Jump to content

புத்தனின் ஆக்கிரமிப்பு !? - என்.சரவணன்


Recommended Posts

37de589a14ac9063a4e1ad4d2815687c.jpg
இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள்.
  • புத்தர் சிலை,
  • அரச மரம்,
  • புத்த விகாரை,
  • காவிச் சீருடை.
இந்த நான்கும் அடிப்படையில் ஆக்கிரமிப்புச சின்னங்களாக ஆகியிருப்பது தான் அதன் காரணம். இவை அரச இயந்திரத்தின் ஆசியுடனும், அரசியலமைப்பின் பாதுகாப்புடனும் ஏனைய இன மதத்தவர் மீது செலுத்திவரும் பண்பாட்டு ஆதிக்கம் தான்.
 
ஏனைய பண்பாடுகளை நசுக்குவதற்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கு உலகளவில் வளர்ந்துவிட்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக வகுப்புவாதம் வளர்ந்த நம் நாடுமட்டும்  இதற்கு விதிவிலக்கா என்ன.
 
நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதில் சகல தரப்பும், சகல முனைகளிலும் தன்னியல்பாக இந்த ஆயுதங்களைப் பலப்படுத்தி வருகிறது. அரச மரங்களை நடுவது அல்லது வளர்ந்த மரங்களுக்கு அடியில் பௌத்த வணக்கஸ்தளங்களை உருவாக்குவது, புத்தர் சிலைகளை அமைப்பது, புத்த விகாரைகளாக பெருப்பிப்பது, பொலிசாரையும், படையினரையும் மிஞ்சிய அதிகாரங்களைக் கொண்ட அராஜக சர்வாதிகாரிகளாக ஆக்கப்பட்டிருக்கும் காவிச் சீருடையணிந்த பௌத்த பிக்குகள் ஆகிய அம்சங்களே இன்றைய இந்தப் பண்பாட்டு ஆதிக்க ஆயுதங்கள்.
 
அரசியலமைப்பாலும், அரச இயந்திரத்தாலும் பேணிப், பாதுகாத்து, வளர்த்து வந்த இந்த அம்சங்கள் இன்று அதே அரச படையினரால் கூட கட்டுபடுத்த முடியாத நிலையை எட்டியிருப்பது எதனால்?
 
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஒரு அப்பட்டமான உதாரணமாக உங்களுக்குத் தருகிறேன்.
 
“ஸ்ரீ  பாத” பீதி
சமீபகாலமாக ஸ்ரீ பாதவை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற வதந்தியைப் பரப்பி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன இனவாத சக்திகள். இன்று அவர்களுக்கு இருக்கும் அபரிதமான ஊடக, சமூக ஊடக செல்வாக்கால் இந்த பிரச்சாரத்தில் அவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் பரப்பி வரும் அத்தனை வதந்திகளும் எத்தனை பொய்யானவை என்று மறு பிரச்சாரம் செய்வதற்கு முஸ்லிம்கள் தரப்பில் போதுமான பலம் இருக்கவில்லை என்றே கூறவேண்டும். தவ்ஜீஜ் ஜமாத் காரர்களும் இதனை உணர்ச்சிகரமாக எதிர்கொண்டு சிங்கள இனவாத சக்திகளை உசுப்பேத்தி விட்டார்கள் என்றால் அது மிகையில்லை.
 
