Jump to content

இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள்


Recommended Posts

இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள்

tn-flags-364a94491b8aae4f247bc17f60fbe83d39de1145.jpg

 

அனை­வரும் எதிர்­பார்த்­த­ப­டி­யேதான் மூன்று சட்டப் பேரவைத் தொகு­தி­க­ளுக்­காக இடம் பெற்ற இடைத்­தேர்தல் முடி­வு­களும் அமைந்­தி­ருந்­தன. ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு எது­வு­மில்லை. மூன்று தொகு­தி­களில் ஒன்­றி­லா­வது தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க. அல்­லது விஜ­ய­காந்தின் தே.மு.தி.க. ஆகிய கட்­சி­களில் ஒன்று வெற்­றி­பெற்­றி­ருந்தால் அதுதான் ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரிய விட­ய­மாகும்.

தஞ்­சாவூர், அர­வக்­கு­றிச்சி மற்றும் திருப்­ப­ரங்­குன்றம் ஆகிய மூன்று தொகு­தி­க­ளுக்கும் நடை­பெற்ற இந்த இடைத்­தேர்­தலில் ஆளுங்­கட்­சி­யான அ.தி.மு.க. வெற்றி பெற்­றது. அதே­வேளை அந்தக் கட்­சிக்கு அடுத்­த­ப­டி­யாக பிர­தான எதிர்க்­கட்­சி­யான தி.மு.க. அதிக வாக்­கு­களைப் பெற்­றது. இந்த இடைத்­தேர்­தலில் போட்­டி­யிட்ட ஏனைய கட்­சிகள் அனைத்தும் படு­தோல்­வி­ய­டைந்­தன.

அது­மட்­டு­மின்றி அந்தக் கட்­சிகள் தமது கட்­டுப்­ப­ணத்­தையும் இழந்­தன. இதில் கவ­னிக்க வேண்­டிய ஒரு முக்­கிய விடயம் என்­ன­வென்றால், கடந்­த­கால தேர்­தல்­களில் மூன்றாம் இடத்தைப் பிடித்­து­வந்த விஜ­ய­காந்தின் தே.மு.தி.க.கட்சி இம்­முறை நான்காம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­துதான்! அதே­வேளை பலரும் எதிர்­பா­ராத வகையில் தே.மு.தி.கவை பின்­தள்ளி பா.ஜ.க. மூன்றாம் இடத்தைக் கைப்­பற்­றி­யுள்­ளது. தே.மு.தி.க. நான்காம் இடத்­துக்கு சென்­று­விட்­டது.

தமி­ழ­கத்தில் வேக­மாக வளர்ச்சி பெற்ற ஒரு கட்­சி­யாக தே.மு.திக. இருந்­தது. 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அ.தி.மு.க. அணியில் சேர்ந்து போட்­டி­யிட்ட தே.மு.தி.க.வுக்கு 29 ஆச­னங்கள் கிடைத்­தன. அதன் மூலம் தி.மு.க.வை பின்­தள்ளி தே.மு.தி.க. இரண்­டா­வது இடத்­துக்கு வந்­த­துடன், அக்­கட்­சியின் தலைவர் விஜ­ய­காந்­துக்கு சட்டப் பேர­வையின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியும் கிடைத்­தது.

அதன் பின்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பா.ஜ.க. கூட்­ட­ணியில் இணைந்து போட்­டி­யிட்ட தே.மு.தி.க ஒரு தொகு­தி­யி­லா­வது வெற்­றி­பெ­ற­வில்லை, படு­தோல்­வி­ய­டைந்­தது.

இந்த நிலையில், இவ்­வ­ருடம் தமி­ழக சட்­டப்­பே­ர­வைக்­காக நடை­பெற்ற தேர்­தலில் மக்கள் நலக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து தே.மு.தி.க. போட்­டி­யிட்­டது. எனினும் எந்­த­வொரு தொகு­தி­யிலும் வெற்­றி­பெ­ற­வில்லை.

இந்த நிலை­யில்தான் கடந்த வாரம் மூன்று தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­தல்கள் நடை­பெற்­றன. மூன்று தொகு­தி­க­ளிலும் படு­தோல்­வி­ய­டைந்­தது. இது அந்தக் கட்­சிக்கு பெரும் பின்­ன­டை­வாகும்.

