Jump to content

க்ரைம் தொடர்கதை.... ஒன் + ஒன் = ஜீரோ


Recommended Posts

க்ரைம் தொடர்கதை.... ஒன் + ஒன் = ஜீரோ அத்தியாயம் 1

 

 

 -ராஜேஷ்குமார் விவேக் கூகுளில் வலைவீசி 'ஸ்காட்லாந்து யார்ட்' போலீஸ் பற்றிய ஒரு தகவலைத் தேடிக் கொண்டிருக்க, ரூபலா கையில் அன்றைய நாளிதழோடு பக்கத்தில் வந்து நின்றாள்.

"என்னங்க?"

"சொல்லு ரூபி" "இந்த பேப்பர்ல போட்டிருக்கிற செய்தி உண்மைதானா?"

"என்ன போட்டிருக்கான்?"

"நீங்களே படிங்க" ரூபலா நாளிதழை நீட்ட விவேக் வாங்கிப் படித்தான்.

Rajeshkumar's One + One = Zero crime series

"மீன் நல்ல உணவுதான். ஆனால் அந்த மீனும் இப்போது சிறிது சிறிதாக விஷத்தன்மை அடைந்து கொண்டிருக்கிறது. இதில் ஆபத்தானது கடல் மீன்கள். பூமியில் உருவாகும் அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேர்கின்றன. ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு இருக்கிறது. எதையும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதுதான் உப்பு. எனவே தன்னிடம் வந்து சேர்கிற கழிவுகளையும் அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறது. கடல் நீரில் வாழும் பலவகை மீன்கள் அந்த விஷப் பொருட்களையெல்லாம் விழுங்கி தன் உடலில் பாதுகாக்கிறது. எவ்வளவு அடர்த்தியான ரசாயனக் கழிவுகள் கடல் நீரில் இருந்தாலும், அவற்றை உட்கொண்டு தனது உடலிலும், கொழுப்பிலும் தேக்கி வைக்கக் கூடிய சக்தி மீன்களுக்கு உண்டு. இந்த மீனின் உடம்பில் இருக்கும் விஷப் பொருளில் மிகவும் முக்கியமானது பாதரசம். மீன் பெரிதாக வளர வளர விஷப் பொருட்களின் அளவும் வளர்ந்து கொண்டே போகும். அந்த மீன்களை எவ்வளவு கொதிக்க வைத்து சமைத்தாலும் சரி, விஷப் பொருட்கள் முழுமையாய் நீங்குவது இல்லை. தொடர்ந்து கடல் மீன்களை உணவாக எடுத்துக் கொள்பவர்கள் உடம்பில் PCB எனப்படும் ஒரு வித ரசாயனப் பொருள் சேரும். PCB என்பதன் விரிவாக்கம் Poly Chlorinated Biphenyls. இது ஆபத்தான ஒன்று என்றும் மனிதனின் ஆரோக்கியத்தைப் பதம் பார்க்கும் புதுப் புது நோய்களை உண்டாக்கும் சாத்தியக் கூறுகள்கொண்டது என்பும் உணவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்."

 

-விவேக் செய்தித் தாளில் இருந்த மீன் விவகாரத்தைப் படித்துவிட்டு ரூபலாவிடம் நிமிர்ந்தான். ஒரு மெல்லிய சிரிப்போடு கேட்டான்.

"இனிமே மீன் சாப்பிடலாமா வேண்டாமான்னு கேட்கப்போறே?"

"ஆமா..."

"மேடத்தோட சந்தேகத்துக்கு நான் பதில் சொல்லலாமா பாஸ்...?" வாசலில் குரல் கேட்க, விவேக்கும் ரூபலாவும் திரும்பிப் பார்த்தார்கள்.

விஷ்ணு நின்றிருந்தான். ரூபலா கடிகாரத்தை ஏறிட்டாள். மணி சரியாய் 1.15.

விஷ்ணு மெல்ல நடந்து உள்ளே வந்தான்

 

. "பயப்படாதீங்க மேடம். நான் பொன்னுசாமி ஹோட்டலுக்குப் போய் ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாத்தையும் ஒரு கை பாத்துட்டுத்தான் வர்றேன். இனி மூணு மணி வரைக்கும் எனக்குப் பசிக்காது. அதுக்கப்புறம் நீங்க எனக்கு வெங்காய பஜ்ஜி போட்டுக் கொடுத்தாலும் சரி, உருளைக் கிழங்கு போண்டா போட்டுக் கொடுத்தாலும் சரி... உங்க அன்புக்குக் கட்டுப்பட்டு பத்தோ பதினைஞ்சோ சாப்பிடுவேன்..."

 

ரூபலா தன் கையில் வைத்திருந்த நாளிதழைச் சுருட்டி விஷ்ணுவின் தலையில் அடித்தாள்.

" என்னோட சந்தேகத்துக்கு பதில் சொல்லப் போறதாய் சொன்னியே... சொல்லு... கடல் மீன்கள் சாப்பிடறது நல்லதா கெட்டதா?"

"ரொம்ப ரொம்ப நல்லது மேடம்...."

 

"பின்னே மீன் விஷமாயிட்டு வருதுன்னு பேப்பர்காரன் போட்டிருக்கானே...?"

"மேடம்... இதெல்லாம் ஒரு பரபரப்புக்காக போடற செய்தி. கடலில் கழிவுகள் போய்க் கலக்கறது உண்மைதான். ஆனா அந்தக் கழிவுகளை எல்லாம் சாப்பிட கடலுக்குள்ளே வேறு பல உயிரினங்கள் இருக்கு. நாம சாப்பிடற மீன்கள் எல்லாம் கழிவுகளை உதாசீனம் பண்ணிட்டு கடலுக்குள்ளே ஃபைவ் ஸ்டார் ஃபுட்டைத்தான் சாப்பிடும். நீங்க எந்த கடல் மீனைச் சாப்பிட்டாலும் சரி, அதுல ஒமேகா -3 ஹவுஸ்ஃபுல். ஒரு மனுஷனோட மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 ரொம்ப ரொம்ப முக்கியம். பாஸும் நானும் இன்னிக்கு மிகப் பெரிய அறிவாளிகளாய் இருக்கிறதுக்குக் காரணமே கொல்கத்தாவுக்குப் போய் மூணு மாச ட்ரெய்னிங் பீரியட்டில் இருந்தப்ப நாங்க தினமும் சாப்பிட்ட மீன்தான்..."

 

"என்னங்க... இவன் சொல்றது உண்மையா...?"

ரூபலா கேட்டுக் கொண்டிருந்தபோதே விவேக்கின் செல்போன் ஒளிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

ஒரு புது எண்.

எண்ணை ஒற்றை விரலால் தேய்த்துவிட்டு காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தான்.

"எஸ்"

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

"ஸார்.... நான் மீனலோசனி. 'வளையோசை' பெண்களுக்கான மாதப்பத்திரிகையின் எடிட்டர். போன வாரம் மியூசிக் அகாடமியில் நடந்த ஒரு ஃபங்ஷனில் பார்த்துப் பேசினோம். ஞாபகம் இருக்கா சார்?"

விவேக் லேசாய் மலர்ந்தான்.

"ஓ... ! நீங்களா மேடம்? ஸாரி.... நீங்க எனக்கு உங்க செல்போன் நம்பரைக் கொடுத்தீங்க.. நான்தான் அதை save பண்ண மறந்துட்டேன்..."

"நோ ப்ராப்ளம் ஸார்... இப்பவாவது என்னோட நம்பரை save பண்ணிக்குங்க"

"ஷ்யூர் ... ஷ்யூர்..! பை த பை... என்ன விஷயம் மேடம்... திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க?"

"பார்த்தீங்களா... மறந்துட்டீங்க?"

விவேக் திகைத்தான்.

"என்ன மறந்துட்டேன்?"

"இன்னிக்கு என்ன கிழமை?"

"ஞாயிற்றுக்கிழமை"

"இன்னிக்கு மத்தியானம் மூணு மணியிலிருந்து நாலு மணிக்குள்ளே எங்க பத்திரிகைக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுக்க ஒப்புதல் கொடுத்து இருக்கீங்க.. ஸார்"

"ஓ... ஸாரி... எப்படியோ மறந்துட்டேன்"

"எனக்குத் தெரியும் ஸார் ...உங்களுக்கு இருக்கும் டைட் ஷெட்யூலில் என்னோட பத்திரிகை , பேட்டி இதெல்லாம் ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சுத்தான் ஒரு 'ஜென்டில் ரீமைண்டர் ' கொடுக்கலாம்ன்னுதான் போன் பண்ணினேன். இது ஒண்ணும் தப்பு இல்லையே ...?

"நோ...நோ... சரியான நேரத்துல எனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தியிருக்கீங்க ..."

 

"அப்படீன்னா என் பத்திரிகையோட சீப் சப்போர்ட்டர் சுடர் கொடியை மூணு மணிக்கு உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டுமா ஸார் ? ஒரு மணி நேரத்துக்குள்ளே பேட்டி முடிஞ்சிடும். பேட்டியோட நோக்கம் இப்பொது நம் நாட்டில் பெண்கள் ஒரு வித பயத்தோடுதான் வெளியே போய்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்காங்க. தமிழ்நாட்டில் திறமையான காவல்துறை இருந்தும் பெண்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மை? வேலைக்குப் போகும் பெண்கள் எது மாதிரியான ஜாக்கிரதை உணர்வோடு நடக்கணும்? இது மாதிரியான கேள்விகளுக்கு ஒரு க்ரைம் ப்ரான்ச் அதிகாரி என்கிற முறையில் நீங்க சொல்ற பதில்கள் பெண்களுக்கு ஒரு பாடமாய் அமையணும்ன்னு விரும்பறேன்"

 

"ஷ்யூர் ...ஷ்யூர்...என்னைப் பேட்டி எடுக்க உங்க பத்திரிகையிலிருந்து யார் வரப்போறதாய் சொன்னீங்க மேடம்?"

"பத்திரிகையோட சீப் ரிப்போர்ட்டர் சுடர்கொடி.முக்கியமான வி.ஐ .பி க்களைப் பேட்டி எடுக்க அந்தப் பெண்ணைத்தான் அனுப்பி வைப்பேன்.

எம்.ஏ ஜர்னலிஸம் படிச்ச பொண்ணு. சரியா மூணு மணிக்கு அங்கே இருப்பா..."

"நான் வெயிட் பண்றேன் மேடம்..."

"தேங்க்யூ !"

விவேக் செல்போனை அணைக்க ரூபலா கேட்டாள்.

"போன்ல யாருங்க...பேட்டி கீட்டின்னு காதுல விழுந்தது?"

விவேக் விபரம் சொல்ல, விஷ்ணு பரவசமானான்.

"பாஸ்...அந்த ரிப்போர்ட்டர் பொண்ணோட பேரு என்னன்னு சொன்னீங்க?"

"சுடர் கொடி "

ரூபலா சிரித்தாள் "டேய் விஷ்ணு! உணர்ச்சி வசப்பட்டு கற்பனைகளை வளர்த்துக்காதே....நான் காலேஜில் படிக்கும்போது மலர்கொடின்னு ஒரு பொண்ணு என் கூட படிச்சுட்டு இருந்தா...அவளோ வெயிட் எவ்வளவு தெரியுமா 92 கிலோ...சேலையைக் கட்டிட்டு வந்தான்னா ஒரு பேரலுக்கு துணியைச் சுத்தின மாதிரி இருக்கும்..."

 

"எனக்கென்னமோ இந்த சுடர்கொடி பத்து வருஷத்துக்கு முந்தி இருந்த நயன்தாரா மாதிரி இருப்பான்னு என் மனசுக்குள்ளேயிருந்து ஒரு பட்சி சொல்லிகிட்டே இருக்கு மேடம்...."

 

"அந்தப் பட்சியும் ஏமாற்றப் போவுது...நீயும் ஏமாறப்போரை...அந்த சுடர்கொடி கன்னங்கறேன்னு அண்டங்காக்கை மாதிரி வந்து நிக்கப்போறா..."

"இல்ல மேடம்...எனக்குள்ளே இருக்கறது வெறும் பட்சி இல்லை. பட்சி ரூபத்தில் இருக்கிற ஒரு சித்தர் "

"அவர் எப்படா உன்னோட மனசுக்குள்ளே என்ட்ரி ஆனார்?"

"ஆறு மாசத்துக்கு முன்னாடி மேடம் ஒரு பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையை நான் கிரிவலம் வரும்போது என் கூடவே நீளமாய் தாடி வெச்சுகிட்டு ஒரு பெரியவர் வந்தார். ஏதேதோ பேசிக்கிட்டே வந்தார். திடீர்ன்னு பார்த்தா அவரைக் காணோம். நான் எவ்வளவோ தேடித் பார்த்தும் என்னோட பார்வையில் அவர் பாடலை. அப்புறம் கோயிலுக்குள்ளே சாமி தரிசனம் பண்ணும்போது ஒரு பூசாரிக்கிட்டே இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அவர் கேட்டுட்டு என்ன சொன்னார் தெரியுமா மேடம்....?"

 

"அவர் 'கப்ஸா' கதையையும் நீயே சொல்லிடு...உன்னை மாதிரி அடித்துவிட எனக்குத் தெரியாது"

 

"க்ரேட் இன்சல்ட்! நான் உங்ககிட்டே இதைப் பத்தி பேசமாட்டேன் மேடம்... நான் பாஸ்கிட்டே பேசுகிறேன். பாஸ், நீங்களாவது என்னை நம்பறீங்களா...இல்லை நீங்களும் மேடம் கட்சிதானா ..?"

 

"உன்னோட தெய்வீகக் கதையை நான் நம்பறேன்...நீ சொல்லுடா... அந்தப் பூசாரி உன்கிட்டே என்ன சொன்னார்...?"

 

"உன் கூட கிரிவலத்தில் வந்தது சாதாரண பெரியவர் இல்லை. அவர் ஒரு சித்தராய் இருக்கலாம். உன்னோட தலைக்குப் பின்னால் லேசாய் ஒரு வெளிச்சவட்டம் தெரியறதால அந்த சித்தர் உனக்குள்ளே ஐக்கியமாயிட்டாருன்னு சொன்னார். "

ரூபலா விஷ்ணுவிடம் திரும்பினாள்.

 

"என்னங்க...இவன் கூட கதை பேசிட்டிருக்க இது நேரம் இல்லை. நீங்க லஞ்ச் சாப்பிட்டு ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்தாதான் அந்தப் பத்திரிக்கைக்காரப் பொண்ணுக்கு பிரெஷ்ஷா பேட்டி கொடுக்க முடியும்!"

"மேடத்துக்கு எப்பதான் இந்த விஷ்ணுவோட அருமையும் பெருமையும் புரியுமோ..? நீங்க போய் சாப்டுட்டு வாங்க பாஸ். அதுவரைக்கும் நான் டி .வி.யில் 'சந்திரலேகா' பார்த்துட்டிருக்கேன்...!

 

" விவேக்கும் ரூபலாவும் உன்னேயிருந்த டைனிங் டேபிளை நோக்கிப் போக விஷ்ணு சோபாவுக்கு நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ரிமோர்ட் கண்ட்ரோலைத் தட்டினான்.

எதோ ஒரு தொலைக்காட்சியின் செய்தித் சேனலில் அந்த 'BREAKING NEWS' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

சற்றுமுன் வேளச்சேரி ரயில் நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் சுடர்கொடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

பட்டப் பகலில் படு பயங்கரம்.

வெட்டிய மர்ம ஆசாமி தப்பி ஓட்டம். விஷ்ணு அதிர்ந்து போனவனாய் தள்ளிச்சையாய் எழுந்து நின்றான்.

கழத்து நரம்புகள் புடைக்கக் கத்தினான்.

"பாஸ்!

" விஷ்ணுவின் அலறலைக் கேட்டு டைனிக் டேபிளில் உட்கார்ந்திருந்த விவேக்கும், அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த ரூபலாவும் அறையினின்றும் புயலாய் வெளிப்பட்டார்கள்.

-தொடரும்...

Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-crime-series-01-265951.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ... - அத்தியாயம் 2

ராஜேஷ்குமார் விவேக்கும் விஷ்ணுவும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனைத் தொட்டபோது ஒட்டுமொத்த ஸ்டேஷன் வளாகமும் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

 

மௌனமும் பயமும் கலந்த முகங்களோடு ஜனக்கும்பல் ஆங்காங்கே தேங்கி ஒருவித மிரட்சியோடு நின்றிருந்தது.

இன்ஸ்பெக்ட்டர் ஒருவர் விவேக்கை எதிர்கொண்டு சல்யூட் வைத்து தளர்ந்தார்.

"எந்த பிளாட்பார்ம் ?" விவேக் நடந்து கொண்டே கேட்டான்.

"ரெண்டாவது ஸார் "

"ஆள் கிடைச்சானா ?"

 

"தப்பி ஓடிட்டான் ஸார்.... கையில் அரிவாள் வச்சிருந்ததால யாரும் அவனை துரத்திக்கிட்டு போகலை....!"

"சம்பவத்தை நேர்ல பார்த்தது யாரு ? "

" ஒரு பூக்காரி ஸார்..."

இரண்டாவது பிளாட்பாரத்தின் மையத்தில் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட சுடர்கொடியின் உடல் ஒரு மூட்டை மாதிரி தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டே வந்தார்.

"மத்தியான நேர ஸ்டேஷன் ஸார். கூட்டமேயில்லை. கொலையாளிக்கு வசதியாய் போச்சு. எங்கே வெட்டினா உடனே உயிர் போகும்ன்னு தெரிஞ்சு அந்தந்த இடமாய்ப் பார்த்து சாவகாசமாய் வெட்டிட்டு போயிருக்கான் ஸார்...! "

 

விவேக்கும் விஷ்ணுவும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட உடம்புக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.

இன்ஸ்பெக்டர் கண்ணசைக்க, கான்ஸ்டபிள் ஒருவர் கையில் வைத்து இருந்த லாட்டியால் துணியை விளக்க சுடர்கொடி தாறுமாறான கோலத்தில் ரத்தச் சகதியில் மிதந்து கொண்டிருந்தாள். தலையில் விழுந்த வெட்டு முகத்தை சரிபாதியாய் பிளந்து வைத்திருந்தது. துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளும் அவளுடைய வயிற்றின் மேல் எடுத்து வைக்கப்பட்டிருக்க, வலது கையில் பாதி காணாமல் போயிருந்தது. வாய் உலர்ந்து போன விஷ்ணு விவேக் காதருகே, "பாஸ்" என்றான்.

 

"கொலை பண்ணினவன் ஒரு ப்ரொபெஷனல் கில்லர் கிடையாது"

 

 " எப்படிச் சொல்றே ?"

" இது ஒரு மாதிரி எமோஷனல் அண்ட் ப்ரூட்டல் மர்டர் பாஸ் ... இந்த மரணத்துக்குப் பின்னாடி ஒரு வெறித்தனமான காதல் இருந்திருக்கணும். அதான் இப்படி ஒரு அரிவாள் அராஜகம். கையில் அரிவாளை வச்சிக்கிட்டு ருத்ரதாண்டவமே ஆடிட்டுப் போயிருக்கான் "

"விஷ்ணு !"

"சொல்லுங்க பாஸ்..."

" 'வலையோசை' பத்திரிக்கையின் ஆசிரியர் மீனலோசனிக்கு போன் பண்ணி அவங்களை ஸ்பாட்டுக்கு வரச் சொல்லிட்டியா ?"

"கார்ல வரும்போதே சொல்லிட்டேன் பாஸ்.. நியூசைக் கேட்டதுமே அந்த அம்மா நொறுங்கிப் போய்ட்டாங்க... ஒரே அழுகை... அவங்களைச் சமாதானப்படுத்தறதுக்கு என்னோட உடம்பிலிருந்து 250 கலோரியை செலவு பண்ண வேண்டியிருந்தது ."

விவேக் விஷ்ணுவின் புலம்பலைப் பொருட்படுத்தாமல் தனக்கு பக்கத்தில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரிடம் திரும்பினான்.

"சுடர் கொடியோட ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு தகவல் கொடுத்துட்டிங்களா ?"

 

" ஸாரி ஸார்...! சுடர்கொடியோட ஃபேமிலி மெம்பர்ஸைப் பத்தி எந்த தகவலும் கிடைக்கவில்லை ."

 

"சுடர் கொடிக்கிட்டே செல்போன் இருந்து இருக்குமே?"

 

"செல்போனை தேடிப் பார்த்தோம்... கிடைக்கலை... கொலையாளி எடுத்துட்டு போயிருக்கலாம்... சம்பவம் நடந்த போது சுடர் கொடியின் தோளில் இந்த ஒரு கைப்பை மட்டும்தான் இருந்தது ஸார். இந்த கைப்பையை ஓபன் பண்ணிப் பார்த்த போதுதான் இந்த பெண் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்கிற விஷயம் தெரிய வந்தது."

" அந்த கைப்பை எங்கே...?"

கான்ஸ்டபிள் ஒருவர் பத்திரப்படுத்தி வைத்து இருந்த கைப்பையை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதை விவேக்கிடம் கொடுத்தார்.

விவேக் வாங்கிப் பிரித்தான்.

உள்ளே சொற்பமாய் சில பொருள்கள். வலையோசை பத்திரிக்கையின் சீஃப் ரிப்போர்ட்டர் என்பதற்கான ஒரு ஐ.டி. கார்டு. இரண்டு பேனாக்கள், ஒரு கூலர் கண்ணாடி. வித விதமான நெற்றி பொட்டு ஸ்டிக்கர்களோடு கூடிய ஒரு அட்டை. பேட்டி எடுக்கும் போது செய்திகளைக் குறித்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகம். சில ரப்பர் பேண்டுகள்.

விவேக் நிமிர்ந்தான். " இந்தக் கைப்பையில் இருந்ததே இவ்வளவுதானா?"

 

"ஆமா ஸார்...."

"சம்பவத்தைப் பார்த்தது ஒரு பூக்காரின்னு சொன்னீங்க... அந்த அம்மாவைக் கூப்பிடுங்க...."

இன்ஸ்பெக்டர் பின்னால் திரும்பிப் பார்த்து சற்றுத் தொலைவில் பூக்கூடையும் கையுமாய் கலவர முகத்தோடு உட்க்கார்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்ணை கையசைத்து வரச்சொன்னார்.

அந்த பெண் பெரிய நெற்றிப் பொட்டோடும், பயம் இன்னமும் பிடிவாதமாய் இடம் பிடித்து இருந்த விழிகளோடும் விவேக்கிற்கு எதிராய் வந்து நின்றாள்.

"உம் பேர் என்னம்மா....?

"சிநேகா" வெற்றிலைக் காவி படிந்து சிதிலமான பல்வரிசையைக் காட்டி பூக்காரி பதில் சொல்ல விஷ்ணு மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு உண்மையான சிநேகாவை நினைத்துக் கொண்டு அனல் பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

விவேக் அந்த பெண்ணை நெருங்கி நின்றான்

. "சம்பவத்தை நீ பார்த்ததாய் இன்ஸ்பெக்டர் சொல்றார். நீ பார்த்தியா?"

"ஆமாங்கய்யா "

"என்ன நடந்தது.... அப்படியே சொல்லு ....!"

பூக்காரி குரல் கம்மியது.

"அய்யா...! மணி ஒண்ணு இருக்கும். அதோ அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு தான் பூ வியாபாரம் பண்ணிட்டிருந்தேன்.... கடற்கரை மார்க்கத்திலிருந்து வந்த ட்ரெய்ன் நின்னது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. பொம்பளைங்க இருந்த பெட்டி எனக்கு நேரா வந்து நின்னது. ரெண்டே ரெண்டு பொண்ணுங்க மட்டும்தான் பெட்டியிலிருந்து எறங்கினாங்க.... அதுல ஒரு பொண்ணு வேகமாய் இறங்கி போயிடுச்சு... ஒரு பொண்ணு மட்டும் இறங்கி சுத்தும் முத்தும் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.. அந்த சமயத்துல ஒரு ஆள் வந்தான். டாக்டர் ஆபரேஷன் பண்ணும் போது தன்னோட முகத்துக்கு பச்சக் கலர்ல ஒரு துணி கட்டுவாரே அது மாதிரி அவனும் பச்சைக் கலர்ல முகமூடி மாதிரி போட்டிருந்தான்."

 

விவேக் குறுக்கிட்டு கேட்டான்

"முகம் உனக்கு சரியா தெரியலை? "

"தெரியலைங்கய்யா"

"சரி... அப்பறம்....என்ன நடந்தது... சொல்லு?

" "வந்தவன் அந்தப் பொண்ணு கிட்ட ஏதோ கேட்டான்.

பதிலுக்கு அந்தப் பொண்ணு எதுவும் பேசாம நடந்து போக அவன் தன் முதுகுத் தோல் பையில் மறைச்சு வச்சிருந்த வீச்சரிவாளை எடுத்து கண்டமேணிக்கு அந்தப் பொண்ணை வெட்ட ஆரம்பிச்சான். ரத்தம் நாளா பக்கமும் தெறிச்சு விழ தலை துண்டாகி அந்த பொண்ணு குப்புற விழுந்தா.... அப்பவும் அவன் விடலை. ரத்தம் சொட்ட சொட்ட அவ உடம்பை வெறிபிடிச்சவன் மாதிரி கொத்தி எடுத்தான். ஸ்டேஷன்ல கூட்டம் இல்ல ... பார்த்துகிட்டு இருந்த ரெண்டொருத்தரும் அலறியடிச்சுக்கிட்டு ஓடிப் போய்ட்டாங்க. நானும் பயந்து போய் அந்த தூணுக்குப் பின்னாடி போய் ஒண்டிக்கிட்டேன்... கொஞ்ச நேரம் கழிச்சு எட்டிப் பார்த்தேன். அவன் அறிவாளோடு தூரத்துல வேகமாய் ஓடிட்டு இருந்தான். எனக்கு உடம்பு 'வெட வெட' ன்னு வந்து அப்படியே மயக்கமா உட்கார்ந்துக்கிட்டேன். கண்ணுக்கு லட்சணமாய் ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி உயிரோட இருந்த பொண்ணு என் கண்ணு முன்னாடியே துண்டு துண்டாய் இப்ப வெட்டப்பட்டதை நினைச்சாலும் கண்ணை இருட்டிக்கிட்டு மயக்கம் வர்ற மாதிரி இருக்குங்கய்யா...!"

 

"மறுபடியும் அந்த ஆளைப் பார்த்தா உன்னால அடையாளம் கண்டுபிடிச்சுட முடியுமா...?"

"அந்த ஆளோட மூஞ்சியையே நான் பாக்காதப்ப எப்படீங்கய்யா சொல்ல முடியும்?"

விவேக்கின் பார்வை இப்போது இன்ஸ்பெக்டரின் மேல் நிலைத்தது. " ஸ்டேஷன்ல இருக்கற சி.சி.டீ.வி. காமிராக்களில் கொலையாளியோட நடமாட்டம் பதிவாகியிருக்கா...?"

"ஸாரி ஸார் ... இந்த ஸ்டேஷனில் இருக்கற ஒரு சி.சி.டீ.வி. காமிரா கூட வொர்கிங் கண்டிஷனில் இல்லை... அதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டுதான் கொலையாளி தைரியமா செயல்பட்டிருக்கான். "

"நீங்க ரயில்வே போலீஸ் தானே ?"

"ஆமா ஸார்"

"ஆர் யூ அஷேம்டு டு பி ஏ போலீஸ் ஆபிஸர்...? எத்தனையோ பேர் வந்து போகிற ஒரு இடம் சரியான பாதுகாப்புக்கு உட்படுத்தியிருக்க வேண்டாமா...?"

"ஸார்... இந்த விஷயத்தை என்னோட மேலதிகாரிகளின் கவனத்துக்கு எத்தனையோ முறை கொண்டு போயிருக்கேன்.

அவங்க அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாத போது நான் என்ன பண்ண முடியும் ஸார். அயாம் டோட்டலி ஹெல்ப்லஸ்...!"

விவேக் மேற்கொண்டு கோபமாய் பேசும் முன்பு விஷ்ணு அவன் காதருகே "பாஸ்" என்றான்.

"என்ன?"

"வளையோசை பத்திரிகையின் ஆசிரியர் மீனலோசனி அந்த அம்மாதானே? யாரோ ஒரு பொண்ணு தாங்கலாய் படிச்சி கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்க...!"

விவேக் திரும்பிப் பார்த்தான்.

மீனலோசனிதான்! அழுது அழுது களைத்துப்போன கண்களோடும் வீங்கிய முகத்தோடும் பார்வைக்குத் தட்டுப்பட்டாள்.

விவேக்கைப் பார்த்ததும் அவளுக்குள் மறுபடியும் ஒரு அழுகை வெடித்தது. "ஸார்... உங்களைப் பேட்டி எடுக்க வர்றதுக்காக ஏகப்பட்ட கேள்விகளை தயார் பண்ணிக்கிட்டு சந்தோஷமாய் ஆபீசிலிருந்து புறப்பட்டா... அவளுக்கு இப்படி ஒரு முடிவு இந்த வேளச்சேரி ஸ்டேஷனில் காத்திருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை...!"

 

இதோ பாருங்க மேடம்... திஸ் ஈஸ் ஹைலி அன்ஃபார்ச்சுனேட். இனி அழுது புலம்பி பிரயோஜனமில்லை. கொலையாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதுக்கு உங்க ஒத்துழைப்பு வேணும். சுடர்கொடியோட ஃபேமிலி மெம்பர்ஸுக்கு இதுவரையிலும் தகவல் தெரிவிக்கப்படலை. அவங்க எங்கே இருக்காங்க?"

மீனலோசனி கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

"சுடர் கொடிக்கு அம்மா அப்பா கிடையாது. ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். ராஜா அண்ணாமலைபுரத்துல வீடு..."

"அண்ணனோட பேர் என்ன?"

"திலீபன்" "

அவரோட ஃபோன் நம்பர் உங்ககிட்ட இருக்கா?"

"இல்லையே...!"

மீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே விஷ்ணுவின் குரல் மறுபடியும் அவன் காதருகே கேட்டது.

"பாஸ்...! ஒரு முக்கியமான துப்பு கிடைச்சிருக்கு. ரெண்டு நிமிஷம் அப்படி ஓரமாய் வர்றீங்களா?"

விவேக் விஷ்ணுவை உன்னிப்பாய்ப் பார்த்தான்.

"என்ன துப்பு...?"

"ஜெபமாலை" என்றான் விஷ்ணு.

(தொடரும்...)

Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-one-plus-one-zero-crime-series-part-2-266478.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ... - அத்தியாயம் 3

 

விஷ்ணு சொன்னதைக் கேட்டு விவேக்கின் இரண்டு புருவங்களும் சில மில்லி மீட்டர் உயரத்துக்கு மேலேறின.

"என்னடா சொல்றே... ஜெப மாலையா?"

"ஆமா பாஸ்... என்னோட பார்வைக்குக் கிடைச்ச ஒரு சின்ன துப்பு. சின்ன வயசிலயே அதாவது என்னோட டீன் ஏஜ் வயசிலயே எனக்கு கருடப் பார்வைன்னு எதிர்வீட்டு மாமி சொன்னது இப்போ என்னோட ஞாபகத்துக்கு வருது பாஸ்!"

 

"டேய் போதுண்டா... எங்கே அந்த ஜெப மாலை? கொடு பார்க்கலாம்... அது எப்படி சுடர் கொடியோட கொலைக்கு உபயோகப்படுத்துன் பாத்துடலாம்..!"

 

"அதைக் கொடுக்க முடியாது பாஸ்... படிச்சுத்தான் பார்க்கணும்...!"

"என்னது படிச்சுப் பார்க்கணுமா?"

"ஆமா பாஸ்...!" சொன்ன விஷ்ணு அந்த சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.

"பாஸ்! இது சுடர்கொடியோட கைப்பையில் இருந்த குறிப்பு நோட்டுப் புத்தகம். ரயில்வே இன்ஸ்பெக்டர் கைப்பையை என்கிட்டே கொடுத்தபோது அதில் இருந்த நோட்டுப் புத்தகத்தை வெளியே எடுத்து மெல்லப் புரட்டிப் பார்த்தேன். உங்ககிட்ட பேட்டி எடுக்கறதுக்காக அந்த சுடர்கொடி எது மாதிரியான கேள்விகளை 'ப்ரிப்பேர்' பண்ணிட்டு வந்திருக்கான்னு படிச்சுட்டே வந்தேன். அதுல ஒரு கேள்வி அப் - நார்மலாய் இருந்தது பாஸ். அதை நீங்களே படிச்சுப் பாருங்க!"

 

சொன்ன விஷ்ணு அந்த சிறி நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வரிசையாய் எழுதப்பட்டிருந்த கேள்விகளில் ஒரு கேள்வியைச் சுட்டிக் காட்டினான். விவேக் பார்த்தான். வாய்விட்டு மெல்ல படித்தான்.

"ஜெபமாலை சொன்னதை ஒரு கேள்வியாய் கேட்டு பதிலை வரவழைக்க வேண்டும்!"

"என்ன பாஸ் ஏதாவது பிடிபடுதா?"

"யார்ரா இந்த ஜெபமாலை?"

"பாஸ்..! பொதுவா கிறிஸ்தவப் பெண்கள்தான் ஜெபமாலைன்னு பேர் வெச்சுக்குவாங்க... ப்ரஸ் ரிப்போர்ட்டர் சுடர்கொடிக்கு ஜெபமாலைங்கிற பேர்ல யாரையோ தெரிஞ்சிருக்கு. ஒருவேளை தோழியாய் கூட இருக்கலாம். அந்த ஜெயபமாலை என்கிற பெண் சொன்ன ஏதோ ஒரு விஷயம் சுடர்கொடியை பாதிச்சிருக்கலாம். அதை ஒரு கேள்வியாய்க் கேட்டு உங்கிட்டயிருந்து பதிலை வரவழைக்கிறது ஒரு நோக்கமாய் இருக்கலாம்...!"