14907666_161818567615959_158164026150113
 
14938245_162749654189517_777050486274619
 
நவம்பர் 5 அன்று கொழும்பிலிருந்து சிங்கக் கொடியையும், பௌத்த கொடியையும் தாங்கிய பல வாகனங்களில் ஒரு பெரும் குழு சென்றது இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் சுரேஷ் பிரியசத் கடந்த 15ஆம் திகதி இனவாத குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பவர். சமீப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பல சண்டியர்களையும், சாதாரண பௌத்தர்களையும் திரட்டிக்கொண்டு பல கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தவர். சிங்கள சமூக ஊடகங்களால் பெரும் ஹீரோவாக ஆக்கப்பட்டிருப்பவர். இன்றைய நிலையில் பொதுபல சேனா உள்ளிட்ட பல சிங்கள பேரனவாத அமைப்புகள் தம்மை தூசு தட்டி எழுப்புவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த கைதை பயன்படுத்திவருவதை அவதானித்து இருப்பீர்கள்.
15085498_10210221464887331_1244519064986
83 இல் தமிழர்களுக்கு அடித்ததைப் போலல்ல... நாளை, நாளைன்றைக்கே முஸ்லிம்களை விரட்டி விரட்டி அடிப்போம். தமிழர்களின் கடைகளை கொளுத்தியதைப் போல முஸ்லிம்களின் கடைகள் அனைத்தையும் கொளுத்துவோம்... "பொருட்களை" இப்போதே தயார் நிலையில் தான் வைத்திருக்கிறோம். முஸ்லிம்கள் சிங்களவர்களை சீண்டிக் குழப்பிவிட்டார்கள்.
-ப்ரியசாதின் முகநூல் பதிவு-
பிரியசாத் தலைமையிலான குழு சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் இதுவரை ஒரு பௌத்தச் சிலையும் கிடையாது என்றும். அங்கெல்லாம் பௌத்த சிலைகளை வைத்தால் தான் முஸ்லிம்கள் அங்கு நெருங்க மாட்டார்கள் என்றும் கூறி, அங்கு ஒரு பௌத்த சிலையை நிறுவி உடனடியாகவே சிறிய வணக்கஸ்தளத்தைக் கட்டிமுடித்தனர். இப்படியான பணிகளுக்கு பல நூற்றுக்கணக்கான சிலைகள் ஜப்பானில் இருந்தும், கொரியாவிலிருந்தும் உதவியாக கிடைத்ததாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
 
இதன் போது தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. “முஸ்லிம்களுக்கு அந்நிய மதச் சின்னங்களும், சிலைகளும் ஹராம் (தவிர்க்கப்பட்டது) எனவே நாங்கள் இந்த இடத்தில் இந்த முஸ்லிம் சிலையை நிறுவினோம். அவர்களுக்கு “ஹராம்” ஆன இந்த இடம் எப்படி அவர்களுக்கு இனி புனிதமாக ஆகப் போகிறது பார்ப்போம்.” என்றார் பிரியசாத்.
 

15ஆம் திகதி ஞானசார தேரர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அவரை வரவேற்பதற்காக பெரும் குழுவொன்று விமான நிலையம் சென்றிருந்த வேளை, அங்கு வைத்து அவர் ஆற்றிய உரையில் ஆக்ரோஷமான கர்ஜித்தார். அன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த “வீரன்” பிரசாத்தை சந்திக்கப் போவோம் என்ன நடக்கிறது இங்கு என்று அறிவோம் வாருங்கள் என்று அழைத்துக் சென்றார். அங்கு வைத்து ஆற்றிய உரை பயங்கரமானது. நேரடி கொலை அச்சுறுத்தலை ஞானசார அங்கு வெளியிட்டார்.
 
gnanasara.jpg
“...எங்கள் இளைஞர்களின் பொறுமையை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் சொல்லி வைக்கின்றோம். வடக்கிலும் கொழும்பிலும் சிங்களவர்களைத தாக்குகின்றனர். இந்த அரசாங்கம் தாக்குபவர்களை பாதுகாக்கின்றது. அதை விமர்சிக்கும் எங்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது. நாளைக்குள் இந்த நாயை (அப்துல் ராசிக்) கைது செய்யாவிட்டால் நுனியிலிருந்து பிடுங்க வேண்டும். (பலத்த ஆதரவு கோஷம் எழுகிறது). இதற்காக எமது தரப்பில் 100 அல்லது 200 பேர் சாக நேரிடும். சாவோம்! (ஓம் சாவோம்! என்கிற கூச்சல்) படுத்துக்கொண்டிருக்கின்ற மகாநாயக்கர்களை நாங்கள் கேட்க வேண்டும் எங்கள் மரணத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்களா அல்லது நீங்கள் இதனை தீர்ப்பதற்கு முன்வரப்போகிறீர்களா. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செய்தாகிவிட்டது. இனி நாங்களே கற்களையும், கம்பிகளையும், பொல்லுகளையும் எடுத்துக் கொண்டு இரத்தத்தால் இந்தப் பிரச்சினையை ... (“தீர்ப்போம்!” என்று வசனத்தை முடிக்கிறது கூட்டம்). இது எங்கள் வெற்றுக் கூச்சலல்ல.”
 
