Jump to content

தனிநபர் ஆதிக்கத்தில் நடிகர் சங்கமா?... வில்லங்க புகார்கள்...விறுவிறு காட்சிகள்!


Recommended Posts

தனிநபர் ஆதிக்கத்தில் நடிகர் சங்கமா?... வில்லங்க புகார்கள்...விறுவிறு காட்சிகள்!

vishal%20madurai%20visit%201_16422.jpg

டிகர் சங்கத்தில் நடந்துவரும் களேபரங்கள் ஒரு நிஜ சினிமாவை விஞ்சி பல நுாறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தை விடவும் சுவாரஸ்யமாக பல பாகங்களில் நடப்பதுதான் வேடிக்கை. முதல் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் பாண்டவர் அணி என அளப்பரையை தந்தன. இரண்டாம் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் புதிய நிர்வாகம் என ரவுண்ட் கட்டியது. மூன்றாவது பாகத்தில் புதிய நிர்வாகம் வெர்சஸ் வாராகி என்ற தனிநபர் என பட்டையை கிளப்பியது. இப்போது நான்காம் பாகத்தில் அதிரடி திருப்பம்...நிர்வாகிகள் மத்தியிலேயே புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

கலைவாணர், இயக்குனர் கே.சுப்ரமணியம், எம்.ஜி.ஆர்  உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் அவதுாறுகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருவது மூத்த உறுப்பினர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோடிகளில் வருமானம் ஈட்டும் நடிகர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் சில லட்சங்களில் மோசடி புகார்கள் எழுந்து அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டிருப்பது அவர்களை வருத்தம் கொள்ள வைத்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த உறுப்பினர் ஒருவர், ' தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது முழுக்க முழுக்க நலிந்த உறுப்பினர்களின் நலனுக்காக அன்றைய மூத்த கலைஞர்களால் உருவானது. ஆரம்ப நாட்களில் இதன் நிர்வாகிகளான புகழ்பெற்ற கலைஞர்கள், தங்கள் சக கலைஞர்களின் நலனுக்காக சங்க நடவடிக்கைகளில் பெரிதும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் காலத்தில் கலைஞர்களின் நலனில் நிஜமாகவே பங்கெடுத்தது சங்கம். ஆனால் பின்னாளில் நடிகர் சங்கம் தனிப்பட்ட சிலரின் விளம்பரங்களுக்காக பயன்பட ஆரம்பித்தது. தொடர்ந்து தாங்களே தேர்வானதால் ஒருகட்டத்தில் எதேச்சதிகார போக்கில் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். அதன் பின்னர்தான் சங்கம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசிலரின் கட்டுப்பாட்டில் சென்றது. இதுதான் பல தவறுகளுக்கு வித்திட்டது.

vishal%20sad%20600%201_16500.jpg

சரியான கணக்கு வழக்குகள் பராமரிக்காதது, சங்க சொத்துக்களை தனிப்பட்ட சிலரின் லாபத்திற்காக கைமாற்றியது சங்க விஷயங்களில் குறிப்பிட்ட சிலரே முடிவெடுப்பது என எல்லை மீறிப் போனநிலையில்தான் விஷால் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்கள் இதை சங்க கூட்டங்களில் வெளிப்படையாக கேட்கத் துவங்கினர். அதன்பின் விஷால் தலைமையில் முந்தைய நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த நடிகர்கள் பாண்டவர் அணி என ஒன்று திரண்டனர். அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் விஷால் அணி சங்கத்தை கைப்பற்றியது.

ஆனால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் சரத் அணி மீது கூறப்பட்ட அதே ஊழல் புகார்களை விஷால் அணி சந்திக்க நேர்ந்தது. இந்த புகார்களை எழுப்பியதும் யாரோ அல்ல; தேர்தலில் விஷால் அணியுடன் தோளோடு தோள் நின்ற ஒருவர்தான். பெரிய நடிகர், நேர்மையானவர், வெளிப்படையானவர் என விஷாலுக்கு எத்தனை தகுதி இருந்தாலும் நிர்வாகி என்ற முறையில் அவர் சங்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டவர். உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜியே கூட சங்க விதிமுறைகளை மீறி நடந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாக நிர்வாக விஷயங்கள் தனிப்பட்ட முறையிலேயே முடிவெடுக்கப்படுகிறது.

mgr%20sivaji%20ssr%20%20gemni_15029.jpg

பொதுவாக நிர்வாக விஷயங்களை செயற்குழு முடிவெடுத்து அதை பொதுக்குழுவின் அனுமதியின் பேரிலேயே செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே நிர்வாக நடைமுறை சிக்கல் கருதி ரெக்டிபிகேஷன் முறையில் மேற்கொள்ளப்படும். அதாவது  நடைமுறை சிக்கலைத் தவிர்க்க முடிவை செயல்படுத்திய பின் அதை உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது. இது எப்போதாவது நடந்தால் பரவாயில்லை. ஆனால் புதிய நிர்வாகத்தில் எல்லாமே ரெக்டிபிகேஷன் என்றாகி விட்டது.

