Jump to content

காதலுக்கு மரியாதை செய்தவர்கள்!


Recommended Posts

மான்டேஜ் மனசு 9 - காதலுக்கு மரியாதை செய்தவர்கள்!

 

 
Kadhalukku-Mariyat_2534232f.jpg
 

''எல்லோரோட காதலையும் எழுதுற உனக்கு என் காதல் ஞாபகத்துக்கு வரலையாண்ணே!'' உரிமையுடன் கேட்டான் ஜான்.

''அப்படி எல்லாம் இல்லை ஜான்.''

''என் காதல் எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சும் எழுதாம இருக்கீங்க. உன்னதமான காதலுக்கு நீங்க தர்ற மரியாதை இதுதானா? இது நியாயமா? ஒன்பது கிரகத்திலும் உச்சம் பெற்ற ஒருவன் காதலை நீங்கள் கண்டுகொள்ளாமல் போனால், ஆதாம் உங்க கண்ணைக் குத்திடுவார். பார்க்குறீங்களா? பார்க்குறீங்களா?'' என்று சொல்லிச் சிரித்தான்.

''இந்த முறை உன் கதை தான்டா'' என்றேன்.

''அப்படி வாங்க வழிக்கு'' என்று குதூகலமாய் பேசினான்.

ஜான் - ஜெனி காதல் நிச்சயம் மகத்தானது. எப்படி என்கிறீர்களா?

காதல் என்றால் ஜென்னி. ஜென்னி என்றால் காதல் என்று சொன்னார் காரல் மார்க்ஸ்.

ஜானைக் கேட்டால் காதல் என்றால் ஜெனி. ஜெனி என்றால் காதல் என சொல்வான்.

''என்ன ஒருத்தி காதலிக்கணும்

நான் அவள பைத்தியமா காதலிக்கணும்

எனக்கு ரெண்டுமே நடந்திடுச்சு..! '' - ஜான் அடிக்கடி சொல்வது இதைத்தான்...

ஜான் பிளஸ் 2 படிப்புக்கு குட் பை சொல்ல சில மாதங்களே இருந்தன. சினிமா பார்த்தே கனவுக்குப் பழகியிருந்த ஜானுக்கு ஒரு ஃபேன்டஸி கனவு வந்தது.

ஒரு பிளேட்டை தண்ணீர் ஊற்றி கழுவுகிறான் ஜான். அப்போது பிளேட்டில் இருந்து வரும் வெளிச்சம் அறையெங்கும் பரவுகிறது. அந்த வெளிச்சத்தில் இருந்து ஒரு தேவதை வருகிறாள். ஜானுடன் விளையாடுகிறாள். பேசுகிறாள். சிரிக்கிறாள். 'நான் எப்பவும் உன்கூடவே இருப்பேன். உன்னை விட்டு போகவே மாட்டேன்' என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறாள்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே காணாமல் போய்விடுகிறாள். மீண்டும் பிளேட் கழுவுகிறான். ஆனால், வெளிச்சமும் வரவில்லை, அந்த தேவதையும் வரவில்லை. மீண்டும் முயற்சி செய்யும்போது அந்த பிளேட் உடைந்து கிடக்கிறது. இது ஜான் கண்ட கனவு.

விழியனிடம் இருந்தோ அல்லது விழியன் கதைகள் மூலமோ இதை ஜான் சுட்டு சொல்கிறான் என்று சந்தேகம் வருகிறதா? நம்புங்கள். இது நடந்தது 2010ம் ஆண்டில்.

கனவில் கண்ட அந்த முகத்தை நேரில் பார்க்க மாட்டோமா என்று ஜான் தேடினான். சில மாதங்களில் கனவில் அந்த தேவதை முக சாயலில் ஒருத்தியைப் பார்த்தான்.

இந்த நேரத்தில் 'நினைத்தேன் வந்தாய்' படமோ, ரம்பா கதாபாத்திரமோ உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் தயவுசெய்து டைவர்ட் பண்ணுங்க. இது வேற லெவல் காதல்.

ஜான் கனவில் வந்த தேவதையின் முக சாயலில் ஜெனி இருந்தாள். ஜானின் சித்தி மகள் செலினுடன் படிக்கும் ஜெனியைப் பார்த்ததும் ஜானுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

சர்ச்சுக்குப் போகவில்லையென்றால் மறுநாள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஜானுக்கு அடிவிழும். அதற்கெல்லாம் அசராத ஜான், ஜெனி சர்ச்சுக்கு வருவது தெரிந்த பிறகு முதல் ஆளாய் போய்விடுவான். ஆனால், ஜெனி மேல் இருக்கும் பிரியத்தை, அன்பை ஜான் சொல்லவே இல்லை.

ஜெனியின் சிரிப்பில் கரைந்துபோனான். சர்ச்சில் பார்ப்பான். ரசிப்பான். ஆனால், பேசக்கூட மாட்டான்.

