Jump to content

வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall


Recommended Posts

வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall

 

வாட்ஸ்அப் வீடியோ கால்

வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள்  பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.

வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் வீடியோ கால் ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். வீடியோ கால் சென்று விடும். அதே சமயம் நீங்கள் அழைக்கும் நபரும், தனது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் நீங்கள் கால் செய்யும் போதே, அதனை காட்டிவிடும். அத்துடன் நீங்கள் கால் செய்யும் நபரின் மொபைல், வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஓகே என்றால், வீடியோ காலிங் ரெடி. உங்கள் நெட்வொர்க் இணைப்பை பொறுத்து வீடியோ காலின் தரம் இருக்கும்.

wa_14129.png

கூகுள் டுயோ, ஐ.எம்.ஓ, ஸ்கைப், ஃபேஸ்டைம் போலவே, பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருக்கிறது வாட்ஸ்அப் வீடியோ கால். வாட்ஸ்அப் சாட் போலவே இதுவும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது. வீடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே, முன் மற்றும் பின் கேமராவை மாற்றிக் கொள்ளவும், ஒலி அளவை மியூட் செய்யவும் முடியும். அதே சமயம் பல போன்களில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருந்தாலும் கூட, 'இந்த போன் வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்யாது' எனக் காட்டுவது எரிச்சல். இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களை அடுத்து இன்னும் இதனை மேம்படுத்துவோம் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. பார்ப்போம்!

சாதாரண இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக இருந்த வாட்ஸ்அப், அடுத்து வாய்ஸ் காலிங் வசதியை வெளியிட்டது. தற்போது வீடியோ காலிங் ஆப்ஸ்களுக்கு வரவேற்பு பெருகிவரும் நிலையில் அதனையும் இணைத்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு கூடுதல் ஆப்ஷன். அதே சமயம் மற்ற போட்டியாளர்களை சமாளித்து வீடியோ காலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வாட்ஸ்அப் மாறுமா என்பது சந்தேகம்தான்.

http://www.vikatan.com/news/information-technology/72469-review-about-whatsapp-video-calling.art

Link to comment
Share on other sites

#ALERT பரவி வரும் வாட்ஸ்அப் வீடியோ காலிங் ஃபேக் லிங்க்!

 

fake_12493.png

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் வீடியோ காலிங் சேவையைப் பெற வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொய்யான வாட்ஸ் அப் வீடியோ காலிங் லிங்க் ( fake link) ஒன்று பகிரப்பட்டு வருகிறது. பயனர்கள் அந்த லின்க்கை க்ளிக் செய்ததும், பிறருக்கு இன்வைட் அனுப்புமாறு மற்றொரு லின்கிற்கு அழைத்து செல்லுமாம்.

மேலும் வாட்ஸ் அப் Group calling வசதி உள்ளதாகவும் அந்த ஃபேக் லின்க்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்னும் Group calling வசதியை அறிமுகப்படுத்தவில்லை. எனவே வாட்ஸ் அப் வீடியோ காலிங் லிங்க் பகிரப்பட்டால், பயனர்கள் அதை க்ளிக் செய்ய வேண்டாம், மீறி க்ளிக் செய்தால் தனிநபர் தகவல்கள் திருடப்படும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

http://www.vikatan.com/news/information-technology/73002-a-fake-whatsapp-video-feature-invite-is-spreading.art

Link to comment
Share on other sites

வாட்ஸ்-ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

 

wats%20app1_15524.jpg

வாட்ஸ்-ஆப் சில தினங்களுக்கு முன்பு வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனம், ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போதே ப்ளே செய்து பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியின் மூலம், முழு வீடியோவையும் தரவிறக்கும் செய்யும் வரை காத்திருக்காமல் ப்லே செய்து பார்க்க முடியும். இதன் மூலம், தேவை இல்லாத வீடியோக்களை முழுவதுமாக தரவிறக்கம் செய்யாமல் தவிர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வசதியை வாட்ஸ்-ஆப் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

http://www.vikatan.com/news/world/73337-whatsapp-to-introduce-new-feature.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்த ஆண்டு இறுதியோடு முடிவுக்கு வரும் வாட்ஸ்அப் சேவை!Whatsup

வாட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியோடு சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2, விண்டோஸ் போன் 7, ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6 ஆகியவற்றில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயங்குதளங்கள் முக்கியமானதாக இருந்தாலும், இந்த இயங்குதளங்கள் வாட்ஸ்அப் மேம்படுத்தல்களுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தினாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60 உள்ளிட்ட இயங்குதளங்களுக்கான சேவை அடுத்த ஆண்டு யூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.