Jump to content

’என் வாழ்க்கையில் சிவக்குமார் சொன்னது பலித்தது!' - நெகிழும் ரஜினி


Recommended Posts

’என் வாழ்க்கையில் சிவக்குமார் சொன்னது பலித்தது!' - நெகிழும் ரஜினி

rajini1111_12170.jpg

நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. 

ரஜினிகாந்த், கடந்த 12ம்தேதி அன்று சிவகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. மனம்திறந்து சிவகுமாரைப் பாராட்டிய ரஜினி, ‘சிவகுமார் சொல்வதைக் கேட்டால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Rajini%20letter_11189.jpg ‘மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மற்றொன்று ‘கவிக்குயில்’. அவருடன் பழகியதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த கணத்தில் நான் மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நேரம். மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்கள் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் ‘இந்த பழக்கங்களை எல்லாம் விட்டுவிடு ரஜினி, நீ பெரிய நடிகனாக வருவே, இந்த கெட்டப் பழக்கங்களால உன்னோட உடம்பை கெடுத்துக்காத’ எப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாரு. என்னடா இந்த ஆள் நம்மள நிம்மதியா விடமாட்டேங்கறாரே என்று எனக்கே சில நேரங்களில் சலிப்பாயிருக்கும்.

என் மேலே அவருக்கு அந்த அளவுக்கு அன்பு, பாசம், நம்பிக்கை. அவர் நல்ல மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். ஒழுக்கமானவர், நேர்மையானவர், ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர். இதுபோன்ற மனிதர்கள் சொல்லுவதெல்லாம் பலிக்காமல் இருக்காது; அவர் சொன்னது பலித்தது. நான் பெரிய நடிகனும் ஆனேன். அவர் பேச்சைக் கேட்காததினால் என்னுடைய உடம்பையும் கெடுத்துக்கொண்டேன்.

இன்னைக்கும் அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை. அவர் சொல்கிறபடி நடந்துகிட்டா ஆரோக்யமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். இந்த மாபெரும் கலைஞன், மனிதன் நீடூழி வாழ்கவென்று ஆண்டவனை வேண்டி இந்த அவருடைய 75-வது பிறந்தநாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

-அன்புடன்
ரஜினிகாந்த்

 

தன் மகன்களுக்கு மட்டுமல்ல, முடிந்தவரை அனைவருக்கும் ஒழுக்கம் குறித்தும், நல்ல பழக்க வழக்கங்கள் குறித்து தொடர்ந்து கூறிவருபவர் சிவகுமார்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/70932-rajinikanths-open-letter-to-sivakumar.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.