எந்த முடிவானாலும் அதில் பாதி துாரத்தை கடந்துவிட்ட பின்னரே செயற்குழுவிற்கும் பொதுக்குழவிற்கும் சொல்வது என்றாகி விட்டது. எல்லா விஸயங்களையும் ஓரிருவரே முடிவு செய்கின்றனர்.

இப்போதும்கூட கணக்கு வழக்குகளை இணையதளத்தில் வெளியிட்டதிலும் இவர்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை. நட்சத்திர கிரிக்கெட்போட்டி நடத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக சொன்னதால்தான் கணக்கு வழக்குகளை இணையத்தில் போட்டுள்ளனர். ஆனால் அந்த போட்டியை நடத்தியது ட்ரஸ்ட் கமிட்டிதான், அவர்களிடம் ஒருவார்த்தையும் இதுபற்றி கலந்தாலோசிக்கவில்லை. இப்படி தன்னிச்சையான முடிவெடுப்பதையே ஆரம்பத்திலிருந்து செய்து வருகிறார்கள் நிர்வாகிகள். நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளான நடிகர்கள்தான் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் சம்பளத்திற்கு பணியாற்றும் ஒரு சிலர் நிர்வாகிகளின்பெயரை துஷ்பிரயோகம் செய்து சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள். நேர்மையாக இருப்பது மட்டுமே தகுதியில்லை என்பதை விஷால் எப்போது புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை.
 

vishal%20ponvannan_15234.jpg

சங்கத்தின் முன் பிரச்னை எழுப்பியதாகக் கூறி, 20 நலிந்த துணை நடிகர்களை சஸ்பெண்ட் செய்த புதிய நிர்வாகம், அவர்களை நிரந்தரமாக சங்கத்தில் இருந்தே நீக்கும் வேலையை செய்கிறது. தங்களது சம்பள பிரச்னையை பேசியது தவறா...சங்கத்தில் பேச வேண்டியதை மீடியா முன் பேசியதுதான் அவர்கள் சஸ்பெண்ட்டுக்கு காரணமாக சொல்பவர்கள் கடந்த தேர்தலின்போது சங்கத்தைப் பற்றி மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் விஷால் பற்றியே மீடியாவில் பந்திவைத்த  ராதிகாவை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை. அதற்கு துணிவிருக்கிறதா அவர்களிடம்?...காரணம் அவரை சஸ்பெண்ட் செய்தால் எல்லா திசைகளிலிருந்தும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். ராதிகாவுக்கு ஒரு நீதி, நலிந்த கலைஞர்களுக்கு ஒரு நீதியா...? குட்டிபத்மினி, எஸ்.வி. சேகர் உள்ளிட்ட சிலர்தான் அந்த நடிகர்களுக்காக போராடி வருகின்றனர்.

பலரது உழைப்பில் கட்டி எழுப்பப்பட்ட நடிகர் சங்கத்தை விஷால் தரப்பு ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. முந்தைய நிர்வாகத்தினை தோற்கடித்தது வெறும் 146 வாக்குகளில்தான் என்பதை புதிய நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். ‘புதிய மொந்தை பழைய கள்‘ என்பதுபோல், முந்தைய நிர்வாகத்தின் தவறுகளையே இவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டனர். இப்படி அதிருப்திகளை பெருக்கிக் கொண்டே போனால் மீண்டும் பழைய கதைதான் நடக்கும் என எச்சரிக்கும் விதமாக பேசி முடித்தார் அந்த மூத்த உறுப்பினர்.

s,ve%20shekar%20300_15116.jpgநலிந்த கலைஞர்களை மீண்டும் சேர்க்க முயற்சித்து வருவதாக சொல்லப்படும் எஸ்.வி சேகரை தொடர்பு கொண்டோம்.“ நுாறு சதவீதம் எதுவுமே சரியாக நடக்காது. நடக்கும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. சங்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இளம் தலைமுறை நடிகர்களுக்கு நிர்வாக விஷயங்களில் நடைமுறை அனுபவம் இல்லாததால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன... அவ்வளவுதான். இந்த 20 பேரை நானே சந்தித்து விசாரித்தேன். சங்க அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கும் அவர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. சங்கத்தைப் பற்றி புகார் கூறிவரும் வாராகி என்பவர் அன்றைய தினம் அங்கு வந்ததால் நிர்வாகிகளை சந்திக்க வந்த இவர்களும் அவர் தலைமையில் வந்ததுபோல் ஒரு பிம்பம் உருவாகி விட்டது. இதுதான் உண்மை.

