Jump to content

மட்டன் மிளகுக் கறி


Recommended Posts

p80e.jpg

மட்டன் மிளகுக் கறி

தேவையானவை:

 மட்டன் - 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
 உருளைக்கிழங்கு - 2
(தோல் சீவி நறுக்கியது)
 பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
 பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (நீளமாகக் கீறியது)
 எலுமிச்சைச் சாறு - 1 சிட்டிகை
 தேங்காய் - அரை மூடி
 இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 மிளகு - 2 டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 சோம்பு  - அரை டீஸ்பூன்
 ஏலக்காய் - 1
 கிராம்பு - 1
 பட்டை - 1 சிறிய துண்டு
 கசகசா - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள்  - அரை சிட்டிகை
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - 5 டீஸ்பூன்

செய்முறை:

நறுக்கிய  மட்டன் துண்டுகளை நன்கு கழுவவும். தேங்காயைத் துருவிக் கொண்டு, பாதியை மசாலாவுக்கு வைத்துவிட்டு, மீதியில் தேங்காய்ப்பால் எடுக்கவும். தேவையெனில், அரை கப் வெதுப்வெதுப்பான நீரை அதனுடன் கலந்துகொள்ளலாம்.

தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, கசகசா அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து,  மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி பேஸ்ட் ஆக்கவும்.  

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும்  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை நன்கு வதக்கவும்.

மட்டன் துண்டுகள், உருளைக்கிழங்கை வதக்கிய கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த தேங்காய் மசாலாவையும் சேர்த்துக் கலந்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் (இரண்டு கப்) சேர்க்கவும்.

குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 25 நிமிடங்கள் கலவையை வேகவிடவும். பிறகு குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி பிரஷர் அடங்கிய பிறகு மூடியைத் திறந்து கறி வெந்திருப்பதை உறுதி செய்யவும் (வேகவில்லை என்றால் மிதமான தீயில் மீண்டும்  5 முதல் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்).

மட்டன் கலவையில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து (மூடி போடத் தேவையில்லை), கிரேவி பதத்துக்கு வந்து எண்ணெய் பிரிந்ததும் சிறுதீயில் வைத்து,  எலுமிச்சைச் சாறு ஊற்றி கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.