண்டவரும் இல்லை. அவரை போல சரிவுகளை சந்தித்தவர்களும் இல்லை. அவரைப் போல விமர்சிக்கப்பட்டவர் தமிழக அரசியலில் யாரும் இல்லை. நீண்ட காலம் அரசியலில் இருப்பது என்பது அவருக்கு மிகப்பெரிய சிக்கலைத் தான் கொடுத்தது. பல பிரச்னைகளில் அவர் மீது ஆத்திரங்களை வாரி கொட்டுகின்றனர். ஆனாலும் அவர் இன்னும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.  இது போன்ற விமர்சனங்களின் போதெல்லாம், 'எல்லா பாதைகளிலும் குளிர் சோலைகளும் இருக்கும். சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டதும் பதுங்கி ஓடுபவன் நான் அல்ல' என விளக்கம் கொடுப்பார்.

b5_13180.jpg

13 தேர்தல்களில் தொடர் வெற்றி

கருணாநிதி இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளார். எதிலும் அவர் தோற்றதில்லை. 1957-ம் ஆண்டு முதன்முதலில் கருணாநிதி போட்டியிட்டது குளித்தலை தொகுதியில். அன்று நடந்த தேர்தலில் அவருடன் களம் கண்டவர்கள் யாரும் இன்றைய அரசியல் களத்தில் இவரளவு செயல்பாட்டில் இல்லை. இவர் மட்டுமே இருக்கிறார். இவரை விட ஒன்றரை ஆண்டு முதிர்ந்தவர் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன். 1957-ம் ஆண்டு கருணாநிதியோடு தேர்தலை சந்தித்தவர் அன்பழகன் தான். கடந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அன்பழகன் ஒதுங்கி கொண்டார். 93-வது வயதில் இப்போதும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் கருணாநிதி.

1957-ம் ஆண்டு தனது முதல் தேர்தலை சந்தித்த போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 வயது கூட இல்லை. ஜெயலலிதாவுக்கு 21 வயது இருக்கும்போது கருணாநிதி, தி.மு.க.வின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி விட்டார். ஜெயலலிதா முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்றபோது கருணாநிதி இருமுறை முதல்வராகி இருந்தார். கடந்த தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு நேரெதிராய் முதல்வர் வேட்பாளராய் களம் கண்டிருக்கிறார்.

b6_13356.jpg

1971-ல் பெற்ற பிரம்மாண்ட வெற்றி

32 வயதில் எம்.எல்.ஏ., 44-வது வயதில் முதல்வர், கட்சியின் தலைவர், போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் இடைவிடாத வெற்றி, 93 வயதிலும் எம்.எல்.ஏ. என இவர் அடைந்த உயரங்கள் பல. இதற்குப் பின்னால் கருணாநிதியின் கால நேரம் பார்க்காத உழைப்பு இருக்கிறது.

தனது பதின் வயதின் துவக்கத்தில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அந்த வயதில் 'மாணவ நேசன்' என்ற துண்டு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில்  மாணவர்களை திரட்டினார் கருணாநிதி. மிகவும் இளம் தலைவராக இருந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பின்னர் தனது 44-வது வயதில் முதல்வரானார். கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அண்ணா மறைவுக்கு பிறகு 1971-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தது தி.மு.க. ராஜாஜி, காமராஜர் ஆகியோர் ஓரணியில் நிற்க... அவர்களை எதிர்த்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியை பெற்றார். 184 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார் கருணாநிதி. தனிப்பெரும் கட்சி 184 இடங்களில் வென்றது அப்போது தான். அந்த வெற்றியை அதன் பின்னர் யாராலும் பெற முடியவில்லை. அதன் பின்னர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியதால், 13 ஆண்டுகள் ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்திருந்தது தி.மு.க. அப்போது கூட கருணாநிதி தேர்தலில் தோல்வியை தழுவியதில்லை. மாணவ நேசன் கையெழுத்துப் பிரதியை நடத்தியவர், இப்போது கட்சியின் தலைவர், எம்.எல்.ஏ. ஆகிய பொறுப்புகளோடு, முரசொலி பத்திரிகையின் ஆசியராகவும் இருந்து வருகிறார்.

வெற்றிகளை மட்டுமல்ல... பழிகளும் ஏராளம்...

கருணாநிதி ஏற்றங்களை மட்டுமல்ல. வீழ்ச்சியையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தவர். தமிழகத்துக்கு மதுவிலக்கு அகற்றும் யோசனையை கொண்டு வந்தது, ஈழ விவகாரத்தில் இவரது செயல்பாடு, 2 ஜி ஊழல் என இவர் மீதான விமர்சனங்கள் எண்ணற்றவை. அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடித்தவர் என்பதால் ஏராளமான பழிகளை இவர் எதிர்கொண்டிருக்கிறார். எதிர்கொண்டு வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., வைகோ, இப்போது அழகிரி என இவருக்கு ஏராளமான சிக்கல் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, மாநில சுயாட்சிக் கொள்கை என தி.மு.க. கடைபிடித்த கொள்கைகளில் இருந்து இவர் விலகி வந்தது கடுமையாகவே கேள்விக்குள்ளாப்பட்டது. முக்கியமாக ஈழ விவகாரத்தில் தி.மு.க.வின் செயல்பாடு, கருணாநிதி மீது இன்றைய தலைமுறையினரை ஆத்திரப்பட வைத்தது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் தோல்வியை தழுவாமல் பயணம் செய்து விட்டார் கருணாநிதி. இந்த 60 ஆண்டுகளில் அவர் முதல்வராக இருந்தது வெறும் 18 ஆண்டுகள் தான். ஆனால் எப்போதும் இவரே கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.

b4_13521.jpg

தளர்ந்த உடல்... தளராத தலைவர் !

கருணாநிதி மீதான இந்த விமர்சனங்களின் போது, தி.மு.க. தரப்பில் தரப்படும் விளக்கம் 'காய்த்த மரங்களே கல்லடி படுகின்றன' என்பார்கள். உண்மையில் காய்த்த மரம் தான் கருணாநிதி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 60 ஆண்டுகளைக் கடந்த அரசியல் அனுபவம், 48 ஆண்டுகளாக அரசியல் கட்சியின் தலைவர் என இவர் எட்டிய உயரம் நிச்சயம் மிகப்பெரிய சாதனை தான்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணலை நடத்தினார் தி.மு.க. கட்சியின் தலைவர் கருணாநிதி. அவரோடு பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். ஆயிரக்கணக்கானோரை நேர்காணல் செய்த கருணாநிதி, நேர்காணலை நடத்தியவர்களில் ஸ்டாலினையும், துரைமுருகனையும் கூட நேர்காணல் செய்தார். கட்சியின் அடுத்த தலைவர் என சொல்லப்பட்ட ஸ்டாலினை கருணாநிதி நேர்முகத்தேர்வு செய்தது வெறும் செய்தி அல்ல. நான் இன்னும் தளர்ந்து விடவில்லை என்பதை சொல்வதாகத்தான் அது இருந்தது. வயது முதிர்ந்து விட்டாலும், இன்னும் தளராமல் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இப்போது உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எந்த இளம் தலைவர்களுக்கும் இவரது ஆற்றலும், செல்வாக்கும் இல்லை. புதைகுழிகள் நிறைந்த பாதை என சொல்லப்படும் அரசியல் பாதையில் இத்தனை நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது என்ன சாதாரணா விஷயமா என்ன?

http://www.vikatan.com/news/coverstory/73906-political-journey-of-dmk-chief-karunanidhi.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.