இந்தப் பாரதூரமான உரைக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத நீதித்துறை அடுத்த நாள் ஞானசார மிரட்டியதற்கு அடிபணிந்து அப்துல் ராசிக்கை கைது செய்தது.
 
இப்போது புதிய “சாசன பாதுகாப்பு சபை” (சாசனாரக்ஸ சபாவ) என்கிற அமைப்பைத் தொடங்கி அதன் கீழ் சிங்கள பௌத்த அமைப்புகளை அணிதிரட்டத் தொடங்கியிருக்கிறது.
 
அளுத்கம கலவரத்தைத் தூண்டியதற்காக இன்னமும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. வட்டறக்க விஜித தேரோவின் கூட்டத்தின் போது அதை பலாத்தகாரமாக குழப்பி மரண அச்சுறுத்தல் விடுத்த போதும் அங்கு பொலிசார் இருந்தார்கள். வட்ட்றக்க விஜித தேரோவைத் தேடி அமைச்சு காரியலாயத்துக்குள் பொலிசாரையும் மீறி சண்டித்தனமாக புகுந்து தடுத்தல் நடத்திவிட்டு போலீசாரோடு வம்புக்கு போனார்கள். பொலிசார் வேடிக்கை பார்த்தார்கள். அதன் பின்னர் அவர்கள் நடத்திய அடாவடித்தன ஊர்வலங்கள், கூட்டங்கள், மிரட்டல்கள் போன்றவற்றின் போதும் அருகில் பொலிசார் இருந்தார்கள். கண்டி தலதா மாளிகைக்கும் பொலிசாரையும் மீறி உட்புகுந்து சிங்கக் கொடியை ஏற்றினார்கள். அங்கும் பொலிசார் கோமாளிகளாக்கப்பட்டார்கள். கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்துக்குள்ளேயே அவரை அசிங்கமாகத் திட்டி மிரட்டிவிட்டு வந்தார் சுமண தேரர். அதுவும் பொலிசார் முன்னிலையில் தான் நடந்தது.
 
 
15027399_707115219443164_717969991740239
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண தேரர் பலாத்கார சிங்கள குடியேற்றங்களை நடத்தி வருவதும், அதை சட்ட ரீதியில் அணுகும் சிவில் அதிகாரிகள், பொலிசார் போன்றோரை தாக்க முற்படுவதும், தூசன வார்த்தைகளை பிரயோகித்து சண்டித்தனம் செய்வதும், கொலை அச்சுறுத்தல் விடுப்பதும் நிகழ்கிறது. பொலிசார் கையறு நிலையில் இருக்கின்றனர். சிவில் உத்தியோகத்தர்களின் கடமையை செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக சிவில் அதிகாரிகளின் கடமைக்கு குந்தகம் விளைவிக்கும் பிக்குமாருக்கு பாதுகாப்பு கொடுகிறார்கள். சிவில் அதிகாரிகள் பொலிசாரின் பாதுகாப்பு இன்றி கடமையை நிறைவேற்ற முடியாமல், அவமானப்பட்டு, சுயமரியாதை இழந்து தவிக்கிறார்கள்.
 

இலங்கையில் ஏனைய மதத் தலைவர்களால் இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. அதன் விளைவை நினைத்துப் பார்க்கவே முடியாது.
 
