Jump to content

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவை


Recommended Posts

தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­ப­டு­வது காலத்தின் தேவை

233-04f4f680f5d29d66f479cdf56229a62e99473be9.jpg

 

நாட்டில் நாள்­தோறும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இன­வாத நட­வ­டிக்­கை­களை பார்க்­கின்ற போது தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரு பொதுக் கொள்­கையின் அடிப்­ப­டையில் உரி­மை­களை பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும் . கடந்த அர­சாங்­கத்தில் பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் தேரர்கள் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல அதர்ம செயற்­பா­டு­களை மேற்­கொண்­டார்கள். அமைச்சர் ஒரு­வரின் அலு­வ­ல­கத்­திற்குள் அத்­து­மீறி உட்­பு­குந்து இன்­னு­மொரு தேரரை தேடி­னார்கள். இந்த இன­வாத்தின் உச்­சக்­கட்­ட­மாக தர்கா நகர், பேரு­வளை ஆகிய இடங்­களில் வன்­முறை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் அள­விற்கு அவர்­களின் கைகள் ஓங்­கி­யி­ருந்­தன.

இதே நிலை இந்த அர­சாங்­கத்­திலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. பௌத்த சிலை­களை சிறு­பான்­மை­யினர் வாழும் பகு­தி­களில் தாங்கள் நினைக்கும் இடங்­களில் எல்லாம் வைத்து சிலையைச் சூழ­வுள்ள இடங்­களை அப­க­ரித்துக் கொள்­வ­தற்கும், சிங்­க­ள­வர்­களை குடி­யேற்­று­வ­தற்கும் திட்­ட­மிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. அம்­பாறை மாவட்­டத்தில் மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டமை. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கிண்­ணியாத் துறையில் புத்தர் சிலை வைப்­ப­தற்­கு­ரிய ஆரம்ப கட்­டு­மாண வேலைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கச்­சக்­கொ­டியில் எனும் எல்லைக் கிரா­மத்தில் கால்­ந­டை­களை மேய்ப்­ப­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணியை மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சுமன ரத்­தின தேரர் தனக்கு வழங்­கு­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டமை, அத்­தோடு அவர் தமிழர் ஒரு­வ­ருக்­கு­ரிய காணியில் விகாரை அமைப்­ப­தற்கு போராட்டம் நடத்­தி­யமை. கொழும்பில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சம்­ப­வங்­க­ளையும் பார்க்கும் போது தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­ப­டு­வது காலத்தின் கட்­டாயத் தேவை­யாக உண­ரப்­பட்­டுள்­ளது.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று அடிக்­கடி கூறப்­பட்­டாலும் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைளை தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் முன்­னெ­டுக்­க­வில்லை. வெறும் வாய்ப்­பேச்சு ஒற்­று­மையைக் கொண்டு வராது.

இதேவேளை, தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தமது உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்­லிம்­களின் உரி­மைகள் பாது­கா­க்கப்­பட வேண்­டு­மாயின், கிழக்கு மாகாணம் தனி­யாக இருக்க வேண்­டு­மென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கும், கிழக்கும் இணைந்­தி­ருப்­பது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பல­மா­கவே இருக்கும். அதேவேளை, கிழக்கு தனி­யாக இருக்க வேண்­டு­மென்று முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் சொல்லிக் கொண்­டி­ருப்­ப­திலும் நியாயம் உள்­ளது. ஆதலால், முஸ்­லிம்­க­ளிடம் காணப்­படும் அச்சம் போக்­கப்­பட வேண்டும்.

ஆகவே, தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தங்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை காண வேண்டும். அவ்­வாறு தீர்வு காணப்­ப­டு­மாயின் வடக்கும், கிழக்கும் இணை­வ­தற்கு முஸ்­லிம்­களும் எதிர்ப்புக் காட்­ட­மாட்­டார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும், இவை இரண்டும் தனித்­த­னியே இருக்க வேண்டும். தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஒற்­று­மை­யாக செயற்­ப­டுதல் வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள் மக்­களை உணர்வு பூர்­வ­மாக ஒற்­று­மைப்­ப­டுத்­த­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம் மக்­களை உணர்வு பூர்­வ­மாக ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­துடன் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளையும் சுமு­க­மாக தீர்ப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இவ் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸூம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரு கட்­சி­களும் சிறந்த உற­வு­களைப் பேணிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆயினும், தமிழ், முஸ்லிம் பிர­தே­சங்­களில் காணப்­படும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­துள்­ளன.