நடிகர்களுக்கான சங்கம் என்றாலும் இது நலிந்த கலைஞர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. ரஜினிக்கோ, கமலுக்கோ ஒரு பிரச்னை என்றால் அதை தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் நலிந்த கலைஞர்களுக்கு சங்கம்தான் ஒரே தீர்வு. தங்கள் சம்பளத்தைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லையா...தவிர தங்கள் தவறுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டபிறகு மன்னிப்பதுதானே முறை...

மன்னிப்பதற்குத்தான் சங்கம்; தண்டிப்பதற்கு அல்ல!... இதுபற்றி விஷாலிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் பேசியிருக்கிறேன். நல்ல முடிவெடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். சங்கத்தின் தீபாவளி பரிசும் அவர்களுக்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது. சங்கம் செய்யவில்லையென்றால் நானும் இன்னும் சில மூத்த கலைஞர்களும் இணைந்து அவர்களுக்கு தீபாவளிப் பரிசு தர முடிவெடுத்துள்ளோம்” என்றார்.  

சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான நடிகர் ஸ்ரீமன், “நடிகர் சங்கத்தில் மற்றவர்கள் சொல்கிறபடி எந்த பிரச்னையும் இல்லை. எல்லா நடவடிக்கையும் வெளிப்படைத்தன்மையுடன்தான் நடக்கிறது. கணக்கு வழக்குகளுக்கான எல்லா ஆதாரங்களும் இருப்பதால்தான் சட்டப்படி எல்லா புகார்களையும் சந்தித்து வருகிறோம். ஊழல் புகார் சொல்பவர்கள் அதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் உரிய இடத்தில் கொடுக்கட்டும். மீடியாவிடம் இதுபற்றி பேசுவதிலிருந்தே அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளமுடியும். ஒரு சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை இணையதளத்தில் வெளியிடும் அளவுக்கு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விரிவாக இதுபற்றி பேசமுடியாது” என்றார்.

நடிகர் சங்க களேபரங்கள் குறித்து பேச விஷாலை தொடர்பு கொண்டோம். “வாராகி என்பவர் வீண் விளம்பரத்திற்காக இப்படி செய்து வருகிறார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சொல்லவேண்டியவற்றை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்வோம். தனிப்பட்ட நபர்களிடம் பேசிக்கொண்டிருப்பதில் தேவையற்ற வதந்திகள்தான் பெருகிக்கொண்டிருக்கின்றன. விஷாலைப் பொறுத்தவரை சங்கத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவே விரும்புகிறார். நீங்கள் குறிப்பிட்ட 20 பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து மற்ற நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. செயற்குழு பொதுக்குழுவின் முன்வைத்துதான் அதில் ஒரு முடிவெடுக்கமுடியும்.
 

sriman%20600%201_16322.jpg

இளம் தலைமுறை என்றாலும் மூத்த நிர்வாகிகளின் அறிவுரையில் சங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இணையதளத்தில் வரவு செலவு கணக்குகளை பதிவிட்டது என்பது இன்றோ, நேற்றோ எடுத்த முடிவல்ல. போட்டியை அறிவித்த நாளிலிருந்து வெளிப்படையாகவே நிர்வாகிகள் சொல்லிவந்த விஷயம்தான். அதனால் அதை செயற்குழு பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இதில் எந்த உள்குத்தும் கிடையாது. எல்லாம் நேர்மையான  பரிவர்த்தனை என்பதால்தான் இதை துணிச்சலாக செய்ய முடிகிறது. வெளிப்படைத்தன்மைக்காக எடுத்த ஒரு நடவடிக்கையை பாராட்டுவதை விட்டு குற்றம்குறை சொன்னால் குறை சொல்பவர்களின் பார்வையில் குறை இருப்பதாகத்தான் அர்த்தம். நடிகர் சங்க விவகாரங்களில் உறுப்பினர்கள் யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் முறையாக கடிதம் கொடுத்து கேட்டால் அதை தெளிவுபடுத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம்” என்றார் விஷால் சார்பாக நம்மிடம் பேசிய அவருக்கு நெருக்கமான ஒருவர்.

 

‘சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் சீதை’ என்பார்கள். சீதைக் காவியத்தை மக்களுக்கு வெள்ளித் திரையில் காட்டிய திரையுலக கலைஞர்களின் சங்கமும் அப்படியே இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பும்!

http://www.vikatan.com/news/tamilnadu/70603-war-of-words-continues-in-nadigar-sangam.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.