 

விவேக் மௌனமாய் சில விநாடிகளைச் செலவழித்து அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்த எல்லாக் கேள்விகளையும் படித்துவிட்டு சற்றுத் தள்ளி நீர் நிரம்பிய விழிகளோடு நின்றிருந்த மீனலோசனியிடம் வந்தான்.

 

"மேடம்...!"

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு என்ன என்பது போல் பார்த்தாள். விவேக் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.

"உங்களுக்கு ஜெபமாலை என்கிற பேர்ல எந்தப் பெண்ணையாவது தெரியுமா?"

"ஜெபமாலை...?"

"ஆமா..."

"தெரியும்... ஆனா... அந்தப் பொண்ணை நான் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அதுவும் போன வாரம் ஒரு மத்தியான நேரம் மூணு மணி இருக்கும். அந்தப் பொண்ணு என்னோட வளையோசை பத்திரிக்கை ஆபீசுக்கு வந்தா. சுடர்கொடியைப் பார்க்கணும்னு சொன்னா. அந்த சமயத்துல சுடர்கொடி ஒரு முக்கியமான நபரை பேட்டி எடுக்கறதுக்காக தாம்பரம் வரைக்கும் போயிருந்தா. நான் சுடர்கொடி இல்லைன்னு சொன்நதும் ஜெபமாலை தன்னோட பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டா. சுடர்கொடி தன்னோட போனை 'ஸ்விட்ச் ஆஃப்' பண்ணி வெச்சிருக்கிறதால நேர்ல பார்க்க வந்ததாய் சொன்னா..."

 

"அந்த ஜெபமாலை சுடர்கொடியை எதுக்காக பார்க்க வந்தாள்னு கேட்கலையா மேடம் ?"

"கேட்டேன்... அதுக்கு அவ ஏதோ ஒரு மழுப்பலான பதிலைச் சொன்னா. நானும் பெருசா ஆர்வம் காட்டலை. நாளைக்கு காலையில் வர்றதாய் சொல்லிட்டு கிளம்பிட்டா .. என்று சொல்லி பேச்சை நிறுத்திய மீனலோசினி சற்றே பயத்தோடு கேட்டாள்.

"இப்ப எதுக்காக அந்தப் பொண்ணு ஜெபமாலையைப் பத்தி விசாரிக்கறீங்க....?"

விவேக் அந்தச் சிறிய நோட்டுப் புத்தகத்தை மீனலோசினியிடம் காட்டிக் கேட்டான். "இது சுடர்க்கொடி பேட்டி எடுக்கும்போது உபயோகப்படுத்தும் நோட்டுத்தானே...?"

அவள் பார்த்துவிட்டு தலையாட்டினாள்.

"ஆமா.." " சுடர்க்கொடி என்கிட்டே கேட்க இருந்த இந்தக் கேள்வியைப் படிச்சுப் பாருங்க மேடம் ....!"

 

மிரட்சியோடு மீனலோசினி படித்தாள் .

"ஜெபமாலை சொன்னதை ஒரு கேள்வியாய் கேட்டு பதிலை வரவழைக்க வேண்டும்."

"இதுக்கு என்ன அர்த்தம் மேடம்?"

"தெரியலையே.."

"ஜெபமாலை ஏதோ ஒரு விஷயத்தை சுடர்கொடிக்கிட்டே சொல்லியிருக்கா .

அந்த விஷயத்தை சுடர்கொடி என்கிட்டே ஒரு கேள்வியாய் கேட்டு அதுக்கான பதிலை எதிர்பார்த்து இருக்கா... இல்லையா மேடம்?"

"ஆமா..."

"அது ஏன் ஒரு பிரச்னைக்குரிய விஷயமாய் இருக்கக்கூடாது? "

"இந்தக் கேள்வியை ஜெபமாலைகிட்டேதான் கேட்கணும். அந்தப் பொண்ணோட போன் நெம்பர் கிடைச்சா போய்ப் பார்த்துடலாம்."

"அவ போன் நெம்பர் எனக்கு தெரியாதே?"

"சுடர்கொடிக்கு வேற யாராவது ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களா...?"

"ஸாரி... எனக்கு தெரியலை ..."

"வீடு எங்கேயிருக்குன்னு சொன்னீங்க.. ராஜா அண்ணாமலை புறம்தானே?"

மீனலோசினி தலையசைத்தாள்.

 

"சுடர்கொடிக்கு அம்மா அப்பா கிடையாது. அண்ணன் மட்டும்தான் இல்லையா?"

"ஆமா..."

"பேரு... திலீபன்?"

"ஆமா..."

"அவரோட போன் நெம்பர் தெரியாதுன்னு சொல்லிட்டீங்க. ராஜா அண்ணாமலைபுரத்துல வீடு எங்கேன்னு தெரியுமா...?"

"பட்டாபிராமன் தெருவுல கடைசி வீடு... ஒரு தடவை என்னோட கார்ல சுடர்கொடியை அந்தத் தெருமுனையில் ட்ராப் பண்ணியிருக்கேன்

." "ஓகே மேடம்... நீங்க புறப்படுங்க . இனிமேல் டிபார்ட்மெண்ட்டோட அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகி கொலையாளி இருக்கற திசையை மோப்பம் பிடிக்கும்... இந்தப் படுகொலைக்குப் பின்னாடி இருக்கற காரணமும் தெரியவரும்..."

 

மீனலோசினி மறுபடியும் ஒரு தடவை புதிய அழுகைக்குத் தயாராக, விவேக் மெல்ல நகர்ந்து விஷ்ணுவிடம் வந்தான்.

"கிளம்பு விஷ்ணு"

"எங்கே பாஸ்... இப்பத்தான் ஃபிரான்ஸிக் பீப்பிள் வந்து எஸ். ஓ. ஸி. பார்த்துட்டிருக்காங்க..."

"அவங்கப் பார்த்துட்டு இருக்கட்டும். நாம அதுக்குள்ள ராஜா அண்ணாமலைபுரம் போயிட்டு வந்துடலாம்"

"சுடர்கொடியோட வீட்டை உடனடியாய் 'ஸ்கேன் ' பண்ணிடலாம்னு சொல்ல வர்றிங்க ?"

"அதே தான்...!"

"ஜுட்" என்றான் விஷ்ணு.

 

*************

 

அந்தப் பிற்பகல்வேளையில் சுடர்கொடியின் வீடு இருந்த பட்டாபிராமன் தெரு ஆள் நடமாட்டம் அறவே இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது .

சாலையின் இரண்டுபக்கமும் நடுத்தர மக்களின் வீடுகள் நெருக்கியடித்துக் கொண்டு தெரிய, மொட்டை மாடியில் காயப் போட்ட துணிகள் அரசியல் கட்சிகளின் கொடிகளைப் போல் பறந்து கொண்டிருந்தன. போலீஸ் ஜீப் போய்க்கொண்டிருக்க விஷ்ணு சொன்னான்.

"என்ன பாஸ்... இந்த தெருவுல இருக்கற யாருமே டி. வி. பார்க்க மாட்டாங்க போலிருக்கே... இந்த தெருவைச் சேர்ந்த ஒரு பெண் வேளச்சேரி ஸ்டேஷனில் கொடூரமாய் கொலை செய்யப்பட்டு செய்தியை எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுகிட்டு ஒளிபரப்பிட்டு இருக்காங்க. அதனோட பாதிப்பு இந்தத் தெருவில் பாயிண்ட் ஜீரோ ஜீரோ ஒன் பர்ஸண்ட் கூட தெரியலையே? ஒரு வேளை தப்பான தெருவுக்கு வந்துட்டோமா?"

 

"இது மத்தியான நேரம்... எல்லாரும் வேலைக்குப் போயிருப்பாங்க... வீட்ல இருக்கறவங்க பகல் தூக்கத்தில் இருப்பாங்க ..."

கடைசி வீட்டுக்கு முன்பாய் போய் ஜீப் நின்றது. விவேக்கும் விஷ்ணுவும் கீழே இறங்க, வாசற்படியில் உட்கார்ந்து செல்போனை நோண்டிக்கொண்டிருந்த அந்த நபர் போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து நின்றார்.

 

விவேக் கேட்டான் .

"சுடர்கொடியோட வீடு இதுதானே...?"

"இ.... இ... இது இல்ல... ஸார்... எதிர்த்தாப்புல இருக்கற வீடு...!"

விவேக் திரும்பிப்பார்த்தான் .

வீடு பூட்டப்பட்டு கதவில் பெரிய மஞ்சள் நிற பூட்டு ஒன்று மத்தியான வெய்யிலில் பளபளப்பாய் மின்னியது.

"வீடு பூட்டிருக்கு...?"

"எனக்கு ஒண்ணும் தெரியாது ஸார்... வீட்டு ஓனர் உள்ளே இருக்கார். அவரைக் கேட்டா விபரம் தெரியும்," என்று சொன்னவர் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்து "முத்துராஜ் அண்ணே...! கொஞ்சம் வெளியே வாங்க..." என்று குரல் கொடுத்தார்.

அடுத்த சில வினாடிகளில் அந்த முத்துராஜ் பளீரென்ற வெள்ளை சர்ட்டிலும் வேஷ்டியிலும் வெளியே வந்தார். முன்பக்கம் வழுக்கை. பின் பக்கத்தலையில் மிச்சமிருந்த நரைமுடி சமீபத்தில் அடித்த 'டை'யின் காரணமாய் வயதைக் குறைத்துக் காட்ட முயற்சி செய்து தோற்றும் போயிருந்தது. ராத்தின நேர பீர்களில் புஷ்டியாய் தெரிந்தது தொப்பை.

 

போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் லேசாய் வாய் உலர்ந்தார். அரையும் குறையுமாய் வணக்கம் வைத்ததை விவேக் பொருட்படுத்தாமல் கேட்டான்.

"சுடர்கொடியும் திலீபனும் தங்கியிருக்கற வீடு இதுதானே?"

"ஆமா... ஸார்... நான்தான் ஹவுஸ் ஓனர். ஏன் ஸார் என்ன விஷயம்? "

"சொல்றேன்....வீடு பூட்டியிருக்கு. ரெண்டு பேரும் எங்கே போயிருக்காங்க?"

"அந்தப் பொண்ணு ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்ட்டரா வேலை பார்க்குது ஸார். அண்ணன் திலீபன் ஒரு மெடிக்கல் ரெப். வாரத்துல அஞ்சு நாள் வெளியூர்."

"இப்ப திலீபன் எங்கே...?"

 

"ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் ஹைதராபாத் புறப்பட்டுப் போனார் ஸார்...!"

"அந்த பொண்ணு சுடர்க்கொடி....?"

"அது சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் வந்திடும் ஸார். ஏன் ஸார்... என்ன விஷயம் ஸார்?"

"இந்த வீட்டுக்கு மாற்றுச் சாவி உங்ககிட்டே இருக்கா...?"

 

"அது எப்படி ஸார் இருக்கும்... குடியிருக்கறவங்க வேற பூட்டைப் போட்டுக்குவாங்களே !"

விவேக் விஷ்ணுவைப் பார்க்க அவன் தன் பேண்ட் பாக்கெட்டில் எப்போதும் வைத்து இருக்கும் 'லாக் ரிலீவர் டிவைஸோடு' கதவில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டை நோக்கிப் போனான்.

வீட்டு ஓனர் முத்துராஜ் பதட்டமானார்.

"என்ன பிரச்னை ஸார்?"

"ஒண்ணும் பேசாம என்கூட வாங்க"

"ஸார்! நான் ஒரு கட்சியோட மாவட்ட செயலாளர். பிரச்னை என்னான்னு என்கிட்டே சொல்லுங்க ஸார். பூட்டியிருக்கற வீட்டை குடியிருக்கறவங்க அனுமதி இல்லாம ஓப்பன் பண்ணினா நாளைக்கு அதுவே ஒரு பெரிய பிரச்னையாயிடும் ஸார்."

விஷ்ணு குரல் கொடுத்தான்.

"பாஸ்...! லாக் ரொம்பவும் வீக். பத்தே செக்கண்ட்ல பல்லைக் காட்டிடுச்சு..."

கதவை விரிய திறந்து வைத்தான்.

முத்துராஜ் கலவர முகத்தோடு விவேக்கை பின்தொடர்ந்தார் .

"அந்த திலீபன் ஏதாவது ஏதாவது தப்பு பண்ணிட்டானா ஸார்?"

 

"இதோ பாருங்க முத்துராஜ். ஒரு பத்து நிமிஷம் பொறுமையாய் இருங்க. நாங்க இந்த வீட்டை சோதனைப் போட்ட பிறகு நீங்க என்னோட நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்."

முத்துராஜ் மௌனமானார்.

 

விவேக்கும், விஷ்ணுவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். முன்பக்க அறையின் சுவரில் ஒரு இளைஞனின் போட்டோவும் ஒரு பெண்ணின் போட்டோவும் பக்கம் பக்கமாய் தெரிய விவேக் முத்துராஜிடம் திரும்பினான்.

"இவங்கதான் சுடர்கொடியும், திலீபனுமா?"

"ஆமா.... ஸார்..."

இரண்டு பேருமே அழகாய் இருந்தார்கள்.

போட்டோஜீனிக் ஃபேஸ். "மொத்தம் எத்தனை ரூம்?"

விவேக் உள்ளே போய்க்கொண்டே கேட்டான்.

"நாலு ஸார் ..."

"வாடகை எவ்வளவு ?"

"பதினஞ்சாயிரம் ஸார்"

விவேக் இடது பக்கமாய் நடந்து அந்த சாத்தியிருந்த அரைக் கதவைத் தள்ளினான்.

பார்வை உள்ளே போக விவேக்கின் உடம்பு ஒரு மெலிதான நடுக்கத்துக்கு உட்பட்டது.

ஒரு ஸ்டூல் கிழே கவிழ்ந்து கிடக்க.... திலீபன் தூக்கு கயிற்றில் ஒரு நேர்கோடாய் சலனமில்லாமல் தொங்கி கொண்டிருந்தான்.

(தொடரும்)

Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-3-267385.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... - அத்தியாயம் 4

 
 

-ராஜேஷ்குமார்

முன்கதைச் சுருக்கம்: விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்கொடி, வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாக வெட்டிக் கொல்லப்படுகிறாள். விஷயமறிந்த விவேக், விஷ்ணுவுடன் கொலையின் பின்னணியை விசாரிக்க ஆரம்பிக்கிறான். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டில் விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டுக்குள் சுடர்கொடியின் அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான்... இனி...

விவேக்கின் விழிகளில் அதிர்ச்சி மிச்சம் இருக்க, அவனுக்கு பின்னால் வந்த விஷ்ணு, திலீபன் தூக்கில் தொங்குவதைப் பார்த்துவிட்டு காதருகே மெல்ல கிசு கிசுத்தான்.

"என்ன பாஸ் இது....'ஒரு கொலை பண்ணினா இன்னொரு கொலை இலவசம்' ன்னு சொல்ற மாதிரி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் தங்கச்சி கொலை. அண்ணன் காரன் பூட்டிய வீட்டுக்குள்ளே ஒரு 'ஸ்ட்ரெயிட் லைன்' மாதிரி தூக்கில் தொங்கிட்டிருக்கான். இது தற்கொலைன்னு நினைக்கிறேன் பாஸ்"

"இல்ல விஷ்ணு.... இதுவும் கொலைதான் ! "

"எப்படி பாஸ்...? நாம இன்னமும் திலீபனோட பாடிக்குப் பக்கத்துல கூட போகலை.... பார்த்த முதல் பார்வையிலேயே கொலைன்னு சொல்றீங்க..."

" ரெண்டு காரணம்"

 

 
Rajeshkumar's One + One = Zero -4
 

 

" சொல்லுங்க பாஸ்... நான் ஏற்கெனவே கெஸ் பண்ணி வச்சிருக்கற அந்த ரெண்டு காரணங்களோடு நீங்க சொல்றது ஒத்துப் போகுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துக்கிறேன். "

" முதல் காரணம் வீடு பூட்டியிருக்கு. வீட்டை வெளிப்பக்கமாய் பூட்டிவிட்டு யாரும் தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க... ரெண்டாவது காரணம் இந்த ரூம்ல ஏ.சி. ஓடிகிட்டு இருக்கு. டெம்பரேச்சர் டிகிரி எவ்வளவுன்னு பார்த்தியா...பதினாறு. "

"அதாவது திலீபனை தூக்கில் தொங்கவிட்டவங்க பாடி அவ்வளவு சீக்கரத்துல டீ கம்போஸ் ஆகிவிடக்கூடாதுன்னு ஏ.ஸி. யை லோயஸ்ட்
டெம்பரேச்சர்ல வச்சு ஆன் பண்ணிட்டு போயிருக்காங்க... இல்லையா பாஸ் ?"

"அதேதான்... ! பக்கத்து ரூம்ல இருக்கற ஹவுஸ் ஓனர் முத்துராஜைக் கூப்பிடு.... ! அப்பறம் ப்ரான்ஸிக் பீப்பிளுக்கு இன்ஃபார்ம் பண்ணிடு."

விஷ்ணு தலையை சற்றே வெளியே நீட்டி சுவர் ஓரமாய் நின்று கொண்டிருந்த வீட்டு ஓனரை கண் அசைவால் கூப்பிட்டான். அவர் வியர்வை மின்னும் முகத்தோடு வேக வேகமாய் வந்தார்.

"என்ன ஸார்... ?"

விவேக் ஓர் ஊடுருவிய பார்வையோடு முத்துராஜைக் கேட்டான். "சுடர்கொடியோட அண்ணன் ஒரு 'மெடிக்கல் ரெப்' ன்னு சொன்னீங்க இல்லையா ?"

"ஆமா ஸார் "

" அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவரோட வேலை விஷயமாய் ஹைதராபாத் புறப்பட்டுப் போனதாகவும் சொன்னீங்க ?"

"ஆமா ஸார் "

" அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?"

" அவர் டாக்ஸியில் ஏறி ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டுப் போகும்போது நான் என் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். என்கிட்டே சொல்லிட்டுத்தான் போனார்".

" அப்படி அவர் சொல்லிட்டுப் போகும்போது சுடர்க்கொடி வீட்ல இருந்தாளா ?"

"இல்லை... அது ஒரு சாயந்திர நேரம். சுடர்க்கொடி இன்னமும் வேலையிலிருந்து திரும்பாததினால திலீபன் வீட்டைப் பூட்டிக்கிட்டுதான் போனார்."

"அப்படீன்னா அண்ணனும் தங்கச்சியும் ஒரே பூட்டுக்கு தனித்தனி சாவி வெச்சிருந்தாங்க ?"

" ஆமா ஸார்... ரெண்டு பேரும் நினைச்ச நேரத்துல வீட்டுக்கு வருவாங்க... போவாங்க..."

"ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹைதராபாத் புறப்பட்டுப் போனவர், பூட்டின வீட்டுக்குள்ளே இப்படி தொங்கிட்டு இருக்காரே ? இது எப்படி உங்களுக்குத் தெரியாம போச்சு ?

முத்துராஜ் வெகுவாய் முகம் மாறினார்.

"என்ன ஸார்.... சொல்றீங்க? "

"வாங்க... இப்படி உள்ளே வந்து பாருங்க !"

முகம் நிறைய குழப்பத்தோடு எட்டிப் பார்த்த முத்துராஜ் விழிகளில் நிரம்பிக் கொண்ட திகிலோடு விவேக்கைப் பார்த்தார்.

"எ...எ...எப்படி ஸார்... இது...?"

"இந்த கேள்விக்கு நீங்கதான் பதில் சொல்லணும்... ஏன்னா இந்த வீட்டுக்கு நீங்கதான் ஹவுஸ் ஓனர். அதுவும் வீட்டுக்கு முன்னாடியே குடியிருக்கீங்க. உங்களுக்குத் தெரியாம இந்த வீட்டுக்குள்ள இப்படியொரு விபரீதம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை... ஹைதராபாத் போறேன்னு சொல்லிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு டாக்ஸியில் கிளம்பிப் போன திலீபன் பூட்டின வீட்டுக்குள்ளே ஏ.சியின் ஜில்லிப்போடு தூக்குல தொங்கிட்டிருக்கார். எப்படி...?"

முத்துராஜின் விழிகளில் இப்போது கூடுதல் திகில். தலையின் முன் வழுக்கையில் வெள்ளமாய் வியர்வை. நடுக்கக் குரலில் பேசினார்.

"ஸ....ஸ.... ஸார்...! இப்படியொரு சம்பவம் எப்படி நடந்ததுன்னே எனக்குத் தெரியாது ஸார். நான் ஒரு கட்சியோட மாவட்டச் செயலாளர். கட்சித் தலைவரோட பிறந்தநாள் விழாக்கான ஏற்பாடுகளை கடந்த ரெண்டு நாளாய் கவனிக்கறதுக்காக கட்சி ஆபீஸிலேயே இருந்துட்டேன்... திலீபன் நல்லவர் ஸார். அவர் ஏன் இப்படி தற்கொலை பண்ணிக்கிட்டார்ன்னு தெரியலை இந்த விஷயத்தை சுடர்கொடிக்கு தெரியப்படுத்தணும் ஸார்."

" இது தற்கொலையாய் இருக்கமுடியாது அதுவுமில்லாமே சுடர்கொடிக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தவும் முடியாது."

முத்துராஜின் விழிகள் வியப்பில் விரிந்தன.

"ஏன் ஸார் ?"

விஷ்ணு இப்போது குறுக்கிட்டு சொன்னான்.

" நீங்க மத்தியானம் ஒரு மணியிலிருந்து டி. வியையே 'ஆன்' பண்ணலை போலிருக்கு.... சுடர்க்கொடி இப்போ உயிரோட இல்லை. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் அவளை யாரோ வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க. அது சம்பந்தமான விசாரணைதான் இது. திலீபனை விசாரிக்க வந்தா அவரும் உயிரோட இல்லை. என்னான்னு இப்ப உங்களுக்குப் புரியுதா ?"

முத்துராஜ் அதிர்ச்சியில் உறைந்துப் போய் ஒன்றும் பேசாமல் நின்றிருக்க, விவேக் அவருடைய தோளைத் தொட்டான்.

" இனிமேல்தான் உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு வேணும்.. சுடர்க்கொடி, திலீபன் பற்றிய என்னோட கேள்விகளுக்கு நீங்க பொய் கலக்காம பதில் சொல்லணும் !"

"கேளுங்க ஸார்..." முத்துராஜ் தனது காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார்.

விவேக் அந்த அறைக்குள் நுழைந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் திலீபனை அண்ணாந்து பார்த்துக் கொண்டே முத்துராஜிடம் கேட்டார்.

" திலீபனும் சுடர்கொடியும் இந்த வீட்டுக்கு எப்போ குடி வந்தாங்க... ?"

" ரெண்டு வருஷம் இருக்கும் ஸார்..."

"அவங்களுக்கு அம்மா அப்பா இல்லை ?"

"அப்படித்தான் சொன்னாங்க ஸார்"

"ரிலேட்டிவ்ஸ் யாராவது வருவார்களா ?"

" அப்படி யாரையும் நான் பார்த்தது இல்லை ஸார். அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருமே நல்ல டைப் ஸார். என்கிட்டே ரொம்பவும் மரியாதை...!" முத்துராஜுக்குப் பேசப் பேச வியர்த்துக் கொட்டியது.

விவேக் மேற்கொண்டு முத்துராஜிடம் ஏதோ பேச முயல விஷ்ணு பக்கத்தில் வந்தான்.

"பாஸ்..! இந்த பீட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கும் ஃபாரன்ஸிக் பீப்பிளுக்கும் தகவல் சொல்லிட்டேன். சீஃப் எஃப். ஓ பிரானேஷ் ஸ்பாட்டுக்கு வர்றதாய் சொன்னார்."

"சரி வீட்டை சீன் ஆஃப். க்ரைம் பார்த்தியா...?"

"பார்த்துட்டேன் பாஸ் "

"உன்னோட கருடப் பார்வைக்கு ஏதாவது தட்டுப்பட்டதா...?"

"ஃபர்ஸ்ட் ரவுண்டுல எதுவும் தட்டுப்பாடலை பாஸ். ரெண்டாவது ரவுண்ட் பார்த்துடறேன். வீட்டோட பின்பக்கமும் பூட்டியிருக்கு. வந்த கொலையாளி லேசுப்பட்ட ஆசாமியாய் இருக்கமுடியாது பாஸ். இவ்வளவு நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் வீட்டை ரெண்டு பக்கமும் பூட்டிக்கிட்டு ஒருத்தரை தூக்குல தொங்கவிட்டுட்டுப் போயிருக்கற நபர் ஒரு பழைய குற்றவாளியாய்த்தான் இருக்க முடியும். அதுவும் இல்லாமே..."

விஷ்ணு பேசிக் கொண்டு இருக்கும்போதே விவேக்கின் செல்போன் முணு முணுத்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

டி.ஜி.பி. கரிய பெருமாளின் பி.ஏ. தியோடர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சற்றே நகர்ந்து போய் ஜன்னல் அருகே நின்று கொண்டு செல்போனை காதுக்கு ஏற்றினான் விவேக்.

"ஹலோ "

"மிஸ்டர் விவேக் ?"

"ஹோல்டிங் .."

" நான் தியோடர் பேசறேன் "

"சொல்லுங்க ஸார்..."

"இப்ப நீங்க எங்க இருக்கீங்க ?"

"வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த மர்டர் சம்பந்தமாய் ராஜா அண்ணாமலைப் புரத்துல அந்தப் பொண்ணு வீட்ல இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டிருக்கேன் ஸார்.."

" அந்த பொண்ணு சுடர்கொடியோட அண்ணன் திலீபனும் கொலை செய்யப்பட்டு தூக்குல தொங்கவிடப்பட்டு இருக்கறதாய் தகவல். உண்மையா ?"

" உண்மைதான் ஸார்... நானே எதிர்பார்க்காத சம்பவம் இது... யாரோ எதோ ஒரு காரணத்துக்காக அண்ணனையும், தங்கையையும் தீர்த்துக்கட்டியிருக்காங்க...."

"சரி ... நான் இப்போ பேச வந்த விஷயத்தைச் சொல்லிடறேன்"

"சொல்லுங்க"

"சுடர்க்கொடி, திலீபன் இந்த ரெண்டு பேருமே கொலை செய்யப்பட்ட விவகாரத்தை ரொம்பவும் டீப்பாய் இன்வெஸ்டிகேட் பண்ண வேண்டாம்... விசாரணை நுனிப்புல மேயற மாதிரி இருக்கட்டும்..."

" வாட் டூ யூ மீன் ஸார்?"

"மேலிடத்திலிருந்து நெருக்கடி... வெரி பவர்ஃபுல் பர்சன்... தகவல் இப்பத்தான் வந்தது.... மேற்கொண்டு எந்த விசாரணையும் வேண்டாம்ன்னு நெருக்கடி !"

" கொலையாளி யார்ன்னு கண்டு பிடிக்க வேண்டாம்ன்னு சொல்ல வர்றிங்களா ?"

"நான் அப்படி சொல்வேனா ?"

"இப்ப நீங்க சொன்னதுக்கு வேற என்னதான் ஸார் அர்த்தம் ?"

"இதோ பாருங்க மிஸ்டர் விவேக்...! என்னைப் பத்தி உங்களுக்குத்தெரியும். உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். என்கிட்டே பேசின மேலிடம் ரொம்பவும் பவர்ஃபுல். பொலிடிக்கல் பேக் ரவுண்ட் உள்ள நபர். நாம பயப்பட்டுத்தான் ஆகணும். ஆனா உங்களுக்கும் சரி, எனக்கும் சரி யாரைப் பார்த்தும் பயம் கிடையாது. ஆனா பயப்படற மாதிரி உங்களாலேயும் சரி, என்னாலேயும் சரி நல்லா நடிக்க முடியும். அதைத்தான் நாம இப்போ பண்ணப் போறோம். இந்த ரெண்டு மர்டர்களிலேயும் உங்க விசாரணை நுனிப்புல் மேயற மாதிரி இருக்கட்டும். ஆனா கொலையாளி யார்ன்னு கண்டுபிடிக்கற ஆப்ரேஷன் இன்னொரு பக்கம் தீவிரமாய் இருக்கட்டும்."

"தேங்க்யூ ஸார் "

"கொலையாளியையும் கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க உங்களுக்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் ?"

"168 மணி நேரம் ஸார்" என்றான் விவேக்.

(தொடரும்)

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 5

 
 

- ராஜேஷ்குமார்


விவேக் செல்போனில் '168 மணி நேரம்' வேண்டும் என்று சொன்னதும் செல்போனின் மறுமுனையில் இருந்த டி.ஜி.பி.யின் பர்சனல் அசிஸ்டண்ட் தியோடர் திகைத்தார்.

"அது என்ன 168 மணி நேரம் கணக்கு ?"

"எனக்கு ஒரு வார காலம் தேவைப்படும்ன்னு சொன்னேன் ஸார். நான் அப்படி மணிக்கணக்கில் சொன்னதுக்கு ஒரு காரணமும் இருக்கு..."

"என்ன காரணம்?"

 

 
Rajeshkumar's One + One = Zero -5
 

 

"இந்த சுடர்கொடி, திலீபன் மரணங்களை நாம் அன்றாடம் ஏதாவது ஒரு இடத்தில நடக்கும் சாதாரணக் கொலைகளாய் நினைச்சு இன்வெஸ்டிகேஷன் பண்ணினா, கொலைக்கான காரணமும், கொலையாளியும் நம்ம பார்வைக்குப் படாத தூரத்துக்குப் போக வாய்ப்பு இருக்கு. ஏன்னா நீங்களே இந்தப் பிரச்னைக்குப் பின்னாடி ஒரு பவர்ஃபுல் பர்சன் இருக்கறதாய் சொல்லிட்டீங்க.... அதனால இந்த கேஸை இடைவிடாம ஒவ்வொரு நிமிஷமும் ஏதாவது ஒரு வகையில் எச்சரிக்கை உணர்வோடு இன்வெஸ்டிகேஷன் செய்ய வேண்டியிருக்கு. அதே நேரத்துல கொலையாளிக்கு நாம இந்த கேஸை தீவிரமாய் விசாரணைப் பண்ணிட்டுருக்கோம்ன்னு தெரியக்கூடாது. அதுக்கு நீங்க ஒரு காரியம் செய்யணும் ஸார்."

"சொல்லுங்க மிஸ்டர் விவேக்... நான் என்ன பண்ணனும் ?"

"ப்ரஸ் மீடியாவும் சரி, சானல் மீடியாவும் சரி சுடர்கொடி, திலீபன் கொலைகளில் போலீஸ் விசாரணை மெத்தனமாகவும், அலட்சியப் போக்கோடும் நடைபெறுவதாய் குற்றம் சாட்டிக்கிட்டே இருக்கும்படியான ஒரு சூழ்நிலையை நீங்க உருவாக்கணும். நானும் விஷ்ணுவும் 'அண்டர் காப்' வேலை பார்த்து கொலைகளுக்கான காரணத்தையும், கொலையாளியையும் நெருங்கிருவோம். நம்ம நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் யார் இருந்தாலும் சரி, அவங்க குற்றவாளியாய் இருந்தால் சட்டத்துக்கு முன்பாய் நிறுத்தப்பட்டேயாகணும். "

"அப்சல்யூட்லி ஐ செக்கண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் விவேக்.... நீங்க சொன்ன மாதிரி நான் ப்ரஸ், சானல் மீடியா பீப்பில்ஸை பார்த்துக்கறேன். நீங்க உங்க சூரசம்ஹாரத்துக்கு அஸ்திவாரம் போடுங்க...."

"தேங்க்யூ ஸார்"

"தேவைப்பட்டா மட்டும் என்னை இதே நெம்பர்ல காண்டாக்ட் பண்ணுங்க... "

"எஸ் . ஸார்"

" விஷ் யூ ஆல் த பெஸ்ட். நீங்க கேட்ட அந்த 168 மணி நேரம் இந்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகுது.....!"

"தாங்க யூ ஸார்...."

விவேக் செல்போனில் பேச்சை முடித்துக் கொண்டு திரும்ப, விஷ்ணு வெகு அருகில் நின்றிருந்தான்.

"என்ன பாஸ்... பிரச்னை சீரியஸா?"

"கொஞ்சம்... "

"நீங்களே கொஞ்சம்ன்னு சொன்னா என்னோட அகராதியில் அது மகா பெரிய பிரச்சனைன்னு அர்த்தம்... பார்த்துடலாம் பாஸ்... செல்போன், இன்டர்நெட் இல்லாத காலத்திலேயே கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் துரத்தி துரத்தி பிடிச்சிருக்கோம்... இன்னைக்கு விஞ்ஞானம் விஸ்வரூபம் எடுத்து இருக்கு. சுடர்கொடியையும், திலீபனையும் கொன்ற கொலையாளி செவ்வாய் கிரகத்துக்குப் போய்கிட்டு இருந்தாக் கூட கண்டு பிடிச்சுடலாம் பாஸ்."

விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஒரு வாகனத்தின் எஞ்ஜின் சத்தம் கேட்க, விவேக் ஜன்னலில் எட்டிப்பார்த்தான்.

வாசலில் நின்ற ஜீப்பிலிருந்து ஃபாரன்ஸிக் சீஃப் ஆபீசர் பிராணேஷ் பிஸ்கெட் நிற சபாரியில் முடி கொட்டி பளபளத்த மண்டையோடு இறங்கிக் கொண்டிருந்தார். கையில் ஒரு மெடிக்கல் கிட்.