சிலைகளின் அரசியல்
சிலைகளைக் கொண்டு போய்  தான் தோன்றித்தனமாக நினைத்த இடங்களில் நிறுவது ஒரு பௌத்த வேலைத்திட்டமாக ஆகியிருக்கிறது. ஆனால் புத்தர் தனக்கு சிலையமைப்பதோ, வணங்குவதையோ எங்கும் குறிப்பிட்டது கிடையாது. “வெறுப்பைத் தரும் இந்த உடலைக் காண்பதில் என்ன இன்பம்” (கிந்தே இமினா பூத்திகாயென திட்டென” என்று பாலியில்) என்று கேட்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் புத்த சிலைகளை அமைப்பது அவருக்கு செய்யும் அவமரியாதை என்று நினைத்தார்கள். அதற்குப் பதிலாக தர்மசக்கரம், தூபி போன்றவற்றை பயன்படுத்தினார்கள். அசோக சக்கரவர்த்தி பௌத்த சிலைகளை உருவாக்கினார் என்றும், பௌத்தத்தைப் பரப்ப வந்த அவரின் இரட்டைப் பிள்ளைகளான மகிந்த, சங்கமித்த (இருவரும் பௌத்த துறவிகள்) ஆகியோரில் முதலில் இலங்கை வந்தவர் மகிந்த. மகிந்த தன்னுடன் 18 தேர்ந்த கலைஞர்களை அழைத்து வந்தார் என்றும் அவர்கள் இலங்கையில் புத்த சிலைகளை உருவாக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் பௌத்தர்களின் “புனித” வரலாற்று நூலான மகாவம்ச கதைகளின் படி துட்டகைமுனு உள்ளிட்ட பல அரசர்கள் புத்தர் சிலைகளை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.
 
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அரச மரத்தின் கிளையை அசோக சக்கரவர்த்திக்கு ஊடாக சங்கமித்த இலங்கைக்கு கொண்டுவந்து அனுராதபுரத்தில் நட்ட வெள்ளரசு மரம் இன்றும் வழிபடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அந்த மரம் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கிளையே புத்தகயாவில் வணங்கப்படுகிறது. 
 
பௌத்த நாடுகள் புத்தர் சிலைகளை இன்னொரு நாட்டுக்கு பரிசுப் பொருளாக கொடுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு. இன்று அதன் நீட்சியானது பல நூற்றுக்கணக்கான சிலைகளை பரிசாகக் கொடுக்கும் வழக்கம் வளர்ந்துள்ளது. சீனா, ஜப்பான், தாய்லாந்து, பர்மா, கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு மாத்திரம் இவ்வாறு வருடமொன்றுக்கு ஆயிரக்கணக்கான சிலைகள் பரிசாக வந்து சேர்கின்றன. அவற்றிற்கு புனித மரியாதை கொடுத்து பக்குவமாக பல்வேறு இடங்களில் நிறுவும் போக்கு இப்போது வளர்ந்துள்ளது.
 
பௌத்தம் ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை அறநெறி. அப்படியிருக்கையில் பௌத்தத்தின் போதனையை ஆராதிப்பற்குப் பதில், பௌத்த சிலைகள் ஆராதிக்கப்படுகின்றன.
 
z_p11-thailand.jpg
இன்றைய நிலையில் இலங்கையில் பௌத்த சிலைகள் வெறித்தனமான ஆக்கிரமிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எழுகின்ற சர்ச்சைகளின் காரணமாக இரகசியமாக சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் பல சமீபகாலமாக செய்திகளாக பதிவாகி வருகின்றன. சமீபத்தில் கூட கொழும்பு கோட்டை பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலையை ஒரு சர்ச்சைக்குள்ளாக்கி மீண்டும் பெரும் எடுப்போடு அந்த சிலைகள் புனரைக்கப்பட்டது. ஏனைய சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரத்தும் இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
 
கலாச்சார ஆக்கிரமிப்புக்கான ஆயுதங்களாக ஆகியிருக்கும் புத்தர் சிலைகளை பௌத்தர்கள் அல்லாதோர் தமக்கெதிரான பண்பாட்டு ஆயுதங்களாகவே கருதுகின்றனர். கருணையும், அகிம்சையும் வடிவான புத்தரின் சிலை வெறுப்பூட்டும் பூதமாகவே ஆக்கப்பட்டுள்ளது.
 
முதலில் அரச மரம் பின்னர் அதில் புத்தர் சிலை (அரச மரம் கட்டாயமில்லை), அதனைத் தொடர்ந்து விகாரை பின்னர் அதனைப் பராமரிக்க பிக்குகளும் அதற்கான உட்கட்டமைப்புகளும் சேர்ந்து விரிவாகிவிடும். அதனைத் தொடர்ந்து அதற்கு பாதுகாப்பு மற்றும் குடியிருப்புகள் என வளர்ந்து பெருகிவிடுகிறது. வழிபடுவதற்கோ, பராமரிப்பதற்கோ கூட எவரும் இல்லாத இடங்களில் கூட இவை உருவாக்கப்படுவதன் அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது?
 
