Jump to content

மஸ்ஜித் அல் அக்ஸா மீதான இஸ் ரேல் அட்டூழியங்கள்//// யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது இலங்கை மாயம்


Recommended Posts

மஸ்ஜித் அல் அக்ஸா மீதான இஸ் ரேல் அட்­டூ­ழி­யங்கள்

VVA-02-bc4e1862d41e5a43598fd63710e7aba7e68780de.jpg

 

யுனெஸ்கோ வாக்­கெ­டுப்பின் போது இலங்கை மாயம்
ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்­கப்­பட்ட பலஸ்­தீன மக்­களின் உரி­மைக்­காக சர்­வ­தேச அரங்­கு­களில் ஓங்கி ஒலித்த குரல் இலங்­கையின் குரல். ஆனால், இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் உள்ள ஜெரூ­ஸலம் நகரில் அல் குத்ஸ் வளா­கத்­துக்குள் உள்ள மஸ்­ஜிதுல் அக்­ஸாவின் ஹரம் அல் ஷரப் பகு­தியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடு­மை­களைக் கண்­டிக்கும் வகையில் 2016 அக்­டோபர் 13இல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­ட ­போது இலங்­கையின் குரல் மௌனித்துப் போய்­விட்­டது.

மிகவும் கௌர­வ­மான முறையில் நடு­நி­லை­யான வெளி­நாட்டுக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து வந்த இலங்­கையின் இந்த முடிவு அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாகும். இது இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மன்றி உலகம் முழு­வதும் வாழும் ஒட்­டு­மொத்த 1.5 பில்­லியன் முஸ்­லிம்­க­ளுக்கும் இழைக்­கப்­பட்ட அவ­மா­ன­மாகும். இலங்­கையில் யார் ஆட்­சியில் இருந்த போதிலும் சரி இந்த நாட்டு மக்­க­ளுக்கு ஒரு பிரச்­சினை என்று வரு­கின்றபோது உலக முஸ்லிம் சமு­தாயம் தொடர்ந்து நேசக்­கரம் நீட்டி வந்­துள்­ளது. இருந்­தாலும் கூட துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த நாட்டின் பிர­தான ஊட­கங்கள் இந்த விட­யத்தை அவ்­வ­ளவு தூரம் வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை.

இந்த வாக்­கெ­டுப்­பின்­போது இலங்கை கலந்து கொள்­ளா­மை­யா­னது நெருக்­க­டி­க­ளுக்கு ஆளா­கி­யுள்ள, கண்­மூ­டித்­த­ன­மாக அமெ­ரிக்­காவைப் பின்­பற்­று­கின்ற நல்­லாட்சி அரசின் குறு­கிய நோக்கு கொண்ட வெளி­நாட்டுக் கொள்­கையின் வங்­கு­ரோத்து நிலை­யையே பிர­தி­ப­லிக்­கின்­றது. இதன் மூலம் முஸ்லிம் உல­கத்தின் மீது யுத்தக் குற்றம் புரிந்­து­வரும் ஏனைய அமெ­ரிக்கா தலை­மை­யி­லான ஐரோப்­பிய நாடுகள் மற்றும் இஸ்­ரேலின் வரி­சையில் இலங்­கையும் இணைந்து கொண்­டுள்­ளது.

மேலும், அமெ­ரிக்­கா­வையும் இஸ்­ரே­லையும் சந்­தோ­ஷப்­ப­டுத்தும் முயற்­சியில் இலங்கை அரசு இந்த நாட்டு முஸ்­லிம்கள் இந்த ஆட்­சியின் உரு­வாக்­கத்­துக்கு வழங்­கிய பங்­க­ளிப்பை தட்­டிக்­க­ழித்­துள்­ளது. சுமார் 24 தேர்­தல்­களில் அடுத்­த­டுத்து தோல்­வி­களைச் சந்­தித்த ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏற முஸ்­லிம்கள் வழங்­கிய பங்­க­ளிப்பு மகத்­தா­ன­தாகும்.