விவேக் வேகமாய் போய் அவரை எதிர்கொண்டான் .

"வாங்க மிஸ்டர் ப்ரணேஷ்.... அயாம் வெயிட்டிங் ஃபார் யூ"

"ஸாரி மந்தைவெளிப் பக்கம் ஹெவி டிராஃபிக். கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்."

"நோ ப்ராப்ளம். யூ ஆர் இன் ரைட் டைம். நான் கூட இன்னும் எஸ். ஓ.பி. சரியா பார்க்கலை..."

"பாடி எங்கே....?"

"ப்ளீஸ் கம் திஸ் சைட்..." ப்ரணேஷக் கூட்டிக் கொண்டு விவேக் உள்ளே போனான். வீட்டு ஓனர் முத்துராஜ் தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியோடு திலீபனின் உடலை கீழே இறங்கி சுவரோரமாய் படுத்து வைத்து இருக்க ப்ரணேஷ் கையுறைகளை மாட்டிக் கொண்டு உடலருகே மண்டியிட்டு உட்கார்ந்தார். மெடிக்கல் கிட்டிலிருந்து ஒவ்வொரு உபகரணமாய் வெளிப்பட்டு திலீபனின் உயிரற்ற உடலை ஒரு சில நிமிடங்கள் முகர்ந்து விட்டு மறுபடியும் உள்ளே போயிற்று.

ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களுக்குப் பின் ப்ரணேஷ் இறுக்கமான முகத்தோடு விவேக்கை ஏறிட்டார்.

"மிஸ்டர் விவேக்... இது நிச்சயமாய் தற்கொலை இல்லை. இந்த நபரை தூக்குல தொங்கவிடறதுக்கு முந்தி சைக்கிளோப்ரோபேன் (CYCLOPROPANE ) என்கிற மயக்க மருந்தை ஸ்ப்ரே பண்ணி இவரை மயக்க நிலைக்குக் கொண்டு போய் அதுக்கப்புறமாய் கழுத்துக்கு கயித்தால சுருக்கு போட்டு தொங்கவிட்டு இருக்காங்க...."

"சம்பவம் நடந்து எவ்வளவு மணி நேரம் ஆகியிருக்கும்ன்னு நினைக்கறீங்க ?"

"சுமார் பனிரெண்டு மணி நேரம்"

"அதாவது நேத்து மிட் நைட்"

"எஸ் "

விவேக் முத்துராஜிடம் திரும்பினார். "நேத்து ராத்திரி நள்ளிரவில் திலீபன் கொலை செய்யப்பட்டிருக்கார். ஹைதராபாத்துக்கு போறதாய் உங்க கிட்டே சொன்ன திலீபன் மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கார். அப்படி வீட்டுக்கு வந்தவர்தான் கொலையாளிக்கிட்டே மாட்டியிருக்கார் மயக்க மருந்தை ஸ்பிரே பண்ணி திலீபனை மயக்கத்துக்கு உட்படுத்தி அவர் சுய உணர்வு இழந்ததும் கழுத்துக்கு கயித்தை மாட்டி தொங்கவிட்டுட்டு வீட்டையும் பூட்டிக்கிட்டு கொலையாளி போயிருக்கணும். நேத்து ராத்திரி இவ்வளவு சம்பவங்கள் நடந்து இருக்கு... இந்த வீட்டுக்கு எதிரில் இருக்கற உங்களுக்கு ஒரு சின்ன சத்தம் கூட கேட்கலையா?"

முத்துராஜ் மறுபடியும் புதிதாக வியர்த்தார்.

"ஸார்! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு கட்சிக்கு மாவட்டச் செயலாளராய் இருக்கற நான் அந்தக் கட்சித் தலைவரோட பிறந்த நாளுக்காக ரெண்டு மூணு நாள் கட்சி ஆபீஸிலேயே இருந்துட்டேன். வீட்டுக்கே சரியாய் வரலை... என்னோட ஒய்ஃப்பும் ஊர்ல இல்லை. ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்றதுக்காக கோயமுத்தூர்க்குப் போயிருக்கா. பொதுவா இந்த தெருவுல குடியிருக்கற யாரும் ஒருத்தரை ஒருத்தர் கண்டுக்க மாட்டாங்க ஸார். அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பாங்க....".

முத்துராஜ் பதட்ட குரலில் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த ஏரியா பீட் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் இரண்டு கான்ஸ்டபிள்களோடு உள்ளே வந்து விவேக்கைப் பார்த்து நேர்க்கோடாய் நின்று 'சுள்' என்று சல்யூட் அடித்து விட்டுத் தளர்ந்தார்.

விவேக் இன்ஸ்பெக்டரின் நேம் 'பேட்ச்' சைப் பார்த்து விட்டு பேசினான்.

"மிஸ்டர் சந்திரசேகர்...! வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் சுடர்கொடி என்கிற பெண் வெட்டிக் கொலை செய்ப்பட்ட சம்பவம் உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்."

"தெரியும் ஸார். டி.வி. யில் நியூஸ் போயிட்டிருக்கு."

"அந்தப் பெண்ணோட அண்ணன்தான் இங்கே தூக்கில் தொங்கிய நபர். ஃபாரன்சிக் ஆபிஸரின் முதல் அறிக்கையின்படி திலீபன் நேற்று ராத்திரி கொலையாளியால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கார். நான் சீன் ஆப் க்ரைம் பார்த்துட்டேன். நீங்களும் ஒரு தடவை பார்த்துட்டு பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்ப வேண்டிய ஃபார்மாலிடீஸைப் பண்ணிடுங்க. "

"எஸ்... ஸார்..."

"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உங்க கைக்குக் கிடைச்சதும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க !"

"எஸ்... ஸார்..."

"இவர் ஹவுஸ் ஓனர் முத்துராஜ். நான் இவரை என்கொயர் பண்ணிட்டேன். ஹி ஈ ஸ் ஹார்ம்லஸ். பட் இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை அவர்கிட்டே கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கிடுங்க."

"எஸ்.ஸார்...!"

"நான் கிளம்பறேன். ஃபாரன்சிக் சீஃப் ஆபிஸர் மிஸ்டர் ப்ராணேஷ் இங்கே இருப்பார். அவர் உதவியோடு நீங்க ஃபார்மாலிடீஸைக் கண்டினியூ பண்ணுங்க."

"எஸ்.ஸார்..." இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மறுபடியும் நேர்கோடாக மாறி சல்யூட் அடிக்க, விவேக் ப்ராணேஷிடம் விடைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தான். விஷ்ணு பின் தொடர்ந்தான்.

................................................................


விவேக் க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்தை நோக்கி மௌனமாய் காரை ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் உட்கார்ந்திருந்த விஷ்ணு பத்து நிமிஷம் வரை பொறுமை காத்துவிட்டு பொங்கினான்.

"இந்த ஊமைச் சித்தர் கெட் அப் உங்களுக்கு நல்லாயில்லை பாஸ். உங்க உதட்டோரம் எப்பவுமே ஒரு சின்ன சிரிப்பு சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும். அந்தச் சிரிப்பை இன்னைக்குக் காணோம்..."

விவேக் தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்ஸை ஓவர்டேக் செய்துக் கொண்டே சொன்னான்.

"விஷ்ணு...! எனக்கு அதிர்ச்சியாய் இருக்கு "

"எனக்கும் அதிர்ச்சிதான் பாஸ். அண்ணனும், தங்கையும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருக்காங்க. ஆனா இதை விட அதிர்ச்சியான கொலைகளையெல்லாம் நாம் பார்த்து இருக்கோமே பாஸ்."

"நான் அதிர்ச்சி அடைஞ்சது இந்த கொலைகளுக்காக இல்லை."

"பின்னே எதுக்காக பாஸ்?"

"தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட திலீபனும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுடர்கொடியும் அண்ணன் தங்கையாக நடிக்க வேண்டிய அவசியம் என்ன?"

விஷ்ணு விழிகளை விரித்தான்.

"எ...எ...என்ன பாஸ் சொல்றீங்க...?"

"திலீபனும் சுடர்கொடியும் கணவன் மனைவியாய் வாழ்ந்திருக்காங்க"

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 6

 

 ராஜேஷ்குமார் முன்கதைச் சுருக்கம்:

வாசகர்களே... சென்னையைப் புரட்டி எடுத்த வார்தா புயலால் இணையதள சேவை முடங்கிப் போனதால், ஒன் + ஒன் = ஜீரோ தொடரின் ஆறாவது அத்தியாயத்தை அப்லோட் செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.

ஆறாம் அத்தியாயத்துக்குச் செல்லும் முன், தொடரின் முன் கதைச் சுருக்கம்....

விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்க்கொடி வேளச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து வெட்டி கோரமாக கொலை செய்யப்படுகிறாள். டி.வி.யில் அதைச் செய்தியாகப் பார்த்த விவேக்கும் விஷ்ணுவும் உடனே வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து போகிறார்கள்.

கொலையின் பின்னணியை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டிற்குள் சுடர்கொடியின் அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதை விஷ்ணுவும் விவேக்கும் அதிர்ச்சியடைகிறார்கள். விசாரணையில் திலீபன் முந்திய இரவே கொலை செய்யப்பட்டு இருப்பது ஃபாரன்ஸிக் அறிக்கை மூலம் தெரிய வருகிறது. இதற்கு இடையில் மேலிடத்திலிருந்து விவேக்கிற்கு இந்த சுடர்க்கொடி கொலை விவகாரத்தை டீப்பாக விசாரிக்கக் கூடாது என்ற கட்டளை வருகிறது.

ஆனாலும் விவேக், விஷ்ணு இருவரும் விசாரணையில் தீவிரம் காட்டுகிறார்கள். திலீபன் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பும்படி அந்த பீட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு விவேக்கும், விஷ்ணுவும் காரில் க்ரைம் பிராஞ்சு ஆபீஸீக்கு திரும்புகிறார்கள். அப்போது விவேக் விஷ்ணுவிடம் திலீபனும், சுடர்கொடியும் அண்ணன் தங்கை அல்ல, அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல விஷ்ணு அதிர்ச்சியில் உறைந்து போகிறான்.

இனிமேல்..... தொடர்ந்து படியுங்கள்.. **************

 

"என்ன பாஸ்...! நாகஸாகி, ஹிரோஷிமாவில் அமெரிக்காக்காரன் அணுகுண்டு போட்ட ரேஞ்சுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு நீங்க பாட்டுக்கு கௌதம புத்தர் மாதிரி காரை ஒட்டிக்கிட்டு இருக்கீங்க...? திலீபனும், சுடர்கொடியும் அண்ணன் தங்கை இல்லையா?"

விஷ்ணு அதிர்ச்சியோடு கேட்க விவேக் காரின் வேகத்தை சிக்னலுக்காக குறைத்துக் கொண்டே தலையசைத்தான்.

"ஆமா ரெண்டு பேரும் வெளியுலகத்துக்கு அண்ணன் தங்கை மாதிரி நடிச்சிருக்காங்க ?"

" இந்த 'மொகஞ்சாதோரா' உண்மை உங்களுக்கு எப்படி தெரிஞ்சது பாஸ்...? நானும் உங்க கூடவேதானே அந்த வீட்ல இருந்தேன் ?"

"நீ அந்த வீட்ல சீன் ஆஃப் க்ரைம் எத்தனை தடவை பார்த்தே....?"

"ரெண்டு தடவை"

"என்ன க்ளூ கிடைச்சது?"

"ஒரு பெரிய சைபர் பாஸ்... எதுவுமே என்னோட பார்வைக்குத் தட்டுப்படலை"

"உனக்கு கருடபார்வைன்னு உன்னோட தாத்தா சொன்னதாய் சொன்னியே...?"

"இன்னைக்கு சாயந்திரம் ஒரு கண்டாக்டரைப் பார்த்துடறேன் பாஸ்... திலீபனும் சுடர்கொடியும் அண்ணன் தங்கையாய் இருக்க முடியாதுன்னு உங்களோட லேசர் பார்வைக்கு மட்டும் எப்படி தட்டுப்பட்டது பாஸ்?"

"உனக்கு முன்னாடி இருக்கிற காரோட டேஷ்போர்டைத் திற..."

விஷ்ணு திறந்தான்.

"சின்னதாய் ஒரு பிளாஸ்டிக் பேக் தெரியுதா ?"

"தெரியுது பாஸ்..."

"அதை வெளியே எடு"

எடுத்தான் "

 

உள்ளே என்ன இருக்கு பாஸ்....?"

"பிரிச்சு பாரு"

விஷ்ணு அந்த பிளாஸ்டிக் பேக்கைப் பிரித்தான். உள்ளே சிவப்பு நிறத்தில் ஒரு மாத்திரை பட்டையும், மினி டூத்பேஸ்ட் சைஸில் ஒரு ஆயின் மென்ட் டியூப்பும், கூடவே சிறிய பிளாஸ்டிக் டிவைஸும் ஒரு அட்டைப் பெட்டியும் பார்வைக்குத் தட்டுப்பட்டன.

 

"இதெல்லாம் என்ன பாஸ்?"

 

"மொதல்ல அந்த மாத்திரைப் பட்டையை எடு"

விஷ்ணு எடுத்தான். மாத்திரைப் பட்டையின் மேல் I- PILL என்கிற மருந்தின் பெயர் சிவப்பு நிறத்தில் மின்னியது.

"அது என்ன மாத்திரைன்னு தெரியுதா விஷ்ணு?"

"தெரியலை பாஸ்....

'ஐ - பில் ' ன்னு போட்டிருக்கு

 

" விவேக் காரை நிதானமான வேகத்தில் ஓட்டிக்கொண்டே சொன்னான். "இது ஒரு கருத்தடை மாத்திரை. போன வாரம் கூகுளில் ஒரு மெடிசன் பேரைத் தேடிகிட்டு இருந்தபோது இந்த 'ஐ - பில்' என்கிற வார்த்தை என்னோட பார்வைக்குத் தட்டுப்பட்டது. அது எது மாதிரியான மருந்துன்னு நான் படிச்சுப் பார்த்தப்ப அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. "

 

"அந்த அதிர்ச்சியை எனக்கும் கொஞ்சம் குடுங்க பாஸ்"

"இந்த 'ஐ - பில்' என்கிற கருத்தடை மாத்திரை சமீபத்தில்தான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு. இந்த மாத்திரை டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் கட்டுப்பாடு இல்லாமல் வாழும் இளம் பெண்களுக்கு ரொம்பவே பரிச்சியம். மருந்துக்கு கடைகளில் இந்த மாத்திரையை வாங்குபவர்களின் 50% சதவீதம் கல்யாணமாகாத இளம் பெண்கள்தானாம். ஒரு இளம் பெண் இந்த மாத்திரையை எடுத்துக்கிட்டு ஒரு வாரத்துல எத்தனை தடவை வேண்டுமானாலும் தப்பு பண்ணலாமாம்."

 

"இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியுது பாஸ். இந்த பிளாஸ்டிக் பேக் 'திலீபன் சுடர்க்கொடி' வீட்டிலிருந்து நீங்க எடுத்து இருக்கீங்க.... இல்லையா பாஸ்..?"

"அதேதான்... மாத்திரைப் பட்டையைத் தவிர ஒரு மினி டூத் பேஸ்ட் அளவுக்கு ஆயின்மெண்ட் ட்யூப் ஒண்ணு இருக்கே அதை வெளியே எடுத்து அந்த ஆயின்மெண்ட்டோட பேரைப் படி!"

 

விஷ்ணு எடுத்து படித்தான்.

"ஸ்பெர்மிசைடு "

"இந்த ஆயின்மெண்ட் எதுக்கு தெரியுமா !"

"மேட்டர் சூப்பராய் இருக்கு...

நீங்களே எனக்கு 'க்ளாஸ்' எடுங்க பாஸ்"

"ஒரு ஆணோ ஒரு பெண்ணோ தப்பு பண்ணின பிறகு பின்னாடி பிரச்னை ஏதும் வராமல் இருக்கறதுக்காக அப்ளை பண்ணிக்க வேண்டிய ஆயின்மெண்ட்...."

"ஆஹா...! ரெண்டு பேரும் ஏகப்பட்ட முன்னேற்பாடுகளோடு 'அண்ணன் தங்கை' நாடகத்தை வெற்றிகரமாய் அரங்கேற்றியிருக்காங்க பாஸ்.

 

மூணாவதா இது என்ன பாஸ் அரை உள்ளங்கை பரப்புக்கு ஒரு பிளாஸ்டிக் டிவைஸ்?"

"ஐ.யு.டி ."

"இது எதுக்கு பாஸ்...?"

"ஒரு பெண்ணின் கர்ப்பப் பைக்குள் பொருத்தப்படும் சாதனம்."

"பாஸ்! நீங்க சொல்றதையெல்லாம் கேக்கும்போது ஒரு சினிமா படத்தோடு தலைப்பு தான் ஞாபகத்துக்கு வருது.

திருடா.. திருடி....!" "அந்த அட்டைப் பெட்டியில் என்ன இருக்குன்னு பார்த்தியா?"

"பார்த்துட்டேன் பாஸ்... காண்டம்...! இது மாதிரியான அற்புதமான விஷயமெல்லாம் என்னோட பார்வையில்தான் படும். இன்னைக்கு அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு. இந்த பிளாஸ்டிக் பேக்கை அந்த வீட்ல எந்த இடத்திலிருந்து எடுத்தீங்க பாஸ்... நான் ரெண்டு தடவை அந்த வீட்டை சுற்றி எஸ்.ஓ.ஸி. பார்த்தும் என்னோட பார்வைக்குத் தட்டுப்படலையே?"

 

விவேக்கின் உதடுகளில் ஒரு சின்ன சிரிப்பு இழையோடியது. "இந்த பிளாஸ்டிக் பேக் எந்த இடத்துல இருக்கணுமோ அந்த இடத்துல இருந்தது. அதாவது பெட் ரூம்ல ஒரு தலையணை உறைக்குள்ளே சரியா உள்ளே போகாமே கொஞ்சமாய் வெளியே எட்டிப் பார்த்துகிட்டு இருந்தது."

 

"இந்த கண்ணாமூச்சி விளையாட்ல நீங்க எக்ஸ்பெர்ட் பாஸ். நான் எப்பவுமே லொட லொடா. நீங்க என்னிக்குமே அட அடா...!"

"டேய் ... போதுண்டா.... மேற்கொண்டு இந்த கேஸ்ல எப்படி ட்ராவல் பண்ணலாம்ன்னு சொல்லு... டி.ஜி.பி.யோட பி.ஏ. தியோடர் போன்ல என்கிட்டே சொன்ன மாதிரி விசாரணை நுனிப்புல் மேயற மாதிரியும் இருக்கணும்.... அதே சமயத்துல வேகமாகவும் ஆழமாகவும் இருக்கணும்.... கொலையாளியை பூனை நடை போட்டு நெருங்கணும்!"

 

"அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு பாஸ்"

"என்னான்னு சொல்லு...."

"சுடர்கொடியோட ஃப்ரண்ட் ஜெபமாலைக்கு சுடர்கொடியோட கோர மரணம் டி.வி. நியூஸ் மூலம் தெரிஞ்சிருக்கும். வளையோசை பத்திரிக்கையின் எடிட்டர் மீனலோசனி ஜெபமாலையைப் பார்த்து இருக்காங்க. அந்த அம்மாவைப் பார்க்க ஜெபமாலை மறுபடியும் வரலாம்ன்னு நினைக்கிறேன். அப்படி வரும்போது நமக்கு தகவல் கொடுக்கச் சொல்லி....!"

 

விவேக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

ஒரு புது எண்.

ஒரு மரத்தின் அடியில் காரை ரோட்டோரமாய் நிறுத்தினான் விவேக். ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.

 

"ஹலோ "

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல். பதட்டம் நிரம்பிய குரல்.

"பேசறது யாரு விவேக் ஸாரா ?"

"ஆமா..." "ஸார்.. என்னோட பேரு ஜெபமாலை. சுடர்கொடியோட ஃப்ரண்ட். இப்பதான் டி.வியில் நியூஸ் பார்த்தேன்.

 

ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன்...

கொலை நடந்த ஸ்பாட்டை டி.வி. யில் காட்டும்போது உங்களையும் காட்டினாங்க... ஸார்... சுடர்க்கொடி இவ்வளவு கோரமாய் கொலை செய்யப்பட என்ன காரணம்ன்னு எனக்குத் தெரியும்.

 

உங்களைப் பார்த்து பேசணும் ஸார். க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸுக்கு வரட்டுமா ஸார்?"

விஷ்ணு கிசு கிசுப்பாய் சொன்னான்.

 

"பாஸ்... கும்பிடப் போன தெய்வம் இப்படி 'குடு குடு' ன்னு ஓடி வந்து நம்ம முன்னாடி நிக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.

நம்ம ஆபீஸுக்கு வரச் சொல்லுங்க பாஸ்."

விவேக் விஷ்ணுவை லேசாய் முறைத்துவிட்டு செல்போனில் ஜெபமாலையிடம் பேசினான்.

"ஆபீஸுக்கு வேண்டாம் ஜெபமாலை."

"வேற எங்கே வர்றது ஸார்?"

"நீ இப்ப எந்த ஏரியாவிலிருந்து பேசறே?"

"பெசன்ட் நகர்"

"அப்படீன்னா பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் இருக்கற 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்டுக்கு சரியா ஆறு மணிக்கெல்லாம் வந்திடு... மீட் பண்ணிப் பேசிடலாம்."

" ஸ....ஸ... ஸார்...!"

"என்ன...?"

"எனக்கு பயமாயிருக்கு ஸார்..."

"எதுக்கு பயம்....?"

"சுடர்கொடிக்கு ஆனா மாதிரி எனக்கும் ஏதாவது ஆயிருமோன்னு....!"

"பயப்படாதே !"

விவேக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜெபமாலையின் செல்போன் இணைப்பு சட்டென்று அறுந்து போனது.

(தொடரும்..)

Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-6-270146.html
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் முடிவு வரை போட்டுள்ளீர்களா என்று பார்த்துவிட்டுத்தான் வாசிக்கத் தொடங்கவேணும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 7

 ராஜேஷ்குமார்

 

ஜெபமாலையின் செல்போன் இணைப்பு சட்டென்று அறுந்து போனதும் விவேக்கின் முகத்தில் ஒரு சின்ன பதட்டம் 'டென்ட்' போட்டுக் கொண்டது. அதைக் கவனித்த விஷ்ணு கேட்டான்,

 

"என்ன பாஸ்.... உங்க முகத்துல சின்னதா ஒரு வர்தா புயல் தெரியுது"

"ஜெபமாலையோட போன் கனெக்‌ஷன் கட்டாயிடுச்சு."

"நினைச்சேன். இவளுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இருக்கணுமேன்னு நினைச்சேன். வந்துருச்சு.... நம்ம எதிரிகள் வேகமாய் இருக்காங்க பாஸ்."

 

 விவேக் ஜெபமாலையின் எண்ணைத் தொடர்பு கொண்டான். உடனே ஒரு பெண்ணின் ரிக்கார்டட் வாய்ஸ் இன்ஸ்டன்ட் சப்பாத்தி புரோட்டா வேகத்தில் வந்தது.

"நீங்கள் தொடர்பு கொண்ட நபரின் எண் தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது."

"என்ன பாஸ்..??"

"ஸ்விட்ச் ஆஃப்"

"நினைச்சேன். மறுபடியும் போன் பண்ணிப் பாருங்க. 'தி போன் ஈஸ் நாட் இன் யூஸ்'ன்னு ஒரு பொண்ணோட சாக்லேட் வாய்ஸ் கேட்கும்... ஜெபமாலைக்கும் மலர் வளையம் வெச்சுட்டாங்க போலிருக்கு"

 

விவேக் மறுபடியும் போன் செய்ய நினைத்த நொடி, அவனுடைய போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைத்தது யாரென்று பார்த்தான்.

ஒரு புது எண்.

"யாரது ?" என்றான் விவேக்.

மறுமுனையிலிருந்து குரல் வேகமாக வந்தது.

 

"ஸார் ! நான்தான் ஜெபமாலை. இதுவும் என்னோட போன்நம்பர் தான் ஸார். இதுக்கு முன்னாடி நான் பேசின போன்ல 'சார்ஜ்' தீர்ந்துட்டதால என்னோட இன்னொரு போன்லயிருந்து காண்டக்ட் பண்றேன்." "போன் இணைப்பு கட் ஆனது நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்" "ஸார் ! நானும் இப்ப டென்ஷன்லதான் இருக்கேன். சுடர்கொடி என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். வாரத்துக்கு ரெண்டு தடவையாவது அவளைச் சந்திச்சு நாட்டு நடப்புகளில் இருந்து பர்சனல் விஷயங்கள் வரை எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவோம்.. ரொம்ப போல்ட் டைப் ஸார். யார்க்காகவும், எதுக்காகவும் பயப்படவே மாட்டா. நான் எத்தனையோ தடவை அவளை 'வார்ன்' பண்ணியிருக்கேன். அதையெல்லாம் அவ பொருட்படுத்தவே மாட்டா. ஆனா எது மாதிரியான சம்பவம் நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அது இன்னிக்கு வேளச்சேரி ஸ்டேஷன்ல நடந்துருச்சு.... எனக்கும் அது மாதிரி எதுவும் நடந்துடுமோன்னு உதறலாயிருக்கு ஸார்...!"

 

"உன்னோட உயிர்க்கும் ஆபத்து வரும்ன்னு நீ ஏன் நினைக்கிறே ?"

"சுடர்கொடிக்கு தெரிஞ்ச பல முக்கியமான விஷயங்கள் எனக்கும் தெரியுமே.... ஸார்."

"சாரி.. சுடர்கொடியோட படுகொலைக்கு யார் காரணம்.... எது மாதிரியான விஷயங்கள் காரணம் ?" "ஸார் !

போன்ல எதையும் பேச முடியாது. நான் உங்கள் நேர்ல மீட் பண்றேன். பெசன்ட் நகர்ல காலசேத்ரா காலனியில் இருக்கும் 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்டுக்கு நான் எத்தனை மணிக்கு வரணும் ஸார் ?"

"சரியா ஆறு மணிக்கு"

"வேண்டாம் ஸார் இன்னும் கொஞ்சம் இருட்டட்டும்"

"அப்படின்னா ஏழு மணி ?"

 

"ஓ கே.... வந்துட்றேன் ஸார். என்னோட ட்ரஸ் கோட் யெல்லோ சுடிதார், ஆரஞ்ச் துப்பட்டா"

"இட்ஸ் ஓகே...! ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு போன் பண்ணு !"

"ஷ்யூர் ஸார்.. பட் இனிமேல்தான் பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் ஆரம்பமாகும்...! உங்களுக்கு இந்த கேஸ்ல நிறைய வேலையிருக்கு ஸார்..!"

"பார்த்துடலாம்.. என்னோட ஒர்க் கேரியர்ல எந்த ஒரு குற்றவாளியும் ஜெயிச்சதாகவோ தப்பிச்சதாகவோ வரலாறே இல்லை !"

"சரியா ஏழு மணிக்கு நீங்க சொன்ன அந்த 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்ல இருப்பேன் ஸார்" மறுமுனையில் ஜெபமாலை பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட விவேக்கும் செல்போனை மெளனமாக்கினான். காரை ஸ்டார்ட் செய்யும் போது விஷ்ணு மெல்ல கூப்பிட்டான்.

"பாஸ்"

"என்ன ?"

"நம்ம ஜெபா என்ன சொல்றா ?"

விவேக் விஷ்ணுவை முறைக்க விஷ்ணு "ஸாரி... பாஸ்.. என்னோட ஜெபா.." என்றான். "விஷ்ணு..! ஜெபமாலைகிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்டுக்கு சரியா ஏழு மணிக்கு போறோம். அவகிட்ட பேசுறோம். எல்லா விஷயங்களையும் வாங்கறோம். ஆனா ஜெபமாலை எல்லா விஷயங்களையும் நம்மகிட்ட சொல்லுவாளான்னு கொஞ்சம் சந்தேகமாய் இருக்கு..!"

 

"அந்த பொறுப்பை என்கிட்டே விடுங்க பாஸ்..! ஜெபாவை நான் ஹேண்டில் பண்றேன்... எனக்கு ஜன வசியம் தெரியும். அத வெச்சு அவகிட்டேயிருந்து எல்லாத்தையும் கறந்துடறேன்.'

"என்னது ஜன வசியமா ?"

"ஆமா பாஸ்...! நான் போன தடவை சதுரகிரி மலைக்குப் போயிருந்த போது அங்கேயிருந்த ஒரு மலைக்குகையில் சாமியார் ஒருத்தரைப் பார்த்து பேசிட்டு இருந்தப்ப அவர் ஒரு அரதப் பழச புஸ்தகம் ஒண்ணைக் கொடுத்தார். வீட்டுக்குக் கொண்டு வந்து படிச்சுப் பார்த்தேன் பாஸ். அப்படியே அசந்து போயிட்டேன்."

"டேய் !"

"நம்புங்க பாஸ் ! வசியம் ஒரு கலை. ஏமாற்று வேலை கிடையாது. வசியத்தில் ஜன வசியம், தன வசியம், சத்ரு வசியம், ஸ்த்ரீ வசியம், புருஷ வசியம், மிருக வசியம், தேவ வசியம், லோக வசியம், ராஜ வசியம், யந்திர வசியம், தந்திர வசியம்ன்னும் பல வகை இருக்கு பாஸ்."

"ஏண்டா ! இப்ப நீ சொன்னதயெல்லாம் மனப்பாடம் பண்ணவே ஒரு மாசம் ஆகும் போலிருக்கே ?"

"அது உங்களுக்கு பாஸ்... என்னை மாதிரி கட்டை பிரம்மச்சாரிகளுக்கு ஒரு நிமிஷ வேலை."

விவேக் சின்னதாய் கொட்டாவி ஒன்றை வெளியேற்றிவிட்டு காரின் வேகத்தை அதிகரிக்க விஷ்ணு "பாஸ் ! நான் சொன்னதை நீங்க நம்பலைன்னு நினைக்கிறேன்" என்றான்.

"சுத்தமாய்"

"இன்னிக்கு நம்பப் போறீங்க பாஸ். சாயந்தரம் ஏழு மணிக்கு 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்டுக்கு ஜெபா வரப் போறா இல்லையா?"

"ஆமா...!"

"நான் உங்களுக்குப் பக்கத்துல இருந்தாலும் ஜெபா உங்ககிட்டதான் எல்லா விஷயத்தையும் சொல்லுவா. ஆனா அப்பப்ப சாப்பிடும்போது ஊறுகாயைத் தொட்டுக்கற மாதிரி என்னையும் போனாப் போகுதுன்னு பார்ப்பா. அப்படிதானே எப்பவும் நடக்கும் ?" "ஆமா.." "ஆனா அப்படி நடக்க போறது இல்லை. இன்னிக்கு ஜெபா என்னை மட்டும் பார்த்து பேசப்போறா. உங்க பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டா பாஸ்!"

"அப்படியா ?"

"அப்படியான்னு கேட்காதீங்க பாஸ், அது எப்படின்னு கேளுங்க. அந்த சதுரகிரி சாமியார் எனக்கு அந்த வசிய புஸ்தகத்தை மட்டும் தரல..?"

"அப்புறம்... இலவச இணைப்பா வேற எதாவது கொடுத்தாரா?"

"கிண்டல் பண்ணாதீங்க பாஸ்! சித்த ஹத்தி தோஷம் வந்துடும்.. அந்த சாமியார் புத்தகத்தோடு சின்னதா 'அர்த்த இஷ்டம்' என்கிற ஒரு சின்ன மை டப்பியையும் கொடுத்தார். அந்த மை சாதாரண மை கிடையாது பாஸ். கோரோசனையோடு, மச்சக்கல், சிறு தேன் எனப்படும் கொசுத்தேன் இந்த மூணையும் கலந்து ஒரு அமாவாசையன்னிக்கு பண்ணின மையை ஒரு கடுகளவு எடுத்து உச்சந்தலையில் வெச்சுகிட்டு போய் யார்க்கு எதிரிலே போய் உட்கார்ந்துலும் சரி, எதிராளி மனசுக்குள்ளே இருக்குற எல்லாமே வெளியே வந்துடும்..!"

 

"அப்படின்னா ... அந்த ஜெபமாலை இன்னிக்கு உன்கிட்டதான் பேசப் போறா..??"

"நோ டவுட் பாஸ்..."

"அந்த அர்த்த இஷ்ட மை டப்பி இப்ப வீட்ல இருக்கா. உன்னோட பாக்கெட்ல இருக்கா ?"

"பாக்கெட்ல ஒரு கர்ச்சீப்ல சுத்தி வெச்சிருக்கேன் பாஸ்"

"எங்கே காட்டு பார்க்கலாம்"

"ஸாரி.. பாஸ் ! கல்யாணமானவங்க அந்த டப்பியை பார்த்தா அதனோட சக்தி போயிடும்னு சாமியார் சொல்லியிருக்கார்"

 

. ********

 

சாயந்திரம் மணி ஆறு பத்து

ரூபலா இரண்டாவது தடவை போட்டுக் கொடுத்த டீயையும் சாப்பிட்டுவிட்டு டி.வி.யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த விவேக்கை நெருங்கி உட்கார்ந்தான் விஷ்ணு.

"பாஸ்" "

ம்... "

"மணி 6.10. கிளம்ப வேண்டாமா ?"

"எங்கே ?"

"என்ன பாஸ்.... மறந்துட்டீங்களா... ஏழு மணிக்கு ஜெபா நமக்காக பெசன்ட் நகர் 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்டுக்கு வந்துருவா. அவளை நாம் அவரச் சொல்லியிருக்கோம்..!"

