Jump to content

25 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.!

Recommended Posts

25 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.!

srilankan-refugees-return-from-india_CI.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி வாழ்க்கை வாழ்ந்த 25 பேர் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிராயலத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். 

இவர்கள் மன்னார், திருகோணமலை, வவுனியா, மாத்தறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

இது தவிர 6 மாத காலத்திற்கு உலர் உணவு வழங்கவும் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு முன்னெடுக்கும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவர்களுக்கான வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/12715

Link to comment
Share on other sites

தாயகம் திரும்பும் அகதிகள் வரவேற்கப்பட வேண்டியவர்கள், பாராட்டப்பட வேண்டியவர்கள்.   

ஆரம்பத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கலாம். ஓரிரு வருடங்களில் அவற்றை வெற்றி கொண்டால் தாய் மண்ணில் வாழ்வது சொர்க்கம் என்பது விளங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

ஆரம்பத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கலாம். ஓரிரு வருடங்களில் அவற்றை வெற்றி கொண்டால் தாய் மண்ணில் வாழ்வது சொர்க்கம் என்பது விளங்கும். 

உப்படி சொர்க்கம் என்று வாழப் போய் தான் இரண்டு பொடியள் உயிரை விட்டிருக்கிறாங்கள். நாங்க வழிகாட்டும் போது அந்த மக்களுக்கு நிம்மதியான வழியைக் காட்டனும். மாறாக.. நடுத்தெருவில் விடுற வழியைக் காட்டக் கூடாது. :rolleyes:

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

உப்படி சொர்க்கம் என்று வாழப் போய் தான் இரண்டு பொடியள் உயிரை விட்டிருக்கிறாங்கள். நாங்க வழிகாட்டும் போது அந்த மக்களுக்கு நிம்மதியான வழியைக் காட்டனும். மாறாக.. நடுத்தெருவில் விடுற வழியைக் காட்டக் கூடாது. :rolleyes:

இது போன்ற சம்பவங்கள் நடந்தால் தான் உங்களைப் போல சிலர் நாட்டை கைவிட்டு  சென்று வெளிநாடுகளில் நிம்மதியான வேலை செய்யலாம் என்று சொல்லவாறீங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, போல் said:

இது போன்ற சம்பவங்கள் நடந்தால் தான் உங்களைப் போல சிலர் நாட்டை கைவிட்டு  சென்று வெளிநாடுகளில் நிம்மதியான வேலை செய்யலாம் என்று சொல்லவாறீங்களோ?

இப்படியான சம்பவங்களுக்கும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேறியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லைங்கோ. நாங்கள்.. சிங்களவனின்.. இந்தியனின்.. முஸ்லீம்களின்.. ஒட்டுக்குழுக்களின்.. எல்லா விதமான பயங்கரவாதங்களையும் சந்திச்சிட்டம். அந்த வகையில் தான் சொல்லுறம்.. சனத்துக்கு போலி நம்பிக்கையை வளர்த்து.. பலிக்கடா ஆக்குவதை விடுத்து.. அதுங்க.. நிரந்தரமா நிம்மதியா வாழக் கூடிய அரசியல்.. பாதுகாப்புச் சூழல்.. உருவாகும் வரை அவர்களை மீள அழைத்து வருவது குறித்து சிந்திக்கனும் என்று. ஒரு இனப்படுகொலையாளன் கையில்.. நல்லிணக்கம்.. நல்லெண்ணம் என்ற பெயரில்.. அவனைப் பாதுகாத்துக் கொண்டு... அப்பாவி மக்களை கையளித்து கொலை செய்ய அனுமதிப்பது போல்.. முட்டாள் தனம் வேறேதும் இல்லை.:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.