புதிய அர­சியல் யாப்பில் தமி­ழர்­களும், முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தொரு திட்­டத்­தினைக் கூட இவ்­விரு கட்­சி­களும் முன் வைக்­கா­துள்­ளமை ஏற்­பு­டை­ய­தாகத் தெரி­ய­வில்லை. நல்ல உற­வுகள் ஆக்­கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், இவ்­விரு கட்­சி­களும் தமிழ், முஸ்லிம் மக்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காது கற்­ப­னையில் ஒற்­று­மை­யைப்­பற்றி பேசிக் கொண்­டி­ருக்­கின்­றன.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பல இடங்­களில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை அபி­வி­ருத்­தியில் தமிழ், முஸ்லிம் தரப்­பி­ன­ரி­டையே சந்­தே­கங்கள் உள்­ளன. கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்­தினை தரம் உயர்த்த வேண்­டு­மென்­பதில் இழு­ப­றிகள் காணப்­ப­டு­கின்­றன. இங்­குள்ள சில வீதி­களின் பெயர்­க­ளிலும் கருத்து முரண்­பா­டு­களும், ஏற்றுக் கொள்ளாத் தன்­மையும் காணப்­ப­டு­கின்­றன. தமி­ழர்­க­ளுக்கு தனி­யான பிர­தேச சபை, அபி­வி­ருத்­தி­க­ளுக்கு தரிசுக் காணி­களை விட்டுக் கொடுப்­பதில் பிரச்­சி­னைகள். கல்­மு­னையில் ஏற்­படும் அபி­வி­ருத்­தி­களை தனியே முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­னது என்ற எண்ணப் பதிவு, வட்­டார எல்­லை­களை முடிவு செய்­வதில் பிரச்­சி­னைகள் உள்­ளன. இவ்­வாறு கல்­முனைத் தொகு­தியில் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இப்­பி­ரச்­சி­னைகள் நீண்ட காலப் பிரச்­சி­னை­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

மேலும், அம்­பாறை மாவட்­டத்தில் வட்­ட­ம­டுவில் மேய்ச்சல் தரை தொடர்பில் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. பொத்­து­வி­லுக்கு தனி­யான கல்வி வல­ய­மொன்­றினை அமைப்­ப­திலும் இரு சமூ­கங்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. இது போன்று பல இடங்­களில் இவ்­விரு சமூ­கங்­க­ளி­டையே காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளன.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே பல பிரச்­சி­னைகள் உள்­ளன. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் 26 வீத­மா­க­வுள்­ளார்கள். இவர்கள் சுமார் 22 சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்பில் வாழ்ந்து வரு­கின்­றார்கள். இம்­மா­வட்­டத்தில் காத்­தான்­குடி, ஏறாவூர், ஓட்­ட­மா­வடி மற்றும் வாழைச்­சேனை (மத்தி) ஆகிய முக்­கிய பிர­தே­சங்­களில் எல்லைப் பிரச்­சி­னைகள் உள்­ளன. வாகரைப் பிர­தே­சத்தில் வாழ்ந்த முஸ்­லிம்கள் 1985ஆம், 1990ஆம் ஆண்­டு­களில் ஏற்­பட்ட இனப் பிரச்­சி­னைகள் கார­ண­மாக வெளி­யே­றி­னார்கள்.

இவ்­வாறு வெளி­யே­றிய பலரின் காணி­களை வேறு நபர்கள் கப­ளீ­கரம் செய்து வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. கள்­ளிச்சை, புனானை மேற்கு, வாக­னேரி, கார­முனை பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்த முஸ்­லிம்கள் யுத்த காலத்தில் வெளி­யே­றி­னார்கள். இவர்­களில் பலரும் காணிப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளார்கள்.

இது போன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் உள்­ளன. தோப்பூர், புல்­மோட்டை, மூதூர் என பல இடங்­களில் காணிப் பிரச்­சி­னை­களும், எல்லைப் பிரச்­சி­னை­களும் உள்­ளன.

வட மாகா­ணத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளன. முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, மன்னார், யாழ்ப்­பாணம் மாவட்­டங்­க­ளிலும் இவ்­விரு சமூ­கங்­க­ளி­டையே பல பிரச்­சி­னைகள் உள்­ளன.

தமி­ழர்­களும்...