யுனெஸ்கோ (ஐக்­கிய நாடுகள் கல்வி விஞ்­ஞான மற்றும் கலா­சார அமைப்பு) அதன் தீர்மா­னத்தில் இஸ்­ரேலின் எல்லை மீறிய ஆக்­கி­ர­மிப்பு, அதன் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் என்­பன வன்­மை­யாகக் கண்­டிக்கப்பட்­டுள்­ளன. ஆக்­கி­ர­மிப்பு சக்­தி­யான இஸ்ரேல் குறிப்­பிட்ட இடத்தின் வர­லாற்று பெரு­மை­க­ளையும் அந்­தஸ்­தையும் மதித்து அது மேற்­கொள்ளும் சட்­ட ­வி­ரோத நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்தத் தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரேலின் வல­து­சாரி தீவி­ர­வா­தி­க­ளாலும் சீருடை அணிந்த படை­யி­ன­ராலும் ஹரம் அல் ஷரப் பகுதி தொடர்ந்து தாக்­கு­த­லுக்கு உள்­ளா­வதை இந்தத் தீர்­மானம் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. மலை ஆலயம் மற்றும் மேற்கு மதில் பகு­தி­களின் மீதான யூத பிணைப்பை இந்தத் தீர்­மானம் நிரா­க­ரித்­துள்­ளது. ஜெரூ­ஸலம் நகரின் புரா­தன பகு­தி­க­ளுக்கு அவற்றின் பண்­டைய முஸ்லிம் பெயர்­களே இந்தத் தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஆத்­தி­ர­மூட்டும் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் வன்­மு­றை­களில் இஸ்ரேல் ஈடு­பட்டு இந்தப் பகு­தி­களின் ஒரு­மைப்­பாட்­டுக்கும் புனிதத் தன்­மைக்கும் களங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டு இஸ்­ரேலின் செயற்­பா­டுகள் மிக வன்­மை­யாகக் கண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த தீர்­மா­னத்தின் ஆரம்­பத்­தி­லேயே ஏக தெய்வக் கோட்­பா­டு­டைய மூன்று சம­யங்­க­ளுக்கும் பழைய ஜெரூ­ஸலம் நகரின் முக்­கி­யத்­து­வமும் அவற்றின் சுவர்­களின் முக்­கி­யத்­து­வமும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் பிறகு இஸ்ரேல் மீதான கண்­ட­னங்கள் தொட­ரு­கின்­றன. அதன் பிறகு ஒவ்­வொரு இடத்­திலும் இஸ்ரேல் ஒரு­ ஆக்­கி­ர­மிப்புச் சக்­தி­யா­கவே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நீண்­ட­கா­ல­மாக அது இழைத்து வரும் தவ­றுகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இஸ்­ரேலின் வலது சாரி தீவி­ர­வா­தி­களால் அல் அக்ஸா, அல்­ஹரம் மீதான தொடர் தாக்­கு­தல்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கப்­பட்­டுள்­ள­ளன. மலை ஆலய வளாகம் மற்றும் அதற்குள் வரும் பள்­ளி­வாசல் என்­ப­ன­வற்றை குறிக்க முஸ்­லிம்கள் பயன்­ப­டுத்தும் பெயர்­களே இவை­யாகும்.

மேற்கு பகுதி வோல் பிளாஸா பிர­தே­சத்தில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் பணி­களும் இந்தத் தீர்­மா­னத்தில் கண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த இடத்தைக் குறிப்­பிடப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் சொல் அல் புறாக் பிளாஸா என்­ப­தாகும். இது முஸ்­லிம்­களால் பயன்­ப­டுத்­தப்­படும் சொல் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. முஸ்­லிம்­களைப் பொறுத்­த­மட்டில் மக்­காவின் மஸ்­ஜிதுல் ஹரம், மதீ­னாவின் மஸ்­ஜிதுன் நபவி என்­ப­ன­வற்­றுக்குப் பின் மூன்­றா­வது புனித பிர­தே­ச­மாக கரு­தப்­படும் இடமே இந்த மஸ்­ஜிதுல் அக்­ஸா­வாகும். எனவே, இது உலக முஸ்­லிம்­களின் உள்­ளங்­க­ளுக்கு மிகவும் நெருக்­க­மான பிர­தே­ச­மாகும். 1967 ஜுனில் இஸ்ரேல் மேற்­கொண்ட ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தின் மூலம் ஜெரூ­ஸ­லத்தை தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வந்து வன்­மு­றை­க­ளையும் கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. அல் அக்­ஸா­வுக்கு தொழு­வ­தற்­காக வரும் மக்கள் மீதும் இந்த வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.