இந்த இடைத்­தேர்­தலில் மூன்று தொகு­தி­க­ளிலும் (தஞ்­சாவூர், அர­வக்­கு­றிச்சி, திருப்­ப­ரங்­குன்றம்) வெற்றி பெற்று ஆளும் அ.தி.மு.க. தமது பலத்தை நிரூ­பித்­துள்­ளது. திருப்­ப­ரங்­குன்­றத்தில் அ.தி.மு.க. வேட்­பாளர் ஏ.கே.போஸ் 42,670 வாக்­கு­க­ளி­னாலும், தஞ்­சா­வூரில் அ.தி.மு.க. வேட்­பா­ள­ரான ரங்­க­சாமி 26,874 வாக்­குகள் வித்­தி­யா­சத்­திலும் அர­வக்­கு­றிச்­சியில் அ.தி.மு.க. வேட்­பா­ள­ரான செந்தில் பாலாஜி 23,673 வாக்­கு­க­ளி­னாலும் வெற்றி பெற்­றனர். இந்த மூன்று தொகு­தி­க­ளிலும் இரண்டாம் இடங்­களை தி.மு.க. வேட்­பா­ளர்கள் பெற்­றனர்.

தி.மு.க. இந்தத் தொகு­தி­களில் வெற்றி பெறு­வ­தற்கும் கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­டி­ருந்­த­போதும் அந்தக் கட்­சி­யினால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. இதற்கு பல்­வேறு கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன. என்­றாலும், அந்தக் கட்­சிக்கு கடந்த முறை கிடைத்த வாக்­கு­களின் எண்­ணிக்­கை­யை­விட இம்­முறை அதி­க­மா­கவே கிடைத்­துள்­ளமை அந்தக் கட்­சிக்கு ஆறுதல் தரும் ஒரு விட­ய­மாகும்.

எவ்­வா­றெ­னினும் இடைத்­தேர்­தல்­களில் பொது­வாக ஆளும் கட்சி வேட்­பா­ளர்­களே வெற்­றி­பெ­று­வது வழக்­க­மாகும். இடைத்­தேர்தல் நடை­பெறும் தொகு­தி­களில் முழு­மை­யாக அரசு இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­துதல், அபி­வி­ருத்திப் பணி­களை அதி­க­மாக முன்­னெ­டுப்­பது, தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொ­டுத்தல், இல­வ­சங்­களை வழங்­குதல் என பல்­வேறு வகை­யிலும் செல்­வாக்கைச் செலுத்தி வெற்றி பெறு­வது வழக்கம். அதே­வேளை, முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா சுக­யீ­ன­முற்­றுள்ள நிலையில், வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பதும் மக்கள் மத்­தியில் ஒரு அனு­தாப அலையை ஏற்­ப­டுத்தி வெற்­றி­பெறச் செய்­துள்­ளது.

இந்த இடைத்­தேர்­தல்­களில் போட்­டி­யிட்ட மற்­று­மொரு தமி­ழக கட்­சி­யான பாட்­டாளி மக்கள் கட்சி (பா.ம.க) க்கும் ஒரு பெரிய தோல்வி கிடைத்­துள்­ளது. கடந்த சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் பா.ம.க. இளைஞர் அணித் தலை­வ­ரான அன்­பு­மணி இராமதாஸ் முதல்வர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டு, அவ­ரது தலை­மையில் அந்தக் கட்சி தனித்து சகல தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்­டது. ஆனால், எந்­த­வொரு தொகு­தி­யிலும் அந்தக் கட்சி வெற்றி பெற­வில்லை.