"அப்படியா ?'

"என்ன அப்படியா...?" ரூபலா கோபத்தோடு உள்ளேயிருந்து வந்தான்.

"விஷ்ணு சீரியஸாய் கேட்டுட்டு இருக்கான். நீங்க என்னடான்னா... ரொம்பவும் அலட்சியமாய் பதில் சொல்லிட்டு இருக்கீங்க. இப்ப கிளம்பினாத்தானே ஏழு மணிக்கு பெசன்ட் நகர் போய் சேர முடியும்.

" விவேக் மெலிதாய் புன்னகைத்தான். "பெசன்ட் நகர் போய்ச் சேர்ந்துடலாம்.. ரெஸ்டாரண்ட்டுக்கு போயிடலாம்.. ஆனா..."

"என்ன ஆனா..?"

"ஜெபமாலை ரெஸ்டாரண்ட்டுக்கு வரணுமே ?"

"எ...எ...என்ன சொல்றீங்க ?"

"அந்த ஜெபமாலை ரெஸ்டாரண்ட்டுக்கு வர மாட்டான்னு சொல்றேன் !"

-தொடரும்...

Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-7-270603.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2016 at 10:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனிமேல் முடிவு வரை போட்டுள்ளீர்களா என்று பார்த்துவிட்டுத்தான் வாசிக்கத் தொடங்கவேணும்

சகோதரி இன்னும் முடிவு போடவில்லை. அதனால் இப்ப வரவேண்டாம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சுவி அண்ணா.நீங்கள் சொல்லாவிட்டால் நான் வந்திருப்பேன் tw_blush:

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 8

Subscribe to Oneindia Tamil
 
 

- ராஜேஷ்குமார்

முன்கதைச் சுருக்கம்:

விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்க்கொடி வேளச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து வெட்டி கோரமாக கொலை செய்யப்படுகிறாள்.
விவேக்கும் விஷ்ணுவும் உடனே விசாரணையில் இறங்குகிறார்கள். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டிற்குள் சுடர்கொடியின் அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்கிறார்கள். இதற்கு இடையில் மேலிடத்திலிருந்து விவேக்கிற்கு இந்த சுடர்க்கொடி கொலை விவகாரத்தை டீப்பாக விசாரிக்கக் கூடாது என்ற கட்டளை வருகிறது. ஆனாலும் விவேக், விஷ்ணு இருவரும் விசாரணையில் தீவிரம் காட்டுகிறார்கள். விவேக் விஷ்ணுவிடம் திலீபனும், சுடர்கொடியும் அண்ணன் தங்கை அல்ல, அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல, அதிர்கிறான் விஷ்ணு.

இந்த நேரத்தில் சுடர்கொடி கொலை விஷயத்தில் தனக்குத் தெரிந்த சில ரகசியங்களைச் சொல்ல வருவதாக போன் செய்கிறாள் சுடர்கொடியின் தோழி ஜெபமாலை. ஒரு ரெஸ்டாரன்டுக்கு மாலையில் வருவதாகச் சொல்கிறாள். ஆனால் அந்த நேரத்தில் அவள் வரமாட்டாள் என கணிக்கிறான் விவேக்...

 

 
Rajeshkumar's One + One = Zero -8
 

 

இனி.....

விஷ்ணு உச்சபட்ச அதிர்ச்சியோடு கேட்டான்.

"என்ன பாஸ் சொல்றீங்க .... அந்த ஜெபமாலை செவன்த் டேஸ்ட் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரமாட்டாளா ?"

"மாட்டா..."

"எப்படிச் சொல்றீங்க.... ?"

"ஏதோ சொல்லணும்ன்னு தோணிச்சு.... சொல்றேன்....." விவேக் சொல்லிவிட்டு டீ பாயின் மேல் இருந்த ரிமோட் கண்ட்ரோலை எடுத்து சேனலை மாற்ற முயல, ரூபலா அதைப் பறித்து டி.வி.யின் திரையை இருட்டாக்கினாள்.

"என்னங்க இது ......! ஒரு சென்ஸ்டீவான மேட்டரை இவ்வளவு அலட்சியமாய் டீல் பண்ணிட்டு இருக்கீங்க..... ? சுடர்கொடி ஏன் கொலை செய்யப்பட்டாள் என்கிற விஷயம் ஜெபமாலைக்கு மட்டும்தான் தெரியும். அவளும் உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றதுக்காக போன் பண்ணியிருக்கா. நீங்களும் அவளும் பெசன்ட் நகரில் இருக்கற ஒரு ரெஸ்டாரெண்டில் சந்திச்சுப் பேச ஏற்பாடாகியிருக்கு. புறப்படற நேரத்துல அந்த ஜெபமாலை வரமாட்டான்னு சொன்னா இதுக்கு என்ன அர்த்தம்?"

"அவ வரமாட்டான்னு அர்த்தம்?"

"அப்படீன்னா அவ பொய் சொல்லியிருக்காளா?"

"ஆமா அப்படிதான் தெரியுது"

"அவ சொன்னது பொய்ன்னு உங்களுக்கு எப்ப.... தெரிஞ்சது"

"ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான்"

"எப்படி.....?"

"மனசுக்குப் பட்டது." விவேக் சொல்ல ரூபலா விஷ்ணுவைப் பார்த்தாள்.

"டேய் விஷ்ணு... உன்னோட பாஸுக்கு என்னாச்சுடா....?"

"தெரியலை மேடம்.... அவர் பேசறது தமிழ் பாஷையாய் இருந்தாலும் ஏதோ ஒரு அந்நிய பாஷையில் பேசற மாதிரி கொஞ்சம் புரியுது... நிறைய புரியாமலும் இருக்கு... இது ஒருவகையான ஜென் நிலை மேடம்... பாஸ் மாதிரி இருக்கற அறிவு ஜீவிகளுக்குத்தான் இப்படிப்பட்ட ஞானோதயமெல்லாம் தோணும்.... இக்கட்டான இதுமாதிரியான சமயங்களில் பிரச்சனையை எப்படி கையாளனும்ன்னு எனக்குத் தெரியும் மேடம்....!"

"எப்படி....?"

"பாஸைக் காட்டிலும் கொஞ்சம் புத்திசாலித்தனம் அதிகமாய் இருக்க ஒருத்தரை ஒரு ரெண்டு நிமிஷம் அவர்கிட்டே பேச வெச்சா போதும் மேடம்"

"அப்படிப்பட்ட ஒருத்தர் இப்ப எங்கடா கிடைப்பார்?"

"ஏன் மேடம் 73 கிலோ வெயிட்ல நான் ஒருத்தன் உங்க முன்னாடி விஸ்வரூபம் எடுத்த பெருமாள் மாதிரி நின்னுட்டு இருக்கேனே..... உங்க பார்வைக்குத் தட்டுப்படலையா....? பாஸ் ஜென் நிலைக்கு போயிட்டா அவரை எப்படி ஒரு சாதாரண நிலைக்குக் கொண்டு வர்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் மேடம்."

ரூபலா எரிச்சலோடு விஷ்ணுவைப் பார்த்தாள். இவன் ஒருத்தன் என்று முனகியவள் .

"சரி... அவர்கிட்டே பேசு...!" என்றாள்.

"அவர்கிட்டே பேச்சு வார்த்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு லெமன் டீ வேணும் மேடம்"

"யார்க்கு?"

"எனக்குத்தான் மேடம்.... ஒரு லெமன் டீ உள்ளே போனாத்தான் என்னோட புத்திசாலித்தனம் பூஸ்ட் ஆகும். அப்படி ஒரு சாபம் எனக்கு. நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன் மேடம்!"

"உனக்கு இது மாதிரி நிறைய சாபம் இருக்குன்னு எனக்குத் தெரியும். ஒரு அஞ்சு நிமிஷத்துல லெமன் டீயோடு வர்றேன்....!"

"டீயோடு அப்படியே ஒரு இலவச இணைப்பும் இருக்கட்டும் மேடம்!"

"இலவச இணைப்பா.... ?"

"ரெண்டு பிஸ்கெட்டைச் சொன்னேன் மேடம்"

ரூபலா விஷ்ணுவை ஒரு அமிலப் பார்வையில் நனைத்துக் கொண்டே சமைலறைக்குள் போனாள். விவேக்கிடம் திரும்பினான் விஷ்ணு.

"இப்ப சொல்லுங்க பாஸ்... என்ன பிரச்னை?"

"உனக்குத் தெரிஞ்ச டாக்ஸி டிரைவர் ஒருத்தர் இருக்கறதாய் சொன்னியே.... அவர் பேர் என்ன ?"

"ராம ஜெயம்"

"அவரை இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு... நீயும் நானும் ஒரு இடத்துக்கு போகப் போறோம்"

"நம்ம கார் இருக்கும் போது எதுக்கு பாஸ் டாக்ஸி ?"

"பேசாம சொன்னதைச் செய்....!"

"ஓ.கே . பாஸ்... விஷயம் ஏதோ சீரியஸ்ன்னு தெரியுது. இப்ப போன் பண்ணி ராமா ஜெயத்தை வரச் சொல்லிடறேன்." விஷ்ணு தன் செல்போனை எடுத்துக் கொண்டு ராமஜெயத்தின் செல் நெம்பரைத் தேடிக் கொண்டு இருக்க விவேக், "ஒரு நிமிஷம் விஷ்ணு!" என்றான்".

"சொல்லுங்க பாஸ் "

"டாக்ஸி நம்ம வீட்டுக்குப் பின்னாடி இருக்கற சந்தில் விநாயகர் கோயில் பக்கத்தில் நிக்கட்டும்!"

"ஏன் பாஸ் !"

"இப்போதைக்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்காதே... பேசாமே நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்....!"

"புரியுது பாஸ்....! ஏதோ... ஐ. ஸி. யூனிட்டில் இருக்கற விஷயம் போலிருக்கே... நான் இப்போ ராம ஜெயத்துக்கு போன் பண்ணிடறேன் பாஸ்....!" சொன்ன விஷ்ணு அந்த ராமா ஜெயத்தை செல்போனில் பிடித்து பேசிவிட்டு விவேக்கை ஏறிட்டான்.

"அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளே டாக்ஸி வந்துடும் பாஸ்...!"

அதே வினாடி விவேக்கின் செல்போன் மென்மையாய் சிணுங்க விவேக் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

டி.ஜி.பி.யின் பி.ஏ. தியோடர் பெயர் டிஸ்ப்ளேயில் தெரிந்தது.

செல்போனை இடது காதுக்குக் கொடுத்த விவேக், சலனமில்லாத குரலில் 'குட் ஈவினிங்' என்றான்.

"ஸே! வெரி வெரி வொர்ஸ்ட் ஈவினிங்.. மிஸ்டர் விவேக். டிவியில் நியூஸ் பார்த்தீங்களா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேன் ஸார்"

"இப்ப பாருங்க... எல்லா டிவி சானல்களும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொல்லப்பட்ட சுடர்கொடியோட மேட்டரும், அவளுடைய அண்ணன் வீட்ல தூக்குல தொங்கின மேட்டரும்தான் பரபரப்பா போயிட்டிருக்கு..."

விவேக் டிவியை ஆன் செய்து சேனல் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு, "எஸ் ஸார்... எல்லா சேனல்களிலும் இந்த விஷயம் நெருப்பாட்டம் இருக்கு...", என்றான்.

"என்ன பண்ணலாம்..."

"இப்போதைக்கு மீடியா பீப்பிளை ஒண்ணும் பண்ண முடியாது ஸார். இன்னும் ஒரு வாரத்துக்கு அவங்களுக்கு இந்த விஷயம்தான் மூணு வேளையும் சாப்பாடு. எனக்கு சில விஷயங்கள் கிடைச்சிருக்கு ஸார். அதை நோக்கித்தான் ட்ராவல் பண்ணிட்டிருக்கேன்".

"பி... கேர்ஃபுல்.. நான் சொன்ன விஷயத்தை மறந்துட வேண்டாம். இந்த மர்டர்ஸ் சம்பந்தப்பட்ட விசாரணை வெளிப்பார்வைக்கு நுனிப்புல் மேயற மாதிரி இருக்கணும். அதே நேரத்துல கொலையாளியைக் கண்டுபிடிக்கிற விஷயத்தில் வேகமும் ஆழமும் வேணும்..."

"நான் அந்த விஷயத்தை மறக்க மாட்டேன் ஸார். உங்க கிட்ட நான் 168 மணி நேரம் அவகாசம் கேட்டேன். அதாவது ஒரு வாரத்துக்குள்ள கொலையாளியை நெருங்கிடுவேன்."

"நெருங்கியாகணும்... இல்லன்னா இன்னொரு விபரீதம் நடந்துடும்..."

"இன்னொரு விபரீதமான விஷயமா?"

"ஆமா மிஸ்டர் விவேக்... சுடர்கொடி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது ஸ்டேஷனில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் பழுதடைஞ்சு போயிருந்ததால அந்த காமிராக்களில் கொலை செய்யப்பட்ட அந்த நிகழ்வு பதிவாகலை. ஆனா ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த ஒரு ஹோட்டலின் முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராவில் ஒரு காட்சி பதிவாகியிருக்கு அது எது மாதிரியான காட்சி தெரியுமா மிஸ்டர் விவேக்?"

"சொல்லுங்க சார்...."

"அந்த சி.சி.டி.வி. காமிராவில் ஒரு இளைஞன் பதிவாகியிருக்கிறான். கையில் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ். முகத்தில் அளவுக்கு அதிகமான பதட்டம். ஸ்டேஷனை விட்டு வெளியே வேகமாய் வர்றான். அந்த நபர்தான் சுடர்கொடியை வெட்டியா கொலையாளியாய் இருக்க முடியும்ன்னு நம்ம டிபார்ட்மெண்ட் ஒரு முடிவுக்கு வந்திருக்கு. ஆனா அந்த வீடியோ பதிவைப் பார்த்த எனக்கு அந்த இளைஞன் கொலையாளியாய் இருக்க முடியாதுன்னு மனசுக்குப் பட்டது."

"நீங்க அப்படியொரு முடிவுக்கு வர காரணம் என்ன ஸார்...?"

"அந்த இளைஞன் கையில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒரு கனமான சூட்கேஸ். அவன் அதைத் தூக்கிட்டு வரும்போதே தெரியுது. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது இருபதடி நடக்கறதுக்குள்ளே ஒரு தடவை அந்த சூட்கேஸை கீழே வெச்சுட்டு பத்து விநாடி ஆசுவாசப்படுத்திட்டு அதுக்கப்புறம் அதைத் தூக்கிட்டு வர்றான். இப்படி மூணு தடவை சூட்கேஸை வெச்சு வெச்சு எடுத்திட்டு வர்றான். ஒரு பெண்ணைக் கொலை செய்யப் போறவன் அப்படியொரு ஹெவி லக்கேஜ்ஜை தூக்கிட்டு வருவானா என்ன...?"

"டி.ஜி.பி கிட்டே அந்த பாயிண்டை சொன்னீங்களா ஸார்...?"

"சொன்னேன்"

"வாட் வாஸ் த ரிப்ளை ?"

"நீங்க சொல்றது சரிதான் தியோடர். அந்த இளைஞன் ஸ்டேஷனை விட்டு அவசர அவசரமாய் வெளியே வந்தான் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அவன்தான் கொலையாளியாய் இருக்க முடியும்ன்னு என்னால ஒத்துக்க முடியலை. ஆனா எனக்கு மேலிடத்திலிருந்து ஒரு ப்ரஷர் வந்துட்டேயிருக்கு. யாரையாவது ஒரு நபரை கொலையாளியாக்கி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்றாங்க..."

"யார் ஸார் அது...?"

"ஒரு பவர்ஃபுல் பொலிடிகல் பர்சன்"

"அது யார்ன்னு உங்களுக்குத் தெரியாதா ?"

"தெரியாது"

"டி.ஜி.பி க்கு?"

"அவர்க்கும் தெரியாதுன்னு சொல்றார். இது ஒரு ஷேடோ ஆர்டர். தமிழில் சொல்லணும்ன்னா நிழல் கட்டளை...."

"ஸார் யார் ஆட்சிக்கு வந்தாலும் போலீஸ் போலீஸ் மாதிரிதான் இருக்கணும். யார்க்கும் அடிபணியக் கூடாது!"

"அப்படி இருக்கத்தான் ஆசைப்படறோம். அது நடைமுறையில் சாத்தியப்படறது இல்லை...! இப்ப நம்ம டிபார்ட்மெண்ட்டோட அடுத்த கட்ட வேலை என்ன தெரியுமா மிஸ்டர் விவேக் ?"

"என்ன ஸார்?"

"வேளச்சேரி ஸ்டேஷனை விட்டு அவசர அவசரமாய் வெளியே வந்த அந்த இளைஞன் உண்மையாகவே கொலையாளியா இல்லையா என்று நமக்குத் தெரியாது. இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. அவன் கொலையாளியாய் இருக்கலாம். ஒருவேளை அப்பாவியாய் இருந்தால் சட்டம் தடம் புரண்டுவிடும். ஸோ உங்களுக்கு பொறுப்பு இதில் அதிகம். உண்மையான குற்றவாளியை நீங்க சீக்கிரம் நெருங்கியாகணும் விவேக்... BALL IS IN YOUR COURT. YOU HAVE TO PLAY"

"நான் ஏற்கனவே விளையாட ஆரம்பிச்சுட்டேன் ஸார்"

( தொடரும் )

http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-8-270954.html

Link to comment
Share on other sites

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... - அத்தியாயம் 9


'நான் ஏற்கனவே விளையாட ஆரம்பிச்சுட்டேன் ஸார்' என்று விவேக் சொன்னதும் செல்போனின் மறுமுனையில் இருந்த தியோடர் மெல்லச் சிரித்தார்.

"மிஸ்டர் விவேக்.... இந்த சுடர்கொடி கேஸ்ல நீங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் படி விளையாடினா குற்றவாளியை ஜெயிக்க முடியாது. நீங்க பவுல் கேம் ஆடணும்....!"

"அந்த ஆட்டமும் எனக்குத் தெரியும் ஸார்"

"வி நோ... வாட் யூ ஆர்... என்னோட கவலை எல்லாம் எந்த ஒரு நிரபராதியும் சுடர்கொடி, திலீபன் கொலை வழக்குகளில் மாட்டி தூக்குக் கயிறுக்கு முன்னாடி போய் நின்னுடக் கூடாது "

"அப்படியொரு நிலைமை வராது ஸார்." "வந்திடும் போலிருக்கே ....?"

"நீதி தேவதையோட கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும், குற்றவாளி உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்து இருந்தாலும் தப்பிக்க முடியாது ஸார்...." "வெல் செட் மிஸ்டர் விவேக்... நாளைக்கு பொழுது விடியும் போது உங்க கிட்டயிருந்து ஒரு பாஸிட்டிவான பதிலை எதிர்பார்க்கிறேன் ."

 

"ஷ்யூர் ஸார்"

"விஷ் யூ ஆல் த பெஸ்ட் "

விவேக் செல்போனை அணைக்க ரூபலா சமயலறையில் இருந்து மணக்கும் லெமன் டீயோடும், பிஸ்கெட் தட்டோடும் எதிர்பட்டாள்.

விஷ்ணு எழுந்தான், "என்கிட்டே குடுங்க மேடம்... இவ்வளவு வெயிட்டை நீங்க வெச்சிக்கிட்டு நீங்க ரொம்ப நேரம் நிற்கக்கூடாது... "

"என்னடா சொல்றார் உன்னோட பாஸ்... நீதி தேவதையோட கண்கள் அது இதுன்னு விஜய், அஜித் ரேஞ்சுக்கு டயலாக் பேசிட்டு இருந்தார்...."

விவேக்கின் உதடுகளில் மெலிதாய் ஒரு புன்னகை அரும்பியது.

"உங்க ரெண்டு பேர்க்கும் ஒரு உண்மை புரியலை."

 

"என்ன உண்மை பாஸ்....?"

"சுடர்கொடி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து கொடூரமாய் கொலை செய்யப்படணும்.... அதுக்கு முன்பாக திலீபன் தன்னோட வீட்ல தூக்கில் தொங்கவிடப்படணும்ன்னு... எந்த இடத்துல முடிவான விஷயம் தெரியுமா?"

"வெத்தலையில் மை தடவிப் பார்த்தா தெரியும் பாஸ்."

ரூபலா பயமாய் விவேக்கைப் பார்த்தாள்.

"நீங்க சொல்லுங்க.... எந்த இடத்துல....?"

"டெல்லியில்" "அது எப்படி அவ்வளவு சரியாய் டெல்லின்னு சொல்றீங்க...?"

விவேக் தன்னுடைய செல்போனில் இருந்த மெஸேஜ் ஆப்ஷனுக்குப் போய் சற்று முன் தனக்கு வந்த எஸ். எம் .எஸ். செய்தி ஒன்றை ரூபலாவிடம் நீட்டினான்

. ரூபலா செல்போனை வாங்கி வாய்விட்டுப் படித்தாள்.

"DONT THINK MORE ABOUT THE MURDER S AND D, IT BRINGS RED DOTS"

ரூபலா கலவரமானாள்.

"என்னங்க இது...?"

"உனக்கு புரியுதா இல்லையா?"

"புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு"

"விஷ்ணு உனக்கு?"

பிஸ்கெட் தட்டை முடித்துவிட்டு லெமன் டீயை ருசி பார்த்துக் கொண்டிடுந்த விஷ்ணு விவேக்கிடம் திரும்பினான்.

"என்ன பாஸ்... உங்க கூட எத்தனை வருஷம் குடும்பம் நடத்திட்டு வர்றேன்...?

உங்களுக்கு வந்த எஸ். எம். எஸ். எது மாதிரியானது... யார் அது அனுப்பினதுன்னு எனக்குத் தெரியாதா என்ன?"

"உன்னோட மேடத்துக்கு சொல்லு!"

"மேடம்.... இந்த எஸ். எம். எஸ்.டெல்லியில் இருக்கற சி.பி.ஐ . ஆபிஸிலிருந்து பாஸுக்கு வந்திருக்கு. அனுப்பின ஆபிசர் பேர் சரத் சர்மா. பாஸுக்கு ரொம்பவும் வேண்டியவர். செய்தியில் குறிப்பிட்டு இருக்கற S அண்ட் D என்கிற எழுத்துக்கள் யாரைக் குறிப்பிடுது தெரியுமா மேடம். 'S' என்கிற எழுத்து சுடர்கொடியையும், 'D' என்கிற எழுத்து திலீபனையும் குறிக்குது. இந்த ரெண்டு கொலையைப் பற்றி அதிகமாய் அலட்டிக்க வேண்டாம். அப்படி அலட்டிக்கிட்டா மேலும் ரத்தத் துளிகளைப் பார்க்க வேண்டி வரலாம்ன்னு சரத் சர்மா 'வார்ன்' பண்ணியிருக்கார்."

"என்னங்க இவன் சொல்றது நிஜமா....?"

"விஷ்ணுவுக்கும் சில சமயங்களில் மூளை வேலை செய்யும்.

அப்படிப்பட்ட மகத்தான சமயங்களில் இதுவும் ஒண்ணு...."

"நன்றி பாஸ்...."

"மேலும் சில ரத்தத் துளிகளைப் பார்க்க வேண்டி வரலாம்ன்னு சரத் சர்மா சொல்லியிருக்காரே....?"

"ஆமா...!"


"அவர் யாரை மென்ஷன் பன்றார்...?"

"அது விஷ்ணுவாகக் கூட இருக்கலாம்"

"பா ..பா... பாஸ்...."

"ஏன் நானாகக்கூட இருக்கலாம் "

"இப்பத்தான் பாஸ் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கு "

"என்னங்க.... இவ்வளவு சீரியஸான மேட்டரை ஏதோ செல்லாத 1000 ரூபாய் நோட்டு மாதிரி மாதிரி டீல் பண்றீங்க....?"

- தொடரும்

 


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-plus-one-zero-9-271739.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 10

 

முன்கதைச் சுருக்கம்: விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்க்கொடி வேளச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து வெட்டி கோரமாக கொலை செய்யப்படுகிறாள். விவேக்கும் விஷ்ணுவும் உடனே விசாரணையில் இறங்குகிறார்கள். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டிற்குள் சுடர்கொடியின் அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்கிறார்கள். இதற்கு இடையில் மேலிடத்திலிருந்து விவேக்கிற்கு இந்த சுடர்க்கொடி கொலை விவகாரத்தை டீப்பாக விசாரிக்கக் கூடாது என்ற கட்டளை வருகிறது. ஆனாலும் விவேக், விஷ்ணு இருவரும் விசாரணையில் தீவிரம் காட்டுகிறார்கள். விவேக் விஷ்ணுவிடம் திலீபனும், சுடர்கொடியும் அண்ணன் தங்கை அல்ல, அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல, அதிர்கிறான் விஷ்ணு.

இந்த நேரத்தில் சுடர்கொடி கொலை விஷயத்தில் தனக்குத் தெரிந்த சில ரகசியங்களைச் சொல்ல வருவதாக போன் செய்கிறாள் சுடர்கொடியின் தோழி ஜெபமாலை. ஒரு ரெஸ்டாரன்டுக்கு மாலையில் வருவதாகச் சொல்கிறாள். ஆனால் அந்த நேரத்தில் அவள் வரமாட்டாள் என கணிக்கிறான் விவேக். மேலும் சுடர்கொடி, திலீபன் மரணங்கள் டெல்லியில் முடிவானவை என்று கூறி, அதற்கு சாட்சியாக தனக்கு வந்த எஸ்எம்எஸ்ஸைக் காட்டுகிறான் விவேக்...

அடுத்து... ரூபலா குரலை உயர்த்திக் பேசிக் கொண்டிருக்கும்போதே விஷ்ணுவின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

டாக்ஸி டிரைவர் ராமஜெயம். விஷ்ணு பேசினான். "என்ன ராமஜெயம்?"

"ஸார் டாக்ஸி வந்தாச்சு...."

"வீட்டுக்கு பின்னாடிதான்?"

"ஆமா...ஸார்... விநாயகர் கோயிலுக்குப் பக்கத்துல வண்டியை நிறுத்தியிருக்கேன்....."

"வெயிட் பண்ணு... இப்ப வந்துடறோம்"

செல்போனை அணைத்த விஷ்ணு விவேக்கை ஏறிட்டான்.

"பாஸ்! டாக்ஸி ரெடி...!"

"கிளம்பு" விவேக் எழுந்தான்.

"என்னங்க!"

"சொல்லு ரூபி"

"எனக்கு பயமாயிருக்கு"

"எதுக்கு பயம்?"

"இந்த சுடர்கொடி கேஸ்ல இவ்வளவு இன்வால்வ்மெண்ட் வேணுமா...? பேசாம இதை சி.பி.சி.ஐ.டி. போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடுங்களேன்..."

"அது சரிப்பட்டு வராது. இந்த கேஸ்ல ஒரு டீப் இன்வஸ்டிகேஷன் வேணும். இல்லேன்னா சுடர்கொடி, திலீபன் கொலைகளோட சம்மந்தப்பட்ட கொலையாளி கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குப் போயிடுவான். கொலைகளுக்கான காரணங்களும் காணாமே போயிடும்."

"அந்த ஜெபமாலை உங்ககிட்டே ஏதோ பேச வந்தா... பெசன்ட் நகர்ல இருக்கற 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரெண்ட்டுக்கு நீங்கதான் அவளை வரச் சொன்னீங்க. ஆனா ரெஸ்டாரெண்ட்டுக்குப் போகாமே 'அவ வரமாட்டா' ன்னு வீட்லயே உட்கார்ந்துட்டீங்க... ஒரு வேலை அவ ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்திருந்தா....!"

"அப்படி அவ ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்திருந்தா நான் ஏன் வரலைன்னு கேட்டு போன் பண்ணியிருப்பாளே....? என்னோட போன் நெம்பரும் விஷ்ணுவோட போன் நெம்பரும் ஜெபமாலைகிட்ட இருக்கே... ஏன் போன் பண்ணலை?"

"அவளோட உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோன்னு நினைக்கறீங்களா?"

"இதோ பார் ரூபி... இந்த கேஸ்ல நான் கால் பதிச்சு முழுசா இன்னும் ஒரு நாள் கூட ஆகலை. உன்னோட மனசுக்குள்ளே என்னென்ன சந்தேகங்கள் இருக்கோ அதை விட ரெண்டு மடங்கு சந்தேகங்கள் எனக்குள்ளே இருக்கு...."

"எனக்கு மூணு மடங்கு பாஸ்," என்றான் விஷ்ணு.

"சரி.... ஜெபமாலை நல்லவளா.... தப்பானவளா?"

"நான் இப்ப ஒருத்தரை பார்க்கப் போறேன். நீ கேட்ட கேள்விக்கு அவர்கிட்டதான் பதில் இருக்கு. ராத்திரி நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். நீ எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். சாப்பிட்டு படுத்துரு. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா நானே உனக்கு பண்றேன். நீ எனக்கு போன் பண்ணாதே!"

"என்னங்க நீங்க என்னை பயப்படுத்தற மாதிரியே பேசறீங்க..?"

"நீ பயப்படக் கூடாதுங்கறதுக்குக்காகத்தான் இதையெல்லாம் சொல்லிட்டிருக்கேன்."

சொன்ன விவேக் விஷ்ணுவிடம் திரும்பினான்.

"என்ன புறப்படலாமா?"

"நான் நடக்க ஆரம்பிச்சுட்டேன் பாஸ்"

 

விநாயகர் கோயில் அருகே அரையிருட்டில் காத்திருந்தது, பச்சையும் மஞ்சளும் கலந்த பெயிண்ட் பூச்சில் குளித்திருந்த அந்த டாக்ஸி.

விவேக்கும் விஷ்ணுவும் காரை நெருங்க ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த ராமஜெயம் இறங்கி கைகளைக் குவித்தான். நடுத்தர வயது. வெள்ளை யூனிஃபார்ம்.

"வணக்கம் ஸார்"

விஷ்ணு அவனுடைய தோளில் கை வைத்தான்.

"என்ன ராமஜெயம்... வண்டி புதுசு போலிருக்கு?"

"ஆமா... ஸார். ஒரு பேங்க் மானேஜர் லோன் கொடுத்தார்.

வாங்கிட்டேன். பழைய வண்டியில் ஏகப்பட்ட பிரச்னை ஸார்"

"பொண்டாட்டி பழசானாலும் சரி, கார் பழசானாலும் சரி ஆண்களுக்கு பிரச்னைதான்னு ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கார்."

"அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் ஸார்" "எப்படி சொல்லறே?"

"ஷேக்ஸ்பியர் காலத்துல கார் ஏது ஸார்?"

"ராமஜெயம்! நீ இன்னும் அதே புத்திசாலித்தனத்தோடுதான் இருக்கே.

சும்மா உன்னை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்...."

ராமஜெயம் காரின் இக்னீசியனை உசுப்பிக்கொண்டே கேட்டார்,

"எங்க ஸார் போகணும்?"

விஷ்ணு விவேக்கின் முகத்தைப் பார்க்க விவேக் ராமஜெயத்தைக் கேட்டான். "பழைய வண்ணாரப் பேட்டையில் பொன்னம்மா இட்லி கடை தெரியுமா?"

"தெரியும் ஸார்"

"அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளே அங்கே இருக்கணும்" "போயிடலாம் ஸார்" காரை நகர்த்தினார் ராமஜெயம். கார் அந்த சந்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பிரதான சாலைக்கு வந்ததும் வேகம் பிடித்தது.

 

விஷ்ணு உட்காரமுடியாமல் நெளிந்து கொண்டே கிசு கிசுப்பான குரலில் கேட்டான்.

"பாஸ்! இப்ப எதுக்கு பொன்னம்மா இட்லி கடை?"

"கெட்டிச் சட்னியோடு சூடாய் நாலு இட்லி சாப்பிடணும்ன்னு ரொம்ப நாளாய் ஒரு வேண்டுதல்!"

விவேக் சொல்லி விட்டு டாக்ஸியின் பின்சீட்டில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

சென்னையின் அந்த முன்னிரவு போக்கு வரத்தில் டாக்ஸி வீசி எறியப்பட்ட ஈட்டியாய் பழைய வண்ணாரப் பேட்டையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

(தொடரும்...)


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-10-272893.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... - அத்தியாயம் 11

 

முன்கதைச் சுருக்கம்: விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்க்கொடி வேளச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து வெட்டி கோரமாக கொலை செய்யப்படுகிறாள். விவேக்கும் விஷ்ணுவும் விசாரணையில் இறங்குகிறார்கள். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டிற்குள் சுடர்கொடியின் அண்ணன் எனப்பட்ட திலீபன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறான். இந்த கொலை விவகாரத்தை இதற்கு மேல் 'டீப்பாக' விசாரிக்கக் கூடாது என்ற கட்டளை வருகிறது விவேக்குக்கு. ஆனாலும் விசாரணையில் தீவிரம் காட்டுகிறார்கள் விவேக், விஷ்ணு.

 

இந்த நேரத்தில் சுடர்கொடி கொலை விஷயத்தில் தனக்குத் தெரிந்த சில ரகசியங்களைச் சொல்ல வருவதாக போன் செய்கிறாள் சுடர்கொடியின் தோழி ஜெபமாலை. ஒரு ரெஸ்டாரன்டுக்கு மாலையில் வருவதாகச் சொல்கிறாள். ஆனால் அந்த நேரத்தில் அவள் வரமாட்டாள் என கணிக்கிறான் விவேக். மேலும் சுடர்கொடி, திலீபன் மரணங்கள் டெல்லியில் முடிவானவை என்று கூறி, அதற்கு சாட்சியாக தனக்கு வந்த எஸ்எம்எஸ்ஸைக் காட்டுகிறான் விவேக்.