வரலாற்று ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பௌத்தர்களின் உரிமை இது என்கிற தர்க்கத்தை முன்வைத்து வருன்றனர்.
யுத்தத்தில் அழிக்கப்பட்ட இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மத ஸ்தளங்கள் மீள புனரமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக அங்கு அம்மக்களுக்கு அவசியமற்ற புத்தர் சிலைகளை திணிப்பதன் சூட்சுமம் என்ன? சிங்கள பௌத்தத்தை நிறுவனமயப்படுத்தும் தொடர் வேலைத்திட்டத்தின் அங்கமல்லவா இது.
 
 

குறிப்பாக யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மதவுணர்வையும், பண்பாட்டுப் பதட்டநிலையையும் தூண்டும் முக்கிய ஒரு சிக்கலாக சிலை வைப்புகள் வடிவமெடுத்துள்ளன. பல பிரதேசங்களில் கைகலப்பு வரை கொண்டு சென்றுள்ளன. பல நூற்றுக்கணக்கான வழக்குகள் நாடெங்கிலும் இது தொடர்பில் நடந்து வருகின்றன. சில இடங்களில் புத்தருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய வேடிக்கை தொடர்கிறது.
 
இலங்கையில் மதச் சிலைகளை நிறுவது கூட சிரமமிருக்காது. ஆனால் அதனை அகற்றுவது பெரும் பதட்டதையோ, கலவரத்தையோ உண்டு பண்ணும் விடயம். பொதுவாகவே இந்த ஆக்கிரமிப்பு மதச் சின்னங்களின் மீது கை வைப்பது என்பது பெரும் சிக்கலைத் தோற்றுவிக்கும் ஒன்றாக இலங்கையில் ஆகியிருக்கிறது. அப்படியிருக்கையில் பௌத்த சிலைகளை எதிர்த்து நிற்பது என்பது, சிங்கள பெரும்பான்மை மக்களையும், படையினரையும், அரசாங்க அதிகாரிகளையும், அரசையும் எதிர்த்து நிற்பதைப் போலாகிவிடும் என்கிற பயத்தால் கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.
 
பௌத்தத்தை வழிபடுவதற்கு தயாரான சமூகத்தவர்களும் கூட பௌத்தத்தை வெறுத்து ஓடும் மனநிலைக்கு உள்ளாகியுள்ளார்கள்.
cb99c0553a6b228b3d4bb56b0b5e6a21.jpg
இலங்கையில் அரச காரியாலயங்கள், பிரதேச செயலகங்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், விமான நிலையம், துறைமுகம், ஆஸ்பத்திரிகள் வீதிகள், சந்திகள், மலையுச்சிகள் என அனைத்து இடங்களிலும் புத்தரின் ஆக்கிரமிப்பு விரிவாகியிருக்கிறது. ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் இது பரஸ்பர இனப் பண்பாட்டு வெறுப்புணர்ச்சியை தோற்றுவித்திருக்கிறது என்றால் மிகையில்லை.
 
மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை வலியுறுத்தி அரசியல் நிர்ப்பந்தங்களை தொடர்ச்சியாக செய்துவரும் பௌத்தத தரப்பு பௌத்தர்களல்லாதோரின் பிரதேசங்களில் பௌத்தத்தை திணிப்பதன் தார்மீகம் தான் என்ன?
 
பௌத்தர்கள் அல்லாதோர் அனைவரும் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி என்றால் இலங்கையில் உள்ள பௌத்தர்கள் யார். இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்னர் அவர்கள் எதைப் பின்பற்றியிருந்தார்கள்.
 
இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்கள் அனைவரும் வந்தேறிகள், கள்ளத்தோணிகள் என்றால் பௌத்தர்கள் யார். அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த மூத்த கள்ளத்தோணிகள் என்பதை அவர்களின் புனித நூல் மகாவம்சம் சொல்லவில்லையா.
 