‘நிரா­யு­த­பா­ணி­க­ளான பலஸ்­தீ­னர்கள் தொடர்ச்­சி­யாக தாக்­கப்­பட்டு வரு­கின்­றனர். ஜெரூ­ஸலம் பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தரும் மக்கள் மீதான அடக்­கு­மு­றைகள் தொட­ரு­கின்­றன. இந்த வன்­மு­றை­களை கட்­ட­வி­ழத்து விடும் யூத தீவி­ர­வாத குழுக்­க­ளுக்கு இஸ்ரேல் பக்­க­ப­ல­மாக உள்­ளது. அல் அக்ஸா பள்­ளி­வா­சலைத் தகர்த்­து­விட்டு அந்த இடத்தில் மூன்­றா­வது ஆலயம் ஒன்றை நிறு­வு­வதே இவர்­களின் நோக்கம்’ என்று மஆம் செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

கைக்­குண்­டுகள், கண்ணீர் புகை குண்­டுகள், இறப்பர் தோட்­டாக்கள், ஜீவ தோட்­டாக்கள் என சகல வித­மான ஆயு­தங்­களும் இறை வழி­பாட்­டுக்­காக வரும் பலஸ்­தீன மக்கள் மீது பாவிக்­கப்­ப­டு­கின்­றன. இவை அன்­றாட நிகழ்­வு­களும் ஆகி­விட்­டன. தாக்­குதல் நடத்தும் தீவி­ர­வாத சக்­தி­க­ளுக்கு ஜெரூ­ஸலம் மாந­கர சபையும் அர­சாங்க அமைச்­சுக்­களும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முழு ஆத­ர­வையும் வழங்கி வரு­கின்­றன.

பலஸ்­தீன தொண்­டர்­க­ளுக்கு இந்தப் பிர­தே­சத்­துக்குள் பிர­வே­சிக்க தொடர்ச்­சி­யான தடை­களை விதித்து இஸ்ரேல் மிகவும் தந்­தி­ர­மாக தீவி­ர­வாத குழுக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது.

இஸ்ரேல் இந்த வளா­கத்தை யூதர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் என பௌதிக ரீதி­யாக இரண்­டாகப் பிள­வு­ப­டுத்­தலாம் என்­பதே தற்­போது எதிர்­நோக்­கப்­பட்­டுள்ள உட­னடி அச்­ச­மாகும். 1994இல் இந்த சூத்­தி­ரத்தை ஹெப்ரூன் நகரில் உள்ள இப்­றா­ஹிமி பள்­ளி­வா­சலில் பிர­யோ­கித்­தது. அமெ­ரிக்­காவில் பிறந்த யூத குடி­யேற்­ற­வாசி ஒருவர் இந்தப் பள்­ளி­வா­சலில் புனித றமழான் மாதத்தில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 29 பலஸ்­தீ­னர்­களை ஈவு இரக்­க­ மின்றி கொன்று குவித்­ததையடுத்து இஸ்ரேல் அந்த பள்­ளி­வா­சலை இரண்­டாகப் பிரித்­தது. இவ்­வா­றான பின்­ன­ணியில் யுனெஸ்கோ தீர்­மானம் நீதியை நிலை­நாட்டும் வகையில் அமைந்­துள்­ளது. இஸ்­ரே­லிய ஆக்­கி­மிப்பு படை­களின் கொடூ­ரங்­க­ளையும் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளையும் வன்­மை­யாகக் கண்­டிக்கும் வகையில் இந்தத் தீர்­மானம் அமைந்­துள்­ளது.