 

கொலையின் முக்கிய ஆதாரத்தைத் தேடி ரூபலாவுக்குக் கூடத் தெரியாமல் பழைய வண்ணாரப்பேட்டைக்கு புறப்படச் சொல்கிறான் விவேக்...

இனி...

விவேக்கை வியப்பாய்ப் பார்த்தான் விஷ்ணு. குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.

"பாஸ்...! பழைய வண்ணாரப்பேட்டை பொன்னம்மா இட்லிக் கடையில் நாலு இட்லியை கெட்டிச் சட்னியோடு சூடாய் சாப்பிடறதுக்கும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுடர்கொடியோட கொலைக்கும் என்ன சம்பந்தம்?"

விஷ்ணு கேட்க விவேக் புன்னகை செய்தான்.

"இந்த மோனலிஸா புன்னகைக்கு என்ன அர்த்தம் பாஸ்?"

"அர்த்தம் இருக்கு. நீயும் நானும் இட்லி கடைக்குப் போனா தெரியும்."

"என்னை தெளிவாய் குழப்பறீங்க பாஸ்...."

"விஷ்ணு ! நீ எப்பவாவது அந்தக் கடைக்குப் போயிருக்கியா...?"

"அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கெல்லாம் போய் சாப்பிடற வசதி எனக்கு இல்லை பாஸ்...," விஷ்ணு கேலியாய் சொல்லி பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு டாக்ஸிக்கு வெளியே வேடிக்கைப் பார்த்தான்.

சென்னை நகரம் சோடியம் வேபர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் பூசி குளித்துக் கொண்டிருக்க, பிளாட்பாரத்தில் சகலவிதமான வியாபாரங்களும் இயங்கின. ஒரு டாஸ்மாக் கடையில் ரஜினி படத்தின் முதல் 'ஷோ' வுக்கு இணையான கூட்டம் தெரிந்தது.

"விஷ்ணு!" விவேக் கூப்பிட்டான்.

"பாஸ்"

"நீ இப்போ உடனடியாய் ஒரு வேலை செய்யணும்"

 

"சொல்லுங்க பாஸ்.... நான் என்ன இப்போ ஒபாமாவோடு முக்கியமான பேச்சு வார்த்தையில் இருக்கேனா என்ன...? சும்மா ரோட்டை வேடிக்கைப் பார்த்துட்டு வர்றேன். நான் இப்ப என்ன பண்ணனும்?"

"விவேக் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தான். "விஷ்ணு! இதுல ஒரு நெம்பர் எழுதப்பட்டு இருக்கு....."

"இந்த நெம்பருக்கு போன் பண்ணி மறுமுனையில் இருக்கற நபர்கிட்ட நான் என்ன பேசணும்?"

"ஒண்ணும் பேசவேண்டாம்?"

"என்ன பாஸ் சொல்றீங்க.....?"

"நீ 'மிஸ்டு கால்' கொடுத்தா போதும்...."

விஷ்ணு விவேக்கை ஒரு உஷ்ணப் பெருமூச்சோடு பார்த்தான். விவேக் அவனை ஒரு புன்னகையில் நனைத்தான்.

"என்ன என்மேல உனக்குக் கோபமா?"

"சேச்சே! உலக மகா சந்தோஷம் பாஸ்... என்னோட போனிலிருந்து முகம் தெரியாத ஒரு நபரோட செல்போன் நெம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கறது சாதாரண வேலையா என்ன...? என்ன ஒரு மகத்தான பணி?"

 

விஷ்ணு சொல்லிக்கொண்டே தன் செல்போனை எடுத்து அந்தத் துண்டுப் பேப்பரில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டான்.

மறுமுனையில் ரிங் போயிற்று.

விஷ்ணு செல்போனை தன் காதோடு ஓட்ட வைத்துக் கொண்டு காத்திருந்தான்.

விவேக் அவனுடைய தோளைத் தட்டினான்.

"உன்னோட போன் காலை யாரும் அட்டெண்ட் பண்ண மாட்டாங்க.... கட் பண்ணு...."

செல்போனை கோபமாய் அணைத்த விஷ்ணு பவ்யத்தோடு கேட்டான்.

"இனிமேல் என்னோட வேலையை நான் பார்க்கலாமா பாஸ்?"

"உனக்கு என்னடா வேலை?"

"டாக்ஸி ஜன்னல் வழியே வீதியை வேடிக்கைப் பார்க்க வேண்டாமா...? நீங்க சொல்ற அந்தக் கடைக்குப் போய் மகத்தான அந்த டின்னரை ரசிச்சு சாப்பிடற வரைக்கும் வேற வேலை எனக்கு என்ன இருக்கு பாஸ்....?"

"ஒரு அரைமணி நேரம் பொறு விஷ்ணு. அதுக்கப்புறம் உனக்கு எல்லாமே புரியும்...!"

"அடப் போங்க பாஸ்" என்று சொன்னவன் ட்ராஃபிக் சிக்னல் அருகே காரில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் மல்லிகை சரத்தை முழம் போட்டு விற்றுக் கொண்டிருந்த அந்தப் பூக்கார பெண்ணை 'அட....அசப்புல பார்த்தா திரிஷா மாதிரி இருக்காளே?" என்று ரசனையுடன் பார்க்க ஆரம்பித்தான்.

 

சரியாய் அரைமணி நேரம்.

பழைய வண்ணாரப்பேட்டைக்குள் டாக்ஸி நுழைந்தது. குழாயடியில் சண்டை போட்டுக் கொண்டிருந்த நான்கைந்து பெண்கள் சென்னைத் தமிழை மணக்க மணக்க பேசி வாழ வைத்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்ஸி ஒரு குறுக்கு சந்தை கடந்தபோது மூத்திர நாற்றம் இரண்டு வினாடி மூச்சை நிறுத்தியது. வயதான தெரு விளக்குகள் அழுக்கான வெளிச்சத்தை தெளித்து வைத்து இருக்க டாக்ஸியின் வேகத்தைக் குறைத்தார் டிரைவர். ஓர் ஓரமாய் ஒதுக்கி நிறுத்தினார். கைகாட்டிக்கொண்டே சொன்னார்.

 

"அதான் ஸார்... நீங்க சொன்ன இட்லிக் கடை. நான் டாக்ஸியை இப்படி ஓரமாய் போட்டுக்கறேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க ஸார்...!"

விவேக் சொன்னான்.

"வர கொஞ்ச நேரமாயிடும்..... பரவாயில்லையா?"

"நீங்க போயிட்டு நிதானமாய் சாப்பிட்டு வாங்க ஸார். இந்நேரத்துக்குப் போனாதான் அந்தக் கடையில் எல்லாமே சூடாய் கிடைக்கும். புரோட்டாவுக்கு கோழி ஈரல் குழம்பு சூப்பராய் இருக்கும். அதை மிஸ் பண்ணிடாதீங்க ஸார். இன்னும் ஒன் அவர்ல எல்லாமே காலியாயிடும்...!"

விஷ்ணு டிரைவரின் தோள் மீது கை வைத்தான்.

 

"என்ன ராமஜெயம்....

பொன்னம்மா இட்லி கடைக்கு நீங்கதான் அம்பாசிடர் போலிருக்கு?"

"அம்பாசிடரா....அப்படீன்னா?"

" கல்யாண் ஜுவல்லரிக்கு பிரபு மாதிரி..." விஷ்ணு டிரைவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே டாக்ஸியிலின்றும் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

" பாஸ்"

" விஷ்ணு.... சீக்கிரம் வா....!"

விஷ்ணு ஓட்டமும் நடையுமாய் போய் விவேக்கோடு இணைந்துக் கொண்டான். சற்று தூரத்தில் ஒரு ஓட்டு வீடு இட்லி கடையாய் மாறி டியூப்லைட் வெளிச்சத்தில் ஒரு சிறிய கும்பலோடு தெரிந்தது.

"இப்பவாவது சொல்லுங்க பாஸ்.... நாம எதுக்காக இங்கே வந்திருக்கோம்......?"

"நாலு இட்லியும்....," விவேக் சொல்ல விஷ்ணு கையமர்த்தினான்.

"இந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையெல்லாம் என்கிட்டே வேண்டாம் பாஸ்...! கேட்டு கேட்டு ரெண்டு காதும் அவுட் ஆஃப் ஆர்டர்..."

விஷ்ணு சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் ரிங்க்டோனை வெளியிட்டது. விஷ்ணு செல்போனை வெளியே எடுத்து டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்த எண்ணை ஆட்காட்டி விரலால் தேய்த்துவிட்டு காதுக்கு கொடுப்பதற்கு முன்பாக ரிங்க்டோன் வாயைச் சாத்திக் கொண்டது.

"ஹலோ... ஹலோ" என்று இரண்டு தடவை குரல் கொடுத்தவன் விவேக்கைப் பார்த்தான்.

"யார்ன்னு தெரியலை பாஸ்"

"அது ஒரு மிஸ்டு கால். நீ டாக்ஸியில் வரும்போது நான் கொடுத்த ஒரு நெம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தியே....?"

"ஆமா...."

 

"அந்த நபர் உனக்கு பதில் கொடுத்திருக்கார்.... மரியாதைக்கு மரியாதை....!"

" பாஸ்.... இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா....? உலகத்திலேயே மிஸ்டு கால் மூலமாய் தெளிவாய் பேசிக்கிட்டது நானும் அந்த நபருமாய்த்தான் இருக்கணும்....!"

ஒரு பெருமூச்சோடு சொல்லி முடித்த விஷ்ணு அப்போதுதான் கவனித்தான். விவேக் நிதானமாய் அந்தக் கடையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தான்.

"பாஸ்.... பொன்னம்மா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இந்த பக்கம் இருக்கு...."

"அது எனக்குத் தெரியாதா என்ன?"

"அப்படீன்னா நாம இப்போ எங்கே போயிட்டிருக்கோம் பாஸ்...."

"மினி பாரடைஸ்"

"புரியலை பாஸ்"

"அது எங்கே இருக்கு?"

"இந்தப் பக்கமாய் வா...!" சொன்ன விவேக் இட்லிக் கடையை ஒட்டியிருந்த ஒரு சந்துக்குள் நுழைந்து குறுக்கிட்ட சின்னச் சின்ன சாக்கடைகளைத் தாண்டிக் கொண்டே நடந்தான்.

சாக்கடை எட்டு திசைகளிலும் மூக்கமாய் நாறியது. விஷ்ணு தன்னுடைய கர்சீப்பை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டே கேட்டான்.

"பாஸ்! உங்களுக்கு 'மூக்கு' ங்கற ஒரு உறுப்பு இருக்கா இல்லையா....? சாக்கடை 360 டிகிரி கோணத்தில் இப்படி நாறுது. ஏதோ பூ மார்க்கெட்டுக்குள்ளே ' பொக்கே' வாங்க போற மாதிரி நடக்கறீங்க?"

"பேசாமே வா விஷ்ணு... கடமையைச் செய்யும்போது இதையெல்லாம் பார்க்கக் கூடாது....!"

 


"இப்ப கடமையைச் செய்யறது நீங்க மட்டும்தான் பாஸ்! மினி பாரடைஸ் ன்னா 'குட்டிச் சொர்க்கம்'ன்னு அர்த்தம். அந்த குட்டிச் சொர்க்கத்துக்கு போற வழியே இப்படி இருந்தா அந்த குட்டிச் சொர்க்கம் எப்படியிருக்குன்னு தெரியலையே ?" விஷ்ணு புலம்பிக் கொண்டிருந்த வினாடி - ஒரு சாக்கடையைத் தாண்டிய விவேக் சட்டென்று நின்றான். ஐந்து வினாடிகள் அப்படியே நின்றான். திரும்பிப் பார்க்காமல் கூப்பிட்டான்.

"விஷ்ணு!"

"என்ன பாஸ்....?"

"பின்னாடி யாரோ ஃபாலோ பண்றாங்கன்னு நினைக்கிறேன்.... நீ அப்படியே கீழே உட்கார்ந்து 'ஷூ லேஸ்' கட்டற மாதிரி நிதானமாய் திரும்பிப் பாரு.....!"

( தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-one-plus-one-zero-11-273386.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 12

 
 

- ராஜேஷ்குமார்

 

'மினி' முன்கதை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... அப்போது யாரோ பின் தொடர்வதாய் உணர்கிறார்கள்...

 

அப்போது...

 

"பின்னாடி யாரோ ஃபாலோ பண்றாங்கன்னு நினைக்கிறேன். நீ அப்படியே கீழே உட்கார்ந்து 'ஷூ லேஸ்' கட்டற மாதிரி நிதானமாய் தலையைத் திருப்பிப்பாரு!" என்று விவேக் சொன்னதும் விஷ்ணு "தாங்க்ஸ் பாஸ்," என்றான்.

 

"இப்ப எதுக்கு இந்த நன்றி அறிவிப்பு?"

 

"இந்த வேலையையாவது எனக்குக் கொடுத்தீங்களே பாஸ்?"

 

"சொல்றதைச் செய் விஷ்ணு.... இந்த கேஸ்ல போகப் போக உனக்கு நிறைய வேலையிருக்கு.... கொஞ்சம் வெயிட் பண்ணு"

 

 

 
Rajeshkumar's One + One = Zero -12
 

 

 

"உங்க உறுதிமொழியை நம்பறேன் பாஸ்," சொன்ன விஷ்ணு குனிந்து உட்கார்ந்த நிலையில் நன்றாக கட்டியிருந்த ஷூ லேஸை அவிழ்த்து மறுபடியும் அதைக் கட்டிக்கொண்டே நிதானமாய் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான்.

 

"பாஸ்," என்று மெல்லக் கூப்பிட்டான்.

 

"சொல்லு...."

 

"யாரோ ஒருத்தன் நின்னுகிட்டு 'உச்சா' போயிட்டிருக்கான்"

 

"அவன் நிஜமாவே 'உச்சா' போயிட்டிருக்கானா இல்லை... நம்மை அப்ஸர்வ் பண்றானா?"

 

"நான் வேணும்னா பக்கத்துல போய்ப் பார்த்துட்டு வரட்டுமா பாஸ்...?"

 

"ஒரு நிமிஷம் உன்னிப்பாய் கவனி. உண்மை தெரிஞ்சிடும்"

 

"எப்படி பாஸ்?"

 

"ஒரு நிமிஷத்துக்கு மேல யாரும் 'உச்சா' போயிட்டிருக்க முடியாது"

 

"அப்படியா பாஸ்?"

 

"ஆச்சரியப்பட இது நேரமில்லை. அவனைக் கவனி"

 

விஷ்ணு மறுபடியும் மெல்லத் திரும்பிப் பார்த்தான். "பாஸ் லைவ் டெலிகாஸ்ட்டை கண்டினியூ பண்ணட்டுமா?"

 

"ம்.... பண்ணு"

 

"அவன் 'உச்சா' பார்ட்டிதான். 'ஜிப்'பை மாட்டிக்கிட்டு கிளம்பிட்டான்...."

 

"நாம இருக்கற பக்கம் திரும்பிப் பார்க்கிறானா?"

 

"இல்லை பாஸ்..... அவனோட கடைக்கண் பார்வைக்கூட நம்ம பக்கம் திரும்பலை...!"

 

"எதுக்கும் இன்னொரு நிமிஷம் அதே போஸ்ல உட்கார்ந்துகிட்டு அப்ஸர்வ் பண்ணு....!"

 

விஷ்ணு இரண்டு நிமிஷ நேரம் பொறுமையாய் உட்கார்ந்து காக்கா பார்வை பார்த்து விட்டு எழுந்தான்.

 

"அவன் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கலை பாஸ். வந்த ஆள் டியூட்டியைப் பார்த்துகிட்டு போயிட்டான்."

 

"சரி... வா.. நாம 'மினி பாரடைஸ்'க்கு போயிடலாம்..."

 

இருவரும் மறுபடியும் சின்னச் சின்ன சாக்கடைகளைத் தாண்டி கொண்டு நடந்தார்கள். விஷ்ணு பொறுமையிழந்தவனாய்க் கேட்டான்.

 

"இப்ப நாம யாரைப் பார்க்க போயிட்டிருக்கோம் பாஸ்.....?"

 

"மணி மொழியன்"

 

"யார் அவரு...?"

 

"மினி பாரடைஸ் ஹோட்டலின் மானேஜர்"

 

"அவரை எதுக்காக பார்க்கப் போறோம்?"

 

"அவர்க்கு ஒரு வேலை கொடுத்து இருந்தேன். அந்த வேலையை அவர் ஒழுங்காய் பண்ணியிருக்காரா இல்லையான்னு பார்க்கணும்...." விவேக் சொல்லிக் கொண்டே அந்த சந்திலிருந்து வெளிப்பட்டான். எதிரே தெரிந்த ஒரு பழைய கட்டிடத்தைக் காட்டினான்.

 

 
 

"ஹோட்டலுக்கு வந்துட்டோம்"

 

விஷ்ணு ஏறிட்டுப் பார்த்தான். எப்போதோ அடித்த டிஸ்டெம்பர். இன்ன நிறம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சாயம் போயிருக்க, வெகு புராதனமாய்த் தெரிந்தது, அந்த இரண்டு மாடிக் கட்டிடம். ஹோட்டல் மினி பாரடைஸ் என்ற போர்டு படிக்க முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தது. ஒரு மஞ்சள் நிற குண்டு பல்பு தன்னால் முடிந்த அளவுக்கு வெளிச்சத்தை தெளித்து ஹோட்டல் ஒன்று இருப்பதை அடையாளம் காட்டியது.

 

விவேக் ஹோட்டலின் வாசற்படிகளில் ஏறி உள்ளே போக நெற்றியில் விபூதிக் கீற்றோடு அந்த நடுத்தர வயது நபர் கும்பிட்டபடி எதிர்பட்டார்.

 

"வாங்க ஸார்!"

 

"என்ன மணி மொழியன்...! நான் சொன்னபடி எல்லாமே செஞ்சுட்டீங்க போலிருக்கு?"

 

"ஆமா ஸார்...."

 

"ரூம் நெம்பர்?"

 

"இருபத்தி மூணு சார்..... ரெண்டாவது மாடி"

 

"சரி.... நாங்க பார்த்துட்டு வந்திடறோம்"

 

விவேக் தனக்கு இடதுபுறமாய் தெரிந்த மாடிப்படிகளை நோக்கிப் போக விஷ்ணு குழப்பத்தோடு தொடர்ந்தான்.

 

இரண்டாவது மாடியின் கோடியில் இருந்தது அந்த 23 எண் அறை.

 

இருவரும் அறைக்கு முன்பாய் போய் நின்றார்கள். அறைக் கதவு சாத்தியிருக்க விவேக் விஷ்ணுவைப் பார்த்தான்.

 

"விஷ்ணு! காலிங்பெல் பட்டனை பிரஸ் பண்ணு!"

 

"ரொம்பவும் கஷ்டமான வேலையை எல்லாம் எனக்கு கொடுத்துடறீங்க பாஸ்"

 

சொல்லிக் கொண்டே பட்டனை அழுத்தினான் விஷ்ணு.

 

பத்து வினாடிகளுக்குப் பிறகு கதவு மெல்லத் திறக்க, அந்த இளம் பெண் சுமாரான அழகோடு பார்வைக்குக் கிடைத்தாள். கண்களில் பயம் தெரிந்தாலும் கட்டாயமாய் புன்னகை செய்தாள். சன்னமான குரலில் பேசினாள்.

 

"ஸார்.... நீங்க வர்ற வரைக்கும் என்னோட உயிர் என்கிட்டே இல்லை....!"

 

"இனிமேல் நீ எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. வா... உள்ளே போய் பேசுவோம்...!"

 

விவேக் சொல்லியபடி அறைக்குள் நுழைய விஷ்ணு கேட்டான். "பாஸ்... இந்தப் பொண்ணு....?"

 

"ஜெபமாலை" என்றான் விவேக்.

 

..............................................

 

ஜெபமாலை கண்கள் நிறைய நீரோடு தலை குனிந்து உட்கார்ந்திருக்க விவேக் அவளுக்கு எதிரே உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்தான்.

 

"இதோ பார் ஜெபமாலை..... இப்ப நாம மூணு பேரும் ஒரு பாதுகாப்பான இடத்துல இருக்கோம். நானும் விஷ்ணுவும் என் வீட்டுப் பின்பக்கமாய் வெளியே வந்து ஒரு நம்பிக்கைக்குரிய நபரின் டாக்ஸியில் பயணம் பண்ணி இந்த ஹோட்டலுக்கு வந்து இருக்கோம். ஹோட்டலின் மானேஜர் மணி மொழியன் எனக்குத் தெரிஞ்சவர். இவரும் ஒரு நம்பிக்கையான மனிதர். எந்த ஒரு விஷயமும் வெளியே போக வாய்ப்பில்லை.... அதனால்தான் உன்னை இந்த ஹோட்டலுக்கு வரச் சொல்லிட்டு மணி மொழியனுக்கு தகவல் கொடுத்தேன். நான் உன்னைச் சந்திக்கப் போகிற விஷயம் என் கூடவே இருக்கற விஷ்ணுவுக்கும் கூட தெரியாது. "

 

"ஆமா சிஸ்டர், " என்றான் விஷ்ணு.

 

விவேக் தன்னுடைய நாற்காலியை இழுத்து ஜெபமாலைக்கு முன்னாள் நெருக்கமாய் போட்டுக்கொண்டான்.

 

"சொல்லு ஜெபமாலை...! உன்னோட ஃப்ரண்டு சுடர்கொடி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், அவளுடைய அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கலிடப்பட்ட சம்பவத்துக்கும் யார் காரணம்?"

 

விவேக் இந்த கேள்வியைக் கேட்டதும் சில வினாடிகள் பேசாமல் இருந்த ஜெபமாலை தான் கையோடு கொண்டு போயிருந்த கைப்பையைத் திறந்து ஒரு செல்போனை எடுத்து உயிர்ப்பித்தாள். 'வாட்ஸ் அப்' ஆப்ஷனுக்குப் போய் வீடியோ காட்சி ஒன்றைத் தேர்ந்து எடுத்து விவேக்கிடம் நீட்டினாள்.

 

"மொதல்ல தொன்னூறு வினாடிகள் ஓடக்கூடிய இந்த விடியோவைப் பாருங்க ஸார். இதை நீங்க பார்த்த பிறகு நான் எல்லா விபரங்களையும் சொல்றேன்.....!"

 

விவேக் ஜெபமாலை கொடுத்த செல்போனை வாங்கி அந்த வீடியோ காட்சியை 'ப்ளே' செய்தான். விஷ்ணுவும் அதில் பார்வையைப் போட்டான்.

 

செல்போன் திரை ஒரு கோயிலைக் காட்டியது. அது ஒரு வடநாட்டுக் கோயில் என்பதற்கு அடையாளமாய் ஹிந்தி வாசகங்களோடு கூடிய விளம்பர போர்டுகள் தெரிந்தன. கோயிலின் வாசலில் பிச்சைக்காரர்கள் வரிசையாய் உட்கார்ந்து தட்டுகளை ஏந்திக் கொண்டிருக்க, கார்கள் வாசலில் வந்து நிற்பதும் காரில் இருந்தவர்கள் இறங்கி கோயிலுக்குள் போவதுமாய் இருந்தனர். முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு ஆடி கார் 'அட்லாண்டிக் ப்ளூ' நிறத்தில் தேர் மாதிரி அசைந்து வந்து கோயில் வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய உயரமான இளைஞன் ஒருவன் தன் கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து நூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்தான். நோட்டுக்கட்டில் இருந்த 'ரப்பர் பேண்ட்' டை கழற்றி வீசிவிட்டு ஒவ்வொரு நூறு ரூபாய் தாளாய் உருவி வரிசையாய் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களின் தட்டுகளில் போட்டுக் கொண்டே போனான்.

 

விவேக் செல்போனில் இருந்து பார்வையை எடுக்காமல் ஜெபமாலையிடம் கேட்டான்.

 

"யார் இந்த இளைஞன்?"

 

"சொல்றேன் ஸார்... மொதல்ல வீடியோ காட்சி முழுவதையும் பார்த்து முடிங்க...!"

 

விவேக் செல்போன் திரையை உன்னிப்பாய் பார்க்க அந்த இளைஞன் இன்னமும் பிச்சைக்காரர்களின் தட்டுகளில் நூறு ரூபாய் தாள்களைப் போட்டுக் கொண்டிருந்தான்.

http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-12-273752.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 13

 
 

- ராஜேஷ்குமார்

முன்கதைச் சுருக்கம்:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள்...

அடுத்து...

ஜெபமாலையின் செல்போனில் அந்த வீடியோ காட்சி ஒரு குறும்படம் போல் ஓடிக்கொண்டிருக்க, விவேக்கும் விஷ்ணுவும் லேசர் பார்வைகளோடு அதை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீடியோ காட்சியில் அந்த பணக்கார இளைஞன் தன் கையில் வைத்து இருந்த நூறு ரூபாய் கட்டிலிருந்து ஒவ்வொரு தாளாய் உருவி கோயிலின் வாசலில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்குப் போட்டுக் கொண்டே வந்தான்.

 

 
Rajeshkumar's One + One = Zero -13
 

 

 

விஷ்ணு ஆர்வம் தாங்க முடியாமல் ஜெபமாலையிடம் திரும்பினான். "சிஸ்டர்! யார் இந்த இளைஞன் ?"

"சொல்றேன்.... அதுக்கு முந்தி பிச்சைக்காரர்கள் வரிசையில் நான்காவது நபராய் உட்கார்ந்து ஒருத்தன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கானே அவனை கவனிங்க"

இருவரும் அவனை பார்த்தார்கள்.

"பதினஞ்சு வயசு பையன் மாதிரி தெரியறான்"

"அவன் பையன்தான்.... ஆனா அவன் பிச்சைக்காரன் கிடையாது. அதாவது அவன் பிச்சை எடுக்கிறதுக்காக அந்தக் கோயில் வாசலுக்கு முன்னாடி போய் உட்காரலை.!"

"அப்புறம் ...?"

"இப்ப அவன் என்ன பண்றான்னு கவனிங்க"

"வாழைப்பழத்தை சாப்பிட்டு முடிச்சிட்டு இப்போ அவன் ஒரு ஆப்பிள் பழம் எடுக்கிறான். அடேங்கப்பா..... எவ்வளவு பெரிய பழம். இப்படி ஒரு பணக்கார பிச்சைக்காரனை நான் பார்த்ததே இல்லை சிஸ்டர்"

ஜெபமாலை சின்னதாய் புன்னகை பூத்தாள். "ஆனா அந்தப் பழத்தை அவன் சாப்பிட மாட்டான்"

"பின்னே?"

"வீடியோவை உன்னிப்பாய் பாருங்க!"

குழப்பமான முகங்களோடு விவேக்கும் விஷ்ணுவும் தங்களுடைய பார்வைகளை லேசர் கதிர்களாய் மாற்றி செல்போனின் வீடியோ திரையின் மேல் போட்டார்கள்.

காட்சி இப்போது மாறியிருந்தது. சிறுவனின் வலதுகையில் அந்த பெரிய ஆப்பிள் இடம் பிடித்திருக்க, வலதுகையில் கூர்மையான கத்தி ஒன்று முளைத்திருந்தது. பழத்தை அறுப்பதைப் போல் பாவனை செய்து கொண்டே சரேலென்று எழுந்தவன் போர்த்தியிருந்த அழுக்குப் போர்வையை உதறிவிட்டு ரூபாய் நோட்டுக்களை தட்டில் போட்டுக் கொண்டு இருந்த இளைஞன் மேல் பாய்ந்தான்.

தன் கையில் வைத்து இருந்த கத்தியால் இளைஞனின் அடிவயிற்றில் ஆழமாய் சொருகிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மின்னலாய் ஓடி மறைந்தான். ரத்தம் பீறிட்டு தாறுமாறாய் சிதற இளைஞன் கீழே விழுந்து சில வினாடிகள் வேகமாய் துடித்து பிறகு மெல்ல மெல்ல அடங்கி சலனமற்ற உடலாய் மாறினான். வீடியோ திரை இருட்டுக்குப் போயிற்று.

விவேக் உறைந்து போன விழிகளோடு ஜெபமாலையைப் பார்த்தான்.

"யார் அந்த இளைஞன்?"

"பேர் அனிஷ் மெஹ்ரா. சொந்த ஊர் மும்பைக்குப் பக்கத்தில் இருக்கற கல்யாண். வயசு இருபத்தெட்டு."

"இந்த சம்பவம் எப்ப நடந்தது.....?"விவேக் கேட்க ஜெபமாலை தன்னிடம் இருந்த கைப்பையைப் பிரித்து நான்காய் மடித்து வைத்து இருந்த அந்த பழைய தமிழ் நாளிதழை எடுத்து எட்டாவது பத்தியில் சிறிய எழுத்துக்களில் பிரசுரமாகியிருந்த அந்த செய்தியைக் காட்டியபடி சொன்னாள்.

"ரெண்டு மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இது. செய்தியைப் படிச்சிப் பாருங்க ஸார்!"

விவேக் அந்த நாளிதழை வாங்கி செய்தியை வாய்விட்டுப் படித்தான்.

மும்பையில் கோயில் வாசலில் நடந்த கோரக் கொலை. சிறுவனின் வெறிச்செயல்.

இதுப்பற்றி கூறப்படுவதாவது: மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் மெஹ்ரா. வயது 28. மும்பையில் உள்ள பெரிய கோடீஸ்வர்களில் ஒருவரான ராதேஷ்யாம் மெஹ்ராவின் ஒரே மகன். கல்யாண் பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற சித்தி புத்தி விநாயகர் கோவிலுக்கு அனிஷ் மெஹ்ரா ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் செல்வது வழக்கம். நேற்று செவ்வாய்கிழமையானதால் அனிஷ் மெஹ்ரா கோயிலுக்குப் போயிருக்கிறார். கோவிலுக்கு மும்பாய் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ரூபாய் நோட்டுக்களைப் போட்டுக்கொண்டிருக்கும் போது 15 வயது சிறுவன் ஒருவன் திடீரென்று அனிஷ் மெஹ்ராவின் மேல் பாய்ந்து அவருடைய அடிவயிற்றில் ஆழமாய் கத்தியைச் சொருகிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் நாளிதழில் இருந்த அந்த செய்தியைப் படித்துவிட்டு ஜெபமாலையிடம் திரும்பினான்.

"ரெண்டு வருஷங்களுக்கு முன்னால் மும்பை கல்யாண் பகுதியில் நடந்த அந்த சம்பவத்துக்கும், சுடர்க்கொடி, திலீபன் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்?"

"அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும் ஸார்"

"எப்படி கண்டுபிடிக்க முடியும்.... மும்பையில் நடந்த அனிஷ் மெஹ்ராவின் கொலைக்கும், சுடர்கொடி திலீபன் கொலைகளுக்கும் நடுவே ஒரு நூலிழை சம்பந்தமாவது இருந்தால்தானே அதை வச்சிக்கிட்டு ஃபர்தராய் இன்வெஸ்டிகேட் பண்ணமுடியும் ?"

"ரெண்டு சம்பவங்களுக்கும் இடையில் சின்னதாய் ஒரு லிங்க் இருக்கு ஸார்"

"அது என்ன லிங்க் ?"

"அனிஷ் மெஹ்ராவை கொலை பண்ணின அந்தச் சிறுவனை வீடியோ பதிவில் பார்த்தீங்களா ஸார்?"

"ஆமா....."

"அந்த பையன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?"

"அது எப்படி தெரியும்?"

"உங்களுக்கும் எனக்கும் தெரியாது. ஆனா சுடர்கொடிக்கு அந்த பையன் யார் என்கிற உண்மை தெரிஞ்சிருக்கு ஸார்......"

விவேக்கின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

"யார் அந்த பையன்?"

"ஸார்.... போன வாரம் ஒரு மத்தியான நேரம் இந்த வீடியோ பதிவை என்னோட வாட்ஸ் அப்புக்கு சுடர்க்கொடி அனுப்பி வெச்சா. நான் அதைப் பார்த்து அதிர்ந்து போய் அவளை போன்ல காண்டாக்ட் பண்ணி இந்த வீடியோ பதிவை உனக்கு அனுப்பி வெச்சது யாருன்னு கேட்டேன். அதுக்கு அவ மும்பையில் இருக்கற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் ஒருவர் தன்னோட 'வாட்ஸ் அப் ' குரூப்பில் இருப்பதாகவும், அவர் வடநாட்டில் நடக்கற சில சம்பவங்களின் தொகுப்பை அவ்வப்போது அனுப்பி வைத்ததில் ஒரு சம்பவம்தான் அந்தப் பதிவுன்னு சொன்னா. மேற்கொண்டு அதைப் பத்திப் பேசிட்டு இருக்கும்போதுதான் அனிஷ் மெஹ்ராவை கொலை செய்த சிறுவன் தமிழ்நாட்டை சேர்ந்தவன்னும் அவனை எங்கேயோ பார்த்ததாகவும் சொன்னா."

"ஈஸிட்"

"ஆமா ஸார்... அவ அப்படி சொன்னதும் அதுக்கு நான் 'அந்த பையன் யாருன்னு கேட்டேன்"

"சுடர்க்கொடி என்ன சொன்னா?"

"அதுதான் யோசனை பண்ணிட்டிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அந்தப் பையன் யார்ங்கறதை எப்படியும் ஸ்மெல் பண்ணிடுவேன்னு சொன்னா.... அதுக்குள்ள இப்படியொரு சம்பவம்"

"அப்படீன்னா .... மும்பையில் நடந்த கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பையன் யாருன்னு சுடர்ககொடி கண்டுபிடிக்க முயற்சி எடுத்ததுதான் அவள் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி கொலை செய்யப்பட்டதுக்கான காரணமா....?"