பிளஸ் 2 முடிந்ததும் பி.எஸ்.சி. ஐடி சேர்ந்தான். மதுரையில் இருந்த ஜெனி திண்டுக்கல் படிக்கப் போயிருந்தாள். ஆனால், ஜானுக்கு இது தெரியவில்லை. காலப்போக்கில் ஜெனியைத் தேடாமல் இருந்தாலும், மனசுக்குள் பூத்த பூவை உதிராமல் பார்த்துக்கொண்டான்.

ஒரு நாள் யதேச்சையாக செலினுடன் பேசிக்கொண்டிருந்தான். காதல் பற்றிய டாபிக் வந்தது.

''நானும் காதலிச்சிருக்கேன் செலின்.''

''நிஜமாவாடா. யாருண்ணா?''

''உன் கிளாஸ்மேட் தான்.''

''என் கிளாஸ்மேட்டா? அனிதா? டயானா? ப்ரீத்தி?

''இல்லை. ஜெனி.''

''ஜெனியா? நம்ம தூரத்து சொந்தம் தான்டா. உன்னை அவளுக்கு தெரியும். இப்பவும் என் கூடதானே படிக்கிறா.''

''என்ன சொல்ற?''

''ஆமாம். பி.காம் தான் படிக்கிறா. திண்டுக்கல் படிக்கப் போனா. செட்டாகலைன்னு மதுரைக்கே வந்துட்டா.''

''சூப்பர்... தங்கச்சி. எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. ஜெனி பக்கத்துல இருக்கும்போது கால் பண்ணு. நான் வந்துடறேன். பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு'' என்றான்.

ம்ம்.. தலையாட்டிய செலின் சொன்னபடி செய்தாள்.

ஆனால், ஜான் காலேஜ் பஸ் ஸ்டாப் வருவதற்குள் ஜெனி வீட்டுக்குப் பறந்துவிட்டாள்.

அடுத்த வாரமே, செலின் ஜானுக்குப் போன் செய்தாள்.

''முக்கியமான ஆள் உனக்கு. இப்போ போன்ல பேசு'' என்று ஜானிடம் சொன்னாள்.

''நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா?'' ஜெனி ஜானிடம் கேட்ட முதல் வார்த்தைகள் இவை.

''இப்போதைக்கு நேர்ல சொல்ல முடியாது. போன்ல சொல்றேன். ஐ லவ் யூ.''

''முதல்ல எனக்கு நீங்க என்ன முறை வேணும்?னு தெரியணுமே.''

''அவ்ளோதானே. தெரிஞ்சுக்கிட்டு வந்து உன் முன்னாடி நிக்கிறேன்.''

மாமா முறைதான் என்று விவரம் அறிந்து சொன்னான். அவளும் காதலைச் சொன்னாள். இரவு அரட்டைப் பேச்சுகள், எஸ்எம்எஸ்கள் என்று நீண்டன.

ஒரு மாதம் கழித்து பெரியார் பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என்று சொன்னாள். திடீரென்று சொன்னதால் மொக்கையான டிரஸ்ஸா இருக்கே என்று நொந்துகொண்டே சென்றான்.

பீங்கானில் ஒரு வாத்து ஜாடியைத் தந்து அசத்தினாள்.

''திடீர்னு கூப்பிட்டதால கிஃப்ட் எதும் தர முடியலை ஜெனி.''

''கிஃப்ட்டா முக்கியம். உன்னைப் பார்த்துட்டேன்ல. அது போதும். நீதான் டா என் கிஃப்ட்.''

ஜான் ஜெனியின் பேச்சில் உறைந்தான். கரைந்தான். மிதந்தான். நெகிழ்ந்தான். மகிழ்ந்தான்.

ஜெனிக்கு விஜய் பிடிக்கும். ஜானிக்கு தனுஷ்தான் பிடிக்கும்.

ஜெனி தேவிஶ்ரீபிரசாத் இசை என்றால் கேட்டுக்கொண்டே இருப்பாள். ஜானிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஃபேவரிட்.

மெருன் கலர் என்றால் ஜெனிக்கு அவ்வளவு இஷ்டம். ஜானிக்கு ஸ்கை ப்ளூ தான் பிடிக்கும். ஆனால், காதல் அலைவரிசை இவர்களை இணைத்தது.

''ஜான்... என்னை ஏன் லவ் பண்ற? நான் மோசமான கேரக்டர். எனக்கே என்னைப் பிடிக்காது. நான் ஒரு வேஸ்ட்.''