இவ்­வா­றான அநீ­தி­யான பின்­ன­ணியில் இஸ்­ரே­லுக்கு எதி­ரான தீர்­மா­னத்தின் மீது வாக்­க­ளிக்­காமல் இலங்கை தவிர்ந்து கொண்­டமை இலங்கை அரசு நீதி­யையும் நியா­யத்­தையும் புறக்­க­ணித்­துள்­ளது என்­பதை புலப்­ப­டுத்­து­கின்­றது. பலஸ்­தீன மக்­களின் நியா­ய­மான கோரிக்­கையை இலங்கை அரசு புறக்­க­ணித்­துள்­ளது. உலகம் முழு­வதும் உள்ள முஸ்­லிம்­களை அது உதா­சீனம் செய்­துள்­ளது. இஸ்­ரேலின் சட்­டத்தை மதிக்­காத காட்டு மிராண்டித் தன­மான போக்­கிற்கு இலங்கை அரசு ஆத­ர­வ­ளித்­துள்­ளது. எல்­லா­வி­த­மான தார்­மீக கோட்­பா­டு­க­ளையும் ஒழுக்க விதி­மு­றை­க­ளையும், சட்ட ரீதி­யான இன ரீதி­யான விழு­மி­யங்­க­ளையும் தட்டிக் கழித்­து­விட்டு உரு­வாக்­கப்­பட்ட நாடு தான் இஸ்ரேல். 1930 முதல் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக அது 60க்கும் அதி­க­மான பாரிய மனிதப் படு­கொலை சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­மாக இருந்­துள்­ளது. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பாரம்­ப­ரிய மேலைத்­தேச ஆத­ரவு சிந்­த­னையின் அடிப்­ப­டையில் நோக்­கு­கின்ற போது இலங்கை இந்த வாக்­கெ­டுப்பில் இருந்து தவிர்ந்து கொண்­டமை ஒன்றும் புது­மை­யா­கவும் இல்லை. எண்ணெய் வளம் மிக்க ஈராக்கை 2003ல் ஆக்­கி­ர­மித்து சுமார் 15 லட்சம் மக்­களை கொன்று குவித்து அந்த நாட்டை அமெ­ரிக்கா சூறை­யா­டிய போது அதை கண்­டிக்க மறுத்த விரல் விட்டு எண்ணக் கூடிய உலகின் அப்­போ­தைய பிர­த­மர்­களுள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஒருவர் என்­பது இங்கே நினை­வூட்­டத்­தக்­கது.

ஈராக் மீதான அமெ­ரிக்க ஆக்­கி­ர­மிப்பை அப்­போ­தைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் கண்­டிக்க முனைந்­தார்கள். ஆனால் அர­சாங்­கத்தை விட்டு விலகி நின்று அதை செய்­யுங்கள் என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­க­ளிடம் கூறி­ய­தா­கவும் சில தக­வல்கள் உள்­ளன. 1960 களிலும் 1970 களிலும் உலக அமர்­வுகள் பல­வற்றில் சுதந்­தி­ரத்­துக்­காவும் அடக்கு முறைக்கு எதி­ரா­கவும் இலங்­கையின் குரல் ஓங்கி ஒலித்­த­போது அது மிகவும் கௌர­வத்­தோடு செவி மடுக்­கப்­பட்­டது. இன்­றைய நிலையில் சர்­வ­தேச அரங்கில் நியா­யத்­துக்­காக குரல் கொடுத்து இலங்­கையின் நற்­பெ­யரை சர்­வ­தேச அரங்கில் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்­பதே இன்­றைய அவ­சர தேவை­யாகும். கொடூ­ர­மான இஸ்­ரே­லிய யுத்தக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு செங்­கம்­பளம் விரிப்­பதால் இது சாத்­தி­ய­மா­காது.

ஆறு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இஸ்ரேல் இலங்­கைக்குள் தனது மூக்கை நுழைக்க பல தட­வைகள் முயன்­றுள்­ளது. ஆனால் அடுத்­த­டுத்து பத­விக்கு வந்த அர­சு­களால் அது வெளி­யேற்­றப்­பட்டு வந்­துள்­ளது.

பலஸ்­தீ­னர்­களின் உரி­மை­க­ளுக்­கான குர­லாக தன்னை சித்­தி­ரித்துக் கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தான் இஸ்­ரே­லுக்­கான கத­வு­களை மீண்டும் திறந்து விட்­டவர். அந்த சந்­தர்ப்­பத்தை சியோ­னிஸ்ட்­டுகள் நன்­றாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, பிர­தமர் றட்­ண­சிறி விக்­கி­ர­ம­நா­யக்க ஆகி­யோரும் சபை முதல்வர் நிமல் சிறி­பால டி சில்வா தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற து}துக்­கு­ழு­வுக்கும் இஸ்­ரேலில் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. அன்று முதல் பல அமைச்­சர்­களும் உயர் அரச அதி­கா­ரி­களும் இஸ்ரேல் சென்று வந்­துள்­ளனர். உண்­மையில் இஸ்­ரேலைப் பொறுத்­த­மட்டில் இது பெரும் சாத­னை­யாகும்.