"ஆமா.... ஸார்...!"

"சுடர்கொடியோட அண்ணன் திலீபன் கொலை செய்யப்படவும் இதுதான் காரணமாய் இருக்கும்ன்னு நினைக்கறியா ?"

"ஆமா... ஸார்... " என்று சொல்லி ஜெபமாலை தலையசைத்துக் கொண்டிருக்கும்போதே தன் வாய்க்குள் அதிகமாய் உமிழ்நீர் சுரப்பதையும், அது புளிப்புச் சுவையோடு இருப்பதையும் உணர்ந்தாள்.

'எதனால் இப்படி....?'

அவளுடைய முகமாற்றத்தை கவனித்து விட்டு விவேக் கேட்டான்.

"என்னாச்சு ஜெபமாலை?"

"ஒரு நிமிஷம் ஸார்," சொன்னவள் அறையின் மூலையில் இருந்த வாஷ் பேசினை நோக்கி வேக வேகமாய் போய் குனிந்தாள். வாய் முழுவதும் நிரம்பிவிட்ட எச்சிலைத் துப்பினாள்.

அடுத்த வினாடி அந்த வெண்ணிற வாஷ்பேசின் முழுவதும் ரத்தமாய் மாறியது.

(தொடரும்)

http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-13-275347.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 14

 
 
 

முன்கதை:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள்...

இனி...

வாஷ் பேசின் முழுவதும் ரத்தப் புள்ளிகள் தெளித்து சிவப்புமயமாய் மாற ஜெபமாலைக்கு கண்கள் இருட்டி தலை சுற்றுவது போல் இருந்தது.

'என்னாயிற்று எனக்கு ?'

யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜெபமாலைக்கு மறுபடியும் வாய்க்குள் உமிழ் நீர் சுரந்து புளிப்புச் சுவை உற்பத்தியாயிற்று. வாய்க்குள் சுனாமி அலை ஒன்று சுழல்வது போன்ற உணர்வு.

 

 
Rajeshkumar's One+One=Zero - 14
 

 

மறுபடியும் வாஷ்பேசினை நோக்கி குனிந்தாள். இந்த முறை ரத்த சேதம் அதிகமாக, வாஷ்பேசினை ஒட்டியிருந்த சுவர் முழுவதும் ரத்தப் புள்ளிகள் தெளித்து ஒட்டிக் கொண்டன.

விவேக்கும் விஷ்ணுவும் பதட்டமும் திகைப்புமாய் அவளை நோக்கி ஓடிவந்தார்கள். கண்கள் சோர்ந்து மயங்கி விழப் போன ஜெபமாலையை விவேக் தாங்கிப் பிடித்தான்.

"ஜெபமாலை..... உனக்கு என்ன பண்ணுது?"

"தெ.... தெ.... தெரியலை ஸார்!" அவள் திணறித் திணறி பேசிக்கொண்டு இருக்கும் போதே நிற்கமுடியாமல் துவண்டு அப்படியே ஒருபக்கம் சாய்ந்து சரிந்தாள். விவேக் அவள் அருகே மண்டியிட்டு உட்கார்ந்தான்.

"ஜெபமாலை "

அவள் பேசும் நிலையில் இல்லை கண்ணிமைகளைத் திறக்க முயன்று தோற்றாள். விவேக் அவள் கண்ணப் பகுதியை லேசாய்த்த தட்டினான். அடுத்த வினாடி அவளுடைய நாசியின் இடது பக்க துவாரத்தில் ரத்தத் துளி ஒன்று சட்டென்று தோன்றி ஒரு பட்டாணி சைஸுக்கு பவளம் போல் உருண்டது.

"விஷ்ணு!"

"பாஸ் ..... !"

"சம்திங் ஹேஸ் ஹப்பெண்ட்.... அந்த ஹோட்டல் மானேஜர் மணிமொழியனைக் கூப்பிடு."

விஷ்ணு வெளியே ஓடி அடுத்த சில வினாடிகளில் மணி மொழியனோடு வந்தான். மணி மொழியின் முகம் வியர்வையிலும் பயத்திலும் நிரம்பியிருந்தது. கீழே விழுந்து கிடந்த ஜெபமாலையைப் பார்த்ததும் பதறினான்.

"என்ன ... ஸார் ஆச்சு இந்தப் பொண்ணுக்கு?"

"தெரியலை... திடீர்ன்னு பிளட் வாமிட்... இந்தப் பெண் ஹோட்டலுக்கு வந்த பின்னாடி ஏதாவது சாப்பிட்டாளா?"

மணிமொழியன் சில விநாடிகள் யோசனையாய் இருந்து விட்டு தலையாட்டினார்.

"ஆமா ஸார்... ஹோட்டலுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே என்னை இன்டர்க்காம்ல காண்டாக்ட் பண்ணி சாப்பிட ஃபுரூட் ஜூஸ் ஏதாவது கிடைக்குமான்னு கேட்டா. கிடைக்கும்ன்னு சொன்னேன். சாத்துக்குடி ஜூஸ் வித்தவுட் ஐஸ் சுகர் இல்லாமே ஆர்டர் பண்ணினா. நான் உடனே உள்ளே இருக்கற ரெஸ்ட்டாரெண்டுக்கு தகவல் சொன்னேன். பேரர் கிருஷ்ணன்தான் சர்வ் பண்ணினான்.....!"

மணி மொழியின் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விவேக்கின் பார்வை அதிரடியாய் அறைக்குள் அலைந்து 'ஸ்கேன்' செய்து சுவர் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடி டம்ளரின் மேல் போய் நிலைத்தது.

"விஷ்ணு....! அந்த டம்ளரை உன்னோட கர்சீப்பை எடுத்து 'பிரஸர்வ்' பண்ணு.....!"

அவசர நடையில் விஷ்ணு அலமாரியை நோக்கி நகர, விவேக் மணிமொழியனிடம் திரும்பினான்.

"இங்கே பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடல் இருக்கா?"

"இருக்கு ஸார்.... நம்ம ஹோட்டலுக்குப் பின்னாடி அடுத்தத் தெருவில் 'குறிஞ்சி ஹாஸ்பிடல் இருக்கு'."

"உடனே ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி வரவழைங்க. ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ளே ஜெபமாலைக்கு ஏதாவது ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்து நினைவை வரவழைக்க முடியுமான்னு பார்க்கலாம்..."

மணிமொழியன் கை நடுங்க தன்னுடைய செல்போனை எடுத்து ஹாஸ்பிடலின் போன் நெம்பரை தேடி எடுத்து பேசும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, ஜெபமாலை இப்போது இரண்டு நாசி துவாரங்களிலும் ரத்தம் வருவதற்கான அறிகுறியைக் காட்டினாள். கண்கள் பாதி திறந்து இருக்க தன வலது கையை உயர்த்தி விவேக்கை பக்கத்தில் வரும்படி சைகை செய்தாள். ஏதோ பேச முயற்சித்து வேகமாய் மூச்சு வாங்கினாள்.

விவேக் அவள் அருகே குனிந்தான்.

"பயப்படாதே ஜெபமாலை... உனக்கு ஒண்ணும் ஆகாது இப்ப ஹாஸ்பிடலுக்குப் போயிடலாம். இது மாதிரியான ஒரு 'பிளட் வாமிட்டிங்' எப்பவாவது உனக்கு வந்திருக்கா....?"

'இல்லை' என்பது போல் மெல்ல தலையை அசைத்தாள் ஜெபமாலை.

"நீ என்கிட்டே ஏதோ சொல்ல விரும்புற மாதிரி தெரியுது. உன்னால பேச முடியுமா?"
ஜெபமாலையின் உதடுகள் வேகமாய் அசைந்தன. ஆனால் ஒரு துளி சத்தம் கூட வெளியே வராமல் அவளுடைய தொண்டைக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. மறுபடியும் பேச முயற்சித்தவள் முடியாமல் சோர்ந்து போனாள். கடைவாயில் ரத்தம் மெலிதாய் ஒரு கோடு போட்டுக் கொண்டு வழிந்து பாதியிலேயே உறைந்து போயிருந்தது.

 

விஷ்ணு விவேக்கிற்குப் பக்கத்தில் வந்தான். குனிந்து குரலைத் தாழ்த்தினான்.

"பாஸ்...!"

"என்ன?"


கர்சீப் ஒன்றால் கண்ணாடி டம்ளரைப் போர்த்திப் பிடித்திருந்த விஷ்ணு சொல்ல, விவேக் எழுந்து பார்த்தான்."ஒரு நிமிஷம் இந்த டம்ளரைப் பாருங்க...!"

கண்ணாடி டம்ளருக்குள் நான்கைந்து ஈக்களும் எறும்புகளும் உயிரை விட்ட நிலையில் டம்ளரில் பக்கவாட்டில் ஒட்டியிருந்தது.

விவேக்கின் விழிகள் விஷ்ணுவை கலக்கமாய்ப் பார்க்க விஷ்ணு சொன்னான்.

"பாய்சன் பாஸ்... ஃப்ரூட் ஜூஸ்ல கலந்து கொடுத்து இருக்காங்க...."

மணிமொழியன் வியர்வை நிற்காத முகத்தோடு அருகில் வந்தார். "ஸார்... போன் பண்ணிட்டேன்... ஆம்புலன்ஸ் இப்ப வந்திடும்... நாம ஜெபமாலையை கீழே கொண்டு போயிடலாம்!"

விஷ்ணுவும், மணிமொழியனும் ஜெபமாலைத் தூக்கிக்கொண்டு படிகள் இறங்க விவேக் மணிமொழியனிடம் கேட்டான்.

"ஜெபமாலைக்கு ஜூஸ் கொடுத்த அந்த பேரர் பேர் என்னான்னு சொன்னிங்க....?"

"கிருஷ்ணன்"

"ஆள் எப்படி...?"

"ரொம்பவும் நல்ல டைப் ஸார்"

"நான் பார்க்கணும்"

"ரெஸ்ட்டாரெண்டில்தான் இருப்பான்"

"நான் பேசணும்... அந்த கிருஷ்ணன் கிட்டதான் ஏதோ தப்பிருக்கு"

மூன்று பேரும் மாடியினின்றும் கீழே வந்தார்கள்.

ஜெபமாலையை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தார்கள். அதே வினாடி சைரன் சத்தத்தோடு ஹோட்டலின் வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

"விஷ்ணு... நீ அம்புலன்ஸ்ல கிளம்பு. டாக்டர்கிட்டே விபரத்தைச் சொல்லி ஜெபமாலையை எப்படியாவது காபாத்தைச் சொல்லு... அவ ஏதோ சொல்ல வந்தா. ஆனா அவளாலே பேச முடியலை.... பேசினால்தான் உண்மைகள் வெளியே வரும்....! ஜெபமாலை நமக்கு உயிரோட வேணும்"

ஆம்புலன்ஸிலிருந்து இறங்கி வந்த ஹாஸ்பிடலின் ஆர்டர்லிகள் ஒரு ஸ்ட்ரெச்சரோடு உள்ளே வந்து சோபாவில் சலனமில்லாமல் கிடந்த ஜெபமாலையை அரை நிமிட நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் வேனுக்குள் கொண்டு போனார்கள். விஷ்ணு ஓடி போய் வேனின் முன் சீட்டில் ஏறிக்கொண்டான்.

வேன் கிளம்பிப்போனதும் விவேக் மணிமொழியனிடம் திரும்பினான்.

"அந்த பேரர் கிருஷ்ணனை கூப்பிடுங்க ....!"

"நான் இங்கே தான் ஸார் இருக்கேன்..." கிரே நிற யூனிஃபார்மில் அந்த இளைஞன் பக்கவாட்டு அறையிலிருந்து வெளிப்பட்டான். நெற்றியில் விபூதி கீற்றும் அதன் மையத்தில் குங்குமத் தீற்றும் தெரிந்தது.

விவேக் கேட்டான்.

"அந்த பெண் ஜெபமாலைக்கு நீ தான் ஜூஸ் கொண்டுபோய் கொடுத்தையா...?"

"ஆமா ஸார் ...

"ஜூஸ் போட்டது யாரு?"

"நான் தான் ஸார்"

"ஜூஸ்ல சக்கரைப் போட்டியா?"

"இல்ல சார் ... ஐஸும், சுகரும் போடா வேண்டாம்ன்னு சொல்லியிருந்தாங்க "

"அப்படீன்னா ... வெறும் ஜூஸ் மட்டும் கொண்டு போய் கொடுத்தியா?"

"இல்ல ஸார் 'டார்டர் எமிடிக்' கை ரெண்டு மில்லி கிராம் போட்டு கொடுத்தேன்."

"என்ன சொன்னே ... டார்டர் எமிடிக் கா... !"

"அது என்ன...?"

"அது ஒருவகையான விஷம் ஸார்" சொல்லிவிட்டு ஒரு குரூரப் புன்னகையை தன் உதட்டில் உதிக்க வைத்தான் கிருஷ்ணன்.

(தொடரும்...)

http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-one-one-zero-14-277426.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 15

 

முன்கதை:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான்...

இனி... விவேக் பேரர் கிருஷ்ணனை சற்றே கலவரமாய்ப் பார்த்தான்.

"என்னது... ஜெபமாலை ஃப்ரூட் ஜுஸ்ல விஷத்தைக் கலந்து கொடுத்தையா.... ?"

Rajeshkumar's crime thriller One + One = Zero - 15

அந்த கிருஷ்ணன் உதட்டில் இன்னமும் குரூரப் புன்னகையின் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. "ஆமா .... ஸார்... போலீஸ் விசாரிச்சா உண்மையைத் தானே சொல்லணும்..... அந்த ஜெபமாலைக்கு ஃப்ரூட் ஜுஸ்ல விஷத்தைக் கலந்து கொடுத்தது நான் தான். விஷத்தோட பேரு டார்டர் எமிக் .... "

கிருஷ்ணன் அலட்சியமான குரலில் சொல்லிக் கொண்டிருக்க ஹோட்டலின் மானேஜர் மணிமொழியன் தலைக்கேறிய கோபத்துடன் அவனுடைய சட்டையின் காலரைக் கொத்தாய்ப் பிடித்தார்.

"டேய் ... யார்கிட்டே என்ன பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசறியா.... ?"

"தெரிஞ்சுதான் பேசறேன் ஸார்...!"

"எதுக்காக அந்த பொண்ணுக்கு விஷத்தைக் கலந்து கொடுத்தே ?"

"தீர்ப்பு ஸார்"

"தீர்ப்பா.... ?"

"ஆமா ஸார்... கொலைக் குற்றவாளிகளுக்கு 302- வது செக்ஷன் படி மரண தண்டனைதான் தரணும்... ?"

மணிமொழியன் அதிர்ந்து போக விவேக் திகைப்போடு கிருஷ்ணனை பார்த்தான்.

"நீ பேசறது எனக்குப் புரியலை "

"அந்த ஜெபமாலை ஒரு குற்றவாளி ஸார் "

"என்னது குற்றவாளியா ?"

"ஆமா சார்... என்னோட உயிருக்கு உயிரான நண்பன் விக்டர் சாமுவேலோட மரணத்துக்கு அந்த ஜெபமாலைதான் காரணம். ஒரு நிமிஷம் இந்த போட்டோவைப் பாருங்க ஸார். அவ ஒரு கொலைக் குற்றவாளி ஸார் "

கிருஷ்ணன் தன் சட்டை பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு போட்டோவையும் அதனோடு ஸ்டேபிளிங் செய்யப்பட்டிருந்த கசங்கிப் போன கடிதத்தையும் எடுத்து நீட்ட விவேக் வாங்கிப் பார்த்தான்.

போட்டோவில் ஒரு பாறையின் பின்னணியில் கிருஷ்ணன் ஒரு இளைஞனின் தோளில் கையைப் போட்டு சிநேகமாய் சிரித்து போஸ் கொடுத்து இருந்தான். தொலைவில் நீலக்கடல் அலைகளோடு தெரிந்தது.

"அவன்தான் ஸார் என்னோட ஃப்ரண்டு விக்டர் சாமுவேல். ஒரு பிரபலமான ஐ. டி. கம்பெனியில் நல்ல வேளையில் இருந்த அவனுக்கு வாழக்கையில் இருந்த ஒரே உறவு அவனுடைய அம்மா மட்டும் தான். அப்பா எப்பவோ காலமாயிட்டார். விக்டருக்கு எத்தனையோ நண்பர்கள் உத்யோக ரீதியில் இருந்தாலும் என்மேல் அவன் வெச்சிருந்த நட்பு ரொம்பவும் ஆழமாவே இருந்தது. தினமும் சாயந்திரம் ஆறுமணிக்கெல்லாம் விக்டர் திருவல்லிக்கேணியில் நான் தங்கியிருக்கற 'பேச்சுலர்' லாட்ஜுக்கு வந்து என்கிட்டே ஒருமணி நேரமாவது பேசிட்டுதான் போவான். போன வருஷம்தான் ஒருநாள் ஒரு பொண்ணோட போட்டோவை என்கிட்டே காட்டி 'இவ பேரு ஜெபமாலை, இவளைத்தான் நான் உயிருக்கு உயிராய் காதலிச்சிட்டிருக்கேன். அம்மாகிட்டே முறைப்படி சொல்லி இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்'னு சொன்னான். அவன் அப்படிச் சொன்னது எனக்கும் சந்தோஷமாகவே இருந்தது. ஆனா அந்த சந்தோஷம் மூணு மாசம் கூட நிலைக்கலை. ஒரு அதிகாலை நேரத்துல அந்த தகவல் வந்தது. விக்டர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி பண்ணி இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கான் என்கிற தகவல்தான் அது. ஓடிப்போய் பார்த்தேன்.... உயிருக்குப் போராடிகிட்டு இருந்தான். அவனோட அம்மா ஒரு பக்கம் மயக்கமாய் கிடந்தாங்க. 'ஏண்டா இப்படியொரு முடிவுக்கு வந்தேன்'னு கேட்டேன். அதுக்கு 'ஜெபமாலை என்னை ஏமாத்திட்டா. வெளிநாட்டு ஐ. டி. கம்பெனியில் நல்ல வேளையில் இருக்கற ஒருத்தனை காதலிக்க ஆரம்பிச்சுட்டா. உனக்கு விபரமாய் கடிதம் எழுதி நேத்து ராத்திரி போஸ்ட் பண்ணியிருக்கேன். நாளைக்கு உன் கைக்கு அந்த லெட்டர் கிடைக்கும். ஆனா அந்த லெட்டரை யாருக்கும் காட்ட வேண்டாம். என்னோட தற்கொலை முடிவுக்கு ஜெபமாலைதான் காரணம்ன்னு யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமாய் அம்மாவுக்கு தெரியவேகூடாது. .... ஜெபமாலைக்கு காலம் தண்டனை கொடுக்கும்'ன்னு சொல்லிட்டு விக்டர் தன் கடைசி மூச்சை விட்டான். அவன் எழுதின அந்த லெட்டர் ரெண்டு நாள் கழிச்சு என் கைக்குக் கிடைச்சது... "

"அந்த லெட்டர் தானா இது... ?" விவேக் கேட்டான். "

ஆமா ஸார்.... ஜெபமாலை அவனை ஏமாத்திட்டதாலே அவனோட மனசு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டதுன்னு உருகி உருகி கடிதம் எழுதியிருக்கிறான். அந்த லெட்டரை இது வரைக்கும் ஒரு நூறு தடவையாவது. படிச்சிருப்பேன். ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் என்னாலக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. ஜெபமாலையை கடவுள் தண்டிப்பாரா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் அவளைத் தண்டிக்க முடிவு அவளோட நடவடிக்கைகளை கவனிச்சிட்டு இருந்தேன். கடந்த ஆறுமாசக் காலமாய் கிடைக்காத அந்தப் பொன்னான வாய்ப்பு இண்னைக்கு எனக்கு இந்த ஹோட்டலில் கிடைச்சது."

"ஜெபமாலை இந்த ஹோட்டலுக்கு வர்றது உனக்கு முன்கூட்டியே தெரியுமா ?"

"தெரியாது ஸார்... நான் கேட்டரிங் கோர்ஸ் படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருந்தேன். வேலை கிடைக்கற மாதிரி தெரியலை. வேலை கிடைக்கறவரை ஏதாவது ஒரு ஹோட்டலில் பேரர் வேலையாவது பார்க்கணும்ன்னு நினைச்சேன். இந்த ஹோட்டல்ல வேலை கிடைச்சது சேர்ந்துட்டேன். இந்த ஹோட்டலுக்கு ஜெபமாலை வருவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. என்னோட கையில்தான் அவ சாகணும்ன்னு நினைக்கும் போது யார் என்ன பண்ண முடியும் ஸார்.... ?"

"ஃப்ரூட் ஜூஸில் நீ கலந்த அந்த விஷத்துக்கு என்ன பேர்ன்னு சொன்னே?"

"டார்டர் எமிக் "

"அந்த விஷம் உன்னோட கைக்கு எப்படி கிடைச்சது ?"

"ஸார்.... இப்பவும் நான் திருவல்லிக்கேணியில் இருக்கற பேச்சுலர் லாட்ஜில்தான் 'ஸ்டே' பண்ணியிருக்கேன். என் கூட அதே அறையில் இன்னும் நாலஞ்சு பேர் தங்கியிருக்காங்க. அதுல ஒருத்தன் மெடிக்கல் ரெப். அவன் கிட்டே சாம்பிள் டிரக்ஸில் ஒண்ணுதான் இந்த டார்டர் எமிக். பௌடர் மாதிரி இருக்கும். இந்த டார்டர் எமிடிக் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். "

"நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை 


"உங்களுக்கு புரியும்படியாவே சொல்றேன் ஸார். இந்த 'டார்டர் எமிடிக்'கை ஒரு மில்லிகிராம் அளவுக்கு எடுத்துட்டா மருந்து. அதையே ரெண்டு மில்லிகிராம் அளவுக்கு எடுத்துக்கிட்டா விஷம். இந்த விபரத்தை அந்த மெடிக்கல் ரெப் நண்பன் பலதடவை என்கிட்டே சொல்லியிருக்கான். ஜெபமாலையை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல தீர்த்துக்கட்ட வாய்ப்பு கிடைக்கும்போது அந்த 'டார்டர் எமிடிக்' கை உபயோகப்படுத்தலாம்ன்னு நினைச்சு அந்த 'ரெப்' க்கு தெரியாமே எடுத்து வெச்சிருந்தேன். இன்னைக்கு ஜெபமாலைக்கு நேரம் சரியில்லை. நான் வேலை செய்யிற இந்த ஹோட்டலுக்கே வந்து மாட்டிக்கிட்டா. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை அவ இருந்த ரூமுக்கு போய் டீ, காப்பி, ஜூஸ் ஏதாவது வேணுமான்னு கேட்டேன். முதல் தடவை கேட்டபோது எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டா. ரெண்டாவது தடவை போய்க் கேட்டதும் சரி ஜூஸ் ஏதாவது கொண்டுவான்னு சொல்லிட்டா. சந்தோஷமாய் வந்து சாத்துக்குடி ஜூஸ் போட்டேன். அதுல ரெண்டு கிராம் 'டார்டர் எமிடிக்' பௌடரைக்கலந்தேன்..... அந்தப் பௌடர் விஷமாய் மாறி ரத்த வாந்தியை உண்டு பண்ணி ஒருத்தரை மரணத்தோடு விளிம்பு வரைக்கும் கொண்டு போய் நிறுத்த ஒரு மணி நேரம் பிடிக்கும். "

 

விவேக் தனக்குள் பீறிட்ட கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். "ஜெபமாலைக்கு நீ விக்டரோட ஃப்ரண்டு என்கிற விஷயம் தெரியாதா ?"

"தெரியாது ஸார்... தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னாடி விக்டர் எனக்கு எழுதிய அந்த லெட்டரைப் படிச்சுப் பாருங்க ஸார் உங்களுக்கு உண்மை புரியும். மேரேஜ் இன்விடேஷனைப் பிரிண்டு பண்ணின பிறகு தான் என்னை ஜெபமாலைக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்தி அவளுக்கு அறிமுகப்படுத்தலாம்ன்னு இருந்தானாம்..."

கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விவேக்கின் செல்போன் மெலிதாய் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்துப் பார்த்தான். மறுமுனையில் விஷ்ணு காத்திருந்தான். விவேக் அந்த அறையை விட்டு வெளியே வந்து குரலைத் தாழ்த்தினான். "என்ன விஷ்ணு.... ?"

 

"ஜெபா இப்போ ஐ. ஸி. யூ. வில் பாஸ் "

"டாக்டர் என்ன சொன்னார் ?"

"அவர் உதட்டைப் பிதுக்கி தலையை ஆட்டிக்கிட்டே உள்ளே போயிருக்கார்... எனக்கென்னமோ.... "

"சொல்லு ...."

"ஜெபா இனிமே நமக்கு உபயோகப்படமாட்டா பாஸ் "

"ஆனா ... ரத்தவாந்தி எடுத்ததுக்குப் பின்னாடி நமக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வாக்கியத்தைப் பேசிட்டு போயிருக்கா "

"என்ன பாஸ் சொல்றீங்க... ரத்த வாந்தி எடுத்ததுக்குப் பின்னாடி அவ தான் ஒரு வார்த்தை கூட பேசலையே ?"

"அவ பேசலை... ஆனா அவளுடைய உதடுகள் அசஞ்சதா இல்லையா ?"

"அசைஞ்சது .....!"

"அதை நான் படிச்சிட்டேன் " "என்ன பாஸ் சொல்றீங்க ?"

"இனிமேல்தான் நமக்கு நிறைய வேலை..."

(தொடரும்....)

 


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-15-279148.html

 

 

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 16

 

 விவேக் போலீஸ் கமிஷனருக்கு முன்பாய் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்திருக்க, அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஜெபமாலையின் நிலைமையைப் பற்றி டாக்டர் என்ன சொன்னார் மிஸ்டர் விவேக் ?"

"ஸார்.... ஜெபமாலை ஈஸ் ஸ்டில் இன் ஏ க்ரிடிகல் ஸ்டேஜ்."

"உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கா இல்லையா ?"

"டார்டர் எமிடிக் விஷத்தை முறியடிக்க தொடர்ந்து எல். எஸ். டி சேவிங் இஞ்செக்ஷன்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து போட்டுக்கிட்டு இருக்காங்க ஸார். ஜெபமாலை போலீஸ் டிபாட்மெண்டுக்கு உயிரோட தேவை என்கிற உண்மையை அந்த ஹாஸ்பிடலோட டாக்டர் குழுவும் முழுமையாய் உணர்ந்து இருக்காங்க... "

"நீங்க ஜெபமாலையை ஐ. ஸி. யூனிட்ல போய் பார்த்தீங்களா விவேக் ?"

"பார்த்தேன் ஸார்... பட் ஷி ஈஸ் நாட் இன் கான்ஷியஸ் கண்டிஷன். அவளுக்கு நினைவு திரும்பக் கூடிய சாத்தியம் இன்னும் ஒரு பத்துமணி நேரத்துக்கு இல்லைன்னு சீஃப் டாக்டர் சொன்னதால நான் திரும்பிட்டேன். இருந்தாலும் விஷ்ணுவை ஹாஸ்பிடலிலேயே இருக்கும்படி சொல்லியிருக்கேன். "

"தட்ஸ் குட் ..... !" என்று சொல்லி தலையசைத்த கமிஷனர் சற்றே குரலைத் தாழ்த்தினார்.

"நீங்க எனக்கு அனுப்பின வீடியோவை 'வாட்ஸ்அப்' பில் பார்த்தேன். அந்த வீடியோ காட்சி சுடர்கொடி உயிரோட இருந்தபோது ஜெபமாலைக்கு அனுப்பிய வீடியோதானே ?"

"ஆமா.... ஸார் "

"அந்த வீடியோவை சுடர்கொடிக்கு அனுப்பியது யாரு?"

"மும்பையில் இருக்கிற ஒரு ஆங்கில பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் ஒருவர் சுடர்கொடியோட வாட்ஸ் அப் குரூப்பில் இருந்ததாகவும், அவர்தான் வாரத்துக்கு ஒருதடவை வடநாட்டில் நடக்கிற சில சம்பவங்களைத் தொகுத்து அனுப்பி வைத்ததாகவும் ஜெபமாலை சொன்னா...."

"அந்த வீடியோ காட்சியில் அனிஷ் மெஹ்ரா என்கிற ஒரு பணக்கார இளைஞனை பதினாறு வயசு பையன் ஒருத்தன் பிச்சைக்காரர்கள் வரிசையிலிருந்து எழுந்து கண்ணிமைக்கின்ற நேரத்துக்குள்ளே கத்தியால் குத்தி கொலை செய்கிற குரூரம் என்னோட கண்ணுக்குள்ளே இன்னமும் அப்படியே உறைஞ்சு போய் நின்னிட்டிருக்கு. அந்த கொலை எதுக்காக நடந்ததுன்னு மும்பை போலீஸ் கிட்டே விசாரிச்சீங்களா ?"


"விசாரிச்சேன் ஸார் "

"வாட் வாஸ் த ரிப்ளை ?"

"அனிஷ் மெஹ்ரா ஒரு கோடீஸ்வரரோட மகன் ஸார். அவர் பேரு ராதே ஷியாம். வைர வியாபாரி. மும்பை ஜவேரி பஜாரில் 'அனிஷ் டைமண்ட்ஸ்' என்கிற பேர்ல ஒரு பெரிய நகைக்கடையை நடத்திட்டு வர்றார். அனிஷ் மெஹ்ராவுக்கு இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் நடக்க இருந்த சூழ்நிலையில்தான் கொலை செய்யப்பட்டிருக்கார். கொலைக்கான மோட்டிவேஷன் என்னவாகயிருக்கும்ன்னு மும்பை போலீஸாசாராலே இன்னமும் கண்டு பிடிக்க முடியாததுதான் இந்த நிமிஷம் வரைக்கும் இருக்கிற மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்த வீடியோ பதிவு மூலமாய் நமக்குக் கிடைச்சிருக்கற ஒரு உபயோகமான தகவல் சுடர்கொடிக்கு கொலை செய்த அந்த பையன் யார் என்கிற உண்மை தெரியும்ங்கிறதுதான். இந்த உண்மையை ஸ்மெல் பண்ணின யாரோ ஒரு நபர்தான் சுடர்கொடியை ஃபாலோ பண்ணி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சு வெட்டி சாய்ச்சிருக்கான்....!"


"அந்தப் பையன் யாருன்னு சுடர்கொடி ஜெபமாலைகிட்டே சொல்லியிருந்தாளா ?"

"இல்லை ஸார்.... சுடர்கொடிக்கும் அந்த பையன் யாருன்னு தெரியலை. அனிஷ் மெஹ்ராவை கோயில் வாசலில் வெச்சு கொலை செய்த அந்த பையன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்னும், அவனை எங்கேயோ பார்த்திருக்கறதாகவும், இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே எப்படியும் கண்டுபிடிச்சிடுவேன்னும் சுடர்கொடி ஜெபமாலைகிட்டே சொல்லியிருக்கா."

போலீஸ் கமிஷனர் தன் சதைப்பிடிப்பான தாடையை யோசனையோடு தேய்த்தார்.

"இந்த கேஸ்ல எல்லாமே துண்டு துண்டான சம்பவங்கள். எந்த ஒரு சம்பவமும் இன்னொரு சம்பவத்தோடு கொஞ்சம்கூட பொருந்திப் போகவேயில்லை. மும்பையில் ஒரு கோவில் வாசல். பிச்சைக்காரர்கள் வரிசையில் ஒரு பதினாறு வயசு தமிழ் நாட்டுப் பையன். இன்னும் ஆறு மாசத்துல கல்யாணமாகப்போகிற அனிஷ் மெஹ்ரா என்கிற வைர வியாபாரியோட மகன். அது சம்பந்தமான ஒரு வாட்ஸ் அப் பதிவு. அந்த பையன் யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணின சுடர்ககொடி வெட்டிக் கொலை. அண்ணன் என்கிற உறவில் சுடர்கொடிக்கு கணவனாக இருந்து அவளோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த திலீபனும் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை... எல்லாச் சம்பவங்களும் நவகிரகங்கள் மாதிரி ஒவ்வொரு திசையைப் பார்த்திட்டிருக்கு 

விவேக் குறுக்கிட்டான்.

"ஸார்...! மும்பையில் அனிஷ் மெஹ்ரா கொலை செய்யப்பட்ட விஷயத்தில் ஒரு விஞ்ஞான விபரீதமும் கலந்திருக்கு "

"விஞ்ஞான விபரீதமா....?"

"ஆமா ஸார்... கொலை பண்ணின பையனுக்கு திடகாத்திர உடம்பு கிடையாது. அதே சமயம் அனிஷ் மெஹ்ராவுக்கு வலுவான உடற்கட்டு. நல்ல உயரம், கிட்டத்தட்ட ஆறடி. அந்தப் பையனின் கையில் இருந்த கத்தி ஒரு ஆப்பிள் பழத்தை நறுக்கிற அளவுக்கு இருந்த சாதாரண கத்திதான். அந்தக் கதியாலதான் அனிஷ் மெஹ்ரா குத்தப்பட்டு இருக்கார். வயிற்றில் சொருகப்பட்ட கத்தி அவர் அணிந்து இருந்த வலுவான ஆடையையும் மீறித்தான் உள்ளே போயிருக்கு. அதாவது அரையங்குல ஆழத்துக்குத்தான் காயம். இந்த அளவுக்கு ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படாது என்கிறது மருத்துவம். "

விவேக் சொல்ல போலீஸ் கமிஷனர் நிமிர்ந்து உட்கார்ந்தார். "பிறகு எப்படி அனிஷ் மெஹ்ரா இறந்து போனார்."