சில பதட்டத்துக்கு உரிய இடங்களில் ஏனைய சமூகங்களின் உரிமைகளை பறிக்க வேண்டுமென்றால் முதலில் அங்கே ஒரு புத்தர் சிலையை கொண்டு சென்று வைப்பது சாதாரண சண்டியர்கள் தொடக்கம், “பாதுகாப்புப்” படையினர் வரை புரியும் கைங்கரியமாக ஆகியிருக்கிறது.
 
பௌத்தத்தை வளர்ப்பதாகக் கூறி புத்தரை வெறுக்கும் நிலையை விதைத்து வருகிறார்கள். இன்று நிகழ்வது புத்தரின் ஆகிரமிப்பல்ல, பௌத்தம் தான் பௌத்த கயவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத் தான் அமைச்சர் மனோ கணேசனும் சமீபத்தில் “பௌத்தத்தை பௌத்தர்களிடம் இருந்து பாதுகாக்கும் இயக்கம் அவசியம்” என்று சமீபத்தில் கூறினார் போலும்.
 
ஒட்டுமொத்தத்தில் சிங்கள பௌத்த பாசிசத்தின் விரிவாக்கமாகவே இன்று வளர்ந்து விரிந்துள்ளது. பௌத்தர்களல்லாதோரின் அச்ச உணர்வில் இருக்கும் நியாயத்தை வரலாறு கற்பித்தே வந்துள்ளது. 
 
பௌத்த மதம் இலங்கையில் அரச மதமாக இருந்துவிட்டுப் போகட்டும். இலங்கையில் சிறுபான்மை இனங்களும், மதங்களும், அதாவது சிங்கள பௌத்தரல்லாதோர் பயப்படுவது அதற்கு அல்ல. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அல்ல. மாறாக அதன் பேரால் தமக்கு அநியாயம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். தமக்கான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும், பாரபட்சமும், அநீதியும் இழைக்கப்பட்டுவிடும் என்பதற்காகத தான். சமத்துவத்துக்கான உத்தரவாதம் இல்லாமல் போய் விடும் என்பதற்காகத்தான்.
 
எதற்காக அவர்கள் பயப்பட்டார்களோ அந்த பயத்தைத் உறுதி செய்யும் நிலை தான் இன்று வளர்ந்துவிட்டிருக்கிறது. அரச இயந்திரத்தால் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாது போயிருக்கிறது. அது மட்டுமன்றி இந்த பௌத்த பாசிச போக்குக்கு உடந்தையாக அரச இயந்திரம் ஆகியிருக்கிறது.

நன்றி - தினக்குரல்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கிரமிப்பு... எங்கு போய் முடியப் போகுது.என்று கவலையாக உள்ளது.
இந்த ஆக்கிரமிப்பால்..... இன்னும் 50 - 60 வருடங்களில் தமிழ் இனமே.... காணாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

10 hours ago, nunavilan said:

பாலும் தேனும் ஓடும் போது இக்கட்டுரை பற்றி கவலைப்பட யாருளர் பராபரமே??

மன்னிக்கவும் நுணா

இங்கு அகிம்சையாலும், இரத்தத்தை  சிந்தியும் சாதிக்க முடியாதது இந்த இனவாதத்தை மாற்றுவது என்பது எல்லாருக்குமே தெரியுமே. ஆனாலும் இவ்வளவு துன்பங்களையும் இழப்புகளையும் தாங்கி இன்றும் இங்கு வாழ்ந்தே தீருவேன் என்கின்ற பல குடும்பங்கள் இங்கிருக்கு.அவற்றுக்கான ஒரு விடிவு தேவை என்பதையும் கருத்தில் கொள்வோம்.

 

இது எனது தனிப்பட்ட கருத்து

(பதியப்பட்ட இடம் தவறாயின் மன்னிக்கவும் - இது எதிர் வாதத்திற்காக இல்லை. எனது ஆதங்கம் மட்டுமே).


நாம் இங்கு இழந்தது உயிரோ, அல்லது உணர்வுகளோ இல்லை. எம் மக்களுக்காக உயிரை கொடுக்க முன்வந்தவர்களில் நானும் இல்லை நீங்களும் இல்லை. அவர்கள் எந்த இயக்கத்தில் இருந்திருந்தாலும் அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களுக்கும் ஒரு வணக்கம் செலுத்த வேண்டும். 