இஸ்­ரே­லுக்கு சார்­பான இந்தக் கொள்கை தற்­போது மிகத் தீவி­ர­மாகப் பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. ஐ.தே.க. தலை­மை­யி­லான அரசு ஆட்­சிக்கு வந்­தது முதல் யூதர்­க­ளுக்கு இந்த நாட்டின் கத­வுகள் தாரா­ள­மாகத் திறந்து விடப்­பட்­டுள்­ளன. உலகம் முழு­வதும் இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அழித்­தொ­ழிக்க வேண்டும் என்­பது தான் இவர்­களின் உல­க­ளா­விய வேலைத் திட்­ட­மாகும். எனவே இலங்­கை­யுடன் இஸ்ரேல் உற­வு­களைப் பேணு­வது உண்­மையில் எந்த வகை­யிலும் இலங்­கைக்கு உத­வு­வ­தற்­காக அல்ல. மாறாக அவர்­க­ளது நிகழ்ச்சி நிரலை இலங்­கையில் அமுல் செய்து இலங்­கையை கொலை­க­ள­மாக மாற்றி இரத்த ஆறை ஓட வைப்­ப­துதான் அவர்­களின் திட்­ட­மாகும்.

ஜெர்­மனின் நாசிப் படை­களால் தங்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக நாட­க­மாடி உலக அரங்கில் தமக்­கான ஆத­ரவை திரட்டும் முயற்­சியில் யூதர்­களால் ஜெர்­ம­னியில் நிறு­வப்­பட்­டுள்ள ஹொலோகோஸ்ட் நு}த­ன­சா­லைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை விஜயம் செய்ய வைத்­தது அவர்­க­ளுக்கு அண்­மைக்­கா­லத்தில் கிடைத்­துள்ள குறிப்­பி­டத்­தக்க வெற்­றி­யாகும். அமெ­ரிக்க ஐரோப்­பிய ஆத­ரவில் பலஸ்­தீன பூமியில் தமக்­கான ராஜ்­யத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்­சியே இந்த நு}த­ன­சா­லை­யாகும். இந்த விஜ­யத்தின் பார­து}­ரத்­தன்மை அது ஏற்­ப­டுத்தும் தாக்­கங்கள் என்­ப­ன­வற்றை புரிந்து கொள்ளத் தவ­றிய ஒரு மனி­த­ரா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு விஜயம் செய்­துள்ளார்.

அகண்ட இஸ்­ரே­லிய ராஜ்­யத்தை உரு­வாக்கும் நோக்கில் உலகம் முழுவுதும் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம் எனும் போர்வையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் முடிவு கட்டும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அழிப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றன. இந்த அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் அச்சில் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அரசும் தற்போது இணைந்துள்ளது. இவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதை தங்களத பிரகடனமாகவே வெளியிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சக்கர அச்சில் இப்போது இலங்கையும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. அதற்கான அறிகுறிகளைக் காணக் கூடியதாக உள்ளது. சிவசேனை அமைப்பு இலங்கையின் வவுனியாவில் தோற்றம் பெற்றுள்ளமையும் நல்லாட்சி அரசு அதனைக் கண்டும் காணாமல் விட்டு வைத்துள்ளமையும் இதற்கு உதாரணமாகும். ஆனால் இந்த சில்லுக்குள் சிக்கண்டும் கூட இலங்கை எதிர்ப்பார்க்கும் வெளிநாட்டு முதலீடு இன்னும் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும். மாறாக வளைகுடா நாடுகளில் இருந்து அனுப்பப்படும் புலம் பெயர்ந்த உழைப்பாளிகளின் வருமானத்திலேயே இலங்கை இன்றும் பாரிய அளவில் தங்கியுள்ளது. இந்த வருமானம் இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும் என்பதே யதார்த்தம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-23#page-9

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.