"நான் மும்பை போலீஸ் கிரைம் பிராஞ்சில் உள்ள அதிகாரி மல்ஹோதாராவை செல்போனில் காண்டாக்ட் பண்ணி பேசும்போது அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அனிஷ் மெஹ்ராவின் உடம்பை போஸ்ட் மார்ட்டம் பண்ணின டாக்டர் பி. எம். ரிப்போர்ட்டில் ஓர் ஆச்சர்யமான குறிப்பை பதிவு பண்ணியிருக்கார். அதாவது அனிஷ் மெஹ்ரா கத்தியால் குத்தப்பட்ட காயத்தால் இறக்கவில்லை. "

"தென் ?"

"பையன் உபயோகப்படுத்திய கத்தி சாதாரண கத்திக் கிடையாது என்றும் அது ஒருவகையான 'அடாமிக் நைஃப்' என்று சொல்லப்படுகிற வகைகளுள் சேர்ந்த அபாயகரமான கத்தி என்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த டாக்டர் மென்ஷன் பண்ணியிருந்தார்."

கமிஷனரின் புருவங்கள் வியப்புக்கு உட்பட்டு சில மில்லி மீட்டர் உயரத்துக்கு மேலேறியது.

"மை குட்னஸ் ... அடாமிக் நைஃப் என்கிற ஒரு வார்த்தையை நான் இன்னைக்குத்தான் கேள்விப்படறேன் மிஸ்டர் விவேக் !"

"நான் ஆல்ரெடி கேள்விப்பட்டிருக்கேன் ஸார். இது மாதிரியான கத்தியின் முழு பெயர் அடாமிக் யுரேனியம் 16 டைப் நைஃப். ஒருத்தரோட உடம்பில் குத்தப்பட்ட மறு வினாடியே யுரேனியம் அணுக்கதிர்கள் வெளிப்பட்டு ரத்தத்தோடு கலந்து பத்தே வினாடிகளில் இருதயத் துடிப்பை நிறுத்திடும். இது ஒரு ஹெச். டி. டபிள்யூ. தட் மீன்ஸ் ஹைலி டேஞ்சரஸ் வெப்பன்."

"விவேக் இந்த விஷயம் கொஞ்சம் விபரீதமாய் தெரியுது. மும்பை போலீஸ் குற்றவாளியைக் கண்டுபிடிக்க மேற்கொண்டு எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுத்து இருக்காங்க....!"

"அது இன்னமும் விபரீதம் ஸார் "

வாட் டூ யூ மீன் ?"

"அனிஷ் மெஹ்ரா கொலை செய்யப்பட்ட கேஸை மும்பை போலீஸ் ஒரு மெத்தனத்தோட இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கு ஸார்"

"காரணம்?"

"சம் இன்னர் பாலிடிக்ஸ்ன்னு கேள்விப்பட்டேன். ஆனா நாம இப்படி இருக்கமுடியாது ஸார். ஏன்னா சுடர்கொடி அனிஷ் மெஹ்ராவின் கொலையில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டிருக்கா. கொலையாளியான அந்தப் பையனையும் எங்கேயோ பார்த்து இருப்பதாய் ஜெபமாலையிடம் சுடர்கொடி சொல்லியிருக்கா. ஜெபமாலை தொடர்ந்து இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்த மாதிரி என்கூட பேசியிருந்தா சுடர்கொடி கொலை சம்மந்தமாய் சில உண்மைகள் எனக்குக் கிடைச்சிருக்கும் ஸார். அதுக்குள்ளே அந்த பேரர் கிருஷ்ணன் கொடுத்திருந்த பாய்சன் கலந்த ஜூஸ் நிலை குலைய வெச்சு ஹாஸ்பிடலின் ஐ. ஸி. யூனிட் வரைக்கும் கொண்டு போயிடுச்சு....!"

விவேக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

மறுமுனையில் விஷ்ணு.

பேசினான்.

"பாஸ்... எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்குன்னு தெரியும். இருந்தாலும் இப்ப நான் சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்டுட்டு நீங்க ரெண்டு டம்ளர் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும் "

(தொடரும் )


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-16-279575.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 17

 

 ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். ஜெபமாலைக்குத் தரப்படும் சிகிச்சைக் குறித்து கமிஷனரிடம் விவேக் விவரிக்கும்போது, விஷ்ணு பெரும் பதட்டத்துடன் விவேக்குக்கு போன் செய்கிறான்...


இனி...

விஷ்ணு செல்போனின் மறுமுனையில் சொன்னதைக் கேட்டு சற்றே குரலைத் தாழ்த்தினான் விவேக்.

"ஹாஸ்பிடல்ல ஏதாவது பிரச்னையா?''

"பிரச்னைன்னு சொல்லாதீங்க பாஸ். பிரளயம்னு சொல்லுங்க...''

"புரியும்படியாய் சொல்லு...!''

விவேக் இன்னும் குரலைத் தாழ்த்தினான். "என்ன பாஸ்... உங்க வாய்ஸோட டெசிபல் ரொம்பவும் கவலைக்கிடமாய் இருக்கு... எதிர்ல கமிஷனர் இருக்காரா?''

"ஆமா...''

"அப்படீன்னா போன்ல எதுவும் வேண்டாம் பாஸ்... நீங்க ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டு உடனடியாய் ஹாஸ்பிடலுக்குப் புறப்பட்டு வாங்க...'' விஷ்ணு சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட விவேக்கும் செல்போனை அணைத்தான்.

கமிஷனரை ஏறிட்டான். அவர் ஏதோ ஒரு ஃபைலைப் புரட்டி அதன் பக்கங்களில் மும்முரமாய் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தார். விவேக் செல்போனை அணைத்ததும் தலை நிமிராமல் கேட்டார்.

"என்ன மிஸ்டர் விவேக்... கால் யார்கிட்டேயிருந்து?''

"விஷ்ணு சார்''

"எனிதிங்க்... இம்பார்ட்டண்ட்?''

"அந்தப் பெண் ஜெபமாலைக்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள கான்ஷியஸ் திரும்ப வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.''

"தட்ஸ் குட்... டு ஹியர் திஸ் மெஸேஜ்'

' "நான் புறப்படறேன் ஸார்... '' விவேக் நாற்காலியினின்றும் தன்னை உருவிக்கொண்டு எழுந்தான்.

"ஜெபமாலை கான்ஷியஸுக்கு வந்து ஏதாவது பேசினா அந்த விபரத்தை எனக்கு உடனடியாய் கன்வே பண்ணுங்க விவேக்''

"ஷ்யூர் ஸார்...!''


"விவேக் கமிஷனரின் அறையினின்றும் வெளிப்பட்டான். விஷ்ணு செல்போனில் 'பிரச்னைன்னு சொல்லாதீங்க பாஸ், பிரளயம்னு சொல்லுங்க' என்று சொன்னது விவேக்கின் இருதயத்தை கலவர பூமியாக மாற்றியது.

'ஹாஸ்பிடலில் அப்படி என்ன நடந்திருக்கும்?'

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய காரை நோக்கி வேகவேகமாய் நடந்தான் விவேக்.

*******

முப்பது நிமிட வேகமான கார் பயணம்.

ஹாஸ்பிடல் வந்தது.

வரவேற்பறையிலேயே காத்திருந்தான் விஷ்ணு. அவனது உடம்பில் வழக்கமாய் ஒட்டியிருக்கும் உற்சாகத்தில் ஐம்பது சதவீதம் காணாமல் போயிருந்தது

. "வாங்க பாஸ்...''

"என்னடா பிரச்னை?''

"பிரச்னையில்ல பாஸ் பிரளயம்''

"சரி...பிரளயம்... அது என்ன?''

"பாஸ்... இது ரிசப்ஷன்... உள்ளே வாங்க... அந்த காலியான ரூமுக்கு போயிடுவோம்...!''

விஷ்ணு சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட விவேக் அவனைப் பின் தொடர்ந்தான்.

இருவரும் அந்த காலியான அறைக்குள் நுழைந்தார்கள். விஷ்ணு கதவைச் சாத்தினான்.

"என்னடா பண்றே?''

"கதவைச் சாத்தினேன் பாஸ்''

"அது தெரியுது... கதவை மூடிட்டு பேசற அளவுக்கு அப்படி என்ன பிரச்னை, ஸாரி பிரளயம்...?'

' "பாஸ்... நீங்க எப்படி காரணம் இல்லாம ஒரு காரியத்தை செய்ய மாட்டீங்களோ அதே மாதிரிதான் நானும்...''

"சரி... சரி... விஷயத்தை சொல்லு...''

"விஷயத்தைச் சொல்லப்போறது நானில்லை பாஸ்'

' "பின்னே...?''

"என்னோட செல்போன்... இதுல நான் ரெக்கார்ட் பண்ணி வெச்சுருக்கற கான்வெர்சேஷனைக் கேளுங்க பாஸ்...'

"கான்வெர்சேஷனா...?''

"ஆமா பாஸ்... நீங்க கமிஷனர் ஆபிஸுக்கு புறப்பட்டுப் போனதும் கொஞ்ச நேரம் கழிச்சு ஜெபமாலையோட கான்ஷியஸ் கண்டிஷன் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்காக டாக்டரைப் பார்க்கப் போனேன். அவரோட அறைக் கதவு திறந்திருந்தது, கதவைத் தட்டிட்டு உள்ளே போலாம்னு நினைச்ச விநாடி அவரோட கோபமான குரல் கேட்டது. "ஜெபமாலையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியணும்?'' இப்படி ஒரு கோபமான வாசகம் டாக்டர்கிட்டேயிருந்து வெளிப்பட்டதும் நான் உஷாரானேன். டாக்டர் யார் கூடவோ போன்ல பேசிட்டிருக்கார். போனின் மறுமுனையில் இருக்கிற யாரோ ஒரு நபர் ஜெபமாலையைப் பத்தி விசாரிக்கிற விஷயம் என்னுடைய மனசுக்கு உறுத்தலாய் படவே உடனே என்னோட செல்போனை எடுத்து ஆடியோ ரிக்கார்டிங் ஆப்ஷனுக்குப் போய் 'ஆன்' பண்ணிட்டேன்... அந்த கான்வெர்சேஷனைத்தான் இப்ப நீங்க கேட்கப் போறீங்க பாஸ். ஆன் பண்ணட்டுமா?''

"பண்ணு...!''

ஆடியோ ஆப்ஷனை ஆன் செய்தான் விஷ்ணு, டாக்டரின் குரல் கோபத்தோடு கேட்டது.

"சரி! உங்களுக்கு இப்ப என்ன வேணும்?''

டாக்டர் கேட்ட கேள்விக்கு மறுமுனையில் ஒலித்த ஓர் ஆண் குரல் அதள பாதாளத்தில் இருந்து ஏதோ ஓர் எதிரொலி போல் கேட்டது. "

நான் சொல்றபடி நீங்க கேட்கணும் டாக்டர்''

"மொதல்ல நீங்க யார்ன்னு எனக்குத் தெரியணும்''

"மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு முக்கியமான அதிகாரியின் பி.ஏ பேசறேன்''.

"பேரு?''

"அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் டாக்டர். அந்த விபரத்தையெல்லாம் சொல்ற மாதிரி இருந்தா நானே நேர்ல வந்து இருப்பேன். இப்ப நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். ஜெபமாலை விவகாரத்துல நான் உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கிற மாதிரி நீங்க நடந்துக்கணும்''

"இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை...!''

"ஜெபமாலைக்கு அவ்வளவு சுலபத்துல கான்ஷியஸ் வந்துடக்கூடாது. அப்படியே வந்தாலும் பேச முடியாத நிலைமையில் சில குறிப்பிட்ட நாட்கள் வரை இருக்கணும்...''

"இது எதுக்காகன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?''

"கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?''

"நான் ஒரு டாக்டர். என்னோட ஒரு பேஷண்டை குணப்படுத்தக்கூடாதுன்னா அதுக்குச் சரியான காரணம் வேணும் இல்லையா?''

"ஜெபமாலை சில குறிப்பிட்ட நாள் வரைக்கும் எதுவும் பேசாம இருக்கறதுதான் நம்ம நாட்டுக்கு நல்லது... முக்கியமாய் நம்ம தமிழ்நாட்டுக்கு ரொம்ப ரொம்ப நல்லது...!''

"எனக்கு காரணம் தெரியணும்...''

"நேரம் வரும்போது உங்களுக்கே தெரிய வரும்''

"ஸாரி... மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு முக்கியமான அதிகாரியின் பிஏ பேசறதாய் நீங்க சொல்றீங்க... இந்த விஷயத்தை நான் எப்படி நம்ப முடியும்?''

"இப்போதைக்கு நீங்க நம்பணும்... ஜெபமாலை விவகாரத்துல நாங்க சொன்னபடி நடந்துக்கணும்''

 

"அப்படி நடக்கலைன்னா...?''

"அதுக்கப்புறம் உங்க வாழ்க்கையில நடக்கப்போகிற சம்பவங்களில் சந்தோஷம் என்கிற விஷயம் காணாமல் போயிருக்கும்''

"இந்த மிரட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்''

"இது மிரட்டல் இல்லை... ஒரு அப்ளிகேஷன்... இந்த அப்ளிகேஷனை கன்சிடர் பண்றதும் பண்ணாததும் உங்க விருப்பம். இது ஒரு தனி நபர் கட்டளை கிடையாது. அரசாங்கத்தோட கட்டளை. சில நேரங்களில் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாய் சொல்ல முடியாது''

"நான் கொஞ்சம் யோசிக்கணும்''

"இதுல யோசிக்க ஒண்ணுமேயில்லை... ஜெபமாலைக்கு கான்ஷியஸ் திரும்பக் கூடாது. அப்படி திரும்பினாலும் அவ பேச முடியாத நிலைமையில் வெச்சுருக்க வேண்டியது உங்க கடமை. இது அனானிமஸ் போன் கால் கிடையாது. அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட அதிகாரபூர்வமான கால்.ஸோ யோசனை பண்ணி ஒரு முடிவு எடுங்க டாக்டர். இனி நான் உங்களுக்கு போன் பண்ணமாட்டேன்!''

உரையாடல் இத்துடன் நின்றுபோயிருக்க விஷ்ணுவின் செல்போன் வாயைச் சாத்திக் கொண்டது.

"கேட்டீங்களா பாஸ்...?''

"ம்...''

"எவனோ ஒருத்தன் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை ஒரு போர்வையாய் போர்த்திகிட்டு மிரட்டுறான்...''

"இல்ல விஷ்ணு... போன்ல பேசுன நபர் அரசுத் துறையைச் சேர்ந்த நபராத் தான் இருக்கணும்... அந்தப் பேச்சுல ஓர் ஆணவம் இருந்தது. அப்படிபட்ட ஓர் ஆணவம் ஓர் அரசு அதிகாரியின் பேச்சில் தான் இருக்கும்''

"இப்ப என்ன பண்ணப் போறோம் பாஸ்?''

"அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரியணும். டாக்டர் செல்போனில் அந்த நபரோடு பேசும்போது அவரோட வாய்ஸ் மட்டும் தானே உன்னோட செல்போன்ல ரெக்கார்ட் ஆகியிருக்கணும். எதிமுனையில பேசின நபரோட வாய்ஸும் துல்லியமாய் பதிவாகியிருக்கே... அது எப்படி...?''

 

"ஸாரி பாஸ்... உங்ககிட்ட அந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்னொட ஃப்ரெண்ட் ஒருத்தன் 'ட்யூட்டி பெய்ட் ஷாப்' ஒண்ணை வெச்சு நடத்திட்டு வர்றான். போன மாசம் அவனோட கடைக்குப் போய் நான் பேசிட்டிருந்தபோது அவன் ஒரு 'சிப்'பைக் கொடுத்து இதை உன்னோட செல்போன்ல ஃபிக்ஸ் பண்ணிக்கோன்னு சொன்னான். இது என்ன சிப்ன்னு கேட்டேன். அதுக்கு அவன் இந்த 'சிப்'க்கு பேர் மெமோர் மைக்ரோ சவுண்ட் அண்ட் வாய்ஸ் கேப்ச்சர் (MEMORE MICRO SOUND AND VOICE CAPTURE). இதை செல்போன் ஆடியோ ஆப்ஷனோட கனெக்ட் பண்ணி உள்ளே பொருத்திட்டா அது ஒரு நபரின் பேச்சை பதிவு பண்ணும்போது எதிர்முனை செல்போனில் பேசுகிற நபரின் பேச்சையும் பதிவு பண்ணி ரெண்டு பேருக்கும் இடையில எது மாதிரியான பேச்சுவார்த்தை நடைபெற்றதுன்னு உரிச்ச வாழைப்பழம் மாதிரி காட்டிக் கொடுத்துடும்...!''

விஷ்ணு சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நீளமான வராந்தாவின் கோடியில் ஒரு நர்ஸ் வேகமாய் ஓடி வருவது தெரிந்தது.

(தொடரும்...)


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-17-280231.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 18

 

வராந்தாவின் கோடியில் இருந்து அந்த நர்ஸ் பதட்டமாக ஒடி வருவதைப் பார்த்ததும் விஷ்ணு "அட நம்ம கல்பனா'' என்றான்.

"கல்பனாவா?'' விவேக்கின் வியப்பைப் பொருட்படுத்தாமல் விஷ்ணு பேசினான்.

"ஆமா பாஸ்... அந்த நர்ஸ் பேரு கல்பனா. சொந்த ஊர் கேரளா பக்கம் நெம்மாரா. அப்பா இல்ல... அம்மா மட்டும். ஒரே தங்கச்சி''

"டேய்... அந்த நர்ஸ் ஓடி வர்றதை பார்த்தா ஏதோ பிரச்னை போலிருக்கு...''

 

"என்னன்னு இப்ப கேட்டுடலாம் பாஸ்...,'' விஷ்ணு சொல்லிக்கொண்டே வேகமாய்ப் போய் அவளை மறித்தான்.

"கல்பனா... என்னாச்சு? ஏன் இப்படி டென்ஷனா ஓடி வர்றே...?''

''சார்...உங்களைப் பார்க்கத்தான் ஓடி வந்துட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி இந்தப் பக்கமாய் வேகமாய் நடந்து எந்த நர்ஸாவது போனாளா...?''

"நர்ஸா...?''

"ஆமா... கொஞ்சம் உயரமா கறுப்பா''

"இல்லயே... ஏன் என்ன விஷயம்?''

"ஸார்... அந்த நர்ஸ் இங்கே வேலை பார்க்கிற நர்ஸ் இல்லை. ஆனா ஜெபமாலை இருந்த ரூமுக்குள்ள அவ நுழைஞ்சதைப் பார்த்துட்டு வேக வேகமாய் போய் அவளை மறிச்சு யார்னு கேட்டேன். புதுசா வந்துருக்கற நர்ஸ் கோர்ஸில் ட்ரெய்னிங் ஸ்டூடண்ட்னு சொன்னா...எனக்கு அவ அப்படி சொன்னது ஆச்சர்யமா இருந்தது. பொதுவா நர்ஸிங் கோர்ஸில் ட்ரெய்னிங் ஸ்டூடண்ட்ஸ் ஜனவரி இல்லை ஃபிப்ரவரி மாசம்தான் வருவாங்க...இந்த நவம்பர் மாசம் வர வாய்ப்பே இல்லை...''

"ஸோ அவ ஒரு ஃபேக் பெர்சன்...?''

"ஆமா ஸார்... அவளை நான் மேற்கொண்டு விசாரிக்கும்போதே என்னோட வீட்டில் இருந்து ஒரு போன் கால் வந்தது. அம்மா பேசினாங்க... அந்த ஃபோனை அட்டெண்ட் பண்ணிட்டு திரும்பிப் பார்க்கிறேன். அந்த நர்ஸ் ஐசியூ யூனிட்டை விட்டு வேக வேகமா வெளியேறிப் போய்க்கிட்டு இருந்தா... நான் உடனே அவளை ஃபாலோ பண்ணி துரத்த ஆரம்பிச்சேன். ஐசி யூனிட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். பார்வைக்கு தட்டுப்படவே இல்லை. எப்படியும் அவ ஹாஸ்பிடலை விட்டு வெளியே போகணும்னா இந்த ரிசப்ஷன் வழியாத்தான் போயாகணும்னு ஓட்டமா வந்தேன். உங்ககிட்டயும் விஷயத்தை சொல்லலாம்னு நினைச்சேன்.''

விஷ்ணு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சொன்னான். "நான் கடந்த பதினஞ்சு நிமிஷமா ரிசப்ஷன்லதான் இருந்தேன். இப்பதான் இந்த ரூமுக்கு வந்தேன். என்னோட பாஸ்கிட்ட பேசிகிட்டு இருந்தப்பதான் வராந்தாவுல வேகவேகமாய் வர்றதை ஜன்னல் வழியாய் பார்த்துட்டு வெளியே வந்தேன்...''

 

"அப்படின்னா நீங்க ரூமுக்குள்ள இருக்கும்போதுதான் அந்த நர்ஸ் இந்த வராந்தாவை கிராஸ் பண்ணி வெளியே போயிருக்கணும்...''

"மே பீ... வா... கல்பனா... நாம ரெண்டு பேரும் வெளில போய் அந்த நர்ஸ் நம்ம கண்ணுல தட்டுப்படறாளான்னு பார்ப்போம்... அவ ரொம்ப தூரம் போயிருக்க முடியாது,'' சொன்ன விஷ்ணு விவேக்கிடம் திரும்பினான்.

"பாஸ்...''

"போய்ட்டு வா... நான் இதே இடத்துல நின்னுட்டுருக்கேன். அந்த நர்ஸ் எப்படி இருப்பான்னு சொன்னீங்க சிஸ்டர்?''

"கொஞ்சம் கறுப்பாய் உயரமாய்...''

"அப்படி யாராவது தட்டுப்படறாங்களான்னு நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்கு வெளியே போய் பார்த்துட்டு வாங்க... அவ ஏதாவது வாகனத்துல வந்துருக்கலாம். செக்யூரிட்டிகிட்ட சின்னதா ஒரு என்கொயரி பண்ணுங்க...''

விஷ்ணுவும் நர்ஸ் கல்பனாவும் ரிசப்ஷன் அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு புயல் வேகத்தில் வெளியேற விவேக் சில வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அரை வட்ட மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ரிசப்ஷனிஸ்டை நோக்கிப் போனான்.

 

செல்போனில் யாருடனோ பேசி சிரித்துக்கொண்டிருந்தவள் விவேக்கை பார்த்ததும் லேசாய் முகம் மாறி எழுந்து நின்றாள்.

"ஸார்...''

விவேக் அவளிடம் குரலைத் தாழ்த்தி ஏதோ கேட்க மாடிப்படிகளுக்கு கீழே இருந்த ஒரு அறையைக் காட்டினாள்.

"அதுதான் ஸார்...''

"தேங்ஸ். இனிமே உன்னோட சிரிப்பை செல்போன்ல கண்டினியூ பண்ணும்மா...!'' விவேக் சொல்லிவிட்டு மாடிப்படிகளுக்கு கீழே இருந்த அறையை நோக்கிப் போனான்.

வெறுமனே சாத்தியிருந்த கதவை மெல்லத் தள்ளிப் பார்க்க உள்ளே நடுத்தர வயது நபர் பெரிய கம்ப்யூட்டர் மானிட்டர் திரைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். விவேக்கைப் பார்த்ததும் எழுந்தார். பவ்யமாக விஷ் செய்தார்.

"ஸ ஸார்...!''

"உட்காருங்க... இந்த ஹாஸ்பிடல்ல பொருத்தப்பட்டிருக்கற எல்லா ஸி.ஸி டிவி கேமராக்களோட இணைப்பு இந்த அறையில மட்டும் தான் இருக்கா... இல்ல... வேற எங்கயாவதும் இருக்கா...?''

"இந்த அறையில மட்டும் தான் ஸார்...!''

"ஐ ஸி யூனிட்டுக்குள்ளும் கேமரா பொருத்தப்பட்டிருக்கா...?''

"க்ரிடிகல் கேர் ஐஸியூனிட்டுக்குள்ள மட்டும் ஸிஸிடிவி கேமரா இருக்காது. மத்தபடி எல்லா இடத்துலயும் பொருத்தப்பட்டுருக்கும்.''

"நேத்து இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன ஜெபமாலையோட யூனிட்டுக்குள்ல கேமரா இருக்கா?''

"இருக்கு ஸார்...''


"ஜெபமாலை அட்மிட் பண்ணப்பட்டிருக்கற யூனிட்டுக்குள்ள பத்து நிமிஷத்துக்கு முன்னாடி யார் யார் போயிருக்கான்னு போட்டுக் காட்ட முடியுமா?''

"இப்ப பார்த்துடலாம் ஸார்...'' சொன்ன அந்த ஆபரேட்டர் கம்ப்யூட்டர் திரையை வெளிச்சமாக்கி பத்து நிமிஷத்துக்கு முன்பு பதிவான காட்சிகளை 'க்ளோஸ் அப்'புக்கு கொண்டு வந்துக் காட்டினார்.

 

விவேக்கின் பார்வை உன்னிப்பாயிற்று. சற்றே உயர்த்திப்போட்ட கட்டிலில் ஜெபமாலை படுத்து இருக்க உடம்பில் துளி சலனமில்லை. க்ளுகோஸ் பாட்டில் மட்டும் சிரசாசனம் செய்து மெல்லிய ட்யூப் வழியே மஞ்சள் நிற திரவத்தை சொட்டு சொட்டுகளாய் உடம்புக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தது. நர்ஸ் கல்பனா சுவரோரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு எதிர்ச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த 'கார்டியோகிராஃப்'பில் ஜெபமாலையின் இதயத்துடிப்பு பச்சை நிறக் கோடுகளில் எகிறி எகிறிக் குதிப்பதை உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவ்வப்போது எழுந்துப்போய் க்ளுகோஸ் மட்டத்தை சரிபார்த்துவிட்டு மறுபடியும் வந்து அமர்ந்தாள். சார்ட்டை எடுத்து ஏதோ எழுதினாள். காட்சிகள் மௌனமாக பதிவாகிக்கொண்டிருக்க ஆபரேட்டர் சன்னமான குரலில் கேட்டார்.

"ஏதாவது பிரச்னையா ஸார்...?''

"ஆமா... ஜெபமாலை இருந்த அறைக்குள்ள நர்ஸ் கல்பனா எதற்காகவோ வெளியே போயிருந்தபோது வேற யாரோ ஒரு பெண் நர்ஸ் யூனிஃபார்ம்ல வந்துருக்கா. நல்ல வேளையாய் கல்பனா அந்தப் பொண்ணை நோட் பண்ணி யார் என்னன்னு விசாரிச்சிருக்கா... அப்படி விசாரிச்சுட்டு இருக்கும்போதே கல்பனாவுக்கு போன் வரவே அதைப்பயன்படுத்தி அந்த பொண்ணு தப்பிச்சு ஓடிட்டா...'' இப்போது பதட்டம் ஆபரேட்டரையும் தொற்றிக்கொண்டது.

 

"அந்தப்பொண்ணு யார்ன்னு இப்ப பார்த்துடலாம் ஸார்...'' இருவருடைய பார்வையும் கம்ப்யூட்டர் திரையில் பதிந்திருக்க, அடுத்த சில நொடிகளில் நர்ஸ் கல்பனா அறையை விட்டு வெளியேறுவது தெரிந்தது. விவேக் சொன்னான்.

"இந்த நேரத்துல தான் அந்தப் பொண்ணு அறைக்குள்ள வந்துருக்கணும்''

"மே பீ ஸார்...''

இருவருடைய பார்வைகளும் லேசர் கதிர்களாய் மாறின. அறையில் இப்போது ஜெபமாலை மட்டும் சலனமில்லாமல் படுத்திருக்க அறைக்குள் வரும் பெண்ணைக் காட்டுவதற்காக ஸிஸி டிவி கேமரா காத்திருந்தது.

விவேக் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அறையின் சூழ்நிலை சற்றே மாறியது. ஓர் உருவம் உள்ளே நுழைந்தது. ஆனால் அது யார் என்றே தெரியாத அளவுக்கு உருவம் பளபளப்பான எக்ஸ் கோடுகளாய் மாறி ஏதோ புகை போல அலைந்தது.

ஜெபமாலையை நோக்கி எக்ஸ் கோடுகள் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும்போதே கல்பனா வேகமாய் அறைக்குள் நுழைவது தெரிந்தது. கல்பனாவின் உருவம் தெளிவாய் தெரிய, வந்த பெண்ணின் உருவம் மட்டும் கோடுகளாய் மாறி மினுமினுத்தது.

விவேக்கின் கண்களில் பிரமிப்பு பரவியது. ஆபரேட்டரை பயத்தோடு பார்த்தான்.

"என்ன அந்தப் பொண்ணோட உருவம் மட்டும் தெளிவாய் இல்லாம 'ப்ளர்' அடிக்குது?''

ஆபரேட்டரின் கண்களில் ஒருவித கலவரம் தெரிய அவருடைய குரலும் குழறியது

"ஸ ஸார்...!''

"என்ன?''

"இது ஒரு விபரீத விஷயம் ஸார்...!"

"விபரீதம்னா...?"

"யூ. வி. 30 ஸார்...!"

"எனக்குப் புரியலை...!"


"சிசி டிவி கேமரா இயக்கத்தையும் அதனோட செயல்பாடுகளையும் முடக்குற ஒருவகை ஜாமர் ஸார்...!" என்று சொன்ன ஆபரேட்டர் தனக்கு பக்கத்தில் இருந்த மேஜையின் இழுப்பறையை திறந்து ஒரு கையடக்க புத்தகத்தை எடுத்தார்.

புத்தகத்தின் தலைப்பு சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ் என்று இருந்தது. அதனுடைய சில பக்கங்களை புரட்டியவர் ஒரு பக்கத்தில் பார்வையை நிறுத்தி

"இதைப் படிச்சுப் பாருங்க ஸார்...!" என்றார்.

"யூவி 30 யூ எச் எஃப் அண்ட் வி எச் எஃப் ஜாமர்ஸ் பிளாக்கர்ஸ் டூ ஜாம் ஸி ஸி டிவி கேமராஸ் அண்ட் ஆர் எஃப் ஐ டி மைக்ரோசிப்ஸ்( UV 30 UHF AND VHF JAMMERS AND BLOCKERS TO JAM CCTV CAMERAS AND RFID MICROCHIPS)

விவேக்கின் விழிகள் வியப்பில் விரிய ஆபரேட்டர் சொன்னார். "நர்ஸ் யூனிஃபார்ம் போட்ட அந்த பெண் தன்னோட உருவம் சிசி டிவி கேமராக்களுக்கு சிக்காம ப்ளர்ரா தெரியறா மாதிரி இந்த ஜமாரை தன்னோட உடம்போட ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டு வந்துருக்கலாம் ஸார்...!''

(தொடரும்...)

 


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-18-280938.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒன் + ஒன் = ஜீரோ -19... ஆச்சர்யம், த்ரில் நிறைந்த ராஜேஷ்குமாரின் விறுவிறு க்ரைம் தொடர்!

 

 

கதை, இதுவரை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். ஜெபமாலைக்குத் தரப்படும் சிகிச்சைக் குறித்து கமிஷனரிடம் விவேக் விவரிக்கும்போது, விஷ்ணு பெரும் பதட்டத்துடன் விவேக்குக்கு போன் செய்கிறான். மருத்துவமனையில் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள்.

 

இனி...

போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் திரிபாதி தனக்கு முன்பாய் உட்க்கார்ந்திருந்த விவேக்கையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்வையால் நனைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

"சி.சி.டி.வி. காமிராக்களையே 'ஜாம்' பண்ணக்கூடிய அளவுக்கு ஒரு ஜாமரை தன்னோட உடம்பில் பொருத்திக் கொண்டு ஒரு பெண் நர்ஸ் யூனிஃபார்மில் ஹாஸ்பிடலுக்குள்ளே நுழைந்து ஜெபமாலையைக் கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்காங்கற விஷயத்தை நாம் சாதாரணமாய் எடுத்துக்க முடியாது மிஸ்டர் விவேக்... இந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி ஒரு புத்திசாலியான டீம் இருக்கும்ங்கற உண்மையும் நாம புரிஞ்சுக்கணும்....!"

"ஸார்... அதை நான் ஏற்கனவே அஸ்யூம் பண்ணிட்டேன். மும்பையில் ஒரு கோயில் வாசலில் அனிஷ் மெஹ்ரா என்கிற கோடீஸ்வர இளைஞன் கொலை செய்யப்பட்ட விவகாரத்துக்கும், இங்கே சென்னையில் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து சுடர்கொடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் பின்னாடி இயங்கற கும்பல் வெரி பவர்ஃபுல் யூனிட். ரொம்பவும் புத்திசாலித்தனமாய் அனிஷ் மெஹ்ராவை கொலை செய்ய ஒரு பதினைந்து வயது சிறுவனை பயன்படுத்தியிருக்காங்க. அந்தப் பையன் கையில் இருந்த கத்தியும் 'அடாமிக் நைஃப்' என்கிற அதி நவீன ஆயுதம்... சுடர்கொடிக்கு டில்லியில் இருக்கிற செய்தியாளர் ஒருவர் அனுப்பின 'வாட்ஸ் அப்' பில் பதிவாகியிருந்த கொலையாளி சிறுவனைப் பார்த்ததும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு. அந்த சிறுவனை தமிழ் நாட்டில் ஏதோ ஒரு இடத்தில பார்த்ததாக ஜெபமாலையிடம் சொல்லியிருக்கா."