''இப்படில்லாம் சொல்லக்கூடாது. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''

ஜெனி, அரிசியில் இருவர் பெயரின் ஆங்கில முதல் எழுத்தை சேர்த்து ஜேஜே என்று பெயர் எழுதிக்கொண்டாள். ஆனால், சந்தர்ப்ப சூழலால் அதைக் கொடுக்க முடியாமல் வருத்தப்பட்டாள். அதை ஜானிடமும் சொன்னாள்.

ஜெனி கொடுக்க முடியாததை ஜான் தரவேண்டும் என்று முடிவெடுத்தான். திருவிழா சமயம் ஜேஜே என்று பெயர் எழுதியஅரிசியை ஜெனியிடம் நீட்டினான்.

தான் கொடுக்க நினைத்ததை, ஜான் கொடுத்துவிட்டான் என்ற பரவசத்தில் மிதந்தாள் ஜெனி.

பல சமயம் இருவரும் தியேட்டர் சென்றார்கள். எங்கேயும் எப்போதும், நண்பன், காதலில் சொதப்புவது எப்படி? பீட்ஸா, அட்டகத்தி படம் பார்த்தார்கள்.

ஒரு முறை இந்திப் படம் பார்க்க ஜெனியை அழைத்துப்போனான் ஜான்.

எந்த படம் என்றே கேட்காமல் ஜெனியும் தியேட்டர் வந்துவிட்டாள்.

''அப்புறம் ஜெனி. இந்திப் படம்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்ட போல. இந்தி தெரியுமா'' என கேட்டான்.

''இந்திப் படமா?'' என்று அலறினாள்.

சமாதானப்படுத்தினான். இப்படித்தான் தலாஷ் படம் பார்த்தார்கள்.

''இப்படியே போனா நாம மாட்டிக்குவோம் ஜான். அடிக்கடி போன் பேசுறது...மெசேஜ் பண்றது தான் கஷ்டமா இருக்கு.''

''அவ்ளோதானே. பயப்படாதே. எப்போ முடியுமோ அப்போ மட்டும் பேசு.''

புதுப்புது நம்பரில் இருந்து ஜானிடம் பேசினாள்.

''ஒவ்வொரு முறையும் புது நம்பர்ல இருந்து கால் வரும்போதெல்லாம், நீயா இருப்பியோன்னு தான் தோணும்... ஜெனி!'' என்பான் உற்சாக மிகுதியோடு.

அம்மாவிடம் காதலிப்பதைச் சொன்ன ஜான் ஒரு நாள் வீட்டுக்கு அழைத்துப்போனான்.

''நீ வந்துதாம்மா இவனை மாத்தணும். நல்லா சாப்பிட சொல்லணும்'' ஜானின் அப்பா சொன்னார். அம்மா விழுந்து விழுந்து கவனித்தார்.

ஜெனி காதலிப்பது அவள் வீட்டுக்கு தெரிந்தது. கர்த்தர் மேல சத்தியமா, பைபிள் மேல சத்தியமா, அப்பா அம்மா சத்தியமா தவறான வழியில போகமாட்டேன் என்று சத்திய செய்யச் சொன்னார்கள்.

ஜெனி சத்தியம் செய்தாள். ஜானிடம் தன்னை மறந்துவிடச் சொன்னாள்.

பெற்றோருக்காக காதலைத் தியாகம் செய்ய முன்வந்தாள் ஜெனி. அந்த தியாகம் மூலம் காதலுக்கு மரியாதை செய்ய நினைத்தாள்.

எனக்கு 'காதலுக்கு மரியாதை' படம் நினைவுக்கு வந்தது.

பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, ஶ்ரீவித்யா, சிவகுமார், ராதாரவி,. தலைவாசல் விஜய், சார்லி, தாமு ஆகியோர் நடிப்பில் வெளியான படம்.

விஜய்ணாவின் தி பெஸ்ட் படம்.

விஜய்யும், ஷாலினியும் போட்டி போட்டு நடித்த படம் என்று இன்றும் சிலாகிப்பதுண்டு. இளையராஜா இசை, பாசிலின் யதார்த்தமான திரைக்கதை என்று காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்துக்கு தனி மரியாதை உண்டு.

ஒரு புக் ஷாப்பில் விஜய்யும், ஷாலினியும் சந்திப்பார்கள். ஷாலினி விஜய்யை இடித்துவிட்டு செல்வார். இமை மூடாமல் ஷாலினியையே விஜய் பார்ப்பார். ஷாலினியும் விழிகள் அகலாமல் விஜய்யை பார்ப்பார். லவ் அண்ட் லவ் ஒன்லி புத்தகத்தை இருவருமே எடுப்பார்கள். விஜய் அந்த புத்தகத்தை ஷாலினிக்கு கொடுத்துவிடுவார்.