இந்த நிலையில், இடைத்­தேர்­தல்களிலும் மூன்று தொகு­தி­யிலும் தமது கட்சி வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கி­யது. திருப்­ப­ரங்­குன்றம் தொகு­தியில் அக்­கட்­சியின் சின்­ன­மான 'மாம்­பழம்' ஒதுக்­கப்­ப­டா­ததால் வேட்­பு­ம­னுவை வாபஸ் பெற்­றது. ஏனைய இரண்டு தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்­டது. இரண்டு தொகு­தி­க­ளிலும் படு­தோல்­வி­ய­டைந்­த­துடன், கட்­டுப்­ப­ணத்­தையும் இழந்­தது. பா.ம.க.வுக்கு அர­வக்­கு­றிச்­சியில் ஆறா­வது இடமும், தஞ்­சா­வூரில் ஏழா­வது இடமும் கிடைத்­தது. இது அந்தக் கட்­சிக்கு மக்­க­ளிடம் செல்­வாக்கு குறைந்து வரு­வ­தையே எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­தது. 'தமது கட்­சியே திரா­விடக் கட்­சி­க­ளுக்­கான ஒரே மாற்றுக் கட்சி' என்று பேசி­வரும் பா.ம.க. நிறு­வுனர் இராம­தா­ஸுக்கு இது ஒரு பெரும் இடி­யாகும். அது­மட்­டு­மின்றி, தமி­ழ­கத்தின் அடுத்த சட்டப் பேரவைத் தேர்­தலில் தமது கட்­சியே ஆட்­சியைக் கைப்­பற்றும் என்றும், தானே முதல்வர் என்றும் பேசி வரு­பவர் நாம் தமிழர் கட்­சியின் தலை­வரும் திரைப்­பட இயக்­கு­நரும், நடி­க­ரு­மான சீமான்.

கடந்த சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் தமி­ழ­கத்தின் சகல தொகு­தி­க­ளிலும் இவ­ரது கட்சி போட்­டி­யிட்­டது. ஒரு தொகு­தி­யி­லா­வது வெற்­றி­பெ­ற­வில்லை. ஆனாலும், நடை­பெற்று முடிந்த இடைத்­தேர்­தலில் மூன்று தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்டார். ஆனால், ஒரு தொகு­தி­யிலும் வெற்­றி­பெ­ற­வில்லை.

தற்­போது தமி­ழ­கத்­தி­லுள்ள பெரும்­பா­லான சிறிய மற்றும் புதிய கட்­சிகள் தனித்து போட்­டி­யிட்டு, தமி­ழக ஆட்­சியைக் கைப்­பற்றி முதல்­வ­ராகும் ‘கன­வு’­க­ளி­லேயே இருக்­கின்­றன. பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, வாழ்­வு­ரி­மைக்­கட்சி போன்­ற­வை­யெல்லாம் இதே திட்­டத்­து­ட­னேயே செயல்­ப­டு­கின்­றன.

இந்தக் கட்­சிகள் வேறு கட்­சி­க­ளு­டனோ அல்­லது பெரிய ஆட்­சி­க­ளு­டனோ கூட்டுச் சேர்­வ­தில்லை. கூட்டுச் சேர்ந்தால் அந்த கட்­சி­க­ளுக்கு 'ஆட்­சியில் (?) பங்கு' கொடுக்க வேண்டும் என்ற பயம் தான் காரணம்! பெரிய கட்­சி­க­ளெல்லாம் கூட்­டணி வைத்­துக்­கொள்ளும் நிலையில், இந்தக் கட்­சிகள் கூட்­டணி வைத்­துக்­கொள்­ளாமல் தனித்து போட்­டி­யிட்டு ஆட்­சியைக் கைப்­பற்றப் பார்க்­கின்­றன.

தமது பலம், மக்கள் சக்தி, கொள்கை என்­ப­வற்றைப் பற்றி ஆராய்ந்து பார்க்­காமல் இந்தக் கட்­சி­க­ளெல்லாம் கன­வு­ல­கி­லேயே மிதக்­கின்­றன.

இந்தச் சிறிய மற்றும் புதிய கட்­சிகள் பிரிந்து தனித்­த­னியே போட்­டி­யி­டு­வதால், அதுவே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற கட்­சி­க­ளுக்கு வாய்ப்­பா­கவும் அதே­வேளை அந்தக் கட்­சி­களை வீழ்த்த முடி­யா­மலும் இருக்­கின்­றன. தவிர, இவ்­வா­றான கட்­சிகள் பிரிந்து தனித்­த­னியே போட்­டி­யி­டு­வ­தையே பெரிய கட்­சி­களும் விரும்­பு­கின்­றன.

கடந்த சட்டப் பேரவைத் தேர்­தலில் ஒரு புதிய கூட்­டணி உரு­வா­கி­யது. ம.தி.மு.க. பொதுச்­செ­ய­லாளர் வைகோவை ஒருங்­கி­ணைப்­பா­ள­ராகக் கொண்டு 'மக்கள் நலக் கூட்­ட­மைப்பு' உரு­வா­னது. இந்தக் கூட்­ட­மைப்பு உரு­வா­னது. இந்தக் கூட்­ட­மைப்பில் ம.தி.மு.க., இந்­திய கம்­யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கம்­யூனிஸ்ட் கட்சி, திரு­மா­வ­ள­வனின் விடு­தலை சிறுத்­தைகள் கட்சி, விஜ­ய­காந்­தியின் தே.மு.தி.க., ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் இணைந்து செயற்­பட்­டன.

