Jump to content

வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும்


Recommended Posts

வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும்

வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016) நல்லூர்; சங்கிலியன் பூங்காவில் வடக்கின் பாரம்பரிய உணவுத் திருவிழா இடம்பெற்றது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரமத விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
நவீன மருத்துவத்தால் எங்கள் ஆயுளை நீடிக்க முடிந்திருக்கிறதே தவிர, ஆரோக்கியமாக வாழவைக்க முடியவில்லை. எங்கள் முன்னோர்களுக்கு உணவுதான் மருந்து. இதனால் நோய்நொடியில்லாமல் அவர்களால் ஆரோக்கியத்துடன் வாழ முடிந்திருக்கிறது. ஆனால், இப்போது மருந்துதான் உணவு. மூன்று வேளையும் சாப்பிடுகிறோமோ இல்லையோ, தவறாமல் மருந்துகளை உட்கொண்டு வருகிறோம்.

அடுக்களைகளில் சுவைச் சரக்குகளை வைப்பதற்கென முன்னர் அஞ்சறைப் பெட்டிகளை வைத்திருந்தோம். இப்போது, ஐந்து அறைகள் அல்ல, ஏராளமான அறைகளைக்கொண்ட மாத்திரைப் பெட்டிகளைத்தான் வைத்திருக்கிறோம். அதில் விதம் விதமான மாத்திரைகளை நிரப்பி வைத்திருக்கிறோம்.

தமிழர்களுக்கெனத் தனித்துவமான உணவுப் பண்பாடு உள்ளது. அந்த உணவுப் பண்பாட்டைக் கைவிட்டு, பாரம்பரிய உணவுகளில் இருந்து துரித உணவுகளுக்;கு நாம் பெருமளவுக்கு மாறிவிட்டோம். இதுதான், மருந்து மாத்திரைகளுடன் நாங்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாரம்பரிய உணவுகளுக்கு நாங்கள் மீளவும் திரும்ப வேண்டும் எமது அன்றாட உணவில் ஒருவேளை உணவாவது பாரம்பரிய உணவாக இருக்க வேண்டும்.

பாரம்பரிய உணவுகளை மக்களிடையே பிரபலப்படுத்த இதுபோன்ற உணவுத்திருவிழாக்கள் உதவும். அதேசமயம், பாரம்பரிய உணவுகளின் நிரந்தர விற்பனைக் கூடங்களை அமைக்கவும் நாங்கள் முன்வரவேண்டும். வெளிநாடுகளில் இருந்துவந்து செல்லும் தமிழ் உறவுகளிடையேயும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையேயும் இவை கண்டிப்பாகப்; பெரும் வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் கே.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா, யாழ்ப்பாண பிரதேச செயலர் பொ.தயானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது பாரம்பரிய உணவுத்தயாரிப்பு போட்டிகள் நடாத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

.

01-208-1071005-20403

http://thuliyam.com/?p=45669

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்கள் நிறைய நடக்க வேண்டும்....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டால் பின்விளைவுகள் இல்லாத அளவுக்கு தரமாக சுத்தமாக இருந்தால்.. இது வரவேற்பை பெறும். லண்டனிலேயே.. தமிழ் சாப்பாட்டுக் கடைகளுக்கு போய் வந்தால்.. பின்விளைவுகள்.. உறுதி. ஒன்றில் அது அதிக காரம் அல்லது போதிய சுகாதாரமின்மை காரணமாக உள்ளன. இந்தப் பயம் பீதியில்..பேதியில்.. பலர் போகவே அஞ்சுகிறார்கள். இதையும் கவனத்தில் எடுக்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்....

Link to comment
Share on other sites

அண்மையில் வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் பாரம்பரிய உணவுத்திருவிழா சங்கிலியன் தோப்புபில் (கிட்டுப் பூங்கா) கொண்டாடப்ப்ட்டது.போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த பாரம்பரிய உணவு தயாரிப்பாளர்களுக்கு பெறுமதி மிக்க பணப்பரிசில்களும் வழங்கப் பட்டன.

14611002_1103080766474584_1405951472102534000_n.jpg?oh=f7a2b63ff5c180375f56afc2a88be631&oe=58A29573

 

14705723_1103080856474575_3030534645425333354_n.jpg?oh=d9dcd15c03d7b1d0b5246c49bf0461bc&oe=58939F0E

 

14713554_1103081029807891_8375206931361384297_n.jpg?oh=5484bc396864ee4bb125eda4beb698e2&oe=589ED937&__gda__=1485477410_6cec4b5d1ecb3a1d7e70217de9fabe6b

14718830_1103081443141183_5823846244177671119_n.jpg?oh=22fc6f83e109d4551bdb76533b5c9322&oe=58932659

 

14691098_1103082429807751_6991704606084193468_n.jpg?oh=97838301164ee69ab4e27870434c25d3&oe=58871531&__gda__=1486234632_23b91e402128f73f083358bb035d20f9

fb

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.