அதற்குப் பிறகு ஷாலினியைப் பின் தொடர்வார். விஜய், சார்லி, தாமு ஆகிய மூவரும் ஷாலினியைப் பின் தொடரும்போது ஷாலினியின் அண்ணன் தலைவாசல் விஜய்யிடம் சிக்குவார்கள். போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கி, வீட்டுக்கு அருகிலேயே இன்னொரு அண்ணனிடம் அடிவாங்கி, காயத்துக்கு மருந்து போட டாக்டரிடம் செல்வார்கள். அவரும் ஷாலினியின் அண்ணன் என்பதால் காயங்களை பரிசாகத் தருவார். அதற்குப் பிறகும் வீடுதேடி வந்து காதல் கடிதம் கொடுப்பார் விஜய்.

ஷாலினியின் சின்ன அண்ணன் விஷயம் தெரிந்து, காலேஜூக்கு சென்று அடியாட்களுடன் விஜய்யைத் தாக்குவார். அதற்குப் பிறகு விஜய்யை காதலிப்பதாக சொல்வார் ஷாலினி.

வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதும், வீட்டை விட்டு செல்கிறார்கள். சார்லியின் வளர்ப்புத் தந்தை மணிவண்ணனிடம் அடைக்கலம் ஆகிறார்கள். மணிவண்ணன் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், வீட்டுக்கு செல்வதாக இருவரும் முடிவெடுக்கிறார்கள். அதை மணிவண்ணன், சார்லி, தாமு அண்ட் கோவிடம் புரியவைக்கிறார்கள்.

இருவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்களே சேர்த்து வைக்கிறார்கள்.

''என்ன செய்வீங்களோ? ஏது செய்வீங்களோ தெரியாது. அவ ஒரு ராத்திரி கூட அவன் கூட தங்க கூடாது. எப்படியாவது அவளைக் கொண்டு வந்து சேர்க்கணும். அவ ஒரு ராத்திரி அவன் கூட தங்கிட்டான்னா இனிமே எப்பவும் இந்த வாசப்படிய மிதிக்கக்கூடாது.'' என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ''இந்த வீட்ல அடியெடுத்து வைக்கக்கூடாது. அப்படி வேணும்னா இழுத்துட்டு வந்து மாட்டுத் தொழுவத்துல கட்டிப்போடுங்க'' என்று சொல்லும் ஷாலினியின் அம்மா உங்க மருமகளை எடுத்துக்குங்க. அவ ஜீவாவை அவ கிட்டயே கொடுத்திடுங்க என்று கண்ணீர் உதிர்ப்பார்.

விஜய்யும் ஷாலினியும் இணைவார்கள்.

 

ஜான், ஜெனிக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறான். அந்த மெசேஜ் அவன் காதலுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது.

அந்த சாம்பிள் மெசேஜ்:

 

*அடி, திட்டு, உதாசினப்படுத்து

அதோட சேத்து காதலிக்கவும் செய்... ஜெனி!

 

*போதும் போதுங்கற அளவுக்கு காதலிச்சிருக்கேன்,

ஆனாலும் போதாது... ஜெனி!

 

*ஜெனி,

தூரத்தில் இருக்கும்; நெருக்கமானவள்!

*என்னால மறுபடிகாதலிக்க முடியும்,

ஆனா அவளும் ஜெனியா இருக்கணும்!

 

*முதல் நாள் அந்த பதினொன்னாவது எஸ்.எம்.எஸ் ஞாபகம் இருக்கா ஜெனி?

அந்த 'ஐம் வித் யூ ஃபார் எவர்!' அனுப்பிச்சதே நீதானடி!

 

*உன்கிட்ட சொல்லவேண்டியது! ஆனா, உன்னத் தவிர எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் ஜெனி,

 

*நமக்குள்ள,

நமக்குன்னு மட்டும் ஒரு காதல் இருந்துச்சு!

இப்பவும் இருக்குல்ல?

அத அப்பிடியே பத்தரப்படுத்தி வெச்சிரு ஜெனி!

ப்ளீஸ்...,

 

 

*இப்போ ஃபோன் பண்ணி ஒரு இடியட் சொல்லு ஜெனி,

உடனே உன் கிட்ட வந்திடுறேன்!

 

*நான் இறந்தா கூட கண்ணீர் "அஞ்சலி" போஸ்டர் ஒட்டாதீங்க,

கண்ணீர் "ஜெனி" போஸ்டர் ஒட்டுங்க!

 

ஜெனியின் சத்தியத்தை ஜானின் மெசேஜ்கள் கரைத்துவிட்டன.

ஜானின் அம்மா சர்ச்சில் ஜெனியிடம் பேசி ஜானைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் வாங்கிவிட்டார். ஜானின் அப்பா ஜெனி பெற்றோரிடம் சம்மதம் வாங்கப் போகிறார்.

காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் நிஜ வாழ்விலும் நடக்க நாமும் வாழ்த்துவோம்.

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-9-காதலுக்கு-மரியாதை-செய்தவர்கள்/article7611940.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.