ஒரு தூர­நோக்கு இல்­லாத, ஒரு பொதுக்­கொள்கை இல்­லாத, தேர்­த­லுக்­கான ஒரு சந்­தர்ப்­ப­வாத கூட்­ட­ணி­யாக அது அமைந்­தி­ருந்­தது. அதிலும், அக்­கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான வைகோ தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­ப­வ­ரா­கவும், ஏனைய பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களின் கருத்­துக்­களை உதா­சீனம் செய்­ப­வ­ரா­க­வுமே இருந்தார்.

மட்­டு­மின்றி, தி.மு.க. வை வெற்­றி­பெ­ற­வி­டா­மலும் ஆட்­சியைக் கைப்­பற்ற விடாமல் தடுப்­ப­தி­லுமே அவர் கவனம் செலுத்­தினார். தி.மு.க. மீதுள்ள தனிப்­பட்ட வன்மம், பகை­மைக்கு பழி­வாங்கும் ஒரு சக்­தி­யாக மக்கள் நலக் கூட்­ட­மைப்பை அவர் பயன்­ப­டுத்­தினார் என்று பலரும் தெரி­வித்­தனர்.

அந்தக் காலப்­ப­கு­தியில் ஜெய­ல­லிதா மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்றி விடக்­கூ­டாது, ஊழல் மற்றும் நிர்­வாகம் செயற்­ப­டா­மைக்கு எதி­ராக தேர்­தலில் அனைத்துக் கட்­சி­களும் ஒன்று சேர்ந்து ஜெய­ல­லி­தாவை தோற்­க­டிக்க வேண்டும் என்ற கோஷம் முன்­வைக்­கப்­பட்­டது. அதனை நிறை­வேற்ற பல்­வேறு கட்­சி­களும் இணைக்கம் தெரி­வித்­தி­ருந்­தன. ஆனால் அதனை மக்கள் நல கூட்­ட­டைப்பு பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை.

 இதன் கார­ண­மா­கவே ஜெய­ல­லிதா மீண்டும் வெற்றி பெற்­ற­துடன், சட்டப் பேரவைத் தேர்­தலில் அனைத்துத் தொகு­தி­யிலும் போட்­டி­யிட்ட மக்கள் நலக் கூட்­ட­மைப்பும் தோல்­வி­ய­டைந்­தது. தற்­போது அந்தக் கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­பட்டு பல கட்­சிகள் வெளி­யே­றி­விட்­டன. அதே­வேளை வைகோ அவ்­வப்­போது அந்த கூட்­ட­மைப்பு பற்­றியும், அதன் தலை­வர்கள் பற்­றியும் சர்ச்­சைக்­கு­ரிய பல கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கிறார்.

'தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வை சேர­வி­டாமல் தடுத்­ததன் மூலம், தி.மு.க.வை. ஆட்­சிக்கு வர­மு­டி­யாமல் செய்­தது, மக்கள் நலக் கூட்­ட­மைப்பின் முதல்வர் வேட்­பா­ள­ராக விஜ­ய­காந்தை அறி­வித்­தது தவறு' போன்­றவை வைககோ வெளி­யிட்ட சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களில் ஒரு சில­வாகும். இது அந்தக் கூட்­டணி தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லேயே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஆராய்ந்து பார்க்கும் போதும், நடந்து முடிந்த மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலும் திராவிடக் கட்சிகளான தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் தமிழகத்திலிருந்து எளிதில் அகற்றிவிட முடியாது என்பது தெளிவாகின்றது. திராவிடக் கட்சிகளின் துணையின்றி எவரும் ஆட்சியமைக்கவும் முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது.

இதேவேளை, புதுச்சேரியில் நெல்லித் தோப்பு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும், மாநில முதலமைச்சருமான வி.நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஓம் சக்தி சேகரை தோற்கடித்தே நாராயண சாமி வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதுடன், முதலமைச்சராக வி.நாராயணசாமி இருந்து வருகிறார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் நீடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.