Jump to content

சுவையான நண்டு கட்லெட்


Recommended Posts

சுவையான நண்டு கட்லெட்

குழந்தைகளுக்கு நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட தெரியாது. இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

 
 
சுவையான நண்டு கட்லெட்
 
தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
பிரெட் தூள் - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நண்டை வேக சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து ஆற வைக்கவும்.

* நண்டு ஆறியதும் அதன் ஓட்டை உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, நண்டு சதை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* வாணலியை சூடாக்கி அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்தக் கலவையைப் போட்டு வதக்கி, கெட்டியானதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* மைதா மாவில் சிறிது உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

* வதக்கிய நண்டு கலவையைச் வேண்டிய வடிவில் பிடித்து கொள்ளவும்.

* தட்டி வைத்துள்ள நண்டு கலவையை, மைதா மாவு கரைசலில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

* ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

* சூடான நண்டு கட்லெட்டை சில்லி சாஸுடன் பரிமாறவும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.