(03ஆம் பக்கத் தொடர்ச்சி)

வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் என்­பது பாரிய பிரச்­சி­னை­களைக்; கொண்­ட­தாக காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு இவ்­விரு சமூ­கங்­களும் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளன. இப்­பி­ரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டு­மென்று தமிழ், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பல தட­வைகள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளார்கள். ஆனால், தீர்­வுகள் அடை­யப்­ப­ட­வில்லை. தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­களை பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் கபடத் தனத்­திற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பலி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் ஏன் தங்­க­ளுக்கு சாத­க­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று தமிழ், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும், சாதா­ரண மக்­களும், அமைப்­புக்­களும் சிந்­திப்­ப­தில்லை. பெரும் பேரி­ன­வா­திகள் இரண்டு சமூ­கங்­க­ளையும் மோத­விட்டு குளிர் காய்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதே வேளை, தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தாங்கள் எதிர்­கொண்டு வரும் பிரச்­சி­னை­களைப் பற்றி நல்­லி­ணக்க ஆணைக் குழு­விடம் முறை­யீடு செய்­துள்­ளார்கள். அதே வேளை, அந்த ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் காணப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு, பல பிரச்­சி­னை­களை தங்­க­ளுக்­குள்­ளேயே வைத்துக் கொண்­டி­ருக்கும் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தங்­க­ளி­டையே கலந்து பேசி தீர்­வு­களை காண வேண்டும். விட்டுக் கொடுப்பு இல்­லாமல் தீர்­வு­களை காண முடி­யாது. தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் பிரச்­சி­னை­களை விட்டுக் கொடுப்­புக்­க­ளுக்கு மத்­தியில் தீர்­வு­களை காண்­ப­தற்கு முயற்சி செய்­யா­மையே இன்று வரைக்கும் பிரச்­சி­னைகள் நீடித்துக் கொண்­டி­ருப்­ப­தற்கும், சந்­தே­கங்­களும், அச்­சங்­களும் இருப்­ப­தற்கு கார­ண­மாகும்.

ஆதலால், தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு அவ­ச­ர­மாக தீர்­வுகள் காணப்­பட வேண்டும். இதனைச் செய்­யாது வடக்கும், கிழக்கும் இணைந்­தாலும், பிரிந்­தி­ருந்­தாலும் இவ்­விரு சமூ­கங்­க­ளி­டையே நல்­லு­றவை இன்­றுள்­ள­தனை விடவும் அடுத்த படிக்கு நகர்த்த முடி­யாது. கடந்த காலத்தில் ஏற்­பட்ட இன­வன்­மு­றை­க­ளினால் இரண்டு சமூ­கங்­களும் தங்­க­ளுக்குள் மோதி பல கசப்­பாண அனு­ப­வங்­களைப் பெற்­றுள்­ளன.;. இந்த கசப்­பான அனு­ப­வங்­களில் இருந்து ஓர­ள­விற்கு விடு­பட்டுக் கொண்­டி­ருந்­தாலும் நம்­பிக்­கைகள் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை. இரண்டு சமூ­கங்­களும் என்­னதான் நடந்­தாலும் கடந்த காலங்­களைப் போன்று வன்­மு­றையில் ஈடு­படக் கூடா­தென்­பதில் உறு­தி­யுடன் இருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும். இதற்கு மேல் இரண்டு சமூ­கங்­களும் தமது உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதற்­காக தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களின் தலை­வர்கள் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு தீர்­வு­களை காண வேண்டும்.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இவ்­வாறு நடந்து கொள்­ளாது தங்­க­ளுக்குள் கருத்து மோதல்­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டுக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் பௌத்த இன­வா­திகள் தமது நெருக்­கு­வா­ரங்­க­ளையும், அடாத்­தான நட­வ­டிக்­கை­க­ளையும், காணி­களை கப­ளீ­கரம் செய்­வ­த­னையும் விடவே மாட்­டார்கள்.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தங்­க­ளி­டையே காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்­வு­களைப் பெற்றுக் கொண்­டால்தான், பௌத்த இன­வா­தி­க­ளி­னாலும், அதி­கா­ரி­க­ளி­னாலும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு தனித்­த­னியே மேற்­கொண்டு வரும் அநீ­யாங்­களை தடுத்து நிறுத்­தலாம். சிங்­கள பேரி­ன­வாதம் சிறு­பான்மை மக்­களை பிரித்­தாண்டு வரு­கின்­றார்கள். இதனை முறியடிப்பது தமிழ், முஸ்லிம்களின் கைககளில்தான் உள்ளன.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்தர் சிலையை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். புத்தர் சிலை சிறுபான்மையினரை ஆக்கிரமிக்கும் நவீன ஆயுதமாகவே பார்க்கப்படுகின்றது. பௌத்த இனவாதிகள் புத்தர் சிலை வைப்பின் மூலமாகவே தமது ஆக்கிரமிப்பையும், சிங்கள குடியேற்றத்தையும் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காலத்திற்கு காலம் ஆட்சியில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் உதவியாக இருக்கின்றார்கள். இதனால்தான், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாதிகளை கைது செய்வதற்கும், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முடியாதுள்ளன.