மாவீரர்கள் குடும்பங்கள் பலதை  பார்க்கும் சில சந்தர்ப்பங்களும் எனக்கும் கிடைத்தன. வெறுமனே எத்தனையோ மில்லியன் டாலர்கள் செலவழித்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதிலும் பார்க்க அந்த குடும்பத்தில் அனாதையாக வழியற்று திரியும் சிறுவர்களுக்கு படிப்பியுங்களேன். அடுத்த சந்ததியாவது நன்றாக இருக்கும். 

தமிழுக்காக போராடப்போன ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பிள்ளையையாவது வாழவைப்போம் - எமக்காக இறந்தவர்கள் வானில் இருந்து எம்மை ஆசீர்வதிப்பார்.

நன்றி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"1000 வருடங்களுக்கு, ஒரு முறை தான்... திறமையான நல்ல தலைவன் ஒருவன்  பிறப்பான்." என்பது முது மொழி.

தமிழ் இனத்தைப் பொறுத்தவரையில்..... சென்ற ஆயிரமாவது நூற்றாண்டில், கப்பலில்.. சென்று,
பல கிழக்கு ஆசிய நாடுகளை தன் வசம் கொண்டு வந்த, வீரம் செறிந்த மன்னன், தமிழ் நாட்டில் பிறந்த. ராஜ ராஜ சோழன்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகள்..... கழித்து, ஈழத்தில் பிறந்தவர் தான்......
உலகத் தமிழர்களின்.. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

 "தமிழ் ஈழம்" என்னும் நாட்டை கட்டி எழுப்ப அவர்....
உலகத்தில்.... தமிழன் என்று ஒரு  இனம் உண்டு.. அவர்களுக்கு தனி நாடு  தேவை என்று சொல்லி...
உலகத்தில் உள்ள எந்த விடுதலைப் போராளிகளும் வைத்திருக்காத, விமானப் படையையும்   நிறுவி....

எல்லாம்.... "கை கூடும்" சமயங்களில், தமிழனத்தின் சாபக்கேடான,   ஒட்டுக்  குழுக்கள் எம் இனத்தையே....
சிங்களவனுக்கு விற்ற,  கயவர்களின்.. செயலால், தமிழீழம் கனவாகிப் போனது..

இது... இந்த, உலகின்,  மூத்த  இனத்துக்கு.. கிடைத்த பெரும் துயரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி ... கூறவரும் செய்தி பெரிது 
கொத்துரொட்டி கடையில, காட்டிக்கொடுப்பு   எண்டு போய் நிக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Sasi_varnam said:

நல்ல திரி ... கூறவரும் செய்தி பெரிது 
கொத்துரொட்டி கடையில, காட்டிக்கொடுப்பு   எண்டு போய் நிக்கிது.

இந்தத்  திரியை,,,, முழுமையாக வாசித்தவர் சசி 
அவரின்.. கருத்தை, மீண்டும் எதிர் பார்க்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் போதனைகளை சிரசிலேற்று செல்பவர்களாய் இருந்திருந்தால் இவ்வளவு கொலை பாதகங்களாலும் வன்முறைகளாழும்  இந்த தேசத்தின் நிலமானது பாவங்களால் நிரம்பி இரத்தங்களால் தோய்ந்து போயிருக்காது....!

ஒருவன் எந்த ஆயுதம் எடுக்கிறானோ அதே ஆயுதத்தினாலேயே அவன் வீழ்வது நியதி/ உறுதி. இப்ப இவர்கள் கையில் எடுத்திருப்பது புத்தன் எனும் பெயருடைய ஆயுதம். அதுவும் எம் அபலைகளின் கண்ணீரும் இவர்களை அழித்துவிடும்.....!

Link to comment
Share on other sites

மறதி என்பது கடந்தகாலத்தின் துன்பங்களில் இருந்து மீண்டுவர ஒரு வாய்ப்பினை வழங்கும். அதே மறதிதான் பழைய துன்பங்கள் மீண்டும் நமைத்தேடி வர வழிவகையும் செய்யும். ஆகவே, மனதை ஆற்றுமைப்படுத்தும் அதே நேரத்தில் பழைய வரலாறுகளையும் நினைவில் வைத்திருப்பது நமது கடமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.