 

கமிஷனர் குறுக்கிட்டு கேட்டார்.

"பட்.... அந்த சிறுவன் யார்ங்கறதை சுடர்கொடியால ஐடென்டிஃபை பண்ண முடியலை....?"

"இல்ல ஸார்... சுடர்கொடிக்கு அந்தப் பையன் யாருன்னு தெரிஞ்சிருக்கு... அந்த உண்மையை ஜெபமாலைகிட்டயும் சொல்லியிருக்கா..."

"தனக்குத் தெரியாதுன்னு ஜெபமாலை சொன்னதாய் நேத்து ராத்திரி நீங்க சொன்னீங்களே மிஸ்டர் விவேக்...?"

"சொன்னேன் ஸார்... ஆனா ஜெபமாலை ரத்த வாந்தி எடுத்து ஹாஸ்பிடலுக்குப் போறதுக்கு முந்தி அவ என்கிட்டே ரெண்டு மூணு வார்த்தைகளைப் பேசினா. பட் சத்தம் வரலை... வெறும் லிப் மூவ்மெண்ட் மட்டும்தான். அந்த உதட்டு அசைவுகளை வெச்சு ஜெபமாலை சொன்ன வார்த்தைகள் எதுவாக இருக்கும்ன்னு தொன்னூறு சதவீதம் கண்டு பிடிச்சுட்டேன் சார்...!"

கமிஷனரின் முகம் முழுவதும் பவுடர் பூசிய தினுசில் மகிழ்ச்சி பரவியது.

"குட் எஃபர்ட்... அது என்ன வார்த்தைகள்?"

"மூணு வார்த்தைகள் ஸார் குர்நோக்கம், ஜே.சி.ஹெச். ஹாசீர்வதம்...!"

"ஒரு வார்த்தை கூட புரியலையே?"

"எனக்கும்தான் ஸார்...! ஆனா ஒரு விஷயம் தெளிவாய் புரிஞ்சது. தட் ஈஸ் வெரி கிரிஸ்டல் க்ளியர் ."

"என்ன?"

"சுடர்கொடி ஜெபமாலைக்கு தெரியப்படுத்தின விஷயங்களை ஜெபமாலை என்கிட்டே சொல்ல விருப்பப்படலை. ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு ஆபத்து என்கிற நிலைமை வந்த போதுதான் என்கிட்டே உண்மையைச் சொல்ல விரும்பியிருக்கா... அவ சொல்ல விரும்பினாலும் பேச்சு வரலை. ஆனாலும் அவளுடைய உதட்டசைவுகளை என்னுடைய செல்போனில் வீடியோவாய் எடுத்திருந்ததால அதை வீட்ல வெச்சு பலமுறை மானிட்டர் பண்ணிப் பார்த்தேன். மவுத் எக்ஸ்பிரஷன்ஸ் அண்ட் லிப்ஸ் இன் பாடி லாங்க்வெஜ் ( MOUTH EXPRESSIONS AND LIPS BODY LANGUAGE ) பெரும்பாலும் இந்த முறையில் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள் சரியாக இருக்கும்."

"ஆனால் புரியவில்லையே...?"

"கண்டு பிடிச்சுடலாம் ஸார்..."

"ஹௌ... ஒண்ணுக்கு ஒண்ணு புரியாத சம்பந்தம் இல்லாத வார்த்தைகள். குர்நோக்கம், ஜே.சி.ஹெச். ஹாசீர்வதம்"

"இந்த வார்த்தைகள் சம்பந்தமாய் நான் ஒருத்தரை விசாரிக்க வேண்டியிருக்கு ஸார்..."

"ஹூ ஈஸ் தட் ?"

" 'வளையோசை' பெண்கள் பத்திரிக்கையின் ஆசிரியர் மீனலோசினி... அந்தப் பத்திரிக்கையின் பிரதான ரிப்போர்ட்டர்தான் சுடர்கொடி. ஜெபமாலை இப்போ பேசக்கூடிய நிலைமையில் இல்லை. நர்ஸ் யூனிஃபார்மில் ஜெபமாலையைக் கொலை செய்ய வந்த பெண்ணும் எப்படியோ தப்பிச்சுப் போயிட்டா.. இந்த நிமிஷம் நமக்கு யூஸ்ஃபுல்லாயிருக்கற ஒரே நபர் மீனலோசினிதான்."

"இட்ஸ் ஓ.கே. மிஸ்டர் விவேக்... இந்த சுடர்க்கொடி மர்டர் கேஸ்ல உண்மைகள் சீக்கிரமே வெளிவந்து கொலையாளி கைது செய்யப்படணும்... இல்லேன்னா மீடியாக்களுக்கு நாம பதில் சொல்லி சமாளிக்க முடியாது. தினசரி ராத்திரி ஒன்பது மணியானால் போதும் எல்லா டி.வி. சானல்களிலும் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் நாலைஞ்சு பேர் உட்கார்ந்துகிட்டு நம்ம டிபார்ட்மெண்டை அடிச்சு துவைச்சு காய போட்டுக்கிட்டு இருக்காங்க...."

 

"சார்... நவ் வீ ஆர் ஆன் த ரைட் வே.... கொலையாளியை சீக்கிரமே நெருங்கிடலாம்"

"டூ இட் ஃபர்ஸ்ட் "

போலீஸ் கமிஷனர் எழுந்து கொண்டார். விவேக்கும் விஷ்ணுவும் அவருடைய கையைப் பற்றி குலுக்கிவிட்டு வெளியே வந்தார்கள்.

வராந்தாவில் நடக்கும் பொது விஷ்ணு கேட்டான்.

"இதெல்லாம் எங்கே கத்துக்கிட்டிங்க பாஸ்?"

"எதெல்லாம்?"

"மவுத் எக்ஸ்பிரஷன்ஸ் அண்ட் லிப்ஸ் இன் பாடி லாங்க்வெஜ் போன்ற எனக்கு அதிசயமான விஷயங்களை...!"

"க்ரைம் பிராஞ்சுக்குள்ளே வந்துட்டா எக்ஸ்ட்ராவா ஒரு மூளை வேணும்..!"

"தலை அப்ப ரொம்ப பெருசாயிருக்கும் பாஸ்"

விவேக் முறைதான்.

"டேய்!"

"ஸாரி பாஸ்... நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு புரியுது. தலைக்குப் பின்னாடியும் ரெண்டு கண்கள் வேணும்ன்னு சொல்றீங்க....?"

 

"அதே தான்...!"

"கொஞ்சம் அசிங்கமாய் இருக்கும் பாஸ்?"

"விஷ்ணு ... பி... சீரியஸ்... இந்த சுடர்க்கொடி கேஸ்ல நாம இன்னமும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடலை. எப்பவும் ஒரு ஜாலியான மூடில் பேசற கமிஷனர் இன்னிக்கு அப்படிப் பேசலை. நோட் பண்ணியா...?"

"பண்ணாமே இருப்பேனா பாஸ்? ஏதோ பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி நம்ம இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கிட்டே பேசற மாதிரியான முகபாவம்...."

"அவரோட கோபம் நியாயமானது. நாம சீக்கிரம் கொலையாளியை நெருங்கணும்...!"

"எல்லாப் பக்கமும் கும்மிருட்டாய் இருக்கே பாஸ். போதாத குறைக்கு அந்த மூணு வார்த்தைகள் குர்நோக்கம், ஜே.சி.ஹெச். ஹாசீர்வதம்.

இந்த நிமிஷம் கேஸோட நிலைமை எப்படியிருக்கு தெரியுமா பாஸ்?"

"சொல்லு...!"

"பிச்சைக்காரன் தட்டுல விழுந்த பல வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கு..."

விவேக் திரும்பி நின்று உஷ்ணமாய் பார்க்க, "ஸாரி பாஸ்.... வேற உதாரணம் எதுவும் எனக்கு சட்டுன்னு தோணலை ." என்றான் விஷ்ணு.

விவேக் தன் ஆட்காட்டி விரலை உயர்த்தினான்.

"இப்ப சொல்றேன் கேட்டுக்க...."

"சொல்லுங்க பாஸ் "

"உனக்கு பனிரெண்டு மணி நேரம் டயம். அதுக்குள்ளே அந்த மூணு வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்ன்னு நீ சொல்லியாகணும். இல்லேன்னா என்கூட இனிமே வராதே... மயிலாப்பூர் பக்கம் போய் எந்த ஹோட்டல்ல தயிர் வடையும் டிகிரி காப்பியும் நல்லாயிருக்குன்னு ஒரு சர்வே எடு!"

"கவலைப்படாதீங்க பாஸ்... ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள்ளே ஆப்கானிஸ்தான் மொழியை கத்துகிட்டாவது அந்த மூணு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம்ங்கறதைக் கண்டு பிடிச்சுடறேன்."

விவேக் கார் பார்க்கிங்கிற்கு வந்து காருக்குள் ஏறி ட்ரைவிங் சீட்டை ஆக்ரமித்தான்.

"இப்போ நாம எங்கே போறோம் தெரியுமா?"

"தெரியும் பாஸ்...! வளையோசை பத்திரிக்கை ஆபீஸிக்குப் போய் அந்த அரைக் கிழவியை ஸாரி மீனலோசினியைப் பார்த்துப் பேசப் போறோம்."

"விஷ்ணு !"

"ஸாரி பாஸ்... இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை. நாக்குல சனி, ராகு, கேது மூணு பெரும் வரிசையாய் உட்கார்ந்திருக்காங்க போலிருக்கு. நான் எதை பேசினாலும் அது தப்பாயிடுது.."

விவேக் குரலைத் தாழ்த்தினான்.

"விஷ்ணு...

நான் சொல்றதை கவனி. பதட்டப்பட்டு கீழே இறங்காதே...!

"எ...எ... என்ன பாஸ்...?"

"கொலையாளி இந்த கமிஷனர் ஆபிஸ் வளாகத்துக்குள்ளேதான் இருக்கணும்!"

(தொடரும்)
 


Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-19-282184.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 20

 

ராஜேஷ்குமார்

 

கதை, இதுவரை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது அங்குதான் கொலையாளி இருப்பதாக விவேக் சொல்கிறான்.

 

இனி...

விஷ்ணுவின் விழிகளில் அலை அலையாய் வியப்பு அலைகள் பரவின.

"என்ன பாஸ் சொல்றீங்க ? கொலையாளியோட நடமாட்டம் இந்த கமிஷனர் ஆபீஸ் வளாகத்துக்குள்ளே இருக்கா?"

"ஆமா...!"

"எப்படி பாஸ் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியர் மாதிரி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க...?"

 

"நம்ம காரோட ஸ்டிரியங்கைப் பாரு"

விஷ்ணு பார்த்தான்

ஸ்டிரியங்கின் மேல் கருஞ்சிவப்பு நிறத்தில் துளித் துளியாய் ஏதோ ஒட்டியிருந்தது.

"என்ன பாஸ் இது....?"

"தொட்டுப்பாரு"

விஷ்ணு தன் இடது கையின் ஆட்காட்டி விரலால் தொட்டான். தொட்ட விரல் பிசுபிசுத்தது. உயர்த்திப் பார்த்தான்.

"ரத்தம் மாதிரி தெரியுது பாஸ்?"

"ரத்தம்தான்... உலராத ரத்தம். ரெண்டு மூணு நிமிஷத்துக்கு முன்னாடிதான் காருக்குள்ளே நுழைஞ்சு இந்த ரத்தத் துளிகளை ஸ்டியரிங் மேல் தெளிச்சுட்டுப் போயிருக்காங்க!"

"நம்ம கார் பூட்டியிருக்கும் போது இது எப்படி பாஸ் சாத்தியம்...?"

"ஒரு புத்திசாலி கிரிமினலுக்கு கார் டோரை ஓபன் பண்றது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லையே"

"என்ன பாஸ்! எதோ ஆயுத பூஜைக்கு காரைக் கழுவி பொட்டு வெச்சுட்டுப் போன மாதிரி வந்து வேலையை முடிச்சுட்டுப் போயிருக்கான்."

"எல்லாம் நம்மை பயமுறுத்தத்தான்.... நீ ஒரு காரியம் பண்ணு..."

"சொல்லுங்க பாஸ்..."

"நீ காரைவிட்டு இறங்கி டென்ஷன் காட்டாமே கமிஷனர் ஆபீசுக்கு உள்ளே போய் நாலாவது மாடியில் இருக்கற டாய்லட்டுக்குக்குள் நுழை. அந்த டாய்லட்டோட வெண்டிலேட்டரிலிருந்து பார்த்தா கமிஷனர் ஆபீஸோட முன்பக்க வளாகமும், ரோட்டுப் பகுதியும், கடைகளும் மக்களோட நடமாட்டமும் தெரியும். அங்கிருந்து எல்லாத்தையும் அப்ஸர்வ் பண்ணு. உன்னோட மனசுக்கு நெருடலாய் இருக்கற மாதிரி எந்த நபராவது பார்வைக்குக் கிடைச்சா உடனே எனக்கு போன் பண்ணு ...."

"ஓ.கே பாஸ்.....!" விஷ்ணு தலையசைத்துவிட்டு காரினின்றும் கீழே இறங்கினான். பதட்டம் காட்டாமல் நிதான நடை போட்டு நடந்து கமிஷனரின் ஆபீசுக்குள் நுழைய விவேக் காரில் காத்திருந்தான்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு விவேக் செல்போன் சிணுங்க மறுமுனையில் விஷ்ணு அழைப்பு தெரிந்தது. எடுத்து காதுக்கு ஒற்றினான். விஷ்ணு கிசுகிசுப்பாய் பேசினான்.

"பாஸ்..."

"சொல்லு"

"டாய்லெட் அவ்வளவு சுத்தமாய் இல்லை பாஸ்..."

"அதைப் பார்க்கவா உன்னை அனுப்பி வெச்சேன். சரி குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?"

"அ.... அது வந்து பாஸ் இந்த டாய்லட்டுக்குள்ளே மீறிப்போனா ஒரு பத்து நிமிஷம் உயிரோட இருக்கலாம். 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை செயல்படுத்தி மீத்தேன் வாயு எடுக்கற அளவுக்கு டாய்லெட்டோட நிலைமை இருக்கு. மூக்குக்கும் வாய்க்கும் சேர்ந்து கர்ச்சீப்பை கட்டியிருக்கேன் பாஸ். அதான் குரல் ரகசியம் பேசற மாதிரி இருக்கு!"

"சரி... வெண்டிலேட்டர் வழியாய் கமிஷனர் அலுவலகத்தையும் வெளியே ரோட்டோர கடைகளையும் கவனி. யாராவது சந்தேக வட்டத்துக்குள்ளே வர்றாங்களான்னு பாரு."

"பார்த்துட்டுதான் இருக்கேன் பாஸ். ரோட்ல நடமாட்டமே இல்லை... கமிஷனர் ஆபீஸுக்கு எதிரில் இருக்கற டீக்கடையில் பஜ்ஜியும் போண்டாவும் போட ஆரம்பிச்சுட்டாங்க... பக்கத்துக்கு பேக்கரியில் ஒரு கிழவி ரொட்டி வாங்கிட்டு இப்பத்தான் ரோட்டை க்ராஸ் பண்றா. பஸ் ஸ்டாப்ல ஒரு முப்பது வயசு பொண்ணு செல்போனை நோண்டிகிட்டு பஸ் வருதான்னு பத்து செக்கண்டுக்கு ஒரு தடவை பார்த்திட்டிருக்கா...."

 

"அப்படீன்னா.... நாம சந்தேகப்படற மாதிரி யாரும் இல்லை....?"

"இல்ல பாஸ்...!"

"பேக்கரிக்குப் பக்கத்துல ஒரு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் சென்டர் இருக்கும். அங்கே பணம் எடுக்க யாராவது வெயிட் பண்றங்களா?"

"இல்ல பாஸ்....

"ஏ.டி.எம். சென்டருக்குள்ளே யாராவது இருக்கலாம். உன்னோட பார்வை அங்கேயே இருக்கட்டும்... வெளியே வரும்போது அவங்களோட பார்வையும் எப்படி இருக்குன்னு கவனி!"

"நீங்க.... நீங்கதான் பாஸ்.... எனக்கு தோணாதது எல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படி தோணுதுன்னு தெரியலை.... ஒரு நல்ல நியூரோ ஸ்பெஷலிஸ்ட்டை போய் பார்க்கணும்...!"

 

"வேலையைக் கவனி . ஏ.டி.எம். சென்டர் மேலேயே பார்வை இருக்கட்டும்... உள்ளேயிருந்து வெளியே வர்றது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவங்களோட முதல் பார்வையைக் கவனி."

"சொல்லிடீங்கள்ல பாஸ்... இனி நான் பாத்துக்கிறேன்"

"சரி... போனைக் கட் பண்றேன்.... எனக்கு வெளியே இருந்து எதோ போன் வருதுன்னு நினைக்கிறேன்...

!" விவேக் செல்போனை அணைத்துவிட்டு தன்னை அழைத்தது யார் என்று தெரிந்து கொள்வதற்காக 'லாக்ஸ்' ஆப்ஷனுக்குப் போய்ப் பார்த்தான். அது பெயரையும் எண்ணையும் காட்டியது.

டி.ஜி.பி.யின் பர்சனல் செக்ரட்டரி தியோடர். விவேக் செல்போனை காதுக்கு ஒற்றி "குட்மார்னிக் ஸார்" என்றான்.

"வெரி குட்மார்னிங் மிஸ்டர் விவேக். இப்போ எங்கே இருக்கீங்க....?"

"கமிஷனரோட ஆபீஸில்"

"என்ன சுடர்கொடியோட கொலையைப் பத்தி அகழ்வாராய்ச்சி பண்றீங்களா...?"

"இன்வெஸ்டிகேஷன் எப்படி போயிட்டிருக்குன்னு கேட்டார் எல்லாவற்றையும் சொன்னேன்."

 

"வாட் வாஸ் ஹிஸ் ரியாக்ஷன்?"

"கமிஷனர் அப்செட்டான மூடில் இருந்தார். கொலையாளியை இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே கண்டு பிடிச்சாகணும்ன்னு சொல்றார்"

"அது சாத்தியமா மிஸ்டர் விவேக்?"

"சாத்தியம்தான் சார்... இப்போ கொலையாளியைப் பத்தின மூணு சங்கேத வார்த்தைகள் கிடைச்சிருக்கு ...!"

மறுமுனையில் தியோடர் சிரித்தார். விவேக் குறுக்கிட்டு கேட்டான்.

"ஸார்! எதுக்காக இந்த சிரிப்புன்னு எனக்குத் தெரியலை"

"விவேக்! இந்த சுடர்கொடியோட கொலைக்குப் பின்னாடி ஒரு பவர்ஃபுல் பர்சன் இருக்கறதாய் உங்ககிட்டே நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்..... இல்லையா...?"

"ஆமா.....!"

"அந்த பவர்ஃபுல் பர்சனின் கட்டளைப்படி நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்கற சில அரசு ஆதரவு போலீஸ் அதிகாரிகள் இந்த சுடர்கொடியோட கேஸுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சு ஃபைலை க்ளோஸ் பண்ற முடிவுக்கு வந்துட்டாங்க"

"ஸார்... நீங்க என்ன சொல்றீங்க?"

"ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்களுக்கு நான் போன் பண்ணி என்ன சொன்னேனோ அதைத்தான் இப்பவும் சொல்லப்போறேன்," என்று ஆரம்பித்தவர் மெல்ல குரலைத் தாழ்த்தினார். "வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் சுடர்க்கொடி வெட்டி கொலை செய்யப்பட்ட போது ஸ்டேஷனில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.காமிராக்கள் பழுதடைந்து போயிருந்ததால அந்த காமிராக்களில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பதிவாகலை. ஆனா ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த ஹோட்டலின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் ஒரு காட்சி பதிவாகியிருக்கு. அந்தப் பதிவில் இளைஞன் ஒருத்தன் சிவப்பு நிற சூட்கேசுடன் ஸ்டேஷனை விட்டு வெளியே வர்றான். அந்த நபர்தான் சுடர்கொடியை வெட்டிய கொலையாளியாய் இருக்க முடியும் என்கிற கோணத்தில் அந்த இளைஞனைத் தேடித் கண்டுபிடிக்கற முயற்சியில் நம்ம போலீஸ் படை ஒண்ணு ஈடுபட்டு இருந்தது. இப்ப அந்த இளைஞன் யார்ங்கறதை கண்டு பிடிச்சுட்டாங்க. அந்த இளைஞன் பேரு ஜெயவேல் ."

 

விவேக் குறுக்கிட்டு கேட்டான்.

"என்ன ஸார் இது.. ஒரு இளைஞன் ஸ்டேஷனைவிட்டு அவசர அவசரமாய் வெளியே வந்தான் என்கிற காரணத்துக்காக அவன்தான் கொலையாளியாய் இருப்பான் என்கிற முடிவுக்கு வரமுடியாதுன்னு நீங்கதான் ஸார் அன்னிக்கு சொன்னீங்க?"

"ஆமா அன்னிக்கும் சொன்னேன். இன்னிக்கும் சொல்றேன். அந்த இளைஞன் கொலையாளியாய் இருக்க வாய்ப்பேயில்லை. ஏன்னா அந்த இளைஞன் கையில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒரு கனமான சூட்கேஸ். அதை அவன் தூக்கிட்டு வரும்போதே தெரியுது. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது இருபதடி நடக்கறதுக்குள்ளே அந்த சூட்கேஸை கீழே வெச்சிட்டு பத்து வினாடி ஆசுவாசப்படுத்திக்கிட்டு அதுக்கப்புறம் அதைத் தூக்கிட்டு வர்றான். ஒரு பெண்ணை கொலை செய்யப் போறவன் அப்படியொரு கனமான சூட்கேஸைத் தூக்கிட்டு வருவானா என்ன? இந்த கேஸை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து ஃபைலை க்ளோஸ் பண்ணணும்கறதுதான் அந்த பவர்ஃபுல் பர்சனோட திட்டம்"

"ஸார்.... அந்த இளைஞன் ஜெயவேலை அரஸ்ட் பண்ணலாம். ஆனா கோர்ட்ன்னு ஒண்ணு இருக்கே.... வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது ஜெயவேல்தான் கொலையாளின்னு நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டுமே ஸார்"

தியோடர் மறுமுனையில் விரக்தியாய் சிரித்தார்.

"கேஸ் கோர்ட்டுக்குப் போனால்தானே அந்தப் பிரச்னை?"

"ஸார்.... யூ...மீன்.... ?"

"அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே எல்லா டி.வி. சானல்களிலும் ஒரு பிரேக்கிங் நியூஸ் இப்படி வரும். 'ஜெயவேலுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரை போலீசார் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஜெயவேலு போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். போலீசார் அவரைப் பிடிக்க முயன்ற போது இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்க முற்படவே வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஜெயவேல் உயிரிழந்தார்."

"ஸார்... இது சரியில்லை....!"

"சரியில்லைதான்.... ஆனா அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே இதுதான் நடக்கப் போகுது மிஸ்டர் விவேக். அதைச் சொல்லத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்.....!"

(தொடரும்)



Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-20-282827.html

Link to comment
Share on other sites

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 21

 

 - ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது அங்குதான் கொலையாளி இருப்பதாக விவேக் சொல்கிறான். இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்யப் போவதாக தகவல்.

 

இனி...

செல்போனின் மறுமுனையில் டி.ஜி.பியின் பர்சனல் செக்ரட்ரி தியோடர் சொன்னதைக் கேட்டு விவேக் வழக்கத்துக்கு மாறாய் லேசாய் பதட்டப்பட்டான்.

"ஸார்.... சுடர்க்கொடி, அவளுடைய அண்ணன்னு சொல்லப்படுகிற திலீபன் இந்த ரெண்டு பேரோட கொலைகளுக்குப் பின்னாடி மிகப் பெரிய விபரீதமான விஷயம் ஏதோ ஒண்ணு இருக்கு. அதைக் கண்டுபிடிக்காம அவசர அவசரமாய் ஃபைலை க்ளோஸ் பண்றதுக்காக ஜெயவேல் என்கிற ஒரு அப்பாவியை என்கவுண்டர் பண்றது எந்த வகையில் நியாம்ன்னு எனக்குத் தெரியவில்லை...."

தியோடர் சிரித்தார்.

"நியாயம் இல்லைதான். ஹண்ட்ரட் பர்சன்ட் 'அக்மார்க்' அநியாயம்தான். நம்மாலே என்ன செய்ய முடியும் மிஸ்டர் விவேக். அறிவாளிகளின் கையில் அரசாங்கம் இருந்தா அது ஆரோக்கியமாய் இருக்கும்......"

"இது விஷயமாய் நான் டி.ஜி.பி.யை சந்தித்துப் பேசலாமா ஸார்?"

"ஸாரி மிஸ்டர் விவேக்... ஹி ஈஸ் ஹெல்ப்லஸ்.. அவரோட கையை மீறி எல்லா விஷயங்களும் போயிட்டிருக்கு. பட் ஜெயவேலைக் காப்பாத்தணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு"

"என்ன ஸார்...?"

"அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே நீங்க சுடர்கொடி திலீபன் கொலைகளுக்கு காரணமான நபரைக் கண்டுபிடுச்சு நேரடியாய் மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்தணும்."

"இப்பத்தான் இந்த கேஸ்ல சின்னதாய் ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அதுவும் ஜெபமாலை மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி திணறித் திணறிப் பேசின வார்த்தைகள். குர் நோக்கம், ஜே. சி. ஹச், ஹாசீர்வதம். இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்ன்னு கண்டு பிடிச்சுட்டோம்னா கொலையாளியை நெருங்கிடலாம் ஸார்....!"

தியோடர் இப்போது பலமாய் சிரித்தார்.

"கொலையாளியைக் கூட கண்டுபிடிச்சுடலாம் போலிருக்கு. இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்ன்னு கண்டுபிடிக்கறதுதான் உங்களுக்கு ஒரு பெரிய சவாலாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன்."

"ஸார்... ஜெயவேலைக் காப்பாத்துறதுக்காவது கொலையாளியை நான் சீக்கிரமாய் நெருங்கிடணும்"

"விஷ் யூ ஆல் த பெஸ்ட் மிஸ்டர் விவேக். உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.... நான் அப்பப்ப உங்களை காண்டாக்ட் பண்ணி இந்தப் பக்கத்துல எது மாதிரியான நிலவரம் போயிட்டிருக்குங்கறதை 'கன்வே' பண்றேன்."

"தேங்க் யூ ஸார்..." விவேக் வியர்வை மின்னும் முகத்தோடு செல்போனை அணைத்தான். சில வினாடிகள் யோசிப்பாய் இருந்துவிட்டு விஷ்ணுவைத் தொடர்பு கொண்டான்.

 

"விஷ்ணு!"

"பாஸ்"

"இப்ப நீ எங்கே இருக்கே?"

"இமயமலை அடிவாரத்துல இருக்கற குலுமணாலியில் ரெஸ்ட் எடுத்திட்டிருக்கேன்.... நான் இப்போ எங்கே இருக்கேங்கறதையே மறந்துட்டிங்களா பாஸ்? கமிஷனர் ஆபிஸ் நாலாவது மாடி டாய்லெட்டோட வெண்டிலேட்டர் கம்பியைப் பிடிச்சிட்டு ஒரு குரங்கு மாதிரி தொத்திட்டு இருக்கேன்."

"ஏ. டி.எம் சென்டரிலிருந்து யாராவது வெளியே வந்தாங்களா?"

"வரலை பாஸ்.... இனிமேலும் வரமாட்டாங்க"

"என்னடா சொல்றே ...?"

"இப்பதான் அந்த சின்ன போர்டு என்னோட பார்வைக்கு தட்டுப்பட்டது பாஸ்"

"என்ன போர்டு?"

"THIS ATM DOES NOT WORK."

"சரி ..... ரோட்டை மறுபடியும் அப்ஸர்வ் பண்ணு. சந்தேகப்படும்படியாய் யாராவது தட்டுப்படறாங்களான்னு பாரு!"

 

"அப்படி யாரும் இல்ல பாஸ்... முடி கொட்டிப்போன மண்டை மாதிரி காலியாய் இருக்கு... நடந்து போற சொற்ப ஜனங்களும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற கவலையிலிருந்து ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு ஏன் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கலை என்கிற கவலை உட்பட லட்சக்கணக்கான கவலைகளோடு ஸ்லோ மோஷனில் நடந்து போயிட்டு இருக்காங்க.... இதுல யாரைப் போய் சந்தேகப்படறது பாஸ் ?"

 

"சரி.... காருக்கு வா....!"

"அப்பாடா! மீண்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கு பாஸ்... இதோ பறந்து வர்றேன் இது டாய்லெட் இல்லை. மினி நரகம்"

அடுத்த இரண்டாவது நிமிஷம் காரில் விவேக்கிற்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் விஷ்ணு. விவேக்கின் முகத்தை கவனித்து விட்டு கேட்டான்.

"பாஸ்! நீங்க இவ்வளவு டென்ஷனோடு இருக்கறதை நான் ரெண்டாவது தடவையாய்ப் பார்க்கிறேன் !"

"முதல் தடவை எப்பப் பார்த்தே?"

"உங்க கல்யாணத்துல...!"

"விஷ்ணு... நான் டென்ஷனோடு இருக்கக் காரணம் சுடர்கொடியோட கேஸ் இப்போ திசைமாறி போயிட்டிருக்கு. அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே கொலையாளி யாருன்னு கண்டுபிடிச்சு அவன் தோள் மேல கையை வைக்கணும்."

"அதென்ன பாஸ் பேஷண்டுக்கு டாக்டர் கெடு வைக்கற மாதிரி 24 மணி நேரம்?"

"கார்ல போகும்போது விஷயத்தைச் சொல்றேன். நாம இப்போ உடனடியாய் பார்த்து பேச வேண்டிய நபர் 'வளையோசை' பத்திரிக்கையின் ஆசிரியர் மீனலோசினி." சொல்லிக்கொண்டே காரை நகர்த்தினான் விவேக்.

"பாஸ்.... கொலையாளி கமிஷனரோட ஆபிஸ் வளாகத்துக்குள்ளேதான் இருக்கணும்ன்னு சொன்னீங்க. ஆனா அப்படி யாரும் இருந்த மாதிரி தெரியலை?"

"நமக்குத் தெரியலை விஷ்ணு... ஆனா அந்த நபர் இப்பவும் நம்ம ரெண்டு போரையும் பார்த்துக்கிட்டு இருக்கலாம்."

"நீங்க ரொம்பவும் பயமுறுத்தறீங்க பாஸ்"


"நீங்க ரொம்பவும் பயமுறுத்தறீங்க பாஸ்"

கார் காம்பௌண்ட் கேட்டை விட்டு வெளியே வந்து சாலையின் போக்குவரத்தில் கலந்து வேகம் எடுத்தது.

விவேக் சொன்னான்.

"விஷ்ணு.... போற வழியில் உனக்கு ஒரு வேலையிருக்கு"

"என்ன பாஸ்?"

"காரோட டேஷ் போர்டைத் திற"

விஷ்ணு திறந்தான்

"ஒரு பாலிதீன் கவர் இருக்கா...?

"இருக்கு பாஸ்"

"அதை வெளியே எடு"

விஷ்ணு எடுத்தான். குழப்பத்தோடு கேட்டான்.

"என்ன பாஸ்... பாலீதீன் கவர்க்குள்ளே ஒரு கர்சீப்பை சுருட்டி வெச்சிருக்கீங்க.....?"

"காரோட ஸ்டியரிங்கில் படிஞ்சிருந்த ரத்தத் துளிகளை என்னோட கர்சீப்பால் சுத்தமாய் துடைச்சு அந்த பாலீதீன் பைக்குள்ளே போட்டு வெச்சிருக்கேன்."

"இது எதுக்கு பாஸ்?"

 

"இது எதுக்கு பாஸ்?"

"போற வழியில் ஃபாரன்ஸிக் லேப் வரும். குடுத்திட்டு போவோம். திரும்பி இந்த வழியாய் வரும்போது ரிப்போர்ட்டை வாங்கி பாப்போம்."

விவேக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். மறுபடியும் தியோடர் டிஸ்ப்ளேயில் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.

விவேக் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு பேசினான்.

"என்ன ஸார்... மறுபடியும் போன்?"

"விவேக் இப்போ எல்லா டி.வி. சானல்களில் பிரேக்கிங் நியூஸ் என்ன தெரியுமா?"

"ஸாரி ஸார்... நான் இப்போ காரை ஓட்டிக்கிட்டு இருக்கேன். நீங்களே சொல்லுங்க என்ன நியூஸ்?"

"சுடர்கொடியை கொலை செய்த கொலையாளி ஜெயவேலை கைது செய்ய போலீஸார் அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் வீட்டின் பின்வாசல் வழியாய் தப்பி ஓட்டம்."

போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை.

கண்டவுடன் சுட்டுத் தள்ளவும் உத்தரவு.

விவேக் கேட்டான்.

"ஸார் இந்த செய்தி உண்மையா?"

"உண்மைதான். தப்பி ஓடினதால அவன்தான்னு இப்போ கான்ஃபர்ம் ஆயிடுச்சு.... அதனால கமிஷனர் 'சூட் அட் சைட்' ஆர்டர் கொடுத்துட்டார். ஜெயவேல் எந்த நிமிஷமும் சுட்டுக் கொல்லப்படலாம்."

மறுமுனையில் தியோடர் சொல்ல விவேக்கின் காதோடு ஒட்டியிருந்த செல்போன் ஒரு மெலிதான நடுக்கத்துக்கு உட்பட்டது.

(தொடரும்)



Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajeshkumar-s-crime-thriller-one-one-zero-21-284172.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.