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டால் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக ஆதரவை வேண்டி நிற்பார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டால் ஆட்சியாளர்களை தீர்மானிக்க முடியும். நாங்கள் தீர்மானித்த ஆட்சியாளர்கள் நமக்கு கேட்டதெல்லாம் தர வேண்டுமென்பதல்ல. நீதியை நிலை நாட்டினாலே போதுமானதாகும். ஆகவே, காலத்தின் அவசியம் வேண்டி தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட வேண்டும். முதலில் தங்களுக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் போது இரண்டு சமூங்களும் ஒற்றுமைப்படுவது இலகுவாகிவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமிழர்களுடன் ஒற்றுமைப்படாது தமிழ் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்பட்டு சிங்கள அரசுகளின் செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்து பல நன்மைகளையும் பெற்றிருக்கிறார்கள்.   பற்றைக்குள்ளிருக்கும் இரண்டு பறவைகவைிட  கையிலிருக்கும் ஒரு பறவை சிறப்பானதென்பார்கள்.  ஆகவே முஸ்லீம்களுக்கு தமிழர் விரோத> தமிழ்த்தேசிய விரோதப் போக்கே அரசியல் ரீதியில் பயனளிக்கக்கூடியது.  ஏற்கனவே அவர்கள் பொதுபலசேனா போன்ற சிங்களத் தீவிரவாத அமைப்புகளால் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.   அப்படியிருக்கையில் அவர்களுக்கேன் வீண்வம்பு.   அவர்களைவிட்டுவிட்டு தமிழர்கள் தமது வழியைப் பார்ப்பதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karu said:

முஸ்லீம்கள் தமிழர்களுடன் ஒற்றுமைப்படாது தமிழ் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்பட்டு சிங்கள அரசுகளின் செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்து பல நன்மைகளையும் பெற்றிருக்கிறார்கள்.   பற்றைக்குள்ளிருக்கும் இரண்டு பறவைகவைிட  கையிலிருக்கும் ஒரு பறவை சிறப்பானதென்பார்கள்.  ஆகவே முஸ்லீம்களுக்கு தமிழர் விரோத> தமிழ்த்தேசிய விரோதப் போக்கே அரசியல் ரீதியில் பயனளிக்கக்கூடியது.  ஏற்கனவே அவர்கள் பொதுபலசேனா போன்ற சிங்களத் தீவிரவாத அமைப்புகளால் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.   அப்படியிருக்கையில் அவர்களுக்கேன் வீண்வம்பு.   அவர்களைவிட்டுவிட்டு தமிழர்கள் தமது வழியைப் பார்ப்பதுதான் நல்லது.

அப்படிப்போடுங்க ஜீ 
தற்போதிருக்கும் சூழ்நிலையில் தமிழர்கள் சும்மாயிருக்காமல் முஸ்லிம்களுடன் ஒற்றுமைப்படப்போகிறோம் ,ஒன்றுகூடப்போகிறோம் என்று பேரினவாதிகளை சொறிந்து விட்டு வாங்கிக்கட்ட முடியாது. பட்டும் திருந்தவில்லை என்றால் அல்லாவால் கூட எம்மை காப்பாற்ற முடியாது
அப்படி ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டுமென்றால் முதலில் முஸ்லிம்கள் தமிழர்கள் சந்த்தித்ததுபோல் ஒரு இனவழிப்பையோ, கலவரத்தையோ முதலில் சந்திக்கட்டும் அதன்பிறகும் இதே போன்று ஒற்றுமையே பலம் என்று ஈஸாப்பின் நீதிக்கதைகள் சொல்வார்களாயின் அப்போது யோசிக்கலாம் இணைவதா இல்லையா என்று   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.